• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
184
உன் விழியோடு நானாகிறேன்

அத்தியாயம் -4


அவள் அமைதியாக இருப்பதைக் கவனித்த தர்ஷன் “நான் இப்படி பேசுனது தப்பா? உங்களை நோகடிச்சிட்டேன்னா?” கொஞ்சம் பதறியபடி கேட்டான்.

அவளோ அவனை ஆழ்ந்து பார்த்தப்படியே இல்லை என்று தலையசைத்தாள்.அதைப் பார்த்து அவன் “அப்புறம் என்ன யோசனை அமைதியாகவே இருக்கீங்க” என்றதும் அவன் பக்கமாக நன்றாக திரும்பியவள் “நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்பேன் நீங்க பொய் சொல்லக் கூடாது” என்றாள்.

காரை ஓரமாக நிறுத்தியவன் இம்முறை அவன் ஆதிரையை ஆழ்ந்து பார்த்தவன் “ம்ம்… சொல்லுங்க முடிந்த வரை உண்மை சொல்ல முயற்சி பண்றேன்” என்றான்.

அவளோ “இந்தக் குரல் நான் கேட்கிற அதே குரல்” என்று கண்களை மூடியபடியே அவனுடைய குரலை இரசித்து உணர்ந்தவளாய் “நீங்க தானே தினமும் ரேடியோவில் இரவு நேரத்தில் பேசுற ருத்ரா தானே” விழிகளில் ஆர்வம் பொங்க கேட்டாள்.

அவனோ “ருத்ரா அது யாரு?” என்று சிரித்தப்படியே கேட்டான்.

அவனது சிரிப்பைப் பார்த்து இவளோ “ப்ச் விளையாடாதீங்க தர்ஷன் ருத்ரன் தானே நீங்க? எனக்குத் தெரியும் நான் தினமும் உங்க வாய்ஸ்ஸை கேட்பேன்” என்றாள்.

அவனோ “அப்படியா! இப்போ நான் தர்ஷனா இல்லை ருத்ரனா? அதை முதல்ல தெளிவுப்படுத்திக்கோங்க” என்றான் கிண்டலாக…

அவளோ அவனைப் பற்றி அறியும் ஆவலில் எதையும் யோசிக்காமல் “ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக” என்று எல்லாவற்றையும் மறந்து கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

தலையை லேசாக சாய்த்து கன்னத்தில் கையை வைத்தப்படி “நேற்று பேசியதற்கும் இப்போ பேசுறதுக்கும் ஆளே சம்பந்தமே இல்லை’ என்று நினைத்தப்படி அவளைப் பார்த்திருந்தான்.

அதைக் கண்டவள் “நீங்க யார்கிட்டயும் தெரியக் கூடாதுன்னு மறைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

நீண்ட பெருமூச்சு விட்டவன் “ம்ம்… நான் தான் மித்ரா” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் விழிகளில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்தியவள் தன் இரு கன்னங்களில் கைவைத்து “ஹோ… உண்மையாகவா சொல்றீங்க தர்ஷன் என்னால நம்பவே முடியலை” என்றதும் அவனோ “அப்போ நான் ருத்ரன் இல்லை” என்றான்.

உடனே அவளோ “ப்ச் உடனே என்ன இப்படி மாத்தி சொல்றீங்க?”

“நீங்க தானே நம்ப முடியலைன்னு சொன்னீங்க?அதான்”

அவளோ “ப்ச் தர்ஷன் ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க எனக்குத் தெரியும் இந்தக் குரல் நான் தினமும் இரண்டு வருஷமாக கேட்கிறேன் எனக்குத் தெரியாதா?” மகிழ்ச்சியாக புன்னகையோடு கேட்டாள்.

அவனோ “நீங்க என்னோட தீவிர ரசிகையா?” அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவளோ “ம்ம்… அப்படியும் சொல்ல முடியாது என்னன்னு எனக்கு சரியா சொல்லத் தெரியலை உங்க குரல் அந்த இரவோட அமைதியில் அழகாக இருக்கும் அதோட நீங்க ஒவ்வொரு இடத்துக்கும் போன விஷயங்களைப் பத்தி பேசும் போது ஏதோ அப்படியே அங்கே நானும் போன பீல்” இரசித்துக் கொண்டே சொன்னாள் அவளையும் அறியாமல்.

அவள் சொல்வதை எல்லாம் பார்த்தப்படியே கேட்டுக் கொண்டிருந்தான்.இந்த இரு நாட்களாக இயற்கையை இரசித்து நின்றவளை பார்த்தவனுக்கு யாரென்றே தெரியாத தன் மீதான ரசனையை அவள் விளக்கிக் கொண்டிருப்பதை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஆதிரை “நான் பேசிட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க” கேள்வியோடு கேட்டாள்.

அவனோ “இத்தனை நாளாக நான் இவ்வளவு பேசி இருக்கிறேன்னு நீங்கச் சொல்லித் தான் எனக்கே தெரியுது அந்த ஆச்சரியத்தில் பார்த்துட்டு இருக்கேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவள் “ப்ச் பொய் சொல்லாதீங்க தர்ஷன் நான் உங்கள் ருத்ரா என்ற வார்த்தை நீங்க சொல்லும் போது ரொம்ப கணீர்னு இருக்கும் எனக்காக அதை சொல்லிக் காட்டுங்க” என்று திரும்பவும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவனோ “ஆதிரை அது எல்லாம் அங்கே எப்.எம்ல வைச்சு வரும் இப்போ திடீர்னு சொன்னால் எப்படி?”

“சும்மா அந்த வார்த்தையை மட்டும் சொல்லுங்க” என்ற போது அவனும் கொஞ்சம் நிமிர்ந்து குரலை செறுமியபடி “நான் ருத்ரா உங்கள் ஹலோ எப்.எம் லிருந்து இன்னைக்கு என்ன ஸ்பேஷல் அதானே” என்று அவன் ஏற்ற இறக்கங்களோடுச் சொல்ல கண்களை சிமிட்டாமல் மெய் மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் தர்ஷன் பேசி முடித்ததும் கைகளை தட்டி “வாவ் சூப்பர் அட்டகாசம்” என்று சொல்லி சிரித்தாள்.அவள் அப்படிச் செய்ததும் ஏனோ அவனையேப் பார்த்தது போல் இருந்தது.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு தன்னையே உணர ஆரம்பித்தான் மித்ரா.அவள் வாழ்த்து சொல்லியதற்கு தலைகுனிந்து ஏற்றுக் கொண்டவன் “ஆதி எனக்காக நீங்க ஒரு விஷயம் செய்யனும்”

“ம்ம்… சொல்லுங்க”

“நான் இந்த மாதிரி ரேடியோவுல ஆர்.ஜேவாக இருக்கிறது யாருக்கும் தெரியாது ஏன் மதனுக்கும் சொல்லலை அதனாலத் தான் நைட் பதினொரு மணிக்கு மேல நான் என்னோட ப்ரோகிராம் இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன் ஆனால் இப்போ உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு இது நம்ப ரெண்டுபேருக்கும் தெரிந்ததாகவே இருக்கட்டும்” என்றான்.

அவள் சொன்னதைக் கேட்டு தலையசைத்தவள் “ஏன் யார்கிட்டேயும் சொல்லலை?”

நீண்ட பெருமூச்சு விட்டவன் மனதினுள் ‘'இவ என்னைப் பற்றி தெரிஞ்சு பேசுறாளே இல்லை தெரியாத மாதிரி நடந்துக்கிறாளா’ என்று யோசனையோடு பார்த்தவன் “எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் இரகசியமா செய்றேன் அது அப்படியே இருந்து விட்டு போகட்டுமே” என்றான்.

உடனே தன் உதட்டு அருகே விரல்களை கொண்டு போய் சிப்பை மூடுவது போல் பாவனை செய்து தன் உதடுகளை பூட்டியது போல் செய்தாள்.

அதை பார்த்து சரியென்பது போல் சைகை செய்தவன் “இப்போ போகலாமா?” என்றதற்கு சரியென்று சொன்னாள்.

அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு போகும் வரை அவன் வானொலி நிகழ்ச்சியில் பேசிய விஷயங்களைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டே வந்தாள்.அவள் கேட்டதற்கு எல்லாம் பொறுமையாகவே பதில் சொல்லிக் கொண்டு வந்தான்.

திருமண ஏற்பாட்டிற்கான வேலைக்காக மொத்தமாக ஒரு வியாபாரியிடம் சொல்லாமல் மதனின் சொந்தங்களே சுற்றி இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரிடம் வேலையைச் சொல்லி இருக்க அதை பார்த்து சரியான முடிவு செய்யும் பொறுப்பில் தர்ஷன் இருப்பதால் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டி இருந்தது.

தர்ஷன் அங்கே உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருக்க ஆதிரை சுற்றி உள்ள இடங்களுக்குப் போய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

பூக்களின் அலங்காரத்திற்காக தோட்டம் பக்கம் சென்றிருக்க இவளோ உள்ளே போய் சுற்றிக் கொண்டிருந்தாள்.தன்னுடன் வந்தவளை தேடி இவனும் அந்த தோட்டம் பக்கம் சென்றான்.அங்கே ஒரு திசையில் ஆதிரை நிற்க இவனோ அவளை “ஆதிரை ஆதிரை” என்று அழைத்துக் கொண்டுச் செல்ல அவளுக்குத் தான் கேட்கவில்லை.

அருகினில் சென்று ஆதிரையிடம் “எவ்வளவு நேரமா நான் உங்களை அழைக்கிறேன் கேட்கலையா?” என்றதற்கு “சாரி தர்ஷன் எனக்கு கேட்கலை” என்றாள்.

உடனே தர்ஷன் “உங்க நம்பர் கொடுங்க அவசரம்மானா கால் பண்றேன்”

அவளோ சரியென்று தன் கைப்பேசி எண்ணைக் கொடுத்தாள்.அதை வாங்கிக் கொண்டவன் இதழின் ஓரம் தோன்றிய சிரிப்பை மறைத்தான்.

அங்கே இருந்த ஒரு பன்னீர் ரோஜாவை எடுத்து பறித்து அவளிடம் கொடுத்தான்.அதை வாங்க அவள் தயங்கியபடி நின்றாள்.அதைப் பார்த்து “வாங்கிக்கோங்க ஆதி இந்தப் பூ ரொம்ப அழகா இருக்கு” என்றான்.

அவளோ கைகளை மடக்கியபடி நின்றுக் கொண்டிருக்க அவளோ அவளுடைய கையைப் பிடித்து எடுத்து கரங்களின் மேல் வைத்தவன் “பெண்களுக்கு பூக்கொடுத்தால் தப்பா நினைக்காதீங்க ஏன் அது அறிமுகத்துக்கான பரிசாக இருக்கலாம் இல்லையா? அப்படி பார்க்க பிடிக்கலைன்னா என்னை பூ விக்கிறவனா நினைச்சு வாங்கிக்கோங்க” என்று அவனது அசத்தல் குரலில் ஏற்ற இறக்கத்தோடு சொல்ல

அவளால் மறுக்க முடியவில்லை.

கையில் பூவை பிடித்தப்படி நடந்தவள் அது எங்கேயாவது வைத்தால் வாடிப் போய் விடும் என்று எண்ணியவள் தன் தலையில் சூடிக் கொண்டாள்.


அதை அவன் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்துக் கொண்டான்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
184
இருவரும் திரும்பவும் ஒன்றாக பயணிக்க நேராக ஒரு ஹோட்டலில் நிறுத்தியவன் “வாங்க ஆதி சாப்பிட போகலாம்” என்றான்.

அவளோ “நாம வீட்டுக்குப் போய் சாப்பிடலாமே சிந்தியா வெயிட் பண்ணுவாளே”

அவனோ சிரித்துக் கொண்டே “இன்னைக்கு நாம வீட்டுக்குப் போக எப்படியும் நைட் ஆகிடும் இன்னும் சில வேலைகள் மிச்சம் இருக்கு அங்கே எல்லாம் போக வேண்டியது இருக்கு நாம டவுணுக்கு போகனும் அங்கேப் போய் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கோங்க” என்றான்.

அவளால் சட்டென்று ஒத்துக் கொள்ள முடியவில்லை.அதனால் தயங்கியபடி நிற்க அவனோ “என்னோட டீரீட்டாக எடுத்துக்கோங்க மித்ராவாக நான் உங்களுக்கு இதைத் தரேன்’ என்ற போது

அவளும் சரியென்று அவனோடு சாப்பிட சென்றாள்.

மலையாளத்தில் பேசி அவளுக்காக தமிழ்நாட்டு உணவு என்ன வேண்டும்? என்று கேட்டு வாங்கிக் கொடுத்தான்.அவனும் அது போல் ஒரு சாப்பாட்டை வாங்கிக் கொண்டான்.

இருவரும் சாப்பிட அமர்ந்ததை ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்தான்.அதைப் பார்த்து ஆதிரை “எதுக்கு இதெல்லாம்?”

அவனோ “எதுக்கா? இங்கே பாருங்க” என்று அவனுடைய கைப்பேசியைக் காட்டினான்.அதில் சிந்தியா குறுஞ்செய்தியில் “ஆதிரை உன்னோடு சாப்பிட ஒத்துக்க மாட்டாள் அதனால சாப்பிடும் போது போட்டோ எடுத்து அனுப்பு அப்போத் தான் எனக்கு உன் மேல நம்பிக்கை வரும் மறந்திடாதே!” என்று அனுப்பி இருந்தாள்.அதைப் பார்த்து ஆதிரை தன் தோழி சிந்தியாவையும் அவளிடம் மாட்டிக் கொண்ட தர்ஷனை நினைத்து சிரிப்பு தான் வந்தது ஆதிரைக்கு.

இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.தர்ஷன் “நாம ரெண்டுபேரும் இவ்வளவு நேரம் பேசினதில் ஒரு நல்ல நண்பர்களாகிட்டோம்னு நினைக்கிறேன் என்னோட ஆர்.ஜே வேலையைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க? உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா?

உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க இல்லைன்னா வேண்டாம்” என்றான்.

அவன் அப்படிக் கேட்டதும் வாழை இலையில் வைத்த சாப்பாட்டை விரல்கள் இப்போது கோலமிட்டுக் கொண்டு இருந்தது.விழிகளில் இப்போது தயக்கம் முழுதாய் இடம் பெற்று இருந்தது.எங்கே சென்றாலும் கேட்கும் இந்தக் கேள்விக்கு பயந்தே அவள் எங்கும் செல்வதில்லை.

முடிந்தவரை அதை எப்படியும் தவிர்த்து விடுவாள்.கேள்வியே கேட்காத வண்ணம் நடந்துக் கொள்வாள்.ஆனால் இவ்வளவு நேரம் அவனிடம் நன்றாக பேசி விட்டு தர்ஷன் இப்படிக் கேட்கவும் மறுக்க முடியாமல் தன் தலையை கவிழ்த்து யோசனையில் இருந்தவளைப் பார்த்து “உங்களுக்கு பிடிக்கலைன்னா விடுங்க” என்றான்.

அவளோ கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டபடி அவனைப் பார்த்து புன்னகைத்தவாறே “என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்னும் இல்லை சென்னையில் ஒரு கம்பெனியில் ஹெட் டிப்பார்ட்மென்ட்டில் அசிஸ்டன்ட் அக்கவுண்டராக வேலை பார்க்கிறேன்.நான் டிவோர்ஸி

குடும்பம்னா எனக்கு ஒரு பொண்ணு இருக்கா இப்போ அம்மா அப்பாவோடு வேகேஷனுக்காக ஊருக்கு போய் இருக்கா என்னைப் பற்றி அவ்வளவு தான்” என்றாள்.

அதைக் கேட்ட தர்ஷனின் முகம் எந்த மாறுதலையும் காட்டாமல் “நீங்க ரொம்ப அழகா பாடுறீங்களே அதைப் பற்றி எதையும் சொல்லலை” என்றான் ஆர்வத்தோடு.

அவன் அப்படிக் கேட்டதும் வியப்பில் ஆழ்ந்தவள் ஒருநொடி தோன்றிய எண்ணங்கள் எல்லாம் மறைந்து விட சிரித்துக் கொண்டே “ப்ச் கிண்டல் பண்ணாதீங்க தர்ஷன்”

அவனோ “நீங்க தான் தப்பா புரிஞ்சு இருக்கீங்க நான் சீரியஸாத் தான் சொல்றேன் உங்க குரல் இனிமையாக ரொம்ப அருமையாக இருந்துச்சு பாட்டு பாடுவதற்கு கத்துக்கிட்டீங்களா?” என்று விடாமல் கேட்டான்.

அவளோ ஒரு சிறு வெட்கத்தோடு “ம்ம்… எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்னா அது நான் பாட்டு பாடுறது தான் சின்ன வயசுல பக்கத்தில் வீட்டில் பாட்டு சொல்லிக் கொடுக்கிற க்ளாஸ் நடக்கும் எனக்கு ஒரு ஆர்வம் வந்துச்சு அங்கே போய் சேர்ந்தால் என்னன்னு ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்துட்டே இருக்கும் இதைப் பார்த்த அந்த பாட்டுச் சொல்லிக் கொடுக்கிற அக்காவே கூப்பிட்டு அவங்க இருக்கிற வரைக்கும் ஒரு நாலைந்து வருஷமா கத்துகிட்டேன் அப்புறம் படிப்புல நேரம் போயிடுச்சு சில நேரம் பிடிச்ச பாடுவேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.

அவனோ “எதுக்கு சிரிக்கிறீங்க?”

“முதல் தடவை என் பாட்டைப் பற்றி கேட்ட முதல் நபரே நீங்க தான் என்னால நம்ப முடியலை”

“உங்க திறமையைப் பற்றி உங்களுக்கே தெரியலைன்னு தான் சொல்லுவேன்” என்று அவன் சொல்லும் போது அவள் முகத்தில் புன்னகையே நிறைந்து இருந்தது.

அவனின் வானொலி தொகுப்பாளரின் பேச்சோடு இப்போது அவளின் பாடகி பேச்சும் சேர்ந்துக் கொண்டது.

இருவரும் தங்களின் விருப்பத்தைப் பற்றி நிறைய விஷயங்களை பேசி தெரிந்துக் கொண்டனர்.

சாப்பிட்டு காரில் ஏறவும் திரும்பவும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.லேசாக மழையும் தூற ஆரம்பிக்க அந்த சில்லென்ற தூரலில் அப்படியே தூங்கிப் போனாள் ஆதிரை.
 
Top