🌙 நிலவின் விழி வழி நீதானே! 🌙
டீஸர்
கழுத்தில் தாலி ஏறிய சில மணி நேரங்களிலேயே…தன் கணவனை இழந்து அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறாள் நிலா!”உன் புருஷனைக் கொன்னதே இந்த மித்ரன் தான்”…
யாரோ விதைத்த அந்த ஒற்றை வார்த்தை… நிலாவின் இதயத்தில் மித்ரனின் மீதான நட்பை கொன்று, பழிவாங்கும் வெறியை மட்டுமே மிச்சம் வைக்கிறது.
தன் கணவனைக் கொன்றவன் என்று நம்பும் மித்ரனை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவனையே கணவனாகக் கரம் பிடிக்கிறாள்.
ஆனால், நிலாவின் விழிகளில் எரியும் பழிவாங்கும் தீயை மித்ரன் உணராமல் இல்லை.அவனுக்கு அதிர்ச்சி இல்லை.மாறாக, அவளது வெறுப்பையே தனக்கான காதலாக ஏந்திக் கொண்டு அவளின் காதலுக்காக காத்து நின்றான்.நிலா அவனை நொடிக்கு நொடி கொல்லத் துடிக்கிறாள்.மித்ரனோ, அவளது ஒவ்வொரு நகர்வையும் ரசித்தபடியே அவளை காதலிக்கிறான்.
அவன் அவள் அருகில் நெருங்கி, மெல்லிய புன்னகையோடு “என்னைப் பழிவாங்கத்தான் கல்யாணம் பண்ணிகிட்டியா நிலா?”…
நிலாவின் கண்கள் பழி உணர்ச்சியில் மின்னியது.”ஆமாம் மித்ரன்… உன் ஒவ்வொரு மூச்சையும் நரகமாக்கி உன்னை அழிக்கத்தான்,உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்றாள் விழிகளில் குறையாத வன்மத்துடன்”…
மித்ரன் அவளை காதலுடன் நோக்கியவன் “அப்போ முயற்சி பண்ணிப் பாரு நிலா… ஏன்னா, என்னை அழிக்க நினைக்கிற உன் பார்வையை விட வேற எதுவும் வேணாம் என்னை கொல்றதுக்கு”… ,
நிலாவுக்குத் தெரியாத அந்தப் பயங்கர உண்மை வெளிவரும் போது…அவள் எடுத்த சபதம் என்னவாகும்?அவளது பழி வெல்லுமா? மித்ரனின் ஆபத்தான காதல் வெல்லுமா?…