அவளா… அவளா?
“ஆஆஆஆஆ… ஆஆ……ஆஆ…ஆ….ஆ!!!!!!” என்னைய விடு என்னைய விடு! விட்டுடு!!!! , கிட்ட வராதே!! பிளீஸ்! பிளீஸ்! ஐயோம்மா!! வலிக்குது!! விடுடா!!யாராவது வாங்களேன்!!”” ஆ!…ஆ…ஆ..ஆ!…”
பவித்ரா தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தாள்!
சந்துரு ஓடி வந்து அறையின் விளக்குகளைப் போட்டவன்,”
” ஏய்!!! பவித்ரா! எழுந்துக்கோடி!! என்ன இது? கனவா! எழும்புடி! முழிச்சிப் பாரு! ஏய்!ஏய்ய்ய்!” என்றபடி அவளை உலுக்கினான்!
ராஜி, அறையில் இன்னொரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவள், சாவகாசமாய் எழுந்து வந்து,
” என்னண்ணா. என்ன ஆச்சு?” என்றாள். “”ம்ம். . .ம்ம்.. குழந்தை அழுதுச்சு!” என்றபடி அவளை முறைத்தவன்,” “
ஏண்டி இவ இவ்வளவு ஹை டெசிபல்ல கத்திட்டு இருக்கா, எருமமாடு உனக்கு எப்படித்தான் இப்படி தூக்கம் வருதோ?” என்று கத்தினான்.
“ஆமாண்ணா! அவளுக்கு டெய்லி அதான் பொழப்பு! ராத்திரி சன் டிவில ஆதிரா பார்க்க வேண்டியது!அப்புறம் தூக்கத்துல சிரிக்கிறது, அழறது, கத்துறதுன்னு ஒரே ஆர்ப்பாட்டம்தான்!”
அதற்குள் பவித்ரா விழித்து சுற்று முற்றும் பார்த்தவள் , தான் கண்டது கனவு என்று உணர்ந்ததும், எழுந்து உட்கார்ந்தாள்! உடல் முகம் எல்லாம் தெப்பலாக வியர்த்திருந்தது!
” என்னம்மா! ஏதும் பயங்கர கனா கண்டியா?” என்று சந்துரு அவள் அருகில் அமர்ந்து கனிவாக வினவினான்!
” ஆமாண்ணா! அவங்க என்னை விரட்டிட்டே வந்தாங்க! நான் ஓடிட்டே இருந்தேன்! திடீர்னு ஒரு ஆள் என் முன்னாடி வந்து என் முடியைக் கொத்தா பிடிச்சிட்டான்! நான் விடு விடுன்னு கத்திட்டே போராடினேன்! அவன் நகம் என் கன்னத்துல கீறிடுச்சு! அப்புறம் முழிச்சிட்டேன்!” என்றாள்.
” என்னடி! நேற்றும் இதே கனவுதானே சொன்னே! இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா டிரை பண்ணி இருக்கலாமே!” என்றாள் ராஜி கேலியாய்!
“ஆமா இன்னிக்கு என்ன டிரஸ்டி? நேத்து கனவுல சிவப்பு பாவடை போட்ருந்த! அந்த குண்டு ஆள் பிரவுன் ஷேர்ட்! கரெக்ட்டா?” என்றாள் ராஜி!
சந்துரு அதட்டினான்!” ஏய்! கொஞ்சம் பேசாம இரு! அவ ரொம்ப பயந்து போயிருக்கிறது தெரியலியா? போ! போய் குடிக்க ஜில்லுன்னு தண்ணி கொண்டுவா!” என்றான் கோபமாய்!
பவித்ராவுக்கு கண்களில் குளம் கட்டியிருந்தது!
ராஜி பேசாமல் சென்று ஒரு பாட்டிலில் தண்ணீரும், பூஜை அறையிலிருந்து திருச்செந்தூர் இலை விபூதியையும் எடுத்து வந்து, திருநீற்றை அவளுக்குப் பூசி விட்டு, அவளது தலையணையின் அடியில் வைத்தாள்! பிறகு அவளைத் தண்ணீர் குடிக்க வைத்துப் படுக்க வைத்தாள். அவள் சற்று கண்ணயரத் துவங்கியதும், சந்துருவை அழைத்தவள்,”
” அண்ணா! எனக்கும் கவலையாயிருக்கு! இவள் மூணு நாளா ஒரே கனவையே பார்த்துட்டு இருக்கா! சம்பவங்கள் , டிரஸ் கலர் கூட டெய்லி அதேதான் சொல்றா!” என்றாள் கவலையோடு!
சந்துரு,” சரிம்மா! அவ பக்கத்துலேயே கட்டில்ல படுத்துக்கோ! லைட் எரியட்டும்! காலையில் பவித்ராகிட்ட பேசலாம்!” என்றான்.
மறுநாள் காலை!
பவித்ரா சீக்கிரமே எழுந்தவள், முந்தைய இரவின் சுவடு கூட இன்றி சுறுசுறுப்பாக வேலைகளை முடித்தவள், குளித்து விட்டு வரவும், அவளைக் கண்ட ராஜி அதிர்ந்தாள்!
அவள் அணிந்திருந்தது, அவள் கனவில் அணிந்திருந்ததாய்க் கூறிய அதே சிவப்பு பாவாடை….!!!!!
மதுரை டோக்நகர் ஏரியா. அமைதியான அந்த கிளைச்சாலையில் , இடதுபுறம் திரும்பினால் ஒரு தெரு.அந்த தெருவின் கடைசியில் இரண்டு வீடுகள். முதல் வீட்டில் அண்ணன் திருமலைநாதன் மனைவி விசாலம். அது மாடியிலும் இரண்டு அறைகள் ,ஒரு நீள வெராந்தா என சற்றே பெரிய வீடு!
எதிர்த்த வீடு தம்பி தணிகாசலம் கல்லூரி விரிவுரையாளர், மனைவி பிரேமா வங்கியில் பணி. அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.இரண்டு ஆண் குழந்தைகள். பெரியவன் ஆறாவது, சின்னவன் நான்காவது படிக்கின்றனர். கடைசியில் ஒரு பெண்குழந்தை யூகேஜி.
அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக அந்தப் பெரிய வீட்டில்தான் இருந்தனர்.
திருமலைநாதன் இயல்பிலேயே மிகவும் சபலம் உடையவர். வேலைக்கு வரும் பெண்களிலிருந்து, சற்றே வறுமையான அவரிடம் உதவி கேட்டு வரும் பெண்கள் வரை எல்லோரிடமும் சில்மிஷம் செய்பவர். படிந்தால் கொண்டாட்டம்தான். அவர்கள் வீட்டிற்கு காய்கறி கொண்டு வரும் முத்து போன்ற பெண்கள் அவர் அவ்வப்போது தரும் அதிக காசுக்காக சில பல வழிசல்கள், உரசல்களைப் பொறுத்து போவதும் நடப்பதுதான்.
பிரேமாவுக்கு அவரது மேய்ச்சல் பார்வை பிடிக்காமல் போனதில், இருவரும் எதிர்த்த வீட்டை வாங்கி குடி போய்விட்டனர். விசாலத்திற்கும் கணவனது புத்தி தெரிந்தே இருந்ததால் அமைதி காத்தார்.
விசாலம் வசதியான வீட்டிலிருந்து வந்தவர்தான். ஆனால் கோழை. அப்பா அம்மா கிடையாது. எதற்கும் பயந்து பணிந்து போய்விடுவார். கணவரின் நடத்தையால் அவமானமும், மன உளைச்சலுமாய் இருந்தவருக்கு, இத்தனை வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லாமலிருந்தது அவரை அதீத மனச் சோர்வுக்கு ஆளாக்கியது. வயது நாற்பத்தி ஒன்று. எனினும் ஒவ்வொரு மாதம் நாட்கள் சிறிது தாமதமானாலும், ஆர்வமாகிப் பின் இல்லை என்னும்போது அழுது கரைந்து என உடல்நிலையும் குன்றியது. அதுவும் உற்றம், நண்பர்கள் என,” இன்னும் நல்ல சேதி இல்லையா?” என்கையில் அதீத மன அழுத்தத்தில் ஆழ்ந்தார். திருமலைநாதன் இதையுல்லாம் சட்டை செய்வதே இல்லை! இந்த சமூகமும் பெண்களை நோக்கித்தானே சுட்டு விரல் நீட்டிக் கேள்வி எழுப்பும்!
அந்த சமயத்தில்தான் விசாலத்தின் சித்தப்பா வழி அண்ணன் உறவில் அவரது மனைவி, வாய்க்காலில் குளிக்கும்போது, சுழலில் அகப்பட்டு, நீரின் வேக இழுப்பும், அலசிக்கொண்டிருந்த நான்கைந்து புடவைகள் காலில் சிக்கியதுமாய் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். அந்த அண்ணன் தினமும் குடித்தே சீரழிபவர். விக்கிரமசிங்கபுரம் மில்லில் வேலை பார்த்தாலும் குடியில் எப்போதும் இருப்பவரால் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.
அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் காதலித்தவனுடன் ஓடிப் போய் எங்கேயோ கண் காணாமல் வாழ்கிறாள்.தொடர்பு இல்லை. அடுத்தது மீனா. கடைசியில் லோகு! மீனாவை விசாலத்தின் துணைக்கு அனுப்பினர்.
பவித்ராவின் குடும்பம் திருமலைநாதன் வீட்டின் மாடிக்கு குடி வந்து ஐந்து மாதங்கள் முடியவில்லை. பவித்ரா ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.அவளுக்கு மூத்தவள் ராஜி இப்பொழுதுதான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். பெரியவன் சந்துரு பி.காம்.எல்.எல்.பி. மூன்றாவது வருஷம். தாய் இல்லை. தந்தை நாக்பூரில் இரயில்வேயில் வேலை! அவர்களது தாய்மாமா குடும்பம். மதுரையில் கலைநகரில்தான் இருக்கிறார்கள். மாமா வெங்கடாசலம் ஒரு மருத்துவர்.ஜெனரல் பிசிஷியன். எம்டி. யும் கூட. அவர்களது கண்காணிப்பில் பிள்ளைகள் அந்த ஊரில் இருப்பது அம்பலவாணன், அவர்களது தந்தைக்கு நிம்மதி்.
விசாலத்திற்கு பவித்ராவின் குடும்பத்தை மிகவும் பிடித்தது! ராஜியின் சூட்டிகை, பவித்ராவின் அமைதி அவர்கள் வீட்டில் எந்நேரமும் அலறும் டிவி திரில்லர் சீரியல்கள், பவித்ரா ஹாரர் படங்கள் பார்த்து விட்டு செய்யும் அலப்பறைகள், சந்துருவின் அதட்டல் என அவர்கள் வீட்டில் இருக்கும்போதெல்லாம் விசாலத்திற்கு சந்தோஷமாய்ப் பொழுதுகள் கழியும். ஏதாவது சமைப்பதைக் கொடுத்து விடுவார்.ஸ்பெஷலாக ஏதாவது செய்தால் ராஜி வாசம் பிடித்தபடி வந்து விடுவாள். விசாலத்தின் மனஅழுத்தம் கொஞ்சம் குறைந்தது!
இந்த வீட்டுக்கு வந்த புதிதில், எல்லாம் நன்றாகவே இருந்தது. பத்து பதினைந்து நாட்களில் பவித்ராவின் நடவடிக்கைகளில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது! தனியே போய் ஓர் இடத்தை வெறித்துப் பார்ப்பதும், எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று எழும்பி அசையாமல் நின்று மௌனமாய் எதிரேயோ, கீழேயோ பார்த்தபடி நிற்பதும் என பவித்ராவின் செய்கைகள், ராஜிக்குப் புரியவில்லை. பவித்ராவை உலுக்கினாலும் அவள் அந்த நிலையிலிருந்து மாறுவதில்லை. பின் தானாய் இயல்புக்கு வந்த பின் அவள் கேட்பது,” நான் இப்பொழுது என்ன செய்தேன்?”
சந்துருவுக்கும் கவலையானது. மாமாவிடம் பகிர்ந்து கொள்ள அவர் பவித்ராவுக்கு எல்லா சோதனைகளும் செய்து பார்த்து எல்லாம் நார்மல் என்றதும், ” ஏதோ மனக்குழப்பம் போல இருக்கு. அவளிடம் மெதுவாகப் பேசி ஸ்கூலில் எதுவும் நடந்ததான்னு கேட்போம். கொஞ்ச நாளைக்குத் தனியே விட வேண்டாம் . தேவைன்னா கவுன்சலிங் கூட்டிட்டு போறேன்!” என்றார்.
மீனாவுக்கு விசாலம் நாலைந்து செட் புதுத்துணிகள், கவரிங்கில் புது மாடலாய் வளையல், செயின், கம்மல் என எடுத்துக் கொடுத்திருந்தார். நல்ல சாப்பாடு , ஓய்வு, துணிமணி என ஆளே மாறி விட்டாள். கறுப்புதான். ஆனால் களையான முகம். இப்போது சதை பிடித்து பெரிதாய் விம்மித் தணியும் மார்பகங்களும், சதைப்பிடிப்பான பின்னழகுமாய் ஆளை அசத்தும் வடிவழகில் இருந்தாள். போன வருடம்தான் வயதுக்கு வந்திருந்தாள். போஷாக்கு உடல் வனப்பையும் மினுமினுப்பையும் தந்திருந்தது. விசாலத்திற்கு அவரது கணவரை நினைத்து ஒரு பயம். ஆனாலும் மீனா சின்னக் குழந்தைதானே என நினைத்திருந்தார். திருமலைக்கும் மீனாவைக் கண்டாலே ஆகாது. அவர் கண்களில் படக்கூடாது, ஹால் சோஃபாவில் எல்லாம் உட்காரக் கூடாது, ஊஞ்சல் தட்டு, அவரது அறைப் பக்கமெல்லாம் கால் படக்கூடாது என ஏகப்பட்ட கெடுபிடிகள். சோற்றுக்கு வழியில்லாமல் வந்தவள் என இளக்காரம்.விசாலத்திற்கு ஒரு வகையில் நிம்மதி.
வாசலில் காலிங்பெல் அடிக்கவும் சென்று கதவைத் திறந்தவள் மூர்த்தியைக் கண்டதும்,” வாங்க!” என்றபடி உள்ளே சென்றாள். மூர்த்தி திருமலைநாதனின் பால்யகால நண்பர். குடும்பம், குழந்தைகுட்டி எதுவும் கிடையாது. தனிக்கட்டை!
“வாடா! என்ன காலங்கார்த்தால..,.?”
“ஏன் ஒரு வாய் காப்பி தரமாட்டியா(“
“பேஷா!” என்றவர் உள்ளே பார்த்து “விசாலம். .!” என்றவர், “மூர்த்திக்கு காப்பி கொண்டு வா!” என்றார்.
காப்பியைக் கப்பில் ஊற்றியதும்,
” அத்தை நான் கொண்டு போறேன் !” என்றாள் விசாலத்திற்கு வால்பிடித்தபடி வந்த மீனா! குழந்தை மனதை நோகடிக்க விருப்பமின்றி விசாலம் தலையசைத்தார். மீனாவைக் கண்ட மூர்த்தியின் விழிகள் தெறித்து விடும்போல் அகன்றது!
மேல் வீட்டில் பவித்ரா, ” ஹேய் மீனாதானே அது அங்க. .!” என்றாள் ஒரு சுவற்றைப் பார்த்தபடி! ராஜி புரியாமல் அவளைப் பார்த்தவள், “எங்கேடி? டிவியிலா. ்?” என்றாள்.
“யாரு டிவியில். .?” – பவித்ரா.
“யாரோ மீனான்னு சொன்னியே!”
“மீனாவா அது யாரு?”
ராஜி குழம்பினாள்.
‘இவளுக்கு என்ன ஆச்சு?’
திருமலை நாதன் மீனாவின் கையிலிருந்த கப்பை ஓங்கி உதைத்தார்.
“பிச்சைக்கார கழுதை இன்னொரு தடவ இங்கே வந்த, கழுத்தை திருகிருவேன்!”
பயந்து ஓடினாள் மீனா.
“நீ ஏண்டா இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க?”
“டேய்! பாக்கவே அருவெறுப்பா அழுக்கா இருந்த பொண்ணா இது. .? சும்மா தளதளன்னு. . . . உடம்பு சூடாகுதுடா. .!”
“ச்சைக் வேலைக்காரிடா. .உளறாத. .!”
“வேலைக்காரியா? வீட்டுக்காரி மாதிரி மினுமினுப்பா இருக்கா. வெளியே எங்கேயும் விடாம பொத்தி வை. யாராவது இழுத்துட்டு ஓடிருவாங்க!”
திருமலைநாதனின் பார்வை இப்போதெல்லாம் மீனாவை யாருமறியாமல் மேய்ந்தது.
“மூர்த்தி சொன்னது சரிதான். என்ன ஒரு உடல்வாகு. .! இவ்வளவு நாள் கவனிக்காம விட்டேனே!”
“ராஜி அங்க யாரோ அழறா மாதிரி கேக்குதுல்ல!”
“எங்கேடி?”
“அந்த மாடிப்படி கீழ. .! சிவப்பு பாவாடை கூட தெரிஞ்சது!”
“அவங்க வீட்டுக்கு யாராவது வந்திருப்பாங்க. நமக்கெதுக்கு? நீ போய் முகம் கழுவிட்டு ஹோம்வொர்க் செய். நான் உனக்கு குடிக்க ஏதாவது தரேன்.!”
விசாலம் கடைக்கு சென்றிருக்க, சாயந்தரம் வருவதாக இருந்த திருமலை மதியமே வீடு திரும்பினார்.
மீனா அடுப்படியில் இருந்தாள்.
“மீனா தண்ணீர் தாம்மா!”
‘மாமாவா. . .தன்னிடமா. .?’
அவசரமாகத் தண்ணீர் கொண்டு சென்றவள், படி இடறி தன் மேலே கொட்டிக் கொண்டாள்.
“என்ன அவசரம்? மெதுவா வந்தா என்ன?”
விழி விரியப் பார்த்திருந்தவள் நெஞ்சில் தன் வேஷ்டியால் துடைத்தார்
பின் கைகளால். இன்னும் அழுத்தி!
நெளிந்தவளைத் தன் மார்போடு இறுக்கி அணைத்தார்.சட்டை பட்டன்களை அவிழ்த்துக் கொண்டார். அவள் முகத்தை தன் மார்பில் புரட்டினார்.
“உன் மாமாதானே!”
அன்றொருநாள் விசாலம் அடைமாவு தரேன் என்று சொன்னார் என வாங்குவதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்ற பவித்ரா கதவு திறந்திருக்கவும் சுவாதீனமாக உள்ளே சென்றவள், மூர்த்தியைப் பார்த்தாள்.
அவர் திருமலையிடம், “ரொம்ப பயம்மா இருக்குடா! தூங்க முடியலை!காதில் மீனா விட்டுடுங்கன்னு சதா சர்வ காலமும் கத்திட்டே இருக்கா!”
“செத்தவளைப் பத்தி என்னடா உனக்கு? லூசுப்பயலே!”
அத்தை வருவதற்காகக் காத்திருந்த நேரத்தில் அவர்கள் பேசுவதை முழுவதுமாகக் கேட்டிருந்தவளுக்கு நிறைய புரியவில்லை.
அன்று விருதுநகரில் ஒரு கல்யாணத்திற்கு இருவரும் சென்றிருந்தனர். மொய் எழுதியதும்,” விசாலம் எனக்கு சாத்தூர்ல ஒரு அவசர வேலை! லேட்டானா நீ நம்ம ஜெகனோட வந்திரு!” என்றபடி கிளம்பினார்.
காலிங்பெல் சத்தத்தில் கதவைத்திறந்த மீனா மூர்த்தியைப் பார்த்ததும்,
” அத்தையும் மாமாவும் வெளியே போயிருக்காங்க!”
“தெரியும்!”
ஊஞ்சலில் அமர்ந்தவர், “என்ன வெயில்! கொஞ்சம் தண்ணீர் தரியா?”
தந்தாள்.
“வா! இப்படி உட்காரு!”
தன்னருகில் அமர்த்திக் கொண்டவர், அவள் தோள்களை இறுக்கியபடி, தொடையில் கை வைத்தார்.
நெளிந்தாள்.
” அந்த ஸ்பெஷல் பாக்கு வைச்சிருப்பானே எடுத்து தா!” என்றபடி வெற்றிலையை மடித்தார்.
எடுத்துக் கொடுத்தவள், சிட்டாக வெளியே ஒடினாள்.
வாசல் கேட்டைத் திறந்து, திருமலைநாதன் உள்ளே நுழைந்தார்.
“அத்தை எங்க மாமா?”
உக்கிரமாய் முறைத்தார்.
பயத்துடன் உள்ளே சென்றாள் மீனா!
“என்னடா குட்டி படியாது போல!”
“இங்கே வா!” திருமலை அழைத்ததும் ஓடிச் சென்றவளை, இருவருக்கும் நடுவில் அமர்த்தினார்.
மூர்த்தியின் கைகள் எல்லை மீறின!
“மாமா அவர். . .!”
“அவரும் மாமாதான்!”
சிவப்பு தாவாணியை உருகி வீசினார். சட்டையில் கை வைத்து இழுக்கையில், ” மாமா என்னை விட்டுடுங்க. . .எனக்கு பயம்மா இருக்கு! அத்தை. . .அத்தை. .!”
“அவ சாயந்திரம்தான் வருவா. அதுக்குள்ள நம்ம ஆட்டத்தை முடிச்சிக்கலாம்.!”
“வேண்டாம். வேண்டாம். மாமா!”,
” என்னடி, பிச்சைக்கார பரதேசி! கூட்டிட்டு வந்து, மூணு நேரம் சோறு போட்டு துணிமணி கொடுத்து பளபளப்பாக்கிருக்காளே உன் அத்தை! யாரு சம்பாத்தியம் இதெல்லாம். .ம்ஹ்ம். நன்றி வேண்டாம்!”
“மாமா எனக்கு இந்த புது டிரஸ்லாம் வேண்டாம். என்னை விட்ருங்க .ஊருக்குப்போயிடறேன்.!”
“அப்போ கழட்டுடி எல்லாத்தையும்!”
சட்டையைக் கிழித்தார்.
மீனா ஓடினாள்.
“என்னடி ஆட்டம் காட்றியா? எங்களை சந்தோஷப்படுத்திட்டு ஊருக்குப் போ! இல்லேன்னா திருடிட்டேன்னு போலீஸ்ல பிடிச்சுக் குடுத்திருவேன்!”
மூர்த்தியின் கை அவளது பாவாடை முடிச்சை அறுத்தது!
அலற வாய் திறந்தவளின் வாய்க்குள் தாவணியைச் சுருட்டி திணித்தனர்.மூர்த்தி அவள் கைகளைப் பின்னிருந்து முறுக்கி பிடிக்க, பயத்திலும், வலியிலும், சத்தம் வெளிவர வழியின்றி கத்தினாள்.
திருமலை நாதன் அவள் மீது படர்ந்து இயங்கினார்.
கால்களால் வலுவின்றி உதைத்தாள்.எதுவுமே அவரைத் தடுக்கவில்லை. மூர்த்தியையும்!
அவள் மூர்ச்சையானதைக் கூட கவனிக்காமல் மிருகங்கள் இயங்கின.
எல்லாம் முடிந்ததும்,” இன்னும் கொஞ்சம் பாக்கு அதிகமா வைடா! எங்கேருந்துதான் வாங்கறியோ!”
சிறிது நேரம் கழித்துதான் அவள் அசைவின்றி இருப்பதைக் கவனித்தனர்.மூர்த்தி பதறி அவள் மூக்கருகே கை வைத்துப் பார்த்தார் மூச்சு இருந்தது! அவள் மார்பு ஏறி இறங்கியதும் ஆசுவாசமாயினர்.
மூர்த்தி தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தார். அவளின் அலங்கோல நிலையைப் பார்த்து, இருவரும் விசாலத்தின் ஒரு பழைய பாவாடையை எடுத்து மேலெல்லாம் துடைத்து சுத்தம் செய்தனர். அவளது பையிலிருந்து வேறு ஒரு ஆடை அணிவித்தனர். திருமலை அவள் கன்னங்களை வேகமாகத் தட்டினார்.
இலேசாகக் கண்கள் திறந்தவளைப் பார்த்ததும், மூர்த்தி ஃபிரிட்ஜில் இருந்து பவண்டோ எடுத்து வந்து அவள் வாயில் ஊற்றினார். பின் அவளைத் தூக்கி வந்து, அவளது இடத்தில் பாயில் படுக்கவைத்தனர்.
” இங்க பாரு பேசாம இருந்தேன்னா, இரண்டு நாளில் ஊருக்கு அனுப்பிருவேன்.உங்க அத்தை இல்ல வேற யார்கிட்டேயாவது சொல்லாம்னு நினைச்ச, உந்தங்கச்சி லோகுவைக் கூட்டிட்டு வந்துருவேன்.உங்கப்பனுக்கு காசுதான் வேணும்” மிரட்டினார்.
மீனா கண்ணீர் வழிய அயர்ந்தாள்.
விசாலம் வரும்போது அவளுக்கு மேல் அனலாய்க் கொதித்தது. பயந்து போனவர் இரவானாதால் , மாத்திரை கொடுத்து உறங்க செய்தார். காலையில் டாக்டரிடம் போக அழைக்கையில், பிடிவாதமாக மறுத்தாள். ஊருக்குப் போக வேண்டும் என அழுது பிடிவாதம் பிடித்தாள்.
“சரி கொஞ்சம் காய்ச்சல் விட்டதும் அனுப்பறேன்!” என்ற விசாலத்தின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து தூங்கினாள். நான்காவது நாள் அவள் சற்றே தெம்பாய் இருப்பதைப் பார்த்தவள், நம்பிக்கையாள ஆளுடன் விக்கிரமசிங்கபுரம் அனுப்பி வைத்தார்.
ஊருக்கு சென்ற அடுத்த நாள் தன் சிகப்பு தாவணியில் தூக்கு மாட்டிக் கொண்டாள்.
விசாலத்துக்கு அதிர்ச்சி. சிறிது சந்தேகமும். அழுதார்.
மூர்த்தியும், திருமலையும் அதிர்ந்தாலும்
அலட்சியமாய்க் கடந்தனர்.
விசாலத்தின் அடுப்படியில், அரிசி டிரம்மில் அடியில் , தப்பும் தவறுமாய் எழுதப்பட்ட ஒரு ஐந்து வரி கடிதம் அவரது பார்வைக்காய் காத்திருந்தது!
பவித்ராவின் சிவப்பு பாவாடையைக் கண்ட ராஜி அதிர்ந்து சந்துருவிடம் கண் காட்டினாள்.
“லீவுதானேம்மா. .இன்னிக்கு எங்க
போற?”
“விசாலம் அத்தை பங்கு தரேன்னாங்க!”
” அவங்க கடைக்குப் போயிருக்காங்கம்மா. .!”
” இப்போ வந்திருவாங்கண்ணா!”
“சரிம்மா வெளில போக வேண்டாம் என்ன?”தலையாட்டி விட்டு மாடிக்கு சென்றவள், காலிங் பெல் அடிக்க மூர்த்தி திறந்தார்.” வாம்மா!”
“அங்கிள்.அத்தை மாங்கா தரேன்னாங்க!”
“அவ கடைக்கு போயிருக்கா! ஆமா விசாலம் அத்தைன்னா, என்னையும் மாமான்னே சொல்லும்மா!”
மூர்த்தி ஆமோதிப்பாய் தலையசைத்தார். அவரை ஆக்ரோஷமாய் உறுத்து விழித்தாள் பவித்ரா. அவர் உடல் சிலிர்த்து அடங்கியது!
“அந்த கண்களில் இருந்தது என்ன?”
“நீயும் மாமாதான், இவனும் மாமாதான்!”, சீற்றத்துடன் ஒலித்தது பவித்ராவின் குரல்!
” பவித்ரா. . . .?” திருமலை குழப்பமாய் ஏறிட்டார்.
ஆங்காரமாய் தள்ளி விட்டாள் திருமலையை.
“ஏய்.ய்.ய். .!”
“திருமலை இது அவளாடா. . .?”
டக்கென்று திரும்பி மூர்த்தியிடம் சென்றாள்.
திருமலை பாய்ந்து பிடித்தார் அவளை.அவளது சட்டை கிழிந்து, அவரது கைகளில் வந்தது!
“என்னாச்சு உனக்கு. .?”
“விடுடா விடு என்னை!” அவர் கைகளில் பலம் கொண்ட மட்டும் கடித்தாள்.
‘சட்’ டென்று கையை உதறியவர், அவளை கோபத்துடன் பிடித்து தள்ளினார். ஊஞ்சல் நெற்றிப்பொட்டில் அடிக்க இரத்தம் ஊற்றியது.
மூர்த்தி பற்றி பிடித்தார் அவளை!
“டேய் என்னடா இது?”
அவள் மூர்த்தியின் பிரௌன் கலர் சட்டையின் காலரைப் பிடித்து இழுத்தாள். மூர்த்தி தடுமாறி விழுந்த்தும், அவர் கைகளை இழுத்து, அவரது நகங்களாலேயே தன் கன்னத்தைப் பிராண்டினாள்.
“ஏய். .என்ன பண்ற? மூர்த்தி இவளைத் தூக்கு! கீழ விட்ரலாம்.!”
அவளை அணைத்து தன் மார்போடு சேர்த்து தூக்கினார். உதறும் கால்களை மூர்த்தி பிடித்துக் கொள்ள, ” ஏய் வலிக்குது விடுங்க! விட்டுடுங்க! யாராவது வாங்களேன். .. .ஹெல்ப்!” என பெருங்குரலெடுத்து கத்தினாள்.
அவள் கன்னம், மார்பு என திருமலையின் கைகளும் பிரேஸ்லெட்டும் அழுந்தி காயம் ஏற்படுத்தி கீறியது!
சத்தம் கேட்டு ஓடி வந்த சந்துரு அதிர்ச்சியானான் கண்ணெதிரே கண்ட காட்சியில்!
“த்.த்.தூ மனுஷனாடா நீ. .!”
“சந்துரு இல்ல. .நீ நினைக்கற மாதிரி இல்ல. .!”
“கொழந்தைடா அவ. . .அவளைப் போய். . .. .நாயே!” சட்டையைப் பிடித்து இழுத்து அடித்தான்.
அக்கம் பக்கத்தவரும் கூடினர்.
“போலீஸ்ல சொல்லுங்க சார்!”
பவித்ரா திரும்பி இருவரையும் பார்த்தாள். ஆக்ரோஷமாய் ஒளிர்ந்தது கண்கள்.
“அவளா. .அவளேதானா. .?” இருவரும் திகைத்தனர்.
ஒரு கோணல் சிரிப்புடன் மயங்கினாள் பவித்ரா.
தணிகாசலம் ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்தார்.
சந்துரு அவளைக் கைகளில் அள்ளியபடி, அவர் மாமாவின் ஹாஸ்பிடலுக்கே கொண்டு சென்றான். பவித்ராவிற்கு சிகிச்சைகள் தொடர்ந்தது! பவித்ராவின் அப்பாவும் கேள்விப்பட்ட உடனே வந்து விட்டார். தன் மகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டவரை வெங்கடாசலம் ஆறுதல்படுத்தினார்.
திருமலைநாதனையும், மூர்த்தியையும் போலீஸ் வந்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினர். ஊரே வேடிக்கை பார்க்க, அவமானத்தில் குனித்த தலை நிமிரவில்லை. விசாலம் எதுவும் பேசவில்லை. சில நாட்களுக்கு முன் மீனாவின் கடித்த்தைப் படித்தவள், மீனாவுக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைத்ததாகவே எண்ணினாள். அவளால் நம்ப முடியவில்லை. வெளியே வரவேயில்லை. ஜீப்பில் மீனா ஒரு சிரிப்புடன் இவர்கள் நடுவே வந்து அமர்ந்தாள்.
அட்டெம்ப்ட் டு ரேப் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. சின்ன பெண் எனவே போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சாட்சிகள் அவருக்கு எதிராகவே இருந்தது! பிரேமா கூட சாட்சியம் அளித்தாள்.
போலீசால் பவித்ராவிடம் வாக்குமூலம் வாங்க முடியவில்லை.
“சின்ன பெண்! நடந்த அதிர்ச்சியில், மூளை வேண்டாத நிகழ்வுகளை ஒதுக்கியதில், தனக்கு என்ன நடந்த்து என்றே தெரியவில்லை!” என மாமாவின் நண்பர் மனோதத்துவ டாக்டர் அரவிந்த் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தார்.
“அவள் எதிர்கால நலன் கருதி அவளுக்குப் பூரண ஓய்வு தேவை !” என வலியுறுத்தினார்.
மயக்கத்தில் மீனா கண்ணீருடன் வந்து நன்றி சொல்லி , பவித்ராவின் நெற்றியில் முத்தமிட்டு கைகூப்பி விடை பெற்று சென்றாள்.
பவித்ரா கண் விழித்தவள் அடித்து போட்டது போல் கிடந்தாள்.
” எனக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு காயம்? என்ன நடந்தது?” தொடர்ந்து கேள்வி எழுப்பியடி இருந்தாள்.
——————நிறைந்தது—————–
CHAPTER 12
அவளா… அவளா…? (ஹேமா மணி)
By Sorna Sandhanakumar · September 20, 2026