Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 62

CHAPTER 62

விவாதம் – 62

By S.K Velan · October 4, 2026

0

தன் மீது படர்ந்து இருக்கும் கொடிவீரனின் அருகாமையை கண்டு கோவம் கொண்ட மகிழினி அவனை தன் வசமிருந்து தள்ளி, “யூ கான்ட் டச் மெ வித்தௌட் மை கன்சென்ட்” என்று சொன்னவள் அதிகப்படியான கோவத்தில் அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

அவனோ முதன் முறையாக அவளை உரிமையோடு இறுகக் கட்டி கொண்டு, “ஐ டோன்ட் வான்ட் டூ டச் யூ ஆர் பக் யூ மை  பொண்டாட்டி. ஐ மேக் யூ பால் இன் மீ வித் மீ” என்று சொன்னவன் அவள் எதிர்பாராத நேரத்தில் தன்னவளின் இதழ்களில் ஒளிந்து இருக்கும் தேனைப் பருக ஆசைக்கொண்டு அவளின் உதட்டில் எரியும் கோபத்தீயை தன் அதரங்களை கொண்டு அணைத்துக்கொண்டான்

கொடிவீரனின் அதிரடி முத்த யுத்தத்தை எதிர்பாராத மகிழினியின் கண்கள் ஸ்தம்பித்து நின்ற தருணம், “ஐ லவ் யூ மை டியர் பொண்டாட்டி” என்றவனின் கரங்கள் மெதுவாக மகிழினியின் வதனத்தை லேசாக வருடி, அவள் தாடையில் கை வைத்து முகத்தை உயர்த்தி மெதுமெதுவாக முன்னேறி அவள் மெல்லிய இதழ்களோடு தன் இதழ்களை மீண்டும் பதித்தான்.

அவனறியாமல் அவள் அவனை ரசித்து, அவளையும் ரசிக்க வைத்து கொண்டிருந்தாள். இருவரின் முத்த பரிமாற்றத்தில் இவர்களின் காதலும் அவளைறியாமலே அங்கே ஒரு வேதியல் மாற்றத்தை உருவாக்கி கொண்டிருந்தது.

கொடிவீரனின் முத்தப் போரில் மகிழினி அவன் அணிந்து இருந்த வெள்ளை உள் பனியனை தன் கரங்களால் இறுக பற்றிக்கொண்டு, அவனை தன் தேகத்தில் தாங்கி இருக்க, பேதையின் விழி கொடுத்த போதையில் கள் உண்ட வண்டாக கிறங்கியவன் இன்னும் ஆழமாக அவளின் அழகான சிவந்த அதரங்களை சிறைப் பிடித்தான்.

சட்டென்று கொடிவீரனின் நெருக்கத்தில் தன்னிலையை உணர்ந்து அதிர்ந்தவள், அவனிடன் இருந்து விலக திமிறியவளின் பிடரியில் கை வைத்து மேலும் இறுக்கமாக அணைத்து கொண்டவன், தன் முத்தத்தை தொடர, அவளின் உதடுகள் இன்னமும் அவனின் ஆதிக்கத்தில் தான் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், அவன் பற்களுக்கு இடையில் சிக்கி இருந்த சின்ன உதடுகளில் ஏற்பட்ட வலி உணர்த்தியது.

அவளோ அவனை தன் வசமிருந்து மீண்டும் தூர தள்ளியவளின் கரங்களோ, தன் கட்டுப்பாட்டை தளர்த்தி அவன் கட்டுக்குள் இவள் அடங்கிப்போக, அவனோ மேலும் மேலும் அவள் இதழ்களை மென்மையாகவும் வன்மையாகவும் கையாளத் தொடங்கியவனின் கை விரல்கள், அவள் கைவிரல்களில் பின்னி இருக்க, கண்கள் மூடி தன்னவளின் தீண்டலில் தேகம் சிலிர்த்து தாகம் பெருகி மேலும் மேலும் அவள் இதழ் தரும் தேனை சுவைக்க காத்து இருந்தவனின் காதலுக்கு தடையாக கொடிவீரனின் கைபேசி சிணுங்கியது.

தன் விழிகள் மலர்ந்த மகிழினி தன் நிலையை உணர்ந்து, தன் முழு பலம் கொண்டு தள்ளியவள், அவன் வசமிருந்து சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய் பறந்து ஓடியவள், குளியல் அறை சென்று சட்டென்று கதவை அடைத்து கொண்டாள்.

அவளின் வேகத்தை கண்டு இதழ் மலர்ந்தவன், தன் பின் தலையை தட்டிக்கொண்டு, சற்று முன் நடந்த சிறு கூடலை நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டே, அவன் கைபேசியை எடுத்து பார்க்,க தன்னை அழைத்தது ஜீவா என்று அறிந்து கொண்டு வேகமாக பட்டு வேஷ்டி பட்டு சட்டைக்கு மாறியவன், ஆளுயர கண்ணாடி முன் நின்று தன் உருவத்தை பார்த்தவனுக்கு தெரிந்தது என்னவோ தன்னவளின் வதனம் மட்டுமே

குளியலறைக்குள் சென்ற மகிழினி ஷவரை திறந்து, தன் தேகத்தை குளிர்ந்த நீரில் நனைத்துக் கொண்டவளின் தேகத்தில் புதுவித உணர்வுகள் தோன்ற, மனதை அலைபாய விடாமல் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த எண்ணியவள், மேற்கொண்டு எதைப்பற்றியும் நினைக்காமல் அருகில் இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க, இதழ்கள் இயல்பை விட சிவந்து காணப்பட்டதை கண்டு, தன் விரல்களால் உதட்டை வருடியவள் கண்களுக்கும் தன்னவனின் செயல்கள் மட்டுமே நினைவுக்கு வந்தது.

அருகில் இருந்த துண்டை எடுத்து கட்டிக்கொண்டவளுக்கு, அப்போது தான் நினைவுக்கு வந்தது, மாற்று துணி இருப்பது குளியலறைக்கு வெளியே என்று.

நீண்ட நேரம் கடந்தும் மகிழினி குளியலறையில் இருந்து வெளியே வராத காரணத்தால், கொடிவீரன் குளியலறைக் கதவை தட்ட, திடுக்கிட்ட மகிழினி, கதவின் பின் அமைதியாக நிற்க, கரங்கள் தன் உடலை சுற்றி இருந்த துண்டை இறுக்கமாக பற்றி இருந்தது.

“ஏங்க நீங்க Change பண்ண டிரஸ் கொண்டு போகல போல” என்றவனின் கேள்விக்கு பதில் தராமல் அமைதியாக இருந்தவளின் எண்ணத்தை படித்தவன்

“சரி நீங்க ரொம்ப வெட்கப்படுறீங்க. நான் இப்ப மெயின் டோரை சாத்திகிட்டு வெளிய நிக்குறேன். நீங்க சீக்கிரமா வெளியே வந்து ரெடி ஆகிடுங்க. இங்க இருந்து கல்யாணம் நடக்குற கோவில் பக்கம் தான். சோ நம்ம நடந்தே போயிடலாம்” என்றவனின் வார்த்தையை கேட்டும் மகிழினி பதில் ஏதும் பேசாமல் அமைதிகாத்தாள்.

கொடிவீரன் மேற்கொண்டு அவளிடம் வார்த்தையை வளர்க்காமல் ரூமில் இருந்து வெளியேறினான்.

கணவன் சென்றதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட மகிழினி குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவள், முதல் வேலையாக மெயின் டோரை பூட்டி, தான் கொண்டு வந்த பட்டு புடவையை உடுத்திக்கொண்டு, அளவான ஒப்பனையோடு, சில நிமிடங்களில் அந்த அறையின் கதவை திறக்க வாசலில் கையில், கேவி ஃபோனுடன் நின்றிருந்தவன் தன் மனைவியின் அழகில் சில நொடிகள் மயங்கிப்போய் நின்று இருந்தான்.

மகிழினியோ தன்னவன் தன்னை தான் ரசிக்கிறான் என்று அறிந்தும், அவன் முகத்தை பாராமல் அமைதியாக நின்றிருக்க, மீண்டும் இவர்கள் தங்கி இருக்கும் அறைக்குள் சென்றவன் வால்லட் மற்றும் சாவியை எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு, மகிழினியுடன் ரிசார்ட்டை விட்டு வெளியேறினான்.

ஐந்து நிமிட தொலைவில் ஜீவா மீனா ஜோடிக்கு திருமணம் நடக்க போகும் கோவிலை சென்றடைந்தார்கள். வழியெல்லாம் அமைதியாக வந்த மகிழினிக்கு தொல்லை தராமல் வந்தான்.

 கோவில் வாசலில் காலணியை கழட்டி விடும் நேரத்தில்

“சிஎம் கொஞ்சம் நில்லுங்க” என்று அவளை அழைக்க அவளோ அவன் முகம் பாராமல் அதே இடத்தில் நின்றதும் அருகில் இருக்கும் பூக்கடையில் மல்லி பூ சரத்தை வாங்கி அவள் முன் நீட்டியதும், மகிழினியின் முகம் மாறி கொடிவீரனை பார்த்து கண்கள் கலங்கியவள் அவன் கையில் இருந்த பூவை வாங்காமல் வேகமாக கோவிலுக்குள் நுழைந்து கொண்டாள்.

கொடிவீரனுக்கு அவளின் இந்த செய்கை வருத்தத்தை ஏற்படுத்த, தன் சஞ்சலங்களை பெரிதாக முகத்தில் காட்டிக்கொள்ள எண்ணாதவன், கோவிலுக்குள் நுழைய, அவன் முன் வேணு வந்து நின்று கொடிவீரனை பார்த்து கைகளை நீட்டினான்.

“என்னடா ஃபோன் வேணுமா?” என்று கேவி கேட்க,

“இல்ல உங்க சிஎம், உங்க கையில இருக்குற பூவை வாங்கிட்டு வர சொன்னாங்க” என்று வேணு சொன்னதும் ஒரு தூணுக்கு பின் நின்று எட்டிப்பார்த்து கொண்டிருந்த மகிழினியின் பாதி முகத்தை கண்ட கொடிவீரன், சிரித்துக்கொண்டே அவன் கையில் இருந்த மல்லி பூ சரத்தை வேணுவிடம் தந்தான்.

“இந்தா இந்த பூவை உன் அத்தைகிட்ட கொடுத்துட்டு, அப்படியே இதையும் கொடுத்துடு” என்று தன் பாக்கெட்டில் இருந்த சின்ன நகை பெட்டியை மகிழினியிடம் தர சொல்லி கொடுத்து அனுப்பினான்.

தூரத்தில் இருந்து கேவியை பார்த்த ரேஷ்மா அவளின் தோழிகளுடன் அவனை நெருங்கி வந்து, இயல்பாக கொடி வீரனிடம் பேசிக்கொண்டு இருக்க, மகிழினி கணவனைத் திரும்பிக்கூட பார்க்காமல் அவன் தந்த பூவை சூடிக்கொண்டு, மீனாவின் பெரியம்மா பெரியப்பாவிடம் அன்பாக பேசிக்கொண்டிருந்தாள்.

ஜீவா மீனா திருமணத்திற்கு வந்திருந்த உறவுகளுக்கு நடுவில், முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பெண்மணி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க, கொடிவீரனின் பார்வை அந்த பெண்மணியின் மீது விழுந்தது

“Excuse me ரேஷ்மா! நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் இதோ வர்றேன்.”

என்றவன், முக்காடு போட்டபடி அங்கிருந்து சென்று கொண்டிருந்த பெண்மணியைப் பின்தொடர்ந்து சென்று, அவளது கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பினான்.

நைட்டு அடித்த சரக்கின் வீரியம் குறைந்து, தான் செய்த தவறை எண்ணி தலையில் முக்காடு போட்டுக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தது தன் அத்தை கீதா என்பதை அறிந்ததும், கொடிவீரனின் முகம் மாறியது.

அவளை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தான்.

“மாப்பிள்ளை… இப்போ எதுக்காக நீங்க இப்படி முறைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியுது. ஆனா, நேத்து நைட் நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அதனால கல்யாணத்துல வச்சு என் மானத்தை வாங்கிடாதீங்க.”

“ஓ… நீங்க பண்ண காரியத்துக்கு உங்க மானத்தை வாங்காம, என் மடியில வச்சு உங்களை கொஞ்சச் சொல்றீங்களா?”

கீதா முகத்தைச் சுளித்தாள்.

“அப்படி என்ன? நான் தப்பு பண்ணிட்டேன்? என்னை இப்படி முறைக்கிறீங்க?”

“என்ன? தப்பு பண்ணீங்களா!? நீங்க பண்ண வேலை மட்டும் என் அண்ணன் மாறனுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?”

“என்ன ஆகும்? ‘எனக்கு ஒரு டம்ளர் சரக்கு குடுங்க மாமியாரே’ன்னு கேப்பான். வேற என்னத்தைக் கேட்டு கிழிக்கப் போறான்?”

“அத்தை… செஞ்ச தப்பை நியாயப்படுத்திப் பேசாதீங்க. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? போயும் போயும் ஃபிரண்டு கல்யாணத்துக்கு வந்த இடத்துல இப்படியா சரக்கு அடிச்சு அலப்பறை பண்ணுவீங்க? நீங்க சரக்கு அடிச்சாலும் பரவால்ல… என் பொண்டாட்டிக்கு எதுக்காகக் கொடுத்தீங்க?”

கீதா பெருமூச்சு விட்டாள்.

“நீ என்ன மாப்பிள்ளை… சுத்த விவரம் இல்லாத ஆளா இருக்குற! நாங்க எல்லாம் family better class. லைட்டா நாங்களா ஒண்ணும் குடிக்கல. அந்த ரேஷ்மா பொண்ணுதான் திராட்சை ரசம் குடிச்சா நல்லா கலர் ஆகுவாங்கன்னு சொல்லி எதையோ ஒண்ணைக் கொடுத்துச்சு. நான் ஏற்கனவே கலர்தான் இருந்தாலும், உன் மாமனார் பழனி அளவுக்கு நான் கலர் இல்லையே! அதான் சரின்னு அந்தத் திராட்சை சாரை கையில வாங்கினேன்.”

கொடிவீரன் நெற்றியைச் சுருக்கினான்.

“அதுக்குள்ள இன்னொருத்தவங்க vodka சாப்பிட்டா இந்த உலகத்துல இருக்கிற எல்லா கவலையும் மறக்கலாம்னு என்னத்தையோ காட்டி, அவன் ஃபிரண்ட்கிட்ட பேசிக்கிட்டு இருந்தான். சரி… குடிக்கறது குடிக்கிறோம். ரெண்டுத்தையும் சேர்த்துக் குடிப்போம்னு நினைச்சுத்தான் ரெண்டுத்தையும் ஒண்ணா சேர்த்துக் குடிச்சேன்.”

கீதா தொடர்ந்து விளக்கம் கொடுத்தாள்.

“நான் குடிச்சுக்கிட்டு இருக்கும்போதே தாகமா இருக்குன்னு உன் பொண்டாட்டி என் கையில இருக்கிற சரக்கை வாங்கி ஜூஸ்னு நினைச்சுக் குடிச்சிட்டா. குடிச்சவ ரொம்ப நல்லா இருக்குன்னு இன்னொரு கிளாஸ் கிடைக்குமான்னு வேற கேட்டா.”

அதைச் சொல்லும்போது கீதாவின் முகத்தில் அப்பாவித்தனம்.

“சரி… நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு முதல் முதலா என்கிட்ட ஒரு விஷயம் கேட்டிருக்காளே. அவ கேட்டும் நான் கொடுக்காம இருக்கக்கூடாதுன்னுதான் இன்னொரு கிளாஸ் கொடுத்தேன். இதுல என் தப்பு என்ன? இருக்கு… I am பாவம் மாப்பிள்ளை!”

கொடிவீரன் தலையில் கை வைத்துக் கொண்டான்.

“ஓ… என் பொண்டாட்டிக்கு இரண்டு கிளாஸ் கொடுத்துட்டு நீங்க எட்டு கிளாஸ் குடிச்சிருக்கீங்க இல்ல?”

கீதா அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“உண்மையாவா!? எட்டு கிளாஸ்தானா குடிச்சேன்? ச்ச… கம்மியாதான் குடிச்சிருக்கேன்!”

“அத்தை… சும்மா விளையாடாதீங்க.”

“நான் ஏன் ப்பா உன் கூட விளையாடப் போறேன்? சரி, என் கதையை விடு. நேத்து நைட்டு நீ ஏதாவது உன் பொண்டாட்டிகூட விளையாடுனியா?”

கொடிவீரன் அவளைப் பார்த்தான்.

“நீங்க எனக்கு அத்தைதானே?”

“நான் உனக்கு அத்தைதான். ஆனா, என் புருஷன் உனக்கு மாமாதானே?”

“போதும் அத்தை! நேத்து மட்டும் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகி இருந்தா யாரு பொறுப்பாகிருப்பாங்க?”

கீதா உடனே அவனைப் பார்த்தாள்.

“என்ன உளறுற? உன் பொண்டாட்டிக்கு என்ன நடந்தாலும் நீதான் பொறுப்பு.”

“அதைதான் நானும் சொல்றேன்.”

கொடிவீரனின் குரல் இம்முறை சீரியஸானது.

“சரக்கு அடிச்சு உடம்புக்கு ஏதாவது வந்திருந்தா யாரு பொறுப்பு? இனிமே இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்காதீங்க.”

“சரி சரி… நீ சும்மா என்னைத் திட்டுவதை விட்டுட்டுப் போங்க. புருஷனும் பொண்டாட்டியும் முன்ன நின்னு உன் ஃபிரண்டோட கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு வையுங்க.”

என்ற கீதா அங்கிருந்து நகர்ந்தாள்.

அதன்பின் சில நிமிடங்களில் நடக்கவிருந்த ஜீவா–மீனா திருமணத்திற்குத் தேவையான வேலைகளை அனைவரும் ஆளுக்கொருவராகப் பார்த்துக்கொண்டனர்.

சரியாக முகூர்த்த நேரத்தில், பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு ஜீவா–மீனா தம்பதியரின் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு வந்த அனைவரும் மணமக்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி வாழ்த்திய பின்னர், உணவு உண்ண பந்திக்குச் செல்லத் தொடங்கினர்.

கேவி 💙 சிஎம் இருவரும் தங்களுடைய தோழனுக்கும் தோழிக்கும் அன்பளிப்பு கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பின்னர் கீதா, வேணு, ரேஷ்மா என அனைவரும் சேர்ந்து புதுமணத் தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

“ஓகே மச்சான்… அப்போ நாங்க கிளம்புறோம்.”

“டேய்… இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாமே டா.”

“ஐயையோ! கேண்டீன்ல work அதிகமா இருக்கு டா. என் மிஸஸ் வேற நாளைக்கு வேலைக்கு join பண்ணப் போறாங்க. So, work ரொம்ப இருக்கும் டா. நாங்க இப்ப கிளம்புனாதான் சரியா இருக்கும்.”

மீனா உடனே இடையில் வந்தாள்.

“என்ன ப்ரோ… நீங்க நாளைக்கு நம்ம எல்லாம் சேர்ந்து சின்ன trip போகலாம்னு நான் plan பண்ணேன்.”

மகிழினி உடனே மறுத்தாள்.

“என்னது trip-ஆ!? நீ வேற ஏன் டி அதெல்லாம்… எங்களுக்கு சுத்தமா நேரம் இல்ல. நாங்க கிளம்புறோம். நீ ஜாலியா enjoy பண்ணு. Brother… நாங்க போயிட்டு வர்றோம்.”

“ரொம்ப நன்றி சிஸ்டர். நீங்க எங்க marriage-க்கு வருவீங்கன்னு நான் நினைச்சுக்கூட பாக்கல.”

ரேஷ்மா உடனே இடையில் புகுந்தாள்.

“சித்து… உன்னோட marriage-க்கு வந்ததுக்கு நான்தான் காரணம்.”

மகிழினி அவளைப் பார்த்து 😏 புன்னகைத்தாள்.

கொடிவீரனும் திரும்பிப் பார்த்தான்.

“என்ன சொல்றீங்க?”

“அதெல்லாம் யாரும் காரணம் இல்ல. நான் என் மீனாவுக்காகத்தான் வந்தேன்.”

“ஓ…”

வேணு உடனே சிரித்தபடி,

“நீங்க ஓ எல்லாம் அப்புறம் போடலாம் மாமா. வாங்க… நம்ம கிளம்பலாம்.”

கீதா அவனைப் பார்த்தாள்.

“என்னடா வேணு… அதுக்குள்ள உனக்கு bore அடிக்குதா?”

ரேஷ்மா சிரித்தாள்.

“அவன் friends எல்லாம் போயிட்டாங்க இல்ல… அதான்.”

“சரி மச்சான்… அப்போ நாங்க வர்றோம். ஆமா… எங்க உன் அத்தை, மாமா?”

“அதோ அங்க இருக்காங்க.”

“வாங்க மாப்பிள்ளை. அவங்ககிட்டயும் சொல்லிட்டுப் போகலாம்.”

என்றதும் அனைவரும் இந்திரா–சந்திரன் தம்பதிகளிடம் ஆசிபெற்றனர்.

பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கேவி 💙 சிஎம் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினர்.

தங்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் காரை நோக்கி வந்தனர்.

இந்த முறை மகிழினி காரின் பின் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

அவளைப் பார்த்ததும் கேவியின் முகம் மாறியது.

ஆனால் அவன் பார்வையைப் பொருட்படுத்தாத மகிழினி தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

அவள் அருகில் வேணு அமர்ந்துகொள்ள, காரின் முன் இருக்கையில் கீதா அமர்ந்தாள்.

கொடிவீரன் எதுவும் பேசாமல் காரை சென்னையை நோக்கி விரட்டினான்.

வழியெல்லாம் இரண்டு மூன்று முறை ஆங்காங்கே வண்டியை நிறுத்தி இளைப்பாறியவன், மகிழினியிடம் பேச முயன்று ஒவ்வொரு முறையும் தோற்றுப்போனான்.

இவர்கள் இருவருக்கும் நடுவில் என்ன பிரச்சனை என்று புரியாமல் கீதாவும் குழம்பிய நிலையிலேயே இருந்தாள்.

பல மணி நேரப் பயணம் தொடர்ந்த நிலையில், இரவு எட்டு மணி அளவில் கேவி தன் காரை மகிழினியின் வீட்டிற்கு முன் நிறுத்தினான்.

அனைவரும் வீட்டுக்குள் சென்றனர்.

தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்ற கேவி, குளித்து முடித்த பின் மீண்டும் கீழே இறங்கி வந்தான்.

அங்கே பாட்டியிடம் கீதாவும் வேணுவும் இந்த இரண்டு நாட்களில் நடந்த நிகழ்வுகளை ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கொடிவீரனின் கண்கள் தன் மனைவியைத் தேடுவதைப் பார்த்த பாட்டி,

“என்ன தம்பி… பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு? கல்யாணம் நல்லபடியா நடந்துச்சா?”

என்று விசாரித்தாள்.

கேவி கடமைக்கென்று பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தோட்டத்துப் பக்கம் இருந்து வந்த மகிழினி தன் அறைக்குள் செல்வதைப் பார்த்தான்.

சற்று தயக்கத்துடன் அவள் அறைக் கதவின் அருகே சென்றான்.

“என்ன தம்பி… உங்க பொண்டாட்டி ரூமுக்குள்ள போக இவ்வளவு யோசிக்கிறீங்க? போங்க உள்ள.”

“ம்… இல்ல அது இல்ல பாட்டி. என் டிரஸ் அவங்க bag-ல இருக்கு. அதான் கேட்கலாமேன்னு…”

“மாமா… நான் வேணா அத்தைகிட்ட கேட்டு வாங்கி வந்து தரவா?”

“ம்…”

“தம்பி… நீ உக்காருப்பா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”

“இல்ல பாட்டி. எனக்குப் பசிக்கல. நான் போய்ப் படுத்துக்குறேன்.”

என்றவன் மேற்கொண்டு அங்கே நிற்காமல் மீண்டும் மாடிக்குச் சென்றான்.

“என்னாச்சுன்னு தெரியலையே… இவங்களுக்கு ஏன் ரெண்டு பேரும் ஒரு மாதிரி இருக்காங்க?”

என்று தனக்குள் எண்ணிய கீதா, மகிழினியின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கே கட்டிலின் மேல் அமர்ந்திருந்த மகிழினியின் கண்கள் கலங்கியிருந்தன.

கீதாவைப் பார்த்ததும் சட்டென்று எழுந்தவள்,

“வாங்கம்மா…”

என்று தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

“என்ன சித்ரா… அழறியா?”

“ஹ்ம்… இல்லம்மா. அதெல்லாம் இல்ல. நீங்க உள்ள வாங்க.”

“உனக்கும் என் மாப்பிள்ளைக்கும் ஏதாவது பிரச்சனையா?”

“ஹாங்… இல்லையே. அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல.”

“நீங்க பெங்களூரு வரும்போது சந்தோஷமாத்தானே வந்தீங்க? இப்ப என்னாச்சு?”

“ஒண்ணும் ஆகலம்மா. நாங்க எப்பவும் போலத்தான் இருக்கோம்.”

“இல்லையே… உன் முகம் சரியில்ல. என்ன பிரச்சனை? சொல்லுமா? என்னாச்சு?”

மகிழினியின் கண்கள் மேலும் கலங்கின.

அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை கீதாவால் அறிந்துகொள்ள முடியவில்லை.

சில நொடிகள் அழுத மகிழினி, தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு இதழோரம் புன்னகையை வரவழைத்தவள் கீதாவைப் பார்த்து,

“நீங்க சாப்பிட்டீங்களா?”

என்று கேட்டாள்.

கீதா பெருமூச்சு விட்டாள்.

“நான் சாப்பிடுறது இருக்கட்டும். உன் புருஷன் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் காரை ஓட்டிக்கிட்டு வந்தவன். எதையும் சாப்பிடாம பட்டினியா மாடியில போய்ப் படுத்திருக்கான்.”

அவள் குரல் மென்மையானது.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியல. உன் விருப்பம் இல்லாம அது எனக்குத் தெரியவும் வேணா.”

சிறிது இடைவெளிக்குப் பிறகு,

“ஆனா ஆளாளுக்கு இப்படி முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு சாப்பிடாம இருக்குறது எல்லாம் நல்லா இல்ல. அதுவும் இல்லாம நாளைக்குத்தான் நீ கிளினிக்குல முதல் நாள் வேலைக்குப் போகப் போற.”

மகிழினி அமைதியாக இருந்தாள்.

“நீ ஆசைப்பட்ட எல்லாமே உனக்குக் கிடைச்சிருக்கு. ஆனா நீ தான் அதை எதையும் புரிஞ்சிக்காம என்னென்னத்தையோ நினைச்சு உன்னையும் வருத்திக்கிட்டு, உன்னை நேசிக்கிறவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்குற.”

“அம்மா…”

“நீ என்னை உன் அம்மாவா நினைக்கிறது உண்மைனா, முதல்ல போய் உன் புருஷனை அழைச்சிட்டு வந்து அவனைச் சாப்பிட வச்சிட்டு நீயும் சாப்பிடு. மத்தது எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.”

என்ற கீதா, மகிழினியின் மனதில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முயலாமல், முதலில் இவர்களுக்குள் இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவள் அறையிலிருந்து வெளியே சென்றாள்.

சில நொடிகள் யோசித்த மகிழினி, சமையலறையில் இருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றாள்.

அங்கே கேவி தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

நீண்ட தூரப் பயணத்தின் களைப்பில் உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பாமல், அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

கட்டிலில் படுத்திருந்த கேவியைப் பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கும் களைப்பு கண்களைத் தழுவியது.

அங்கேயே அமர்ந்தபடி அவளும் கண் அயர்ந்தாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!