Stories that touch hearts

Home  /  31. பிரபா அமுதன் (மழைச்சாரலாய் நீ! மருத நிலமாய் நான்!)  /  Chapter 3

CHAPTER 3

மழைச்சாரல் – 3

By Prabha Amuthan · October 9, 2026

0

மறைந்த மாயக்காரியை கண் கட்டிய கடற்கரை பகுதி வரை தேட

பெண்ணவளை எங்கும் காணவில்லை!!

இத்தனை நாள்  கற்பனையில் மட்டுமே வலம் வந்தவள் இன்று கண்முன் வர  வருணால் நம்ப முடியவில்லை,

கனவு தேவதையை பார்த்தது உண்மைதானா? இல்லை  என்னுடைய பிரம்மையா? என்று அவன் மனம் அவனுக்குள்ளேயே ஒரு பெரும் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது!!

கண்டிப்பா நான் பார்த்தது உண்மைதான், என்று அவன் மனம் ஆணித்தரமாக உரைக்க அவன் கண்கள் கலங்கியது,

கடற்கரையில் முட்டி போட்டு அமர்ந்து அங்குள்ள யாரையும் பற்றி யோசிக்காமல் சந்தோஷத்தில்  கத்தினான்.

இப்போது   இறந்து விட்டால் கூட கவலை இல்லை, என்பதாய் அவனின் மனநிலை இருந்தது.

கனவில் மட்டுமே வந்தவள் கண் முன் தோன்றி விட்டாள்.இந்த ஜென்மத்துக்கு   எனக்கு  இது போதும்  என்று நினைத்துக் கொண்டே  இருக்க   கடற்கரையில் இருந்தவருடைய செல்போனில், பாடல் ஒலிக்க, அந்தப் பாடல் தனக்கானதாய் உணர்ந்து   ரசிக்க தொடங்கினான்.

உயிரை தொலைத்தேன் 

அது உன்னில் தானோ

இது நான் காணும் கனவோ, நிஜமோ

உன்னை காணும் மனமே வேண்டும்

எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய்

என்னில் எண்ணத்தால் நானே இல்லை

எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே

உயிரை தொலைத்தேன்,

அது உன்னில் தானோ!

என்று அந்தப் பாடலை கேட்டபடியே கண்கள் கலங்கி ஆனந்தத்தில்    திளைத்திருக்க  வருணின் போன் ஒலித்தது.

வருண் செல்போனை எடுத்து யார் என்று பார்க்க ராகவ் அழைத்திருந்தான்.

வருண் ராகவ் அழைப்பை ஏற்று காதில் வைக்க

“ மச்சான் எங்க இருக்க?” எனக் கேட்டான்   ராகவ்.

“பீச்சுக்கு வந்தேன்”

 “யார் யார் போனீங்க?”

“நான் மட்டும் தான் வந்தேன்” என்று வருண் சொல்ல

“சரி,எப்ப வருவ?” என்று கேட்டான்  ராகவ்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துருவேன்”

“சரி மச்சி வீட்டுக்கு வரும்போது  டின்னர் கடையில் வாங்கிட்டு வந்துரு! நான் எதுவும் சமைக்கல” என்று ராகவ் சொல்ல 

“சரிடா மச்சான், நான் வாங்கிட்டு வந்துடறேன்”  என சொல்லி  விட்டு அழைப்பை அணைத்தான் வருண்.

கடையில் பைக்கை நிறுத்திவிட்டு டின்னரை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான் வருண்

வருணைப் பார்த்த ராகவ்,”நீ ஈவினிங்கே  கிளம்பிட்டேன்னு மணி சொன்னான்,  ஏன் வீட்டுக்கு வர இவ்வளவு நேரம், கண்ணெல்லாம் சிவந்து இருக்கு  எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான் ராகவ்

“இல்லடா மச்சான் மனசு கொஞ்சம் சரியில்லைனு   பீச்சுக்கு போனேன், அங்க…. அங்க….” என  சொல்லிக்கொண்டே   ராகவை கட்டிப்பிடித்து கண் கலங்கினான் வருண்.

 திடீரென்று அழுகுவதை பார்க்கவும் ராகவ் பதறிக்கொண்டு “என்ன மச்சான்   அழுகிற,  ஆம்பளைங்க அழுக கூடாதுடா!என்ன ஆச்சு?” என ராகவ் வருண் மனநிலையை மாற்ற எண்ணி  கிண்டலாக கேட்டான்.

“மச்சான் என்னோட காதலிய பாத்துட்டேன்டா” என கண்கலங்கி  கூறினான் வருண் .

வருணை சந்தேகமாக பார்த்துக் கொண்டே “குடிச்சிருக்கியா, என்ன உளர்ற?” என்று கேட்டான் ராகவ்.

“இல்லடா உண்மையிலேயே பார்த்தேன்”

“எங்க வச்சு பார்த்த?” என்று சந்தேகமாய் கேட்டான் ராகவ்.

“மனசுக்கு கஷ்டமா இருக்குன்னு இன்னைக்கு பீச்சுக்கு போயிருந்தேன் அங்க வச்சு தாண்டா அவளை பார்த்தேன்” என்று அங்கு நடந்ததை எல்லாம் கூறினான் வருண்.

“பேசுனியா, அவ கிட்ட போன் நம்பர் வாங்கினியா?” என்ற ராகவ் கேட்க

“இல்லடா மச்சான், அவள பாத்த அதிர்ச்சியில கொஞ்ச நேரம் அப்படியே நின்னுட்டேன், திடீர்னு யாரோ கூப்பிட்டது மாதிரி இருக்கவும்  திரும்பிப் பார்க்கிறேன், அதுக்குள்ள அங்க நின்னுக்கிட்டு இருந்தவ  எங்க தான் போனான்னு தெரியல,

நானும் சுத்தி முத்தி பார்த்தேன், அவங்க இல்ல, அதுக்குள்ள அவ போயிட்டா, மிஸ் பண்ணிட்டேன் அவளை!” என்று வருத்தமாக கூறினான் வருண்.

“சரி இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க?” என ராகவ் கேட்க,

“நாளைக்கு பீச்க்கு போகணும்டா”

“டேய் அவ வருவாளா?” என்று ராகவ் சந்தேகமாய் கேட்டான்.

“ என் மனசுக்கு தோணுது, அவ கண்டிப்பா வருவானு

கனவிலே பார்த்துகிட்டு இருந்தவள , இன்னைக்கு நேர்ல பாத்துட்டேன்!

நடக்காது நினைச்சதே  நடந்துருச்சு, கூடிய   சீக்கிரம் அவளை கண்டுபிடிச்சிடுவேன்” என்று  நம்பிக்கையோடு கூறினான் வருண்.

“அப்போ நாளையிலிருந்து பீஜ் பீஜா கடல விக்கப் போற அப்படித்தானே!”

என்று ராகவ் சிரித்துக் கொண்டே கேட்க,

“என்னடா மச்சான் இப்படி பேசுற! நான் மட்டும் போகல, ரெண்டு பேரும் சேர்ந்து  தான் கடலை விக்க போறோம்!” என்று கண்ணடித்தான் வருண்.

“ அது சரி நீ பொறுக்குறதுக்கு என்னையும் கூப்பிடுற, அப்படித்தானே!” என்று ராகவ் கேட்க,

“நண்பனோட காதலுக்கு உதவி செய்றவன் தான் உண்மையான நண்பனாம் “.. என்று வருண் சிரித்தான்.

வருண் சொன்னதைக் கேட்டு ராகவ் அவனை செல்லமாக முறைத்தான்.

வருணின் நம்பிக்கையையும் அவன் முகத்தில் தோன்றிய புன்னகையையும் பார்த்த ராகவ் “சரி மச்சான் உன்னோட ஆள கண்டுபிடிக்கிறதுக்கு என்னோட வாழ்த்துக்கள்”  என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

“பசிக்குது  மச்சான் என்ன வாங்கிட்டு வந்த, டிபன் ஆறிடும்  சாப்டுட்டு பேசலாமா? “ என ராகவ்  கூற, சரி என தலையசைத்தான்.

இருவரும் ஹோட்டலில் வாங்கி வந்த உணவை பிரித்து சாப்பிட தொடங்கினர்.

உண்ட மயக்கத்தில் ராகவ் தூங்கிட

வருண் தன்னவளைப் பார்த்த சந்தோஷத்தில்  அவளின் நினைப்பில் உருகி விட்டு ஆழ்ந்த நித்திரைக்கு சென்றான்.இருளின் ஆட்சி விலக   அழகாய் புலர்ந்தது காலைப் பொழுது!!

தூங்கி  எழுந்து என்றும் இல்லாத உற்சாகத்தோடு   கிளம்பினான் வருண்.தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு  தான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்றான்.

அங்கு மணி,ஷாலினி, திவ்யா, குணா அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன்,

“குட் மார்னிங் காய்ஸ்” என்று  வருண்  சொல்ல

பதிலுக்கு  அவர்களும் குட் மார்னிங் என கூறினர்.

“என்ன மச்சி உன்னோட தேவதையை கண்டுபிடிச்சிட்டியாம்”  என திவ்யா கேட்டாள்.

“கனவு தேவதையே வா?” என்று   மணி கேட்க,

“ஆமாம், நேத்து சாயங்காலம்!” என்று நடந்ததை எல்லாம் கூறினான் வருண். அவன் சொல்ல சொல்ல அனைவரும் அதிர்ச்சியாய் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“எப்படியோ உன் கனவுல வந்த தேவதையை நிஜத்துல பாத்துட்ட, அதுக்கு எங்களுக்கு ட்ரீட்டு வையி”

என ஷாலினி கேட்க,

“உங்களுக்கு இல்லாமையா? இன்னைக்கு ஈவினிங் எல்லாரும் ரெஸ்டாரன்ட்  போவோம்” என சொன்னான் வருண் .அனைவரும் பேசிக் கொண்டிருக்க  மேனேஜர் வந்துவிட அனைவரும் வேலை செய்ய தொடங்கினர்!!

இன்னைக்கு சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு பீச்க்கு போகணும்  என்று நினைத்துக் கொண்டே, வருண் வேலை செய்து கொண்டிருக்க நேற்று அவன் முகத்தில் அடித்த அதே வெளிச்சம்  பட்டது!

ஏதோ, உந்துதலில் அது என்னவென்று பார்க்க மஞ்சள் நிற சேலை அணிந்து

மையிட்ட கண்களோடு

ஜிமிக்கி தாளம் போட

காற்றினில் அவள் கூந்தல் அசைய

அவன் எதிரே  நின்று கொண்டிருந்தாள்  அவன் கனவு தேவதை!!

‘வேலை  பாக்க விடாம இப்படி கனவுல டிஸ்டர்ப் பண்றாளே?’ என நினைத்துக் கொண்டே   ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு   மீண்டும் கோப்புக்களில் தன் கவனத்தை செலுத்த

 “குட் மார்னிங் சார்” என்ற குரல் கேட்க, தன் எதிரே நின்றவளை அண்ணார்ந்து  பார்க்க அதிர்ச்சியில் உறைந்தான் நம் நாயகன்.

ஆம்,  எதிரே நின்றது வருணின் கனவு காதலிதான்!!

வருண்   அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க  “வரு” என்று கூப்பிட்ட ஹெச் ஆரின் குரலில் தன்னிலை மீண்டு, “எஸ் சார்” என கூறினான்.

“சி  இஸ்  சிந்து ,  இவங்கள நம்ம கம்பெனில  புதுசா ஜாயின் பண்ணி இருக்காங்க. இவங்க உங்களோட டீம். இனி இவங்களையும் உங்களோட  டீம்ல சேர்த்து ஒர்க் பண்ணுங்க!”  என ஹெச் ஆர் உரைக்க நம்ப முடியாத பார்வை பார்த்தான் வருண்.

நடப்பதெல்லாம் கனவா நிஜமா என்று யோசித்துக் கொண்டே “ஹாய் சிந்து “என வரு   கைகுலுக்க விறைய “வணக்கம் சார்”  எனக் கூறினாள் சிந்து . அந்த நிமிடம் வருணுக்கு தர்ம சங்கடமாய் போனது.

“சிந்து இவங்களோட டீம்ல தான் இனிமேல் நீங்க வேலை செய்யப் போறீங்க,  ஆல் தி பெஸ்ட் சிந்து வேலைய பாருங்க, ஏதாவது சந்தேகம்னா வருண் கிட்ட  கேளுங்க!”  என ஹெச் ஆர் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

“வாங்க சிந்து உங்களுக்கு  நம்ம டீம்ல    உள்ள   எல்லாரையும் இன்ரோ கொடுக்கிறேன்”  என வருண்   சொல்ல

அவன் பின்னாடி சென்றாள்.

‘பேர் கூட அவளை மாதிரி அழகா இருக்கே!’  என மனதில் நினைத்துக் கொண்டே சென்றான்  வருண்.

டீமில் உள்ள அவனின் நண்பர்களை அறிமுகப்படுத்தினான்.இது மணி,ஷாலினி,குணா,திவ்யா

என் பேரு வருண் என கூற அனைவரும்    அவளுக்கு கைக்கொடுக்க,  பதிலுக்கு வணக்கம் கூறினாள். ஒருவரை ஒருவர் பரஸ்பரமாக விசாரித்து விட்டு   அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை செய்ய தொடங்கினார்கள்.

“ஏதாவது வேலையில உங்களுக்கு சந்தேகம் இருந்தால்  என்கிட்ட கேளுங்க” என்று வரு  சிந்துவைப் பார்த்து சொல்ல சரி என தலையசைத்து விட்டு அவள் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்கினாள்  சிந்து.

வருண் வேலை பார்த்துக்கொண்டே அவ்வப்போது சிந்துவை பார்த்துக் கொண்டே இருப்பதை அவனின் நண்பர்கள் பார்த்துவிட்டனர்.

அலுவலகத்தில் இடைவேளை வர அனைவரும் வருணின் அருகில் வந்து “அந்த புள்ளைய நீ பாக்குற பார்வையே சரி இல்லையே? என்ன விஷயம்” என கேட்க

“இவதாண்டா என் கனவு காதலி” என்று வருண் சொல்ல ஐவரும் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.

அவர்களின் திகைப்பை உணர்ந்த வரு புன்னகை சிந்தியபடியே  அவர்களைப் பார்த்து  கண்ணடித்தான்.

கதையைப் படித்து விட்டு உங்களின் எண்ணங்களை விமர்சனங்களாக எழுத்துகளில் பதிவேற்றிச் செல்லுங்கள் நண்பர்களே!

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!