நாட்கள் வேகமாக கடந்து இருக்க.
அன்றைய தினம் ரோஜா நாகராஜின் திருமணம் குன்னக்குடி முருகன் கோவிலில்
எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
என்னதான் பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும், நாகராஜனின் தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாத நிலையில் ரோஜா அவனுடன் குடிசையில் தான் வாழபோகிறேன் என்று முடிவு எடுத்து இருந்தாள்.
ரோஜாவின் குணத்தை அறிந்து இருந்த நாகராஜனோ. குடிசையாக இருந்தாலும் அங்கும் அவளுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து தான் வைத்து இருந்தான்.
பெரியவர்களின் ஆசியோடு இவர்களின் திருமணம் நடந்து முடிய,
முன்பை விடவே நாகராஜன் பல வேலைகளை செய்யத்தொடங்கி வீடு கட்டுவதற்க்காக பணத்தை சேமித்துக்கொண்டு இருந்தான்.
இதற்க்கிடையில் முருகனுக்கும் நாட்டு மருந்து நன்றாக வேலை செய்த நிலையில். அவரும் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்து இருந்தார்.
வேலனும் அவன் மனைவியுடன் பக்கத்து ஊரில் தங்கி இருந்தவன். நல்லது கெட்டதுக்கு பாண்டியனின் வீட்டிற்கு வந்து செல்பவன். இன்று வரை அனைவரிடம் இருந்தும் ஒரு அடி தூரமாக தான் இருந்தான் அவன் இயல்பை இழக்காமல்.
கஸ்தூரி அவ்வப்போது மீனாவிடம் முல்லையை பற்றி ரோஜாவை பற்றி சிண்டு முடித்துக்கொண்டு இருக்க. முன்பை போல இல்லாமல் மீனா தன் அம்மாவின் பேச்சை கேட்காமல் பாண்டியன் வீட்டின் மூத்த மருமகளாக நடந்துக்கொண்டாள்.
பாண்டியனுக்கு அடுத்து பஞ்சாயத்து தலைவராக ஜீவா பொறுப்பேத்து இருக்க.
அந்த பொறுப்பை சீரும் சிறப்புமாகவே செய்து இருந்தான்.
முல்லையின் அப்பா முருகன் அவரது சொத்து முழுவதையும் முல்லை பெயரில் எழுதி வைத்ததும். தன் மனைவியின் இடத்தில் இருந்து கதிர் தான் அணைத்து பொறுப்புகளையும் எடுத்து நடத்திக்கொண்டு இருந்தான்.
இப்படியாக அனைவரின் வாழ்விலும் பல நல்ல மாற்றங்கள் நடந்து இருக்க.
“ஏன் மாமா. அடுத்த வாரம் புதன் கிழமை நாள் நல்லா இருக்கு. அப்போவே முல்லைக்கு சீமந்தம் வச்சிக்கலாமா” என்று பாண்டியனிடம் யோசனை கேட்டார் முருகன்.
“ஆமா அண்ணா. ஏழு மாசம் ஆச்சு. இப்போவே சீமந்தம் வச்சிடலாம். இல்லைனா 9ஆம் மாதம் நம்ம பொண்ணு வயத்த பார்த்து கண்ணாரு வச்சிடுவாங்க” என்று பார்வதி சொல்ல, “சரி. புதன் கிழமையே சீமந்தம் வச்சிக்கலாம்” என்றார் பாண்டியன்.
பெரியவர்கள் முடிவு செய்த தேதியை அன்றைய தினம் இரவு முல்லை கதிரிடம் தெரியப்படுத்தியதும் அவனின் முகம் வாடிப் போனது.
“என்னாச்சு மாமா சார். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என்று முல்லை ஏழு மாத கருவை சுமந்து இருக்கும் பெண்ணாக அவன் முன்னே வந்து நின்று இருக்க. கட்டிலில் சோகமாக அமர்ந்து இருந்த கதிர் அவள் கேள்விக்கு பதில் தராமல் முல்லையிடம் அவள் சாப்பிட வேண்டிய மருந்தை கொடுத்தான்.
“என்ன மூஞ்சி இது. இப்போ என்னாச்சுன்னு ஒரு மாதிரி இருக்கீங்க” என்று முல்லை புரியாமல் கேள்வி கேட்க.
“பின்ன என்ன. ஒன்பதாம் மாசம் சீமந்தம் வைக்க வேண்டியது தானே. ஏன் மாமா இப்போவே வைக்க சொல்லுறாரு” என்று கதிர் கோவமாக கேட்டான்.
“இதுக்கா நீங்க கோவமா இருக்கீங்க. ஆமா இப்போ 7ஆம் மாசம் சீமந்தம் பண்ணா உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டாள் முல்லை.
அவள் கேள்விக்கு அவன் பதில் தராமல் அவளை கட்டிலில் அமர வைத்து மூலிகை எண்ணெயை கையில் ஊற்றி முல்லையின் வயிற்று பகுதியில் மெதுவாக தடவிக்கொண்டு இருந்தவனை முறைத்து பார்த்து இருந்தாள் முல்லை.
“ஹலோ சார். என்னாச்சு உங்களுக்கு” என்ற முல்லை அவன் கையை பிடிக்க.
“இன்னும் என்ன ஆகணும். உன் அப்பா வேணும்னே தானே இதெல்லாம் பண்ணுறாரு, இரு நான் அவர போய் என்னனு கேக்குறேன்” என்று கோவமாக கட்டிலில் இருந்து எழுந்தான் கதிர்.
“ஐயோ மாமா சார் என்னாச்சு உங்களுக்கு. ஏன் இப்படி கோவப்படுறீங்க. உங்கள அப்பா என்ன பண்ணாரு” என்று முல்லை புரியாமல் பதற்றமடைய.
“பின்ன என்ன. இப்போ 7ஆம் மாசம் உனக்கு சீமந்தம் முடிஞ்சா அப்போ உடனே உன் அப்பா உன்னை அவர் வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடுவாரு தானே?” என்ற கதிரின் பதிலில் முல்லை சத்தமாக சிரிக்க அவளை இன்னும் அதீத கோபத்துடன் முறைத்தான் கதிர்.
“அட. இதுக்கு தான் இவ்ளோ அக்கப்போரா. இப்போ என்ன.? நான் சீமந்தம் முடிஞ்சு அப்பா வீட்டுக்கு போனா நீங்களும் என்கூடவே வந்துடுங்க. அத விட்டுட்டு என் அப்பாக்கூட போய் சண்ட போட போறேன்னு சொல்றிங்க” என்று முல்லை மேலும் சிரிக்க.
“ஹாங். நீ சொல்லலைனா கூட நான் உன்னை தனியா எல்லாம் அனுப்ப மாட்டேன்” என்ற கதிர் தாயை பிரிய மனமில்லாத பிள்ளையை போல முல்லையின் மடியில் தலை சாய்ந்து படுத்துக்கொண்டான்.
தன் மீது உயிரையே வைத்து இருக்கும் கணவனின் அன்பில் நாள்தோறும் முல்லையின் முகம் புதிதாய் பூத்த மலரேன மலர்ந்து இருக்க.
பெண் பிள்ளையை பெற்ற தாய் அவளை பேணி காப்பதை போல முல்லையை கண்ணுக்குள் வைத்து காத்து இருந்தான் கதிர்.
நேரம் தவறாமல் உணவு மருந்து நடைப்பயிற்சி என்று அட்டவணை போட்டு முல்லைக்கு அணைத்து பணிவிடைகளும் செய்யும் கதிரின் இந்த பிரிமானத்தை கண்டு அவன் குடும்பத்தினரே ஆச்சிரியம் அடைய.“பரவால்ல. என் பையனுக்கு இப்போ தான் பொறுப்பு வந்து இருக்கு” என்று நிம்மதி பெருமூச்சு எடுத்தார் பாண்டியன்.
அன்றைய தினம் புதன் கிழமை நாளில் நாகராஜனும் வேலனும் சேர்ந்து முல்லைக்கு நடக்க இருக்கும் சீமந்த வேலைகளை கவனித்து இருக்க.
பாண்டியன் வீட்டில் சொந்த பந்தங்கள் நிரம்பி வழிந்தார்கள்.
“மீனா. வந்தவுங்களுக்கு எல்லாம் காபி கொடுக்க ஏற்பாடு மா” என்ற ஜீவாவின் முன்னே மீனா டீ கிளாசை நீட்டியவள், “அதெல்லாம் நான் கொடுத்துக்குறேன். நீங்க முதல்ல டீயை குடிச்சுட்டு போய் வேலையை பாருங்க” என்றாள் மீனா.
“நீ குடிச்சியா” என்ற ஜீவா. தன் மனைவி கொடுத்த தேநீரை பருகியவன். மீனாவுடன் அன்பாக பேசிக்கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து கஸ்தூரி பார்த்துக்கொண்டு இருக்க.
“ரொம்ப கண்ணு வைக்காத டி. நீ கெடுத்த என் பொண்ணோட வாழ்கை ஏதோ இப்போ தான் நல்லா அமைந்து இருக்கு”என்றார் கஸ்திரியின் கணவன் ஜெகா.
“இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை என் பொண்ணு வாழனும்ன்னு தான் நானும் ஆசைப்பட்டேன். நீ வேணுனா பாரு. அடுத்த வருஷம் என் பொண்ணுக்கு இத விட ஆடம்பரமா நான் சீமந்தம் பண்ணி வைப்பேன்” என்று கஸ்தூரி பெருமை பீத்திக்கொள்ள.“அதானே. நீ தற்குறின்னு தெரியாம நீ திருந்திட்டாதா நினைச்சேன் பாரு. என்னைய சொல்லணும்” என்று தன்னை தானே நொந்து கொண்டார் ஜெகா.
“என்னை திருத்துறது இருக்கட்டும். நீ முதல்ல குடிக்காம திருந்தி வாழற வழியை பாரு”என்ற கஸ்தூரி எப்போதும் போலவே அடாவடியாக பேசிக்கொண்டு திரிய.
“அத்த. அண்ணியை அழைச்சிட்டு வந்து சபையில உக்கார வைக்கலாமா” என்று பார்வதியிடம் கேட்டாள் ரோஜா.
“ஆமா ரோஜா. நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்கு. நீ போய் முல்லையை அழைச்சிட்டு வா. ஆமா கதிர் மாப்புள்ள எங்க” என்று பார்வதி கேட்க.
“வாத்தி தான் அண்ணியை அலங்காரம் பண்ணிக்கிட்டு இருக்காரு”என்றாள் ரோஜா.
“என்ன கதிரா. .“ என்று பார்வதி வாயை பிளக்க. இதே சமயம் தன் அறையில் முல்லையின் பாதத்தை தன் மடி மீது வைத்து அவளுக்கு தங்க சலங்கை வைத்த கொலுசை அணிந்துகொண்டு இருந்தான் கதிர்.
“என்ன மாமா சார் இது. தங்க கொலுசா?” என்று முல்லையின் கண்கள் ஆச்சிரியத்தில் மிளிர.
“கொலுசு மட்டும் இல்ல. என் ரவா லட்டுக்கு தங்கத்துல ஒட்டியாணம் கூட வாங்கி இருக்கேன்” என்றவன் அருகே இருந்த ஒட்டியாணத்தை எடுத்து முல்லையின் இடையை சுற்றி அவளுக்கு அணிவித்து அழகு பார்த்தான்.
“மாமா சார். இதெல்லாம் உங்களுக்கு ஓவரா இல்ல. யாராவது தங்கத்துல ஒட்டியாணம் போடுவாங்களா?” என்று முல்லை கேட்க.
“மத்தவுங்க கதை நமக்கு எதுக்கு. எனக்கு என் ரவா லட்டுக்கு தங்க கொலுசு, தங்க ஒட்டியாணம் எல்லாம் போட்டு பார்க்க ஆசை” என்றவன். தன் கண் முன்னே தங்க விக்ரகத்தை போல நின்று இருக்கும் பெண்ணவளை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தான்.
அவன் பார்வையில் நாணம் கொண்டவள்.
“இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப அதிகம்” என்று அவள் சிணுங்க, “இதெல்லாம் உன் மனசுக்கு முன்னால ஒண்ணுமே இல்லடி” என்றவன் தன் சட்டை பையில் இருந்து வைர மூக்குத்தி ஒன்றை எடுத்து அவளிடம் கொடுக்க.“இது என்ன?” என்று அவனை முறைத்தாள் முல்லை.
“என் அழகிக்கு வைர மூக்குத்தி” என்றவன் அவள் நாசியை செல்லமாக கிள்ளியதும், “அண்ணி நேரமாகுது. நீங்களும் வாத்தியும் சீக்கிரமா வெளிய வாங்க” என்று வாசலில் நின்றுக்கொண்டு குரல் கொடுத்தாள் ரோஜா.
“ஹாங் வரோம் வரோம்” என்ற கதிர்.“சீக்கிரமா மூக்குத்தியை போடு. உனக்காக தான் எல்லோரும் காத்து இருக்காங்க” என்றதும். அவனை முறைத்துக்கொண்டே முல்லை மூக்குத்தியை அணிந்துக்கொண்டவள், “நல்லா இருக்கா” என்று கேட்க.
“உன்னால தான் இந்த வைரதுக்கே பெருமை” என்றவன் மீண்டும் தன் காதல் மனைவியின் நுனி மூக்கை செல்லம் கொஞ்சினான்.
“அண்ணி. இப்போ நீங்க வரிங்களா. இல்ல நாங்க உள்ள வரட்டுமா” என்று ரோஜா வேகமாக கதவை தட்ட.“ஐயோ வா வா போகலாம். இல்லைனா அம்மா கதவை உடைசிகிட்டு உள்ள வந்துடுவாங்க” என்ற கதிர் முல்லையை கை தாங்கலாக அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன். அவளுக்காக போடப்பட்ட இருக்கையில் முல்லையை அமர வைத்து அவன் கையால் அவளுக்கு மாலை அணிவித்தவன். சுற்றம் மறந்து பெண்ணவளின் அழகில் முழுகி போய் இருந்தான்.
“இங்க பாருங்க. எங்க வாத்தி என் அண்ணி அழகுல மயங்கி போய் அப்படியே தான் நின்னுகிட்டு இருப்பாரு. அதனால நீங்க பண்ண வேண்டிய சடங்கை எல்லாம் ஆரம்பிச்சிடுங்க” என்று ரோஜா தன் சொந்த பந்தங்களிடம் சொல்லிக்கொண்டு இருக்க.
“முல்லை. நீயும் மாப்பிளைக்கு மாலை போட்டு விடுமா” என்றார் முருகன்.
முல்லை சிரித்த முகத்துடன் கதிரின் கழுத்தில் மாலையை அணிவிக்க. சபை முழுதும் வண்ண வண்ண வளையல்கள். பதிமூன்று விதமான சாத வகைகள்.
பழம் பூ என்று அந்த இடமே நிரம்பும்ப்படி தன் மகளுக்கு சீமந்தம் ஏற்பாடு செய்து இருந்தார் முருகன்.
வயதில் மூத்த பெண்மணிகளில் தொடங்கி அனைவரும் முல்லைக்கு வளையல் அணிந்து அவளுக்கு சீமந்த சாப்பாட்டை ஊட்டி விட. பார்வதி மட்டும் விஷேஷத்தை தள்ளி நின்று பார்த்து இருந்தார்.
“அம்மா. ஏன் நீங்க மட்டும் ஏன் அங்க நிக்கறீங்க. நீங்களும் வந்து எனக்கு வளையல் போட்டு விடுங்க” என்று பார்வதியை முல்லை அழைக்க.“இருக்கட்டும் முல்லை. அவங்கல்லாம் பண்ணட்டும்” என்றார் பார்வதி.
“அத்த. உங்க பொண்ணுக்கு நீங்க தான் பண்ணனும். வாங்க. வந்து வளையல் போட்டு விடுங்க” என்று கதிரும் பார்வதியை அழைக்க, இதயம் நிறைந்த மகிழ்ச்சியோடு முல்லைக்கு வளைவி அணிவித்து அவளுக்கு அனைவரும் சேர்ந்து சீமந்ததை நல்ல முறையில் நடத்தி வைத்தார்கள்.
முல்லையின் வளையல் காப்புக்கு வந்த அனைவரும் மனமார அவளை வாழ்த்தி சென்று இருக்க. பாண்டியன் வீட்டில் இருந்து முல்லை முருகன் வீட்டிற்கு கிளம்பினாள்.
“அப்பா. நானும் கிளம்புறேன்” என்ற கதிர் முதல் ஆளாக வாசலை நோக்கி நடக்க, “ஏய் இரு இரு. அதெல்லாம் நீ அங்க போக கூடாது. அது முறை இல்ல. பொஞ்சாதி பிரசவத்துக்கு போனா புருஷன்க்காரன் அவன் வீட்டுல தான் இருக்கனும்” என்று பாண்டியன் கண்டிப்புடன் சொல்ல,
“அதெல்லாம் என்னால முடியாது. நானும் முல்லை கூட போய் தான் தீருவேன்” என்று அடம் பிடித்தான் கதிர்.
“டேய் சொல்றேன் தானே, உன் இஷ்டத்துக்கு எல்லாம் முறையை மாத்த முடியாது. நீ முதல்ல உன் ரூமுக்கு போ. அம்மாடி முல்லை உடம்ப பார்த்துக்கோ மா. மச்சான் நீங்க நேரத்தோடு கிளம்புங்க. போனதும் போன் பண்ணுங்க” என்று பாண்டியன் சொல்ல. பாவமாக நின்று இருந்த கதிரை ஏக்கமாக பார்த்த முல்லை.“எல்லோருக்கும் போயிட்டு வரேன்” என்று ஏழு மாத கருவோடு பாண்டியன் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு சென்று கிளம்பினாள் முல்லை.
வழியெல்லாம் முல்லைக்கு கதிரின் நினைவாகவே இருந்த நிலையில்.“என்ன அக்கா. உன் மாமா சாரை மிஸ் பண்றியா” என்று கேட்டான் வேலன்.
“பாவம் டா அவரு. எனக்கு சீமந்தமுன்னு சொன்னதுல இருந்தே என்கூடவே நம்ம வீட்டுக்கு வந்துடுவேன்னு சொன்னாரு. ஆனா இப்போ பாரு மாமா வேணான்னு சொன்னதும் பாவம் அவர் முகமே வாடி போச்சு” இன்று முல்லை கதிரை நினைத்து கவலை கொள்ள, “இதெல்லாம் ஒரு சம்பிரதாயம் மா “என்றார் முருகன்.
“இருந்தாலும் அவர பார்க்கவே பாவமா இருந்துச்சு” என்ற முல்லையின் முகமும் வாடி இருக்க. அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலன் விரட்டிய கார் முருகனின் இல்லத்தை சென்றடைந்தது.
“முல்லை, நீ இங்கேயே நில்லு. நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வரேன்” என்ற பார்வதி வீட்டுக்குள் நுழையும் முன்னே,
“இதோ இதோ நானே ஆரத்தி எடுத்துட்டு வரேன்” என்ற ஆணின் குரல் கேட்கும் திசையை நோக்கி முல்லை திரும்பி பார்க்க. அங்கே கையில் ஆரத்தி தட்டுடன் முல்லையை நோக்கி நடந்து வந்ததது என்னவோ.?
–தொடரும்