அத்தியாயம்-7-
மங்கலம் யாருக்கும் கேட்காத வண்ணம் “மறுமணம்…” என்று முணு முணுக்கவும்…. சுற்றிலும் இருந்த ஊராரும் குடும்பத்தாரும் திகைத்துப்போய் தன் முகத்தையே உற்றுப் பார்ப்பதைக் கண்டவள் வெட்கப் பட…., அதைப் பார்த்ததும் பேச்சியம்மாளுக்குப் பித்தம்! உச்சி ஏறாத குறைதான்…! கையை ஓங்கியபடி,
“ஏடி! என்ன …???, பாரதிராஜா, ‘ என் இனிய தமிழ் மக்களே… உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்… இவதான் என் புது படத்துக்கு கதநாயகி’ன்னு உன்ன வச்சு டைரக்டர் படம் ஏதும் எடுக்குறாரா என்ன….? வெட்கம் வருதாம்பல வெட்கம்…!, பெரிய பாரதிராஜா ஹிரோயினின்னு நினைப்பு… மூஞ்சியும் …. முகரையும் பாரு….ப்ப்ப்பே…. நயவஞ்சகி… ஒழுங்கா மரியாதையா உண்மைய சொல்லுடி….! இந்த காசும் நகையும் எங்கிருந்து வந்துச்சு…?”
என்று மாமியார் கத்தவும்….. தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு நின்ற மாணிக்கம் நெஞ்சைத் தடவியபடியே நடுங்கத் தொடங்கினவன் …
“நானே வயித்துவலிக்காரன்… என்னேரம் நெஞ்சு திக் திக்குன்னு அடிச்சுக்குது…! இவ பண்ற கூத்துக்கு எந்த நேரத்துல ஜீப் வந்து போலிஸ் இறங்குமோன்னு குடலே நடுங்குது…! இதுல நீ வேற இந்த கத்து கத்துறியே ஏம்மா..???.”
என்றுவிட்டு, மனைவியின் பக்கமாக திரும்பிய மாணிக்கம்,
“ எங்கிருந்துடி வந்துச்சு இந்த நகையும் பணமும்….?, ஒழுங்கா உண்மைய சொல்லி தொலையேன்டி…!”
என்று பதறவும்… .மங்கலம் தன் முகத்தை புடவை முந்தனையால் மூடியிருந்தவள், அதிலிருந்த தன் கையை மெல்ல எடுத்து, புடவையின் முந்தானையை சரி செய்தப்படியே, உதட்டோரம் ஒரு மர்மப் புன்னகையையும் சிந்திவிட்டு,
“போலீஸா… மன்னாங்கட்டி … மாமே, இந்த சுத்தமான காசும்…நகையும் … என்னுடையது தான்னு முதல்ல நம்புங்க… அப்புறம் எதுக்கு வீணா போலீஸை பாத்து பயப்படனும்…? ”
என்று மங்கலம் சொல்லவும்…. அப்போதுதான் பேச்சியம்மாளுக்குத் திடீரெனத் தூக்கி வாரிப்போட்டது….
‘ஆமாம்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பஞ்சாயத்தாளுக நடுவுல மங்கலம் தன் உதட்டோரம் லேசா முணுமுணுத்தாளே…அ…து, அ…து அது என்ன வார்த்தைன்னு …???, அந்த ஒரே ஒரு வார்த்தை… என்னவா….. இருக்கும்.’? ன்னு,
இப்போது மாமியார் சிந்திக்கவும் இடியென அவளது நினைவுக்கு வந்தது…!
“மறுமணம்…!”
என்று பேச்சியம்மாளுமே ஒரு முறை அவளது வாயால் அந்த வார்த்தையை மீண்டும் முணு முணுத்து பார்க்கவும்…. அவளது முகம் வெளுத்துப்போய்…!!!, நடுங்கும் ஆள்காட்டி விரல்களால் மங்கலத்தைச் சுட்டிக்காட்டினவள்….
“ஏய்… அப்போ நீ ஆரம்பத்துல இருந்தே வாய்க்குள்ளளாக முணுமுணுத்தியே… ‘மறுமணம்’… அதையும் இந்த காசு பணத்தையும் முடிச்சுப் போட்டு ஏதோ பெரிய சதி பண்றியாடி….? உண்மைய சொல்லுடி..?, யாராவது வேற ஆளு உன்னய கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி சீதணமா பணமும் நகையும் குடுத்தானாடி… ?, அதுதான் உன் ‘மறுமணம்!’ கதையாடி…?”
என்று உறைந்துபோய்க் கேட்கவும்….மங்கலம் தன் மாமியாரையும், வயிற்றைப் பிடித்துக்கொண்டு நிற்கும் கணவனையும், வாயடைத்து நிற்கும் மாமனாரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தவள்……………………………………….! அப்படியே, தனது கூலிங் க்ளாஸை ஸ்டைலாக இறக்கி, கேள்வி மேல் கேள்வி கேட்ட மாமியாரை ஒரு வெறி வெறித்துப் பார்த்த மங்கலம்…., அப்படியே, அவளின் நெற்றிப் பொட்டைச். சுருக்கி …!!!, தனது இரு புருவங்களை வில்லாக வளைத்து , அம்பாக கனல் போல் எரிந்து கொண்டிருந்த சிவந்த ‘தீ!’ கண்களாளே மாமியார் மேல் அக்னியை கக்கும் அம்பை விட்டு ஒருப் போடுப் போட்டுவிட்டு…,
விருவிருவென்று அவர்களின் வீட்டுப் படுக்கையறைப் பக்கமாக தனது கால்களை நகர்த்தி, புலிப் போல பாயவும்…. அவள் எங்கு செல்கிறாள் என்று புரியாமல் அம்மாவும் மகனுமாக ஓடிவந்து அவளை மடக்கிப் பிடிக்க முயன்றனர்…. ஆனால், அவர்களிடம் சிக்காமல் திமிறி…!!!, இருவரையும் சேர்த்தே …!, தன் முழு பலத்தையும் செலுத்தி….!, ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு தீர்க்கமாக நின்று….!, உதட்டை பின்னிழுத்து சிலுப்பி,
“ம்க்க்கும்…. என்ன… என்னய பழைய மங்கலம்னு நினைச்சீங்களாக்கும்…? ம்க்கும்…!”
என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு, நேராகப் படுக்கையறையை நோக்கி ஒரு கம்பீர நடை மங்கலம் போடவும்….. பின்னாலேயே பஞ்சாயத்து கூட்டத்தார் அவளைத் திட்டிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக பின்னால் வர…. இதைக் கண்ட அவளது பிள்ளைகளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை….. மகன் வேலன் குழப்பமாக நின்றுகொள்ள…, மகள் சாருலதாவும் அவ்வாறே நின்றாள்…. அப்படியே அம்மாவை பற்றி தங்களுக்குள்ளாகவே பேசி முணு முணுத்தும் கொள்ள….
“ஆஹான்….., கண்டுபிடிச்சிட்டேன்….! பிஸா சாப்பிட்டாலே அம்மாவுக்கு சேராது…. அதான் அம்மாவுக்கு வயிறு கலக்கி பாத்ரூம் போகணும் போல…!”
என்று சொல்லி வேலன் சிரிக்கவும்…,
“அடப் போடா ப்ரோ… அம்மா ஏதோ பெரிய விஷயம் பண்ணப் போறாங்க பாரு…!”
என்ற சாருலதா, அப்படியே , அது என்னவாக இருக்கும்…?, என்றும் , அண்ணன் காதுக்குள்ளாக போட்டு வைக்க…. , பின்னர் பிள்ளைகள் இருவருமாக சேர்ந்தே, அதற்களுக்குளாகவே அம்மாவை பற்றி மேலும் சில பல பேசிக் கொண்டு , ஒரு சிறிய பந்தயமும் (பெட்!) கட்டிக்கொண்டனர்….
மங்கலமோ சடாரென்று படுக்கறைக்குள்ளாக உள்ளே நுழைந்து, டமார்! என்று கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொள்ளவும்…..வெளியில் நின்ற மங்கலத்தின் அம்மா வள்ளிக்குத் தூக்கி வாரிப்போட்டது…. உடனே கதறத் தொடங்கி,
“ஐயோ… என் பொண்ணு உள்ள போய் தூக்கு மாட்டிக்கத்தான் போறாளே….!”
என்று மாமியார் மீதும் மருமகன் மீதும் அபாண்டமாகப் பழிபோட்டு வீதி இரண்டாக ஒப்பாரி வைக்கத் தொடங்கவும்….. அங்கே கூடிய கூட்டமும் வள்ளி சொல்வதையே கேட்டு,
“ஆமா… அவ அம்மா வள்ளி சொல்றதும் நியாயம் தானே…!”
என்றுவிட்டு, மங்கலத்தின் குடும்பத்தார் பார்வையாலேயே மாணிக்கத்தின் குடும்பத்தாரைக் குத்தலாகப் பார்க்க தொடங்கியது…..அப்படியே பார்வை மாணிக்கத்தின் பக்கமும் திரும்பவும்…. உடனே, மாணிக்கம் கோபமாக எகிறிக்கொண்டு வந்தவன்,
“எக்கோவ், என்ன நீங்க பேசுறீங்க…? , சின்ன வயசுல இவள நீங்க படுத்தின கொடுமைய விடவா நான் பெருசா பண்ணிட்டேன்…?,. ஹலோ மங்கலத்தின் சொந்தகாரவுகளே உங்களையும் தான் சொல்றேன்…. நீங்க அவள கொடுமை படுத்தி ஒதுக்கி வைத்தத விட நான் பண்ணது ஒன்னும் பெரிசே இல்ல…. ?”
என்று சொல்லவும் , உடனே வள்ளியும் அவ குடும்பத்தாரும் பாய்ந்து வந்து,
“யாரை யாரு கொடுமைப்படுத்தினது…? , உனக்கு யாரு அத சொன்னது…???”
என்று கர்ஜித்தவர்களை பார்த்து மாணிக்கமும் விடாமல்,
“உங்க மகளே தான் சொன்னா…! ‘மாமா, நீங்க பண்ற கொடுமைய கூட தாங்கிக்கலாம்… ஆனா எங்கம்மா சின்ன வயசுல எனக்கு பண்ணின கொடுமை இருக்கே….,அய்யய்யய்யோ சொல்லி மாளாதுன்னும், அதிலும் என் சொந்தகாரவுக என்னை ஒதுக்கி வைச்சு அவங்க மட்டுமே ஜாலியா திரிஞ்ச கதை இருக்கே அம்மம்மா அதுவும் மோசம்ன்னும் பலமுறை என்கிட்ட வருத்தப்பட்டு இருக்கா….!”
என்ற மிரட்டிய மருமகனால் மகளைக் குறித்து வள்ளியின் மைண்ட் வாய்ஸ் கதறியது…., ‘
அடிப்பாவி மவளே….! செத்தாலும் என்னை ஜெயிலுக்கு அனுப்பாம விட மாட்டா போலயே…!’
அதே போல மைண்ட் வாய்ஸூம் நடுக்கமும் பேச்சியம்மாளுக்குமே இருக்கவும்….
‘இவளால நாமதான் இன்னொரு முறை மாமியார் வீட்டுக்கு போக போறோம் போலயே….!’
என்று வள்ளியும், பேச்சியம்மாளும் இருவருமாக தங்களது தவறை மறைக்க…., ஒருவரையொருவர்,
“நீதான் காரணம்….!”
“நீ தான்… இல்ல.. நீ தான்….”
என்று மாறி மாறி வாதிட்டுக் கொண்டனர்…..கதவைத் தட்டித் தட்டி ஓய்ந்துபோன மாணிக்கமும், தலையில் அடித்துக்கொண்டு புலம்பவும்,
“நான் என்ன நினைச்சேன் தெரியுமா…?, போலீஸ் திருட்டு கேஸுக்கு மட்டும்தான் என்னய பிடிப்பான்னு நெனைச்சேன்…. ஆனா இவ பண்ணுறதா பார்த்தா….?, இப்போ வரதட்சணை கொடுமைன்னு வேற என்னையும் எங்கம்மாவையும் புடிச்சுட்டு போய் முட்டிக்கு முட்டி தட்டுவாங்க போலயே போலீஸ்….!”
வள்ளி அதைக் கேட்டு சிரித்து வைக்க…., மாணிக்கம் அவர்களையும் பீதியூட்டினவன்,
“எக்கோவ் ….!!! , எங்கள மட்டுமல்ல…, உங்களயும் தான் அரெஸ்ட் பண்ணுவாங்க போலீஸ்…! சாவுறவ உங்க பெயரையும் எழுதிவச்சுட்டு செத்தான்னு வைங்க நீங்களும் உள்ளதான் போவீங்க….!”
இதைக் கேட்கவும்…. வள்ளிக்குமே உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது….. அவர்களுக்கு மட்டுமல்ல…. இதனால், அங்கே குழுமியிருந்த யாவருமே பயத்தில் எல்லோருமாக சுற்றும் முற்றும் அதிர்ந்த விழிகளில் விழி! விரித்துப் பார்த்தப்படி, மாறி…. மாறி…. நடுங்கத் தொடங்கவும்….
உடனே மாமனார் பாண்டியனும் மாணிக்கமும் சேர்ந்து கதவை ஓங்கி உடைக்க முற்பட்டனர்….. அவர்கள் பலமாக உடைக்கச் செய்தார்களோ…? என்னவோ…?, திடீரென்று கதவு தானாகத் திறந்துவிடவும்….!
முன்னால் கதவை உடைக்க முயன்று பாய்ந்தவர்கள் தடுமாறி அப்படியே தரையில் அப்பாவும் மகனுமாக மல்லாக்க விழுந்து,
“குய்யோ …. முய்யோன்னு….”
வலி பொறுக்க மாட்டாமல் முனங்கினர்…… உடனே,
“என்னாச்சு…..!!!!?”
என்றப்படி, கூட்டத்தினர் ஓடிவந்து பார்க்கவும்…., மங்கலமும் விழுந்து வாரிக் கொண்டவர்களைக் கண்டு நக்கலாக சிரித்தபடி , இடுப்பில் கை வைத்தவாறு நின்றுகொண்டே ,
“என்ன மாமே… முத்து குளிக்க வாறீகளா…? இல்ல…. மூச்சை அடக்க வந்தீங்களா….?”
என மாணிக்கத்திடம் கிண்டலாகக் கேட்க, கீழே மல்லக்க கிடந்தபடியே, தலைகீழாக தெரிபவளை பார்த்தவாறு அவன் வலியில் முணங்கியப்படியே,
“ஏன்டி கேட்க மாட்டா…? உன்னய காப்பாத்த போய் கீழ விழுந்து அடிபட்டு கிடக்கோம்ல.. நீ இதுவும் கேட்ப… இதுக்கு மேலயும் கேட்ப…??.!”
எனறவனை மங்கலம் பொறுப்படுத்தாமல் அப்படியே மாமனாரைத் திரும்பிப் பார்க்கவும்…,
“என்ன மாமனாரே… மிக்சர்! சாப்பிட்டு ஒரு மூலையில கிடக்க வேண்டியுதானே….? அதானே எப்பவும் செய்வீங்க…?,, இப்ப எதுக்கு புதுசா இந்த வேலைய பாக்குறீக மிஸ்டர் டீலக்ஸ் பாண்டியன்…?”
என்று அவரையும் கிண்டலடித்தவளிடம், சும்மாவே பேசாத பாண்டியன், வாயிலயே அடியும் பட்டதால் இப்போது பேசவும் முடியாமல் வெறும் முனங்கலை மட்டும் அவளிடத்தில் வெளிப்படுத்தினார்…..அப்போது சரியாக அந்த இடத்திலே , பேச்சியம்மாள் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையவும்….
“என்னடி பண்ணி தொலைச்ச…?, ஏன் கதவ திறக்கல….?”
என்று கத்தியவாறே, மங்கலத்தை உற்றுப் பார்த்தவர்…., அப்படியே உறைந்துப்போய் அப்படியே நின்ற இடத்திலேயே அதிர்ச்சியில் கல்லாகவும்….! அதைப் பார்த்த பஞ்சாய்த்துக்கு வந்த கூட்டமும் அப்படியே விழி பிதுங்கி அதிர்ச்சியில் உறைந்தது…..
அப்போது சாருலதா தன் அண்ணன் வேலனிடம் குசுகுசுவென்று,
“பார்த்தியாண்ணா… பெட்ல நான் தான் ஜெயிச்சேன்….!”
என்றுவிட்டு, சிரிக்க…. , மறுபடியும் ஒரு முணு முணுக்கும் சத்தம், “மறுமணம்!….” என்று எல்லோர் காதிலும் கேட்கவும்…..
💒மறுமணமாகும்…
அப்போ அப்படி என்னதான் செய்திருந்தாள் மங்கலம்…?, அதுசரி உங்க காதுல கேட்டதா மறுமணம் ….,…??, பார்ப்போம் பட்டூஸ் பாய் 💛♥️👋