அவளா… அவளா?
“ஆஆஆஆஆ… ஆஆ……ஆஆ…ஆ….ஆ!!!!!!” என்னைய விடு என்னைய விடு! விட்டுடு!!!! , கிட்ட வராதே!! பிளீஸ்! பிளீஸ்! ஐயோம்மா!! வலிக்குது!! விடுடா!!யாராவது வாங்களேன்!!”” ஆ!…ஆ…ஆ..ஆ!…”
பவித்ரா தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தாள்!
சந்துரு ஓடி வந்து அறையின் விளக்குகளைப் போட்டவன்,”
” ஏய்!!! பவித்ரா! எழுந்துக்கோடி!! என்ன இது? கனவா! எழும்புடி! முழிச்சிப் பாரு! ஏய்!ஏய்ய்ய்!” என்றபடி அவளை உலுக்கினான்!
ராஜி, அறையில் இன்னொரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவள், சாவகாசமாய் எழுந்து வந்து,
” என்னண்ணா. என்ன ஆச்சு?” என்றாள். “”ம்ம். . .ம்ம்.. குழந்தை அழுதுச்சு!” என்றபடி அவளை முறைத்தவன்,” “
ஏண்டி இவ இவ்வளவு ஹை டெசிபல்ல கத்திட்டு இருக்கா, எருமமாடு உனக்கு எப்படித்தான் இப்படி தூக்கம் வருதோ?” என்று கத்தினான்.
“ஆமாண்ணா! அவளுக்கு டெய்லி அதான் பொழப்பு! ராத்திரி சன் டிவில ஆதிரா பார்க்க வேண்டியது!அப்புறம் தூக்கத்துல சிரிக்கிறது, அழறது, கத்துறதுன்னு ஒரே ஆர்ப்பாட்டம்தான்!”
அதற்குள் பவித்ரா விழித்து சுற்று முற்றும் பார்த்தவள் , தான் கண்டது கனவு என்று உணர்ந்ததும், எழுந்து உட்கார்ந்தாள்! உடல் முகம் எல்லாம் தெப்பலாக வியர்த்திருந்தது!
” என்னம்மா! ஏதும் பயங்கர கனா கண்டியா?” என்று சந்துரு அவள் அருகில் அமர்ந்து கனிவாக வினவினான்!
” ஆமாண்ணா! அவங்க என்னை விரட்டிட்டே வந்தாங்க! நான் ஓடிட்டே இருந்தேன்! திடீர்னு ஒரு ஆள் என் முன்னாடி வந்து என் முடியைக் கொத்தா பிடிச்சிட்டான்! நான் விடு விடுன்னு கத்திட்டே போராடினேன்! அவன் நகம் என் கன்னத்துல கீறிடுச்சு! அப்புறம் முழிச்சிட்டேன்!” என்றாள்.
” என்னடி! நேற்றும் இதே கனவுதானே சொன்னே! இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா டிரை பண்ணி இருக்கலாமே!” என்றாள் ராஜி கேலியாய்!
“ஆமா இன்னிக்கு என்ன டிரஸ்டி? நேத்து கனவுல சிவப்பு பாவடை போட்ருந்த! அந்த குண்டு ஆள் பிரவுன் ஷேர்ட்! கரெக்ட்டா?” என்றாள் ராஜி!
சந்துரு அதட்டினான்!” ஏய்! கொஞ்சம் பேசாம இரு! அவ ரொம்ப பயந்து போயிருக்கிறது தெரியலியா? போ! போய் குடிக்க ஜில்லுன்னு தண்ணி கொண்டுவா!” என்றான் கோபமாய்!
பவித்ராவுக்கு கண்களில் குளம் கட்டியிருந்தது!
ராஜி பேசாமல் சென்று ஒரு பாட்டிலில் தண்ணீரும், பூஜை அறையிலிருந்து திருச்செந்தூர் இலை விபூதியையும் எடுத்து வந்து, திருநீற்றை அவளுக்குப் பூசி விட்டு, அவளது தலையணையின் அடியில் வைத்தாள்! பிறகு அவளைத் தண்ணீர் குடிக்க வைத்துப் படுக்க வைத்தாள். அவள் சற்று கண்ணயரத் துவங்கியதும், சந்துருவை அழைத்தவள்,”
” அண்ணா! எனக்கும் கவலையாயிருக்கு! இவள் மூணு நாளா ஒரே கனவையே பார்த்துட்டு இருக்கா! சம்பவங்கள் , டிரஸ் கலர் கூட டெய்லி அதேதான் சொல்றா!” என்றாள் கவலையோடு!
சந்துரு,” சரிம்மா! அவ பக்கத்துலேயே கட்டில்ல படுத்துக்கோ! லைட் எரியட்டும்! காலையில் பவித்ராகிட்ட பேசலாம்!” என்றான்.
மறுநாள் காலை!
பவித்ரா சீக்கிரமே எழுந்தவள், முந்தைய இரவின் சுவடு கூட இன்றி சுறுசுறுப்பாக வேலைகளை முடித்தவள், குளித்து விட்டு வரவும், அவளைக் கண்ட ராஜி அதிர்ந்தாள்!
அவள் அணிந்திருந்தது, அவள் கனவில் அணிந்திருந்ததாய்க் கூறிய அதே சிவப்பு பாவாடை….!!!!!
மதுரை டோக்நகர் ஏரியா. அமைதியான அந்த கிளைச்சாலையில் , இடதுபுறம் திரும்பினால் ஒரு தெரு.அந்த தெருவின் கடைசியில் இரண்டு வீடுகள். முதல் வீட்டில் அண்ணன் திருமலைநாதன் மனைவி விசாலம். அது மாடியிலும் இரண்டு அறைகள் ,ஒரு நீள வெராந்தா என சற்றே பெரிய வீடு!
எதிர்த்த வீடு தம்பி தணிகாசலம் கல்லூரி விரிவுரையாளர், மனைவி பிரேமா வங்கியில் பணி. அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.இரண்டு ஆண் குழந்தைகள். பெரியவன் ஆறாவது, சின்னவன் நான்காவது படிக்கின்றனர். கடைசியில் ஒரு பெண்குழந்தை யூகேஜி.
அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக அந்தப் பெரிய வீட்டில்தான் இருந்தனர்.
திருமலைநாதன் இயல்பிலேயே மிகவும் சபலம் உடையவர். வேலைக்கு வரும் பெண்களிலிருந்து, சற்றே வறுமையான அவரிடம் உதவி கேட்டு வரும் பெண்கள் வரை எல்லோரிடமும் சில்மிஷம் செய்பவர். படிந்தால் கொண்டாட்டம்தான். அவர்கள் வீட்டிற்கு காய்கறி கொண்டு வரும் முத்து போன்ற பெண்கள் அவர் அவ்வப்போது தரும் அதிக காசுக்காக சில பல வழிசல்கள், உரசல்களைப் பொறுத்து போவதும் நடப்பதுதான்.
பிரேமாவுக்கு அவரது மேய்ச்சல் பார்வை பிடிக்காமல் போனதில், இருவரும் எதிர்த்த வீட்டை வாங்கி குடி போய்விட்டனர். விசாலத்திற்கும் கணவனது புத்தி தெரிந்தே இருந்ததால் அமைதி காத்தார்.
விசாலம் வசதியான வீட்டிலிருந்து வந்தவர்தான். ஆனால் கோழை. அப்பா அம்மா கிடையாது. எதற்கும் பயந்து பணிந்து போய்விடுவார். கணவரின் நடத்தையால் அவமானமும், மன உளைச்சலுமாய் இருந்தவருக்கு, இத்தனை வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லாமலிருந்தது அவரை அதீத மனச் சோர்வுக்கு ஆளாக்கியது. வயது நாற்பத்தி ஒன்று. எனினும் ஒவ்வொரு மாதம் நாட்கள் சிறிது தாமதமானாலும், ஆர்வமாகிப் பின் இல்லை என்னும்போது அழுது கரைந்து என உடல்நிலையும் குன்றியது. அதுவும் உற்றம், நண்பர்கள் என,” இன்னும் நல்ல சேதி இல்லையா?” என்கையில் அதீத மன அழுத்தத்தில் ஆழ்ந்தார். திருமலைநாதன் இதையுல்லாம் சட்டை செய்வதே இல்லை! இந்த சமூகமும் பெண்களை நோக்கித்தானே சுட்டு விரல் நீட்டிக் கேள்வி எழுப்பும்!
அந்த சமயத்தில்தான் விசாலத்தின் சித்தப்பா வழி அண்ணன் உறவில் அவரது மனைவி, வாய்க்காலில் குளிக்கும்போது, சுழலில் அகப்பட்டு, நீரின் வேக இழுப்பும், அலசிக்கொண்டிருந்த நான்கைந்து புடவைகள் காலில் சிக்கியதுமாய் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். அந்த அண்ணன் தினமும் குடித்தே சீரழிபவர். விக்கிரமசிங்கபுரம் மில்லில் வேலை பார்த்தாலும் குடியில் எப்போதும் இருப்பவரால் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.
அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் காதலித்தவனுடன் ஓடிப் போய் எங்கேயோ கண் காணாமல் வாழ்கிறாள்.தொடர்பு இல்லை. அடுத்தது மீனா. கடைசியில் லோகு! மீனாவை விசாலத்தின் துணைக்கு அனுப்பினர்.
பவித்ராவின் குடும்பம் திருமலைநாதன் வீட்டின் மாடிக்கு குடி வந்து ஐந்து மாதங்கள் முடியவில்லை. பவித்ரா ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.அவளுக்கு மூத்தவள் ராஜி இப்பொழுதுதான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். பெரியவன் சந்துரு பி.காம்.எல்.எல்.பி. மூன்றாவது வருஷம். தாய் இல்லை. தந்தை நாக்பூரில் இரயில்வேயில் வேலை! அவர்களது தாய்மாமா குடும்பம். மதுரையில் கலைநகரில்தான் இருக்கிறார்கள். மாமா வெங்கடாசலம் ஒரு மருத்துவர்.ஜெனரல் பிசிஷியன். எம்டி. யும் கூட. அவர்களது கண்காணிப்பில் பிள்ளைகள் அந்த ஊரில் இருப்பது அம்பலவாணன், அவர்களது தந்தைக்கு நிம்மதி்.
விசாலத்திற்கு பவித்ராவின் குடும்பத்தை மிகவும் பிடித்தது! ராஜியின் சூட்டிகை, பவித்ராவின் அமைதி அவர்கள் வீட்டில் எந்நேரமும் அலறும் டிவி திரில்லர் சீரியல்கள், பவித்ரா ஹாரர் படங்கள் பார்த்து விட்டு செய்யும் அலப்பறைகள், சந்துருவின் அதட்டல் என அவர்கள் வீட்டில் இருக்கும்போதெல்லாம் விசாலத்திற்கு சந்தோஷமாய்ப் பொழுதுகள் கழியும். ஏதாவது சமைப்பதைக் கொடுத்து விடுவார்.ஸ்பெஷலாக ஏதாவது செய்தால் ராஜி வாசம் பிடித்தபடி வந்து விடுவாள். விசாலத்தின் மனஅழுத்தம் கொஞ்சம் குறைந்தது!
இந்த வீட்டுக்கு வந்த புதிதில், எல்லாம் நன்றாகவே இருந்தது. பத்து பதினைந்து நாட்களில் பவித்ராவின் நடவடிக்கைகளில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது! தனியே போய் ஓர் இடத்தை வெறித்துப் பார்ப்பதும், எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று எழும்பி அசையாமல் நின்று மௌனமாய் எதிரேயோ, கீழேயோ பார்த்தபடி நிற்பதும் என பவித்ராவின் செய்கைகள், ராஜிக்குப் புரியவில்லை. பவித்ராவை உலுக்கினாலும் அவள் அந்த நிலையிலிருந்து மாறுவதில்லை. பின் தானாய் இயல்புக்கு வந்த பின் அவள் கேட்பது,” நான் இப்பொழுது என்ன செய்தேன்?”
சந்துருவுக்கும் கவலையானது. மாமாவிடம் பகிர்ந்து கொள்ள அவர் பவித்ராவுக்கு எல்லா சோதனைகளும் செய்து பார்த்து எல்லாம் நார்மல் என்றதும், ” ஏதோ மனக்குழப்பம் போல இருக்கு. அவளிடம் மெதுவாகப் பேசி ஸ்கூலில் எதுவும் நடந்ததான்னு கேட்போம். கொஞ்ச நாளைக்குத் தனியே விட வேண்டாம் . தேவைன்னா கவுன்சலிங் கூட்டிட்டு போறேன்!” என்றார்.
மீனாவுக்கு விசாலம் நாலைந்து செட் புதுத்துணிகள், கவரிங்கில் புது மாடலாய் வளையல், செயின், கம்மல் என எடுத்துக் கொடுத்திருந்தார். நல்ல சாப்பாடு , ஓய்வு, துணிமணி என ஆளே மாறி விட்டாள். கறுப்புதான். ஆனால் களையான முகம். இப்போது சதை பிடித்து பெரிதாய் விம்மித் தணியும் மார்பகங்களும், சதைப்பிடிப்பான பின்னழகுமாய் ஆளை அசத்தும் வடிவழகில் இருந்தாள். போன வருடம்தான் வயதுக்கு வந்திருந்தாள். போஷாக்கு உடல் வனப்பையும் மினுமினுப்பையும் தந்திருந்தது. விசாலத்திற்கு அவரது கணவரை நினைத்து ஒரு பயம். ஆனாலும் மீனா சின்னக் குழந்தைதானே என நினைத்திருந்தார். திருமலைக்கும் மீனாவைக் கண்டாலே ஆகாது. அவர் கண்களில் படக்கூடாது, ஹால் சோஃபாவில் எல்லாம் உட்காரக் கூடாது, ஊஞ்சல் தட்டு, அவரது அறைப் பக்கமெல்லாம் கால் படக்கூடாது என ஏகப்பட்ட கெடுபிடிகள். சோற்றுக்கு வழியில்லாமல் வந்தவள் என இளக்காரம்.விசாலத்திற்கு ஒரு வகையில் நிம்மதி.
வாசலில் காலிங்பெல் அடிக்கவும் சென்று கதவைத் திறந்தவள் மூர்த்தியைக் கண்டதும்,” வாங்க!” என்றபடி உள்ளே சென்றாள். மூர்த்தி திருமலைநாதனின் பால்யகால நண்பர். குடும்பம், குழந்தைகுட்டி எதுவும் கிடையாது. தனிக்கட்டை!
“வாடா! என்ன காலங்கார்த்தால..,.?”
“ஏன் ஒரு வாய் காப்பி தரமாட்டியா(“
“பேஷா!” என்றவர் உள்ளே பார்த்து “விசாலம். .!” என்றவர், “மூர்த்திக்கு காப்பி கொண்டு வா!” என்றார்.
காப்பியைக் கப்பில் ஊற்றியதும்,
” அத்தை நான் கொண்டு போறேன் !” என்றாள் விசாலத்திற்கு வால்பிடித்தபடி வந்த மீனா! குழந்தை மனதை நோகடிக்க விருப்பமின்றி விசாலம் தலையசைத்தார். மீனாவைக் கண்ட மூர்த்தியின் விழிகள் தெறித்து விடும்போல் அகன்றது!
மேல் வீட்டில் பவித்ரா, ” ஹேய் மீனாதானே அது அங்க. .!” என்றாள் ஒரு சுவற்றைப் பார்த்தபடி! ராஜி புரியாமல் அவளைப் பார்த்தவள், “எங்கேடி? டிவியிலா. ்?” என்றாள்.
“யாரு டிவியில். .?” – பவித்ரா.
“யாரோ மீனான்னு சொன்னியே!”
“மீனாவா அது யாரு?”
ராஜி குழம்பினாள்.
‘இவளுக்கு என்ன ஆச்சு?’
திருமலை நாதன் மீனாவின் கையிலிருந்த கப்பை ஓங்கி உதைத்தார்.
“பிச்சைக்கார கழுதை இன்னொரு தடவ இங்கே வந்த, கழுத்தை திருகிருவேன்!”
பயந்து ஓடினாள் மீனா.
“நீ ஏண்டா இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க?”
“டேய்! பாக்கவே அருவெறுப்பா அழுக்கா இருந்த பொண்ணா இது. .? சும்மா தளதளன்னு. . . . உடம்பு சூடாகுதுடா. .!”
“ச்சைக் வேலைக்காரிடா. .உளறாத. .!”
“வேலைக்காரியா? வீட்டுக்காரி மாதிரி மினுமினுப்பா இருக்கா. வெளியே எங்கேயும் விடாம பொத்தி வை. யாராவது இழுத்துட்டு ஓடிருவாங்க!”
திருமலைநாதனின் பார்வை இப்போதெல்லாம் மீனாவை யாருமறியாமல் மேய்ந்தது.
“மூர்த்தி சொன்னது சரிதான். என்ன ஒரு உடல்வாகு. .! இவ்வளவு நாள் கவனிக்காம விட்டேனே!”
“ராஜி அங்க யாரோ அழறா மாதிரி கேக்குதுல்ல!”
“எங்கேடி?”
“அந்த மாடிப்படி கீழ. .! சிவப்பு பாவாடை கூட தெரிஞ்சது!”
“அவங்க வீட்டுக்கு யாராவது வந்திருப்பாங்க. நமக்கெதுக்கு? நீ போய் முகம் கழுவிட்டு ஹோம்வொர்க் செய். நான் உனக்கு குடிக்க ஏதாவது தரேன்.!”
விசாலம் கடைக்கு சென்றிருக்க, சாயந்தரம் வருவதாக இருந்த திருமலை மதியமே வீடு திரும்பினார்.
மீனா அடுப்படியில் இருந்தாள்.
“மீனா தண்ணீர் தாம்மா!”
‘மாமாவா. . .தன்னிடமா. .?’
அவசரமாகத் தண்ணீர் கொண்டு சென்றவள், படி இடறி தன் மேலே கொட்டிக் கொண்டாள்.
“என்ன அவசரம்? மெதுவா வந்தா என்ன?”
விழி விரியப் பார்த்திருந்தவள் நெஞ்சில் தன் வேஷ்டியால் துடைத்தார்
பின் கைகளால். இன்னும் அழுத்தி!
நெளிந்தவளைத் தன் மார்போடு இறுக்கி அணைத்தார்.சட்டை பட்டன்களை அவிழ்த்துக் கொண்டார். அவள் முகத்தை தன் மார்பில் புரட்டினார்.
“உன் மாமாதானே!”
அன்றொருநாள் விசாலம் அடைமாவு தரேன் என்று சொன்னார் என வாங்குவதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்ற பவித்ரா கதவு திறந்திருக்கவும் சுவாதீனமாக உள்ளே சென்றவள், மூர்த்தியைப் பார்த்தாள்.
அவர் திருமலையிடம், “ரொம்ப பயம்மா இருக்குடா! தூங்க முடியலை!காதில் மீனா விட்டுடுங்கன்னு சதா சர்வ காலமும் கத்திட்டே இருக்கா!”
“செத்தவளைப் பத்தி என்னடா உனக்கு? லூசுப்பயலே!”
அத்தை வருவதற்காகக் காத்திருந்த நேரத்தில் அவர்கள் பேசுவதை முழுவதுமாகக் கேட்டிருந்தவளுக்கு நிறைய புரியவில்லை.
அன்று விருதுநகரில் ஒரு கல்யாணத்திற்கு இருவரும் சென்றிருந்தனர். மொய் எழுதியதும்,” விசாலம் எனக்கு சாத்தூர்ல ஒரு அவசர வேலை! லேட்டானா நீ நம்ம ஜெகனோட வந்திரு!” என்றபடி கிளம்பினார்.
காலிங்பெல் சத்தத்தில் கதவைத்திறந்த மீனா மூர்த்தியைப் பார்த்ததும்,
” அத்தையும் மாமாவும் வெளியே போயிருக்காங்க!”
“தெரியும்!”
ஊஞ்சலில் அமர்ந்தவர், “என்ன வெயில்! கொஞ்சம் தண்ணீர் தரியா?”
தந்தாள்.
“வா! இப்படி உட்காரு!”
தன்னருகில் அமர்த்திக் கொண்டவர், அவள் தோள்களை இறுக்கியபடி, தொடையில் கை வைத்தார்.
நெளிந்தாள்.
” அந்த ஸ்பெஷல் பாக்கு வைச்சிருப்பானே எடுத்து தா!” என்றபடி வெற்றிலையை மடித்தார்.
எடுத்துக் கொடுத்தவள், சிட்டாக வெளியே ஒடினாள்.
வாசல் கேட்டைத் திறந்து, திருமலைநாதன் உள்ளே நுழைந்தார்.
“அத்தை எங்க மாமா?”
உக்கிரமாய் முறைத்தார்.
பயத்துடன் உள்ளே சென்றாள் மீனா!
“என்னடா குட்டி படியாது போல!”
“இங்கே வா!” திருமலை அழைத்ததும் ஓடிச் சென்றவளை, இருவருக்கும் நடுவில் அமர்த்தினார்.
மூர்த்தியின் கைகள் எல்லை மீறின!
“மாமா அவர். . .!”
“அவரும் மாமாதான்!”
சிவப்பு தாவாணியை உருகி வீசினார். சட்டையில் கை வைத்து இழுக்கையில், ” மாமா என்னை விட்டுடுங்க. . .எனக்கு பயம்மா இருக்கு! அத்தை. . .அத்தை. .!”
“அவ சாயந்திரம்தான் வருவா. அதுக்குள்ள நம்ம ஆட்டத்தை முடிச்சிக்கலாம்.!”
“வேண்டாம். வேண்டாம். மாமா!”,
” என்னடி, பிச்சைக்கார பரதேசி! கூட்டிட்டு வந்து, மூணு நேரம் சோறு போட்டு துணிமணி கொடுத்து பளபளப்பாக்கிருக்காளே உன் அத்தை! யாரு சம்பாத்தியம் இதெல்லாம். .ம்ஹ்ம். நன்றி வேண்டாம்!”
“மாமா எனக்கு இந்த புது டிரஸ்லாம் வேண்டாம். என்னை விட்ருங்க .ஊருக்குப்போயிடறேன்.!”
“அப்போ கழட்டுடி எல்லாத்தையும்!”
சட்டையைக் கிழித்தார்.
மீனா ஓடினாள்.
“என்னடி ஆட்டம் காட்றியா? எங்களை சந்தோஷப்படுத்திட்டு ஊருக்குப் போ! இல்லேன்னா திருடிட்டேன்னு போலீஸ்ல பிடிச்சுக் குடுத்திருவேன்!”
மூர்த்தியின் கை அவளது பாவாடை முடிச்சை அறுத்தது!
அலற வாய் திறந்தவளின் வாய்க்குள் தாவணியைச் சுருட்டி திணித்தனர்.மூர்த்தி அவள் கைகளைப் பின்னிருந்து முறுக்கி பிடிக்க, பயத்திலும், வலியிலும், சத்தம் வெளிவர வழியின்றி கத்தினாள்.
திருமலை நாதன் அவள் மீது படர்ந்து இயங்கினார்.
கால்களால் வலுவின்றி உதைத்தாள்.எதுவுமே அவரைத் தடுக்கவில்லை. மூர்த்தியையும்!
அவள் மூர்ச்சையானதைக் கூட கவனிக்காமல் மிருகங்கள் இயங்கின.
எல்லாம் முடிந்ததும்,” இன்னும் கொஞ்சம் பாக்கு அதிகமா வைடா! எங்கேருந்துதான் வாங்கறியோ!”
சிறிது நேரம் கழித்துதான் அவள் அசைவின்றி இருப்பதைக் கவனித்தனர்.மூர்த்தி பதறி அவள் மூக்கருகே கை வைத்துப் பார்த்தார் மூச்சு இருந்தது! அவள் மார்பு ஏறி இறங்கியதும் ஆசுவாசமாயினர்.
மூர்த்தி தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தார். அவளின் அலங்கோல நிலையைப் பார்த்து, இருவரும் விசாலத்தின் ஒரு பழைய பாவாடையை எடுத்து மேலெல்லாம் துடைத்து சுத்தம் செய்தனர். அவளது பையிலிருந்து வேறு ஒரு ஆடை அணிவித்தனர். திருமலை அவள் கன்னங்களை வேகமாகத் தட்டினார்.
இலேசாகக் கண்கள் திறந்தவளைப் பார்த்ததும், மூர்த்தி ஃபிரிட்ஜில் இருந்து பவண்டோ எடுத்து வந்து அவள் வாயில் ஊற்றினார். பின் அவளைத் தூக்கி வந்து, அவளது இடத்தில் பாயில் படுக்கவைத்தனர்.
” இங்க பாரு பேசாம இருந்தேன்னா, இரண்டு நாளில் ஊருக்கு அனுப்பிருவேன்.உங்க அத்தை இல்ல வேற யார்கிட்டேயாவது சொல்லாம்னு நினைச்ச, உந்தங்கச்சி லோகுவைக் கூட்டிட்டு வந்துருவேன்.உங்கப்பனுக்கு காசுதான் வேணும்” மிரட்டினார்.
மீனா கண்ணீர் வழிய அயர்ந்தாள்.
விசாலம் வரும்போது அவளுக்கு மேல் அனலாய்க் கொதித்தது. பயந்து போனவர் இரவானாதால் , மாத்திரை கொடுத்து உறங்க செய்தார். காலையில் டாக்டரிடம் போக அழைக்கையில், பிடிவாதமாக மறுத்தாள். ஊருக்குப் போக வேண்டும் என அழுது பிடிவாதம் பிடித்தாள்.
“சரி கொஞ்சம் காய்ச்சல் விட்டதும் அனுப்பறேன்!” என்ற விசாலத்தின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து தூங்கினாள். நான்காவது நாள் அவள் சற்றே தெம்பாய் இருப்பதைப் பார்த்தவள், நம்பிக்கையாள ஆளுடன் விக்கிரமசிங்கபுரம் அனுப்பி வைத்தார்.
ஊருக்கு சென்ற அடுத்த நாள் தன் சிகப்பு தாவணியில் தூக்கு மாட்டிக் கொண்டாள்.
விசாலத்துக்கு அதிர்ச்சி. சிறிது சந்தேகமும். அழுதார்.
மூர்த்தியும், திருமலையும் அதிர்ந்தாலும்
அலட்சியமாய்க் கடந்தனர்.
விசாலத்தின் அடுப்படியில், அரிசி டிரம்மில் அடியில் , தப்பும் தவறுமாய் எழுதப்பட்ட ஒரு ஐந்து வரி கடிதம் அவரது பார்வைக்காய் காத்திருந்தது!
பவித்ராவின் சிவப்பு பாவாடையைக் கண்ட ராஜி அதிர்ந்து சந்துருவிடம் கண் காட்டினாள்.
“லீவுதானேம்மா. .இன்னிக்கு எங்க
போற?”
“விசாலம் அத்தை பங்கு தரேன்னாங்க!”
” அவங்க கடைக்குப் போயிருக்காங்கம்மா. .!”
” இப்போ வந்திருவாங்கண்ணா!”
“சரிம்மா வெளில போக வேண்டாம் என்ன?”தலையாட்டி விட்டு மாடிக்கு சென்றவள், காலிங் பெல் அடிக்க மூர்த்தி திறந்தார்.” வாம்மா!”
“அங்கிள்.அத்தை மாங்கா தரேன்னாங்க!”
“அவ கடைக்கு போயிருக்கா! ஆமா விசாலம் அத்தைன்னா, என்னையும் மாமான்னே சொல்லும்மா!”
மூர்த்தி ஆமோதிப்பாய் தலையசைத்தார். அவரை ஆக்ரோஷமாய் உறுத்து விழித்தாள் பவித்ரா. அவர் உடல் சிலிர்த்து அடங்கியது!
“அந்த கண்களில் இருந்தது என்ன?”
“நீயும் மாமாதான், இவனும் மாமாதான்!”, சீற்றத்துடன் ஒலித்தது பவித்ராவின் குரல்!
” பவித்ரா. . . .?” திருமலை குழப்பமாய் ஏறிட்டார்.
ஆங்காரமாய் தள்ளி விட்டாள் திருமலையை.
“ஏய்.ய்.ய். .!”
“திருமலை இது அவளாடா. . .?”
டக்கென்று திரும்பி மூர்த்தியிடம் சென்றாள்.
திருமலை பாய்ந்து பிடித்தார் அவளை.அவளது சட்டை கிழிந்து, அவரது கைகளில் வந்தது!
“என்னாச்சு உனக்கு. .?”
“விடுடா விடு என்னை!” அவர் கைகளில் பலம் கொண்ட மட்டும் கடித்தாள்.
‘சட்’ டென்று கையை உதறியவர், அவளை கோபத்துடன் பிடித்து தள்ளினார். ஊஞ்சல் நெற்றிப்பொட்டில் அடிக்க இரத்தம் ஊற்றியது.
மூர்த்தி பற்றி பிடித்தார் அவளை!
“டேய் என்னடா இது?”
அவள் மூர்த்தியின் பிரௌன் கலர் சட்டையின் காலரைப் பிடித்து இழுத்தாள். மூர்த்தி தடுமாறி விழுந்த்தும், அவர் கைகளை இழுத்து, அவரது நகங்களாலேயே தன் கன்னத்தைப் பிராண்டினாள்.
“ஏய். .என்ன பண்ற? மூர்த்தி இவளைத் தூக்கு! கீழ விட்ரலாம்.!”
அவளை அணைத்து தன் மார்போடு சேர்த்து தூக்கினார். உதறும் கால்களை மூர்த்தி பிடித்துக் கொள்ள, ” ஏய் வலிக்குது விடுங்க! விட்டுடுங்க! யாராவது வாங்களேன். .. .ஹெல்ப்!” என பெருங்குரலெடுத்து கத்தினாள்.
அவள் கன்னம், மார்பு என திருமலையின் கைகளும் பிரேஸ்லெட்டும் அழுந்தி காயம் ஏற்படுத்தி கீறியது!
சத்தம் கேட்டு ஓடி வந்த சந்துரு அதிர்ச்சியானான் கண்ணெதிரே கண்ட காட்சியில்!
“த்.த்.தூ மனுஷனாடா நீ. .!”
“சந்துரு இல்ல. .நீ நினைக்கற மாதிரி இல்ல. .!”
“கொழந்தைடா அவ. . .அவளைப் போய். . .. .நாயே!” சட்டையைப் பிடித்து இழுத்து அடித்தான்.
அக்கம் பக்கத்தவரும் கூடினர்.
“போலீஸ்ல சொல்லுங்க சார்!”
பவித்ரா திரும்பி இருவரையும் பார்த்தாள். ஆக்ரோஷமாய் ஒளிர்ந்தது கண்கள்.
“அவளா. .அவளேதானா. .?” இருவரும் திகைத்தனர்.
ஒரு கோணல் சிரிப்புடன் மயங்கினாள் பவித்ரா.
தணிகாசலம் ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்தார்.
சந்துரு அவளைக் கைகளில் அள்ளியபடி, அவர் மாமாவின் ஹாஸ்பிடலுக்கே கொண்டு சென்றான். பவித்ராவிற்கு சிகிச்சைகள் தொடர்ந்தது! பவித்ராவின் அப்பாவும் கேள்விப்பட்ட உடனே வந்து விட்டார். தன் மகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டவரை வெங்கடாசலம் ஆறுதல்படுத்தினார்.
திருமலைநாதனையும், மூர்த்தியையும் போலீஸ் வந்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினர். ஊரே வேடிக்கை பார்க்க, அவமானத்தில் குனித்த தலை நிமிரவில்லை. விசாலம் எதுவும் பேசவில்லை. சில நாட்களுக்கு முன் மீனாவின் கடித்த்தைப் படித்தவள், மீனாவுக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைத்ததாகவே எண்ணினாள். அவளால் நம்ப முடியவில்லை. வெளியே வரவேயில்லை. ஜீப்பில் மீனா ஒரு சிரிப்புடன் இவர்கள் நடுவே வந்து அமர்ந்தாள்.
அட்டெம்ப்ட் டு ரேப் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. சின்ன பெண் எனவே போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சாட்சிகள் அவருக்கு எதிராகவே இருந்தது! பிரேமா கூட சாட்சியம் அளித்தாள்.
போலீசால் பவித்ராவிடம் வாக்குமூலம் வாங்க முடியவில்லை.
“சின்ன பெண்! நடந்த அதிர்ச்சியில், மூளை வேண்டாத நிகழ்வுகளை ஒதுக்கியதில், தனக்கு என்ன நடந்த்து என்றே தெரியவில்லை!” என மாமாவின் நண்பர் மனோதத்துவ டாக்டர் அரவிந்த் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தார்.
“அவள் எதிர்கால நலன் கருதி அவளுக்குப் பூரண ஓய்வு தேவை !” என வலியுறுத்தினார்.
மயக்கத்தில் மீனா கண்ணீருடன் வந்து நன்றி சொல்லி , பவித்ராவின் நெற்றியில் முத்தமிட்டு கைகூப்பி விடை பெற்று சென்றாள்.
பவித்ரா கண் விழித்தவள் அடித்து போட்டது போல் கிடந்தாள்.
” எனக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு காயம்? என்ன நடந்தது?” தொடர்ந்து கேள்வி எழுப்பியடி இருந்தாள்.
——————நிறைந்தது—————–
Sorna Sandhanakumar
கருப்பு வானவில்
“ஹலோ… ஹலோ போலிஸ் ஸ்டேசனா? சார் இங்க யாருன்னே தெரியாத ஒருத்தன் எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர தாண்டிக் குதிச்சி உள்ள வந்துட்டான் சார்…” சோபாவிற்கு பின் ஒளிந்து இருந்தவாறே ஒரு பெண் உச்சக்கட்ட படபடப்புடன் தனது கைப்பேசியில் கதறிக் கொண்டிருந்தாள்.
வியர்க்க விறுவிறுத்து ஊன் நடுங்க, அடிக்கடி தலை தூக்கி பார்த்தவன்னமே இவள் கைப்பேசியில் கதறிக் கொண்டிருக்க, மறுபக்கம் பேசிய போலிஸோ, “யாரும்மா நீ? உன் பேர் என்ன?” சர்வ நிதானமாக விவரம் கேட்டார்.
“என் பேரு… ரவீனா சார்… நான்…” என இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “டம்… டமார்…” என கதவைத் தட்டும் சத்தம் இவளது காதைக் கிழித்தது.
மறுபக்கம் பேசியவர், “ஹலோ மேடம்… கொஞ்சம் சத்தமா பேசுங்க.” என கத்தினார்.
அதில் இவளது இமைகளோ படபடக்க, உச்சக்கட்ட பதற்றத்தில் தன்னையும் அறியாமல் தனது கைப்பேசியை தவறவிட, அதுவோ அவளின் கன்னம் வழியாக நழுவி கீழே விழுந்தது.
ஒருபக்கம், “டம் டம்…” என கதவு உடைப்படும் சத்தம்.
மறுபக்கம், “ஹலோ ஹலோ… யாராவது இருக்கீங்களா?” என போலிஸ் கத்தும் சத்தம்.
இதற்கிடையில் சிக்கிய இவளோ, “ஐயோ… ஃபோன்…” என்று பதறித் தரையோட தரையாக முகம் புதைத்துத் தனது கைப்பேசியை தேட, அதுவோ சோபாவிற்கு கீழ் கிடந்தது.
அதிலிருந்து “ஹலோ… ஹலோ…” என போலிஸ் கத்தும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
சோபாவிற்கு கீழ் இருக்கும் கைப்பேசியை எடுக்க வேண்டி, நாலு இஞ்சு இடைவெளியில் தனது விரலை மட்டும் விட்டு இவள் துழாவ, சில நொடி போராட்டத்திற்கு பின் கைப்பேசியோ அவளின் நடுவிரலில் பட்டது.
அதைச் சுரண்டியபடியே “ஹப்பாடா” என இவள் பெருமூச்சு விட்ட சமயம், அவளது வீட்டின் தாழ்ப்பாளோ, “டங்…” என்ற சத்தத்துடன் அவளுக்கு முன்னால் வந்து விழுந்தது.
அந்த அதீத சத்தத்தில் இவளின் இதயமோ படபடவெனத் துடித்திட, கண்களோ அதிர்ந்து விரிய, அந்த அறைக்குள் ஓர் ஆடவன் வருவதை கண்டு, “ஆஆஆ…” என அலறப் போனவள், பின் என்ன நினைத்தாளோ சட்டென்று இரு கையால் தனது வாயை இறுக மூடிக் கொண்டாள்.
பய பந்து வயிற்றுக்குள் உருள, நடுங்கியபடியே தவழ்ந்து தனது அறைக்குள் இவள் ஓட, அவனோ சுற்றும் முற்றும் இவளைத் தேடிய படியே, “பேபி… எங்க இருக்கீங்க?” என உதடு வளைத்தான்.
அவனது கணீர் குரல் இவளுக்கோ பீதியை கிளப்ப, படபடக்கும் இதயத்தை ஒரு கையால் பற்றியவாறே படுக்கையறைக்குள் இருக்கும் அலமாரிக்குள் புகுந்துக் கொண்டாள்.
மனமோ “திக் திக்…” என்றது.
தொண்டை குழியோ பயத்தில் ஏறி இறங்கின.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அலமாரிக்குள் இருக்கும் துவாரம் வழியாக இவள் அவனை எட்டிப்பார்க்க, அவனோ சத்தம் கேட்டு அந்த அறைப்பக்கம் தனது முகத்தைத் திருப்பினான்.
குறுகிய இடம் ஆதலால் உடலோ குப்பென்று வியர்த்துவிட, பச்சை தண்ணீரை ஊற்றியது போல அவளின் உடையோ தொப்பலாக நனைந்துவிட, சர்வத்தையும் அடக்கி ஒடுக்கி மூச்சுக்கூட விடாமல் இவள் இருக்க, அவனோ “பேபி எங்க இருக்க? கம்… கம்… லெட்ஸ் ஹேவ் எ ஃபன்.” பரிகாச சிரிப்புடன் கோணல் நடையில் அந்த அறைக்குள் நுழைந்தான்.
தலையில் குடுமியுடன், வயிறு ஒட்டி மெலிந்த தேகம் கொண்டவனை மதியம் தான் பல்பொருள் அங்காடியில் பார்த்ததாக அவளுக்கு ஞாபகம்.
‘இவ… இவன் எப்படி இங்க வந்தான்? அதுவும் நான் தனியா இருக்கிறதை எப்படி தெரிஞ்சுக்கிட்டான்?’ என்று கேள்வி சடுதியில் அவளது மூளைக்குள் தோன்றிட, ‘இப்ப இது முக்கியம் இல்ல… எப்படியாவது இங்கிருந்து தப்பிக்கனும்.” தேவையற்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, உறுதியுடன் அவனைத் தாக்கும் பொருளைத் தனது விரலால் அந்த அலமாரிக்குள் தேடிட, கையில் சிக்கியது என்னமோ துவைத்து வைத்த உடை தான்.
அதையே இறுக்கமாக இவள் பிடித்தபடி அவனைப் பார்க்க, அவனோ அவளை விழிகளால் அங்கும் இங்கும் தேடியபடியே, “ஹைய்ட் அண்ட் சீக்கா? ஹாஹா… ஐ லைக் இட், லைக் இட்… ம்ம்… சொல்லுங்க எங்க இருக்கீங்க? ஹாஹா… இங்கையா?” கேட்டபடியே படுக்கைக்குக் கீழ் குனிந்துப் பார்த்தான்.
அவள் அங்கே இல்லாமல் போக, “ஓஹ் அங்க இருக்கீங்களா?” யோசனை வந்தவனாகச் சொடக்கிட்டவன் குளியலறை நோக்கி நடக்க, இவளோ மெல்ல அந்த அலமாரியிலிருந்து வெளியே வருவதற்கு எட்டிப் பார்த்தாள்.
“லுக்கிங் ஹியர்… லுக்கிங் த்தேர்… லுக்கிங் எவ்ரிவேர்…” நாராசமான குரலில் பாட்டு பாடியபடியே மீண்டும் அந்த அறைக்குள் அவன் நுழைய, பயத்தில் இவளோ நீட்டிய தலையை வெடுக்கென உள்ளித்துக் கொண்டாள்.
“சட்…” என மெளிதாய் கேட்ட அந்தச் சத்தத்தில் அவனோ பட்டென்று தனது முகத்தை அந்த அலமாரியில் பதிக்க, இவளுக்கோ உள்ளங்கை நனைந்து உடல் சூடானது.
விழிகள் மிரள, துவாரத்தில் விழி பதித்து இவள் அவனைப் பார்த்திட, அவனோ தாடையை தடவியபடியே யோசனையுடன் அந்த அலமாரியின் முன் தனது முதுகை காட்டி நின்றான்.
அங்கும் இங்கும் பார்க்கும் அவனின் பின்னாலிருந்து எழுந்த ரவீனாவோ, கண் இமைக்கும் நேரத்திற்குள் அவனது முகத்தைத் துணியால் மூடித் தாக்கத் துவங்கினாள்.
அதில் அவன் நிலை தடுமாறி, கைகளால் பின்னால் இருப்பவளை பிடிக்க முற்பட, இவளோ இன்னுமே அழுத்தமாக மூடி அவனுக்கு மூச்சடைக்க செய்தாள்.
தேகம் மெளிதாய் இருப்பினும் அவனை அடக்க இவள் அரும்பாடுப்பட, அவனது உடலோ வெட்டப்பட்ட கோழியாக இவளது கையில் துடித்துப் பின் அடங்கியது.
அவனது கால்கள் நழுவ, உடல் தளர்ந்து தலையோ தொங்கிட, அவனது இதயத்துடிப்பு குறைந்து போனதை உணர்ந்து, “ஹப்பா…” ஒரு பெருமூச்சுடன் அவனது தலையைச் சுற்றி இருந்த துணியை இவள் அகற்ற, பக்கென்று இவளது கரத்தைப் பிடித்தான் அவன்.
அதில் மிரண்ட, “ஆஆஆ…” என இவள் அலற, “ஹாஹா… வாவ்… ஐ லைக் யுவர் யெல்லிங்…” என்றவன் பேய் சிரிப்பு சிரிக்க, இவளோ அவனது கரத்தில் துள்ளினாள்.
“ஆஆ… விடு… என்ன விடு.” என்று இவள் கத்த, “ஹாஹா… பேபி லெட்ஸ் ஹேவ் எ ஃபன்.” என்றவாறே அவன் கட்டியணைக்க, “ஆஆ… ஐயோ எ… என்ன விடு.” கத்தியபடியே தனது ஒட்டு மொத்த பலத்தையும் ஒன்று திரண்டி அவனைக் கீழே தள்ளினாள், ரவீனா.
அது மிகவும் கடினமான செயல் தான் இருப்பினும் எப்படியோ செய்துவிட்டு இவள் தப்பித்து ஓட, அவனோ இவளது வலது காலை இடறிவிட்டான்.
அதில் நிலை தடுமாறி இவள் பொத்தென்று தரையில் விழ, “ஹாஹா…” கைத்தட்டி அவனோ பரிகாசமாகச் சிரிக்க, இவளுக்கோ பயத்தில் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது.
“வே… வேணாம்… விட்டுடு…” கண்ணீர் மல்கக் கதறியபடியே பின்னால் நகன்றாள், ரவீனா.
அவனோ சிரித்தபடி இவளை நோக்கி நடக்க, “டக் டக்…” என்ற அவனது காலடி ஓசைக்கு இணையாக இவளது இதயமோ “லப் டப் லப் டப்.” என்று அடித்துக் கொண்டது
உடல் நடுங்க, விழிகள் கலங்க, பின்னால் நகர்ந்தவளின் கைகள் ஆயுதங்களைத் தேடின.
தேடிய அவளது கரத்தில் அவள் சற்று நேரத்திற்கு முன் குடித்து வைத்த பெப்சி பொத்தல் சிக்கிட, சட்டென்று எடுத்து அவனது முகத்தில் எறிந்தாள், ரவீனா.
எறிந்த வேகத்தில் அந்தப் பொத்தலோ அவனது நெற்றியை பதம் பார்த்தன.
இருப்பினும் அவனோ சிறிதும் அசையாமல் அசராமல், கண்களைக் கூடச் சிமிட்டாமல் அவளை நோக்கித் தனது வேகத்தைக் கூட்டினான்.
“இ… இல்ல… வேணாம் பிளீஸ்… வி… விட்டுடு.” பின்னால் நகன்றபடியே எழுந்தவள் கையில் சிக்கிய பொருட்களை எல்லாம் தூக்கி அவன்மேல் எரிந்தவாறே ஓட, அவனோ சில பொருட்களைத் தடுத்தும் சில பொருட்களால் அடி வாங்கியபடியும் அவளை விடாமல் துறத்தினான்.
நிதானமின்றி ஓடியவளை, உணவு மேசையின் அருகே மடக்கிப் பிடிந்தான், அந்தக் கொடியவன்.
“வி… விடு… விடு என்ன.” என்று திமிறியவளை மேசைமேல் வைத்து அழுத்தியவாறே அவளது கீழ் ஆடையை அவன் கிழித்திட, பயத்தில் அரண்டு மிரண்டாள், ரவீனா.
“இல்லை… பிளீஸ்… பிளீஸ்… எ… என்ன விட்டுட்டு.” மேசையை இரு கையால் தட்டியபடியே இவள் அவனிடமிருந்து போராட, அவனோ அவளது தலையை மேசையோட மேசையாக வைத்து அழுத்தியபடியே தனது பேன்ட் ஜிப்பை கழட்டினான்.
“ஆஆஆ…அம்மா… பிளீஸ்… என்ன விட்டுடு…” என இவள் கத்தினாள், கதறினாள், கையிலிருந்த தங்க வளையல் நொறுங்கும் மட்டும் மேசையை அடித்துப் போராடினாள்.
எவ்வளவோ போராடி பார்த்தும் முடியாமல் போக, சோர்வில் விழிகள் சொறுகியது அவளுக்கு.
இவள் அலற அலற, அவனோ கலகலவெனச் சிரித்து வெறியாட்டம் போட்டான்.
கத்தி கதறி இவள் அடங்கவும் முன்னால் திருப்பிப்போட்டு வந்தவேலை அவன் கவனிக்க, “வே… வேண்டாம் வி… விட்டுடு…” முணங்கியபடியே மயங்கிச் சரிந்தாள், ரவீனா.
அவள் மயங்கிய பின்பும் அவளை விடவில்லை அந்தக் கொடிய அரக்கன்.
சக்கையாய் புளிந்துவிட்டே அவன் இவளைவிட, நைந்து உடையாய் தரையில் சரிந்தாள், ரவீனா.
கீழே கிடந்தவளை கேலியாகப் பார்த்து, “பிரிட்டி கேர்ள்.” என உதடு வளைத்தவன் வெளியே செல்ல எத்தனிக்க, அந்நேரம் பார்த்து “வ்வா… வ்வா…” என்ற போலிஸ் ஜீப்பின் சைரன் சத்தம் கேட்டது.
“அச்சச்சோ…” பயந்து அதிர்ந்த முகமாய் ஜன்னல் ஊடாக இவன் எட்டிப்பார்க்க, வெளியே காவலர்களோ அந்த வீட்டைச் சுற்றி வளைத்திருந்தனர்.
“ஓ… சிட்…” முகம் சுளித்து கத்தியவன் அந்த வீட்டிலிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை விழிகளால் தேடினான்.
ஒரு வாசல் கொண்ட வீடு என்பதால் அவனால் அந்த வீட்டை விட்டுத் தப்பிக்க முடியவில்லை.
ஜன்னல் கூடச் சிறியதாக இருக்க, கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தையாய் தன்னை உணர்ந்தவன் குடுகுடுவென அந்த வீட்டின் படுக்கையறைக்குள் புகுந்து உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டவன் அவளது அலமாரியிலிருந்து ஒரு குர்தியை எடுத்து அணிந்துக் கொண்டான்.
அவளது கண்ணாடி பேழையிலிருக்கும் அலங்கார பொருட்களை அவன் எடுக்க, காவல் அதிகாரிகளோ அதிரடியாய் அந்த வீட்டிற்குள் புகுந்தனர்.
“ம்ம்… அவளைப் பிடிங்க.” கட்டளையிட்டுவிட்ட போலிஸ் உயர் அதிகாரியோ, ரவீனாவின் உடலைப் பார்த்து வருந்தினார்.
இருண்ட முகமாய் அவளின் உடலைப் பார்த்து இவர் தனது தொப்பியைக் கழட்ட, ஏனைய காவலர்கள் அவன் இருக்கும் அறையின் கதவைப் பலமாகத் தட்டினர்.
“டொக் டொக்…” என இவர்கள் தட்ட, அவனோ பொறுமையாக அவளது அழகு சாதன பொருட்களான
பவுண்டேசன் முதற்கொண்டு மஸ்காரா வரை நிதானமாகத் தனது முகத்தில் போட்ட ஆரம்பித்தான்.
இறுதியாக லிப் ஸ்டிக்கை பூசிவிட்டு இரு இதழையும் உள்ளிழுத்து அதைச் சீர் செய்தும் கொண்டான்.
வளையல் குழுங்க, அச்சு அசல் பெண்போல் தன்னை உருவாக்கிக் கொண்டவன் நளினமாய் நடந்து அந்த அறையின் கதவைத் திறந்திட,
பெண்போல் வந்து நிற்பவனை பார்த்து, காவலர்களோ அதிர்ச்சியில் வாய் பிளந்தனர்.
மிரண்டு விழிப்பவர்களை பார்த்து, “என்ன அங்க வேடிக்கை அரஸ்ட் பண்ணுங்க.” என்ற உயர் அதிகாரியின் கட்டளைக்கு பின் நிதானத்திற்கு வந்தவர்கள் அவனை உடனே கைதும் செய்தனர்.
“பத்துக்கும் மேற்பட்ட பெண்களைக் கற்பழித்து கொலை செய்த கொலைக்காரனை போலிஸார் மடக்கி பிடித்தனர்” என்று அடுத்தநாள் காலை வந்த தினசரி நாளிதழில் இச்செய்தி கொட்டை எழுதில் போடப்பட்டிருக்க, காவல்துறையினரோ அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
சர்வ அலங்காரத்துடன் பெண் உடையில் நிற்பவனை ஏற இறங்க பார்த்துவிட்டு வழக்கை விசாரித்தார், நீதிபதி.
அரசு தரப்பு வழக்கறிஞரோ அவனிடம் அவனது பெயர் கேட்க, “ஷில்பா…” என பெண் காட்டும் முக பாவனைகளுடன் பதில் கொடுத்தான் அவன்.
“வாட்? ஆனா ஆதார் கார்டுல உங்க பேரு அரவிந்த்ல இருக்கு?” என வழக்கறிஞர் கேட்க, “நான் இப்ப என்ன பெண்ணாகத் தான் உணர்கிறேன் அதனால என்ன ஷில்பான்னு கூப்பிடனும்.” என்றான் இவன் முன்னால் விழுந்த கூந்தலை சீர் செய்தபடியே.
“அது எப்படி…” என்று அரசு வழக்கறிஞர் ஏதோ பேச வர, “இது மனித உரிமை மீறல். ஏன் எல்லோரும் ஹோமோஃபோபியாவா இருக்கீங்க?” என எதிர்வாதம் புரிய வந்தார் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.
எளிதில் அணுக முடியாத அந்த மூத்த வழக்கறிஞர் எப்படி இவனுக்காக ஆஜராக வந்தார் என்ற யோசனையில்
நீதிபதியும், அரசு தரப்பு வழக்கறிஞரும் வாய் பிளக்க, குற்றவாளி கூண்டில் இருக்கும் அரவிந்தனுக்குமே இது ஆனந்த அதிர்ச்சி தான்.
முதலில் புருவம் இடுக்கியவன் பின் ஏதோ புரிந்தவனாக மெல்ல சிரித்துக் கொண்டான்.
“க்கும்.. இங்க பாருப்பா?” தொண்டையை கனைத்துக் கொண்டு நீதிபதி அரவிந்தனை பார்க்க, “சார் பிளீஸ்.. என்ன அப்பான்னு கூப்பிடாதீங்க எனக்கு ஹர்ட் ஆகுது. பிளீஸ் என்ன பெண்ணாவே பாவிங்க.” என பதில் கொடுத்தான், அரவிந்த்.
“ஆமாம் யுவர் ஹானர். அவர் தன்னை பெண்ணா பாவிக்கும்போது நீங்களும் அவரைப் பெண்ணா தான் பார்க்கனும். சோ அவரை மிஸ் என்றோ மேடம் என்றோ கூப்பிடுங்க.” என வாக்காளத்து வாங்கினார், அவன் தரப்பு வழக்கறிஞர்.
அதைக் கேட்டு மிரண்ட நீதிபதியோ, “ஹாங்.. சொல்லுங்கம்மா ஏன் அந்தப் பொண்ண கொன்னீங்க?” என கேட்டார் பவ்வியமாக.
உடனே கண் கலங்கிய அரவிந்தனோ, “நோ சார். நா.. நான் அவளைக் கொல்லல்ல. இரண்டு பேரும் ஒன்னா இருக்கும்போது ஏதோ தப்பு நடந்திருச்சு. இ..இது கொலை இல்ல ஜஸ்ட் எ அக்ஸிடண்ட்…” என நீலிக் கண்ணீர் வடித்தான்.
“அது எப்படி? நீங்க… உங்களைப் பொண்ணா உணருவதா சொல்றீங்க. பட் நீங்க ஒரு பொண்ணு கூட ஒன்னா இருந்திருக்கிறீங்க?” என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆரம்பிக்க, “இட்ஸ் எ வெரி அஃபன்சிவ் கொஸ்டீன். நீங்க அப்ப ஹோமோ செக்ஸ் தப்புன்னு சொல்றீங்களா?” சட்டென்று குறுக்கே வந்தார், இவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்.
அரசு வழக்கறிஞரோ பதில் பேச முடியாமல் திணற, அது சரி பட்டு வராது என நினைத்து, “போலிஸ் கொடுத்த ஜார்ஜ் சீட் எங்க?” என்று வினவினார், நீதிபதி.
“இதோ இங்க இருக்கு யுவர் ஹானர்.” என்று போலிஸ் உயர் அதிகாரி ஜார்ஜ் சீட்டை நீதிபதியிடம் ஒப்படைக்க, விரித்துப் பார்த்து ஆராய்ந்த நீதிபதியோ, “டோர் உடைக்கப்பட்டிருக்கு. வீட்டுல இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்திருக்கு. போதாக்குறைக்கு அவங்க போலிஸுக்கு ஃபோன் வேற பண்ணி, யாரோ அவங்க வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிச்சு உள்ள வர டிரை பண்றதா சொல்லிருக்காங்க. இதை எல்லாம் வச்சுப் பார்க்கும்போது நடந்தது விபத்து இல்ல கொலை தான் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. அதனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷில்பா என்கிற அரவிந்த் தான் இந்தக் கொலையைச் செய்தார் எனவும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனவும் நான்…” என்று இவர் முடிக்கும் முன், “சார்.. சார்.. நான் செய்யாத குற்றத்தைச் செய்ததா சொல்றீங்க. ஓகே பரவாயில்ல சார். ஆனா பிளீஸ் என்ன ஆம்பிள்ளைங்க இருக்கிற செயில போட்டுடாதீங்க. நான் பொண்ணு, சோ பெண்ணுங்க இருக்கிற செயில தான் போடணும். பிளீஸ்…” கண்ணீருடன் அவன் கதற, “ஹாங்.. அது எப்படி முடியும்?” என புருவம் இடுங்கினார், நீதிபதி.
“யுவர் ஹானர் ஒரு ஜட்ஜா இருந்துக்கிட்டு நீங்களே இப்படி சொல்லலாமா? அவர் தன்னை ஒரு பெண்ணா உணரும்போது நீங்க அவர பெண்ணா தான ட்ரீட் பண்ணனும்.” தீர்ப்புக்கு நடுவில் இவனது வழக்கறிஞர் வர, மிரண்டு விழித்தார், நீதிபதி.
பயத்தில் உடனே நாக்கு வரண்டுவிட, அருகில் இருந்த நீரை எடுத்து அருந்திவிட்டு, “ஷில்பா அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவரைப் பெண்கள் சிறையில் அடைக்கும் படி காவல்துறைக்கு கட்டளையிடுகிறேன்.” என தீர்ப்பு வழக்கிவிட்டு இவர் பேனா முனையை உடைத்திட, பற்களுக்கு இடையில் சிரிப்பை அடக்கிவிட்டு நகர்ந்தான், அரவிந்த்.
“நீ எதுக்குய்யா இந்த கேஸுல அதுவும் அவனுக்காக வாதாடின? நீ எப்பவும் இந்த மாதிரியான சில்லறைங்க கேஸெல்லாம் பார்க்க மாட்டியே” தனியாக அரவிந்தனுக்காக வாதாடிய வழக்கறிஞர் அழைத்து நீதிபதி விசாரிக்க, “நான் என்ன சார் பண்ணுவேன்? அந்த வானவில் கம்யூனிட்டிக்கு பன்ட் பண்ற பெரிய கம்பெனி தான் இந்த கேஸ என்ன பார்க்கச் சொல்லிப் பணம் கொடுத்தது. அதுவும் ரொக்கமா பத்து கோடி பணம் கொடுக்கும்போது நான் எப்படி செய்யாம இருக்கிறது?” என்றவர் மறுமொழி கொடுக்க, நீதிபதியின் கண்களோ அதிர்ந்து விரிந்தன.
இந்த வழக்குபற்றிய விவரங்களைச் செய்தி ஊடகங்கள் தொடர்ந்து பேசிப் பரபரப்பாகிட, மிகப் பெரிய ஊடகம் ஒன்று இதுபற்றிய விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் மூவர் கலந்துக் கொண்டு அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சார் இது அநியாயமா இருக்கு? கற்பழிச்ச குற்றவாளிய கொண்டுப்போய் பெண்கள் சிறையில் அடைப்பாங்களா?” என்று ஒருவர் வினவ, “அவர் அவரை ஒரு பெண்ணா தானே உணருகிறார். பெண்ணைப் பெண்கள் சிறையில் அடைக்காமல் வேற எங்க அடைக்கிறது?” பதிலுக்கு வினவினார் வேறொருவர்.
“இதனால அங்கிருக்கிற பெண்களுக்கு யாரு பாதுக்காப்பு கொடுப்பா? இப்படி தான் ஒருத்தன் பேரு கூட தாமஸ். நான் ஒரு பெண்ணாய் உணர்கிறேன்னு சொல்லிப் பெண்கள் விளையாடுற நீச்சல் போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கினான். இப்ப இங்க ஒருத்தன் நான் பெண்ணாய் உணர்கிறேன்னு சொல்லி லேடீஸ் செயிலுக்குள்ள போயிருக்கான். பாலினம் என்பது மூணு தானே இதுல இவன் யார்? இப்படியே போச்சுன்னா பெண்களுக்குக் கிடைக்கிற சலுகைகள் அவங்களுக்கு சரியா போகுமா? இல்லை நிம்மதியா ஒரு பொது கழிப்பிடத்தையாவது உபயோகப்படுத்த முடியுமா?” என்று மற்றொருவர் பேச, நெறியாளரோ “இத்துடன் இந்த நிகழ்ச்சி முடிகிறது.” என கூறி அந்த நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
அதை தனது கைப்பேசியில் கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்த பெண் சிறை அதிகாரியிடம் அரக்கப் பறக்க ஓடி வந்தார், அவரின் உதவியாளர்.
“என்ன?” என்று இவர் புருவம் உயர்த்த, “மேடம்.. மேடம்.. அங்க அங்க..” பதிலுக்கு உதவியாளரோ திக்கி திணறினார்.
உதவியாளரின் பதற்றத்தை கண்ட அதிகாரியோ சிசிடிவி காட்சியைப் பார்க்க வேண்டி, உடனே தனது பார்வையை மடிக்கணினியில் செலுத்திட, சிறைவாசிகள் பலர் தங்களது சிறைக்குள் அலறிட, அரவிந்த் இருந்த சிறையோ இரத்தகளறியானது.
அவனுடன் இருக்கும் மூன்று பெண்களை இவன் பலவந்தப்படுத்த, “ஏய்.. ஏய்.. போய் அவளைப் பிடி.” என கத்தினார், சிறை அதிகாரி.
அவரின் கட்டளைபடி உதவியாளரும் அவ்விடம் நோக்கி விரைந்துச் செல்ல, உயரதிகாரியின் பார்வையோ மறுபடியும் மடிகணினியிடம் சென்றது.
அந்த மூன்று விழிகளும் கண்ணீரில் கரைந்திட, சிறைக்கம்பியைப் பிடித்தபடியே ஒரு பெண், “ஐயோ.. மேடம்.. பிளீஸ்.. எங்களைக் காப்பாத்துக்க. இவ.. இவன் எங்ககிட்ட தப்பா நடந்துக்க பார்க்கிறான்.” உதவி கேட்டுக் கத்தி கதற, மற்ற இருவரோ, “பிளீஸ்… பிளீஸ்.. எங்களை விட்டுட்டு.” என்று கெஞ்சினர்.
அவனோ, “ஹாஹா.. பேப்ஸ் என்ன விட்டு எங்க போறீங்க? லெட்ஸ் ஹேவ் எ ஃபன்.” என கூறி இருவரில் ஒரு பெண்ணைச் சிட்டுக்குருவியை பிடிப்பது போல் பக்கென்று பிடித்துச் சுவரோட சுவராய் நிறுத்தி அவளின் உடையைப் பிய்த்து எறிய, மற்ற பெண்களோ பயத்தில் அரண்டு நடுங்கினர்.
அந்த பெண், “விடு டா பிளீஸ் என்ன விடு டா.” என்று கத்தி முன்னாலிருக்கும் சுவற்றை கை வலிக்க வலிக்கத் தட்டி தட்டி தனது எதிர்ப்பைக் காட்டிட, “ஏய் அவள விடு.. விடு டா ****.” என மற்ற இரு பெண்களோ அவனை அடித்து அவளைக் காக்க போராடினர்.
அதில் எரிச்சலான அந்த அரக்கனோ கையில் சிக்கி இருந்தவளை கீழே தள்ளி அவளின் நெஞ்சின் மேல் ஒரு கால் வைத்து, மற்ற இரு பெண்களின் கழுத்தை பிடித்து நெறித்திட, காவல்துறை உதவியாளரோ, “ஏய்.. ஏய்..” என கத்தி அந்தச் சிறையின் கதவைத் திறந்தார்.
அவரோடு சேர்த்து மூன்று பெண்காவலர்கள் உள்ளே நுழைய, ஆறு பெண்களையும் ஒரு கையால் சமாளித்து அவர்களையும் வன்புணர்வுக்கு ஆளாக்கினான் அந்த அரக்கன்.
அதை பார்த்துப் பதறிய உயர் அதிகாரியோ உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தார்.
“டிரிங்.. டிரிங்…” என்ற தொலைப்பேசியின் சத்தத்திற்கு ஈடு இணையாக இவரின் இதயமும், “லப் டப்.. லப் டப்..” என துடித்தது.
சிசிடிவயை பார்த்தபடியே, “பிக் அப் பிக் அப்…” என இவர் முணுமுணுத்திட, மறுமுனையில், “ஹலோ…” என்றது ஓர் ஆணின் குரல்.
“ஹப்பா..” என்ற பெருமூச்சுடன், “சார்…” என இவர் ஆரம்பிக்க, அவரின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தான், ஷில்பா என்கிற அரவிந்த்.
நன்றி வணக்கம்
நடுநிசி நாய்கள் ஓலமிட, நள்ளிரவு நேரத்தில் அவ்வீட்டின் வாசலை கடந்து ஒருவனை இரத்த வெள்ளத்தில் இழுத்துக் கொண்டு சென்றது ஒரு உருவம்…
இரத்தம் ஒழுக அவன் கண்களில் மிரட்சியோடு அவ்வுருவத்தை பார்க்க,
இரத்தம் வழிந்து சதைகள் கிழிந்து தொங்கும் உடலோடு, அவனை கண்கள் சிவக்கும் கோபத்தில் இழுத்து உள்ளே போட்டு அவன் மார்பில் அமர்ந்து அவன் நெஞ்சில் மாறி மாறி ஆக்ரோஷமாய் சதக் சதக் என கத்தியால் குத்தியது அவ்வுருவம்….
அவன் இரத்தம் அதன் முகத்தில் தெறித்து முகமே அழகான பெண்ணின் முகத்தோடு காளி வடிவம் பெற்றிருக்க,
அவன் மீதிருந்து எழுந்து அவன் கன்னத்தை காலால் உதைத்து நிமிர்த்து தன்னை பார்க்க செய்த அந்த இரத்தக் களரியோடு நின்றிருந்த உருவம், தான் சுய உருவத்திற்கு வந்து மீண்டும் பேயாய் மாறி விட,
அவளை கண்டவனோ ” நீ… நீ.. நீ பேயா..?” என குரல் நடுங்க கேட்டான்……
அவனை ஓங்கி மிதித்த அந்த காட்டேரி உருவம் ” ஆமா டா.. அந்நியாயமா என்னை கொன்னுட்டிங்களா??? இன்னும் அந்த கிழவன் தான் பாக்கி.. அடுத்தது அவன் தான்.. அவனை இன்னும் கொடூரமா பகிரங்கமா கொன்னே தீருவேன் டா ” என குரல் கர்ஜித்து அந்த அறையெங்கும் எதிரொலிக்க கூறி, அவனை துடிக்க துடிக்க கொன்று விட்டு, தன் உருவத்தை மாற்றிக் கொண்டு காற்றில் கரைந்தது அந்த காட்டேரி…..
அன்றொரு நாள் மதியம்
பச்சப் பசேல் என படர்ந்திருக்கும் நெல் வயல் வரப்பின் மீதிருந்த இருந்த தெனங்கீற்றால் வேயப்பட்ட கூரை வீட்டின் உள்ளே உத்திரத்தில் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது ஒரு உருவம்……
” விட்டுடுங்க பிளீஸ். ” என கைகூப்பி கெஞ்சிக் கொண்டு நின்றாள் அவ்வீட்டின் புது மருமகள் நந்தனா…”
அவளின் கூந்தலை பற்றி இழுத்து தன் முகம் பார்க்க செய்த அவ்வுருவம், இரத்தம் வழிந்தோட கூந்தல் விரிந்த நிலையில் கருப்பு புடவை உடுத்தி கொண்டு, சத்தமாய் சிரித்து ” என் மாமனை என் கிட்ட இருந்து பிரிச்சுட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருப்பிங்களா???? விட மாட்டேன் டி… விடவே மாட்டேன் .. உன்னையும் உன் புருஷன் அதான் என் மாமன் தருமனையும் கொன்னு பழி தீர்த்தா தான் என் ஆத்மா இங்க இருந்து போகும் டி” என கோபம் கண்ணில் ரத்தமாய் வழிய ஆக்ரோஷமாய் அவளை தூக்கி வீசியது அவ்வுருவம்….
அதில் பயந்த நந்தனா, ” மல்லி அக்கா.. நான் சொல்ல வரதை கொஞ்சம் கேளு… மாமனுக்கும் எனக்கு எந்த நிலைமையில் கல்யாணம் நடந்தது தெரியுமா??” என ஏதோ கூற வர,
அவளை ஓங்கி அறைந்து கழுத்தை பிடித்து மேலே தூக்கிய ரத்த களரியான முகம் கொண்ட அவ்வுருவமோ, ” என்ன டி… நீங்க செய்ததை சரின்னு நிரூபிக்க பார்க்குறிங்களா??? மாமா மாமான்னு அவருக்காக உயிரையே கொடுத்தேனே டி… என்னை மறந்துட்டு அவர் உன்னை எப்படி டி கல்யாணம் பண்ணிக்கலாம்.. என் முன்னாடியே சந்தோஷமா வாழ வேற வந்துருக்கிங்களா? அப்போ என் மாமன் என்னை உருகி உருகி காதலிச்சது எல்லாம் பொய்யா?” என தன் கைவிட்டு போன காதலை எண்ணி கதறி அழுதது அவ்வுருவம்….
ஆறுமாதங்களாகியும் தன் மருமகள் முகம் பார்த்துக் கூட பேசாமல் இருக்கும் தன் மகனின் வாழ்க்கையை எண்ணி பதறிய தருமனின் தாய் மீனாட்சி அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனை தன் தந்தை ஊரான இங்கு அனுப்பி வைத்திருந்தார்…
எனில் பசுமை நிறைந்த இடங்கள் மனதை இதமாக்கி மகனை மனைவியோடு மஞ்சத்தில் மகிழ்வாய் வாழ வழி வகுக்கும் என்பது அவரின் எண்ணம்.. பாவம் அவர் அறியவில்லை இங்கு தான் த மகனின் வாழ்வே பல போராட்டங்களை காணப் போகிறது என…..
மேலிருந்து குதித்து நந்தனாவை நெருங்கி அமர்ந்த கருப்பு புடவையில் சதை கிழிந்து நின்ற அந்த உருவம், வாயில் இரத்தம் ஒழுக,
“அதோ அந்த மாந்தோப்பில் அவர் மடியில் படுத்து எத்தனை கனவுகளோடு எவ்வளவு சந்தோஷமா பேசி சிரிச்சிருப்பேன் தெரியுமா டி???
என் மாமன் வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும் போதெல்லாம் இதோ இந்த பக்கம் இருக்க பம்ப் செட்டு, இங்கன மறைவா உக்கார்ந்து தான் என் விரல் சொடுக்கெடுத்து பேசி சிரிக்கும்..
அது தோளில் சாய்ஞ்சு அது பேசுறதை ரசிச்சு கேட்டுட்டே இருப்பேன் டி.. பொழுதுக்கும் அது பேச்சு மட்டுமே என் உயிர் மூச்சா இருந்தது..
ஒருவருஷம் ரெண்டு வருஷம் இல்ல டி, முழுசா அஞ்சு வருஷம்…” என கண்களை துடைத்துக் கொண்டு அழுத உருவமோ
“என் மாமன் ரெண்டு பேரோட படிப்பும் முடிக்கும் வரை ஆசைகளை அடக்கிக்கிட்டு கண்ணியமா காதலிச்சிது டி..
அந்த கண்ணியத்தில் மெய் மறந்து வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரும் அவரை நினைச்சுட்டு அந்த மொத்த வருஷத்தையும் இதோ இங்கன வந்து அதோட வாசத்தை பிடிச்சு அனுபவிப்பேன்.. அவருக்காக காத்திருந்தேன்… என் மாமன் இப்படி என்னை ஏமாத்துமுன்னு நினைக்கவே இல்லையே… ஐயோ மாமா…” என மீண்டும் குரல் கரகரக்க கூறி கண்களில் இரத்தம் ஒழுக அழுக,
நந்தனாவுக்கும் கூட அதன் உணர்வுகள் அனைத்தும் உயிர் வரை வலித்தது…
தருமனை பற்றி எதுவும் அறியாத நந்தனா, இன்று அவனின் காதலை அவன் காதலி வழியே அறிந்தவள் உள்ளம் நொந்து நொறுங்கி சிதறியது… இப்போது தான் அவன் தன்னிடம் பேசாமல் தன்னை தவிர்க்கும் காரணம் புரிந்து போனது….
அதற்காக உயிரற்ற ஒரு உருவத்திடம் அவனை கொடுத்து விட்டு செல்ல முடியாதே…
எந்த மனைவிக்கு தான் தன் கண் முன்னே தன் கணவனை இன்னொரு பெண்ணுக்கு விட்டு கொடுக்கும் மனம் வரும்… அதுவும் அத்தனை வலியிலும் தன்னிடம் கண்ணியமான அன்பை காட்டிய அவனை உருவமில்லா உயிருக்கு விட்டு கொடுக்க முடியுமா என்ன???
கை கூப்பி அவ்வுருவத்தை கண்டு பயந்து பின்னே சென்ற நந்தனா, ” அக்கா… உன்னை பத்தி தாத்தா தப்பு தப்பா சொன்னாக… உன்னால வாழ்க்கை இழந்து பைத்தியமாக சுத்திட்டு இருந்த மாமனுக்கு வாழ்க்கை வேணும்னு அத்தை கெஞ்சினதால தான் மாமன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாக அக்கா… மாமன் பாவம் அவரை விட்டுடுக.. பிளீஸ் ” என கெஞ்சி கதறிக் கொண்டிருந்தாள்…
அதில் கை தட்டி சத்தமாய் சிரித்த அவ்வுருவம் கண்களில் வழியும் இரத்த கண்ணீரை துடைத்து கொண்டு ” நீ சொல்லுறது சரியாகவே இருக்கட்டுமுடி… என் மாமன் எப்படி அதை நம்பலாம்??? என் நடத்தை எப்படி??? இங்கன நான் எதுக்கு வந்தேன்?? என்னை பத்தி அதுக்கு தெரியாதா???” என கர்ஜித்து உறுமியது….
பயத்திலும், தன் கணவனை விட்டு கொடுக்க முடியாத தவிப்பிலும் அழுது அழுது முகம் சிவந்து எழுந்த நந்தனா, வெளியே களத்து மேட்டில் உச்சி வெயிலில் கவலையோடு படுத்திருக்கும் தன்னவனை காக்க எண்ணி பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓட,,
இரத்தக்கறையோடு விரல் சொடுக்கிய அவ்வுருவத்தின் கட்டுப்பாட்டில் அவள் செல்லும் முன் குடிசையில் இருந்த சின்ன கதவும் படாரென அறைந்து சாத்தப்பட்டது….
கதவில் சாய்ந்து உடல் குறுக அமர்ந்த நந்தனா, ” அக்கா பிளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்… மாமனை ஒன்னும் பண்ணிடாத ” என அழுக துவங்கினாள்….அதில் அவ்விடமே அதிர சிரித்த அவ்வுருவம்,
” அவ்வளவு சுலபமா அவனை கொல்லவா டி இன்னும் மேலோகம் போகாம இருக்கேன்??” என ஆக்ரோஷம் பொங்க கேட்டு, ” இங்க இருக்க ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நரகத்தை காட்டுவேன் டி… என்னை மறந்த அவனை கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை செய்யாம விட மாட்டேன்” என கூறி கதவை திறந்து அரூபமாய் மாறி காற்றில் கரைந்து போனது….
தரையில் மடங்கி சரிந்து அழுத நந்தனா,
” ஐயோ… மாமா.. நான் உன்னை எப்படி காப்பாத்த போறேன் ” என அழுது வெம்பி துடிக்க,
அடுத்த கணமே கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டு தைரியமாய் எழுந்து தருமனை தேடி ஓடினாள்…
அங்கு தருமன் வெயிலின் வெம்மையை கூட உணராமல் மல்லியை எண்ணி கண்களில் கண்ணீருடன் வெறும் வரப்பில் படுத்திருக்க,
அவனை ஓடி சென்று அணைத்துக் கொண்ட நந்தனா, ” மாமா… உள்ள வாங்க மாமா… நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்… பிளீஸ் எழுந்திருங்க ” என பதறி அழைத்தாள்…..
அவனோ அவள் கைகளை தட்டி விட்டு அவளை விலக்கி நிறுத்தி, ” என்னை தொடாதன்னு சொல்லி இருக்கேன் நந்தனா… ப்ச்… நகரு” என எழுந்து கொண்டவன் மல்லிகாவோடு மகிழ்ந்திருந்த பம்ப் செட் மறைவுக்கு சென்று அமர்ந்தான்…அவன் சென்ற பின் சிரித்த அவ்வுருவமோ அவள் கண்களுக்கு புலப்படாமல், ” என்ன ரெண்டு பேரும் நாடகமாடுறிங்களா??” என குரல் கரகரக்க கேட்க,
மனதில் வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் எழுந்த நந்தனா, ” நீ மாமனை நம்பல தானே… இப்போ நிரூபிக்கிறேன் பாரு மாமன் மேல தப்பு இல்லன்னு” என சபதம் செய்து கொண்டு, ” மாமன் உன்னை எவ்வளவு காதலிக்கிதுன்னு இப்போ தெரியும் உனக்கு.. ஆனா அதன் பிறகு நீ அவரை விட்டுட்டு போயிடனும்… எங்க வாழ்க்கையில் தொந்தரவா இருக்க மாட்டேன் சத்தியம் பண்ணு” என அவ்வுருவத்தின் கோபத்தை தூண்டி அதை சத்தியம் செய்ய நிர்பந்தித்தாள்….
ஆக்ரோஷம், வருத்தம், கவலை, தன் காதல் என அனைத்தும் கொண்ட கலவையான உணர்வுகளில் சிக்கிய கருப்பு நிற புடவையில் அரூ
பமாய் காற்றில் பறந்த அவ்வுருவமும் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தது….. ஆக்ரோஷம், வருத்தம், கவலை, தன் காதல் என அனைத்தும் கொண்ட கலவையான உணர்வுகளில் சிக்கிய கருப்பு நிற புடவையில் அரூபமாய் காற்றில் பறந்த அவ்வுருவமும் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தது…..
அதே வேகத்தோடு எழுந்து சென்ற நந்தனா தருமனின் அருகே அமர்ந்து, ” மாமா.. என்னை உங்க மனைவியா நினைக்க வேண்டாம்.. ஒரு தோழியா… உங்க மனசில் இருக்கும் கவலையை பகிர்ந்து கிட்டு உங்களை கொஞ்சம் திடப்படுத்திக்கோங்க மாமா பிளீஸ்” என அவன் கைகளை பிடித்து கெஞ்ச,
பின்னால் இருந்து ஒரு குரல், ” என் மாமன் மேல இருந்து கையை எடு டி” என கத்தி அவள் கூந்தலை காற்றில் இழுக்க,
” ஆ… எனும் தன் வலியை கட்டுப்படுத்திக் கொண்டு அதை காதில் வாங்காமல்,
” எனக்காக சொல்லுவீகளா மாமா ” என உயிர் உருகும் குரலில் கேட்டாள்……
யாருக்கு தான் அதை மறுக்க மனம் வரும் தன்னை புரிந்து தன் விலகலை கூட பெரிதாய் எண்ணாமல் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அன்பான மனைவியின் முதல் கோரிக்கை… அதுவும் உயிர் உருகும் அழைப்பில் கெஞ்சும் தன் மனைவியின் கோரிக்கை..
அதில் செவி சாய்த்த தருமன், அவள் கைகளை தன் கண்களில் வைத்து கொண்டு ” நானும் இந்த ஊரு ராஜன் விவசாயி பொண்ணு மல்லிகாவும் காதலிச்சோம்… அதுவும் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா… வருஷத்தில் ஒரே முறை மட்டுமே பார்த்துகிட்டு தொலைவில் இருந்து திகட்டாத நினைவுகளில் காதலிச்சோம்…..
முதல் முறை கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு வந்தப்போ, அவ கண்ணாடி வளையல் சரசரக்க என்னை ஒரு முறை இடிச்சுட்டா… உடனே “மன்னிச்சுக்கிடுக
ன்னு” சொல்லிட்டு கண்ணை சுருக்கி திரும்பி பார்த்துட்டு போனா…
ரெட்டை ஜடையில், அரக்கு நிற தாவணியில், கெண்டை காலுக்கு கீழ பின்னல் விழ, மல்லிகைப்பூ சரம் வச்சு, கருப்பா இருந்தாலும் கன்னக் குழி விழ சிரிச்சி அழகா இருந்த மல்லியை அப்போ தான் முதல் முதலில் பார்த்தேன்……. என்னவோ அப்போ அவளை அடிக்கடி பார்க்க மனசு தவிச்சுது…
சரி அது ஈர்ப்புன்னு என்னை நானே திடப் படுத்திட்டு விட்டுட்டேன்.. பிறகு அவளை இதோ இந்த மாந்தோப்பில் அவ தோழிகளோடு ஊஞ்சல் ஆடிட்டு இருக்கும் போது பார்த்தேன்… அப்போ இருந்து உள்ளுக்குள்ள ஏதோ ஒரு இனம் புரியாத தாக்கம் அவ மேல வந்தது… அதன் பின்ன அதை ஈர்ப்புன்னு விட முடியாத மாதிரி ராட்சஸி என் மனசை கொலையா கொன்னு வதைச்சா… நின்னா நடந்தா கூட அவளோட மஞ்சள் பூசிய முகமும், என்னை பார்த்ததும் தலை குனிஞ்சு சிரிச்ச அழகான அவ குண்டு கண்ணும் உயிர் வரைக்கும் ஆழமா பதிஞ்சி போச்சு நந்தனா…
பல நாள் அவளை எண்ணி பல விதமான கனவுகள் கூட கண்டேன்.. என் வாழ்க்கை முழுக்க அவளோட தான் வாழனும்னு முடிவு பண்ணினேன்..
அவ வீட்டுக்கும் தாத்தா வீட்டுக்கும் பகை இருந்ததால அவ கிட்ட என்னால சொல்ல முடியல…
அடுத்த வருஷம் ஒருமுறை வந்தப்போ அவளை இதே மாமரத்தில் ஊஞ்சலாடும் போது பார்த்து அவளை அப்படியே நிறுத்தி, அவ தோழிகளை போக சொல்லிட்டு அவ கண்களை நேருக்கு நேர் பார்த்து ” மல்லி.. நீ என் உயிருக்குள் இறங்கிட்ட டி… என் உயிருள்ளவரை நீ என் பொண்டாட்டியா என் கூட வாழுவியான்னு கேட்டேன்..”
அவளும் அந்த நிமிஷம் என் கண்ணை பார்த்து, ” நானும் உங்களுக்காக தான் தினமும் இந்த இடத்துக்கு வந்து உங்க வாசத்தில் சுவாசத்தை கலந்து உங்க நினைவில் உயிர் வாழுறேன் மாமா… என்னை இப்போவே கூட கட்டிகிடுகன்னு சொன்னா பாரு… அப்படியே நம்ம உயிர் நம்ம கையில் இருந்தா எப்படி அதை உணருவோம் அப்படி ஒரு ஆத்ம சந்தோஷமா இருந்தது நந்தனா..” என உயிர் உருக தன் காதலை அவளிடம் கூறிக் கொண்டிருக்க,
நந்தனா அவனின் காதலை எண்ணி கண்ணீரை சிந்த,
அவ்வுருவமோ இன்னும் அவன் தங்கள் காதலித்த அனுபவத்தை சிலாகித்து கூறியதில் அவன் தன்னை மறக்கவில்லை என்பதை உணர்ந்து ரத்தக்கண்ணீர் வடிக்க, அது நந்தனா மனதை இன்னும் வதைத்தது…
சொல்லும் போதே கண்களில் சிந்திய கண்ணீரை துடைத்து தருமன், ” இப்படி தான் வருஷத்துக்கு ஒருமுறை வந்தாலும் ஒரு மாசம் முழுக்க இந்த மாந்தோப்பில், பம்ப் செட் மறைவில் உக்கார்ந்து யாருக்கும் தெரியாமல் பேசுவோம் டி…
அவளை இப்படி மடியில் படுக்க வைச்சு பாட சொல்லி நாள் முழுக்க கேட்கலாம்.. அப்படி இருக்கும் அவ தேன்குரல்… நான் பேச பேச என் கண்ணையே பார்த்து என்னை பேச விடாமல் திணற வைப்பா ராட்சஸி… அதே நேரம் பேசு மாமா பேசு மாமான்னு கெஞ்சி என்னை கொஞ்சி தீர்ப்பா…
என் கவலை, கோபம், காதல், காமம் எல்லாத்தையும் அவ கிட்ட கொஞ்சமும் ஒளிவு மறைவு இல்லாம பகிர்ந்துக்குவேன்…
இப்படி காதலிச்சுட்டு இருந்தப்போ தான் ஒரு நாள் நான் வேலை விஷயமா வெளியூர் போயிருக்கும் போது “மல்லி இங்க வேற ஒரு பையனோட ..” என அதற்கு மேல் கூற முடியாமல் தவித்து விம்மி வெடித்து அழுது கதறி விட்டான் அந்த ஆறடி ஆண்மகன்…
அவ தூக்கு போட்டு இறந்ததா தகவல் வந்தும் என்னால அங்க இருந்து வர முடியாத நிலைமை நந்தனா… விட்டுட்டு வந்தா என் கம்பெனியோட ஷேர் 2000 கோடி நஷ்டம் ஆகிடும்… ரொம்ப இக்காட்டான சூழ்நிலையில் நான் கிட்டத்தட்ட அரை பைத்தியமா அங்க இருந்து வேலையை முடிச்சு கொடுத்துட்டு ஓடி அவளை பார்க்க தான் வந்தேன்…
ஆனா அவளோட சாம்பலை கூட என்னால பார்க்க முடியல டி… இங்கேயே செத்து போயிடலான்னு கிணத்துக்கு போகும் போது அம்மா உயிருக்கு போராடுறதா போன் வந்தது…. நான் என்ன தான் செய்ய முடியும்… உயிரானவளுக்காக உயிரை கொடுக்கவா, இல்ல எனக்கு உயிர் கொடுத்தவங்களுக்காக உயிரோட வாழவா??? ரெண்டுக்கும் இடையில் இப்போ வரைக்கும் செத்து செத்து பிழைக்கிறேன் நந்தனா” என கதறி விட்டான் தருமன்…
அவனை மார்போடு அணைத்து தாங்கிக் கொண்டாள் அவன் தாரம்…
எதிரே நின்று தன்னவன் நிலையை எண்ணி விம்மி வெடித்து இதயம் சுக்கு நூறாக உடைய நின்றிருந்தாள் அவனின் ஆருயிர் காதலி மல்லிகா…..
அவனை தேற்றிய நந்தனா, ” சரி மாமா… அழுகாதீக, இப்போ சொல்லுங்க.. மல்லி அப்படி ஒருத்தர் கூட தப்பா இருந்திருப்பான்னு நம்புறீகளா?” என அவன் முகத்தை கையிலேந்தி கேட்க,
கோபத்தில் பம்ப் செட் சுவற்றை குத்தியவன் ” என் மல்லி அக்னி மாதிரி நந்தனா…அவளை என்னை தவிர யாராலயும் நெருங்க முடியாது… நெருங்கின அவங்களை பொசுக்கி இருப்பா.. இல்ல தன்னை தானே அழிச்சிட்டு இருந்திருப்பா..” என அத்தனை கர்வமாய் கூறியவன் கண்கள் அடுத்த நிமிடம் குழப்பத்தில் ஆழ்ந்தது…
அதை கேட்ட மல்லிக்கோ அவன் வார்த்தை உயிர் வரை ஊடுருவ, இத்தனை ஆழமாய் காதலித்த தன்னவனை நிந்திக்க வந்ததை எண்ணி தன் மீதே கோபம் கொண்டு தன்னை அடித்துக் கொண்டு மடங்கி அமர்ந்தாள் அந்த தூய ஆத்மா…..
தருமனை நேருக்கு நேர் பார்த்த நந்தனா,
” அப்போ மல்லி இந்த முடிவெடுக்கவும், அவளுக்கு இந்த அவப்பெயர் கிடைக்கவும் என்ன காரணமா இருக்கும் மாமா??” என கேட்க,
அப்போது தான் அதை பற்றி சிந்தித்தவன்,
” ஆமா நந்தனா… இத பத்தி நான் சிந்திக்கவே இல்லை…. இப்போவே அந்த உண்மையை கண்டு பிடிச்சு, என் மல்லி உத்தமின்னு நிரூபிக்கிறேன்” என கூறி வேகத்தில் எழுந்தவன் சென்றது அவன் தாத்தாவை நோக்கி தான்….
ஆனால் அவனுக்கு முன் அங்கே தருமனின் தாத்தா வீரநாயகம் முகம் முழுதும் இரத்தம் ஒழுக, கழுத்தில் காயங்களோடு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கொண்டிருந்தார்….
தன் எதிரே வந்தவரை அந்நிலையில் பார்த்த தருமனும் ஊர்மக்களும் அவரிடம் நடந்ததை கேட்க, மேலிருந்து ஒரு குரல்,
” சொல்லு டா… என் மாமன் முன்னாடியும் என்னையும் என் குடும்பத்தையும் தப்பா பேசி, என் குடும்பத்தையே ஊரை விட்டு துரத்தின உண்மையை ஊர்மக்கள் முன்னாடியும் சொல்லு” என காற்றில் அவர் காதுக்குள் நுழைந்து நாராசமான குரலில் ரீங்காரமிட,
” சொல்லுறேன் சொல்லுறேன் ” என பதைபதைத்தவர், ” தர்மா…எனக்கு நீ நம்மளை விட வசதி கம்மியா இருக்க ராஜன் பொண்ணு மல்லியை காதலிக்கிறது பிடிக்காம, அவன் மேல இருந்த பகையையும் மல்லி மூலமா தீர்க்க திட்டம் போட்டேன்…
அவளை நீ வந்திருக்கிறதா அவ தோழி ஒருத்தி மூலமா சொல்லி விட்டு மாந்தோப்புக்கு வர வச்சு, அங்க ஒருத்தன் கூட தப்பா இருக்க மாதிரி செட் பண்ணி அவளை தற்கொலை பண்ணிக்க வச்சேன்… ” என கூறிய நொடியே,
தருமனோ தன்னவள் மேல் கொண்ட கலங்கள் தீர்ந்தாலும் அவளை கொன்ற கோபம் தீராமல் அவரை அடிக்க கை ஓங்க,
அதற்குள் அவர் கழுத்தில் மேலிருந்து ஓர் கத்தி தொங்கி அனைவர் முன்பும் வேகமாய் குத்தி கொண்டே இருந்தது…
அதில் அதிர்ந்த தர்மன், ” மல்லி..” என கத்தி, ” என்னையும் உன் கூட கூட்டிட்டு போயிடுடி…தப்பு பண்ணிட்டேன் டி..” என கதறி அழ,
ஊரே ஓர் நல்ல குணம் கொண்ட பெண்ணை ஒரு பார்வையில் தவறாய் பேசியதை எண்ணி வருந்தி அவளிடம் மன்னிப்பு கேட்டு அவனை பாவமாய் பார்க்க,
நந்தனா அவனை தோளோடு அணைத்துக் கொண்டு, ” அக்கா பிளீஸ்… உன் மாமனை எனக்கு கொடுத்திடு… அவர் வாழனும்” என தாலியை கையில் ஏந்திக் கொண்டு கெஞ்சினாள்…..
கண்களில் கண்ணீர் வழிய, தருமனின் தலை முடியை காற்றால் வருடிய மல்லி காட்டேரி, ” நீங்க வாழனும் மாமா… உங்களை நானும் தப்பா நினைச்சுட்டேன்… மன்னிச்சுகிடுக. நந்தனா தங்கமான பொண்ணு மாமா.. அவளை கலங்க விடாம பர்த்துகிடுக” என கூறி,
நந்தனாவிடம் ” நீங்க சந்தோஷமா இருப்பதை பார்க்கும் அளவுக்கு எனக்கு தாராள மனசு இல்ல நந்தனா… என் மாமனை பத்திரமா பார்த்துக்கோ” என அவள் தலையிலும் காற்றால் ஆசிர்வதித்து அவ்வுருவம் காற்றில் கரைந்து மறைந்து போனது….
“மன்னிச்சுகிடுக” எனும் ஒரு வார்த்தையில் உயிரானவன் உயிரில் கலந்தும் பிரிந்தும் சென்றாள் மல்லிகா..
தருமன் கை பிடித்து அவனுக்கு அவன் மல்லி கூறிய அழகான வாழ்க்கையை கொடுக்க அழைத்துக் கொண்டு சென்றாள் நந்தனா…
மேலிருந்து அவர்கள் மேல் பூக்களை தூவிய கருப்பு நிற
உருவம் மல்லியாய் மாறி கண் கலங்க தன் காதலை எண்ணி மகிழ்வோடு சென்றது.
சுபம்.
பேய் விளையாட்டு
அன்று நல்ல மாலைப் பொழுது. மழை பெய்து ஓய்ந்திருந்தது. காற்றில் இருந்த ஈரப்பதம் என் உயிரை வருடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் என்னைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்த ரவி தன் மகள் ரீனாவுடன் வீட்டிற்கு வந்திருந்தார். இதற்கு முன்பு ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பலனளிக்காததால் என்னிடம் வந்ததாகச் சொன்னார். ரீனா பார்ப்பதற்கு மன நோயாளி போன்றதெல்லாம் இல்லை. அவள் பார்வையும், சிரிப்பும், பேச்சும் அவளது அப்பா என்னிடம் அவளைப் பற்றி கூறிய விஷயங்களை பொய்யாக்குவது போல் மிகவும் கூர்மையாக இருந்தது.
என்னதான் பிரச்சினை என்று கேட்டேன். அவளும் அவள் மனதில் இருந்தவற்றைப் பேச ஆரம்பித்தாள்…
டைரி எழுதும் பழக்கம் சிலருக்கு இருக்கும். எழுதும் விதம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். ஒரு சிலர் எப்போதாவது சந்தோஷமாக இருக்கும் போது அல்லது சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே எழுதுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட நாட்களில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளைத் திட்டமிடுவார்கள் அல்லது வெற்றிகரமாக முடித்த வேலையை எழுதிக் கொடுப்பார்கள் வைப்பார்கள். ஒருசிலர் ஒவ்வொரு நாளும் நடந்த விஷயங்களைப் பட்டியலிடுவார்கள்.
ஆனால், நான் டைரி எழுதுவதற்கான காரணம் சற்று மாறுபட்டது. எனக்கு அதிக உணர்ச்சிகரமான நிகழ்வுகள் ஒரு நாளைக்கு மேல் அதாவது இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் நியாபகம் இருக்காது. நேரம் கழிந்ததும் அதைப் பற்றி முற்றிலுமாக மறந்துவிடுவேன். உணர்ச்சிகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (கோபம், அன்பு, பயம், உற்சாகம்… என்று இன்னும் பல).
நிகழும் காரியங்கள் சங்கடப்படும்படி இருக்கும்போது இந்த மனநோயை நினைத்து நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் மகிழ்வான, வாழ்க்கைக்கு மிகவும் தேவையான விஷயங்கள் உணர்வின் எல்லையை எட்டியவுடன் அதை மறந்துவிடுகிறேன். இதனால் பல சிக்கல்களை நான் தினமும் எதிர்கொள்கிறேன்.
நானோ பள்ளி மாணவி. என் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். உதாரணமாக, நான் தேர்வுக்குத் தயாராகும் போது ஏதாவது ஒரு பாடம் தெளிவாகப் புரிகிறது… “ஹே சூப்பர்ப்பா… இதுல இருந்து எந்தக் கேள்வி கேட்டாலும் நான் பட்டையக் கெளப்பிருவேனு” மனசுல உற்சாகப்பட்டால் போதும் பின்பு மூளை முற்றிலும் வெற்றிடம் ஆகிவிடும். இதை என்னால் மட்டும்தான் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறியிருக்கிறார்.
இது ஒன்றும் எனக்கு பிறவி நோயல்ல இடையில்தான் ஏதோ ஒரு மனக்கவலையில் சிக்கிக்கொண்டதால் இது ஏற்பட்டதாக மருத்துவர். தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பு அந்த நாள் நடந்த அனைத்தையும் மனதிற்குள் படமாக ஓட்டிப் பார்த்துக் கொள்வேன். அது மட்டும் இல்லாமல் எம்மாதிரியான நிகழ்வு நேர்ந்தாலும் உணர்ச்சிவசப்படாமல் மந்தமான மனநிலையிலேயே இருக்க முயற்சி செய்வேன். அதையும் மீறி கட்டுப்பாடின்றி உணர்வு வெளிப்பட்டவுடன் என் டைரியை எடுத்து அதை வைத்துவிடுவேன்.
என்னுடைய டைரி என் மூளையின் அசிஸ்டெண்ட்டாகவே ஆகிவிட்டது. சொல்பவர் என் அன்பிற்குறியவரே ஆனாலும் அதைப்பற்றி டைரியில் என் கைப்பட எழுதியிருந்தால்தான் நம்புவேன். இந்த டைரி எழுதும் பழக்கம் என் மன நோயைத் தீர்க்கும் என்று நம்பி தொடங்கினேன். ஆனால், நாளடைவில் என்னுடனே இந்த பழக்கம் தங்கிவிட்டது.
எப்போது என் உணர்வுகள் எல்லை மீறினாலும் எந்த வித பயமும், பதற்றமும், சந்தேகமும் இன்றி எழுதிவிடுவேன். ஆனால் இன்று அப்படியில்லை.
இப்போது என் மடியில் வைத்திருக்கும் எனக்கு மிகவும் நெருங்கிய எனக்கு சொந்தமான இந்த டைரியை திறக்கத் தயங்கிக் கொண்டு அதையே வெறித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் கொண்டிருக்கிறேன். இப்போது என் மனநிலை எப்படி இருக்கிறது என்று என்னால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை. மிகவும் மங்கிய நிலையில் கோணல்மானலான மனவோட்டத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
என் தொண்டையில் ஏதோ ஒரு உருளைவடிப் பந்து ஒன்று சிக்கிக்கொண்டு உள்ளேயும் செல்லாமல் வெளியவும் வராமல் அதே இடத்தில் அப்படியே உருண்டு கொண்ட. ஒவ்வொரு முறை எச்சில் விழுங்கும் போதும் தொண்டையை ஒரு கோடாரியால் கிழிப்பது போன்று வலிக்கிறது. உடலில் இருக்கும் நீரின் அளவெல்லாம் பல மூலங்களில் இருந்து வெளியேறுவதால் என்னால் எச்சில் விழுங்காமல் இருக்க முடியவில்லை.
என் நெற்றியில் இருந்து வியர்வை சொட்டுச் சொட்டாக வடிந்து இறங்கிக் கொண்டிருக்கிறது. அதை துடைக்கக் கூட முடியாமல் போய் அமர்ந்திருக்கிறேன். அப்படி வியர்வையைத் துடைக்க நினைத்தால் என் மடியில் இருக்கும் டைரியில் இருந்து கையை எடுக்க வேண்டியிருக்கும். அப்படி நான் எடுத்தால் டைரி காற்றின் உதவியுடன் தன்னால் திறக்கப்படும்.
திறந்தால் அதில் எழுதியிருக்கும் விஷயங்களை நான் வாசிக்க நேரிடும். வாசிக்க மறுத்தால் எனக்குப் பழக்கப்பட்ட ஒரு குரல் அதில் எழுதியிருக்கும் அச்சுருத்தலான வார்த்தைகளை நான் வாசித்துக் காட்டும். நான் எழுதியவையாக இருந்தால் அது என்னை கலங்கப்படுத்தாது. அதில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் என்னைப் போலவே கையெழுத்தில் என்னுடைய எழுத்துநடையிலே வேறுயாரோ எழுதியிருப்பார்கள். அதுவும் டைரியின் கடைசிப் பக்கத்தில் மட்டும்தான் எழுதியிருப்பார்கள்.
இதில் அதிர்ச்சியூட்டும் மற்றொரு விஷயம் என்னவென்றால், அந்த கடைசி பக்கத் தாளில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விஷயங்களை நான் படித்தேன். அந்த நாளில் இப்படி ஒரு விஷயம் நடந்ததாகவும் அதை மறக்க வேண்டாம் என்றும் நான் எழுதியதாகவும் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் டைரியை எடுத்துப் பார்ப்பேன் கடைசிப் பக்கம் பளீச்சென்று வெள்ளையாக இருக்கும். பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் திறந்து பார்த்தால் அதில் ஏதாவது எழுதியிருக்கும். அது கூடப் பரவாயில்லை, இப்பொழுது நான் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் இருக்கிறேன். பள்ளி செல்லாத இந்நாளிலும் கூட அதே மதிய நேரத்தில் அந்த டைரியை எடுத்துப் பார்த்தால் எழுதியிருக்கும்.
எழுதியிருக்கும் விஷயங்கள் எல்லாம் என்னையும் என் குடும்பத்தையும் மையப்படுத்தியே இருக்கும். ஒருவேளை நான்தான் எழுதிவிட்டு மறந்துவிடுகிறேனோ என்கின்ற எண்ணம் கூட பல முறை தோன்றியிருக்கிறது. அதைப் பற்றி தீவிரமாக யோசித்துப் பார்த்தும் என்ன சார்ந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தும் அதை நான் எழுதவில்லை என்று நானே சமாதானப் படுத்திக்கொண்டு இருந்தாலும் இன்றுமொரு கேள்வி வந்து என்னை அச்சுறுத்துகிறது.
கடைசிப் பக்கத்தில் எழுதிய விஷயங்கள் அனைத்தும் அமானுஷ்யமாகவும் மாயையாகவும் இருக்கும். அதை வாசிக்கும் போதே… இதோ இப்போது நான் படபடத்துக் கொண்டு இருப்பது போலவேதான் இருப்பேன். அப்படி இருப்பின் எனக்கு எப்படி டைரியின் கடைசி பக்கத்தில் நான் படித்த ஒவ்வொரு விஷயமும் நியாபகம் இருக்கிறதென்ற கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது இருந்தது இருந்தது.
இந்த மனநிலை என்னை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் சிறைபிடித்தது. இதைப்பற்றி என் மருத்துவரிடம் கூறியபோது அவரே திக்குமுக்காடி சிறிது நேரம் நிசப்தமானார். நான் எல்லாவற்றையும் கூர்மையாகக் கேட்டுப் பேசிய பிறகு என்னைப் பார்த்து சில கேள்விகள் எழுப்பினார்.
1. கடைசி பக்கத் தாள் கிழித்ததற்கான தடயம் அந்த டைரியில் நீ எப்போதாவது கண்டதுண்டா?
“இல்லை டாக்டர். அப்படி எதுவும் இருந்ததே இல்லை”.
2. இந்த மாதிரி நடந்த நாட்களில் நீ டைரியில் சாதாரணமாக எதைப் பற்றியாவது எழுதியிருக்கிறாயா?
“ஆமா டாக்டர் எழுதியிருக்கிறேன்”.
3.அப்படியா? சரி. உன்னைத் தவிர உன் வீட்டில் யாருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதா?
“அம்மா உயிருடன் இல்லை. எனக்கு ஒரு ஐந்து வயது தம்பி இருக்கிறான். அவனும் எழுதியிருக்க வாய்ப்பில்லை”.
4. சரி அதில் என்ன மாதிரியான விஷயங்கள் எழுதியிருந்தது? அதைப் பற்றித் தெளிவாகச் சொன்னால் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும்…
மருத்துவர் அந்த டைரியில் எழுதியவற்றை பற்றி கேட்ட பொழுது அதை சொல்லத் தயங்கினேன். காரணம், இதற்கு தீர்வு கிடைத்தால் எங்க அம்மா மீண்டும் வராமல் போய்விடுவாளோ என்கிற குழப்பம் எனக்கு இருந்தது. அவர் மீண்டும் அழுத்திக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். அந்த டைரியில் நான் எல்லாவற்றையும் படித்தேன் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தேன்…
இரவு உணவு உண்டதும் என் தம்பிக்கு படுக்கையை தயார் செய்து கொண்டிருந்தேன். அவன் வழக்கத்தை விட மிகவும் சத்தமாக ஏக்கத்துடன் அழுது கொண்டிருந்தான். அம்மா இறந்து ஒரு மாதம் கழிந்த பின்னும் கூட அவனுக்கு அம்மாவின் நினைவு துளி கூட குறையவே இல்லை. அவளின் அரவணைப்பு கிடைக்காமல் சோர்ந்து போனான். அவள் இருந்த இடத்தில் அவனைப் பாதுகாக்கும் பொறுப்பு என் தலையில் இறங்கியது. அவன் அழுகையை நிறுத்தவும், சமாதானப்படுத்தவும் பலவற்றை செய்து பார்த்தேன் எதுவும் எடுக்கவில்லை.
அப்போதுதான் எனக்கு என் தோழி ஒருத்தி சொல்லிக் கொடுத்த விளையாட்டு நியாபகம் வந்தது. அந்த விளையாட்டு பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே இறந்தவர்களின் ஆவியுடன் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு அட்டையில் வலது புறம் ஆம் என்றும் இடது புறம் இல்லை என்றும் எழுதியிருக்கும். அதைச் சுற்றி லத்தின் எண்கள் இருக்கும். அதற்குப் பெயர் ஓஜா போர்டு என்று சொல்வார்கள். அதன் மையப்பகுதியில் ஒற்றைக் காயினை வைத்து அழுத்திப் பிடித்தது. நாம் யாருடைய ஆன்மாவிடம் பேச விரும்புகிறோமோ அவர்களை அழைத்தால், ஏதேனும் ஒரு வடிவத்தில் அவர்களின் இருப்பை நமக்குத் தெரியப்படுத்துவார்கள்.
இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததும் அவர்களுடன் பேசத் தொடங்கலாம். ஏதோனும் கேள்வி கேட்கும்பட்சத்தில் நாம் அழுத்திப்பிடித்திருக்கும் காயின் ஆம் அல்லது இல்லை என்று அந்த ஆன்மாவின் பதிலுக்கினங்க நம் கட்டுப்பாட்டை மீறி நகரும்.
அதை பயன்படுத்த வேண்டும் என்றால் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் என் தோழி சொன்னாள். இந்த விளையாட்டு அரங்கேறப் போகும் இடம் மிகவும் சுத்தமாகவும் இருட்டாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மட்டுமே விளையாட வேண்டும்.
தனியாக விளையாடுவது ஆபத்தைக் கூட சில நேரங்களில் ஏற்படுத்தலாம் அதனால் துணைக்கு இன்னொருவர் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறி, அவள் வைத்திருந்த ஓஜா போர்டை என்னிடம் கொடுத்தாள். அதை நான் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தேன். இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும்.
வீட்டில் இடைஞ்சலாக இருப்பதாக கூறி அம்மா அதை பயன்படுத்தாத ஒரு அறையில் வீசி எறிந்த நியாபகம் எனக்கு வந்தது.
என் தம்பியின் அழுகையை அமைதிப்படுத்த அதைத் தேட ஆரம்பித்தேன். அப்பாவிற்கு இம்மாதிரியான காரியங்கள் எல்லாம் பிடிக்கவே பிடிக்காது அவர் வேலையை விட்டு வரும்முன் அதைத் தேடி அம்மாவிடம் தம்பியைப் பேசுங்கள் உறங்க வைத்துவிட வேண்டும் என்று தேடுதலைத் தீவிரப் படுத்தினேன். அம்மா சில மாதங்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டு அவஸ்தையில்தான் இறந்து போனாள். அவள் இருக்கும் வரை எங்களுக்கு அப்பாவிற்கும் எந்த ஒரு குறையும் அண்டவில்லை. அவள் இல்லாத வீட்டில் அப்பாவினால் இருக்க முடிவதில்லை. அதனாலே முன்பு ஒரு சுற்று வேலைக்கு மட்டுமே சென்றவர் அவள் இல்லாத நாட்களில் இரண்டு வேலைக்குச் சென்று மிகவும் தாமதமாகவே வீட்டிற்கு வருவார். வேலையின் அழுப்பில் அசந்து தூங்கிவிடுவார். நானும் தம்பியும் கூட மனதில் இருக்கும் வலியை வெளிப்படுத்தி அழுதுவிடுகிறோம். அவருக்கு அந்த வாய்ப்பு கூட இல்லை பாவம்.
அந்த பயன்படுத்தாத அறையில் பல பயன்படுத்தப்படாத பொருட்கள் குவிந்திருந்தன. அதை ஒவ்வொன்றாக அகற்றித் தேடி ஓஜா போர்டை எடுப்பதற்குள் நான் ஒரு வழியாகிவிட்டேன்.
என் தோழி என்னிடம் கூறியதைப் போலவே எல்லாம் தயாரித்து வைத்துக் கொண்டு தம்பியையும் அருகில் அமர்த்தி வைத்திருந்தேன். பயத்தில் ஒரு கையால் தம்பியின் கையையும் மற்றொரு கையால் காயினையும் பிடித்திருந்தேன்.
தம்பி… நீ அம்மாகிட்ட போகனும்னு அழுதுட்டே இருக்கனால அம்மா வந்து இப்போ உங்கிட்ட பேசப்போறா… நீயும் பேசு என்று சொன்னதும் அழுகையை நிறுத்தி அவனுடைய ஆர்வம் ஓஜா போர்டை நோக்கிக் குவிந்தது.
எங்கள் இருவரின் மூச்சு சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது.
“அம்மா… அம்மா” என்று அழைத்தேன். எந்த பதிலும் வரவில்லை. “அம்மா நீ இல்லாம நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம் தெரியுமா வா..மா… தம்பி கிட்ட பேசு” என்று சொல்லிக்கொண்டே அழுதுவிட்டேன். அதுவரை அமைதி பரவியிருந்த அந்த வீட்டில் கதவினுடைய தாழ்ப்பாளைத் திறப்பது போல சத்தம் கேட்டது. அப்பாதான் வந்துவிட்டார் என்று அச்சப்பட்டு ஓஜா போர்டை எடுத்து மறைத்து வைத்துவிட்டு கதவைத் திறந்தேன் ஆனால் அப்பா வரவேயில்லை.
அந்த சத்தம் அம்மா நம்மிடம் பேச வந்ததற்கான அறிகுறி என்று புரிந்துகொண்டு மீண்டும் வேலையில் இறங்கினேன். அம்மாவை அழைத்ததும் மீண்டும் அதே சத்தம் கேட்கத் தொடங்கியது. நானும் என் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். இம்முறை அந்த சத்தம் மிக மிக அருகில் வீட்டிற்கு உள்ளே தெள்ளத் தெளிவாகக் கேட்டது. பின்பு ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் எந்த சத்தமும் இல்லாமல் நிசப்தமாய் இருந்தது.
அவ்வாறே எதிர்பாராத விதமாக அப்பா வந்து “இருட்டுல என்ன வேல உங்களுக்கு சாப்பிட்டாச்சுனா படுத்து தூங்க வேண்டியதுதானா?… ம்ம்ம்ம்” என்றார். என்னை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம்பி பிறந்ததால் அவன் மேல் அப்பாவிற்கு பாசம் சற்று அதிகமாகவே இருக்கும் அவனைத் தூக்கி மாரில் போட்டுக் கொண்டான் கொண்டான் கொண்டு படுத்துவிட்டார்.
நான் அந்த போர்டை கையில் எடுத்துக்கொண்டு அதே இடத்தில் நகராமல் நின்றிருந்தேன். அந்த நொடி நடந்த நிகழ்வு என்னை நகர விடாமல் வியப்பில் பிடித்து வைத்திருந்தது.
முதல் முறை தாழ்ப்பாள் திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்ததும் அப்பா இல்லை. பின்பு கதவை இழுத்து மூடி உள்பக்கமாக தாழிட்டுவிட்டு வந்தேன். பின் எப்படி அவர் உள்ளே வந்திருக்க முடியும்? என்கிற கேள்வி என்னைக் குழப்பியது. அப்போதுதான் இன்னொரு உண்மை என்னை பயத்தில் உறைய வைத்தது.
விடுமுறை நாட்களில் வீட்டிலே இருப்பதால் அப்பா எங்கு சென்றாலும் எங்களை உள்ளே விட்டு வெளியே தாழ்ப்பாள் போட்டு பூட்டிவிட்டு செல்வது வழக்கம். அப்படி இருக்கும் போது எப்படி நான் கதவைத் திறந்தேன்? . வெளியே யாரும் இல்லை என்று திரும்ப அடைத்தேன்?. இந்த இரண்டு கேள்வியும் அன்று இரவு என்னை உறங்கவிடவில்லை.
நடந்ததை ஒவ்வொன்றாக நினைவுபடுத்திப் பார்த்தேன் பல முறை யோசனை செய்த பிறகு ஒன்று தோன்றியது. அப்பா தம்பியைத் தூக்கும் போது அவர் கையில் பூட்டுடன் கூடிய சாவியை நான் கவனித்தேன். அப்படி அவர் பூட்டைத் திறந்திருந்தால் அந்த சத்தம் கேட்டிருக்குமே. ஆனால் கேட்கவில்லை.
நடந்த நிகழ்வு என்னைப் பல புதிர்களுக்குள் புகுத்தியது. என்னால் அதை விட்டு வேறு சிந்தனைக்குள் நுழைய முடியவில்லை. வேறு யாரிடமும் பகிரவும் முடியவில்லை. காரணம், இதை நான் சொன்னால் எனக்கு இருக்கும் மனநோய் முத்தி நான் முழுப் பைத்தியமாகவே மாறிவிட்டேன் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதனால் இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ன ஆனாலும் நாமே பார்த்துக் கொள்வோம் என்று முடிவெடுத்துவிட்டேன்.
ஒரு சிக்கலான மனநிலையில் நான் இருக்கும் போது அதை இன்னும் தீவிரமாகப் படுத்தும் விதமாக சில விஷயங்கள் வீட்டில் அரங்கேறத் தொடங்கியது. அன்று கேட்ட நாட்களில் தாழ் திறக்கும் சத்தம் அடுத்தடுத்து அடிக்கடி வீட்டில் கேட்கத் தொடங்கியது.
சமையலறை, குளியலறை, கட்டிலுக்கு அடியில் என்று எல்லா இடத்திலும் சத்தம் கேட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது அந்த சத்தம் என்னைத் தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை.
இப்படியான படபடப்பில் தவித்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் இருந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட அம்மாவின் துணிகள் ஒவ்வொன்றாகக் காணாமல் போக துவங்கியது. இது தீவிரமாக அம்மாவிற்கு பிடித்த அவள் பயன்படுத்திய வேறு சில பொருட்களுமே வீட்டில் இருந்து தொலைந்தது. அதை கவனித்த அப்பா என்னிடம் அதைப் பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆரம்பத்தில் பதிலளிக்காமல் சமாளித்த நான் ஒருநாள் எனக்கு நடந்த எல்லா விஷயங்களையும் அவரிடம் கூற வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். நான் கூறியவற்றை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு இருக்கும் மனநோயின் காரணமாகத்தான் நான் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்கிறேன் என்றும் நானே பொருட்களை எங்காவது மறந்து வைத்துவிட்டு பின் தேடுவதாகவும் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் அப்படிப் பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் அவர் இடத்தில் யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பார்கள்.
யாரும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்கிற புதுக் கவலையும் எனக்குள் இருப்பதால் நானே என் கேள்விகளுக்கு பதில் தேட ஆரம்பித்தேன். எப்போதெல்லாம் எனக்கு அந்த அச்சுறுத்தும் சத்தம் கேட்கிறதோ அப்போதெல்லாம் கையில் டார்ச்சை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்கும் திசையை நோக்கி நடக்கும் ஆரம்பித்தேன்.
அப்படி ஒரு நாள் செய்தபோது அந்த சத்தம் என்னை அந்த பயன்படுத்தப்படாத அறையின் பக்கம் இழுத்துச் சென்றது. கையில் இருக்கும் டார்ச்சை வைத்து அந்த அறையின் எல்லா திசைகளிலும் அடித்துப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். என்னுடைய இந்த தினறலுக்கு காரணம் அந்த அறையில் உள்ள ஒரு சுவற்றில் “நான் உன்னுடைய அறையில்தான் இருக்கிறேன் நீ அங்கு வா” என்று இரத்தத்தால் எழுதியிருந்ததுதான்.
அதைப் பார்த்ததும் தலைகால் புரியாமல் அழுது கத்தினேன். அப்பா அந்த அறைக்குள் நூழைந்தார். சுவற்றில் இருந்ததைப் பார்த்ததும் வழக்கம் போல நானே ஒன்றை உருவாக்கி அதற்கு நானே பயப்படுவதாக நினைத்துக் கொண்டார். அங்கிருந்து வெளியேறி படுக்கையறைக்குச் சென்றோம் என்று சொல்லி முடித்தாள்.
நீ சொல்லும் விஷயங்கள் எல்லாம் எனக்குப் புதிதாகவும் சிந்திக்க வைக்கும்படியும் இருக்கிறது ரீனா. ஏற்கனவே மனநோய் இருக்கும் குழந்தைக்கு இப்படியான எண்ணம் தோன்றுவது புதிதல்ல என்றுதான் நானும் நினைத்தேன் என்றேன். அவள் பார்வை மாறியது. வெறுத்து இடத்தை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.
பின் ரவியை உள்ளே அழைத்து…. தாயின் அரவணைப்பிலே வளர்ந்த குழந்தைகள் இரண்டும் இப்போது கிடைக்காததால் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழையால்தான் இவ்வாறான பிரச்சனைகள் பிறக்கின்றன. எப்படிப்பட்ட மனக் கோளாறாக இருந்தாலும் அன்பும் அக்கறையும் அதை முற்றிலுமாக அகற்றிவிடும். முல்லை முல்லை எடுப்பது போல அதீத உணர்வுகளால் அவளுக்கு ஏற்பட்ட நோயை அச்சம் என்கிற அதே உணர்வின் உச்சத்தை வைத்தே தீர்த்துவிட்டோம்.
குழந்தைகளை அன்பான ஆரோக்கியமான மனநிலையில் வைத்திருக்கும் கடமை பெற்றோருக்கே உரியது. எத்தனை சிக்கல் இருந்தாலும் பிள்ளை வளர்ப்பில் இதை மறந்து விட்டால் பிள்ளைகளின் வாழ்க்கையே மாறிவிடும். எப்பொழுதும் நாம் தேடும் விடைகள் நமக்கு எழுந்த கேள்விக்குள்ளேதான் ஒழிந்திருக்கிறது. அதை நாம்தான் கவனிக்க மறந்துவிடுகிறோம்.
நல்ல வேளை ரவி என்னைச் சந்தித்தார்.இங்கு எல்லா சிக்கலான கணக்குகளையும் தீர்க்க யாரேனும் ஒருவர் படைக்கப்பட்டிருப்பார். அவருக்கு எந்த கணக்கிற்கு எந்த சமன்பாட்டைப் பயன்படுத்தினால் தீர்வு கிடைக்கும் என்பது பற்றித் தெளிவாகத் தெரியும்.
நீண்ட நெடுஞ்சாலையின் வழியே குணமான மகளும் பொறுப்பைப் புரிந்து கொண்டு தந்தையும் கைகோர்த்துக் கொண்டு பேசி சிரித்தபடியே நடந்தார்கள். அதைப் பார்த்த மனநல மருத்துவருக்கே அது மருந்தானது. காரணம் மருத்துவரும் இதைத் தீர்க்க முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தார்.
இப்படிக்கு,
மனநல மருத்துவரின் மனைவி
மாலினி.
என்று என் அறையில் விட்டுச் சென்ற ரீனாவின் டைரியின் கடைசிப் பக்கத்தில் எழுதினேன். சிரித்தேன்! பூரித்தேன்!.
நீ யார்? (லீலா சந்திரன்)
நீ யார்?
தூக்கத்தில் இருந்து கண் விழித்த அறுபது வயதான ஸ்ரீகாந்தன், தன் எதிரே தலைவிரி கோலமாக நின்றிருந்த பெண்ணை பார்த்து
“நீ… நீ யாரு?என் ரூம்ல நீ என்ன பண்ற?” என்றவர் கேள்விக்கு.
அந்த அறையே அதிரும் வகையில் சிரித்த பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏராளம்.
“ஏய்.. வெளிய போ”என்று பெரியவர் ஸ்ரீகாந்தன் கத்த,
“ஓடி விளையாடு பாப்பா…
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.”என்ற பாடலின் வரியை கரகரத்த குரலில் அந்த பெண் பாட தொடங்கியவள் இறுதியாக, “காலை எழுந்தவுடன் படிப்பு..
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா” என்ற பாரதியாரின் பாடலை அந்த பெண் தலையை இருபக்கமும் அசைத்து பாடி முடித்தாள்.
“எ..எதுக்கு இப்போ இந்த பாட்டை என்கிட்ட நீ பாடுற? நீ யாருன்னு சொல்ல போறியா இல்லையா?” என்ற பெரியவரை பார்த்து
“என்னை யாருன்னு உங்களுக்கு தெரியலையா சார்?”என்று பெண்ணவள் கேட்க..
“எனக்கு தெரியல ?” என்ற பெரியவர் எதிரே எகிறி குதித்து அந்த பெண் அவர் கட்டிலில் அமர்ந்தாள்.
“சார்..எனக்கு ரொம்ப பசிக்குது, ரொம்ப வருஷம் கழிச்சு நிறைய சாப்பிட போறேன். எனக்கு சுட சுட உன் ரத்தத்தை கொடு” என்று தன் கரங்களை நீட்டி ஸ்ரீகாந்தை தொட சென்ற பெண்ணை பார்த்து அவர் பயந்து..
“யாரு நீ? இங்க இருந்து வெளிய போ.” என்ற பெரியவர் இருக்கையில் இருந்து எழுந்து வாசலை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே இரண்டு கதவுகளும் ‘படார்‘ என்று தானாக மூடியது.
“என்ன சார்?அவ்வளவு சீக்கிரம் நீங்க என்னை விட்டுப் போயிட முடியுமா..?”என்ற பெண் பெரியவர் கண் இமைக்கும் நொடியில் அவர் முன்னே வேகமாக ஓடிச் சென்று அவர் கையை பற்றியவளின் செயலில் பெரியவருக்கு மேலும் பயம் கூடியது.
“ஏய்.. என் கைய விடு” என்ற ஸ்ரீகாந்தின் முன் அந்த உருவம் தன் விரலால் சொடுக்கு போட்டதும் அவர் தலையில் எங்கிருந்தோ பறந்து வந்த புத்தகம் விழுந்ததும்,
“ஐயோ..”என்று வலியால் அலறினார்.
“சார்.. இங்க இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது.” என்ற பெண் இருக்கையில் அமர்ந்து மேசை மேல் இருந்த ரத்தம் நிறைந்த கோப்பையை எடுத்து தாகம் அடங்கும் வரை பருகினாள்.
“நீ…நீ யாரு?” என்று மீண்டும் பெரியவர் கேட்க
“நான் யாருன்னு உங்களுக்கு தெரியலையா?” என்ற உருவம் தன் விரித்து போட்ட கூந்தலில் இருந்த புழுவை எடுத்து அவள் வாயில் போட்டு மென்று தின்பதை பார்த்த ஸ்ரீகாந்த்துக்கு மயக்கம் வராத குறை தான்.
“நான் யாருனு தெரியாம என்கிட்ட நீ விளையாடுற. கதவை திறந்து விடு” என்ற பெரியவர் மூடி இருந்த கதவை தொட்டதும் மின்சாரம் பாய்ந்ததை போல தூக்கி வீசப்பட்டவரை நோக்கி.. அடி மேல் அடி வைத்து அந்த பெண் நெருங்கி வந்தவள் அவர் அருகே சம்மணம் போட்டு அமர்ந்தாள்.
அந்த பெண்ணின் கை விரல் நகங்கள் எல்லாம் கூர்மையாக இருக்க, ஆள்காட்டி விரலை கொண்டு பெரியவர் கன்னத்தை அந்த உருவம் தொட போக,
“ஏய்..என்னை தொடாதே..யாராவது என்னை காப்பாத்துங்க?.என்று பெரியவர் கத்தியதும்,
“சார்..ஏன் கத்துறீங்க என்னை உங்களுக்கு தெரியல? நான் தான் பொம்மி”என்று அந்த உருவம் சொன்னதும்.
“பொ…பொம்மியா..?” என்ற பெரியவரின் கழுத்தை சட்டென்று அந்த பெண் தன் கரங்களால் பிடித்ததும்,
“விடு.. விடு என்னை”என பெரியவர் அலறினார்.
“சார்..இந்த பிடிக்கே உங்களுக்கு வலிச்சா சின்ன பொண்ணு என்னை நீங்க என்னவெல்லாம் பண்ணீங்க, எனக்கு எப்படி வலிச்சு இருக்கும்” என்றவளை பார்த்து…
“யாராவது என்னை காப்பாத்துங்க?”என்று கத்திய ஸ்ரீகாந்த் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டு எழுந்து ஓட முயன்றவரின் காலில், இரும்பு பொருள் ஒன்று பறந்து வந்து விழுந்ததும்..
“அம்மா….” என்று அலறியவரின் கண்களில் வலியால் கண்ணீர் பெருகியது.
“அழு..இன்னும் சத்தமா அழணும் நீ..” என்ற பெண், தன் கோர பற்களால் பெரியவரின் கழுத்தை கடிக்க முற்பட்டவளை அவர் எட்டி உதைத்ததும், அந்த பெண் இரண்டடி தள்ளி விழுந்தவள் மீண்டும் தன் விரலை சுண்டியதும், ஸ்ரீகாந்த்தின் பின் தலையில் கனமான பொருள் பறந்து வந்து விழுந்த வேகத்தில் ஸ்ரீகாந்த் அரை மயக்கத்தில் அதே இடத்தில் விழுந்தவர் அருகே….
“ஓடி விளையாடு பாப்பா…” என்ற பாடலை பாடிக்கொண்டே வெள்ளை நிற ஆடையில் கண்கள் எல்லாம் விரிந்த நிலையில் “சார்..என்னை ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுங்க சார்… ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுடா ஏன் அப்படி பண்ண?”என்ற பெண் மேலும் தன் விரலை சுண்டிய நொடியில்,
பெரியவர் தலைக்கு மேல் தொங்கிய அழகிய மின் விளக்கு அவர் தலையை நோக்கி கீழே விழும் சமயம் “என்னை ஒண்ணும் பண்ணிடாத..”என்று ஸ்ரீகாந்த் கத்தியதும்..
“ஏங்க… ஏங்க கதவை திறங்க” என்ற குரல் வாசலில் இருந்து கேட்டது.
“காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க” என்று கதறிய பெரியவர் கழுத்தில் அந்த பெண் தன் காலை வைத்தவள்,
“வலிக்குதா சார்.. எனக்கும் இப்படி தான் வலிச்சுது.”என்ற பெண்ணை பார்த்து…
“நீ யாரு?.பொம்மிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?” என்ற பெரியவரின் கண் எதிரே
“நான் தான் பொம்மி..நீ கொலை பண்ண பொம்மி நான் தான்…. பதினைந்து வருஷமா உன்னோட வீட்ல உனக்காகவே காத்துகிட்டு இருக்கேன் ” என்று ஆக்ரோஷமாக கத்திய பெண் ஸ்ரீகாந்த்தின் கழுத்தை நெரிக்க,
“என்னை விட்டுடு.. என்னை காப்பாத்துங்க” என்று மீண்டும் பெரியவர் கதறும் சத்தம் கேட்டு,
“ஏங்க கதவை திறங்க” என்று அவரின் மனைவி தேவகியின் குரலை கேட்டு அந்த வீட்டின் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் “அம்மா என்னாச்சு?” என்ற தேவகியின் மகன் மாறன் அங்கே வந்து சேர்ந்தான்.
“மாறா..உங்க அப்பா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் கேட்குது மாறா” என்ற தன் அன்னையின் பதற்றத்தை பார்த்து மாறன் அந்த அறையின் கதவை எட்டி உதைத்த வேகத்தில் ஸ்ரீகாந்த் கண் எதிரே இருந்த பெண்ணின் உருவம் அங்கிருந்து மறைந்ததை பார்த்தப்படி பெரியவர் முழு மயக்கத்திற்கு சென்றார்.
“ஐயோ..!! என்ன…ங்க” என்று ஸ்ரீகாந்தின் நிலைமையை பார்த்து அவர் மனைவி பதற “அப்பா அப்பா” என்ற மாறன் தரையில் சுயநினைவின்றி கிடந்தவரை தூக்கி கட்டிலில் கிடத்தி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.
“மாறா..அப்பாவை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போலாம்” என்று தேவகி சொன்னதும், மாறன் அவனின் காரில் ஸ்ரீகாந்தை தூக்கிக்கொண்டு தேவகியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
ஸ்ரீகாந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருக்க, “மாறா அவருக்கு ஒண்ணும் ஆகாது தானே “என்ற தன் அன்னையின் கண்ணீரை துடைத்தவன் “அழாதீங்க அம்மா” என்று ஆறுதல் சொன்னான்.
ஸ்ரீகாந்த்தின் வயது அறுபது, ஓய்வு பெற்ற பள்ளி வாத்தியார். கடந்த சில வருடங்களாக தேவகியுடன் கோவையில் தங்கி இருந்தவர் வருடத்திற்கு ஒரு முறையேனும் தேவகியுடன் சென்னைக்கு தன் பூர்வீக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் பதினைந்து வருடங்களாக சென்னைக்கு வராத ஸ்ரீகாந்த் நேற்றைய தினம் தான் தங்களின் பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளார்.
தேவகி ஸ்ரீகாந்தின் ஒரே மகன் மாறன். மாறன் அவனின் பதினைந்து வயதில் இருந்தே சென்னையில் தனியார் விடுதியில் தங்கி படித்தவன் அவனின் இருபதாவது வயதில் இருந்து தன் பூர்வீக வீட்டில் தனியாக தான் வசித்து வருகின்றான்.காவல்துறை அதிகாரியாக இருக்கும் மாறனுக்கு அவனுடன் படித்த சிறு வயது தோழி மருத்துவர் சைத்ரா மீது காதல் ஏற்பட்டதால் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை பேசி முடிப்பதற்காக தான் மாறனின் பெற்றோர்கள் தனது பூர்வீக இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.
“இத்தனை வருடம் கடந்தும் உன் அப்பாவுக்கு இங்க வர இஷ்டமே இல்ல மாறா. நான் தான் உன் கல்யாணத்த பற்றி பேச அவரை வற்புறுத்தி அழைத்து வந்தேன்” என்று தேவகி கண்கள் கலங்க..
“ஆன்ட்டி.”என்று தேவகியை அழைத்தபடி இவர்களை நோக்கி நடந்து வந்தாள் மருத்துவர் சைத்ரா.
“சைத்ரா..அப்பாவுக்கு என்னாச்சு?”என்று மாறன் கேட்க..
“அங்கிள் மயக்கமா இருக்காரு. உடம்பெல்லாம் அடிபட்டு இருக்கு…ஒரு வேள கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டாரா? ” என்று சைத்ரா கேட்டாள்.
“நானும் அதான் நினைக்கிறேன், நாங்க பார்க்கும் போது அவரு கீழே விழுந்து கிடந்தாரு”என்று கண்ணீருடன் தேவகி சொன்னதும்.
“நான் ட்ரீட்மென்ட் தந்து இருக்கேன்.நீங்க அழாதீங்க ஆன்ட்டி.” என்ற Dr. சைத்ராவை நோக்கி அவளின் உடன் பிறந்த அண்ணன் திரைப்பட துறையில் பணியாற்றும் சத்ரியன் விரைந்து வந்தான்.
“மச்சான் அங்கிளுக்கு என்னடா ஆச்சு..?” என்று சத்ரியன் கேட்க..
“தெரியல மச்சான்..அவரோட ரூம்ல இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சத்தம் வந்துச்சு… நான் ரூம் கதவை எட்டி உதைச்சு உள்ள போய் பார்த்த போது அப்பா மயக்கத்துல இருந்தாரு.”என்ற மாறனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு அவனின் அன்னை கண்கள் கலங்கினார்.
“அம்மா அழாதீங்க, அப்பாவை சைத்ரா பார்த்துப்பாள்.”என்று மாறன் சொல்லும் தருணம்….
“டாக்டர், Mr.ஸ்ரீகாந்த் கண் முழிச்சிட்டாரு” என்று செவிலியர் சொல்ல, சைத்ரா வேகமாக சிகிச்சை அறைக்குள் நுழைந்தவளை பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள்.
சில நொடிகள் ஸ்ரீகாந்தை பரிசோதித்த சைத்ரா “BP அதிகமா இருக்கு, என்ன அங்கிள் கெட்ட கனவு எதாவது வந்துச்சா? ” என்று கேட்க.
“க.. கனவா..”என்று குழம்பி போனார் ஸ்ரீகாந்த்.
“என்னங்க… என்னாச்சு உங்களுக்கு?” என்று தேவகி கண்கள் கலங்க..
“சைத்ரா, அப்பாவை வீட்டுக்கு எப்போ அழைச்சிட்டு போகலாம்” என்று கேட்டான் மாறன்.
“இப்ப கூட அழைச்சிட்டு போகலாம் மாறா…. காயத்துக்கு மருந்து எழுதி தரேன். எனக்கும் டியூட்டி முடிஞ்சிடுச்சு. அண்ணன் கூட நானும் உங்க வீட்டுக்கு வரேன்.” என்று சைத்ரா சொல்ல இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி ஸ்ரீகாந்தின் பூர்வீக வீட்டுக்கு சென்றார்கள்.
“மாறா..நீ அப்பாவை ரூம்ல படுக்க வை. நான் அவருக்கு சாப்பாடு ரெடி பண்ணுறேன்.” என்ற தேவகி, “இவருக்கு திடீர்னு என்னாச்சு முதல்ல நம்ம குளிச்சிட்டு பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரணும்.”என்று எண்ணியவாரு சமையலறைக்குள் செல்ல “அங்கிள் நல்லா ரெஸ்ட் எடுங்க. நாங்க இங்க தான் இருக்கோம்.” என்றான் சத்ரியன்.
தன் அறைக்குள் நுழைந்த ஸ்ரீகாந்த் கண்ணுக்கு அந்த இடமே சுத்தமாக இருப்பதை பார்த்தவர் பயத்தில் கண்கள் மூடாமல் இருந்தவரை “ரெஸ்ட் எடுங்க” என்று மாறன் சொன்னதும், “மாறா..இந்த ரூம்ல.. இந்த ரூம்ல பேய் இருக்கு மாறா” என்றார் ஸ்ரீகாந்த்.
“என்னங்க நீங்க பேய், பூதம்னு உளறிக்கிட்டு இருக்கீங்க. டேய் மாறா அடுப்புல கஞ்சி வச்சிருக்கேன். அப்பா கேக்கும் போது ஊத்தி கொடுத்துடு. நான் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேன்” என்ற தேவகி தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் கோவிலுக்கு செல்ல
மாறன், சைத்ரா, சத்ரியன் என்று மூவரும் ஸ்ரீகாந்த் இருக்கும் அறைக்கு வெளியே அமர்ந்து இருந்தார்கள்.
மீண்டும் “சார்….” என்ற குரலில் ஸ்ரீகாந்த் கண் விழித்து பார்க்க, அவர் தலைக்கு மேலே வெள்ளை ஆடையில் அதே பெண் தலைகீழாக மின் விசிறியில் தொங்கிய நிலையில் இருக்க…
“மாறா…. மாறா” என்று கட்டிலில் இருந்து எழுந்து வெளியே ஓடி வந்தார் ஸ்ரீகாந்த்.
“அங்கிள் என்னாச்சு அங்கிள்?”என்று சைத்ரா பதற்றத்துடன் கேட்க..
“உள்ள.. உள்ள பேய்” என்று ஸ்ரீகாந்த் அலறியதும்.
“என்ன பேயா? “என்று கேட்டுக்கொண்டே சத்ரியன் அறைக்குள் நுழைய
“ஆமா… ஆமா பேய்” என்ற ஸ்ரீகாந்த் கண் எதிரே அவர் கட்டிலில் குத்த வைத்து அமர்ந்து இருந்த பெண்ணின் உருவம்
“நான் பேய் இல்ல சார்… நான் தான் பொம்மி.. உங்களை கொலை பண்ண போற பொம்மி” என்று கண்களை உருட்டி தலையை நான்கு பக்கமும் அசைத்து அந்த உருவம் பேசியதை கேட்டு ” மாறா..பொம்மி மாறா” என்ற ஸ்ரீகாந்த் தன் மகனின் பின்னே ஒளிந்து கொண்டார்.
“என்ன உளறீங்க. எந்த பொம்மி?” என்று புரியாமல் மாறன் தன் தந்தையை கேட்க…
“பொ..பொம்மி மாறா..நம்ம வீட்டுக்கு பாடம் கத்துக்க வந்த பொண்ணு பொம்மி டா.. அவ..அவ என்னை கொலை பண்ண வந்து இருக்கா மாறா..என்னை காப்பாத்து மாறா.. நேத்து நைட் கூட இவ தான் என் கழுத்தை நெரித்து சாகடிக்க பார்த்தா மாறா. இவ பேயா வந்து என்னை சாகடிக்க பாக்குறாள் மாறா” என்று ஸ்ரீகாந்த் பயத்தில் நடுக்கத்துடன் கூறினார்.
“ப்ச்…இங்க யாரு இருக்காங்க. எங்க கண்ணுக்கு யாருமே தெரியலையே” என்று மாறன் சொல்ல,
“சார்…. உங்க கண்ணை தவிர வேற யார் கண்ணுக்கும் நான் தெரிய மாட்டேன் சார். நேரமாகுது சீக்கிரம் என்கூட வாங்க சார்..” என்று கரகரத்த குரலில் அந்த பெண் கட்டிலில் அமர்ந்து பேசுபவளை பார்த்து…
ஸ்ரீகாந்த் நெஞ்சை பிடித்துக்கொண்டு
“எ.. என்னை ஒண்ணும் பண்ணிடாதே பொம்மி, என்னை ஒண்ணும் பண்ணிடாதே” என்று அலறினார்.
“அங்கிள் ஏன்? இப்படி பைத்தியம் மாதிரி பேசுறீங்க. இங்க நம்மள தவற யாருமே இல்ல. அதுவும் இல்லாம பொம்மி தான் சின்ன வயசுலேயே உங்க வீட்டு கிணத்துல கால் தவறி விழுந்து இறந்துட்டாளே” என்று சத்ரியன் சொன்னதும்.
“ஆமா பொம்மி இறந்துட்டா தான், ஆனா அவ இப்போ என்னை பழி வாங்க பேயா வந்து இருக்காள்” என்ற ஸ்ரீகாந்த் கண்ணை பார்த்து அந்த பெண்ணின் உருவம்..
“ஆமா பழி வாங்க தான் வந்து இருக்கேன்” என்று கர்ஜித்ததும்..
“கேட்டியா…!? என்னை பழி வாங்க தான் வந்து இருக்காள் ” என்று பெரியவர் பயத்தில் கதறினார்.
“அங்கிள்,செத்து போன பொம்மி,ஏன்? உங்கள பழி வாங்கணும்” என்று சைத்ரா கேட்க..
“ஏன்?னா நான் தான் பொம்மியை கொலை பண்ணேன்” என்று பயத்தில் உண்மையை சொன்ன ஸ்ரீகாந்தை பார்த்து, கட்டில் மேல் அமர்ந்து இருந்த உருவம் இதழ் விரித்து சிரிக்கும் போது அவளின் வெடித்த இதழில் இருந்து ரத்தம் கசிந்தது.
“என்ன சொல்றீங்க, நீங்க சாகடிச்சீங்களா?” என்று சத்ரியன் புருவம் உயர்த்தி கோவமாக கேட்டதும்.
“ஆமா நான் தான் சாகடிச்சேன். என்கிட்ட பாடம் படிக்க வந்த பொம்மியை நான் தான் சாகடிச்சு கிணத்துல தூக்கி வீசிட்டு, அவ கால் தடுக்கி கிணத்துக்குள்ள விழுந்ததா எல்லோரையும் நம்ப வச்சேன். அதனால தான் என்னை பழி வாங்க இப்போ அந்த பொம்மி பேயா வந்து இருக்காள்” என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாக உண்மையை போட்டு உடைக்க….கட்டிலில் அமர்ந்து இருந்த பெண் ஆக்ரோஷமாக சிரித்த தருணம்,
ஸ்ரீகாந்த் முகத்தில் காரி உமிழ்ந்து
“எனக்கு தெரியும் டா, பொம்மியை கொலை பண்ணது நீ தான்னு எனக்கு அன்னைக்கே தெரியும்.” என்று கண்களில் கண்ணீரோடு கோபமாக பேசிய தன் மகன் மாறனின் வார்த்தையை கேட்டு பேய் அறைந்ததை போல பெரியவர் நின்று இருக்க..
அவர் எதிரே தன் சட்டையில் சொருகி இருந்த கேமரா பேனாவை எடுத்து நீட்டிய சத்ரியன் “எங்க தோழி பொம்மி மரணத்துக்கு நியாயம் கிடைக்க தான் நாங்க இவ்ளோ பெரிய ட்ராமா போட்டோம் அங்கிள்” என்று சொன்னான்.
“என்ன ட்ராமாவா?” என்று ஸ்ரீகாந்த் புரியாமல் கேட்க..
“ஆமா அங்கிள் ட்ராமா தான். சின்ன வயசுல இந்த வீட்டுக்கு பாடம் கத்துக்க நான், என் அண்ணன், எங்க கூட படிச்ச பொம்மின்னு எல்லாரும் உங்களை நம்பி தானே வந்தோம். ஆனா வந்த இடத்துல நாங்க எல்லோரும் உங்க பையன் கூட கண்ணாம்பூச்சி விளையாடும் போது… பொம்மி உங்க ரூம்ல தான் அங்கிள் வந்து மறைஞ்சிகிட்டா. நாங்க அவளை தேடி வரும் போது…நீங்க அவ அங்க இல்லைன்னு சொல்லிட்டீங்க.நாங்களும் அவளை தேடி வேற பக்கம் போயிட்டோம்.ஆனா நீங்க அவளை என்ன பண்ணீங்கன்னு தெரியல.கொஞ்ச நேரத்துல பொம்மி கிணத்துல விழுந்தட்டதா நீங்க கத்தியதும் இந்த ஊரே நம்புன மாதிரி நாங்களும் பொம்மி விளையாடும் போது கால் தவறி உள்ள விழுந்துட்டதா நினைச்சோம். ஆனா நீங்க தான் அவளை கிணத்துல தூக்கி வீசியதை இதோ உங்க பையன் மாறன் அப்பவே நேர்ல பார்த்ததா சொன்னாரு” என்று சைத்ரா சொன்னாள்.
“படிக்க வந்த பொண்ணை சின்ன பிள்ளைனு கூட பார்க்காம உன்னோட இச்சைக்கு அவளை நீ வதைத்து நாசம் பண்ணி கசக்கி கிணத்துல தூக்கி வீசியதை நான் பார்த்த ஒரே காரணத்தால பெத்த பிள்ளைனு கூட பார்க்காம இந்த விஷயத்தை வெளிய சொன்னால் என்னையும் கிணத்துல தள்ளிடுவேன்னு நீ மிரட்டுனியே அதையெல்லாம் நான் மறக்கல…
உனக்கு பிள்ளையா பிறந்த பாவத்துக்கு எங்க தோழி பொம்மியை போல பல மரணத்துக்கு நியாயம் கிடைக்கணும்னு நான் முடிவு பண்ணி தான் நான் போலீஸ்க்கே படிச்சேன். பொம்மிக்கு பெத்தவங்க இல்லாததால, அவ பாட்டி நீ சொன்ன பொய்யை நம்பி பொம்மியோட கொலையை விபத்துனு நம்பிட்டாங்க… ஆனா எங்க தோழி பொம்மியை என் அப்பன் நீ தான் வன்புணர்வு செய்து சாகடிச்சன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
அந்த வயசுல நீ பண்ண கேவலத்தை சொல்ல எனக்கு தைரியமோ சாட்சியோ இல்லை. அதான் இப்போ உன் வாயாலயே அந்த உண்மையை சொல்ல வச்சி உனக்கு நானே தண்டனை வாங்கி தரணும்னு முடிவு பண்ணி சத்ரியன் உதவியோடு துணை நடிகையை பேய் வேடம் போட்டு நேத்து நைட் உன் ரூம்ல பொம்மி பேயா உன்னை பழி வாங்க வந்த மாதிரி செட் பண்ணி நாங்களே மறைஞ்சு இருந்து பொருட்களை பறக்க வைத்து, இன்னைக்கு உன் வாயால நீ எங்க பொம்மியை கொலை பண்ணதை ஒத்துக்க வச்சிருக்கோம்.
இந்த ஒரே ஒரு வீடியோ ஆதாரம் போதும்.
உனக்கு கிடைக்க போற தண்டனை பொம்மிக்கு மட்டும் இல்ல… இந்த நாட்ல பிறந்த எத்தனையோ பெண் பிள்ளைகள் உன்னை மாதிரி காமவெறியர்களுக்கு இரையானதை தட்டி கேட்கும் விதமாக அமையும்.”என்ற மாறன் தன் தந்தை என்றும் பாராமல் ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்து ஸ்ரீகாந்த் வாயாலேயே அவர் செய்த கொலையை ஒத்துக்க வைத்தவனின் செயலில், சத்ரியன் மற்றும் சைத்ரா ஆகிய இருவரும் மாறனை பெருமிதமாக பார்த்தார்கள்.
“மாறா..அப்போ..அப்போ இது பேய் இல்லையா?நீங்க எல்லாம் சேர்ந்து என்கிட்ட ட்ராமா பண்ணீங்களா?” என்று ஸ்ரீகாந்த் கோவத்தில் கத்தியதும்.
“ஆமா..இவங்க பேய் இல்ல..இவங்க என் படத்துல நடிக்கிற துணை நடிகை” என்ற சத்ரியன், கட்டிலில் வெள்ளை ஆடையில் அமர்ந்து இருந்த பெண்ணின் அருகே சென்றவன்.
“நீங்க தத்ரூபமா பேயை போலவே நடிச்சீங்க. உங்களோட உதவியால தான் இவருக்கு இத்தனை வருடம் கடந்து தண்டனை கிடைக்க போகுது.உங்களுக்கு ரொம்ப நன்றி.
நீங்க போய் உங்க பேய் வேடத்தை அகற்றிடுங்க” என்ற சத்ரியனின் கைபேசி ஒலி எழுப்பியதும்”ஹலோ” என்றவனிடம்.
“சார் நீங்க பேய் வேடம் போட்டு நடிக்க ஒரு பொண்ணு வேணும்னு கேட்டீங்களே அவங்க நாளைக்கு உங்களை பார்க்க வரலாமானு கேக்குறாங்க” என்று சத்ரியனின் மேனேஜர் சொன்னதும்.
“என்ன?அப்போ நீ அனுப்பிய பொண்ணு இவங்க இல்லையா?”என்ற சத்ரியன் அவன் எதிரே ஆக்ரோஷமாக அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து “அப்போ யாரு நீ?” என்றவனின் கேள்விக்கு கட்டிலில் அமர்ந்து இருந்த பெண்ணின் உடல் முழுவதும் கருமையாக மங்க ஆரம்பித்து, அந்த பெண் சிறுமி பொம்மியின் உருவமாக மாறியவளின் கண்களில் வெறியோட்டம் தெரிய, காற்று திடீரென்று கடுமையாக வீச அங்குள்ள மின்சார விளக்குகள் மங்கலாக மின்னிக்கொண்டு இருக்க அந்த அறையில் உள்ள கண்ணாடி கீழே விழுந்து சிதறியதும்.
சிதறிய கண்ணாடி துண்டுகளில் பொம்மியின் வதனம் பல உருவங்களாக தெரிந்த நிலையில், அந்த உருவம் ஸ்ரீகாந்த்தை பார்த்து பல் இளித்து சிரித்ததும் ஸ்ரீகாந்த் நடுங்கிக்கொண்டே பின்னோக்கி சென்றவனை “சார்..”என்ற பொம்மியின் குரல் நான்கு திசையிலும் எதிரொலிக்க..
ஸ்ரீகாந்தின் கழுத்தை நின்ற இடத்தில் இருந்த படியே எட்டி பிடித்த பொம்மி,
“என் மரணத்துக்கு நானே நியாயம் தேடிப்பேன்”என்றவள் ஸ்ரீகாந்தின் கழுத்தை தன் பற்களால் கடித்து அவன் ரத்தத்தை உறிந்து அந்த அறையில் இருந்து
உயிரற்ற நிலையில் ஸ்ரீகாந்தின் சடலத்தை கையில் ஏந்தி பறந்து சென்று கிணற்றில் தூக்கி வீசிய பொம்மி தன் நண்பர்களை பார்த்து நன்றியோடு சிரித்த வண்ணமாக காற்றோடு மறைந்து போனாள்.
முற்றும்.
தொடராமல்.. தொடருவேன்.. ஜீனத் சபீஹா
சமையல் அறையிலிருந்து கடுகு உளுத்தம் பருப்புடன் வேர்க்கடலையும், கறிவேப்பிலையும் நல்லெண்ணையில் வறுபடும் மணம் வீடு எங்கும் நிறைந்து இருந்தது. வரவேற்பறை சோபாவில் தன் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்திக் கொண்டு சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் நடந்து ஒவ்வொரு பொருட்களாக வீட்டின் நடுவே வைத்துக் கொண்டிருந்த தாயை பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமதி.
“ஏன்டி மது.? பையன மடியில வச்சுக்கிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கியே வந்து கூட மாட ஒத்தாசை பண்றியா.?” என மகளைக் கேட்டபடியே சமையல் அறைக்கு மீண்டும் சென்றார் கோமதி.
“இப்போ எதுக்குமா திடீர்னு குலதெய்வ கோயிலுக்குப் போகணும்னு அடம் பிடிக்கிற.?” “என்ன திடீர்னு சொல்றனா.? ரொம்ப நாளா போகணும் தான் சொல்லிட்டு இருக்கேன். உனக்குக் கல்யாணம் ஆன புதுசுல போனது. குழந்தை பிறந்ததுக்கும் போகல. இப்போ குழந்தைக்கு ரெண்டு வயசு முடிய போகுது. என்னவோ தட்டிக்கிட்டே போகுது.? போக முடியாம. அது தான் இந்த முறை கண்டிப்பா போயிறணும்னு முடிவு பண்ணிட்டேன்.”
“சரி, அதுக்கு எதுக்கு இவ்வளவு சமைச்சுக்கிட்டு இருக்கீங்க.?”
“அப்ப, சாப்பாட்டுக்கு என்ன செய்றது.? உங்க அக்கா, உங்க அத்தான் அவளோட ரெண்டு பொண்ணுங்க அவங்க மாமனார், மாமியார் வராங்க. அதோட என் தம்பி வரான் அவன் குடும்பத்தில் மூணு பேரு. இத்தனை பேருக்குச் சாப்பாடு வேணும்ல.”
“அதுக்கு அவங்க எல்லாருக்கும் நீதான் செய்யணுமா.? அவங்க யாரும் செஞ்சு கொண்டு வரமாட்டாங்களா.?”
“என் தம்பி கேட்கத் தான்டி செஞ்சான். நான்தான் சமையல் நான் பாத்துக்கிறேன். தின்பண்டம் மட்டும் நீ வாங்கிட்டு வா என்று சொல்லி இருக்கேன். அந்தக் காட்டுக்குள்ள போனா கடை எதுவும் இருக்காது. அதனால் தேவையானது எல்லாம் அவன் வாங்கிட்டு வருவான். நீ வீணா வாய் பேசி அரட்டை அடிக்காம எந்திரிச்சு வந்து இதெல்லாம் கொஞ்சம் எடுத்து வைப்பதற்கு உதவி செய். உங்க அப்பா வந்தவுடனே எல்லாத்தையும் கார்ல ஏத்த சொல்லலாம்…”
“ஏன் அத்தை மாமா வர வரைக்கும் வெயிட் பண்றீங்க.? நம்ம மதுவே எல்லாத்தையும் தூக்கிடுவாளே. அவ கிட்டயே சொல்லுங்க.”
“என்னது அவளே தூக்குவாளா? இவ்வளவு வெயிட்ட…?”
“அட! ஆமா அத்தை. சிலிண்டரையே தனியா தூக்கிடுவா. தண்ணி கேன அசால்டா தூக்கிடுவா.”
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க.? இரண்டு தண்ணி பாட்டிலை சேர்ந்த போலத் தூக்கினாலே கை வலிக்குதுன்னு சொல்றவ. அஞ்சு லிட்டர் தண்ணிக் கேனை தூக்குறாளா.? அதிசயமா தான் இருக்கு.” என்று நாடியில் கை வைத்து மகளை ஆச்சரியமாகப் பார்த்தபடி கேட்க.
“முழு சிலிண்டர் மறந்துட்டீங்களே.” “என்னடி சொல்றாரு மாப்பிள.?”
“அம்மா அவர் ஏதாவது உளறிட்டு இருப்பாரு. நீங்கப் போய் வேலையைப் பாருங்க.” என்றபடி கணவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவளை பார்த்தவன்,
“உண்மைய தானடி சொன்னேன். நல்லதுக்கே காலம் இல்லை. உன்ன பத்தி பெருமையா தானே சொன்னேன்.” என்றப்படி அவள் மடியில் இருந்த மகனைத் தூக்கிக் கொண்டு
“நீ வாச்செல்லம் நம்ம வெளியில போலாம்.” என்ற படியே மாமியார் அடுக்கி வைத்திருந்த உணவு பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு வெளியேறினான் காரில் வைப்பதற்காக.
போகிற வழியில் இவர்களோடு இணைந்து கொண்டார்கள் மதுமதியின் அக்கா குடும்பத்தினரும் மாமா குடும்பத்தினரும். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியின் நடுவில் இருந்தது இவர்களின் குலதெய்வ கோயில்.
அடர்ந்த காட்டுக்கு நடுவே மூன்று கார்களின் அணிவகுத்து சென்று கொண்டிருக்க.
“இப்படி நடு காட்டுல தான் குலதெய்வ கோயிலைக் கொண்டு வந்து வைக்கணுமா.?” எனப் புலம்பிக்கொண்டே வந்தாள் மதுமிதா.
“அமைதியா தான் வாயேன்டி.” என்ற அன்னையின் அதட்டலில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.அவரை எதிர்த்து எதுவும் பேசாமல். ஆனால் வாய்க்குள் ஏதோ முனங்கியவளாக.
இவர்கள் சென்று இறங்கிய நேரம் கோமதி கொடுத்த தகவலின் படி அங்கு வந்திருந்த பூசாரி ஏற்கனவே அனைத்தையும் ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்திருந்தார்.
வந்தவர்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓரமாக வைத்துவிட்டு பூஜைக்குத் தயாராக, சிறுமண்டபம் போல அமைந்திருந்த கோயிலின் முன் பயபக்தியுடன் நிற்க. கற்பூரத்தை ஏற்றித் தீபாராதனை காட்டியப்படியே மந்திரங்களைக் கூற ஆரம்பித்தார் பூசாரி. மகனைக் கையில் வைத்தபடி கணவனோடு நின்றிருந்த மதுமதி உடலை ஒருவாரு குலுக்கியபடி,
“இஇஇயியியியியி.” என்றவாறு தொண்டை அடைக்க ஒரு விதமான உறுமல் குரல் எழுப்பி, கண்கள் இரண்டும் மேலே சொருக வானத்தை நிமிர்ந்து பார்த்தபடி உடலை முறுக்கிக் கொண்டு போக. அவளின் அருகில் நின்றிருந்த அவள் கணவன் பரத், திடீரென்று அவளின் செயலில் அதிர்ந்து நடுங்கியவனாக அவள் கையில் இருந்த குழந்தையை வேகமாக வாங்கிக் கொண்டான்.
அன்னையின் திடீர் உச்சஸ்தான குரலில் குழந்தையும் பயந்து வீறிட்டு அழுக ஆரம்பித்தது. அனைவரும் ஒன்றும் புரியாமல் பயந்தபடி அவளை விட்டுத் தள்ளி நின்று அவளையே பார்க்க. தன் இரு கைக்கொண்டு தன் கழுத்தை தானே நெரித்தவள் “ஹக், ஹக்.” என்று இருமியப்படியே தன் கழுத்தை பலம் கொண்ட வரை நெரித்தாள். மகள் செய்யும் விபரீதம் உணர்ந்தவராக வேகமாக அவளின் அருகில் வந்த மதுமதியின் தந்தை அவள் கைகளைக் கழுத்தை வீட்டு நகர்த்த முயற்சிக்கும்போதே சூழ்நிலை புரிந்து தன் கையில் இருந்த குழந்தையை அருகில் நின்றிருந்த தன் அண்ணியிடம் கொடுத்துவிட்டு வேகமாக மனைவியின் அருகில் வந்தவன் அவள் கைகளைக் கழுத்திலிருந்து எடுக்க மாமனாருடன் சேர்ந்து முயற்சித்தான் பரத்.
இருவரையும் ஒரே உதராக உதறித் தள்ளியவள். அவர்களைப் பார்த்துச் செய்கையால் தன் கைகளைக் கொண்டு கழுத்தை தானே அழுத்திக்கொண்டு ஏதோ உத்திரத்தை பார்த்துக் கூற முயன்றாள். அவள் கூறுவது யாருக்கும் புரியவே இல்லை. அனைவரையும் விரல் விட்டுக் காட்டியவள் பின் தன் உடலைத் தானே தொட்டு காட்டி மறுப்பாகத் தலை அசைத்து இரு கைகளையும் ஆட்டி ஆட்டி ஏதோ கூறினாள். பின்பு அவள் தலை முடியை யாரோ பிடித்து இழப்பது போல இங்கும் அங்கும் சுழன்று நகர்ந்தவள், பின் கர்ப்பகிரகத்தை உற்று நோக்கியவள். ஷாக் அடித்தது போல உடல் தூக்கி போட, வேகமாகத் திரும்பி ஓட ஆரம்பித்தாள். அவளின் செய்கையில் பதறிப் பூசாரியைப் பார்த்த பரத்திடம் அவளைப் பின்பற்றிச் செல்லுமாறு கூறினார் பூசாரி.
அவளோடு மதுமதியின் தந்தையும் கூடவே அக்காள் கணவரும் செல்லச் சிறிது தூரம் வேகமாக ஒரு ஆண் மகனைப் போல் ஓடிச் சென்றவள். அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் முன்பு சென்று நின்றவள் “ஹீ..ஹா…ஹக்.” என்று விசித்திர குரல் எழுப்பியவள். பின், மயங்கிச் சரி ஆரம்பித்தாள். அவள் கீழே விழாமல் கையில் ஏந்தி கொண்டான் பரத்.
சில நொடிகள் கண்மூடி இருந்தவள் டக் என்ற கண்ணைத் திறந்து பார்க்க ஒரு நிமிடம் பக் என்ற ஆனது பரத்திற்கு.
“என்னங்க பண்றீங்க.? கோயிலுக்கு வந்த நேரத்துல. எல்லாரும் இருக்காங்க. நீங்கப் பாட்டுக்கு என்னைத் தூக்கி வச்சு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.” என்று கோபத்துடன் கேட்ட மனைவியை அதிர்வோடு பார்த்தவனுக்கு
“எனக்கு இது தேவை தான்டி.” என்ற சொல் தான் வாயில் இருந்து வந்தது.
“ச்சே எல்லாரும் இருக்கும்போது என்னை மட்டும் எப்படி தனியா தள்ளிட்டு வந்தீங்க.?” என்று கேட்டபடி அவனை நீங்கி நின்றவள். சற்று தொலைவில் தந்தையும் அத்தானும் இருப்பதை பார்த்துவிட்டு,
“பாருங்க நம்மள தேடி அவங்களே வந்துட்டாங்க.” என்றபடி
“ஒன்னும் இல்லப்பா, சும்மா காத்து வாங்க இந்தப் பக்கம் வந்தோம்.” என்று தந்தையை பார்த்துக் கூறியபடியே அனைவரும் நின்றிருந்த இடத்திற்கு சென்றாள் வேகமான எட்டுக்களை வைத்த படி.
அதிர்வோடு அவனைப் பார்த்து “என்ன மாப்ள இது.?” என்று கேட்ட மாமனாரிடம்,
“அவளுக்கு எதுவுமே தெரியல மாமா.?” என்று கூறிவிட்டு அவளைப் பின்தொடர்ந்து சென்றார்கள் மூவரும். அனைவரோடும் சென்று நின்றவளை சற்று பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.
அவளிடம் எதுவும் கேட்க வேண்டாமெனச் செய்கையில் கூறிய பூசாரி தன் பூஜைகளை முடித்துவிட்டு அனைவருக்கும் பிரசாதத்தை கொடுத்து முடித்தவர்.
“குழந்தை ரொம்ப நேரமா அழுதுட்டு இருக்கான் அவனைச் சமாதானம் செய்யுமா.” என்ற பூசாரியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவளாகத் தன் குழந்தையை வாங்கியவள் தன் அக்காள் மகள் இருவரையும் உடன் அழைக்க முதலில் பயந்து இவளோடு வர மறுத்தவர்களை கேள்வியாகப் பார்த்தவள்
“என்ன ஆச்சு.? உங்க ரெண்டு பேருக்கும். வாங்க நம்ம அந்தப் பக்கமா போலாம். அங்க நிறைய மாங்கா மரம் இருந்தது. போய்ப் பறிக்கலாம்.” என ஆசை காட்ட. அவர்களும் தாயின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டு அவள் கூடச் சென்றார்கள் சிறிது பயத்துடன்.
என்ன ஆச்சு சாமி.? ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கிட்டா.? எங்க பொண்ணு.” எனக் கோமதி பயந்து கொண்டே கேட்க.
“நீங்கத் தான் சொல்லணும்.அவங்க உங்க கூடத் தானே இருக்காங்க. இந்த மாதிரிச் செயல்களை எதுவும் நீங்கப் பாக்கலையா.?” என்ற பூசாரியின் கேள்விக்கு
“இல்ல சாமி. அவ எங்க கூட இல்ல. சென்னையில தான் மாப்பிள்ளைக்கு வேலை. அவங்க ரெண்டு பேரும் அங்க தான் இருக்காங்க.”
“அப்ப நீங்கத் தான் சொல்லணும். அவங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தது சமீபமா.?” எனப் பரத்தை பார்த்துக் கேட்க.
“சமீபமா எனக்கு எதுவும் வித்தியாசம் தெரியல. ஆனா எங்களுக்குத் திருமணம் முடிந்து ஆறு மாசம் கழிச்சு, எல்லாத்துக்கும் பயந்துட்டு இருந்தவ. ரொம்ப தைரியமா இருக்க ஆரம்பிச்சா. வேலையிலிருந்து நான் வரத் தாமதமான கூட “எப்ப வருவீங்கன்னு.?” பத்து போன் பண்றவ அதுக்கப்புறம் ரொம்ப தைரியமா வீட்ல இருக்க ஆரம்பிச்சா. வேற பெருசா அவகிட்ட எந்த மாற்றமும் இல்லை.” என்று கூறிக் கொண்டிருந்தவனை இடைமறித்த கோமதி,
மாப்பிள்ளை, நீங்கக் காலைல சிலிண்டர், தண்ணி கேன்னு ஏதோ சொன்னீங்களே.”
“ஹான், ஆமா எப்பவுமே சிலிண்டர் மாத்தணும்னா தண்ணி கேன் கவுக்கணும்னா என்னைத் தான் கூப்பிடவா. கொஞ்ச நாளா என்னை எதுக்குமே கூப்பிடல அப்போ ஒரு நாள் டிவி பாத்துட்டு இருந்தேன். பின்னாடி ஏதோ சத்தம் கேட்டது என்று திரும்பிப் பார்த்தேன். அப்பத் தண்ணி கேனை அசால்டா தூக்கி தோள் மேல வெச்சிகிட்டு நடந்து போனா.
“ஹேய் என்ன பண்றன்னு.” நான் அதிர்ச்சியாகக் கேட்டேன்.
“தண்ணி காலி ஆயிடுச்சு அதான் கேன் எடுத்துட்டு போறேன்.” என்று அசால்டா சொல்லிட்டு போனா. எனக்கே ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல சரி நம்ம வீட்ல நல்ல சாப்பிட்டு அவளுக்குத் தெம்பு வந்திருச்சு போலன்னு நினைத்தேன்.” என்று தங்கள் வீட்டில் நடந்தேறிய செயல்களைக் கூறிக் கொண்டிருந்தான் பரத்.
“உங்களுக்குள்ள தாம்பத்திய உறவுலாம் எப்படி இருக்கு.?” என்ற பூசாரியின் கேள்விக்குச் சங்கடமாக அனைவரையும் ஒரு முறை பார்த்தவன்
“அதுல எல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா சில நேரம் ரொம்ப அழுத்தமா இறுக்கி அவ என்னைப் பிடிக்கும்போது, எனக்கே ரொம்ப வலிச்சிருக்கு. ஏதோ ஆசையில அப்படி பிடிக்கிறாள் போலன்னு நான் நெனச்சிகிட்டேன்.” எனக் கூற
“அப்படி பிடிச்சது அவங்க இல்ல. அவங்களுக்குள்ள இருந்த ஒரு ஆண் ஆத்மா.” என்ற பூசாரியின் பதிலில் அரண்டு போனவன்
“ஐயையோ.! அப்போ இதுவரைக்கும் நான் ஒரு பேய் கூடவா குடும்பம் நடத்தி இருக்கேன்.” என்று கேட்க அருகில் நின்றிருந்த அவனின் சகலைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“நீதான் யா நெஜமாவே பேய் கூடக் குடித்தனம் பண்ணிருக்கே.” என்று தன்னை மீறிக் கூறியவன் சிரித்து விடப் பயந்திருந்தவர்கள் அவனை முறைக்க. ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
“முதல் ஆறு மாசம் அவங்க நல்லா தான் இருந்திருக்காங்க அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு நீங்க வேற எங்கேயாவது போனீங்களா.?” என்ற பூசாரியின் கேள்விக்குச் சிறிது நேரம் யோசித்த பரத்.
“எங்களுக்குத் திருமணமாகி ஆறு மாதம் கழித்து பிரண்ட்ஸோட காந்தநல்லூர்க்கு டூர் போனோம். அப்போ ஒரு முறை இந்த மாதிரி அடர்ந்த காட்டில் பயணம் பண்ணும்போது நாங்க போன வேன் சகதில மாட்டிக்கிச்சு. அப்போ அந்த வேனை சேற்றிலிருந்து எடுப்பதற்காக எல்லாரையும் கீழ இறங்க சொன்னாரு டிரைவர். நாங்க எல்லாம் சேர்ந்து தான் அந்தச் சகதியிலிருந்து வேனை வெளியில் எடுத்தோம். அதுக்கப்புறம் உடனே அங்கிருந்து கிளம்பிட்டோம்.”என்றான் அன்று நடந்தவைகளை நினைவு கூர்ந்தவனாக.
“அந்த நேரத்துல மதுமதியோட செயல்பாடுகள் எப்படி இருந்துச்சு.? அவ என்ன பண்ணிட்டு இருந்தா.?” “வேனை எடுக்கிற பரபரப்புல நான் அவளைக் கவனிக்கல. ஆனா கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு பழைய இடிஞ்ச வீட்டுக்கு முன்னாடி இவ நின்னுட்டு இருக்குறத பாத்து என் நண்பனோட மனைவி சப்தமிட்டு அழைத்தும் வராமல் இருப்பதை பார்த்து, அவளின் அருகில் சென்று கையைப் பிடித்து இழுத்து கூட்டிட்டு வந்தாங்க. ஏன் நீங்க மட்டும் அங்க தனியா போனீங்க.? என அவங்க இவளைப் பார்த்துக் கேட்டது அப்போ எனக்கு வித்தியாசமா தெரியல. இப்ப யோசிச்சா அது தான் காரணமா இருக்கும்னு தோணுது.” என்று யோசனையாகக் கூற
“ஆமாம் அதுதான் காரணம். அங்குப் பிடித்தது தான் இது.” என்றார் பூசாரியும்.
“அந்த வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஒரு ஆணின் ஆன்மா இவளோடு வந்திருக்கிறது.” எனக் கூற அனைவருமே பயந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“வேறு எதுவும் வித்தியாசமா அவள் நடந்து நீங்கப் பார்த்து இருக்கீங்களா.”என்ற பூசாரியின் கேள்விக்குச் சிறிது நேரம் யோசித்தவன்.
“சில நேரம் அவள் தும்பும்போது ஒரு ஆண் தும்புவது போலக் கேட்டு இருக்கு. அப்போ எல்லாம் நான் பக்கத்து வீட்டுல இருந்து அந்தச் சத்தம் வருதுன்னு நினைச்சு இருக்கேன். அதுபோலச் சில நேரம் கால்மேல் கால் போட்டு ஒரு ஆணை போலத் தூங்குவாள். அவ்வப்போது
ஹக், ஹக் என்ற சத்தம் கேட்டிருக்கு. அசந்து தூங்குவதால் தொண்டை காய்ந்து இந்த மாதிரிச் சத்தம் வருவதாக நினைச்சு இருக்கேன்.”
“இல்ல. அது தொண்டை காய்ந்து வந்த சத்தம் இல்லை. தொண்டையை இறுக்கி தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால அவரால பேசப் புரியாமல் பேச முற்பட்டபோது உண்டான சத்தம் அது.”
“என்ன சாமி.? என்னென்னமோ சொல்றீங்க. ரொம்ப பயமா இருக்கு.இப்போ உங்ககிட்ட சைகையில் என்னமோ சொன்னாளே என்ன சொன்னா.?” என்று கோமதி கேட்க, அனைவரையும் ஒரு முறை பார்த்தவர்.
“தான், தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும். நிறைய நாட்கள் வாழ ஆசைப்பட்ட தனக்கு அந்தக் கொடுப்பினை கிடைக்கவில்லை என்றும் வாழ வேண்டும் என்ற ஆசையில் இவள் உடலைப் பிடித்துக் கொண்டதாகவும் கூறியது அந்த ஆன்மா.” என்று கூற “எங்க எல்லாரையும் சுட்டி காட்டினாளே அது எதுக்கு சாமி.?” என மதுமிதாவின் அக்கா கேட்க. “நீங்க யாரு தடுத்தாலும் இந்த உடம்புக்கு சொந்தக்காரன் தான் மட்டும் தான்னும் அவளுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வதாகவும் சொல்லுது அந்த ஆத்மா.” என்ற பூசாரியின் பதிலில்
“ஐயோ.!” என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார்கள் அனைவரும்.
“மற்றபடி வேறு எதுவும் தொந்தரவு உங்களுக்கு ஏற்பட்டிருக்கா.?” எனப் பரத்தை பார்த்துக் கேட்க
“இல்லையே சாமி. ரொம்ப பாசமா அன்பா என்னைப் பார்த்துப்பா. குழந்தையையும் அவ்வளவு கவனமா பார்த்துப்பா.” என்றவனுக்கு தன்னையும் மீறிக் கண்கள் கலங்கியது. அவனைப் பார்த்திருந்தவர்களுக்கும் மனம் கணக்க. கண்ணீர் சுரந்தது.
“இத்தனை நாள் அவளிடம் இந்த ஆக்ரோஷத்தை நான் பார்த்ததில்லை. ஆனா இனி எப்படி.?” என்று கேள்வியாக முடிக்க. பார்த்தவர்களுக்கும் அவன் மனநிலை புரிந்தே இருந்தது.
“அதுதான் நானும் கேட்கணும்னு நினைச்சேன் இவ்வளவு நாள் இல்லாம இப்போ ஏன் இப்படி ஆச்சு அவளுக்கு.?” என்று கேட்ட கோமதியை பார்த்த பூசாரி
“நீங்க இப்பதானே உங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு வந்திருக்கீங்க. அவ இடத்துக்கு வந்ததும் அவ குழந்தையைக் காப்பது அவளுடைய கடமையை ஆயிடுச்சு.” என்று கோயிலின் கர்ப்ப கிரகத்தைப் பார்த்துக் கூறிய பூசாரி.
“நீயே துணை தாயே..” என்று கும்பிட்டு விட்டு.
“இனி பயப்படறதுக்கு எதுவுமே இல்லை. அவளைப் பிடித்த ஆன்மா அவளை விட்டு நீங்கிச் சென்று விட்டது. தன் குழந்தையைக் காக்கும் கடமை இங்கு உள்ளவளுக்கு இருப்பதால் நீங்கள் இங்கே வந்ததும் அது நடந்தேறி இருக்கிறது.”
“ஆனா அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே சாமி.” எனக் கேட்ட பரத்திடம்.
“ஆமா, அவங்களுக்கு நடந்தவைகள் எதுவும் ஞாபகம் இருக்காது. நீங்களும் எதையும் அவங்களுக்கு ஞாபகப்படுத்த முயலாதீங்க. ஏன் இப்படி நடந்து கொண்ட.? என்று கேட்காதீங்க. எல்லாம் நல்லபடியா முடிந்தது. இனி வருடத்திற்கு ஒரு முறை உங்களின் குலதெய்வ கோயிலுக்கு வர வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்….”
“கட்டாயமா, கட்டாயமா.” என்றார்கள் அனைவரும் கோரசாக.
கற்சிலை உருவத்தில் சாந்த சொரூபியாக இருந்த தங்களின் குலதெய்வமான வனபத்ர காளியை பார்த்தபடி.
தன் மகன் மற்றும் அக்கா மகள்களுடன் சென்றிருந்த மதுமதி கை நிறைய மாங்காய்களை பறித்துக் கொண்டு இவர்களை நோக்கி வந்தாள் புன்னகை முகமாக. சிலருக்கு அவளைப் பார்க்க அதிர்வும், பயமும் இருந்தாலும் பாவமாகவும் இருந்தது. ஆனாலும் அவளைப் பிடித்திருந்தது இன்றோடு அவளை விட்டு விலகியது என்பதை நினைத்து மகிழ்ந்தவர்கள். கொண்டு வந்த உணவை உண்டு விட்டுக் கிளம்பினார்கள் மனம் நிறைந்த மகிழ்வுடன்.
மனைவியின் அருகில் அமர்ந்திருந்த பரத்திற்கு இவ்வளவு நாள் இவை எதுவும் தெரியாமல் அவளோடு வாழ்ந்ததை நினைத்துச் சற்று பயம் இருந்தாலும் அவளின் மேல் இருந்த காதல் இவை அனைத்தையும் தவிடு பொடி ஆக்கி இருந்தது. அவள் தோள்களில் கையிட்டு அவளைத் தன்னோடு இருக்க அனைத்துக் கொண்டு மகனையும் அவள் மடியிலிருந்து தன் மடிக்கு மாற்றிக் கொண்டான்.
இரண்டு நாள் மாமனார் வீட்டிலிருந்து அவள் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் எப்போதும் போல இயல்பாக இருப்பதில் நிம்மதி உற்றவன். கிளம்பி சென்றான் சென்னைக்கு மனைவி குழந்தையோடு.
சென்னைக்கு வந்த அன்று சோர்வாக இருக்க அலுவலகத்திற்கு விடுமுறை கூறிவிட்டு வீட்டிலிருந்தவன் எதேர்ச்சையாகத் தண்ணீர் கேனை பார்க்க அது காலியாக இருந்தது. மனைவியை எட்டிப் பார்க்க அவள் மும்முறமாகச் சமையல் செய்துகொண்டிருந்தாள் என்ன நடக்குமோ.? எனச் சற்று பயத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் பரத். சமையல் செய்து கொண்டிருந்தவள் தண்ணீர் பிடிப்பதற்காகக் கேன் அருகில் வந்தவள் காலியானதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு முழுவதாக இருந்த கேனின் அருகில் செல்லப் பகீர் என்றது இவனுக்கு.
சட்டென்று இவனைத் திரும்பிப் பார்க்க. அவள் பார்வையில் அதிர்ந்தவன் தொலைக்காட்சியைப் பார்ப்பது போலப் பார்வையை மாற்றித் திரும்பி அமர்ந்து கொண்டான் அவன்.
“என்னங்க.” என்றவளின் குரலுக்கு “என்னம்மா.?” என்ற படியே இவன் எழுந்து வர
“இந்தத் தண்ணி கேனை கொஞ்சம் கவிழ்த்து விடுங்க.” என்றவளின் பேச்சில் ஆனந்தம் அடைந்தவன் அவள் சொன்னதை செய்து விட்டு அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமும் கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றான். மனதில் நிம்மதியுடன். கணவனின் திடீர் முத்தத்தில் அதிர்ந்தவள் பின் புன்னகையுடன் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
இரவு உணவிற்கு பின்பு சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தபடி வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தான் பரத். மகனைத் தூங்க வைப்பதற்காக அறைக்குள் சென்றிருந்தாள் மதுமதி. சற்று நேரத்தில் “ஹச்.” என்ற ஆணின் தும்மல் சத்தம் கேட்டது பரத்திற்கு. தூக்கி வாரிப் போட,
“எங்க இருந்துடா வந்தது இப்போ இந்தச் சத்தம்.?” என்று அரண்டு போய் அமர்ந்திருந்தான் பரத்.
சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்து காதைக் கூர்மையாக்கி வைத்து அறையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, வாசல் கதவின் பக்கத்தில் இருந்த ஜன்னலிலிருந்து மறுமுறையும் அதே தும்மல் சத்தம் சற்று பலமாகத் தொடர்ந்து கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பியவன் ஜன்னலை லேசாகத் திறந்து பார்க்க. எதிர் வீட்டு தாத்தா இரவு உணவை முடித்துவிட்டு அது ஜீரணமாக நடை பயின்ற கொண்டிருந்தவர் மறுபடியும் ஒரு தும்மலை போட்டுவிட்டு,
“ச்ச இந்த ஜலதோஷம் போகவே மாட்டேங்குது.” என்ற படியே மூக்கை அழுந்தத் தேய்த்து விட்டு, நடையை தொடர்ந்தார்
“ஹப்பாடா…” என்று நெஞ்சில் கை வைத்துச் சோபாவில் சாய்ந்தவனுக்கு போன உயிர் திரும்ப வந்ததை போன்ற நிலை தான்.
‘குலதெய்வம் எப்பவும் கைவிடாது.‘ என்ற நிம்மதியுடன் தங்களின் அறையை நோக்கிச் சென்றான். மனைவியை அள்ளிக் கொள்ளும் ஆவலுடன் விசில் அடித்தபடி.
நிறைந்தது.
ஐ மிஸ் யூ (SK வேலன்)
ஐ மிஸ் யூ
“கெட்டி மேளம் கெட்டி மேளம்..”என்று ஐயர் சொல்ல.மங்கள வாத்தியங்கள் முழங்க. பெரியோர்களின் ஆசியோடு Dr.இதயக்கனி அவன் மாமன் மகள் இதழியின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான்.
இந்த திருமணத்தில் இதயக்கனியின் அன்னைக்கு பேரானந்தம் என்றால், இதழியின் தந்தைக்கு கோடி கணக்கான சொத்துக்கு இனி தன் மகளும் சொந்தக்காரியாக மாற போகிறாள் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
Dr.இதயக்கனி பெயருக்கு ஏற்றது போலவே இனிமையான உள்ளம் படைத்தவன்.
இதழியும் அவள் பெயருக்கு ஏற்றது போலவே கொன்றைப் பூவின் நிறத்தழகி . கொன்றைப் பூ கேரளாவின் மாநில மலராகும். இதழியும் கேரளத்து பைங்கிளி தான்.இதழியின் அன்னை வாணியை
அவள் தந்தை Dr.அசோகன் காதலித்து திருமணம் செய்துக் கொள்ள, இவர்கள் காதலுக்கு அடையாளமாக இதழி பிறந்தாள்.
Dr.அசோகனின் அக்கா சகுந்தலா
கோடிஸ்வரன் ரகுவரணை மனமுடித்து இதயக்கனியை பெற்றெடுக்க.
ரகுவரன் தனது இளவயதிலேயே இதயக் கோளாறால் இறைவனடி சேர்ந்தார்.
கணவனை இழந்த சகுந்தலா தன் மகன் இதயக்கனிக்கு தன் தம்பி மகள் இதழியை ஊர் போற்ற இன்று திருமணம் செய்து வைத்தவர்
“தம்பி..உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்!! என் மகன் நிலைமை தெரிந்தும் உன் மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்ததுக்கு உனக்கு காலமெல்லாம் நான் நன்றி கடன்ப் பட்டு இருக்கேன்.”
என சகுந்தலா கண்கள் கலங்க
“அக்கா..இதயக்கனி என் மாப்புள்ள. அவருக்காக நான் இதைக் கூட பண்ண மாட்டேனா?”என்றார் அசோகன்.
“இருந்தாலும் டா தம்பி…”என்று சகுந்தலா மேற்கொண்டு பேசும் முன்னே
தன் அக்காவின் தோளை ஆறுதலாக பற்றி விடுவித்து “நீ கவலைப்படாத அக்கா.இனி என் மருமகனும் உன் மருமகளும் நிம்மதியா வாழ போறாங்க.” என்ற அசோகனின் வார்த்தையை கேட்டு சகுந்தலாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது.
“என்ன Mr.இதயா தாலி கட்டியதில் இருந்து என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச தயங்குறீங்க. என்ன வெக்கமா?” என்று இதழி தன் கணவனை சீண்டும் விதமாக கேட்டதும்,
“வெக்கம் இல்லை Mrs இதயக்கனி. எனக்கு உங்களை பார்த்தால் பயம்!!.” என்று அழகாய் கண்கள் சிமிட்டி பதில் சொன்னவனை பார்த்து செல்லமான கோபத்துடன் அவனை முறைத்தாள் இதழி.
திருமணத்திற்கு வந்த அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்க,
மணமக்கள் இருவரும் ஜோடியாக இதயக்கனியின் பங்களாவிற்கு சென்றவர்கள் அங்கே செய்ய வேண்டிய எல்லா சடங்குங்களையும் செய்து முடித்தனர்.
“அப்புறம் மாப்புள்ள.நீங்க ஆசைப்பட்டது போலவே உங்க கல்யாணத்தை மாமா நல்லபடியா முடிச்சி வச்சிட்டேன் பார்த்திங்களா.” என்று தற்பெருமை பேசிய அசோகனை பார்த்து “ஆமா மாமா நீங்க எப்பவுமே எல்லா விஷயத்திலும் கிரேட் தான்.” என்று தன்னடக்கத்துடன் சொன்னான் இதயக்கனி.
“வாணி எனக்கு சூடா ஒரு காபி எடுத்துட்டு வா. மாப்பிள்ள உங்களுக்கும் காபி வேணுமா?”என்று அசோகன் கேட்டதும்”எனக்கு வேணாம் மாமா.” என்ற இதயக்கனி அவன் கவனத்தை கைபேசியில் செலுத்தி இருக்க,வாணியோ தன் கணவனை கோவமாக முறைத்தவள் பணியாளர்கள் மூலம் அசோகனுக்கு காபியை கொடுத்து அனுப்ப “இவளுக்கு திமிர் அதிகமாச்சு.” என்று புலம்பியப்படி காபியை பருகினார் அசோகன்.
அன்றைய இரவு Dr.அசோகனின் வீட்டில் புதுமண ஜோடிகளுக்கு முதலிரவு ஏற்பாடு செய்து இருக்க,இதயக்கனியின் அம்மாவும் இவர்களுடன் அங்கே சென்று இருந்தார்.
இதழியின் அறையில் இதயக்கனி தன் காதல் மனைவி வருகைக்காக காத்து இருக்க.
முதலிரவு அறைக்குள் செல்லும் முன்னே
“இதழி..” என்று அழைத்த சகுந்தலா கண்கள் கலங்கி
“என் மகனை பத்திரமா பார்த்துக்கோமா.” என்றதும்
“அத்த..என் மாமாவை நான் பார்த்துப்பேன். நீங்க கவலைப்படாதிங்க.” என்று ஆறுதலாக சொன்னாள் இதழி.
“இதழி..பார்த்து பக்குவமா நடந்துக்கோ.” என்று அசோகன் தன் மகளுக்கு அறிவுரை கொடுக்க, இதழியின் அன்னைக்கோ இந்த திருமணத்தில் ஒரு துளி கூட விருப்பமில்லை என்ற பட்சத்தில் அவர் அங்கிருந்து சென்று விட, இதழி வெள்ளி பால் சொம்புடன் அழகு பதுமையாக அறைக்குள் நுழைந்தவளின் வதனத்தில் வெக்கம் நிறைந்து இருந்தது.
இதயக்கனி காதலுடன் தன்னவளை அவன் அருகே அழைக்க, இதழி தன் கணவனின் இதயத்தோடு இணைந்தவள் கழுத்தில் வைரக்கல் பதித்த இதய வடிவலான பதக்கம் கொண்ட சங்கிலியை அணிவித்தவன் “இதழி…இந்த டாலர்ல ஒரு ரகசியம் இருக்கு.நீ எப்போ என்னை மிஸ் பண்றியோ!அப்போ நீ இந்த இதயத்தை திறந்து பாரு.என் இதயம் உன்கிட்ட பேசும்.” என்று இதயக்கனி சொன்னதும்.மேலும் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்ட இதழி
“உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?” என்று கேட்டாள்.
“என்ன இப்படி கேட்டுட்ட!? என் பிரச்சனை தெரிஞ்சும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட என் மாமன் மகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.”என்ற இதயக்கனி சற்றும் தாமதிக்காமல் இதழியின் செவ்விதழில் தன் முதல் அச்சாரத்தை பதிக்க.இமைகள் மூடி அவன் அதரங்களில் இவளும் இணைந்து இருக்க.
“என் இதயத்தை கொடு..”என்று மிக அருகே கேட்ட குரலில் சட்டென்று மோகம் களைந்து விழிகள் திறந்து பார்த்த இதயக்கனியின் கண் எதிரே ஆறடியில் ஆணின் உருவம் தெரிந்ததும் இதழியை தன் வசமிருந்து தள்ளிவிட்டபடி கட்டிலில் இருந்து எழுந்தவன்
“யா..யாரு நீ!?”என கேட்டான் இதயக்கனி.
“என்னாச்சு இதயா?யாரை பார்த்து யாருன்னு கேக்குறீங்க?”என்ற இதழியின் கண் எதிரே இதயக்கனி குழப்பத்தில் நின்று இருந்தவன் முகமெல்லாம் முத்து முத்தாக வேர்த்து இருக்க,அவன் பயத்துடன் அந்த உருவத்தை சுட்டிகாட்டிய சமயம் மின்சாரம் தடைப்பட்டது.
“இருங்க இதயா நான் மெழுகுவத்தி எடுத்துட்டு வரேன்.”என்ற இதழி அறையில் இருந்து வெளியே செல்ல,அந்த இருளிலும் அவன் கண்களுக்கு மட்டும் தெரிந்த ஆணின் உருவம் இருளின் ஆழத்திலிருந்து மெதுவாக நகர்ந்து இதயக்கனியை நெருங்கி வர,அவன் உடல் சூடேறி பயம் அவனை ஆக்கிரமித்து அவன் மூளையை நிலை குலையச் செய்தது.
“என் இதயத்தை கொடு..” என்று மீண்டும் அந்த குரல் கேக்கும் திசையை இதயக்கனி உற்று பார்க்க. அதே சமயம் கையில் மெழுகுவர்த்தியுடன் இதழி உள்ளே நுழைந்தவள் “இதயா..” என்று அழைத்ததும் அறையின் மூலையில் அந்த உருவம் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்து “இதழி..அங்க..அங்க ஒரு உருவம்.” என்ற இதயக்கனியின் இதயம் இயல்புக்கு மாறாக வேகமாய் துடித்தது.
“என்ன இதயா?எந்த உருவம்?”என்ற இதழி அந்த அறையை சுற்றி பார்த்தவள்.
“இங்க யாருமே இல்ல இதயா.” என்று சொல்ல”அங்க..அங்க..”என்றவனை பார்த்து அந்த உருவம்”என் இதயத்தை கொடு..” என்று மீண்டும் கேக்க. இதயக்கனி அதே இடத்தில் மயங்கி சரிந்தவனை
“இதயா..இதயா..” என்ற பெயரை சொல்லி இதழி கத்தும் சத்தம் கேட்டு இருவரின் பெற்றோரும் இவர்கள் அறைக்குள் ஓடி வந்த தருணம் மின்சாரம் ஒளிர்ந்தது.
“இதழி என்னமா?”என்று சகுந்தலா பதற “இதழி..முதல்ல ஜன்னலை திறந்து விடு.”என்ற அசோகன் இதயக்கனிக்கு சிகிச்சை அளித்தவர்
“பிபி அதிகமா இருக்கு..இதயா ரெஸ்ட் எடுக்கட்டும்.இதழி நீ பக்கத்துல இருந்து இதயாவை பார்த்துக்கோ.” என்று அசோகன் சொன்னதும்.
“ஐயோ தம்பி.. என் மகனுக்கு என்னாச்சு?” என்று சகுந்தலா கதறி அழுததும்
“நோயாளி மாப்பிளைக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்து என் பொண்ணு வாழ்க்கையை நாசமாகிட்டீங்க.”என்ற தன் மனைவி வாணியை கையைப் பிடித்து வேகமாக வெளியே இழுத்து வந்தார் Dr.அசோகன்.
“கையை விடுங்க. சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு இதழியை பாலுங்கிணத்துல தள்ளிட்டீங்களே நீங்க எல்லாம் ஒரு மனுஷனா?” என்று ஆதங்கத்தில் கத்திய வாணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்த அசோகன் “வாயை மூடு. என் அக்கா புள்ள கோடீஸ்வரன். அந்தப் பணத்துக்கு முன்னால மத்த எதுவுமே ஒரு விஷயமே இல்ல.ஏதோ போராத காலம் இந்த கொரோனா வந்த சமயத்துல இதயக்கனிக்கு தொற்று நோயால் இருதயம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையா ஆகிட்டான்.அதான் இதய அறுவை சிகிச்சை மூலமா அவன் பழைய நிலைமைக்கு வந்துட்டானே.இன்னும் உனக்கு என்ன டி பிரச்சனை?” என்று அசோகன் தன் மனைவியை கடிந்துக் கொண்டான்.
“முதல் இரவு அதுவுமா வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படி மயக்கம் போட்டு கீழ விழுந்தவரை நம்பி என் மகளுடைய வாழ்க்கை நாசமா போக போறது தான் மிச்சம்.”என்று ஆதங்கத்தில் கத்திய வாணியின் கன்னத்தில் மீண்டும் அரைந்து “கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு என் மாப்பிள்ளை இதயக்கனி மட்டும் தான். நீ பயப்படற மாதிரி நாளைக்கே அவனுக்கு ஏதாவது நேர்ந்தந்தாலும் அந்த சொத்து முழுக்க அவனை கட்டிகிட்ட என் பொண்ணை தான் வந்து சேரும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் என்னென்னமோ செஞ்சு என் பொண்ண இதயக்கனிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்.
இதெல்லாம் தெரியாம நடுவுல புகுந்து நீ எதையாவது பேசி காரியத்தை சொதப்பன, பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன் கழுத்தை திருகி போட்டுருவேன். போ..போயி தூங்கு.”என்று கத்திய அசோகன் பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவன் என்ற உண்மை வாணிக்கு தெரிந்து தான் இருந்தது.
“அக்கா.. இதழி மாப்பிளையை பார்த்துக்கட்டும். நீ போய் தூங்கு.”என்று அசோகன் சொன்னதும்.சகுந்தலா கண்கள் கலங்கிய நிலையில் பக்கத்து அறையில் சென்று படுத்துக் கொண்டார்.
இரவு மணி இரண்டை கடந்து இருக்கும். இதயக்கனியின் அருகே தான் இதழி அமர்ந்தப்படியே கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தாள்.
இதயக்கனி நன்கு உறங்கிக் கொண்டு இருந்தவன் திடீரென கேட்ட குரலில் திடுக்கிட்டு எழுந்தவன் கண் எதிரே அதே ஆணின் உருவம் நின்று இருக்க “இத… இதழி. ” என்று தன் காதல் மனைவியை இதயக்கனி அழைக்க.அவனின் குரல் இதழியின் செவியை எட்டவே இல்லை.
“என் இதயத்தை கொடு..” என்று மீண்டும் அந்த உருவம் இதயக்கனியை கேக்க.
அவனோ பயத்தில் தன் இதயப்பகுதியில் கை வைத்தவனுக்கு சொல்ல முடியாத அளவுக்கு வலி அதிகரித்தது.
“ம்.. உனக்குள் இருக்குற என் இதயத்தை கொடு.”என்ற உருவம் இதயக்கனியின் அருகே நெருங்கி வர.”யாரு நீ..?” என்ற இதயக்கனியின் இதயபகுதியை அந்த உருவம் தொட்ட வேகத்தில் “அம்மா…” என்று பயத்தில் அலறிய இதயக்கனியின் குரலை கேட்டு இதழி பதறியடித்து எழுந்தவள் “இதயா.. இதயா என்னாச்சு..”என்றவளின் குரலை கேட்டு அசோகன் வேகமாக அறைக்குள் நுழைந்தவனை
“மாமா..அங்க..அங்க ஒருத்தன்.. அங்க ஒருத்தன் என்னை பார்த்து என் இதயத்தை கொடுன்னு கேக்குறான் மாமா.” என்ற இதயக்கனி அருகே இருந்த பொருள்களை எல்லாம் தள்ளிக்கொண்டு கட்டிலின் அருகே பயந்து நடுங்கி அமர்ந்தவனை பார்த்து “என் இதயத்தை கொடு..” என்று மீண்டும் அந்த உருவம் கேட்டது.
“இதயா என்னாச்சு உங்களுக்கு?இங்க யாருமே இல்ல.” என்ற இதழியை பார்த்து”ஐயோ உன் பக்கத்துல தான் டி அந்த உருவம் நிக்குது.என்னை பார்த்து அந்த உருவம் பேசுது.” என்று கத்திய இதயக்கனியின் நிலையை கண்டு இதழிக்கு என்ன செய்வதேன்றே தெரியாமல் போனது.
“என் இதயத்தை கொடு..” என்று மீண்டும் கேட்ட குரலில்”இதோ இதோ இப்போ கூட அந்த குரல் கேக்குது.உனக்கு கேக்கல? உனக்கு கேக்கல?ஐயோ எனக்கு கேக்குதே.” என்று கண்கள் மூடி காதை அடைத்துக்கொண்டு இதயக்கனி கத்தியதும் “இதயா..என்னாச்சு இதயா? ” என்ற சகுந்தலாவின் குரல் பக்கத்து அறையில் கேட்டதும் “அம்மா.. அம்மா..” என்று அலறியடித்து தன் அன்னையை அழைத்தவன் கழுத்தை பிடித்த உருவம் “என் இதயத்தை கொடு..”என்றதும்.
“அம்மா…” என்று தன் அன்னையை தேடி ஓடிய இதயக்கனி “அம்மா..அங்க.. அங்க ஒருத்தன் என் இதயத்தை கொடு. என் இதயத்தை கொடுன்னு கேக்குறான் அம்மா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குது.” என்று இதயக்கனி பயத்தில் தன் அன்னையின் மடியில் படுத்துக்கொண்டவன் உடல் பயத்தில் நடுங்கியது.
“இதயா.. ஏன் இப்படியெல்லாம் பண்றிங்க? அங்க யாருமே இல்ல இதயா.” என்ற இதழியின் கரங்களை பற்றிக்கொண்ட இதயக்கனி “இல்ல அங்க ஒருத்தன் இருக்கான். அவன் என்கிட்ட என் இதயத்தை கொடுன்னு கேக்குறான்”என்ற இதயக்கனியை பார்த்து
“ஒருவேள உனக்கு இதய மாற்று சிகிச்சை பண்ணோங்களே, அந்த இதயத்துக்கு சொந்தக்காரன் தான் அவன் இதயத்தை கேட்கிறானா?” என்று அசோகன் பயத்துடன் கேக்க.
“என்ன தம்பி பேசுற நீ.ஒரு டாக்டரா இருந்துகிட்டு இப்படி எல்லாம் பேசலாமா?” என்ற தன் அன்னையைப் பார்த்து “அம்மா எனக்கு நெஞ்சு வலிக்குது. இதழி..இதழி என்னை விட்டு போகாத..” என்ற இதயக்கனியின் இரண்டு கரங்களிலும் தன் அன்னை மற்றும் இதழியின் கரங்கள் இணைந்து இருக்க,
“அப்பா… இதயா என்ன சொல்லுறாரு? அப்போ இவருக்கு இதயத்தை தானமா கொடுத்தவனோட உருவம் தான் இதயா கண்ணனுக்கு தெரியுதா?” என்று இதழியும் அச்சதுடன் கேக்க,”என்ன இதழி சொல்லுற? இதயா கண்ணுக்கு உருவம்
தெரியுதா? “என்ற சகுந்தலாவின் பயத்தை பார்த்து இயல்பைவிட அதிவேகமாக துடித்த இதயக்கனியின் இதயத்தில் ரத்த ஒட்டம் உறைந்து போன நிலையில் தன் அன்னையின் மடியிலேயே வலியால் துடிதுடித்து மரணமடைந்த தன் மகனின் இறுதி நொடியை கண்ட சகுந்தலா அதே இடத்தில் மயங்கி விழுந்ததும் “இதயா..” என்று கதறிய இதழியின் கரங்கள் இதயக்கனியின் கைக்குள் புதைந்து இருந்தது.
“ஐயோ.. இதய நோயாளிக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க வேணாம்னு சொன்னேனே யாராவது கேட்டீங்களா ?” என்று இதழியின் அம்மா ஒரு பக்கம் கதறி அழுத்ததும் “ஐயோ மாப்புள்ள..” என்று பதறிய அசோகன் இதயக்கனியை மருத்துவ மனைக்கு தூக்கி சென்றவனுக்கு இதயக்கனி ஏற்கனவே இறந்து விட்டான் என்று தெரிந்திருந்தது.
“மறைந்த தொழில் அதிபர் ரகுவரனின் ஒரே மகனான Dr.இதயக்கனி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.முப்பதே வயதான இதயக்கனிக்கு சென்ற வருடம் தான் இருதய அறுவை சிகிச்சை மூலம் மாற்று இதயம் பொருத்தப்பட்ட நிலையில் அவருக்கு நேற்றைய தினம் தான் திருமணம் முடிந்தது.”Dr. இதயக்கனி, Leading Researcher in Sustainable Water Solutions” (நீர்மை தீர்வுகளில் முன்னணி ஆராய்ச்சியாளர்)
என்பதால், கடல் நீரை சுத்தமாக்கி குடிநீராக்கும் கருவியை கண்டுபிடித்து வருங்காலத்தில் அனைவருக்கும் இலவச குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை நம் அரசாங்கத்துடன் கைகோர்த்து வழங்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விடியல் காலை திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் Dr.இதயக்கனி மூச்சு விட சிரமப்பட்டு, இதய துடிப்பு செயழிந்து இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .” என்று செய்தி ஊடகங்களில் இதயக்கனியின் மறைவை பற்றிய இரங்கல் செய்தி வந்தப்படியாகவே இருந்தது.
Dr.இதயக்கனிக்கு இறுதி சடங்கு முடிந்து இன்றோடு பதினாறு நாள் கடந்து இருக்க
“தம்பி.. ஆப்ரேஷன் பண்ணா என் மகன் நல்லா இருப்பான்னு நினைத்தேனே. கடைசியில இப்படி அல்பாய்ஸ்ல போயிட்டானே. நம்ம நாட்டுக்கே இலவசமா தண்ணீர் கொடுக்கணும்னு ஆசைப்பட்டானே. இனி என் மகனை நான் எப்போ பார்ப்பேன்.?” என்று சகுந்தலா கண்கள் கலங்கினாள்.
“அத்த..அழாதீங்க.இதயா நம்மை விட்டு எங்கேயும் போகல. அவரு நம்மகூட தான் இருக்காரு. ” என்ற இதழியும் கண்கள் கலங்க”அக்கா..நீ இங்க இருந்தா இதயா ஞாபகத்துல அழுதுகிட்டே இருப்ப.இனி பிஸ்னஸை எல்லாம் இதழி பார்த்துப்பாள். பேசாம நீயும் வாணியும் கோவில் குளத்துக்கு போயிட்டு வாங்க.” என்ற அசோகன் தன் மனைவியையும் தன் அக்காவையும் கோவில் குளத்திற்கு அனுப்பி வைத்தான்.
அன்றைய தினம் இரவு நேரம் இதழி இதயக்கனியின் அறையில் அவனின் புகைப்படத்தின் அருகே இருந்த சில ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண் எதிரே வந்த ஆறடி உருவத்துக்கு சொந்தக்காரனான பாஸ்கரன் “என் இதயத்தை கொடு..”
என்று கேட்டதும்.
இதழி தலையை திரும்பிப் பார்த்தவள் வாய்விட்டு சத்தமாக சிரிக்க
“என் இதயத்தை கொடு செல்லம்..”
என்ற பாஸ்கரன் இதழியை காதலுடன் கட்டி அணைக்க.
“என் இதயமே உங்கிட்ட தானே இருக்கு பாஸ்கி.” என்ற இதழியின் கள்ள காதலன் தான் அந்த மர்ம உருவத்திற்கு சொந்தக்காரன் என்ற உண்மை இறந்த Dr.இதயக்கனிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“சும்மா சொல்லக்கூடாது இதழி.. பணத்துக்காக உன் அத்தை மகனையே போட்டுத் தள்ளி இருக்கிற பாரு.நீ கெட்டிக்காரி தான்.” என்று பாஸ்கர் சொல்ல “இதுக்கெல்லாம் மூல காரணமே என் அப்பா தான்.அவரை தான் இந்த பெருமை எல்லாம் சேரும்.” என்ற இதழி பாஸ்கரன் கையில் மதுபான கோப்பையை நீட்டினாள்.
“ஆனாலும் உன் அப்பா பயங்கர மூளைக்காரர் தான்.பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவாரு.”என்று பாஸ்கரன் சொன்னதும் “ஆமா..எனக்கு பணம் தான் முக்கியம்.அதனால தான் என் அக்கா மகன் என்று கூட பார்க்காமல் அவனை உன்ன வச்சு போட்டுத் தள்ளிட்டு, இந்த கோடிக்கணக்கான சொத்துக்கு என் மகளை வாரிசாக்கியது மட்டும் இல்லாமல், இதயக்கனி கண்டுபிடிச்ச நீர் கருவியை வெளிநாட்டாளருக்கு வித்து பல கோடி ரூபாய் பணத்துக்கு சொந்தக்காரனாகி இருக்கிறேன். ” என்றான் அசோகன்.
“ஆமா டாட்.. நீங்க புத்திசாலி தான். ஏற்கனவே மாற்று இதயம் பொருத்தப்பட்ட இதயக்கனிக்கு என்ன நடந்தா ஹார்ட் அட்டாக் வரும்ன்னு தெரிஞ்சிகிட்டு.இதயாவை பயமுறுத்தி, உங்க அக்காவையும் இதயக்கனி எதையோ பார்த்து பயந்து தான் இறந்தார் என்று நம்ப வைத்து,யாருக்கும் சந்தேகம் வராதப்படி இதயாவை போட்டு தள்ளிட்டீங்க.” என்று இதழி தன் தந்தையை பற்றி பெருமையாக பேசினாள்.
“சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி.. இதயக்கனி எதிர்ல நான் மர்ம உருவமா பேசும்போது நீங்க ரெண்டு பேரும் அங்க நான் இல்லாதபடி என்ன அழகா நடிச்சீங்க!? உண்மையாவே அப்பாவும் பொண்ணும் பக்கா கிரிமினல் தான்.”என்று பாஸ்கரன் சொல்ல,
“டேய்.. ரொம்ப புகழாமல் சரக்கை குடிச்சிட்டு இடத்தை காலி பண்ணு.” என்று அசோகன் சொன்னதும்.
“என்ன இடத்தை காலி பண்ணனுமா?என்ன மாமா எப்போ எனக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க?”என்று பாஸ்கர் கேட்க, இதழியும் அசோகனும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமாக சிரித்துக்கொண்டார்கள்.
“என்ன உங்க சிரிப்பே சரியில்லையே?” என்ற பாஸ்கரின் இதழ் ஓரத்தில் ரத்தம் கசிய.
“ஏன்டா.. சொந்த அக்கா மகனையே பணத்துக்காக போட்டுத்தள்ளன எனக்கு, அப்பன் பெயர் தெரியாத அனாதை உன்னை போட எவ்வளவு நேரம் ஆகும்?” என்று அசோகன் சொன்னதும்.
“சாரி பாஸ்கி..நான் கூட நம்ம காதலுக்கு துரோகம் பண்ண கூடாதுன்னு தான் நினைச்சேன்.ஆனா அப்பா தான் சொன்னாரு. வெளிநாட்டாருக்கு இதயக்கனி கண்டுபிடித்த கருவியை வித்து கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தாலும், இதயக்கனியை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவருடைய சொத்தையும் சேர்த்து நான் அனுபவிக்கலாம்ன்னு சொன்னதால தான் இதயக்கனியை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.ஆனா கோடிக்கணக்கான சொத்துக்கு நான் ஒரே வாரிசாக இருக்கும்போது உன்னை மாதிரி ஒரு ஆளை கட்டிக்கிட்டா நல்லா இருக்காது, அதனால உன்னை போட்டு தள்ளிட்டு நோய்நொடி இல்லாத, எங்க அந்தஸ்துக்கு சமமான கோடீஸ்வர மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன் என்று இதே அப்பா சொன்னதால இனி நீயும் எனக்கு வேண்டாம்.”என்ற இதழியின் இதழ் ஓரத்தில் விஷமான புன்னகை மலர்ந்ததும்.
கோபம் கொண்ட பாஸ்கரன் “என்னையே ஏமாத்துறிங்களா?நீங்க உயிரோடவே இருக்கக்கூடாது.”என கர்ஜித்தவன் அசோகன் கண் இமைக்கும் நேரத்தில் அருகே இருந்த மது பாட்டிலை உடைத்து இதழியின் வயிற்றில் குத்தியதும் “அப்பா..” என்று கத்திய இதழி ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தவளின் கழுத்தில் இருந்த சங்கிலியின் இதய வடிவிலான
பதக்கத்தில் இருந்து
“ஐ மிஸ் யூ..” என்ற இதயக்கனியின் குரல் கேட்டதும்.இதழியின் கண் எதிரே புகைப்படத்தில் சிரித்த முகத்துடன் மாலைக்கு நடுவே பிரதிபலித்த இதயக்கனியின் வதனத்தை உள்வாங்கிய இதழியின் விழிகள் மரணிக்கும் தருவாயில் அவனுக்கு இவள் செய்த துரோகத்தையும்,அவன் இவள் மீது கொண்ட உண்மையான காதலையும் உணர்ந்தபடி உயிர் துறந்தாள்.
தன் மகளின் மரணத்தை நேரில் கண்ட அசோகன்”ஐயோ இதழி.. “என்று கதறி நெஞ்சில் கைவைத்தப்படி அதே இடத்தில் விழுந்து நெஞ்சு வலியால் துடிக்க.
பேய்,பூதம்,ஆவி, எல்லாம் பழி வாங்குமா என்று தெரியாது.ஆனால் கர்ம வினை என்பது அனைத்து நன்மை தீமைக்கும் பதில் சொல்லியே தீரும்”. என்று சாகும் தருவாயில் உணர்ந்த அசோகனின் காதுக்கு “ஐ மிஸ் யூ..” என்ற இதயக்கனியின் குரல் மட்டும் இதழியின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த பதக்கத்தின் வாயிலாக தெளிவாக ஒலித்ததை காதில் வாங்கியபடி அசோகனும் மரணம் அடைந்தார்.
தன் உடன் பிறந்தவனே தன் மகனின் மரணத்திற்கு காரணம் என்று அறிந்த சகுந்தலா. தன் மகன் Dr. இதயக்கனி ஆசையை நிறைவேற்ற அனைவருக்கும் இலவச குடி நீர் கிடைக்கும் திட்டத்தை அரசாங்கத்துடன் கைகோர்த்து நல்ல முறையில் செய்து முடித்தார்.
தன் மகளும் கணவனும் இதயக்கனிக்கு செய்த துரோகத்திற்கு வாணி அவர்களின் சொத்துக்களை எல்லாம் ஆதரவற்ற இல்லத்திற்கு எழுதி வைத்தவர் கோவில் குலமே கதி என்று சரணாகதி அடைய, இன்றும் இதயக்கனியின் அம்மாவின் கையில் இருக்கும் இதய வடிவிலான பதக்கத்தில் இருந்து ‘ஐ மிஸ் யூ” என்ற இதயக்கனியின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
முற்றும்.🆂︎🅺︎
சென்னை ஐ.ஜி அலுவலகம். காலையிலேயே மிகுந்த பரபரப்பாக இருந்தது. அனைத்து உயர் அதிகாரிகளும், மிகுந்த பரபரப்புடன் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு விரைந்து வந்தார்கள். அனைத்து அதிகாரிகளையும் தங்கள் கைபேசியின் சத்தத்தைக் குறைத்து வைக்கச் சொல்லிக் கட்டளை வந்தது.
அனைத்து அதிகாரிகளும் தங்கள் அருகில் உள்ள அதிகாரிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்க, “ஐ.ஜிக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதால், டி.ஐ.ஜி தான் இப்போது வருவார்” என்று ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சொன்னார்.
ஒருத்தருக்கும் என்ன பிரச்சினை என்று முழுமையாகத் தெரியாமல்
தெரியாது என்றனர். அவர்களாகவே ஒரு யூகம் செய்து, “அந்தப் பிரச்சினையாக இருக்குமோ?” என்று அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டார்கள்.
அனைத்து உயர் அதிகாரிகளும் வந்தது அறிந்ததும்,
அந்தக் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு கம்பீரமாக வேகமாக நுழைந்தார்
டி.ஐ.ஜி இராமநாதன். டி.ஐ.ஜி வந்ததும், அமர்ந்து இருந்த அனைத்து அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.
அனைவரையும் அமரச் சொல்லி விட்டு, கைபேசியில் தகவல் எதுவும் வந்ததா என்று பார்த்தார். அனைத்து அதிகாரிகளும்
டி.ஐ.ஜி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார். நம் காவல்துறைக்கு ஒரு சமூக விரோத அமைப்புச் சவால் விட்டிருக்கிறது. நாளை இரவுக்குள் தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும். நாங்கள் அந்த இடத்தை க்ளூவாகச் சொல்கிறோம். முடிந்தால் காவல்துறை அதைத் தடுத்து பாருங்கள் என்று உளவுத்துறை மூலம் ஒரு மெசேஜ் வந்தது” என்றார்.
அனைத்து அதிகாரிகளின் முகத்திலும் அதிர்ச்சி. மீண்டும் டி.ஐ.ஜி,
“அந்த க்ளூ இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும். அதான் மொபைலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.
அப்போது அவர் கைபேசிக்குக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் வந்தது. அதை அங்கே உள்ள பெரிய திரையில் தெரியும்படி செய்தார் டி.ஐ.ஜி.
‘ஒன்றாவது க்ளூ, 8,4,9 – 24.
இரண்டாவது க்ளூ, மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று.
மூன்றாவது க்ளூ, பி.சி.33.’ அதோடு முற்றுப் பெற்றிருந்தது தகவல்.
அப்போது டி.ஐ.ஜிக்கு ஒரு அழைப்பு வந்தது, அழைப்பில் உள்ள பெயரைப் பார்த்ததும், அமர்ந்து இருந்தவர் உடனே எழுந்தார்.
அவர் எழுந்தவுடன் அனைத்து அதிகாரிகளும் எழ முயற்சிக்க, டி.ஐ.ஜி அனைவரையும் அமரும்படி சைகை செய்து கொண்டே பவ்யமாகப் பேசினார்.
எதிர் முனையில் பேசியவர் தமிழக முதல்வர். “உங்களுக்கு என்ன அதிகாரம் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். என் தமிழக பொதுமக்களுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று சொன்னார். “மேலும் உங்களுக்கு இன்னும் கூடுதலாகக் காவலர்கள் வேண்டும் என்றாலும், என் அனுமதிக்குக் காத்திருக்காமல், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்,
சீக்கிரம் கண்டுபிடியுங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தவர், “முதல்வர் தான் இப்போது பேசினார். நமக்கு எந்த அதிகாரம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார். சந்தேகம் என்றால் என் கட்சி உறுப்பினர் என்று கூடப் பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். நாம் தான் நடக்கபோக இருக்கும் அசம்பாவிதத்தைத் தடுக்க வேண்டும். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை மறந்து இதை முறியடிக்க வேண்டும். இது உண்மையிலேயே நமக்கு விடுத்த சவால்தான். இதைப் பற்றி உங்களுடைய யோசனை எதுவாக இருந்தாலும், தயங்காமல் சீக்கிரம் தெரிவியுங்கள்” என்றார்.
ஒரு அதிகாரி எழுந்து, “இதை மொத்தமாக விசாரித்தோம் என்றால் காலதாமதம் ஆகும். அதனால், மூன்று க்ளூவையும் இங்குள்ள அதிகாரிகள், மூன்று குழுக்களாகப் பிரிந்து முயற்சி செய்தால் நல்லா இருக்கும்” என்றார்.
“அவரின் ஆலோசனை நல்லாதான் இருக்கிறது” என்று டி.ஐ.ஜி சொல்லி விட்டு, உடனே மூன்று குழுக்களாகப் பிரிக்க முயற்சி செய்தார். பிறகு ஒவ்வொரு குழுவிலும் தலைமை பொறுப்பு ஏற்க, ஒரு அதிகாரியை நியமித்தார் டி.ஐ.ஜி
“நாம் அனைவரும் மற்ற குழுவில் உள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள, புதிதாக வாட்சப்பில் ஒரு குரூப் ஏற்படுத்தித் தருகிறேன்” என்றவர் பிறகு அனைவரிடமும், “இந்த ஆபரேஷனுக்கு காவலுக்கு சவால் என்று பெயர். இந்தச் சதித்திட்டம் முறியடித்த பிறகு, இந்த வாட்சப் குழு இயங்காது. அனைவரும் இது நமக்கும் சமூக விரோதியின் புத்தி கூர்மைக்கும் நடக்கும் சவால் என்று நினைத்துத் துரிதமாகச் செயல்படுங்கள். கான்பரன்ஸ் முடிந்தது” என்று சொல்லி விட்டு டி.ஐ.ஜி அவர் அறைக்குச் சென்றார்.
அனைத்து அதிகாரிகளும் தங்கள் கைபேசியின் சத்தத்தை அதிகரித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு அழைத்து, “நான் ஒரு முக்கியமான கடமை பொறுப்பு காரணமாக உங்கள் அழைப்பை ஏற்க முடியாது. அதி முக்கியமான தகவல் என்றால் மட்டும், வாட்சப்பில் மெசேஜ் செய்யவும்” என்று அனைவரும் சொல்லி விட்டு, மீண்டும் கடமை பொறுப்பைப் பார்க்கச் சென்றார்கள்.
முதலில் உள்ள க்ளூவை ஒரு குழு யோசிக்க ஆரம்பித்தது. 8,4,9, – 24 என்று ஒவ்வொரு நம்பராக யூகித்துப் பார்த்தார்கள். “8 என்பது தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதலிலிருந்து எட்டா? அல்லது கடைசியிலிருந்து எட்டா? என்று யோசித்து பார்த்தார்கள். அப்படி அவர்கள் நினைத்து ஒரு மாவட்டத்தின் பெயர் வர, அப்போ 4 என்றால் என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த மாவட்டத்தில் உள்ள 4 வது பெரிய நகரமாக இருக்குமோ? அப்படி என்றால், 9 க்கு என்னவாக இருக்கும்?” என்று யோசிக்கும்போது குழப்பம்தான் வந்தது.
“அப்படியே எல்லாம் ஓரளவு சரியாக வந்தால், கடைசியில் 24 என்று இருக்கிறதே. அது என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த நகரத்தில் உள்ள ஒரு தெருவாக இருக்குமோ?” என்று யூகம் செய்தார்கள்.
ஒருவர் அந்த யூகம் சரியென்றால், மற்றொருவர் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போலப் பதில் சொன்னார்.
அடுத்த குழுவில் உள்ளவர்கள் இரண்டாம் க்ளூவான, ‘மரை+செவிலியர்+நான்கில் ஒன்று’ என்பதை தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, கடைசியில் சேர்த்து பார்த்தால் தமிழ் நாட்டில் அப்படியொரு இடமே இல்லை.
மூன்றாவது குழு மூன்றாம் க்ளூவான, ‘பி.சி.33’
என்பதை வருடத்தைக் கணக்கு செய்து, அந்த வருடத்தில் ஏதாவது விசேசமான பெயரைத் தமிழ் நாட்டில் உள்ள இடங்களில் வைத்து யூகித்து பார்த்தார்கள். எதுவும் சரியாக வரவில்லை.
வாட்சப்பில் அப்பப்ப காவலுக்கு சவால் குழுவில் ஏதாவது தகவல் வந்ததா? என்று பார்த்துக் கொண்டார்கள்.
மூன்று குழுவிலும் மூன்று க்ளூக்களிலும் ஒரு முன்னேற்றம் கூட இல்லை. ஒரு சிலர் தங்கள் குழுவில் உள்ள க்ளூவை வைத்துக்
கூகுளில் தேடினார்கள்.
சிலர் முகநூலில் தேடி பார்த்தார்கள்.
வேறு சிலர் யூடியூபில் அந்த க்ளூவை வைத்துப் பார்த்தார்கள். எங்கேயும் அதற்கு விடை கிடைக்கவில்லை. உண்மையிலேயே சவாலாகத் தான் இருந்தது காவல்துறைக்கு.
ஆனால், நம் காவல்துறையினர் முயற்சி செய்வதில் சளைத்தவர்களா என்ன? தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள்.
அப்போது அனைவரின் வாட்சப்பில், ஒரு அதிர்ச்சியான தகவல் வந்தது. அது என்னவென்றால், ‘சமூக விரோதி நாளை இரவுவரை என்று சொன்னவன், இன்று இரவுக்குள் நாங்கள் சொன்ன நகரங்களில் முக்கியமான இடத்தில் குண்டு வெடிக்கும் என்றும், கவுண்டன் ஆரம்பமாகி விட்டது’ என்றும் தகவல் இருந்தது.
அனைத்து அதிகாரிகளும் மீண்டும், “இது நமக்கு விடுத்த சவால்தான்.
இதை முறியடிப்போம்” என்று சொல்லி இன்னும் உத்வேகமாகச் செயல் பட ஆரம்பித்தார்கள். அவர்களின் கடின முயற்சிக்குப் பலன் கிடைத்தது.
முதல் குழுவினர் முதல் க்ளூவைக் கண்டு பிடித்து விட்டார்கள். அது, 8 என்பது ஆங்கில எழுத்தில், எச் என்றும், 4 என்பது ஆங்கில எழுத்தில்
டி என்றும், 9 என்பது ஆங்கில எழுத்தில் ஐ என்றும் கண்டுபிடித்தார்கள். அதன்படி எச்.டி.ஐ என்று ஒரு ஆங்கில வார்த்தையின் சுருக்கம் வந்தது.
அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கும்போது, மீண்டும் அதே குழுவில் உள்ள ஒரு காவல் ஆய்வாளர், “அதன் விரிவாக்கம், எச்- ஹியுமன், டி- டெவலப்மெண்ட், ஐ- இன்டெக்ஸ்” என்றார்.
இரண்டையும் சேர்த்துவிட்டு, “24 என்பதற்கு என்னவாக இருக்கும்?” என்று யோசிக்கும்போது, வேறொரு காவல் ஆய்வாளர், “ஹியுமன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ் நம்பர். 24 என்பது ஜப்பானை குறிக்கும். அப்போ தமிழ்நாட்டில் ஜப்பான் என்பது சிவகாசிதான். குட்டி ஜப்பான்” என்று சொன்னதும், அந்தக் குழுவில் உள்ள அனைவரும் கைத்தட்டிப் பாராட்டினார்கள்.
உடனே இதை டி.ஐ.ஜியிடம் சொல்லிவிட்டு, காவலுக்கு சவால் வாட்சப் குழுவிலும் தகவல் அனுப்பினார்கள்.
உடனே டி.ஐ.ஜி இராமநாதன் சிவகாசி காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கொடுத்த ஒருமணி நேரத்தில் சிவகாசியில் முக்கியமான இடங்களில் வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதித்து, கடைசியில் மக்கள் அதிகம் கூடும் ஒரு பொது இடத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தார்கள்.
அந்தத் தகவலை டி.ஐ.ஜிக்கு சிவகாசி காவல் கண்காணிப்பாளர் அனுப்பி வைத்தார். அவரும் அதை காவலுக்கு சவாலில், ‘முதல் சவாலை வெற்றி பெற்றோம்’ என்று வாட்சப்பில் காவலுக்கு சவால் குழுவுக்கு அனுப்பி வைத்தார்.
அதைப் பார்த்து அனைத்து காவல்துறையினருக்கும் அளவில்லா மகிழ்ச்சி.
‘இன்னும் உத்வேகமாகச் செயல்பட்டால், அடுத்த இரண்டு சவால்களிலும் வெற்றி பெறுவோம்’ என்று மீண்டும் டி.ஐ.ஜி தகவல் அனுப்பினார்.
அடுத்த க்ளூவை கண்டு பிடிக்க, இப்போது முதல் குழுவும்,
இரண்டாவது குழுவுடன் சேர்ந்து கொண்டது. “மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று என்பதில், மரை என்பதற்கு தமிழில் மான் என்று பொருள்” என ஒரு காவல் ஆய்வாளர் சொன்னார்.
“அப்போ அடுத்த வார்த்தை செவிலியர். சிஸ்டர்” என்று சொன்னவர், அப்போ இரண்டையும் சேர்த்து பார்த்தால், மான்+சிஸ்டர்=மான்செஸ்டர் என்று வருகிறது. அப்போ அந்த நான்கில் ஒன்று என்பது என்னவாக இருக்கும்? என்று யூகிக்க ஆரம்பித்தார்கள்.
“நான்கு வேதங்களில் ஏதாவது ஒன்றா? அல்லது நான்கு யுகங்களில் ஏதாவது ஒன்றா” என்று யோசிக்கும்போது, ஒரு காவல் துணை ஆய்வாளர், “நான்கு திசைகளில் ஒன்றாக இருக்கலாம்” என்றார்.
ஒவ்வொரு திசையாக வைத்து யோசித்து விட்டு, இறுதியில் அது “தெற்கு” என்று உறுதியாகச் சொன்னார்.
“அது சரியாகத்தான் இருக்கும்” என்று சிலர் சொல்ல, அதன்படி, ‘மான்செஸ்டர்+ தெற்கு= மான்செஸ்டர் தெற்கு’ என்று வார்த்தை வந்தது.
“மான்செஸ்டர் என்பது இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில் நகரம். அதேபோல் தென்னிந்தியாவில் நெசவு தொழிலில் மிகப்பெரிய தொழில் நகரமான கோயம்புத்தூரை, மான்செஸ்டர் ஆப் சவுத் என்று சொல்வார்கள்” எனச் சொல்லி முடித்தவுடனே டி.ஐ.ஜி க்கு தகவல் தரப்பட்டது.
அவரும் உடனே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார். கோவை கண்காளிப்பாளருக்கு தகவல் கிடைத்ததும்,
உடனே வெடிகுண்டு நிபுணர்களுடன், கோவையில் முக்கியமான இடங்களில், வெடிகுண்டுச் சோதனை செய்யத் தீவிரமாக முயற்சி செய்தார்.
கடைசியில் மக்கள் அதிகம் கூடும் ஒரு இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பது தெரிந்தது. அதை வெடிகுண்டு நிபுணர்கள்
ஜாக்கிரதையாகச் செயல் இழக்கச் செய்தார்கள். சக்தி வாய்ந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்ததும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி இராமநாதனுக்கு தகவல் கொடுத்தார்.
அவரும் உடனே காவலுக்கு சவால் வாட்சப் குழுவில், ‘ஒரு சந்தோசமான செய்தி. இரண்டாவது சவாலிலும் வெற்றி பெற்று விட்டோம். ஆம். கோவையில் உள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டைச் செயல் இழக்க செய்து விட்டார்கள். அடுத்து மூன்றாவது சவாலிலும் சீக்கிரம் வெற்றி காண வேண்டும். ஏனெனில், இப்போது இரவு வரும் நேரம் ஆகிவிட்டது’ என்றார்.
மீண்டும் மூன்றாவது க்ளுவை பற்றிக் கண்டுபிடிக்க, இந்த முறை மூன்று குழுக்களும் சேர்ந்து கண்டு பிடிக்க முயற்சி செய்தார்கள்.
அப்போது முதல்வரிடமிருந்து டி.ஐ.ஜிக்கு பாராட்டு வந்தது. “இரண்டு மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்காமல் தடுத்ததற்கு காவல்துறை
பாராட்டுகிறேன்’ என்றும், ‘மூன்றாவது அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்து விட்டு வாருங்கள், தமிழக அரசு சார்பில் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
அதை அப்படியே காவலுக்கு சவால் வாட்சப் குழுவில் அனுப்பினார் டி.ஐ.ஜி. முதல்வரின் பாராட்டால் மகிழ்ந்த காவல்துறையினர், இன்னும் உற்சாகமாகக் கடமையாற்ற தயாரானார்கள்.
பி.சி 33 என்பதை பல கோணங்களில் யோசித்து பார்த்தார்கள். “பி.சி என்பதின் விரிவாக்கம் என்னவாக இருக்கும் என்றும், அதன் பெயரில் தமிழ் நாட்டில் முக்கியமான நகரம் உள்ளதா?” என்று யோசித்தார்கள். 33 என்பது, தமிழ் எழுத்துக்களில் உள்ள எண்ணாக இருக்குமோ? அல்லது ஆங்கில எழுத்தில் மூன்றாவது எழுத்தான சி சி என்று இருக்குமோ? அப்படி என்றால்?” சி சி என்று முடியும் நகரங்களை யோசித்து பார்த்தார்கள்.
ஒரு சிலர் “திருச்சியாக இருக்குமோ? என்று முடிவு செய்தார்கள். “ஆனால், அது சரியாக இருக்காது” என்று பலர் சொன்னார்கள். இருப்பினும், “நமக்கு நேரம் குறைவு என்பதால், திருச்சியில் முக்கியமான இடங்களில் வெடி குண்டுச் சோதனை செய்யச் சொல்வோம்” என்றார்கள்.
அதை டி.ஐ.ஜிக்கும் சொன்னார்கள். டி.ஐ.ஜியும் நேரம் குறைவாக இருப்பதால், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் திருச்சியில் உள்ள முக்கியமான இடங்களில் எல்லாம், அதிவேகமாக வெடிகுண்டுச் சோதனை செய்தார்கள். எங்கேயும் வெடிகுண்டுக் கிடைக்க வில்லை.
டி.ஐ.ஜி அலுவலகத்தில் உள்ள காவல்துறையினர் மற்ற இரண்டு இடங்களிலும், உடனே வெடிகுண்டுச் செயல் இழக்க செய்து விட்டோம் என்று தகவல் வந்தது.
“இந்த முறை அப்படி எதுவும் வரவில்லையே. நாம் இன்னும் க்ளுவை சரியாகக் கண்டு பிடிக்காமல் விட்டோமோ?” என நினைத்து வேறு வேறு கோணத்தில் யோசித்து பார்த்தார்கள்.
டி.ஐ.ஜியும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து வெடிகுண்டைச் செயல் இழக்க செய்து விட்டோம் என்று தகவல் வராதா,
என நிமிடத்திற்கு ஒரு முறை போனையே பார்த்துக் கொண்டு இருந்தார். சமூக விரோதி கொடுத்த கவன்டவுன் முடிய, இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தது.
டி.ஐ.ஜி காவலுக்கு சவால் வாட்சப் குழுவில் அந்தக் கவுன்டவுன் நேரத்தைச் சுட்டி காட்டி “சீக்கிரம்” என்றார்.
அப்போது அங்கே ஒரு துணை காவல் ஆய்வாளர், “நான் கண்டு பிடித்து விட்டேன்” என்று சத்தமாகக் கத்தினார்.
எல்லோரும் ,“என்ன க்ளூ?” என்று கேட்க, அவருக்கு உணர்ச்சி மிகுதியால் பேச்சு வரத் தடங்கள் ஆனது.
அருகில் உள்ள ஒரு ஆய்வாளர் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்துக் குடிக்க சொன்னார். அவரும் தண்ணீர் குடித்து விட்டு, அங்கே சத்தம் கேட்டு வந்த டி.ஐ.ஜியை பார்த்து, “அது தேனி சார்” என்றார்.
எல்லோரும், “எப்படி?” என்றார்கள்.
அந்தத் துணை ஆய்வாளர், “நான் பிறகு விளக்கம் தருகிறேன். முதலில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுங்கள் சார். நேரம் குறைவாகத் தான் இருக்கிறது” என்று சொன்னவுடன், டி.ஐ.ஜியும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அவர்களும் வெடிகுண்டு நிபுணர்களுடன், தேனி நகரில் உள்ள முக்கியமான இடங்களில் எல்லாம் வெடி குண்டுச் சோதனை செய்தார்கள். கடைசியில் ஒரு இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தபோது, அது வெடிக்க இருக்கும் நேரம் மிக மிகக் குறைவாக இருந்தது.
இருப்பினும், தங்கள் அனுபவ ஆற்றலை வைத்து, வெடிகுண்டு வெடிக்க இருந்த ஐந்து நிமிடங்களுக்கு முன்பே செயல் இழக்கச் செய்தார்கள்.
அந்தச் சந்தோச விசயத்தை டி.ஐ.ஜிக்கு சொன்னார் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.
டி.ஐ.ஜிக்கு சந்தோசம் தாங்க முடியாமல், அவர் அறையை விட்டு வெளியே வந்து உற்சாகமாக, “மூன்று சவால்களிலும் வெற்றி பெற்று விட்டோம்” என்றார்.
அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியாமல், தங்கள் அருகில் இருக்கும் காவலர் அதிகாரிகளிடம் கைக்கொடுத்துத் தங்கள் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது ஒரு அதிகாரி, “சார் மூன்றாவது வெடி குண்டு எங்கே இருந்தது? திருச்சியா? தேனியா? என்று கேட்டார்.
உடனே தான் டி.ஐ.ஜிக்கு நியாபகம் வந்தது. உடனே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு, “தேனியில் தான் அது இருந்தது. அதனால், நீங்கள் மேற்கொண்டு எங்கேயும் சோதனை செய்ய வேண்டாம்” என்று சொன்னார்.
அவரும் ‘சரி’ என்று சொல்லி விட்டுத் தங்கள் சோதனையை நிறுத்தி விட்டு அவர்கள் அலுவலகத்திற்கு சென்றார்கள்.
இப்போது டி.ஐ.ஜி அலுவலகத்தில் கடைசி க்ளூவை கண்டு பிடித்த துணை ஆய்வாளரிடம், “எப்படி கண்டு பிடித்தீர்கள்?” என்று கேட்டார் டி.ஐ.ஜி.
அவர் உடனே, “நீங்கள் அனுப்பிய மெசேஜை பார்க்கலாம் என்று
நான் திறந்து பார்க்க, அப்போது எதிர்பாராமல்
வேறொரு குருப்புக்கு சென்று விட்டேன். அதில் பார்லிமென்ட் கான்ஷ்டியுன்சி 33. தேனியில் ஒரு வாக்குசாவடியில் மட்டும் மறு வாக்குப் பதிவு என்ற பழைய செய்தி இருந்தது. அதைப் பார்த்தவுடனே சந்தோசத்தில் நான் கத்தி விட்டேன்” என்றார்.
அங்கே இருந்த அனைத்து காவல் உயர் அதிகாரிகளும் அவரைப் பாராட்டினார்கள்.
அப்போது முதல்வர் ஐ.ஜி அலுவலகம் வருவதாகத் தகவல் வந்தது. முதல்வரும் ஐ.ஜி அலுவலகம் வந்து அனைவரையும் பாராட்டினார்.
“எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்ததற்கு, தமிழக மக்கள் சார்பாக, நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார்.
முதல்வர் சென்றதும் டி.ஐ.ஜி, “நம் காவல் துறைக்கு விட்ட சவாலில் வெற்றி பெற்று விட்டோம். மேலும், இதற்காக உழைத்த அனைவருக்கும் நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
அப்படியே நானும் என் கதையைப் படித்த அனைத்து வாசக உறவுகளுக்கும், என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுபம்.
‘இராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போனால் நீ என்னைக் காதலிக்கிறதா அர்த்தம்’ அந்த பேப்பரில் எழுதியிருந்ததை கண்டு அனுராதாவிற்கு பயத்தில் படபடத்தது நெஞ்சம். அவள் ஓரளவுக்குத் தைரியசாலிதான். ஆனாலும் இந்த டாஸ்க் அவளை வெகுவாக அச்சுறுத்தியது.
இரண்டு நாளுக்கு முன் அவள் பாலாவிடம் தனது காதலைச் சொல்லியபோது அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவளது விளையாட்டுத் தனம் எல்லாம் அவனும் அறிவான் தானே. பக்கத்து பக்கத்தில் இருந்ததால் அனுவின் சேட்டைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவன் அவன்தான். மொத்தத்தில் அவளுக்கு வால் மட்டும்தான் இல்லை.
பாலாவை விடாமல் வம்பிழுத்து மாட்டி விடுபவளுக்கு அவன்மீது காதல் உணர்வு வந்திருக்க அன்றிலிருந்து வால்தனத்தினை அவனிடம் காட்டாமல் சற்று ஒதுங்கிப் போனாள். அதுவே அவனுக்கு வித்தியாசமாகப் பட ஒரு நாள் அவனிடம் கடிதத்தினை நீட்டியிருந்தாள். வாங்கியவன் படித்ததுமே அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். அவளது உடல்மொழி அனைத்தும் வித்தியாசமாகப் பட்டது.
உஷாரா இருடா பாலா. இல்லை இதை வச்சு பெருசா நம்மளைப் போட்டுத் தள்ளிடுவா என தனக்குள்ளேயே நினைத்தவன் “சாரி அனு. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை” என்று முடித்துக் கொண்டான்.
“ஏன் பாலா?” அவனது மறுப்பில் அவளுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. அவன் முன்னால் அழ வேண்டாம் என்று அமைதியாய் கேட்டாள்.
“எனக்குப் பிடிக்கலை அனு. நம்ம இரண்டு பேருக்கும் ஒத்து வராது. எனக்கு அந்த மாதிரி ப்லீங் எதுவும் உன் மேல வரலை. என்னை விட்டுடு” தன்மையாகவே பேசினான்.
“நான் விளையாடுறேன்னு நினைச்சுட்டயா பாலா. இல்லை. நான் உண்மையாத்தான் சொல்லுறேன்? ஐ லவ் யூ”
“நீ லவ் பண்ணாலும் என்னால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியல அனு”
“பாலா என்னால நீ இல்லாமல் இருக்க முடியாது. இனி நான் சண்டையெல்லாம் போட மாட்டேன். நீ என்னை ஏத்துக்கோ” வீம்பாய் ஒலித்தது அவள் குரல்.
எரிச்சல் வந்துவிட்டது பாலாவிற்கு.
அப்படியே திட்ட வாய் திறந்தவனை அவளது பேச்சு வாய் மூட வைத்தது.
“பாலா! நீ என் காதலை ஏத்துக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன். என்ன செய்யணும்னு சொல்லு” என்று சொல்ல எத்தனை நாள் நம்மளை போட்டு டார்ச்சர் பண்ணா.. இன்னைக்கு இவளை நாம வச்சு செய்யலாம் என்றெண்ணி அந்த பேப்பரிலேயே எதையோ அவன் எழுதிவிட்டு அவளிடம் நீட்டியிருந்தான்.
அவளும் ஆசையுடன் அதை வாங்கிப் படிக்க முகம் வெளிறிப் போனது.
“என்ன பாலா இது” குரல் கூட லேசாய் பயத்தின் சாயம் ஒட்டி வந்தது.
“நீதான் லவ் பண்ணுறதா சொன்ன. அது உண்மையா என்னென்னு நான் செக் பண்ண வேண்டாமா? ஏன்னா நீ யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்”
“அதுக்குன்னு இப்படியா? ப்ளீஸ் பாலா வேற ஏதாவது சொல்லேன் நான் செய்றேன்”
“நீ லவ் பண்ணுறது உண்மையாய் இருந்தால் இதைப் பண்ணு. இல்லை இடத்தைக் காலி பண்ணு
“சரி நான் இந்த டாஸ்க்கை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். நான் இதைச் செஞ்சு முடிச்சுட்டால் என்னோட காதலை நீ ஏத்துக்குவயா?”
“கண்டிப்பா ஏத்துக்குவேன்” என்று சொல்ல பாலாவிடம் “நான் யாருன்னு உனக்குத் தெரியாது.. நான் இதை செஞ்சு முடிக்குறேன் பாரு” என சவால் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.
மணி இப்போது 11.30 ஆகியிருந்தது
மீண்டுமொரு முறை அந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள்.
மனம் வடிவேல் டோனில் அதைப் படித்துப் பார்த்து ஒப்பாரி வைத்தது.
“பாவி. எனக்கு ஏத்த மாதிரி ஏதாவது டாஸ்க் குடுக்கலாம்ல அதைவிட்டுட்டு சுடுகாட்டுக் போகச் சொல்லுறான். நிறைய தடவை பேய் பேய்ன்னு நம்மளைத் திட்டுவானே. அங்க போனாலும் இவளுக்கு எதுவும் ஆகாதுன்னு நினைச்சுட்டான் போல. இப்போ என்ன 12 மணிக்கு நாம சுடுகாட்டுக்குப் போக முடியாதா? போய் காட்டுறேன். இந்த அனுவை அவன் சாதாரணமா நினைச்சுட்டான்ல. அவனை விடவே மாட்டேன். போயிட்டு வந்துட்டு அவனுக்கு இருக்கு. அனு நீ ரொம்ப ஸ்ட்ராங். சுடுகாடுக்குப் போறோம். அவன் மூக்கை உடைக்குறோம். அடுத்து அவனை போட்டு டார்ச்சர் பண்ணுறோம் என்றபடி மணியைப் பார்த்தாள்.
நேரம் இரவு 11. 40 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மொபைலை எடுத்துக் கொண்டாள். பக்கத்தில் இருந்த இரும்பு துண்டு ஒன்றை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள். அம்மணிக்கு பாதுகாப்புக்காம். ரொம்ப பலமான ஏற்பாடுதான்..
சாமி அறைக்குள் நுழைந்தவள் “ஆத்தா! உன் புள்ளையை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.. பொறுப்புல இருந்து பின்வாங்கிடாத ஆத்தா.. நான் திரும்பி வந்த உடனே உனக்கு பொங்கல் வச்சுடுறேன் சரியா?” என வேண்டிக் கொண்டவள் விபூதி பட்டையையும் போட்டுக் கொண்டு மையவெளிக்குள் வந்தாள். வீடே இருளில் மூழ்கியிருக்க மொபைலை காட்டிக் காட்டி வாசற்கதவு வரைக்கும் வந்துவிட்டாள்.
யாரும் எழுந்துடக் கூடாது என சத்தமே கேட்காத வண்ணம் கதவினைத் திறந்தாள். மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தாள் தாய், தந்தை இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க கூடப் பிறந்தவனும் குப்புற படுத்து அவன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான்.
‘போகாதடி. உசுருக்கு உத்தரவாதம் இல்லை’ மனம் அலறத் தொடங்க அடக்கிக் கொண்டு வாசல் தாண்டி கால் எடுத்து வைத்தாள்.
அதுவரை பளீரென்று எரிந்துக் கொண்டிருந்த விளக்குகள் அணைந்துவிட “அம்மாடி” நெஞ்சில் கைவைத்து அப்படியே நின்று விட்டாள்.
தூரமாய் நாயின் ஊளைச்சத்தம்..
கிடுகிடுவென உடல் நடுங்கத் தொடங்கியது.
‘உள்ள போயிருடி அனு’ இதயம் பதற “ஷ்ஷ் ரிலாக்ஸ்! முன் வச்ச காலை பின் வைக்கக் கூடாது” என்றெண்ணி பாலாவுக்கு started என வாட்சப்பில் மெசேஜ் தட்டிவிட்டு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு புறப்பட்டாள்.
அப்போதுதான் வேலையை முடித்துவிட்டு ரெஸ்ட்ரூம் சென்று வந்தவன் மொபைலைப் பார்க்க பக்கென்று ஆனது.
‘பையித்தியக்காரி நிஜமாவே சுடுகாட்டுக்குப் போறாளா! இவளை’ என பல்லைக் கடித்தபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
“பாலா” அவள் குரல் வித்தியாசமாய் ஒலிக்க இருந்த பதட்டத்தில் அவன் அதைக் கவனிக்கவில்லை.
“அனு வீட்டுக்குப் போ. இந்த நேரத்துல வெளிய இருக்குறது சேஃப் கிடையாது” கடிந்தான்.
“நீதானே பாலா சுடுகாட்டுக்குப் போக சொன்ன. நான் உன்னைக் காதலிக்கிறேன் பாலா. அங்க போகத்தான் செய்வேன்”
“அடியே அறிவில்லையா.. எது சொன்னாலும் செஞ்சுடுவயா?” திட்டியபடி இருந்தவன்
“பாலா” என்ற அவளது அலறலில் சட்டென்று மொபைலைத் தவறவிட்டு விட்டான். கேட்ட அவனுக்கே நடுக்கம் பிறந்தது.
மீண்டும் மொபைலை உயிர்ப்பித்து அவளுக்கு அழைக்க தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற குரல் வரவும் அவனுக்கு ஏதோ விபரீதம் என புரிந்தது.
“அச்சோ போச்சு.. இந்த பையித்தியம் பத்தி தெரிஞ்சும் நான் இவகிட்ட போய் இப்படி விளையாண்டிருக்கக் கூடாது” சட்டையை மாட்டியவன் மொபைலை எடுத்துக் கொண்டு நிமிடத்தில் வெளியே வந்திருந்தான்.
பயத்தோடு அவர்களின் தெருவினை அப்போதுதான் தாண்டி நடந்தாள் அனு. விளக்குகள் பளீரென்று எரிந்துவிட அப்படியே அந்த வெளிச்சத்தில் சுடுகாட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். போன் கையில் அப்படியே பத்திரமாக இருந்தது.
சுடுகாட்டை நோக்கி நடக்கும் போதே குழந்தை அழுவது போல் சத்தம் கேட்க முதுகுத்தண்டு அப்படியே சிலீரென்று உணர்வில் உறைந்துப் போய்விட்டது.
குழந்தை அழற சத்தம் கேட்டது.. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். இடமே அமானுஷ்யத்தின் பிடியில் இருப்பதைப் போலிருக்க அய்யய்யோ என அவள் வேகமாக எட்டு வைத்தாள்.
காலில் எதுவோ இடறியது.
“ஆத்தா! காப்பாத்து” என முணங்கியபடி பார்த்தாள். கண்கள் மின்னியபடி ஒரு பூனை அவளைத் தாண்டி நகர்ந்துவிட அப்படியே நிம்மதியுற்றவள் முன்னே நகர்ந்தாள்.
பெரிய ஆலமரம் இப்போது பார்வைக்குத் தெரிந்தது. அதைக் கடந்தால் ஒற்றையடிப்பாதை வரும். அதுதான் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி..
சகல தெய்வங்களையும் அவள் அழைத்தபடி நகர்ந்தாள். ஆலமரத்தினை நெருங்கியும் விட்டிருந்தாள்.
அந்த இடமே அவளை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது.
“கருப்பா காப்பாத்து.. காளியாத்தா காப்பாத்து..” உருப்போட்டுக் கொண்டே அவள் நடக்க, “அனு” என்ற குரல் அவளுக்குக் கேட்டது.
“இது பாலாவோட சத்தமாச்சே.. பாலா வந்துட்டானா..” என்றவாறு விழிகளைச் சுழலவிட்டாள்.
சத்தம் தான் கேட்டதே ஒழிய பாலா அவள் கண்ணுக்குத் தென்படவில்லை..
“அதானே அவனாவது வர்றதாவது? மெசேஜ் போட்டோமே.. வேண்டாம்டி வீட்டுக்குப் போடி.. நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்னு போன் பண்ணி தடுத்தானா.. எருமை மாடு ஹாயா தூங்கிட்டு இருக்கும். இருக்கட்டும்” என கருவிக் கொண்டு நடக்க, “அனு” மீண்டும் குரல் கேட்டது.
இம்முறை அந்த குரல் அவளுக்குள் அச்சத்தின் அளவினை அதிகப்படுத்தியது. அது பாலாவின் குரல் அல்ல.. அந்த குரலில் அவளுக்குள் அச்சம் பிறந்தது.
“வா அனு நீ போக வேண்டிய இடத்துக்கு நான் கூட்டிட்டு போறேன்” குரல் கரகரவென்று கேட்க அவள் தொண்டை அடைத்தது.
அப்படியே பின்னால் நகரப் போனவள் கல் தடுக்கி விழுந்துவிட, நச்சென்று அவள் தலை எதன்மீதோ மோதியது.
“அம்மா.. ஆ” லேசாக தலை உயர்த்திப் பார்க்க மண்பாண்டத்தின் உடைந்த துண்டில் தான் அவள் தலை மோதியிருந்தது. உடைந்தது மோதி அவள் தோலினை கீறியிருக்க இரத்தம் கசிந்து ஒரு துளி மண்ணில் விழுந்துவிட்டது.
விர்ரென்று சப்தம். காற்று பலமாய் அடிக்க ஆரம்பித்துவிட ஆலமரம் அப்படியே பேயாட்டம் ஆடத் தொடங்கியது. விழுதுகள் எல்லாம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப இப்படியும் அப்படியாக போய் வர அதுவும் அவள் மேலேயே போய் மோதி அவளை வலிக்கச் செய்தது.
குழந்தையின் அழுகுரல் வேறு விட்டு விட்டு கேட்க ஆரம்பித்ததும் வலியைத் தாங்கிக் கொண்டு எழ முற்பட்டாள். தரையைத் தொட்டுக் கொண்டிருந்த ஒரு விழுது மட்டும் அவளது காலில் சுற்றி இழுத்துவிட மீண்டும் நிலைகுலைந்து விழுந்து விட்டாள்.
தலை பயங்கரமா வலித்தது. இரத்தம் வழிந்து அவளது கண்களுக்குள் கலந்தது. பார்வை லேசாக மங்க பளீச்சென்று மின்னல் வேறு வெட்டி அந்த இடத்தினை இன்னும் பயங்கரமாக காட்ட நிமிர்ந்து பார்த்தவளின் கண்களுக்கு அந்த ஆலமரத்தின் கிளை மேல அமர்ந்தபடி அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் உருவம் தட்டுப்பட்டது.
அகோரமான அந்த பெண்ணின் தோற்றத்தில் நா உலர்ந்து போனது. இமைக்க மறந்து அப்படியே சிலைபோல அவளிருக்க இதயம் பயங்கரமாக அடித்துக் கொள்வது வெளியே கேட்க ஆரம்பித்துவிட்டது.
சர்ரென்று பறந்து வந்து அவளுக்கு முன்னே அமர்ந்தாள் அந்த பெண்.. அல்ல பேய்..
அவள் மேனியில் இருந்து பயங்கர துர்நாற்றம் வர இவளோ பயத்தில்
கண்களை பட்டென்று மூடிக் கொண்டாள். காதுக்குள் குழந்தை அழுவது கேட்டது. அச்சத்தில் கண்களைத் திறவாமலேயே அவள் எழப் பார்க்க முதுகின் மீது யாரோ சம்மணமிட்டு அமர்ந்திருப்பது போல் அதீத பாரம்.
நிமிரவும் முடியாமல் கண்களைத் திறவாமல் இருந்தவள் மூச்சு தடைபட தொண்டை வேறு அடைத்துக் கொண்டது. கழுத்தினை அழுத்தும் உணர்வில் இருந்து விடுபட முடியாது மொத்தமாய் மண்ணோடு மண்ணாய் அவள் சரீரம் கிடக்க அப்படியே கண்கள் சொருகி “என்னை விட்டுடு” என கெஞ்சியவாறே மயக்கத்திற்கு போய்விட்டாள் அனு.
போன் பண்ணா ரீச் ஆகவும் இல்லை. எங்கதான் போனா இவ.. ஆலமரத்தினை நெருங்கியிருந்தவன் அவ்விடம் முழுவதும் டார்ச் அடித்துத் தேடினான். அவளைக் காணவில்லை.
ஆலமரத்தினை மீண்டும் நோட்டம் விட்டுவிட்டு அவன் அந்த ஒற்றையடிப் பாதையில் செல்லத் தொடங்கினான்.
சுடுகாட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரமே இருந்தது.
“அனு! அனு! எங்கடி இருக்க?” என குரல் கொடுத்தவாறு அந்த பாதையில் தேடினான்.
உள்ளே நுழைந்த உடனே அவள் போனுக்கு டிரைப் பண்ண, அவனுக்கு சற்றுத் தள்ளி வெளிச்சம் மட்டும் மின்னி மின்னி அவளது போன் என்பதை உறுதிப்படுத்தியது..
வேகமாய் அங்கே சென்றவன் அவளைக் கண்டு அப்படியே பயந்துப் போனான். ஏனெனில் அவள் பாதி உடல் மண்ணுக்குள் புதைந்திருந்தது. பாதி மட்டுமே வெளியே கிடந்தது..
“ஏய் அனு! அனு” அவளை மடிதாங்கியவன் வேகமாய் மண்ணை தள்ளிவிடத் தொடங்கினான்.
அதற்குள் அனுவின் அண்ணன் சரணுக்கு அழைப்பு விடுத்தான். செய்தியைச் சொல்லிவிட்டு அவன் மண்ணைத் தோண்டினான்.
அவள் முகம் வேறு இரத்தம் படிந்து உறைந்து போய் அவளை அகோரமாகக் காட்டிக் கொண்டிருந்தது.
“ப்ளீஸ்டி எழுந்திரு. நான் உன்கிட்ட இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது” என நினைத்தபடியே அவன் மெல்ல மெல்ல அவளை வெளியே கொண்டு வர முயற்சி செய்தான். முழுதாய் அவளை வெளியே கொண்டு வரும் போதே கால் மட்டும் மண்ணுக்குள்ளயே இருந்தது.
மெல்ல காலையும் அவன் தூக்க.. அது மாட்டியிருப்பதை உணர்ந்து பொறுமையாய் விடுவிக்க முற்பட்டான். கொலுசு எதிலோ மாட்டியிருந்ததால் கால் வெளியே வர மறுத்தது. என்னவென்று லைட்டை அங்கே காட்ட அவளது கொலுசில் சிக்கியிருந்த சிவப்பு நிற துணியின் முனையைக் கண்டு அதை எடுக்கும் வேளையில் சரண் வந்துவிட்டான்.
இப்போதுதான் அவனுக்குள் இன்னும் தைரியம் வந்தது. வந்தவனோ “அனு! அனு!” என அவன் மடிந்து அமர்ந்துவிட, இவனோ கொலுசில் மாட்டியிருந்த அந்த துணியை பிடித்து இழுக்க மண்ணுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஒரு கால் மேலே வந்து விழுந்தது.
“அம்மா..” என அவன் அலறி விட சரண், “என்னடா ஆச்சு” என கேட்டான். அதைக் காட்ட சரணுக்குப் பயம் வந்துவிட்டது.
“ப்ச். மொதல்ல இவளைத் தூக்குடா” என சரண் திட்ட பாலாவும் அவள் கொலுசில் இருந்த அந்த துணியை விலக்கிவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டான்.
அழுகிய நிலையில் வெளி வந்து கிடந்த கால் உள்ளே புதைந்து கொள்ள,
“வீட்டுக்குப் போகலாம். வா!” என சரண் அவனை முன்னே தள்ளிக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.
வீட்டில், பிரம்மை பிடித்தது போல் இருந்த மகளைக் கண்டு பெற்றவர்கள் பதறிப் போனார்கள். பாலாவின் பெற்றோர் அவனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
“அவதான் சின்னப்பொண்ணு. நீயும் அவளுக்குச் சரிசமமா இப்படி இறங்கி பேசி வைப்பயா.. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தால் என்ன பண்ணுறது..?” என அவர்கள் திட்ட அவனும் தப்பு தன் பேரில் என்பதால் அதை ஏற்றுக் கொண்டான்.
இவர்கள் பேசுவதைக் கண்டுக் கொள்ளாமல் அவள் பாட்டுக்கு இருக்க, குழந்தையின் அழுகுரல் கேட்க ஆரம்பித்ததும்.. “அய்யோ என் பிள்ளை” என பதறி அடித்து வெளியே ஓடினாள் அனு.
“அனு அனு” பாலா விரைந்து ஓடினான்.
அவள் வேகமாய் ஒரு வீட்டிற்குள் நுழைந்து தொட்டியில் அழுதுக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.
“அம்மா வந்துட்டேன்டா.. அம்மா இனி உன் கூடவே இருப்பேன். நீ அழக்கூடாது என் தங்கம்ல” என கொஞ்ச அந்த குழந்தை அழுவதை விட்டுவிட்டு அவளையேப் பார்த்து அமைதியாகிவிட்டது.
இதைக் கண்டு பாலாவோடு சேர்ந்து அந்த குழந்தையின் தகப்பன் விக்ரமும் அதிர்ந்து போனான்.
“அனு! குழந்தையைக் குடுத்துட்டு நீ உன் வீட்டுக்குப் போ” என விக்ரம் தன்னிலைக்கு வந்து தெரிந்த பெண் என்பதால் அவளிடம் கை நீட்ட “காயத்ரிங்க” என்றாள் சிரித்தபடி.
விக்ரம் அதிர்வுடன் சுவற்றில் மோதி நிற்க பாலா வேகமாய் “ஏய் அனு.. வாடி வீட்டுக்குப் போகலாம்” என்று குழந்தையைத் தூக்க, “ஏய் விடுடா. என் குழந்தையைத் தொடாத. அவன் என் கூடதான் இருப்பான். விடு விடு. என்னை விடு. இதுதான் என் வீடு. நான் இங்க இருந்து வரமாட்டேன். மரியாதையாய் போயிடு” என அரட்ட, பின்னாடியே வந்த இருவரின் பெற்றோர்களும் அவளின் பேச்சினைக் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார்கள்.
விக்ரமின் தாய், “காயத்ரி ஆவி இவளுக்குப் பிடிச்சுடுச்சுப் போல கோடாங்கியைக் கூட்டிட்டு வந்து விரட்டலாம்” என அனுவின் பெற்றோர் அருகே வந்து சொன்னார்.
கோடாங்கியின் முன்னால் அனு அமர்ந்திருந்தாள்.
“இந்த பொண்ணு உடம்பை விட்டுப் போயிடு” கடினக் குரலில் மிரட்டினார் கோடாங்கி.
“மாட்டேன். நான் என் குழந்தைக் கூட இருக்கணும். அதுக்குத்தான் இவ உடம்புல புகுந்துருக்கேன். போக மாட்டேன்” ஆவி வீம்பு பிடித்தது.
“சொன்னால் கேக்க மாட்ட..” கண்களை உருட்டினார். பளாரென்று அறை வேறு விட்டார் கோடாங்கி..
உடுக்கை சத்தம் காதைக் கிழித்தது.
“போயிடு! போயிடு!”
“மாட்டேன் மாட்டேன்.. என் குழந்தை கூட இருக்கணும். இவதான் ராத்திரி தனியா வெளிய வந்தா. அப்பவே அவள் உடம்பை நான் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டேன். இனி நான் போக மாட்டேன்.. ” சிரித்தாள் அனு(காயத்ரி).
அனுவின் தலைமுடி கொத்தாக இப்போது கோடாங்கியின் கையில்.. பாலாவுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
“எல்லாம் உன்னாலதான்டா” அப்பா அவனை முறைக்க தலை குனிந்துக் கொண்டான்.
கோடங்கி விடாமல் அவளை போட்டு பாடுபடுத்தி உடலை விட்டு வெளியே வரவைத்து அனுவை அவள் கட்டுப் பாட்டிலிருந்து காத்துவிட்டார்.
“கருப்பன் கோவிலுக்கு புள்ளையைக் கூட்டிட்டுப் போய் அங்க இந்த கயிறை அவன் பாதத்துல வச்சு இவளுக்குக் கட்டிவிடுங்க. கவலைப்படாத. உன் பொண்ணுக்கு ஆயுசு கெட்டி. இனி கருப்பன் பார்த்துக்குவான்” என்று சொல்லவும் அவர்களும் அவளைக் கூட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்கள்.
கோடாங்கி விக்ரமிடம் திரும்பி “புள்ளை ஏக்கம். சுலபத்துல போகாது. அகால மரணம் வேற.. உடனே சாந்தி பண்ண ஏற்பாடு. இல்லைன்னா இப்படியாவே ஏக்கத்துலயே சுத்திட்டு இருக்கும். அது ஊருக்கும் நல்லதில்லை” என்று சொல்ல சரியென அவனும் எழுந்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் உடல் வலியால் அவஸ்தைப் பட்டுப் போனாள் அனு. அவளிடம் யாரும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் அவளுக்கு நடந்தது மங்கலாய் நினைவிற்குள் இருக்கத்தான் செய்தது.
பாலா அனுவைப் பார்க்க ஆசைப்பட பாலாவின் அப்பா நீ அங்க போகவே வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
மேலும் இரண்டு நாட்கள் கழிந்திருக்க, அவனது மொபைலுக்கு மெசேஜ் வந்திருந்தது..
“இராத்திரி பத்து மணிக்கு மொட்டை மாடிக்கு வந்தால் நீ என்னை காதலிக்கிறதா அர்த்தம்..” அனுதான் அனுப்பி வைத்திருந்தாள். சிரித்துக் கொண்டான் பாலா.. பத்துமணிக்காக அப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்தான்.
பத்து மணி ஆன உடனே வேகமாய் மொட்டை மாடிக்குச் சென்றான். அவளுக்காக நின்றிருக்க “பாலா” என அவள் குரல் மெல்லக் கேட்க சட்டென திரும்பியவன் “அம்மா பேய்” என அலற, “டேய் டேய் நான்தான்டா..” என்று அந்த முகமூடியைக் கழட்ட அதற்குள் சத்தம் கேட்டு ஐவரும் மேலே வந்துவிட்டார்கள்..
அனுதான் சங்கடப்பட்டுப் போனாள். இவன் இப்படிக் கத்திக் காட்டிப் கொடுத்துவிடுவான் என அவள் நினைக்கவே இல்லை.
“என்னடா நடக்குது பாலா..”
“அவதான் அப்பா பயமுறுத்துனா”
“விளையாட்டுத்தனம் எல்லாத்துலயும் இருக்கக் கூடாது அனு” என எச்சரித்து விட்டு அவர்கள் செல்ல பாலாவினை நெருங்கியவள் “எப்போ ஓகே சொல்லுவ?” என்று கேட்டாள்.
“பத்து மணிக்கு டான்னு மாடிக்கு வந்து நான்தான் ப்ரூப் பண்ணிட்டேனே. இனியும் உனக்கு ஓகே சொல்லணுமா?”
அவள் இதழ்களில் அழகான சிரிப்பு உதயமானது. அதையே ரசித்தவன் அவளை நெருங்கி “டாஸ்க் கம்ப்ளீட் பண்ண உனக்கு ஒன்னு கொடுக்கணும்னா ஆசைப்படுறேன்” ஹஸ்கி ஸாய்ஸில் முணுமுணுக்க, “பாலா” என சிணுங்கியபடி அவனைத் தள்ளிவிட்டு
வெட்கத்துடன் ஓட
“தராமல் விடமாட்டேன் டி” என அவனும் ஓடும் அவளைப் பார்த்து நிறைவுடன் புன்னகைத்துக் கொண்டான்.
உன்னை விடமாட்டேன்(சாலிஹா அலி)
உன்னை விட மாட்டேன்.
விழிகளை அங்கும் இங்கும் சூழல விட்டவள் அருகினில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியவள் கரங்களில் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் கவிகா.
அங்கே சென்றவள் குழாயை லேசாக திறந்து விட்டு கைப்பேசியில் இருந்த அருணா என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு வீடியோ அழைப்பை போட்டவள் ஒரு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டாள்.
மறுமுனையில் அழைப்பை உடனே எடுத்தவன் “ஹலோ என் ஜில்லு என்னடி பண்றே?” என்று கிறக்கமாகக் கேட்டான்.அவன் கேட்டதைப் பார்த்து இவளோ வெட்கப்பட்டப்படி “ப்ச் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் வீட்ல இருக்கும் போது கால் பண்ணாதீங்கன்னு யாராவது பார்த்திட்டா அவ்வளவுதான்” என்றாள் மெதுவாக…
அவனோ அவள் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் “என்ன ஜில்லு பண்ணச் சொல்லுறே? உன்னை நினைச்சிட்டே இருக்கிற எனக்குத் தான் தெரியும் உன்னைப் பார்க்காமல் நான் கடத்துற ஒவ்வொரு நொடியும் என் மனசு தவிக்கிற தவிப்பு” என்றான் ஏக்கமாய்…
அவளோ அவன் சொன்னதில் மொத்தமாய் கரைந்தவள் முகம் முழுக்க புன்னகை வெட்கத்தோடு “இப்போத் தானே நேர்ல பார்த்து பேசிட்டு வந்தேன்” என்று பொய்யாக கோபம் கொண்டாள்.
உடனே அவனோ “எனக்கு உன்னை எவ்வளவு கண்ணு நிறைய பார்த்தாலும் பத்தலையே என்னச் செய்ய?’’ என்றான் ஏக்கமாய்…
“ம்ம்… சரி சரி அதான் பார்த்தாச்சுல்ல இப்போ நான் போனை கட் பண்றேன் ரொம்ப நேரமா பாத்ரூம்ல இருக்க முடியாது அப்பா வந்திடுவாரு”
அவனோ “இது பத்தாது ஜில்லு இன்னும் வேணும்” என்றான் குறுகுறு பார்வையோடு….
அவளோ “இன்னுமா?” கேள்வியோடு கேட்க…
அவனோ “ஜில்லு ஜில்லுனு” என்று உதட்டை கடித்திட அவளோ தலையை குனிந்தபடி “அருண் இது எல்லாம் சரியில்லை எத்தனை தடவை சொல்லுறது” என்றாள் சிணுங்கலாய்…
அவனோ “ஜில்லு ப்ளீஸ் நேர்லயா கேட்டேன் வீடியோலத் தானே ” என்று அவன் கெஞ்சவும் இவள் தான் போட்டிருந்த துப்பட்டாவை லேசாக விலக்கவும் அதுவரை எரிந்துக் கொண்டிருந்த மின்விளக்கு படபடவென ஒளிர்ந்து அணைந்து மிளிர பின்னால் இருந்த சோப்பு டப்பா டமால் என்று கீழே விழுந்தது.இவள் அதிர்ச்சியில் திரும்பிப் பார்க்க… அந்த சத்தத்தைக் கேட்டு வெளியில் இருந்த குமரன் “அக்கா என்னாச்சு?” என்று பதற்றமாக கேட்டான்.
ஒரு காதில் ஹெட்போனை மாட்டாமல் இருந்ததால் அவன் பேசியது செவியில் விழ இவளோ “என்னன்னு தெரியலை பாத்ரூம்ல லைட் சரியா எரிய மாட்டேங்குது” என்று பதில் கொடுத்தாள்.
உடனே அவனோ “ரெண்டு நாளா அப்படித் தான் இருக்குது நீ பார்த்து வெளியே வா அக்கா நான் அப்பாட்ட புது லைட் மாத்த சொல்லி இருக்கேன்” என்றான்.
இவளோ உருகிக் கொண்டிருந்த தன் காதலனிடம் வீடியோ அழைப்பில் “அருண் நான் அப்புறமா பேசுறேன் பாய்” என்று பதில் கேட்காமல் அழைப்பை துண்டித்தாள்.
வேகமாக குழாயை மூடி விட்டு பேருக்காக முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.அங்கே படித்துக் கொண்டிருந்த குமரன் “அக்கா கீழே விழுந்திட்டியா? டமால்னு சத்தம் கேட்டுச்சு”
“இல்லை சோப்பு டப்பாத் தான் கீழே விழுந்திடுச்சு” என்று சமையலறையில் போய் சமைக்க ஆரம்பித்தாள் கவிகா.
சமையலை முடிக்கவும் அவர்களின் அப்பா குணசேகரன் வீட்டிற்குள் வந்தார்.
வந்தவர் “கவி கவிகா” என்று அழைக்கவும் சமையலறையில் வெளியே வந்தவள் அவர் வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய பையை கொண்டு போய் மேசையின் மீது வைத்தவள் “குமரன் எல்லா பொருளையும் எடுத்து வைச்சிடு” என்று சொல்லிக் கொண்டே அப்பாவிற்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
அதற்குள் குணசேகரன் முகத்தை கழுவி விட்டு தண்ணீரை குடித்தவர் பால்கனியில் போட்டிருந்த துணியை எடுத்துக் கொண்டு வந்தார்.
மூவருமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கவும் குணசேகரன் “கவிகா இந்த வருஷத்தோட உன் படிப்பு முடியுதுல்ல சீக்கிரம் வரன் பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றார்.
கவிகா எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள்.அதைப் பார்த்த குணசேகரன் “கவி உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டுமா? நீயே சொல்லு” என்றார் ஆவலாக…
கண்களில் கண்ணீரோடு அப்பாவை பார்த்தவள் “அப்பா ஏன் என்னையும் வெளியே அனுப்பிட்டு நீங்களும் தம்பியும் மட்டும் தனியா இருந்து கஷ்டப்பட போறீங்களா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்பா இப்பவே அம்மா இல்லாததுனால ஆளுக்கொரு வேலைப் பார்க்கவே சிரமமா இருக்கு இதுல என்னையும் அனுப்பிட்டா ரொம்ப சிரமப்படுவீங்க” என்றாள்.
உடனே குணசேகரன் “அதுக்காக எப்பவும் உன்னை எங்க சுயநலத்துக்காக கூடவே வைச்சிருக்க முடியாதும்மா” என்றார் கவலையாய்…
“அப்பா நான் அப்படி சொல்லலை அம்மாவை இல்லாமல் நாம இப்போத் தான் வாழப் பழகி இருக்கோம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!” என்றாள்.
குணசேகரன் நீண்ட பெருமூச்சை விட்டவர் “உன் அம்மா இருக்கும் போது நமக்கு தெரியலை கவிகா ஒரு வீட்ல இவ்வளவு வேலை இருக்கும்னு அவளை பார்க்கும் போதெல்லாம் விளையாட்டாகவும் சில நேரங்களில் கோபமாகவும் சும்மாத் தானே இருக்கே இதைச் செஞ்சால் என்னன்னு கேட்டிருக்கிறேன் அப்போ எல்லாம் சின்னதா சிரிப்பை மட்டும் பதிலா தந்துட்டு போவாள் இப்போ அதுக்கான அர்த்தம் என்னன்னு புரிய வைச்சுட்டா உன் அம்மா எப்பவும் யாரும் இருக்கும் போது அவங்க அருமை தெரியாதுன்னு நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்” என்று சொல்லும் போது சாப்பிட்ட உணவு உள்ளே செல்ல மறுக்க தண்ணீரைக் குடித்து உள்ளே தள்ளினார் குணசேகரன்.
குணசேகரனின் மனைவி பவானி இறந்து இன்றோடு ஆறு மாதமாகிறது.முதலில் குடும்பத்தை தனியாக சமாளிக்க திணறியவர் பின்பு கவிகாவின் உதவியோடு வீட்டையும் பார்த்து வேலைக்கும் போய் வருகிறார்.
சாப்பிட்டு முடித்து விட்டு எல்லோரும் அவரவர் அறையில் போய் படுத்தனர்.நள்ளிரவு நேரம் ஒரு மணியை தாண்டியிருந்தது.இவள் கைப்பேசியை எடுத்து தன் காதலனிடம் குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்தாள்.
இவளின் அறைக் கதவை முழுவதுமாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு திறந்து இருந்தது.யாரோ இவளின் அறைக் கதவின் வழியாக கடந்துச் செல்வது போல் நிழலாகத் தெரிந்தது.அப்பாவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள் அருணுக்கு பதிலளிக்க அவனோ அவளிடம் முத்தம் கேட்டுக் கொண்டிருந்தான்.
திரும்பவும் அதே போல் யாரோ கதவோரமாக கடந்துச் செல்வது போல் தெரிய எழுந்து வரவேற்பறையில் போய் பார்த்தாள்.அங்கே யாருமில்லை.அப்பாவின் அறையை போய் திறந்துப் பார்க்க குமரனும் அப்பாவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.யாரோ நடந்தது போல் தெரிந்ததா? என்று ஒருமுறை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும் போது சமையலறையில் இருந்த கதவை திறந்தது போல் சத்தம் கேட்டு வேகமாக போய் பார்த்தாள்.
சாத்தியிருந்த கதவை திறந்திருந்தது.ஜன்னல் கதவு மூடாமல் இருந்ததால் காற்றினால் திறந்திருக்கும் என்று எண்ணியவள் ஜன்னல் கதவை சாத்திவிட்டு சமையலறைக் கதவையையும் மூடினாள்.
இருந்தாலும் மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்க தன் அம்மாவின் புகைப்படத்தின் அருகினில் போய் விளக்கு ஏற்றியவள் கண்களை மூடி கும்பிட்டு விட்டு அருணிடம் நாளை நேரில் பேசுகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு படுத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.
மறுநாள் கல்லூரிக்குச் சென்றாள் கவிகா.அங்கே அவளுக்காக வாசலில் காத்திருந்தான் அருண்.அவனருகில் இருந்த அவனுடைய நண்பன் “டேய் மச்சான் எப்படிடா இவ்வளவு அழகான பிகரை கரெக்ட் பண்ணே? எனக்கும் கொஞ்சம் ஐடியா சொல்லேன்” என்றான் ஆதாங்கமாய்…
உடனே அவனோ “ப்ச் இவ்வளவு அழகான பிகரை கரெக்ட் பண்ணி என்ன செய்ய? இதுவரைக்கும் ஒரு சின்ன ஹக்கிங் கிஸ்ஸிங் ஒன்னும் இல்லை எதாவது ஒன்னு பண்ணனும்டா” என்றான் விஷமமாக…
உடனே பக்கத்தில் இருந்த இன்னொருவன் “அந்தப் பொண்ணை சாரு பரிதாபத்தை வைச்சு கரெக்ட் பண்ணா அவ அம்மா இறந்து போனதை வைச்சு தன்னோட அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்கன்னு கதை சொல்லி காதலை வளர்த்தான்” என்று சொல்லி சிரித்தான்.
அதைக்கேட்ட அருண் “ப்ச் அமைதியா இருடா என் ஜில்லு வருது” என்றதும் அவனோ “இது எத்தனையாவது ஜில்லுடா” என்ற போது இன்னொருவன் கவலையாக “கருமம் இவனுக்கெல்லாம் அமையுது நமக்கு தான் எதுவும் சிக்க மாட்டேங்குது” என்ற போது அருண் பேசிக் கொண்டிருந்தவனின் தலையில் ஒரு அடிப் போட்டு விட்டு “ப்ச் வாயை மூடு” என்று சொல்லி விட்டு கவிகாவைப் பார்த்து “ஹாய்” என்று கைக்காட்ட அவளோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வேகமாக அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
கல்லூரி வளாகத்தில் இருந்த பெரிய கட்டிடத்தின் பின்னால் அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொன்னாள்.
அங்கே அவளைக் கண்டவன் “ஹாய் என் ஜில்லு” என்று அருகில் வந்து நின்றவன் “ஏன் எப்போ பார்த்து நான் ஹாய் சொன்னாலும் பதிலே சொல்லாமல் போறே?” என்றதும்
“அருண் யாராவது பார்த்து எங்க அப்பாகிட்ட சொல்லிட்டா அப்புறம் பெரிய பிரச்சினையாகிடும் நாம இந்த மாதிரி தனியா பார்த்தே பேசிக்கலாமே” என்றாள் பயத்தோடு…
உடனே அவன் “நேத்து ஏன் போனை கட் பண்ணிட்டே?”
அவளோ பதற்றமாய் “அதெல்லாம் விடு அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொல்றாங்க” என்றதும் அவனோ “அப்போ நான் யாரு?” என்றான் கோபமாக…
உடனே கவி “நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன் அருண் எப்படியாவது நீ ஒரு வேலை செட் பண்ணிட்டு வந்து பேசு சரியா? நானும் அப்பாக்கு உதவியா இருக்கிறேன்னு சொல்லி இருக்கேன் பாவம் அப்பா எவ்வளவு சுமை தான் தாங்கிப் பாங்க உங்க வீட்டில நம்ம காதலைப் பத்தி பேசிட்டு வந்து பேசு” என்று அவள் ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போது சட்டென்று அவளே எதிர்பாரா நேரத்தில் அவளின் உதடுகளின் மேல் தன் முத்தத்தை பதிக்க வரும் நேரம் அவனே கவனிக்காத நேரத்தில் பிடித்து தள்ளினாள் கவிகா.
அவன் இரண்டு அடி பின்னால் விழவும் நடந்தது எதுவும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை.கவிகா இங்கே வெட்கப்பட்டவாறே நின்றுக் கொண்டிருந்தாள்.அவளோ நிமிர்ந்து பார்க்க அருண் கீழே கிடப்பதைப் பார்த்து அவனைப் பார்த்து பதறியவள் “என்னாச்சு அருண்?” என்ற போது “ஒன்னுமில்லை கால் ஸ்லிப் ஆயிடுச்சு” என்றவனுக்கு ஏனோ நெஞ்சை பிடித்து தள்ளியதும் அவளின் நினைவு வந்தது.
அந்த எண்ணத்தை தூற எறிந்தவன் “வா போகலாம் ஜில்லு” என்று அவள் கையில் அழுந்த முத்தமிட்டு தன்னோடு அழைத்துச் சென்றான்.
மறுநாளும் அதே போல் யாரோ கடந்து செல்வது போல் தெரிய இவள் சென்று பார்க்கும் போது யாருமில்லை.கொஞ்சம் நெஞ்சினில் பயம் வரத் தொடங்கியது.வீட்டில் இதைப் பற்றி பேசினால் தேவையில்லாத பிரச்சினை வரும் என்று அமைதியாக இருந்தாள்.நாட்கள் நகர்ந்துக் கொண்டிருக்க கவிகாவிற்கு தனியாக இருந்தால் எப்போது பார்த்தாலும் யாராவது தன்னை பார்த்துக் கொண்டு போலவும் அவளை கடந்துச் செல்வது போலவும் இருந்தது.
ஒருநாள் குணசேகரன் தன் வேலை விஷயமாக இரண்டு நாட்களுக்கு வெளியூருக்கு செல்ல இருப்பதால் கவிகாவையும் குமரனையும் வீட்டில் தனியாக இருக்க வைத்து விட்டு சென்றிருந்தார்.வேறு எங்காவது சொந்தக்கார வீட்டிற்கு அனுப்பலாம் என்றால் குமரனுக்கு தேர்வு இருந்ததால் அனுப்பாமல் வீட்டில் தனியாக இருவரையும் விட்டுச் சென்றார்.
நள்ளிரவு நேரம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அதுவரை குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்த அருண் கவிகாவை வீடியோ அழைப்பில் அழைத்தான்.
மெதுவாக குமரனின் அறையை எட்டிப் பார்க்க அவனின் அறையில் மின்விளக்கு அணைந்து இருந்தது.உடனே அழைப்பை எடுத்தவள் “ஹலோ” என்ற போது அவனோ அவளின் வீட்டின் வெளிக் கதவோரம் நின்றுக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்து பதறிய கவிகா “அருண் இங்கே என்னப் பண்ணுறே?”
“உன்னைப் பார்க்கத் தான் வந்தேன் கதவைத் திற” என்றான்.
அவளோ “அருண் விளையாடுறியா? குமரன் இருக்கான்”
“அப்பா இல்லைத் தானே நீ மெதுவா வந்து கதவைத் திற இன்னைக்கு நான் உன்னை பார்க்கலை ப்ராஜெக்ட் விஷயமா வெளியே போய்ட்டேன் உன்னைப் பார்க்கலாம்னு ஆசையா வந்தால் என்னை ஏமாற்றாதே ஜில்லு ப்ளீஸ் ஒரே ஒரு தரிசனம் கொடு” என்று அவன் உருகவும் இவளும் சரியென்று கதவை திறக்கலாம் என்று எழுந்து மெதுவாக சத்தமில்லாமல் முதலில் குமரனின் அறைக் கதவை திறந்துப் பார்க்க அவனோ தூங்கிக் கொண்டிருந்தான்.
கொஞ்சம் தைரியம் வரவும் “இதோ வரேன்” என்று அழைப்பை துண்டித்தவள் இருட்டில் நடந்து வரவும் இவளுக்கு முகத்திற்கு அருகில் ஏதோ தட்டுப்பட்டது.
என்னவென்று யோசனையாக கையில் இருந்த கைப்பேசியின் விளக்கை எரிய வைத்துப் பார்க்க அங்கே யாரோ ஒரு பெண் முகத்தின் முன்னால் நீளமான முடியை தொங்க விட்டவாறு தூக்கில் தொங்கியபடி உடல் ஆடிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்து நடுங்கியவள் “அம்மாஆஆஆஆ” என்று கத்தியபடி பின்னால் சென்று விழுந்தாள்.கையில் இருந்த கைப்பேசி கீழே விழுந்தது.அந்த உருவமோ இப்போது விழிகளை விரித்து கோரமான தன் முகத்தை அவளுக்கு காட்டியது.
அதைப் பார்த்து “அ…அம்மா பே… பேய் காப்பாத்து” என்று பயந்து கண்களை மூடினாள்.
தலையில் முக்காடு போட்டப்படி வீட்டின் வாயிற்கதவை வந்து திறந்து விட்டாள்.உள்ளே வந்த அருண் அவளருகில் வரவும் “இப்படி வா” என்று அவனை வீட்டின் பின்பக்கமாக சமையலறையின் ஜன்னல் பக்கமாக அழைத்துச் சென்றாள்.
இவனும் சிரித்துக் கொண்டே பின்னால் சென்றவன் அவளின் கையைப் பிடித்தபடியே “ஜில்லு இன்னைக்கு உன்னை நான் ஆசைத்தீர கொஞ்சட்டுமா?”என்றதும்
அவளோ திரும்பிப் பார்க்காமல் “ம்ம்…” என்றாள்.
அவனோ “எப்படினாலும் ஓகே தானே” என்ற போது “ம்ம்ம்….. நானே வேணாம்னு சொன்னாலும் நீ விடக்கூடாது சரியா?” என்ற போது அவளின் குரலின் ஒரு மாதிரி கரகரப்பாக மாறி இருந்தது.
அவனோ “என்னாச்சு ஜில்லு?” என்று அருண் திரும்பி நின்றுக் கொண்டு இருந்தவளை தன் பக்கமாக திரும்பவும் காற்றினில் போட்டிருந்த முக்காடு விலகவும் அதைப் பார்த்து அருண் அதிர்ச்சியானான்.
“நீ…நீநீ… தாமரை எப்படி வந்தே? செத்துட்டியே?” என்றான் பயமும் பதற்றதோடு…
அவளோ பெருங்குரலோடு “ஹ்ஹாஹா…நானா செத்துட்டேனா? இல்லையே உன் இதயத்துல தானே குடியிருக்கேன் உன்னோட முதல் ஜில்லு இப்போ அடுத்த ஜில்லை தேடி வர்றதுக்குள்ளே நானே உன்னைத் தேடி வந்துட்டேன்” என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நெஞ்சினில் கீறினாள்.
அவனோ அவளைப் பிடித்து தள்ளி விட முயற்சிக்க அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள் “நீ தானே சொன்னே நான் செத்தாலும் உன்னை நினைச்சிட்டே இருப்பேன்னு அதான் நீ என்னை ஏமாத்தி அனுபவிச்சு விட்டுப் போன பின்னாடியும் நான் தற்கொலைப் பண்ணி செத்துப்போயும் உன் கூடவே இருப்பேன்னு திரும்ப வந்து இருக்கேன்” என்று பெருங்குரல் எடுத்து கோரமாக கத்தியவள் அவளின் முகமும் அகோரமாகியது.அங்கே இருந்த மரத்தில் அவன் தலையை இழுத்துப் போய் முட்டினாள்.
இதை எல்லாம் சமையலறையின் ஓரமாய் வரவேற்பறையில் நடந்த நிகழ்வினில் பயத்தில் ஓடி வந்து ஒளிந்துக் கொண்ட கவிகா வெளியே நடந்தவற்றைக் கண்டு அப்படியே அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்து போய் நின்றாள்.
அருணிண் கழுத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் தாமரை.அவனோ வலியில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட கவிகா வேகமாக குமரனை உதவிக்கு அழைக்கலாம் என்று அறைக்கதவை திறந்துப் பார்த்தாள் கவிகா.
அந்த அறையில் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியானவள் திரும்ப சமையலறையில் உள்ள ஜன்னலின் வழியே பார்த்தாள்.இப்போது கொடூரமான முகம் லேசாக குமரனின் முகமும் மாறி மாறி தெரிந்தது.
அதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சியிலும் பயத்தின் உச்சியிலும் சென்றவள் செய்வதறியாது “அ…அம்மா அம்மா நான் இப்போ என்ன செய்வேன்? குமரனை பார்த்துக்க சொன்னியேம்மா கடவுளே எனக்கு என்னச் செய்றதுன்னே தெரியலை” என்று புலம்பியவள் பின்பக்கமாக இருந்த கதவை திறக்கவும் அங்கே அருணின் கழுத்தில் அமர்ந்திருந்த குமரனின் கையை யாரோ அழுத்திப் பிடிப்பதைப் பார்த்தாள் கவிகா.
அங்கே குமரனின் உடலில் இருந்து தாமரை வெளியே வராமல் பிடிவாதம் பிடித்தப்படி இருக்க அங்கே அரூபமாய் இருந்த உருவம் கவிகாவின் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது.
முகம் முழுக்க வெளிச்சத்தோடு தன் மகனின் கையைப் பிடித்தப்படி நின்றிருந்த பவானி “என் பொண்ணை காப்பாற்ற நினைச்ச நேரத்துல என் பையனை நான் இழந்திட்டேன் ஆனால் மொத்தமா விட்டுத் தர மாட்டேன்” என்று பவானி வேகமாக இழுக்க குமரன் அருணிண் கழுத்திலிருந்து கீழே விழ தாமரை அவனின் கழுத்தில் அப்படியே தங்கினாள்.
விழிகள் இரண்டும் கண்ட காட்சியினை நம்ப முடியாமல் கண்ணீரை பொழிய தன் தம்பியைப் பிடித்துக் கொண்டவளுக்கு அப்பொழுது தான் நடந்து முடிந்த சில காட்சிகள் கண்முன்னே சில நொடிகள் வந்து போனது.
கவிகாவை தன் நண்பர்களிடம் அருண் தேவைக்காக வைத்திருப்பதாக சொன்னதும் அதற்கு முன்னால் அருணின் பக்கத்து வீட்டுப் பெண்ணான தாமரையை காதலிப்பது போல் ஏமாற்றி அவளை அனுபவித்து தற்கொலைக்கு தூண்டியதும் வந்து இறந்து போனதும் தெரிந்தது.
இவளை துரத்திக் கொண்ட வந்த தாமரையின் ஆன்மா நேரம் பார்த்து கவிகாவின் உடலில் சென்று அருணை பழிவாங்க காத்திருந்தது.
ஆனால் கவிகாவின் வீட்டின் தன் பிள்ளைகளுக்கு காவல் காத்துக் கொண்டிருந்த பவானியை மீறி உள்ளே வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் தாமரை.
அமாவாசையான அன்றைய இரவு கவிகா யாரோ தன்னை கவனிப்பது போல் இருப்பதை கவனித்து தன் அம்மாவின் புகைப்படத்தில் விளக்கை ஏற்றி கண்களை மூடி இருக்கும் நேரம் குமரன் ஏதேச்சையாக அறையிலிருந்து வெளியே வர அப்பொழுது கவிகாவின் உடம்பில் செல்ல முடியாமல் அவனின் உடம்பில் புகுந்தாள்.
தினமும் அருணை தொடர்ந்தவள் கல்லூரியில் கவிகாவை அவன் தொட வரும் நேரம் தன் அரூப ஆத்மாவினால் அவனையும் தள்ளியும் விட்டதும் கவிகாவிற்கு தெரிய வந்தது.
கோரமான முகத்தோடு அருணின் தோளின் மேல் அமர்ந்தபடியே கவிகாவை தாமரை முறைத்தாள்.
கவிகா அருணைப் பார்க்க அவனோ முகம் முழுக்க இரத்தத்தோடு தன் கைகளை கழுத்தில் வைத்து “வலிக்குது வலிக்குது” என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு சொன்னான்.
உடனே அருணை இரண்டு கைகள் வேகமாக வெளியே தள்ளின.அவன் கழுத்தில் அமர்ந்திருந்த தாமரையோடு எதுவும் சொல்லாமல் தனக்குள்ளே புலம்பியபடி அவன் செல்ல… வெளிச்சம் இருந்த இடத்தில் தன் இரு கரங்களையும் எடுத்து மேலே கும்பிட்டவள் “அம்மா என்னை மன்னிச்சிடுங்க நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் நம்ம குடும்பத்தை இனிமேல் நான் கவனமா பார்த்துக்கிறேன்” என்று கதறி அழுதாள்.
தன் பிள்ளைகளுக்கு எந்த பிரச்சினையும் வராதவாறு அவனை பவானி துரத்தி விட்டாள்.அந்த வெளிச்சத்தோடு பவானியின் புன்னகை முகத்தை காட்டியபடி காற்றோடு கரைந்து போனாள் அவளின் தெய்வமான அம்மா.
குமரனை மெதுவாக கைந்தாங்கலாக பிடித்து அவனின் அறையில் படுக்க வைத்தவள் அம்மாவின் புகைப்படத்திற்கு அருகில் இருந்த விளக்கில் எண்ணெய் தீர்ந்துப் போக அதில் எண்ணெய் விட்டு விளக்கை ஏற்றியவள் மனமுருகி மன்னிப்பும் கேட்டு வேண்டிக் கொண்டவள் அருணைப் பற்றிய எல்லா விவரங்களையும் கைப்பேசியில் அழித்ததோடு தன் மனதில் இருந்தும் நீக்கினாள் கவிகா.
இரண்டு நாட்கள் கழித்து கல்லூரி முழுவதும் சீனியரான அருணைப் பற்றிய பேச்சாக இருந்தது.எங்கேயோ வண்டியில் போய் விபத்து ஏற்பட்டத்தில் தலையில் அடிப்பட்டு எல்லாம் மறந்து புத்தி கலங்கிப் போய் மருத்துவமனையில் இருப்பதாக கவிகாவின் தோழி சொன்னாள்.
அதை எதுவும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்தாள் கவிகா.அருணின் கழுத்தினில் நிரந்தரமாய் இருந்தாள் தாமரை.