ராகவும், விஷ்வத்தும் ராகவ் வீட்டிற்கு சென்றனர்.
“அங்கிள் இதான் உங்க வீடா?”
“ஆமா. உனக்கு புடிச்சிருக்கா?”
“புடிச்சிருக்கு” என்று சொல்லி தலையாட்டினான் விஷ்வத்.
பிரிட்ஜில் இருந்து பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எடுத்து, விஷ்வத் கையில் ராகவ் கொடுக்க “எனக்கு வேண்டாம் அங்கிள்” எனக் கூறினான் விஷ்வத்.
“ஏன் உனக்கு பிஸ்கட் பிடிக்காதா?”
“அம்மா யார்கிட்டயும் வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க” என விஷ்வத் கூற
ராகவிற்கு ஏதோ ஒரு மாதிரியாய் போனது.
“உங்க அம்மா நான் கொடுத்தால் ஒன்னும் சொல்ல மாட்டாங்க வாங்கிக்க விஷ்வத்” எனக் கூற, ராகவ் முகம் மாறியதால் வாங்கிக் கொண்டான் விஷ்வத்.
வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டே “இந்த வீட்டில நீங்க மட்டும் தான் இருக்கீங்களா அங்கிள்?” என கேட்டான் விஷ்வத்.
“என் பிரண்டு ஒருத்தனனும் இருக்கான்.அவன் பேரு வருண். இந்நேரம் அவன் வீட்டுக்கு வர்ற நேரம்தான் உனக்கு காட்றேன்” என கூறினான் ராகவ்.
அப்போது ராகவ் போன் ஒலிக்க அழைப்பை ஏற்றான் ராகவ்.
“டேய் ராகவ் எங்க இருக்க? உனக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம், அப்பளையே கிளம்பிட்டேன்னு சொன்ன, என்னாச்சு எங்க இருக்க? இந்நேரம் நீ கிளம்புன நேரத்துக்கு இங்க வந்து இருக்கணும் “ என வருண் கேட்க நடந்ததை எல்லாம் கூறினான் ராகவ்.
“அந்த அம்மா நல்லா இருக்காங்களா?”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல கால்ல மட்டும் சின்ன அடிதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயி மருந்து வச்சு கட்டி இருக்கு, அவங்கள அவங்க வீட்டில விட்டுட்டு நான் நம்ம வீட்டுக்கு வந்துட்டேன். இனிமேல் கிளம்பி அங்க வர முடியாது. நீ எனக்கு ஹோட்டலில் இருந்து சாப்பிட மட்டும் ஏதாவது வாங்கிட்டு வந்துரு! இன்னும் ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து போகலாம்!!” என ராகவ் சொல்ல சரி என சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தான்.
இங்கு,
மணி திவ்யா ஷாலினி குணா வருண் ஐவரும் ரெஸ்டாரண்டில் ராகவிற்காக காத்திருந்தனர்!!
ராகவால் வர முடியாது என்பதை அறிந்த பின் அவனுக்காக காத்திருக்காமல் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன்,மட்டன் சுக்கா, அனைத்தையும் ஆர்டர் செய்து விட்டனர்.
அவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் அனைத்தும் வந்துவிட, ஐவரின் நாக்கிலும் எச்சில் ஊறியது
ஷாலினியும், திவ்யாவும்” மச்சி இன்னைக்கு ஒரு புடி! ஒரு கடி!”என சொல்லிக்கொண்டே ஆளுக்கு ஒரு லெக் பீஸை எடுத்து சாப்பிட தொடங்கினார்கள்.
ஐவரும் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
அங்கே இருந்த,அனைவரும் அவர்களையே வினோத ஜந்துக்களை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ரெஸ்டாரண்ட்ல உள்ள எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க? “ என வருண் சொல்ல
“எவன் பார்த்தா நமக்கு என்ன, நம்ம வந்த வேலையை மட்டும் நம்ம பாப்போம்” என சொல்லிவிட்டு மணியும் குணாவும் ரசித்து ருசித்து சாப்பிட தொடங்கினார்கள்.
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு ஐவரும் ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே வந்தனர்
“சிந்து புண்ணியத்தால இன்னைக்கு நமக்கு நல்ல சாப்பாடு!” என சொல்லிக்கொண்டே வயிற்றை தடவினான் மணி.
ஐவரும் ரெஸ்டாரண்ட் வாசலை விட்டு வெளியே வர வருண் அவர்கள் சாப்பிட்டதற்கான பணத்தை பில் கவுண்டரில் கட்டினான்.
“டேய் அங்க பாருங்க சிந்து ?” என குணா சொல்ல
“டேய் மச்சான் எங்க?” என வருண் ஆர்வமாய் கேட்டான்.
பதிலுக்கு குணா சற்று தூரத்தில் போய்க் கொண்டிருந்த பாட்டி ஒருவரை கைகாட்ட வருண் “உன்னை என்ன செய்யப் போறேன் பாரு!” என குணாவை அடிக்க ஆரம்பித்தான்.
“வலிக்குதுடா எருமை” என கத்தினான் குணா.
ஐவரும் ஜாலியாக பேசிவிட்டு வெளியே நடந்து வந்தனர்.
அங்கிருந்த ஐஸ்கிரீம் பார்லரை காட்டி “எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தா?” என ஷாலினி கேட்டாள்.
“சிந்துவை கரெக்ட் பண்றதுக்கு ஒரு ஐடியா கொடு உனக்கு வாங்கி தரேன்” என்று கூறினான் வருண்.
“உன்னோட கையை கிழிச்சு ரத்தத்துல ஐ லவ் யூனு எழுதிக் கொடு,உன்னோட லவ்வர் சக்சஸ் ஆயிடும்” என கூறினாள் திவ்யா.
“இதெல்லாம் பழைய ஐடியா இதெல்லாம் 60ஸ்லயே முடிஞ்சிட்டு “ என கூறினான் குணா.
“ரெண்டு ரவுடிகள செட் பண்ணி சிந்துவ வம்பு இழுக்கற மாதிரி பண்ண சொல்லுவோம்,அந்த ரவுடி வம்பு இழுக்கும்போது,நீ ஹீரோ என்ரி கொடுத்து காப்பாத்துற மாதிரி பண்ணுனு. அத பாத்த சிந்துவுக்கு உன் மேல காதல் வந்துரும்” என கூறினான் மணி.
“இதெல்லாம் நிறைய படத்துல வந்துட்டு ஏதாவது புதுசா சொல்லுங்க?”என வருண் சொல்ல
“இப்ப அர்ஜுன் ரெட்டி தான் ட்ரெண்டு ,போய் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்துட்டு நான் உன்ன லவ் பண்றேன்னு ரகர்ட்பாய் மாதிரி ப்ரொபோஸ் பண்ணு சிந்து உனக்குத்தான்” என சிலாகித்துக் கூறினாள் ஷாலினி.
“மச்சான் இவ சொல்றத கேட்காத உன்னை அபியூஸ் கேஸ்ல உள்ள தள்ள பாக்குறா ? கவனமா இரு” என கூறினாள் திவ்யா.
“உங்க கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு என்னைய செருப்பால அடிக்கணும்” என்று வருண் சொல்ல காலில் இருந்த செருப்பை கழற்றி கொடுத்தாள் ஷாலினி.
வருண் ஷாலினியை முறைக்க நால்வரும் சிரித்தனர்.
“எனக்கு என் மச்சான் ராகவ இருக்கான், அவன் சொல்லுவான் ஐடியா” என வருண் கூற
***** போடா அவன் லவ்வையே அவன் ஒழுங்கா சொல்லாம இருக்கான். அவன நம்புனால் ஒன்னும் நடக்காது நான்தான் அவன் கிட்ட வெட்கத்த விட்டு என் லவ்வ சொல்லனும் போல!” என சலித்துக் கொண்டாள் திவ்யா.
இருவரும் விரும்புவது அனைவருக்கும் தெரியும். ஆனால் இருவரும் தங்களுடைய காதலை ஒருவரிடம் மற்றவர் உரைக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
“சரி போங்க! என் லவ்வ எப்படி சக்சஸ் பண்றதுன்னு எனக்கு தெரியும் நாளையிலிருந்து அய்யாவோட பர்பாமன்ஸ் பாருங்க அப்படியே ஆடிப் போயிருவீங்க, சிந்துவையே என்கிட்ட வந்து அவ லவ்வ சொல்ல வைக்கிறேன்” என வரு சபதமாய் கூற,
“நீ வச்சு ட்ரீட்டுக்காக சொல்லலடா மச்சான், ஆல் தி பெஸ்ட் “என சொல்லி சிரித்தான் மணி.
நால்வரும் “ஆல் த பெஸ்ட்” என ஒரே குரலாக கூறினர்
நண்பர்கள் ஐவரும்சாப்பிட்டு முடித்து அரட்டை அடித்து விட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர்.
“மச்சான்,பிரியாணி வாங்கிட்டு வந்து இருக்கேன், சூடா இருக்கும் போதே நீ சாப்பிடு, நான் போயி ரெப்ரஸ் வாங்கிட்டு வந்துடறேன், என நாற்காலியில் அமர்ந்திருந்த ராகவை பார்த்து கூறிக் கொண்டே குளியலறை நோக்கி விரைந்தான் வருண்
வருண் குளித்து முடித்து விட்டு வர,
ராகவும் பிரியாணியை சாப்பிட்டு முடித்து இருந்தான்
“மச்சான் போன்ல சொன்னியே, அந்த அம்மாவுக்கு நல்லா இருக்குதா?” என வருண் கேட்க
“ஒன்னும் இல்லடா மச்சான்,
சின்ன சிராய்ப்புதான்,ஆனா வயசானவங்கல்ல,கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும்,
மூணு நாளைக்கு ஆயில்மெண்ட் கொடுத்து இருந்தாரு டாக்டர்
அதை போட்டா சரியா ஆயிடுமாம்” என ராகவ் கூறினான்.
“நீ எப்பவுமே காரக் கவனமா ஓட்டுவியே,ஏன் இன்னைக்கு என்ன ஆச்சு, ஆக்சிடென்ட் பண்ணிருக்க?
உன் அத்தை மகள் பவளம் ஞாபகத்துக்கு வந்துட்டாளோ?” என நக்கலாய் சிரித்தான் வருண்
“ஏண்டா நீ வேற,அந்த அம்மா தான் எதிர்பாராம வண்டியில குறுக்க வந்துட்டாங்க,ஜஸ்ட் மிஸ், நல்லவேளை, அந்த அம்மாவுக்கு ஏதும் ஆகல. அவங்க நம்ம எதிர் வீட்டுல தான் குடியிருக்காங்க,
குடி வந்து ரெண்டு நாள் தான் ஆச்சாம்” என ராகவ் கூறினான்.
“அப்படியா வா மச்சான் போய் பாத்துட்டு வந்துருவோம் என்று வருண் சொல்ல, அங்கு குளு குளு கன்னங்களுடன் விஷ்வத் எட்டிப் பார்த்தான்.
“யாருடா இது”
“இப்ப சொல்லிக்கிட்டு இருந்தேன்ல அந்த அம்மாவுடைய பேரன்!” என்று கூறினான் ராகவ்.
“பார்க்க ரொம்ப அழகா இருக்கான்” என்று சொல்லிவிட்டு
“வா இங்க” என்று வருண் அழைக்க மெதுவாக வந்தான் விஷ்வத்.
“ உன் பேர் என்ன?” என்று வருண் கேட்க, “விஷ்வத்” என்று தயங்கிக் கொண்டே கூறினான் அந்த மழலை!
“ஏன் பயப்படுற என்னைய பார்த்தால் பயமா இருக்கா, அந்த அங்கிள விட நான் ரொம்ப நல்லவன்” என்று ராகவை பார்த்து வருண் சொல்ல முறைத்தான் ராகவ்.
“சாப்டியா?” என்று ராகவ் கேட்க,
“இன்னும் சாப்பிடல உன்னைய பாத்துட்டு போகணும்னு தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான்” என்று ராகவ் சொல்ல விஷ்வத்தை பார்த்தான் வருண்.
“என்னையவா?” என்று வருண் அதிர்ச்சியாக கேட்க,
“இந்த வீட்டில நீங்க மட்டுமா இருக்கீங்கனு கேட்டான், இல்ல நானும் என் பிரண்டும் தங்கியிருக்கோம்னு சொன்னேன், அதான் அவங்கள பாக்கலாமான்னு கேட்டான். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான் பாருன்னு சொன்னேன், அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கான்!” என்று கூறினான் ராகவ்.
“சரி ஏன் என்னைய பாக்கணும்னு நீ ஆசைப்பட்ட?” என்று வருண் விஷ்வத்தை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு கேட்க
“அது வந்து …”என விஷ்வத் ஏதோ சொல்ல வர, கதவை தட்டும் சத்தம் கேட்டது.
“இந்நேரத்துல யாரு கதவை தட்டுறா”என்று வருண் ராகவிடம் கேட்க,
“விஷ்வத்தோட வீட்டுல இருந்து தான் அவன கூப்பிடுறதுக்கு அவங்க அம்மா வந்து இருப்பாங்க!” என்று சொல்ல வருண் கதவை திறக்க ஆயத்தமானான்.
ராகவ் சொல்லியபடி விஷ்வத்தை அழைத்துச் செல்வதற்காக சிந்து தான் அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் மழைச்சாரலாய் நீ! மருத நிலமாய் நான்.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்ற உங்களின் எண்ணங்களை விமர்சனங்களாக பதிவேற்றிச் செல்லுங்கள்.