அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலன் விரட்டிய கார் முருகனின் இல்லத்தை சென்றடைந்தது.
“முல்லை, நீ இங்கேயே நில்லு. நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வரேன்” என்ற பார்வதி வீட்டுக்குள் நுழையும் முன்னே,
“இதோ இதோ நானே ஆரத்தி எடுத்துட்டு வரேன்” என்ற ஆணின் குரல் கேட்கும் திசையை நோக்கி முல்லை திரும்பி பார்க்க.
ஆரத்தி தட்டுடன் அவள் முன்னே நின்று இருந்தான் கதிர்.
கதிரை பார்த்ததும் முல்லை சந்தோஷத்தில் துள்ளி குதித்து அவனை காதலாக கட்டிக்கொண்டாள்.
“முல்லை. வயத்துல புள்ள இருக்கு மா ஜாக்கிரதை” என்று முருகன் பதறி போக,
“அதெல்லாம் அவ காதுல விழவே விழாது” என்றார் பார்வதி.
“ஹலோ. உங்கள தான் இங்க வர கூடாதுனு சொன்னாங்களே. நீங்க ஏன் இங்க வந்திங்க?” என்று வேலன் கதிரை கேட்க, “டேய் அத கேட்க நீ யாருடா?” என்று கடுக்கடுத்தான் கதிர்.
“டேய் நீ சும்மா இரு டா.“ என்று தன் தம்பியை கட்டுப்படுத்திய முல்லை, “மாமா சார் எங்களுக்கு முன்னாடியே நீங்க வந்துட்டீங்களா?” என்று ஆச்சிரியமாக கேட்டாள் முல்லை.
“உன்ன இங்க அனுப்பிட்டு என்னால மட்டும் அங்க எப்படி தனியா இருக்க முடியும். அதான் நானும் உன்கூடவே வந்துட்டேன்” என்ற கதிரின் கையில் இருந்த ஆரத்தி தட்டை சிரித்த முகத்துடன் வாங்கிக்கொண்டார் பார்வதி.
“சரி சரி நீங்க ரெண்டு பேரும் ஜோடியா நில்லுங்க. எங்க கண்ணே பட்டுடும்” என்ற பார்வதி அவர் கரங்களால் முல்லைக்கும் கதிருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அனுப்பி வைக்க, கதிர் தன் மனைவியை பக்குவமாக உள்ளே அழைத்து சென்றான்.
“சரி பெரியம்மா. அதான் அக்காவை பார்த்துக்க அவங்க மாமா சார் வந்துட்டாரே. இனி நான் இங்க இருந்து என்ன பண்ண போறேன். நானும் கிளம்புறேன்” என்றான் வேலன்
“டேய். உன் பொண்டாட்டி தான் நைட் டூட்டி போய் இருக்காளே. நீ இங்கேயே இரு டா” என்று பார்வதி சொல்ல, வேலன் அன்றைய தினம் இரவு முருகன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தான்.
“என்ன மாப்புள்ள நீங்க. உங்க அப்பா பேச்சை மீறி இங்க வந்து இருக்கீங்களே, அவருக்கு தெரிஞ்சா உங்கள கோச்சிக்க மாட்டாரா?” என்று முருகன் கேட்க,
“அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன் மாமா”என்றான் கதிர்.
“ஆமாங்க. நம்ம பொண்ணு மாசமா இருக்கும் போது அவ புருஷன் அவளோட இருக்கணும்னு அவளுக்கும் ஆசை இருக்கும் தானே. அதெல்லாம் பாண்டியன் அண்ணன் கேட்டா மாப்புள்ள சமாளிச்சுப்பாரு.“ என்று பார்வதியும் கதிருக்கு தான் பரிந்து பேசினார்.
“சரி சரி. எனக்கும் என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம். அம்மாடி முல்லை. மாப்பிள்ளையை உள்ள அழைச்சிட்டு போ மா” என்று முருகன் சொல்ல, கதிரும் முல்லையும் அவர்கள் அறைக்கு சென்றார்கள்.
கிட்டத்தட்ட ஏழு மாதம் கடந்து இருந்ததால் முல்லையின் வயிறு பெரிதாக இருக்க, அவளை இனி தரையில் படுக்க வைக்காமல், கட்டிலில் படுக்க வைக்க முடிவு செய்த கதிர், அவள் முதுகுக்கு தலையணை கொடுத்து அவளை சாய்ந்து அமர வைத்தான்.
“மாமா சார். எனக்கு தாகமா இருக்கு, ரொம்ப வெக்கையா இருக்கு, ஐஸ் வாட்டர் எடுத்து வந்து தரீங்கள?” என்று முல்லை கேட்க, “தண்ணி தானே இதோ வரேன்” என்றவன் நேரே சமையல் அறைக்கு சென்றான்.
சில நொடிகள் கடந்து கையில் சொம்புடன் வந்த கதிர், “இந்தா தண்ணி குடி” என்றவன் அவள் கையில் சொம்பை கொடுக்க,
“என்ன நீங்க. நான் ஐஸ் வாட்டர் கேட்டா நீங்க சுடு தண்ணி தரிங்க” என்று கோவம் கொண்டாள் முல்லை.
“ஐஸ் வாட்டர் எல்லாம் குடிக்கக்கூடாது. இந்த தண்ணியை குடி. இன்னும் அரைமணி நேரத்துல சாப்பிடனும். வாக்கிங் போகணும். ம். சீக்கிரம் தண்ணி குடி” என்றவன் குரல் கட்டளையாக ஒலித்தது.
அவன் பேச்சை கேட்டு கதிரை முல்லை அழுத்தமாக பார்த்து இருக்க.
“என்னடி லுக்கு. ம் குடி” என்றதும் வேண்டாம் வெறுப்பாக தண்ணீரை குடித்து, சொம்பை பட்டென்று மேசை மேல் வைத்தாள்.
“ஏய் பார்த்து டி. உங்க வீட்டுல இருக்குற சொம்பு எல்லாம் ஏற்கவனே அடி வாங்கி தான் இருக்கு” என்று கதிர் கிண்டலாக சொல்ல.“ஆமா ஆமா சொம்புக்கு ஒன்னுனா உங்களுக்கு மனசு தாங்காதே” என்று முகத்தை திருப்பிகொண்டாள் முல்லை.
“சரி. எழுந்து நைட்டி மாத்திக்கோ. அப்போ தான் Freeya இருக்கும்” என்ற கதிர் அவள் முன்னே ஒரு நைட்டியை நீட்டினான்.
“எனக்கு இதெல்லாம் வேணாம். எனக்கு ஐஸ் தண்ணி தான் வேணும்” என்று முல்லை மீண்டும் அடம் பிடிக்க,
“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, ஒழுங்கா நைட்டியை நீயே மாத்திடு, இல்லைனா நான் மாத்தி விட்டுடுவேன் பார்த்துக்கோ” என்ற கதிரை முறைத்துக்கொண்டே அவன் கையில் இருந்த துணியை வாங்கிக்கொண்டாள்.
“ம், சீக்கிரம் மாத்து” என்ற கதிர் அங்கேயே நின்று இருக்க.“நீங்க இங்க இருந்தா நான் என்னத்த மாத்துறது. நீங்க வெளிய போங்க நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்” என்றவள் அவனிடம் அதே கோபத்துடன் தான் இருந்தாள்.
“இவ்ளோ பெரிய ரூம்ல நான் ஒரு ஓரமா இருந்துப்பேன், நீ அப்படியே மாத்து” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தாள் முல்லை.
“என்னடி முறைக்கிற, சீக்கிரமா துணியை மாத்து” என்ற கதிர் கட்டிலில் அமர்ந்து அவன் சட்டை பையில் இருந்த சின்ன புத்தகத்தில் எதையோ எழுதிக்கொண்டு இருக்க,
அவனை முறைத்த வண்ணமே முல்லை தன் புடவையை மாற்றி நைட்டியை அணிந்துகொண்டாள்.
“ம். மாத்திட்டியா, போகலாமா” என்று அவளை பார்க்காமலேயே கதிர் கேட்டதும்.“அப்போ உங்க கவனம் உங்க கையில இருக்குற புத்தகம் மேல இல்லையா” என்று கேட்டாள் முல்லை.
“என் கவனம் எப்போதும் உங்க மூணு பேர் மேல மட்டும் தான் டி இருக்கும்”என்றவன் கட்டிலில் இருந்து எழுந்து அவள் அருகே வந்து. அவள் கழட்டி போட்ட புடவையை அழகாய் மடித்து அவள் கையில் கொடுத்தான்.
அவள் நன்மைக்காக தான் இத்தனையும் செய்கிறான் என்று முல்லை அறிந்து இருந்த போதிலும் அவனிடம் பொய்யான கோவத்துடன் இருந்தவள், அவன் மடித்து கொடுத்த புடவையை மீண்டும் கலைத்து, மீண்டும் அவளே மடித்து வைக்க. தன் மனைவியின் சிறு பிள்ளை தனத்தை கதிர் உள்ளுற ரசித்துக்கொண்டு தான் இருந்தான்.
தன்னையே பார்த்து இருக்கும் தன்னவனை இவள் கண்டுகொள்ளாமல் இவர்கள் அறையில் இருந்து வெளியேற. கதிரும் அவளை தொடர்ந்து வெளியே சென்றவன் முல்லைக்காக இரவு உணவை தட்டில் எடுத்து வைத்தான்.
“ஏங்க. நீங்களும் சாப்பிட வாங்க” என்று பார்வதி முருகனை அழைக்க.
“ஆமா ஆமா எல்லோரும் உக்காருங்க. எல்லாம் ஒன்னாவே சாப்பிடலாம்” என்ற முருகன் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்ததும் முல்லையின் கோவமான முகத்தை பார்த்து கதிரிடம் “என்ன” என்பதை போல சமிஞ்சை காட்டினார்.
“உங்க பொண்ணுக்கு ஐஸ் வாட்டர் வேணும்னு அடம் பிடிக்கிறா மாமா” என்று கதிர் அனைவரின் எதிரிலும் முல்லையை போட்டு கொடுக்க.“ஐயையோ. வயத்துல புள்ள இருக்கும் போது ஐஸ் வாட்டர் எல்லாம் குடிக்க கூடாது” என்று முருகனும் பார்வதியும் கத்த அராம்பித்து இருந்தார்கள்.
“ஐயோ போதும் நிறுத்துங்க, எனக்கு இனி தண்ணியே வேணா” என்று முல்லை சொல்ல.“அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நீ 2Ltr தண்ணி குடிச்சே ஆகணும்” என்றான் கதிர்.
“ஆமா முல்லை. கதிர் மாப்புள்ள சொல்றத கேளு மா” என்று முருகன் தன் மகளுக்கு அறிவுரை கொடுக்க,
பார்வதி கேள்விரகு அடையை எடுத்து முல்லையின் தட்டில் வைத்தார்.
இரவு உணவை பார்த்து முகம் மாறிய முல்லை.“அம்மா. இன்னைக்கு நான் நெய் தோசை தானே கேட்டேன்” என்ற முல்லை கதிரை முறைக்க.
“என்னை ஏன் டி முறைக்கிற, நான் கேள்விரகு தோசை தான் பண்ண சொன்னேன், ஆனா இவங்க தான் அடை போட்டு இருக்காங்க” என்றான் கதிர்.
“எனக்கு அடை தொடை எல்லாம் வேண்டாம். எனக்கு நெய் தோசை தான் வேணும்” என்ற முல்லையின் வாயில பாதி அடையை திணித்த கதிர்.“நல்லா மென்னு சாப்பிடு. அப்போ தான் செறிக்கும்” என்றவனை கொலை காண்டில் முறைத்துக்கொண்டே முல்லை வாயில இருந்த அடையை விழுங்க முடியாமல் விழுங்கினாள்.
“மாப்புள்ள. அவ தானா எடுத்து சாப்பிடுவா. நீங்க சாப்பிடுங்க” என்று முருகன் சொல்ல.“இருக்கட்டும் மாமா. உங்க பொண்ணு இப்போ எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறதே இல்ல” என்றவன் மேலும் முல்லைக்கு உணவை ஊட்டி விட்டான்.
“எனக்கு போதும். சாப்பிடவே பிடிக்கல” என்று முல்லை அழாத குறையாக கதிரை முறைக்க.
“இங்க பாரு. உனக்கு ஒன்னு பாப்பாங்களுக்கு பாதி பாதி. மொத்தம் ரெண்டு அடை நீ சாப்பிட்டே ஆகணும்” என்றவன் மேலும் அவளுக்கு இரவு உணவை ஊட்டி முடித்தான்.
“மாப்புள. நீங்களும் சாப்பிடுங்க” என்று பார்வதி சொல்ல. வேகமாக கதிரும் இரவு உணவை முடித்தவன்.
“வாடி வாக்கிங் போகலாம்” என்று முல்லையை அழைத்தான்.
“இப்போ தானே சாப்பிட்டேன். அதுக்குள்ளவா நடக்கணும்” என்று முல்லை சிணுங்கியதும்.“இல்லைனா உனக்கு தூக்கம் வந்துடும். அப்புறம் நடக்க மாட்ட. அதான் இப்போவே கூப்பிடுறேன்” என்றவன் அவர்கள் அறையில் இருந்து சால்வையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
“இந்த சால்வை எதுக்கு” என்று முல்லை கேட்க.
“கொசு கடிக்கும் டி. அதான்” என்றவன் சால்வையை முல்லைக்கு போத்தி விட்டதும்.“மாமா சார். நீங்க ரொம்ப ஓவரா தான் போறிங்க” என்றவள் கதிரை முறைத்துக்கொண்டே பின் வாசல் பக்கம் சென்று நின்றுகொண்டாள்.
“மாமா. நீங்க சாப்பிட்டு போய் படுங்க. நாங்க வாக்கிங் போயிட்டு வரோம்” என்ற கதிர் கையில் ஒரு குச்சியுடன் முல்லையை தோட்டத்து பக்கம் அழைத்து சென்றவன் அவன் கையில் இருந்த கைபேசி வாயிலாக மெல்லிய இசையை ஒலிக்க செய்தான்.
வானில் நிலவு. நிலவை சுற்றி பல்லாயிரம் நட்சத்திரங்கள் மிண்ணிக்கொண்டு இருக்க. முல்லையின் கைப்பிடித்து அவளை பொறுமையாக நடக்க வைத்தான் கதிர்.
இருவரும் அமைதியாக பாடலை ரசித்தப்படி நடந்துக்கொண்டு இருக்க.
கதிரின் கழுத்தில் இருந்த துண்டை எடுத்து முல்லையின் தலையில் கட்டி விட்டான் கதிர்.
கதிரின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து இருந்த முல்லை.“ஏன மாமா சார். நம்ம குழந்தை வயத்துல இருக்குறதால தான் நீங்க என்னை இந்த தாங்கு தாங்குறீங்களா” என்று முல்லை கேட்க.
“என்னடி. என் காதலை சந்தேகபடுறியா” என்று கேட்டான் கதிர்.
“ம். சந்தேகம் எல்லாம் இல்ல. நமக்கு குழந்தை பிறந்த பிறகு கூட என்னை நீங்க இப்படியெல்லாம் கவனிச்சிப்பீங்களா. இல்ல உங்க பசங்கள மட்டும் பார்த்துப்பீங்களா” என்று முல்லை கேட்க.
“ம். நமக்கு குழந்தை பிறந்த பிறகு உன் கேள்விக்கு உண்டான பதிலை நீயே அனுபவிச்சு தெரிஞ்சிக்கோ” என்றான் கதிர்.
இருவரும் மீண்டும் அமைதியாகவே நடையை தொடர. முல்லையின் கையில் உள்ள கண்ணாடி வளைவியின் ஓசை ராகமாக கதிரின் காதில் ஒலித்தது.
“இன்னைக்கு நடந்தது போதும் மாமா சார், எனக்கு ரொம்ப கால் வலிக்குது. வாங்க போய் படுக்கலாம்” என்று முல்லை கதிரை அழைக்க.“இன்னைக்கு ஒரு நாள் தான் உனக்கு பர்மிஸ்ஷன். நாளையில இருந்து நான் சொல்லுற வரைக்கும் நடக்கணும்” என்று கதிர் சொல்ல.
“அத நாளைக்கு பார்த்துப்போம்” என்ற முல்லை வேகமாக அவள் அறைக்கு சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
முல்லை உறங்க சென்றதும் அவள் பின்னே சென்ற கதிர், அறையின் கதவை தாழிட்டவன், “சாமி கும்பிட்டு படுத்தியா” என்று கேட்டான்.
“எனக்கு சாமி நீங்க தாங்க. நான் உங்கள கும்பிட்டு இருக்கேன்” என்ற முல்லை கையை கூப்பி கதிரை பார்த்து கோவமாக ஒரு பெரிய கும்பிட்டு போட்டவள் முகத்தை போர்வையால் போத்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்.
“ஏண்டி. ஒரு டம்பளர் ஐஸ் வாட்டர்க்கா என்கிட்ட இவ்ளோ நேரம் சண்டை போடுவ” என்ற கதிரை கோவமாக முறைத்தவள், “ஆமா. எனக்கு ஐஸ் வாட்டர் குடிக்கணும் போல இருக்கு” என்று போர்வைக்குள் இருந்தப்படியே முன்னாங்கினாள்.
“சரி சரி. நீ ரொம்ப கவலைப்படாத. மாமா உனக்கு” என்று கதிர் சொல்லும் காட்டிலும், “ஐஸ் வாட்டர் எடுத்துட்டு வரிங்களா” என்றவள் படுக்கையில் இருந்து எழுந்து அமந்துகொண்டாள்.
“ஹாங் எடுத்துட்டு வரேன். ஆனா இப்போ இல்ல. சரியா இன்னையில இருந்து இரண்டு வருஷம் கடந்து தான் நீ ஐஸ் வாட்டர் குடிக்கணும்” என்று கதிர் சொல்ல.
“யோவ். முதல்ல நீ உன் அப்பா வீட்டுக்கு கிளம்பு” என்றாள் முல்லை.
“ஏய் என்னடி நீ. சட்டுன்னு கட்டின புருஷனை ஒரு ஐஸ் வாட்டர்க்காக வெளிய போக சொல்ற?” என்று கதிர் கேட்க,
“பின்ன என்ன. சும்மா எப்பப்பாரு நான் கேக்குற எதையும் கொடுக்க மாட்டுற” என்று கதிரை கோவத்தில் ஒருமையில் திட்ட ஆரம்பித்து இருந்தாள்.
“இங்க பாரு. நீ இன்னும் என்னை அசிங்க அசிங்கமா திட்டுனா கூட நான் உனக்கு ஒத்துக்காத எதையும் கொடுக்கவே மாட்டேன்” என்ற கதிர் tube லைட்டை அணைத்து பெட் லைட்டை ஆன் செய்தவன், “ good நைட் டார்லிங்ஸ்” என்று முல்லையின் வயிற்றில் முத்தமிட்டு அவள் அருகே படுத்துக் கொண்டான்.
உறங்கும் கதிரை கோவமாக முறைத்த முல்லை அவனை அடிப்பதை போல பாவனை காட்டியவள்,
வாய்க்குள் முணங்கிக்கொண்டு அவன் அருகே படுத்துக்கொள்ள. தன் மனைவியின் செயலை கண்களை மூடியப்படியே உணர்ந்து இருந்தான் கதிர்.
இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க. முல்லைக்கு சட்டென்று முழிப்பு வந்ததும் கண்களை விழுத்து பார்த்தவள்,
மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கினாள்.
சிரமப்பட்டு வயிற்றில் பிள்ளையோடு பூனையை போல திருட்டு தனமாக அவள் அறையில் இருந்து வெளியேறிய முல்லை நேரே போனது என்னவோ சமையலறைக்கு தான்.
“புள்ளையா இவரு. என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் இதை சாப்பிடாத அத சாப்பிடாத. இத குடி அத கடின்னு ஒரே டார்ச்சர், எப்பாப்பா. என்னமோ நான் மட்டும் தான் இந்த உலகத்துல பிள்ளை பெத்துக்க போறேனா. ஏன் மத்த பொம்பளைங்க எல்லாம் கண்டத தின்னுட்டு பிள்ளையை பெத்துக்கல” என்று புலம்பியவள் சமையலறையை ஜெல்லாடை போட்டு துலாவிக்கொண்டு இருந்தாள்.
“என்ன இது. இந்த வீட்டுல சாப்பிடுற மாதிரி ஒண்ணுமே இல்லையா” என்று முணங்கியவள், அடுப்பணையில் இருக்கும் குளிர் சாதன பெட்டியை திறக்க, அதில் இவளுக்காகவே ஒரு பாட்டில் முழுக்க ஐஸ் வாட்டர் காத்துகொண்டு இருந்தது.
“ஐ. ஐஸ் வாட்டர்” என்று ஆசையாக பாட்டிலை கையில் எடுத்த முல்லை, ஆவலுடன் தண்ணீரை பருக போகும் நேரத்தில், “ ஏய் ரவா லட்டு, “ என்ற கதிரின் குரலில் கையில் இருந்த பாட்டிலை தவற விட்டாள்.
முல்லை கையில் இருந்து பாட்டில் கீழே விழும் முன்னே அதை லாவகமாக கை பற்றிய கதிர், “என்னடி பண்ற” என்றவன் முல்லையை அதித கோபத்துடன் முறைத்தான்.
“இல்ல மாமா சார் தண்ணி” என்று முல்லை திக்கி திணற, “அடி வேணுமா” என்றவன் கண்களில் உண்மையில் கோவம் நிறைந்த இருந்தது.
“இப்போ ஏன் கோவப்படுறீங்க, ஒரு வாய் தண்ணி கூட தர மாட்டுறீங்க. போங்க, இனி நான் உங்ககிட்ட பேசவே மாட்டேன்” என்றவள். கதிர் மீது உள்ள கோவத்தில் சமையலறையில் இருந்து வெளியே சென்றாள்.
ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக முல்லை வேகமாக வந்தவள் வாசல்க்கால் தடுக்கி கீழே விழ போக, அவளை வேகமாக ஓடி வந்து கதிர் பிடிக்கும் முன்னே முல்லை கீழே விழுந்து இருந்தாள்.
முல்லை விழுந்த வேகத்தில், “ அம்மா.“ என்று அலறியவளின் சத்தம் கேட்டு முருகன் பார்வதி என்று இருவருமே அவர்கள் அறையில் இருந்து தலை தெறிக்க ஓடி வந்தார்கள்.
கீழே விழுந்த முல்லையை பார்த்து ஒரு நொடி கதிரின் இதயம் செயல் இழந்து போனது.
“முல்லை. என்னமாச்சு” என்று முருகன் அலறியதும்.
“அம்மா.“ என்று முல்லை கத்தும் சத்தம் கேட்டு கதிர் சுயத்துக்கு வந்தவன்,
கீழே விழுந்துகடந்த முல்லையை மடியில் ஏந்தியவன் கண் எதிரே முல்லையின் கால் வழியே ரத்தம் கசிவதை பார்த்து,
முல்லை.“ என்று கத்தரியவனின் குரலில் அந்த கட்டிடமே ஆட்டம் கண்டது.
“என்னாச்சு.“ என்று இவர்களின் குரலை கேட்டு வேலன் மாடியில் இருந்து ஓடிவந்தவன்.“ஐயோ அக்கா” என்று அவனும் பதறிய நிலையில்,
“டேய். முல்லையை உடனே ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகணும் காரை எடுங்க” என்றார் பார்வதி.
“அம்மா. வலிக்குது” என்று முல்லை கதறியவளின் குரலை கேட்டு கதிரின் கண்களில் கண்ணீர் பெருக,
அவன் சற்றும் தாமதிக்காமல் முல்லையை கையில் ஏந்தியவன் காரை நோக்கி ஓடியவனை தொடர்ந்து வேலன் காரை எடுத்தவன் அடுத்த சில நிமிடங்களில் அருகே இருந்த மருத்துவமனைக்கு முல்லைக்கு தூக்கி சென்றார்கள்.
வழியெல்லாம் முல்லை துடிப்பதை காண முடியாமல் கதிர் துடித்து போனான்.
“மாமா சார் நம்ம பிள்ளைங்களுக்கு எதாவது ஆகிடுமா” என்ற முல்லையின் கண்களில் கண்ணீர் வடிய.
“ஒன்னும் ஆகாது டி நீ அழாத. இதோ இதோ உடனே ஹாஸ்பிடல் போயிடலாம்” என்ற கதிர் தன் பயத்தை வெளிக்கட்டாமல் தைரியமாக இருப்பதை போல நடிக்க தான் செய்தான்.
“அக்கா பயப்புடாத இதோ ஹாஸ்பிடல்க்கு வந்துட்டோம்” என்ற வேலன் மருத்துவமனை வாசலில் காரை நிறுத்த. கதிர் முல்லையை கையில் ஏந்தியப்படி மருத்துவ மனை வளாகத்தில் “டாக்டர் டாக்டர்.“ என்று கத்திக்கொண்டு உள்ளே ஓடினான்.
முல்லையை அந்த நிலைமையில் பார்த்த செவிலியர்கள் உடனே அவளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து இருக்க. சிகிச்சை அறையின் வாசலில் நின்றப்படி தனக்குள் அடக்கி வைத்து இருந்த பயத்தை எல்லாம் வெளிக்கொண்டு வரும் விதமாக கதிர் கதறி அழுதவனின் நிலையை பார்த்து வேலனுக்கே பாவமாக இருந்தது.
“அழாதீங்க அக்காவுக்கு ஒன்னும் ஆகாது”என்ற வேலனுக்கு அந்த கனம் கதிர் முல்லை மீது எந்த அளவுக்கு காதல் க்கொண்டுள்ளான் என்ற உண்மை விளங்கியது.
கதிர் அழுதுக்கொண்டு இருக்க “சார் டாக்டர் உங்கள உள்ள வர சொல்லுறாங்க” என்றார் செவிலியர் ஒருவர்.
கண்களில் வடிந்த கண்ணீரை தன் சட்டையில் துடைத்துக்கொண்ட கதிர் வேகமாக மருத்துவரை பார்க்க சென்றவனை வேலனும் பின் தொடர்ந்து சென்றான்.
“Mr. உங்க மனைவிக்கு வயத்துல பலமா அடிபட்டு இருக்கு. இந்த மாதிரி நேரத்துல குழந்தை வயதுல இருக்குறதால நாங்க அவங்களுக்கு மேற்கொண்டு டிரீட்மென்ட் பண்ண முடியாது. அதனால குழந்தையை” என்று மருத்துவர் சொல்லி முடிக்கும் முன்னே.
“டாக்டர். எனக்கு என் முல்லை தான் முக்கியம். Pls டாக்டர் எப்படியாவது என் முல்லையை எனக்கு காப்பாத்தி கொடுத்துடுங்க” என்ற கதிர் கைகள் கூப்பி அதே இடத்தில் மருத்துவரின் எதிரே மண்டியிட்டு அழுதவணை பார்த்து வேலனின் கண்களும் கலங்கி தான் போனது.
தொடரும்