Stories that touch hearts

Home  /  46. மோ.நித்யா சபரி (இளவேனில் சாய்ந்தாட ஒரு தோள்)  /  Chapter 8

CHAPTER 8

“இளவேனில்🍀🫂சாய்ந்தாட ஒரு தோள்…!!!”

By மோ.நித்யா சபரி · November 12, 2026

0

அத்தியாயம்-8-

“மம்மி, அங்கிள், டேய் ப்ரோ… உங்க எல்லோருக்கும் இருக்கிற இந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரு  சொல்யூஷன் ஒன்னு  என்கிட்ட இருக்கு, நல்லா கேளுங்க…!”    

என்று வருணி  அந்த ஹோட்டலின் பார்ட்டி ஹாலில் இருந்து தம்பி வீட்டுக்கே  அம்மா செல்ல முடிவு எடுத்திருக்கவும்….,  சட்டென்று உரத்த குரலிலே அனைவரிடமும்   இப்படிச் சொல்லி இடைமறித்தாள்….அவள் சொன்னதைக் கேட்டுத் திகைத்த குமரன், உடனே சுதாரித்துக் கொண்டு,      

“அக்கா என்ன சொல்ற நீ…?,  முதல்ல எங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு சொல்லு…?, அதான் நாங்க அம்மாக்கிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டோமே… அப்புறம் என்ன…?”     

என்று மழுப்பலாகச் சொல்லவும்….​அவனை ஒரு  பார்வை பார்த்து தீயாக முறைத்துக்கொண்டே வருணி,

“அடேய்… நீ இருக்கியே …?, போடா…  அத விடு…”   

   என்று தன் தம்பியை நக்கலாக நிறுத்தியவள், அங்கிருந்த ஒவ்வொருவரின் மனசுக்குள் ஓடிய ரகசியக் கணக்குகளை ஒவ்வொன்றாக அளவெடுக்கத் தொடங்கவும்….

   ‘இந்த வீட்டின் தலையாய வில்லனே நீதான்டா…!’ 

என மனதிற்குள் தம்பியை வசைப்  பாடியவள்  அதை வெளியே சொல்லாது மறைத்துவிட்டு ,     

“முதல்ல மம்மிக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லப்போறேன் கேளுங்க…. அவங்களோட காதல் கணவன், அதான் எங்க டாடி  ஆசை ஆசையா கட்டிய வீடு…., அவரோட வாழ்ந்த அத்தனை அழகிய நினைவுகளும் சுமந்து நிக்கிற அந்தச் சொந்த வீட்டை விட்டுட்டு வர அவங்களுக்கு துளியும் மனசு இல்ல…! , அதே சமயம், இப்போ அவங்களுக்கு தோள் கொடுத்து, ஃப்ரெண்ட்லியாகவும் லவ்வாகவும் இருக்குற டேவிட் அங்கிளையும் விட்டுட்டு பிரிய அவங்களால முடியல..சரிதானே மம்மி….!,   

அடுத்தது… டேவிட் அங்கிள் பிரச்சினை என்ன…?,  மம்மியை மேரேஜ் பண்ணிக்கிட்டு, மம்மி கூடவே இருக்கணும், அவ்ளோதான்…!,   

கடைசியா… என் அருமை கடைக்குட்டி சிங்கம்  உனக்கு என்ன பிரச்சினை சொல்லவா…? , உன் வைஃப் கர்ப்பமா இருக்கா…, அவளைக் கேர் பண்ணனும்… அப்புறம் பிறக்கப் போற குழந்தையைப் பார்த்துக்கணும்… அதையும் தாண்டி அப்படியே….  என்னான்னு எனக்கு தெரியும் விடு அத  வெளிய சொல்ல விரும்பல….”   

   ‘ உங்களோட அந்த ‘மாஸ்டர் பிளான்’ என்னன்னா உங்க பிள்ளைகள் வளர்ந்து அதுக பெரியதாகுற காலம் வரைக்கும் அம்மாவை உங்ககூடவே வச்சு உழைக்க சொல்லிட்டு, அதுக்கப்புறம் கழட்டிவிட்டுடலாம்னு மனசுக்குள்ள ஒரு கொடூரமான சுயநலத் திட்டம் போட்டிருக்கீங்களே, அதானே…?!’…   

என்று எல்லோர் பிரச்சனையையும்   வருணி மிகச் சரியாக வெளிப்படையாகச் சொல்லிவிட்டு ,  அப்படியே  மானசீகமாகவும், மனதின் வழியே தம்பி மற்றும் அவனின் மனைவியிடம் மட்டுமாக  அவர்களின்  ஒட்டுமொத்தத் திட்டத்தையும் அப்பட்டமாகப் போட்டுடைத்தாள் வருணி….  

  அவர்களின் மன ஓட்டத்தையும் அச்சுப் பிசகாமல் அவ  சொன்னதைக் கேட்டு, குமரனும் யாழினியும் அதிர்ச்சியில் உறைந்து போகவும்…. அவர்களின்  முகம் வெளுத்துப்போனது…. ஆனாலும் குமரன்,  

“ஆமாக்கா …. அதான்….அதான்… அவ்ளோதான்…”    

என்று தொண்டை அடைக்க அவன் திக்கித் திணறவும் …. யாழினியோ என்ன பேசுவதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நின்றாள்….​அவர்களின் நிலையைப் பார்க்கவும்…. வருணி ஒரு கெத்தான சிரிப்புடனே தொடர்ந்தவள்,  

  ​”சரி…, இப்போ உங்க மூவரின் பிரச்சினைக்கும் என்னிடம் ஒரு சூப்பரான தீர்வு இருக்கு…!” 

   “என்ன தீர்வு அது…?”  

என்ற ஆவலோடும் எதிர்பார்ப்போடும் சாரதாவும் டேவிட்டும் அவளை உற்றுப் பார்க்க…. மறுபுறம், குமரனும் யாழினியோ,

    ‘இவ என்ன புது குண்டை தூக்கி போடபோறாளோ…உன் தீர்வுலாம் எங்களுக்கு தேவையில்ல…!’

என்று மனதில் கருவியப்படி பயத்தோடும் எரிச்சலோடும்,  வருணியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்…. அப்பொழுது வருணியோ யார் முகத்தையும் பொருட்படுத்தாமல், தன் அதிரடித் தீர்வை அங்கே  வீசத் தொடங்கவும்,   

​”மம்மி… உங்க பிரச்சினைக்கு என்ன தீர்வுன்னா, நீங்க கட்டின அந்த வீட்டை விட்டு எங்கேயும் போக வேணாம்!… அங்கிள்… உங்க பிரச்சினைக்கு என்ன தீர்வுன்னா, நீங்க தனியா இருக்க வேண்டிய  எந்ந அவசியமும் இல்லை…! அப்புறம் ப்ரோ… உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் உங்க வாரிசை பார்த்து கொள்ள அம்மா உங்க கூடவே இருக்கணும்னு ஆசையில…​ஆகமொத்தம், உங்க மூவரின் பிரச்சினையும் ஒரே அடியில் தீர வேண்டுமென்றால்… அப்பா கட்டின அந்தச் சொந்த வீட்டுக்கே நீங்க எல்லாருமாக ஒண்ணாகக் குடிபோய்விடுங்கள்…. ஏன்னா அப்போ டேவிட் அங்கிளுக்கும் மம்மிக்கும் மேரேஜ் பண்றதுலேயும், அவங்க ஒண்ணாக வாழ்றதுலேயும் யாருக்கும் எந்தத் தடையும் இருக்காது…!, அதே சமயம், ப்ரோ… உன் மனைவியை கர்ப காலத்துல கவனித்து கொள்ளவும், உங்களோட வாரிசை வளர்க்கவும் எங்க அம்மாவும் அந்த வீட்டிலேயே உன்னோடே இருப்பாங்க….! இதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் ஒரே வழி…ஒரே தீர்வு…!”

என்றாள் வருணி உறுதியான குரலில் எல்லோருக்கும் விரிவாக…  அந்த அதிரடித் தீர்வைக்கேட்டு அங்கே சில கணங்கள் பேரமைதி நிலவியது….. ஆனால், அந்த அமைதியைச் சற்றும் தாமதிக்காமல் தவிடுபொடியாக்குவது போல  குமரனின் குரல் ஒலித்து,   

   ​”அதெல்லாம் ஒத்துவராது…! , நாங்க அம்மாவ எங்க கூடவே எங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு போவோம்…!”  

என்று மசிய மறுத்துத்  குமரன் திமிறவும்….. அவனது பேச்சிற்குத் துணைபோவது போல, யாழினியும் உடனே தீவிரமாகத் தலையசைத்துத் தன் கணவனின் முடிவை ஆமோதித்தாள்….     அவர்கள் காட்டிய அந்த வசீகரமான பாசம்!, வெறும் உதட்டளவிலான நாடகம்! என்பதும், உண்மையில் அம்மாவின் உழைப்பையும் சேவையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சுயநலம் மட்டுமே அவர்களின் மனதில் வேரூன்றியுள்ளது என்பதும் இப்போது அப்பட்டமாக வெளிப்படவும்….அப்படியே மகன் மற்றும் மருமகளின் இந்த நயவஞ்சக! முகத்திரை அங்கே கழண்டு விழுந்தது….

         ஒருவழியாக  அவர்களுடைய சுயநலத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்ட சாரதா,  அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்துபோய் விழித்து  தான் பெற்ற மகனே  தன் நிம்மதியைக் காவு கொடுக்கத் துடிக்கிறானே என்ற நிஜம் அவளது நெஞ்சை அறுத்தது…..   

    அருகில் நின்ற டேவிட்டும் திகைத்து, ஒரு தந்தையாகவும் தோழனாகவும் நின்று தான் விட்டுக் கொடுத்துப் பார்த்தாலும், இவர்களின் பேராசைக்கும் சுயநலத்திற்கும் எல்லையே இல்லை போலயே … என்பதை அவன் கண்கூடாக உணர்ந்தான்….

ஆனால், இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான்  வருணியும் காத்திருக்கவும்…!​, தன் தம்பியும் அவனது மனைவியும் எப்பேர்ப்பட்ட சுயநலவாதிகள் என்பதைத் தன் அன்னைக்கும் டேவிட் அங்கிளுக்கும் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தவள், இப்போது அது வெற்றிகரமாக நிறைவேறியதைப் பார்த்து மனசுக்குள் பெருமூச்சு ஒன்றை  விடவும்….   

  ‘அப்பாடா… முகத்திரையை அவங்களே அவங்க கையாலேயே கிழிச்சுட்டாங்க…!,…’  

என்று நினைத்தபடியே கோபமும் நிம்மதியும் கலந்த பார்வையைத் தன் தம்பியின் மீது வீசினாள் வருணி…. ஆனாலும், அங்கே களேபரமான சூழல் நிலவியபோதும், டேவிட்டின் முகத்தில் எந்தவொரு கோபமோ எரிச்சலோ நிழலாடவில்லை….. மாறாக, எப்போதும் போலவும் ஒரு அமைதியான முதிர்ச்சியும் அளவற்ற அன்பும் மட்டுமே அவனிடம் பிரதிபலித்து அப்படியயே அனைவரின் மத்தியிலும் சாரதாவை நெருங்கியவன், அவளது கைகளைப் பற்றி மிக மென்மையாக,  

   ​”சாருமா… உனக்கு நான் தாலி கட்டினாத்தான் நீ என் பொண்டாட்டின்னு அர்த்தம் ஆகாதுனு இதை நான் உன்கிட்ட முன்பே பலதடவை  சொல்லியிருக்கேன் தான்….அதையே  இப்பவுமே மீண்டும் சொல்கிறேன்… நீ உன் மகனுடனே போ…! அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்… உனக்கு எவ்வளவு காலம் அங்கே இருக்கத் தோணுதோ, அவ்வளவு காலம் அங்கேயே உன் மகன் வீட்லயே  இரு….உனக்காக… உன் நினைவுகளோடு நான் இங்கேயே காத்திருப்பேன் சாருமா…!”   

அப்படியாக டேவிட்  தன்னிடம் காட்டிய அந்த அசைக்க முடியாத காதலும், எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் அந்தப் பெருந்தன்மையும் சாரதாவின் இதயத்தில் பேரானந்தப் பெருவெள்ளத்தை ஏற்படுத்தவும்…. அப்படியே, எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னை விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் தன் குணம் மாறாமல், தன் மகன் மீது துளியளவும் கோபப்படாமல் நிற்கும் அந்த மனிதனை எண்ணி அவளுக்குள் மட்டற்ற பெருமை பொங்கியது….     அதே வினாடி, அவளது பார்வை அப்படியே திருப்பிச் குமரனை வெறித்து பார்க்க… அப்படியே அவனைச் சுட்டெரிக்கும் ஒரு உக்கிரமான பார்வையை வீசியவள், கோபமும் ஆற்றாமையும் பொங்க வார்த்தைகளைக் கொட்டி,   

” ஏண்டா குமரன்… உங்க அப்பா இறந்த பிறகு, நான் படும்பாட்டை பார்த்து என் சொந்த கஷ்டத்தையெல்லாம் மறைச்சுக்கிட்டு, ஒரு டீச்சரா வேலை பார்த்து, அந்த சம்பள  பணத்துல உன்னை  படிக்க வச்சு…, உன் அக்காவையும் படிக்க வச்சு ஆளாக்கினேன்…! இப்பதானே நான் ரிட்டயர் ஆகி, கொஞ்சூண்டு நிம்மதியா, சந்தோஷமா வாழலாம்னு நினைக்கிற காலத்துல… அதுக்குக்கூட என்னை நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு நினைச்சியாடா…! , அப்படியே….. உன்னோட சுயநலத்துக்கு என்னை எப்பவுமே ஒரு கருவியா பயன்படுத்திக்கணும்னுதானேடா நினைச்ச….? , சரி… நீ நினைச்சபடியே நடக்குது…!,  நான் உன் கூடவே வர்றேன்… உன் குழந்தைகள பாத்துக்குறேன்…. உனக்கு வேண்டிய அத்தனை பணிவிடைகளையும் செஞ்சு முடிக்கிறேன்… போதுமாடா இப்போ நீ மட்டும் சந்தோசமாக உன் குடும்பம் குட்டி வாழனும் அதானே ….?!”    

சாரதாவின் அந்த வார்த்தைகளால் அவர்கள் முகத்தை அறைந்தது போலவும் குமரன் மற்றும் யாழினியின் முகத்தில் வந்து விழுந்தது…..      ​இதைப் பார்த்துக் கொண்டிருந்த வருணியோ கடும் ஏமாற்றமும் வேதனையும் அடைய,   

‘ என்னத்த சொல்றது இவங்கள… நீங்க இப்புடி எல்லாவற்றிற்கும்  ரெண்டு பெருமா விட்டு கொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா…, இவங்களோ உங்கள கடைசி வரைக்கும் ஏமாத்தி யூஸ் பண்ணிக்கிட்டேதான் இருப்பப்பாங்க மம்மி, அங்கிள்….!’  

  என்று தன் தாயையும் டேவிட்டையும் நினைத்து மனம் வெதும்பிப் போனாள் வருணி…..​ ஆனால் சாரதா சொன்ன அந்தச் சுடுவார்தைகளும், அதைத் தாண்டி டேவிட் காட்டிய அந்த மலையளவு பெருந்தன்மையும் அங்கே நின்றிருந்த குமரனின் மற்றும் யாழினியின் மனதை முள்ளாகக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கவும்….தங்களது சுயநலத்தின் காரணமாக கெட்டப் பெயர்  வாங்கிவிட்டோமே….!!!, என்ற குற்ற உணர்ச்சி அவர்களின் மனசாட்சியை மெல்லத் தின்னத் தொடங்கியது…. 

அவர்களின் அந்த நிசப்தமான மௌனத்தையும் குற்ற உணர்வையும் கலைத்ததுபோல், அங்கே ஒரு பால்மணம் மாறாத மழலைக் குரல் ஒலிக்க…..

அது சின்னஞ்சிறு ஜோவிகா பாப்பாவின் குரல்தான்….!​, தான் என்ன பேசுகிறோம் என்றுகூட முழுமையாகப் புரியாத அந்த மழலை, பெரியவர்களின் முக மாற்றத்தைக் கவனித்துவிட்டுத் தன் மழலை மொழியில் குதூகலமாகக் கத்தி பேசியது…

🫂 தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…

🤔ஜோ பாப்பா  என்ன சொல்லி இருப்பாள் …?, பார்ப்போம்….​

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!