“இங்க பாரு கொடிவீரா! உன்னைத் தான் சித்ராவுக்குப் பிடிக்கலையே. இன்னும் ஏன் ப்பா அவளைத் தொல்லை பண்ற? பாவம்… அவ நிம்மதியா இருக்கணும்னா, நீ இவ கேக்குற விவாகரத்தை கொடுத்துடுப்பா.”
என்று பரிதாபமாகப் பேசிய தன் அன்னையின் வார்த்தைகளில் முதன்முறையாக முகம் சுளித்தான் கொடிவீரன்.
“நீங்க எல்லாம் என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சிதான் பேசுறீங்களா? நான் ஏன் அவங்களை டிவோர்ஸ் பண்ணணும்? அதெல்லாம் என்னால பண்ண முடியாது!”
என்று அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் நாடகத்தை உண்மை என்று அறியாமல் அதீத கோபத்துடன் கத்தியவன், மகிழினியின் பக்கம் திரும்பினான்.
“ஏங்க… நீங்க வாங்க. நம்ம போகலாம். இவங்களுக்கு எல்லாம் பைத்தியம் பிடிச்சுப் போச்சு. இவங்க எல்லாம் ஏன் லூசு மாதிரி பேசுறாங்கன்னு எனக்குத் தெரியல. நீங்க வாங்க… நம்ம ஊருக்குக் கிளம்பலாம்.”
என்றபடி மகிழினியின் கையைப் பிடித்து தன் வசம் அழைத்தான்.
மகிழினியும் மறுப்பு சொல்லாமல் அவனுடன் செல்ல முயன்றாள்.
ஆனால் சசி அவளது கரத்தைப் பிடித்து தடுத்தாள்.
“ஏய்! எங்க போற? இரு… இரு! இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியாம நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்து போக முடியாது. கல்யாணம் முடிஞ்சு இத்தனை நாளாச்சு… இன்னும் நீங்க இப்படி ஏட்டிக்குப் போட்டியா இருந்துக்கிட்டே இருந்தா, திருமண வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம்?”
சசியின் கேள்விக்கு மகிழினி தலைகுனிந்து கண்ணீருடன் நின்றாள்.
அவளைப் பார்த்த கொடிவீரனின் கோபம் சற்றே தணிந்தது.
“ஏங்க… நீங்க அழாதீங்க. அக்கா… ஏன் நீ இப்படி எல்லாம் பேசுற? இது எங்க வாழ்க்கை. நாங்க எங்க வாழ்க்கையைப் பார்த்துப்போம். நீங்க யாரும் இதுல தலையிட வேண்டாம்.”
அவன் சொன்னதும் ஜெயா அவனைப் பார்த்தாள்.
“என்ன? உங்க வாழ்க்கையா? ஓ… எது ப்பா உங்க வாழ்க்கை? விருப்பம் இல்லைன்னு சொன்ன பின்னாடியும் இந்தப் பொண்ணைத் தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கியே… அதுதான் உன் வாழ்க்கையா?
இதுக்காகத்தான் உன்னை பெண்களின் உணர்வுக்கு மரியாதை கொடுத்து வாழணும்னு சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? ச்சீ… என்னடா மனுஷன் நீ! அதான் இவ உன்கிட்ட விவாகரத்து கேக்குறா இல்ல… கொடுத்துத்தான் தொலையேன்!”
என்று கேவியை முறைத்தாள்.
அப்போது மகிழினி இடையில் புகுந்தாள்.
“கொழுந்தனாரே… ஏன் இப்படி பண்றீங்க? முதல்ல சித்ரா கையை விடுங்க மாமா! நீங்க உங்க தம்பியை வெளியே அழைச்சிட்டு போங்க. சித்ரா… நீ வா! நான் இன்னும் பத்து நிமிஷத்துல உனக்கு நீ கேட்ட டிவோர்ஸ் பேப்பர்ஸை ரெடி பண்ணுறேன். நீ ஜஸ்ட் அதுல ஒரு கையெழுத்து மட்டும் போடு. ஒன் வீக்குல உனக்கு டிவோர்ஸ் கிடைக்க நான் ஏற்பாடு பண்ணுறேன். வா…”
என்று சொல்லியபடி மகிழினியின் கையைப் பிடித்து தன் வசம் இழுக்க முயன்றாள்.
ஆனால் மகிழினியோ கொடிவீரனின் கரங்களை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
“போதும்! நிறுத்துறீங்களா? ஏன்? இப்ப எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு டிவோர்ஸ் வாங்கித் தர இப்படி போராடுறீங்க?
மகி அக்கா… எனக்கு இவர் கிட்ட இருந்து டிவோர்ஸ் வேணும்னு நான் உங்கிட்ட கேட்டேனா?”
என்று கண்கள் சிவந்த நிலையில் கேட்டாள்.
கீதா உடனே இடையில் வந்தாள்.
“ஏம்மா சித்ரா… நீ என்னம்மா இப்படி பேசுற? கல்யாணம் முடிந்த மறுநாளே நீ தானே என் மருமகன் கிட்ட டிவோர்ஸ் கேட்ட?”
“ஆமா… அப்போ கேட்டேன் தான்.”
“அப்போ கேட்டேன்னா ஏன் இப்ப வேணாவா?”
மாறனும் தன் பங்குக்கு கேட்டான்.
கீதாவோ,
“இவதான் எப்பவுமே உன் தம்பியை வேணாம்னுதானே சொல்றா…”
என்றாள்.
“அத்தை…”
என்று கொடிவீரன் சலிப்புடன் அழைத்தான்.
ஜெயா உடனே அவனைப் பார்த்தாள்.
“அவங்கள ஏன்டா முறைக்கிற? கட்டிக் கொடுத்த இடத்துல என் மருமகளும் என் மகனும் நல்லா வாழறாங்கன்னு நம்பி நான்தான் ஏமாந்து போயிட்டேன். இனியும் யாரும் யாருக்காகவும் ஏமாற வேண்டாம்.
அம்மாடி சித்ரா… நீ போய் மகி சொல்ற மாதிரி கையெழுத்துப் போட்டு கொடும்மா. என் மகன் உன்னை விவாகரத்து பண்ணுவான். அதுக்கு நான் பொறுப்பு.”
“அம்மா!”
என்று கொடிவீரன் அதிர்ச்சியுடன் அழைக்க,
“நீங்க கம்முனு கெடங்க மாப்ள…”
என்று கீதா அவனை அடக்கினாள்.
ஜெயா மட்டும் முகத்தில் ஒரு சிறு புன்னகையுடன் நின்றாள்.
மகிழினி ஜெயாவைப் பார்த்தாள்.
“அத்தை! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? ப்ளீஸ் அத்தை… இங்க என்ன நடக்குதுன்னு எனக்குப் புரியல.
நான்… நான் உங்க பிள்ளையை விவாகரத்து பண்ணா நீங்க நிம்மதியா இருப்பிங்களா?”
ஜெயாவின் முகம் உடனே மாறியது.
“சத்தியமா முடியாது மா. உன்னைப் பிரிந்து என் மகனும் சந்தோஷமா இருக்க மாட்டான். நீ இல்லாம நானும் சந்தோஷமா இருக்க மாட்டேன். ஆனா…”
அவள் வார்த்தையை நிறுத்த, கொடிவீரன் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.
“ஆனா… என் பிள்ளை இல்லாம நீ சந்தோஷமா இருப்ப இல்ல? அது போதும் மா… எனக்கு.”
மகிழினியின் முகம் சோகத்தில் சுருங்கியது.
“ஆமா ஆமா… சித்ரா சந்தோஷம்தான் நமக்கு முக்கியம்.”
கீதா உடனே ஆமோதித்தாள்.
மாறனும்,
“அது உண்மைதான். என் தம்பி இல்லாம நீ சந்தோஷமா இருப்பேன்னா, அப்போ நீ கேக்குற விவாகரத்தை என் தம்பி கொடுக்குறதுதான் நியாயம்.”
என்று சொல்ல, கொடிவீரன் கோபத்தில் பற்களை கடித்தான்.
“ஆமா… அதான் நியாயம் டேய் கொடிவீரா! இனியாவது சித்ராவை நிம்மதியா வாழ விடு. மகி… சீக்கிரம் அந்தப் பேப்பரை எடுத்துட்டு வா.”
“ம்… இருங்க. போய் டைப் பண்ணிட்டு வரேன்.”
என்று மகிழினி திரும்பியபோது, சித்ரா அவளைத் தடுத்தாள்.
“அக்கா… வேணா. அதெல்லாம் பண்ணாதீங்க.”
“ஏன் பண்ணக்கூடாது? நீ தானே விவாகரத்து கேட்ட?”
“ஆமா… கேட்டேன் தான் அப்போ. அப்போ என்னால இவர் கூட வாழ முடியாதுன்னு தோணுச்சு. அதனால விவாகரத்து கேட்டேன்.”
“அப்போ இப்போ ஏன்? என்னாச்சு?”
கொடிவீரனும் அவளைப் புரியாமல் பார்த்தான்.
“இப்போ…”
“ம்… சொல்லு. இப்போ என்னாச்சு?”
சில நொடிகள் அமைதியாக நின்ற மகிழினி, இறுதியில் தன் மனதைத் திறந்தாள்.
“இப்போ இவரு இல்லாம வாழ முடியாதுன்னு தோணுது. அதனால எனக்கு இந்த விவாகரத்து எல்லாம் வேணா.”
அந்த வார்த்தைகள் வெளிவந்த அடுத்த நொடி, மகிழினி கொடிவீரனின் கரங்களை மேலும் இறுக்கமாகவும் உரிமையாகவும் தன் வசம் பற்றிக் கொண்டாள்.
அவள் சொன்னதை நம்ப முடியாமல் கொடிவீரனின் கண்கள் ஆச்சரியத்தில் மிளிர்ந்தன.
“அப்படி… அப்படி வாங்க வழிக்கு! அதானே பார்த்தேன். மனசுக்குள்ள இவ்வளவு அன்பை வச்சுக்கிட்டுத்தான் நீ என் மருமகனை உன் பின்னாடி சுத்த விட்டு இருக்க இல்ல!”
என்று கீதா கேலி செய்ய, மகிழினி கொடிவீரனின் முதுகுக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள்.
அவளது காதைப் பிடித்து அருகில் இழுத்த மகி,
“என்ன மேடம்… இதுதான் நீங்க டிவோர்ஸ் கேக்குற லட்சணமா?!”
என்று கிண்டலடித்தாள்.
“நீ வேற…”
மாறன் சிரித்தபடி,
“மகி ம்மா… டிவோர்ஸ் எல்லாம் வாய் தான் கேக்குது. ஆனா அவங்க மனசு முழுக்க அவங்க கொடிதான் இருக்காரு.”
“அண்ணா!”
என்று கொடிவீரன் வெட்கத்துடன் அழைத்தான்.
“அப்படின்னு நான் சொல்லல டா. நம்ம அத்தையும் உன் அக்காவும் சேர்ந்து ஏற்பாடு பண்ண, ரேஷ்மாதான் சொல்லி இருக்கா…”
“என்ன? ரேஷ்மாவா?”
கொடிவீரனும் மகிழினியும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
“உங்களுக்கு எப்படி ரேஷ்மாவைத் தெரியும்?”
என்று கேவி கேட்க, மகிழினி அவனைப் பார்த்தபடி,
“உங்க அண்ணனுக்கு தெரியாத பொம்பளப் புள்ளையா!”
என்றாள்.
மாறன் தன் தலையில் அடித்துக் கொண்டபடி,
“என் பெருமை இப்போ இங்க எதுக்கு? நீ உன் கொழுந்தன் வாழ்க்கையில உன் அம்மா பண்ண ப்ளேயை சொல்லு மா.”
என்றதும் கேவியும் சித்ராவும் கீதாவைப் பார்த்தனர்.
கீதா சங்கடமாகப் புன்னகைத்தாள்.
“என்ன அப்படி பாக்கறீங்க? ரேஷ்மா கிட்ட சொல்லி நான்தான் சித்ரா மனசுல இருக்குற உங்க மீதான காதலைத் தூண்டிவிடச் சொன்னேன்.”
“என்ன அத்தை! நீங்க எங்க வாழ்க்கையில எதுக்காக இன்னொரு பொண்ணை எடுத்துட்டு வந்து சொருகுறீங்க?”
என்று கேவி கோபப்பட்டான்.
சசி உடனே,
“சொருகவும் இல்ல, பருகவும் இல்ல! நாங்க சொன்னதால ரேஷ்மாவும் நட்பின் அடிப்படையிலதான் உன்னைப் பற்றி உன் வொய்ஃப்கிட்ட பேசினாள். அப்படிப் பேசினதாலதான் இவ அடி மனசுல இருக்கிற உன் மீதான அன்பு வெளியே வந்துச்சு.”
“இருந்தாலும் அக்கா…”
“டேய்… முடிஞ்சது முடிஞ்சுடுச்சு. விடு.”
என்று சசி அவனை அமைதிப்படுத்தினாள்.
ஜெயா மெதுவாக சித்ராவை நோக்கி வந்தாள்.
“அம்மாடி சித்ரா… உனக்கு என் மகனைப் பிடிக்கலைன்னு நினைச்சி, உன்னை நீயே ஏமாத்திக்கிட்டு இருக்கிறதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் சசியும் கீதா அண்ணியும் ஏற்பாடு பண்ணி என்னை இங்க வர வச்சாங்க.”
“அம்மா… இல்லை… அது வந்து…”
“நீ எதுவும் பேசாத ம்மா.”
ஜெயா அவளைத் தடுத்தாள்.
“எந்த சூழ்நிலையில உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சுன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். நீ எதுக்காக பயப்படுறன்னும் தெரியும்.
உண்மையிலேயே உனக்கு என் மகனைப் பிடிக்கலைன்னா பரவால்ல. ஆனா அவனுடைய அன்பும், அவனுடைய அக்கறையும் உனக்குப் பிடிச்சுத்தான் இருக்கு. அப்படி இருந்தும் எதுக்காக உங்க வாழ்க்கையை ஆரம்பிக்க இப்படி தயங்குறீங்க?”
“வேற என்ன ஜெயா… எல்லாம் இந்த ஊருக்குப் பயந்துதான்.”
கீதா சொன்னதும் ஜெயா சிரித்தாள்.
“ஏம்மா… ஊரும் உலகமும் நம்ம என்ன பண்ணாலும் அதுல ஆயிரத்து எட்டு குத்தம் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கும். இந்த ஊர் உலகத்துக்கு வேற என்ன வேலை இருக்கு?
ஆனா கஷ்டம்னு வரும்போது இந்த ஊர் உலகம் நமக்கு உதவி செய்யாது ம்மா. அதனால அதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு, உனக்கு என் மகனைப் பிடிக்கிற பட்சத்துல அவன் கூட சேர்ந்து வாழ வேண்டியதுதானே?”
சசி சிரித்தபடி,
“அது ஒண்ணும் இல்லம்மா. இப்ப வர சீரியல் எல்லாம் பார்த்து இந்தக் காலத்து தலைமுறைங்க ரொம்ப கெட்டுப்போய் கிடக்குது.”
“என்ன சொல்ற?”
என்று ஜெயா புரியாமல் பார்த்தாள்.
“அட ஆமா ஜெயா! இந்த அக்ரிமெண்ட் கல்யாணம்… கல்யாணம் ஆயிட்டு இரண்டு வருஷமானாலும் பாயில படுத்துக்கிட்டு சொம்ப உருட்டுற கதை… ஒரே ரூம்ல இருந்துக்கிட்டு ரெண்டு பேரும் தனித்தனியா அவங்க அவங்க இஷ்டத்துக்கு வாழ்றது… இப்படின்னு பல தரப்பட்ட கதைகளைப் பார்த்து இளைய தலைமுறை கெட்டுப்போயிருக்கு.
நம்ம புள்ளைங்களாவது பரவால்ல. தாலி கட்டி குடும்பம் நடத்துறாங்க. இப்போ இருக்கிற காலகட்டத்துல டேட்டிங் போயிட்டு, ரிகர்சல் பார்த்துட்டு, அதுக்கு அப்புறம் கடமைக்குன்னு கல்யாணம் பண்ணிக்கிறாங்க.”
“அட பாவமே…”
என்று ஜெயா தலையசைத்தாள்.
“சரி… அந்த வீணாப்போன கதையெல்லாம் நமக்கு தேவையில்லை. இது நம்ம குடும்பம். நீங்க ரெண்டு பேரும் மனசுக்குள்ள இவ்வளவு அன்பை வச்சுக்கிட்டு தனித்தனியா இருக்கிறது எனக்குப் பிடிக்கல.
அதனாலதான் உங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற கூத்தையெல்லாம் நான் சசி கிட்ட சொன்னேன். சசியும் நானும் சேர்ந்துதான் ரேஷ்மாவை சித்ராகிட்ட பேச வச்சோம்.
உண்மைக்கே உங்க பொண்டாட்டிக்கு உங்க மேல அன்போ அக்கறையோ இல்லனா, நாங்களே உங்களை கன்வின்ஸ் பண்ணி அவளுக்கு டைவர்ஸ் கொடுக்க வச்சிருப்போம்.”
கொடிவீரன் அமைதியாகத் தன் மனைவியைப் பார்த்தான்.
“இல்ல அத்தை… இவங்களுக்கு என்மேல அன்பு இருக்கு. அது எனக்குத் தெரியும். அவங்களுக்கு என்மேல இருக்கிற அன்பை உணர்ந்ததாலதான் கடைசி வரைக்கும் நான் இவங்களுக்கு டைவர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.
அன்பில்லாத பொண்ணை என் கூட வாழச் சொல்லிக் கட்டாயப்படுத்த நான் ஒண்ணும் கொடூரமான ஆள் இல்ல.”
கீதா அவனைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள்.
“அது தெரியும் மாப்ள. ஆனா அவ மனசுல இருக்கிற பயத்தைப் போக்கி, வாழ்க்கை இப்படித்தான்னு புரிய வைக்கிறதுக்கு எங்களுக்கு வேற வழி தெரியல.
நீங்க பாட்டுக்கிட்டு மும்பை கிளம்புறேன்னு சொல்றீங்க. இவளும் பிடிவாதமா உங்க கூட வர மாட்டேன்னு சொல்றா. ஆறு மாசம் இங்கே இவளும் தனியா, அங்க நீங்களும் தனியா இருந்தா இன்னும் உங்க ரெண்டு பேருக்குள்ள இடைவெளி அதிகமாகும்னு பயந்தேன்.
அதனாலதான் என் மக மகிகிட்டயும் உங்க நொண்ண மாறன்கிட்டயும் சொல்லி இப்படி ஒரு ஏற்பாடு பண்ணோம்.”
மகிழினி புருவத்தை உயர்த்தினாள்.
“அப்ப நீங்க எல்லாம் சேர்ந்து தான் கூட்டுக் களவாணித்தனம் பண்ணி இருக்கீங்களா?”
“யாரு மா? நாங்களா கூட்டுக் களவாணித்தனம் பண்ணி இருக்கோம்? உன் மனசுல என்னுடைய மாப்பிள்ளைதான் இருக்காருன்னு தெரிஞ்சும் நீ அவர்கிட்ட உன்னுடைய காதலை வெளிப்படையா சொல்லாம, அவர்கிட்ட டைவர்ஸ் கேட்டுக்கிட்டு அவரை டார்ச்சர் பண்றியே… அப்போ நீ பண்றதுக்கு என்ன பேரு?”
மகிழினி தலை குனிந்தாள்.
“தப்புதான் மா. என்மேல நிறைய தப்பு இருக்கு. ஆனா உண்மையைச் சொல்லணும்னா, கொடி என் கழுத்துல தாலி கட்டுன கொஞ்ச நாள்லேயே இவரை நான் மனசார ஏத்துக்கிட்டது உண்மைதான்.
ஆனா என் மனசுல இருக்கிற பயம் எனக்கு மட்டும்தான் தெரியும். அதான் நான் இவரைக் கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டேன்.”
ஜெயா அவளைப் பார்த்தாள்.
“என்ன பயம்? இந்த ஊர் உலகம் உன்னைப் பற்றி என்ன பேசும்னு பயப்படுறியா?”
“அதுவும் ஒரு காரணம்தான். ஆயிரம் தான் இருந்தாலும் நான் ஒரு வி—”
“நிறுத்துறியா?!”
என்று மகி இடையில் புகுந்தாள்.
“பெண்களுக்கு இந்த சமுதாயம் புருஷன் இறந்துட்டா விதவைன்னு ஒரு அங்கீகாரம் கொடுக்குது. ஆனா பொண்டாட்டி இறந்த ஆம்பளையைப் பற்றி கண்டுக்கிறதே இல்ல. ஆக மொத்தத்துல இந்த சமுதாயத்துக்கு வேற என்ன வேலை!?
இவங்களையெல்லாம் தூக்கிக் குப்பையில போடு. இப்ப சொல்லு… உனக்கு என் கொழுந்தனைப் பிடிக்குமா? பிடிக்காதா?”
என்று நேராகக் கேட்டாள்.
கொடிவீரன் மூச்சை அடக்கிக் கொண்டு மகிழினியைப் பார்த்தான்.
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, மகிழினி மெதுவாகத் தலையசைத்தாள்.
“ம்… பிடிக்கும்.”
மாறன் உடனே சிரித்தான்.
“அப்புறம் எதுக்கு வழ வழ கொழ கொழன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க? முடிஞ்ச கதை முடிஞ்சதாவே இருக்கட்டும். அன்னைக்கு நீ அதைச் சொன்ன, இன்னைக்கு நீ இதைச் சொன்னேன்னு பேச்சை வளர்க்காம, இந்த நொடி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து புது வாழ்க்கையைத் தொடங்குங்க.
டேய் தம்பி… நீ என்ன உண்மைக்கே மும்பைக்குப் போறியா?”
“ம்… ஆமாண்ணா! அங்க போனா நம்மளோட பியூச்சர் நல்லா இருக்கும்னுதான் சிஎம்மையும் கூப்பிட்டேன். பட்… அவங்களுக்கு வர விருப்பம் இல்லன்னா அவங்க இங்கேயே இருக்கட்டும்.”
மகிழினி அவனைப் பார்த்தாள்.
“இல்ல… நானும் வரேன்.”
கொடிவீரனின் முகம் மலர்ந்தது.
“என்னங்க சொல்றீங்க? உண்மையாவா?”
“ஏன்டா… காது கேட்கலையா? உன் பொண்டாட்டிதான் வரேன்னு சொல்றாளே! அப்புறம் என்ன? அவளையும் கூட்டிட்டு போ.”
என்று சசி சொன்னாள்.
“சரி. அப்ப நான் முதல்ல போயிட்டு அங்க ஒரு வீடு ரெடி பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் வந்து இவங்கள அழைச்சிட்டு போறேன்.”
“டேய் டேய்… நிறுத்து. அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. மும்பையில்தானே உன் மாமா இருந்தாரு? அவருடைய வீட்டிலேயே நீ தங்கிக்கலாம்.”
“அப்ப மாமாவும் நீங்களும்?”
“உங்க மாமாவை நான் இங்கேயே ஒரு பிசினஸ் ஏற்பாடு பண்ணச் சொல்லிட்டேன். அதனால இப்போதைக்கு நாங்க மும்பை வர ஐடியா இல்ல.
நீ போய் உன் மாமா வீட்டுல உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு போய், ஆறு மாசம் இல்ல… ஒரு வருஷம் கூட சந்தோஷமா நிம்மதியா இருந்துட்டு வா.”
“ஐயோ… ஒரு வருஷமா? அப்போ இங்க இருக்கிற கேண்டின்?”
மகிழினி பதற, கீதா உடனே,
“அம்மா அம்மா… இரும்மா! நாங்களும் கேண்டினை ரன் பண்ணுவோம். எங்களுக்கும் அந்தத் திறமை இருக்கு.”
என்றாள்.
ஜெயாவும் அவளை நம்பிக்கையுடன் பார்த்தாள்.
“ஆமா சித்ரா. உனக்கு புதிய ஒரு சூழ்நிலை வந்தாதான் நீயும் பழசையெல்லாம் மறந்து சந்தோஷமா இருப்ப. இப்ப என்ன? கேண்டினைப் பார்த்துக்கணும் அவ்வளவுதானே?
இதோ கீதா அண்ணி இருக்காங்க. நான் இருக்கேன். உன் பாட்டி இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல வேணு சார் இருக்காரு. கண்டிப்பா கேண்டினை நாங்க பார்த்துக்கிறோம்.
நீ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாம என் மகன் கூட சந்தோஷமா நூறு வருஷத்துக்கு நிம்மதியா வாழணும். எங்களுக்கு அது மட்டும்தான் தேவை.”
கொடிவீரன் தலையைப் பிடித்துக் கொண்டான்.
“என்னம்மா இது! நாங்க மாறன் அண்ணன் விருந்துக்கு கூப்பிட்டாருன்னு வந்தா, நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து என்னென்னமோ பேசி கதையையே மாத்திட்டீங்க.”
மாறன் சிரித்தான்.
“தம்பி… என்னதான் கதை மாறினாலும், எல்லாரும் சந்தோஷமா இருக்கிற மாதிரிதானே இந்தக் கதை முடியுது? அதுவரைக்கும் சந்தோஷப்பட்டுக்கோ. இல்லன்னு வையி… உன் அண்ணி உனக்கும் மகிழினிக்கும் இந்நேரம் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்திருப்பாள்!”
மகி உடனே தலையசைத்தாள்.
“நான் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன். இரண்டு பேருக்கும் மனசுல காதல் இருக்கிற பட்சத்தில் இவங்க ரெண்டு பேரையும் பிரிக்கிற பாவம் எனக்கு எதுக்கு?”
“சரி சரி… எப்படியோ சித்ராவும் கொடியும் மும்பை கிளம்பப் போறாங்க. நாங்க வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சது. கீதா… ஹாப்பி அண்ணாச்சி!”
மாறன் சொன்னதும் கீதா சிரித்தாள்.
“என் மாமியார் ஹேப்பின்னா நானும் ஹாப்பிதான். அப்படியே இன்னொரு ஹாப்பியான விஷயத்தையும் சொல்லிடுறேன்.”
“அப்படி என்ன சொல்லப் போறீங்க?”
“அதுவா… மாமியாரே உலக அழகி மாதிரி இருக்கிற நீங்க பாட்டி ஆயிட்டீங்கன்னு சொல்லப் போறேன்.”
கீதா அதிர்ச்சியுடன் மகியைப் பார்த்தாள்.
“ஏய் மகி… என்ன சொல்றாரு உன் புருஷன்?”
கேவி சிரித்தபடி,
“வேற என்ன சொல்றாரு… குல்ஃபி சாப்பிட்டதுக்குப் பலனா ஒரு குச்சி ஐஸ் பொறக்கப் போகுதுன்னு சொல்றாரு அண்ணன்.”
என்றதும் கீதாவின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
“அப்படியா?! ஐயோ… வாழ்த்துக்கள் மகி!”
என்று மகியை அணைத்துக் கொண்டாள்.
அந்த நொடி, மகிழினியின் கருவுற்ற செய்தி அனைவரது மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியது.
அனைவரும் அந்தச் சந்தோஷத்தை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், மகிழினியும் கொடிவீரனும் மட்டும் ஒருவரை ஒருவர் கண்களால் காதல் பேசிக் கொண்டிருந்தனர்.