• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
54
அவளின் தோளோடு அணைத்தவாறு சாய்ந்து அமர்ந்தவன், "இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயம் வள்ளி. எல்லாருக்கும் நடக்கிற விஷயம் தான். இதுக்கு நீ இவ்ளோ பேனிக் ஆக வேண்டிய அவசியமே இல்ல" என்றவன்,

"Even aravind Swamy faced this problem u know (அரவிந்த் சாமிக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கு தெரியுமா)" என்றான்.

"அப்படியா?" என்பது போல் கண்களை விரித்து அவள் பார்க்கவும் அவளின் முகப்பாவனையைப் பார்த்து ரசித்துச் சிரித்தவனாய் கன்னத்தில் முத்தமிட்டவன், "மை க்யூட் வைரக்கட்டி" என்று கொஞ்சினான்.

அவனின் இந்தக் கொஞ்சலில் அவளின் மனம் பூரித்துப் போக, அவனின் தோளில் சாய்ந்தவளாய், "மனசு எவ்ளோ ரிலாக்ஸ்ஸாகிட்டு தெரியுமா. நீங்க பக்கத்துல இருந்தாலே எனக்குள்ள பாசிட்டிவிட்டி வந்துடுது கார்த்தி" என்று கூறிச் சிரித்தாள்.

அவளின் கூற்றில் வாய்விட்டுச் சிரித்தான்.

"சரி கல்யாணத்துக்கு முன்னாடி இப்படிலாம் பிரச்சினை வரும் போது என்ன செய்வ வள்ளி?" எனக் கேட்டான்.

"நானே அழுதுட்டு என்னைத் தேத்திக்கிட்டு போய்டுவேன் கார்த்தி. ஆனா அடுத்தடுத்து அந்தச் சூழ்நிலையை விட்டு ஓடிப்போகுற மைண்ட் செட் தான் வருமே தவிர அதை எப்படிக் கையாள்றதுனு தெரியாது" என்று வள்ளி உரைத்ததைக் கேட்டவனுக்குப் பாவமாய்ப் போயிற்று.

இவன் சிறு வயதிலேயே இது போன்ற பய உணர்வினை உணர்ந்திருக்கிறான். கலகலவென மனத்தில் பட்டதைப் பேசும் சுபாவம் கொண்டவனாயினும் பொது மேடையில் பேச அச்சப்படுவான். அச்சமயங்களில் இவனது தந்தை தான், அந்தப் பயச்சூழலில் இருந்து ஓடாமல் நின்று எதிர்கொள்வதே பயத்தைப் போக்குவதற்கான முதல் படி எனக் கூறி அவனைத் தொடர்ந்து பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க வைத்து ஊக்கம் கொடுத்து முன்னேறி வர உதவி புரிந்தார்.

வள்ளியின் பரம்பரையில் எவருமே வேலைக்குச் செல்லாத நிலையில் தாய் தந்தையரிடமும் இதற்கான தீர்வைத் தேட முடியாது, எவரிடமும் இதனைக் குறித்துப் பகிர்ந்து கொள்ளாது அவளே அச்சூழலில் எல்லாம் தன்னைத் தேற்றிக் கொண்டு இந்நிலை வரை வந்திருப்பதை எண்ணி பெருமையாகவே உணர்ந்தான் கார்த்திகேயன்.

"அரவிந்த்சாமி ஒரு இன்டர்வியூல சொன்னாரு, அவருக்கு ஸ்டேஜ் ஃபியர் முதல்ல நிறைய இருந்துச்சாம். ஏன்டா பேச ஒத்துக்கிட்டோம்னு இருக்குமாம். மறுநாள் பேச போறதை நினைச்சு நைட் முழுக்கத் தூக்கமே வராதாம். போகப் போகப் பேச பேச அந்தப் பயம் போயிடுச்சுனு சொன்னாரு.

நம்ம நீயா நானா கோபிநாத் இருக்காருல. அவரும் ஒரு பேட்டில சொன்னாரு. இப்ப வரைக்கும் நீயா நானா ஷூட்டிங் போகும் போதெல்லாம் அவருக்குப் படபடனு இருக்குமாம். கோபிநாத் அவரோட ஃப்ரண்ட்கிட்ட சொன்னாராம், 'அசிங்கமா இருக்குடா இன்னும் இந்தப் பயம் போக மாட்டேங்குதுனு'. அதுக்கு அவர் ஃப்ரண்ட் சொன்னாராம், இந்தப் பயம் இருக்கிறது நல்லது தான்டா. இது நம்ம வேலையை நாம சரியா செய்யனுமேங்கிற எண்ணத்துனால வர்ற பயம். அது இருக்கிறது தப்பில்லைனு சொன்னாராம்‌. ஆக மாரல் ஆஃப் த ஸ்டோரி என்னன்னா பயம் இருக்கிறது தப்பில்லை ஆனா அந்தப் பயத்தை, நம்மளோட வேலையைக் கெடுக்காத பயமா இல்லாம வேலையை சரியா செய்ய வைக்கிற பயமா எப்படி மாத்துறதுனு தான் பார்க்கனும்" என்றான்.

"ஹ்ம்ம் அதை எப்படி மாத்துறது?" என்று கேட்டாள்.

"அதை உன் பாசிட்டிவ் மைண்ட் செட்னால தான் மாத்த முடியும் வள்ளி. கொஞ்சம் கொஞ்சமா அதை மாத்திடலாம். ஐ வில் ஹெல்ப் யூ. டோண்ட் வொர்ரி. சரியா.. நிம்மதியா தூங்கு" என்றவன் படுத்துக் கொள்ள, இத்தனை நேரமாய் இருந்த மனத்தின் அலைப்புறுதல் அனைத்தும் விலகிச் சென்றிருக்க, மகிழ்வுடன் அவன் இடையோடு கைப்போட்டு அணைத்தவளாய் உறங்கிப் போனாள் வள்ளி.

மறுநாள் மாலை வள்ளியை உளவியல் ஆலோசகர் தியாவிடம் அழைத்துச் சென்றான் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் கூறியனவற்றை அமைதியாகக் கேட்டவர், "வள்ளி அந்த மாதிரி நேரத்துல உடம்பும் மனசும் எப்படி ஃபீல் ஆகும்?" எனக் கேட்டார்.

"அப்படியே மனசுலாம் படபடனு அடிச்சிக்கும். உள்ளங்கை வேர்த்திடும். கை சில்லுனு ஆகிடும். அங்கிருந்து எங்கேயாவது ஓடிப் போய்டலாமானு இருக்கும். கால் அட்டென்ட் செய்றதுக்கே என் மனசை நான் ரொம்பத் தயார் செய்ற மாதிரி இருக்கும்" என்றாள் வள்ளி.

"ஹ்ம்ம் இது பரவலா எல்லாருக்கும் இருக்கிற பிரச்சினை தான் வள்ளி" என்றவர்,

"வள்ளிக்கு இருக்கிறது சோசியல் ஆங்சைட்டி இஸ்யூ கார்த்தி. நாம சொல்றது தப்பா போய்டுமோ, எதிர்ல இருக்கிறவங்க நம்மளை தப்பா நினைச்சிடுவாங்களோனு மத்தவங்க நம்மளை தப்பா ஜட்ஜ் செஞ்சிடக் கூடாது, தப்பா நினைச்சிடக் கூடாதுனு வர்ற எண்ணங்களால் உருவாகும் பயத்தைத் தான் சோசியல் ஆங்சைட்டினு சொல்லுவாங்க"

"வள்ளியோட அப்பா அம்மா வள்ளியை வளர்க்கும் போது, வெளியுலகம் தப்பா பேசுற மாதிரி நடந்துக்கக் கூடாது, இப்படி இருக்கக் கூடாது, அப்படி இருக்கக்கூடாது, செய்ற வேலையை ஃபெர்பக்ட்டா செய்யனும்னு சொல்லி சொல்லியே வளர்த்திருப்பாங்க. அதனால சின்ன வயசுலேயே சின்ன விஷயம் தப்பா போனாலும் அவங்களுக்கு இந்த ஆங்சைட்டி வந்திருக்கும்" என்று அவர் சொல்லவும்,

"ஆமா மேடம். வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்! யார்க்கிட்டயும் பேச விட மாட்டாங்க. குறிப்பா பசங்ககிட்ட பேசக் கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா வளர்த்தாங்க. ஆனா படிப்புல கெட்டிக்காரியா இருக்கனும், ஃபர்ஸ்ட் ரேங்க் தான் வாங்கனும்னு சொல்லுவாங்க. நான் ஃபர்ஸ்ட் ரேங்க் ஸ்டூடண்ட் தான். என்னை யாரும் குறையா தாழ்வா கெட்ட பொண்ணுனு சொல்லிடக் கூடாதுங்கிற எண்ணமும் கவனமும் எப்பவும் இருக்கும்" என்றாள் வள்ளி.

"ஹ்ம்ம் இப்படி வளர்க்கப்படுறவங்க தான் இன்ட்ரொவர்ட்டா வெளியே மத்தவங்க கூடச் சோசியலைஸ்டா பழக ரொம்பத் தடுமாறுறாங்க" என்றவர் மேலும் தொடர்ந்தவராய்,

"ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் இது ரொம்பக் காமென் இஸ்யூ வள்ளி. எல்லாருக்குமே புது இடம் புதுச் சூழல் புது மேடை புது மனிதர்கள் இப்படியான பயத்தையும் பதட்டத்தையும் கொடுக்கும். ஆனால் தொடர்ந்து அந்த இடமோ மனிதர்களோ சூழலோ பழக்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமா இந்தப் பயம் குறையனும். அப்படியே இருக்கக் கூடாது" என்றவர் அவர்களுக்குச் சில ஆலோசனைகளை வழங்கினார்.

"1. காலைல தினமும் மூச்சுப் பயிற்சி செய்யுங்க
2. உங்களுக்கு எதனால பயம் வருதுன்னு உங்க பயத்துக்கான காரணத்தை வரிசைப்படுத்தி எழுதுங்க.
3. அந்த ஒவ்வொரு காரணத்தையும் எப்படிப் பாசிட்டிவ்வா மாத்துறதுனு யோசிச்சு உங்க மைண்ட்டை பாசிட்டிவ்வா கொண்டு போங்க.

இப்ப உதாரணத்துக்கு உங்களுக்கு மீட்டிங்னாலே பயம்னு சொன்னீங்கல. எதனால மீட்டிங்னா பயம் வருது? அதுக்கான காரணத்தை எல்லாம் சொல்லுங்க" எனக் கேட்டவாறு எழுதத் தொடங்கினார்.
 
Joined
May 20, 2025
Messages
54
வள்ளி ஒவ்வொன்றாய் கூறினாள்.

"1. மீட்டிங்ல அவங்க ஏதாவது கேட்டு எனக்குத் தெரியாம போச்சுனா அசிங்கமாகிடும்னு பயம்.
2. எனக்குத் தெரியாதுனு சொன்னா எதுவும் அக்ரசிவ்வா பேசிடுவாங்களோனு பயம்.
3. மீட்டிங்ல சரியா பேச முடியாம போனா மேனேஜர் எதுவும் திட்டுருவாரோனு பயம்" என்றாள்.

"ஓகே இப்ப நீங்க சொன்னீங்களே இந்தக் காரணங்கள் இதெல்லாம் முன்னாடி நடந்திருக்கா? அதாவது க்ளைண்ட் அக்ரசிவ்வா பேசியிருக்காங்களா இல்ல உங்க மேனேஜர் உங்களைத் திட்டிருக்காரா?" என்று கேட்டார் தியா.

இல்லை என்று அவள் தலையசைக்க, "இந்தப் பயங்கள்லாம் உங்க மூளை தானாக இப்படி ஆகிடுமோ அப்படி ஆகிடுமோனு தானாக உருவாக்கும் பயங்கள். முதல்ல உங்களை நீங்களே இப்படிப் பயமுறுத்திக்கிறதை நிறுத்தனும்" என்றார் தியா.

வள்ளி புரியாது அவரைப் பார்க்க, "நடக்கவே போகாத விஷயத்தை எல்லாம் நினைச்சு நம்மளை நாமளே பயமுறுத்திப்போம் வள்ளி. சரி இப்ப நீங்க சொன்ன காரணத்தை எல்லாம் எப்படிப் பாசிட்டிவா மாத்தலாம்னு சொல்றேன்" என்றவர் ஒவ்வொன்றாய் சொல்லத் தொடங்கினார்.

"நான் தப்பாவே பேசினாலும் என் க்ளைண்ட் அக்ரசிவ்வா நடந்துக்க மாட்டாரு. என் மேனேஜர் என்னைத் திட்ட மாட்டாரு. அப்புறம் மீட்டிங் சொதப்பினாலும் தப்பு இல்லை. இதெல்லாம் எல்லாருக்கும் நடக்குறது தான். ஐ வில் கிவ் மை பெஸ்ட் இன் த மீட்டிங். இதுக்கு மேல தப்பா போச்சுனாலும் தட்ஸ் ஃபைன்னு இப்படி நீங்க மனசுக்குள்ள பயம் உருவாகும் போது அதுக்கான காரணத்தை ஆராய்ஞ்சி அதைப் பாசிட்டிவ் எண்ணங்கள் மூலமா திசை திருப்பனும். இப்படி அந்தப் பயத்தைப் பாசிட்டிவ்வா டைவர்ட் செஞ்சிட்டே வந்தீங்கனா, போகப் போக நீங்க ஒரு பாசிட்டிவ் பெர்சன்னா மாறிடுவீங்க" என்றவர்,

"அண்ட் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், எப்பவுமே நாம எல்லாரையுமே சேடிஸ்ஃபை செஞ்சிட்டே இருக்க முடியாது வள்ளி. உங்க கிளையண்ட் உங்க பிரசன்டேஷன் பிடிக்கலையா, ஃபைன்னு அக்சப்ட் செஞ்சிக்கோங்க. நீங்க நல்லா பிரசண்ட் செஞ்சும் அப்படிச் சொன்னாங்கனா, அது என் பிரச்சினை இல்ல உன் பிரச்சினைனு மனசுல இருந்து தூக்கிப் போட்டு போங்க. இதனால என்ன கன்சீக்வன்சஸ் வரும் உங்க ரேட்டிங் குறையும் அவ்ளோ தானேனு எடுத்துக்கோங்க. அய்யய்யோ ரேட்டிங் போய்டுமே நாம எப்பவுமே ஃப்ரஸ்ட் ரேட்டிங் வாங்குற பொண்ணு எப்படி இப்படிக் கம்மி ரேட்டிங் வாங்குறதுனு உங்களை நீங்களே ஸ்ட்ரெஸ் செஞ்சிக்காதீங்க" என்றார்.

கார்த்திகேயனுக்கும் வள்ளிக்கும் அவரின் பேச்சில் நிறையவே தெளிவு கிடைத்திருந்தது.

இருவரும் மகிழ்வுடன் நன்றியுரைத்தவர்களாய் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.

அன்று மாலை வீட்டிற்குச் சென்று குளித்து முடித்ததும் வள்ளி சமையல் வேலையைப் பார்க்கச் சென்று விட, கார்த்திகேயனை தனது அறைக்கு அழைத்தார் தாமோதரன்.

"என்னப்பா எதுக்குக் கூப்பிட்டீங்க?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.

"வள்ளியோட ஊருல விசாரிக்கச் சொல்லிருந்தோம்ல அந்த ரிப்போர்ட் இன்னிக்குக் கொடுத்தாங்க" என்றவர் அதை அவனிடம் கொடுத்தார்.

அதை அவன் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, "உதயாக்கு மல்லிகா கூடத் தவறான தொடர்பு இருந்தது உண்மை. ஆனா இப்ப இல்லை. அவளை விட்டு விலகி வேற கல்யாணம் செஞ்சி வாழனும்னு தான் அவன் ஆசைப்படுறான். ஆனா அவனை விடாம தன் கூடவே வச்சிக்க நினைக்கிறா மல்லிகா" என்றவர் சொல்லியதைக் கேட்டு யோசனையுடன் பார்த்தான் கார்த்திகேயன்.

"இதுல நமக்குக் கொஞ்சம் சந்தோஷம் தர்ற விஷயம் என்னன்னா, உதயா மல்லிகா விஷயம் வள்ளியோட அப்பா அம்மாக்குத் தெரியாது. மல்லிகா வேணும்னே வள்ளிக்கிட்ட அவங்க அம்மா அப்பா பத்தி தப்பா சொல்லிருக்கா" என்றார்.

"ஓ" என்றவன், "இதை வள்ளிக்கிட்ட சொல்லிடலாமே! ஏன் என்னைத் தனியா கூப்பிட்டு வச்சு பேசுறீங்க?" எனக் கேட்டான்.

"இல்லடா வள்ளியோட மனநிலை இப்ப எப்படி இருக்குனு உனக்குத் தானே தெரியும். அதனால உன்கிட்ட பேசிட்டு வள்ளிக்கிட்ட பேசலாம்னு நினைச்சேன்" என்றார்.

"அவளோட அப்பா அம்மா மேல தப்பு இல்லாத வரைக்கும் இந்த விஷயங்கள் எல்லாம் அவளைப் பெரிசா ஒன்னும் பாதிக்காதுப்பா. அவங்க அப்பாவே தப்பானவனுக்குத் தன்னைக் கட்டி வைக்க நினைச்சிருக்காரேங்கிறது தான் அவளுக்குக் கவலையா இருந்துச்சு" என்றவன், "நானே இதை வள்ளிக்கிட்ட சொல்லிடுறேன்" என்றான்.

"என்னாலான உதவியை உதயாவுக்குச் செய்யலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்டா கார்த்தி. அம்மா அப்பா இல்லாத பையன். ஏதோ சூழ்நிலைல இப்படித் தப்பா சிக்கிக்கிட்டான். அவனே வெளில வர நினைக்கிறான்‌. அந்த மல்லிகாகிட்ட இருந்து அவனைக் காபாத்த நம்மளால முடிஞ்சதை செய்யலாமேனு தோணுது. இல்லனா இவ உதயாவுக்குக் கல்யாணமே ஆக விடாம கூடவே வச்சிட்டு சொத்தை வாங்கிட்டு போய்டுவா. இன்னும் கொஞ்ச நாள்ல வள்ளியோட அப்பா அம்மாவையும் ஏதாவது பிளான் செஞ்சி சென்னைக்கு அனுப்பினாலும் அனுப்பிடுவா‌‌.. அதான் அந்த டிடெக்டிவ் ஆபிசர்ஸ் வச்சே ஏதாவது ஹெல்ப் செய்ய முடிஞ்சா செய்யலாம்னு நினைக்கிறேன்‌. நீ என்னடா சொல்ற?" எனக் கேட்டார்.

"கண்டிப்பா நம்மளால ஹெல்ப் செய்ய முடியும்னா செய்யலாம்ப்பா" என்றான் கார்த்திகேயன்.

"ஹ்ம்ம் சரி! என்ன செய்யலாம்னு நான் பார்க்கிறேன்" என்றவர் உணவுண்ண சென்றார்.

அன்றிரவே இவ்விஷயங்களை வள்ளியிடம் கார்த்திகேயன் பகிரவும், மல்லிகா போன்ற பெண்களும் இவ்வுலகில் உள்ளார்களா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் வள்ளி.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top