Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 61

CHAPTER 61

விவாதம் – 61

By S.K Velan · October 4, 2026

0

சிறிது நேரத்தில் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, கட்டிலில் அமர்ந்திருந்த மகிழினி தன் கையில் இருந்த வளையலைக் கழற்றி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்ததும் அவள் முகத்தைச் சுளித்தாள்.

“நீ என்ன? எப்போ பாரு… ஸ்கூல் பையன் மாதிரி T-shirt, shorts போட்டுக்கிட்டு சுத்துற.”

“எனக்கு எது comfortable-ஆ இருக்கோ அதைத்தானே போட முடியும்.”

“ம்… ஆமா ஆமா.”

“சரி… நீங்க என்ன சாப்பிடுறீங்க சொல்லுங்க. நான் order பண்ணுறேன்.”

“ம்… ஹூம். வேணா. எனக்குப் பசிக்கல.”

“சரி. அப்போ கொஞ்ச நேரம் படுங்க. நல்லா தூங்கி எழுந்தா பசிக்கும். அப்போ order பண்ணிக்கலாம்.”

“என்ன தூங்கணுமா!?”

“ம்… ஆமா. ஏன், உங்களுக்கு தூக்கம் வரலையா?”

“ம்… ஹூம். வரலையே!”

“சரி… அப்போ என்ன பண்ணலாம்? TV போடவா?”

“வேணா.”

“பாட்டு?”

“வேணா.”

“ப்ச்… இப்ப என்னதான் பண்ணணும்?”

“தெரியல. ஆனா எனக்குத் தூக்கம் வரல. தலையெல்லாம் round அடிக்குது. நீ எனக்கு ரெண்டு ரெண்டா தெரியுற.”

“இந்த அத்தை என்னத்த இவங்களுக்கு கொடுத்தாங்கன்னே தெரியலையே…”

என்று அவன் தனக்குள் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில், கட்டிலில் இருந்து சட்டென்று எழுந்தாள் மகிழினி.

“ஆமா! எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. நான் கேட்கவா?”

“என்ன சந்தேகம்? நான் உங்க புருஷனா இல்லையான்னா?”

“உஷ்! அது இல்ல.”

“பின்ன?”

“உங்க நேம் கொடி தானே?”

“ம்…”

“நைலான் கொடியா? இல்ல கம்பத்துல பறக்குற கொடியா?”

கொடிவீரன் அவளைப் பார்த்த விதமே தனி.

“இதுதான் உங்க சந்தேகமா?”

“ம்… இன்னொரு சந்தேகமும் இருக்கு.”

“அது என்ன?”

“அது வந்து… அது…”

“என்னாச்சு?”

“நான் கேப்பேன். ஆனா நீங்க உண்மையைச் சொல்வீங்களா?”

“பொய் எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.”

என்னைப் போல ஒருவன்! 🤗

“அப்போ கேட்கவா?”

“ம்…”

மகிழினியின் முகம் திடீரென அமைதியானது.

“நான் உங்களை இவ்ளோ hurt பண்ணுறேனே… நீங்க ஏன் இன்னும் என்னை விட்டு போகல?”

“எங்கே போகணும்?”

“என்னை விட்டுட்டு ஏன் போகல?”

“ஏன் போகணும்?”

“நான் உங்களுக்கு வேண்டாம்.”

“ஏன் அப்படி?”

“என்னை விரும்புற யாரும் என்கூட இருக்க மாட்டாங்க. என் அம்மா, அப்பா, என் வீரான்னு யாருமே என்கூட இப்ப இல்ல. இவங்க எல்லாம் என்னை அதிகமா நேசிச்சாங்க. இப்ப நீங்களும் என்னை அதே அளவு நேசிக்கிறீங்க. அதனாலதான் சொல்லுறேன்… நான் உங்களுக்கு வேண்டாம்.”

கொடிவீரன் அவளை அமைதியாகப் பார்த்தான்.

“உங்களுக்கு என்னை வேண்டாம்னு சொல்ல ஏதாவது ஒரு காரணம் வேணும்ல.”

“அதெல்லாம் இல்ல. நான் உண்மைதான் சொல்லுறேன்.”

“எது உண்மை?”

“என்கூட இருந்தா உங்களுக்கு ஏதாவது ஆகிடும்.”

“சும்மா பொய் சொல்லாம பேசாம படுத்துத் தூங்குங்க.”

“நான் பொய் எல்லாம் சொல்லல. சரக்கு அடிச்சவங்க பொய் சொல்ல மாட்டாங்க.”

“ஆமா ஆமா… பெரிய ஞானிதான் நீங்க.”

“ப்ச்… சொல்லுறேன் இல்ல. நான் உங்களுக்கு வேணாம். எனக்கு சீக்கிரம் divorce கொடுத்துட்டு நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க.”

“ம்… சரி. பண்ணிக்கிறேன்.”

“ம்… சீக்கிரம் பண்ணிக்கோங்க.”

“ம்… பண்றேன் பண்றேன்.”

“இப்ப நீங்க படுங்க.”

என்றவன் அவளுடைய தலைக்குக் கீழே ஒரு தலையணையை வைத்து அவளைப் படுக்க வைத்தான். இருவருக்கும் நடுவில் மற்றொரு தலையணையை வைத்து தன் இடத்திலும் படுத்துக்கொண்டான்.

ஆனால் அவன் கண்களுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.

தனக்குத்தானே ஏதேதோ பேசிக்கொண்டிருந்த மகிழினியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏங்க…”

“ம்…”

“தூங்கல?”

“தூங்கிட்டேனே!”

“ஆமா… என்னத்த குடிச்சீங்க?”

“தெரியலையே!”

“ஏங்க… குடிச்சா பொய் சொல்ல மாட்டாங்கன்னு யாரு சொன்னது?”

“என் அண்ணன் சொன்னான்.”

“சரி. அப்போ நான் ஒரு கேள்வி கேக்குறேன். நீங்க உண்மையைச் சொல்றீங்களா?”

“என்ன கேட்கப் போறீங்க?”

“உங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கல?”

“நான் எங்க உங்களைப் பிடிக்கலன்னு சொன்னேன்?”

“அப்போ பிடிக்குமா?”

சிறு குழந்தையைப் போலத் தலையசைத்தாள்.

“ம்… பிடிக்குமே.”

“பட்… அப்படி ஏதும் symptoms தெரியலையே!”

“என்ன தெரியல?”

“நான் உங்ககூட பேசுனாவே உங்களுக்கு கோபம் வருது.”

“பேசலைனா அதைவிட அதிகமா கோபம் வரும்.”

“பாருடா! ஆனா… அப்போ ஏன் என்கிட்ட divorce கேக்குறீங்க?”

“நீங்க நல்லா இருக்கணும்னுதான்.”

“ஏன்? நான் உங்ககூட இருந்தா நல்லா இருக்க மாட்டேனா?”

“என்கூட இருக்குற யாரும் நல்லா இருக்க மாட்டாங்க.”

“அப்படியெல்லாம் ஏதும் இல்ல. இதெல்லாம் ஒரு காரணம்னு நினைச்சு நீங்களா உங்கள ஏமாத்திக்கிறீங்க.”

மகிழினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

“ஒருவேளை… உங்க அழகுக்கும் அறிவுக்கும் நான் தகுதி இல்லாதவன்னு நினைக்கிறீங்களா?”

“ப்ச்… ஏன்? உங்களுக்கு என்ன குறைச்சல்?”

“அப்போ… உங்க எதிர்காலத்தை நான் வீணாக்கிட்டேன்னு feel பண்றீங்களா?”

“ம்ஹூம்… இல்லையே. இன்னும் சொல்லப்போனா, நீங்க வந்த பின்னாடிதான் எனக்குப் பிடிச்ச மாதிரி நான் நிறைய விஷயங்களைப் பண்றேன். ரொம்பத் தைரியமா இருக்கேன்.”

“ம்… அப்போ உங்களுக்கு நான் okay-தான் இல்லையா?”

“ம்… okay தான்.”

“அப்போ நீங்க என்கிட்ட divorce கேட்க மாட்டீங்க தானே?”

“கேப்பேனே.”

கொடிவீரன் சிரித்துவிட்டான்.

“ஏன் இந்த சிரிப்பு?”

“சரக்கு அடிச்சாலும் கூட ரொம்பத் தெளிவு நீங்க.”

“Thanks.”

“சரி… நீங்க தூங்குங்க.”

“எனக்கு… எனக்கு தூக்கம்… தூக்…”

என்று சொல்லிக்கொண்டிருந்தவள் திடீரென்று எழுந்து கீழே இறங்கினாள்.

அடுத்த நொடியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்தாள்.

கொடிவீரன் பதறி எழுந்தான்.

அவளைத் தாங்கிக்கொண்டு குளியலறைக்குள் அழைத்துச் சென்றவன், முகத்தையும் கைகளையும் கழுவி, அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தான். மது மயக்கத்தில் இருந்ததால் அவள் தன்னால் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை.

“நீங்க இதை மாத்திக்கிட்டு வாங்க. நான் வெளியே wait பண்ணுறேன்.”

அவளிடம் bathrobe-ஐ கொடுத்துவிட்டு, அவளுக்கு தனிமை கொடுக்க வெளியே நின்றான்.

சில நொடிகளுக்குப் பிறகு உள்ளிருந்து அவளுடைய குரல் கேட்டது.

“என்னை ஏன் ஈரமாக்கினீங்க?”

“ம்… வேண்டுதல்.”

“ஓ… அங்கப்பிரதக்ஷணம் பண்ணணுமா? ஆனா எதுக்குப் பண்ணணும்?”

கொடிவீரன் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

“நமக்கு ஒரே பிரசவத்துல ரெண்டு பிள்ளை பிறக்கணும்னு…”

“அதுக்கு அங்கப்பிரதக்ஷணம் பண்ணக்கூடாது. வேற ஒண்ணு பண்ணணும். பட்… அதுக்கு நீங்க லாயக்கு இல்ல.”

“நேரம் தாங்க எனக்கு.”

“ஆமா… ஐயோ! நேரமாச்சு. நம்ம ஏன் இந்த நேரத்துல waterfall வந்துருக்கோம்?”

“ஏங்க… என்னதான் சரக்கு அடிச்சாலும் shower உங்களுக்கு waterfall மாதிரியா தெரியுது?”

“எனக்கு அப்படித்தான் தெரியுது.”

“சரி சரி… உங்களுக்கு அப்படியே தெரியட்டும். ப்ளீஸ்… இந்த bathrobe-ஐ கட்டிக்கிட்டு வெளிய வாங்க.”

“மாட்டேன். நான் வெளிய வர மாட்டேன்.”

“ப்ச்… வாங்கங்க. ரொம்ப நேரம் ஈரத்துல நிக்கக்கூடாது.”

“டேய்! சொல்லுறேன் இல்ல… நான் வர மாட்டேன். நீ போ.”

“இல்ல இல்ல. நீங்க சொன்னா கேட்க மாட்டீங்க. இருங்க… நானே வரேன்.”

“ஏய் ஏய்! எங்க வர? என்கிட்ட வராத!”

“உஷ்… சத்தம் போடாதீங்க. நீங்க வெளியே வரணும். இல்லன்னா இங்கேயே குளிரில் நின்னுட்டு இருப்பீங்க.”

“மாட்டேன்!”

மயக்கத்திலும் மகிழினி குழந்தையைப் போல அடம்பிடித்தாள்.

இறுதியில் கொடிவீரன் அவளைச் சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தான். அவளுக்கு போர்வையைப் போர்த்தி சோபாவில் அமர வைத்தான்.

மகிழினிக்கு என்ன நடக்கிறது என்பதே சரியாகப் புரியவில்லை.

மது மயக்கத்தில் கண்களை மூடியவள், சில நொடிகளில் சோபாவிலேயே சரிந்து விட்டாள்.

அவள் மீது போர்வையை நன்றாகப் போர்த்திவிட்டு, அறையைச் சுத்தம் செய்தான் கொடிவீரன். பின்னர் தானும் உடைகளை மாற்றிக்கொண்டு வந்து பார்த்தபோது, ஈரக் கூந்தலுடன் உடல் நடுங்கியபடி அவள் படுத்திருந்தாள்.

அவளை மெதுவாக எழுப்பி கட்டிலில் படுக்க வைத்தான்.

அவளுடைய கூந்தலை உலரவிட்டு, தலையைச் சரியாக வைத்தான்.

ஒன்றுமே தெரியாத பாப்பாவைப் போல உறங்கிக்கொண்டிருந்த அவளுடைய சேட்டைகள் அனைத்தும் அவன் நினைவுக்கு வந்ததும், அவனுடைய இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

மகிழினியின் காது வரை போர்வையைப் போர்த்திவிட்டு, AC காற்றை நிறுத்தி, அவளுக்குத் தேவையான சௌகரியங்களைச் செய்தான்.

பிறகு அவள் அருகிலேயே படுத்துக்கொண்டான்.

அன்றிரவு…

இவர்கள் இருவருக்கும் நடுவில் வைக்கப்பட்டிருந்த தலையணையைவிட, அவளுக்குத் துணையாக அவனே மாறியிருந்தான்.

தன்னை மறந்து உறங்கிப்போனான்.


நேரம் சரியாக காலை ஐந்து மணி.

முதலில் தூக்கத்திலிருந்து கண்விழித்த மகிழினி தன் தலையைப் பிடித்துக்கொண்டு பல்லைக் கடித்தாள்.

“ஐயோ… தல வலி உயிர் போகுதே…”

என்று தனக்குள் புலம்பியவளின் பார்வை சுற்றிலும் சென்றது.

அடுத்த நொடி அவளுடைய கண்கள் தன்னருகில் படுத்திருந்த கொடிவீரனின் மீது விழுந்தன.

அவன் தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவனுடைய இடது கை தன் இடையைச் சுற்றியிருந்ததைப் பார்த்ததும் மகிழினியின் கண்கள் விரிந்தன.

“ஐயோ! இவரு எப்படி என் கூட…?”

என்று பதறியவள், தன்னை அணைத்திருந்த அவன் கையை மெதுவாக விலக்க முயன்றாள்.

ஆனால் முடியவில்லை.

“கொடி… ஏங்க… எழுந்துடுங்க!”

என்று கோபமாக அவனைத் தட்டி எழுப்பினாள்.

கண் விழித்த கொடிவீரன், தூக்கக் கலக்கத்திலேயே அவளைப் பார்த்தான்.

“ஹேய் பேபி… ப்ளீஸ்… இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுமா…”

என்று முணுமுணுத்தவன், மீண்டும் அவளைத் தன்னருகில் இழுக்க முயன்றான்.

அவனுடைய செயலில் மகிழினி இன்னும் கோபமடைந்தாள்.

முழு பலத்தையும் பயன்படுத்தி அவன் கையைத் தன் இடையிலிருந்து விலக்கிவிட்டு, கட்டிலிலிருந்து கீழே இறங்கினாள்.

அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவள்—

அடுத்த நொடியே அந்தத் தண்ணீரை கொடிவீரனின் முகத்தில் ஊற்றினாள்.

“ஐயோ! மழை!”

என்று அலறியடித்து எழுந்த கொடிவீரனின் முன், மகிழினி ருத்ரதாண்டவம் ஆடத் தயாராக நின்றிருந்தாள்.

தன் கையில் இருந்த பாட்டிலை அவன் மீது வீசினாள்.

கொடிவீரன் அதை லாவகமாகத் தடுத்துப் பிடித்தான்.

“என்ன மேடம்… நைட் அடிச்ச தண்ணி பத்தாம, இப்ப காலையிலேயே தண்ணீர் பாட்டிலை எடுத்து அடிச்சு விளையாட ஆரம்பிச்சிட்டீங்களா?”

என்று கேட்டபடி கட்டிலிலிருந்து எழுந்து குளியலறையை நோக்கிச் செல்ல முயன்றான்.

ஆனால் அவனை வழிமறித்து அவன் முன் நின்றாள் மகிழினி.

அவளுடைய முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த கொடிவீரன் புருவத்தை உயர்த்தினான்.

“என்ன…?”

அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவனை முறைத்தபடியே நின்றாள் மகிழினி. அவளுடைய பார்வையில் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது “நேற்று இரவு உண்மையில் என்ன நடந்தது?”

 என்னாச்சு ஏன் இந்த முறைப்பு மணி ஆகுது பாருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஜீவா மீனா கல்யாணம் வாங்க வாங்க குளிச்சிட்டு கிளம்பலாம். சொல்லிட்டே இருக்கேன் கிளம்பாம ஏன் முறைக்கிறீங்க?” என்று கேட்டான்.

“உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னைக் கட்டிப்பிடிச்சுப் படுத்திருப்பீங்க?”

கோபமாகக் கேட்டாள் மகிழினி.

கொடிவீரன் அவளைப் புரியாமல் பார்த்தான்.

“என்ன? உளறீங்க? நான் எப்போ உங்களைக் கட்டிப்பிடிச்சுப் படுத்தேன்?”

“பொய் சொல்லாதீங்க. நான் கண் முழிச்ச போது நீங்க என்னைக் கட்டிப்பிடிச்சுப் படுத்திருந்தீங்க.”

“ஓ… அப்படியா!?”

“ஆமா.”

“சரி… இப்போ என்ன அதுக்கு?”

“என்ன என்ன அதுக்கா? என்னைத் தொட உங்களுக்கு யாரு permission தந்தது?”

“யாரு தரணும்?”

“நான் தரணும்!”

“அதான் நேத்து நைட்டே எல்லாம் தந்துட்டீங்களே!”

“என்ன!? என்னத்த தந்தேன்?”

“எல்லாம்தான் தந்தீங்க.”

“எல்லாம்னா?”

“எல்லாம்னா எல்லாம்தான்.”

மகிழினியின் முகத்தில் குழப்பம் படர்ந்தது.

“எனக்குப் புரியல. என்ன சொல்லுறீங்க நீங்க?”

“ஐயோ போங்க சிஎம்… நீங்க சும்மா அதையே எல்லாம் கேக்காதீங்க. எனக்கு வெக்க வெக்கமா வருது.”

“என்ன? வெக்கமா வருதா!?”

“ம்… ஆமா.”

“ஏன்? எதுக்கு? எதனால வெக்கம் வருது?”

“ப்ச்… எல்லாம் அதுக்குத்தாங்க.”

“அதான் எதுக்கு?”

கொடிவீரன் அவளைப் பார்த்து சிரித்தான்.

“நீங்க இன்னும் update ஆகவே இல்ல சிஎம். அதான் நமக்குள்ள எல்லாம் ஓவர்னு சொல்லுறேன். அப்புறம் என்ன சும்மா சும்மா ஏன்? எப்படி? என்னன்னு கேக்குறீங்க?”

“இங்க பாருங்க… சும்மா விளையாடாதீங்க. எனக்கு நேத்து நைட்டு என்ன நடந்துச்சுன்னே நினைவு இல்ல. தலையெல்லாம் பயங்கரமா வலிக்குது.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“எனக்கு கீதா அம்மா ஒரு ஜூஸ் கொடுத்தாங்க. அதை குடிச்ச நினைவு மட்டும்தான் இருக்கு. அப்புறம் நான் எப்படி இங்க வந்தேன்? நீங்க எப்படி என் பக்கத்துல வந்தீங்க? இப்படி எதுவுமே எனக்கு நினைவு இல்ல.”

கொடிவீரன் அமைதியாக அவளைப் பார்த்தான்.

“சரி… இப்போ என்ன? அதுக்கு?”

“இல்ல… நீங்க என்கிட்ட…”

“உங்ககிட்ட?”

“நமக்குள்ள நேத்து நைட்டு ஏதாவது நடந்துச்சா?”

“ப்ச்… இதோ பாருங்க சிஎம். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. இனி எது நடக்கணுமோ அதுவும் நல்லதாவே நடக்கும். So, இப்போ நடக்க வேண்டிய விஷயத்தை நம்ம நல்லதா நினைச்சு செய்ய ஆரம்பிப்போம். வாங்க… போய்க் குளிக்கலாம்.”

“என்ன? வாங்க குளிக்கலாமாவா!?” 😡

அவளுடைய கண்கள் கோபத்தில் சிவந்தன.

“என்ன கிண்டலா!? நான்… நான் எப்படி உங்ககூட குளிக்கிறது?”

“நேத்து நைட்டு குளிச்ச மாதிரிதான்.”

“என்ன!? நேத்து நைட்டு என்கூட நீங்க குளிச்சிங்களா?”

“நோ நோ… நீங்கதான் என்கூட குளிச்சீங்க.”

“இல்ல! நீங்க பொய் சொல்லுறீங்க. நான் நம்ப மாட்டேன்.”

“ம்… நீங்க என்னை நம்பலைனா நான் என்ன பண்றது?”

சிறிது இடைவெளிக்குப் பிறகு அவன் மீண்டும் அவளைச் சீண்டினான்.

“நேத்து நைட்டு நம்ம ஒண்ணா குளிச்ச பின்னாடி, நான்தான் உங்களுக்கு டிரஸ் change பண்ணிவிட்டு… அதுக்குப் பின்ன நம்ம சேர்ந்து ரெண்டு பேரும் ஒண்ணா…”

மகிழினி புருவத்தை உயர்த்தினாள்.

“ஒண்ணா?”

“அட போங்க சிஎம்… I feel shy!”

என்றவன் சிரித்தபடி திரும்பினான்.

“சரி… நான் போய் brush பண்ணிட்டு, குளிச்சிட்டு வரேன். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் வேணும்னா தூங்குங்க. எப்பா… என்ன உடம்பு வலி!”

என்று அவளைச் சீண்டிப் பார்த்தபடி குளியலறைக்குள் சென்றான்.

சில நிமிடங்களில் குளித்து முடித்தவன், ஈரத் தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

இன்னமும் அதே இடத்தில் நின்றபடி, தனக்குள் ஏதோ புலம்பிக் கொண்டிருந்த மகிழினியைப் பார்த்ததும் கொடிவீரனின் உதட்டில் நமுட்டுச் சிரிப்பு மலர்ந்தது.

அவளை நெருங்கியவன்,

“என்ன சிஎம்… இப்போ கூட நான்தான் உங்களைக் குளிக்க வைக்கணுமா? அதுக்குத்தான் wait பண்றீங்களா?”

என்று கேட்டான்.

மகிழினி அவனைப் பார்த்த பார்வையே போதும்.

“என்ன? இப்ப ஏன் இவ்ளோ கோவமா பாக்குறீங்க?”

“நீங்க இவ்ளோ கேவலமா நடந்துப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல.”

“Why? நான் நடக்குற style உங்களுக்குப் பிடிக்கலையா?”

“நான் அதைச் சொல்லல.”

“இருங்க… Already ரொம்ப time ஆச்சு. நேத்து நைட்டு வேற நீங்க என்னைத் தூங்க விடல.”

“என்ன?”

“உண்மையைதான் சொல்லுறேன். நேத்து night நான் சுத்தமா தூங்கல. நம்ம ஜீவா, மீனா கல்யாணத்தை முடிச்சிட்டு சீக்கிரம் ஊருக்குப் போகணும். So, உங்க சந்தேகம், கோவம், சாபம்… இது எல்லாத்தையும் நம்ம நம்மளோட வீட்டுக்குப் போய் ஆரம்பிக்கலாம். இப்போ please… போய் ரெடி ஆகுங்க.”

மகிழினி கோபமாக முறைத்தாள்.

“இப்ப நீங்களா போறீங்களா? இல்ல நான் வந்து குளிப்பாட்டவா?”

“இல்ல இல்ல! நானே போய்க்கிறேன்.”

“ம்… அப்போ போங்க. எவ்ளோ நேரம்தான் இப்படியே bathrobe போட்டுக்கிட்டு சிலுக்கு கணக்கா என்னை side அடிச்சுக்கிட்டு நிக்கப் போறீங்க?”

“யாரு!? நான் உங்களை side அடிக்கிறேனா!?”

“பின்ன… side அடிக்காமலையா என்னைப் பார்த்து நேத்து ‘I love you’ சொன்னீங்க?”

“என்ன!? நா… நான் I love you சொன்னேனா?”

“பின்ன என் மாமியாரா சொன்னாங்க? நீங்கதான் சொன்னீங்க!”

“காலங்காத்தால பொய் சொல்லாதீங்க.”

“பொய்யும் இல்ல, பேயும் இல்ல. நான் உண்மையைதான் சொல்லுறேன். நேத்து நீங்க என்னைப் பார்த்து ‘கொடிவீரா, I love you’ன்னு சொல்லி…”

அவன் சற்றே இடைவெளி விட்டான்.

“…அதுக்குப் பின்னாடிதான் நமக்குள்ள எல்லாமே நடந்துச்சு.”

“இல்லை! நான் நம்பமாட்டேன்.”

“இப்ப என்ன? நீங்க நம்பணும்னா நான் மறுபடியும் நேத்து நடந்த எல்லாத்தையும் re-telecast பண்ணனுமா?”

“நீங்க எதையும் பண்ண வேணாம். நகருங்க. நான் போய்க் குளிக்கணும்.”

அவள் அவனைத் தாண்டிச் செல்ல முயன்றாள்.

“ஓய் சிஎம்!”

“என்ன?”

“ஐ லவ் யூ.”

மகிழினி அவனை முறைத்தாள்.

“ஏங்க முறைக்கிறீங்க? ‘I love you’ சொன்னா ‘me too’ சொல்லணும்.”

“நீங்க பண்ற வேலைக்கு ‘me too’லதான் உங்களைச் சொல்லணும்.”

“ஐயோ! அந்த ‘me too’ இல்ல பொண்டாட்டி. இது நான் சொன்ன I love you-க்கு reply கேட்டேன்.”

“உங்களுக்கு கொழுப்பு கூடி போச்சு. நகருங்க.”

என்றவள், தனக்கு முன் நின்றிருந்த கேவியைத் தள்ளிவிட்டபடி குளியலறையை நோக்கிச் சென்றாள்.

அவள் கையைப் பிடித்துக் கொடிவீரன் தன் வசம் இழுத்ததும், கால் தடுமாறிய மகிழினி அவன் மார்பில் வந்து மோதினாள்.

“எ… என்ன பண்றீங்க?”

“Say I love you.”

“ஐ… kill you!”

“ப்ச்… இந்த மாமன்கிட்ட உங்களுக்கு இல்லாத உரிமையா? கிள்ளிக்கோங்க. எங்க? கன்னத்துல கிள்ளப் போறீங்களா? இல்ல தொடையில கிள்ளப் போறீங்களா?”

“ச்சீ! நான் அந்தக் கிள்ள சொல்லல.”

“பின்ன… இந்தக் கிள்ள சொன்னீங்களா?”

என்று அவளை மீண்டும் சீண்டியவன், அவளுடைய கீழ் உதட்டை நோக்கி விரலைக் கொண்டு சென்றான்.

சில நொடிகள் அவளின் விழிகளை தனக்குள் உள்வாங்கியவனின் இதயத்தில் கை வைத்து வேகமாக தள்ளிய மகிழினியின் இடையை தன்னோடு இணைத்தபடி, மஞ்சத்தில் விழுந்தவன் மார்பின் மேல், மடந்தை இவள் மையம் கொண்டு இருந்தவளின் மான் விழிகள் இரண்டில் மயங்கி போனான். மாதுளை இதழுக்கு சொந்தக்காரியான மடவோள் கழுத்தில் மாலையிட்ட மணவாளன்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!