Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 65

CHAPTER 65

முல்லை – 65

By Roja Roslin · October 29, 2026

0

ஜீவா தந்த அன்பளிப்பை புன்னகை வாடாமல் பெற்றுக்கொண்டவள் சற்றும் தாமதிக்காமல் அதை பிரித்து பார்க்க. அதில் அழகான கை கடிகாரம் இருந்தது.

“ரொம்ப அழகா இருக்கு மாமா” என்ற முல்லை, அந்த கடிகாரத்தை கையில் கட்டிக்கொண்டவள், “நல்லா இருக்கா”

என்று கதிரிடம் கேட்டாள்.

“செம்மையா இருக்கு” என்ற கதிர்,

“நைஸ் செலேச்டின் அண்ணா” என்றான்.

“ஆமா மாமா. என் கைக்கு இந்த வாட்ச் ரொம்ப சூப்பரா இருக்கு” என்று முல்லை சொல்ல, அவளை பார்த்து அழகாய் சிரித்த ஜீவா, மேற்கொண்டு எதுவும் பேசாமல் KM அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.

“அண்ணா. உனக்கு டின்னர் ரெடி பண்ணவா” என்று கதிர் கேட்க.

“பசிக்கல கதிர். நீங்க நேரத்தோடு படுங்க” என்ற ஜீவா அவன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான்.

மூடிய கதவை கதிர் பார்த்தப்படியே நின்று இருக்க.

“மாமா சார். வந்து படுங்க” என்று குரல் கொடுத்தாள் முல்லை.

கதிர் பெருமுச்சுடன் தன் அறைக்குள் வந்தவன். தரையில் பாய் விரித்து முல்லையுடன் படுத்து இருக்க. அவன் எண்ணம் எல்லாம் தான் அண்ணன் வசமே இருந்தது.

காலையில் இருந்து முல்லை அசதியில் இருந்தவள் கதிரின் அரவணைப்பில் படுத்ததுமே உறங்கி இருக்க,

அவள் அருகாமையில் கதிரும் அப்படியே உறங்கி போனான்.

மறுநாள் காலை பொழுது அழகாய் விடிய.

அன்றைய தினம் காலை பத்து மணி அளவில் பாண்டியனின் வீட்டை அவர்களின் மொத்த குடும்பமும் ஆக்கரமித்து இருந்தார்கள்.

பல மாதங்கள் கடந்து ஜீவாவை பார்த்த ரோஜா, “அண்ணா.“ என்று ஓடி வந்து அவனை கட்டிக்கொள்ள,

தன் தங்கையை அன்பாய் அரவணைத்து இருந்தான் ஜீவா.

தன் மகன் வாழ்க்கையில் என்ன தான் நடந்தது என்று தெரியாமல் பாண்டியனும் இன்று வரை ஜீவா மீது கோவம் கொண்டவராய் அமர்ந்து இருக்க.

“அப்பா.“ என்று உறுக்கமான குரலில் தன் தந்தையை அழைத்தான் ஜீவா.

இந்த நொடி வரை ஜீவா மீது பாண்டியன் வருத்தத்தில் இருந்து இருக்க. தன் மகனின் குரலை கேட்டதும் அவரின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“அப்பா, “ என்று மீண்டும் ஜீவா அழைக்க,

“என்னப்பா இதெல்லாம். நான் ஒருத்தன் உயிரோட இருக்குறதையே மறந்துட்டியா” என்ற பாண்டியனின் வார்த்தையில் ஜீவா கதறி அழுதான்.

தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் ஆற தழுவி அன்பை பரிமாறிக்கொண்டு இருக்க. கூடி இருக்கும் அனைவரின் விழிகளும் ஈரமாகி போனது.

“அக்கா. இங்க என்ன நாடகமா ஓடுது, ஏன் இவங்க இப்படி ஒப்பாரி வைக்கிறாங்க” என்று வேலன் முல்லையின் காதை கடிக்க,

“டேய். என் அண்ணன் அழறது உனக்கு நாடகம் மாதிரி தெரியுதா” என்று கேட்டான் கதிர்.

“அவங்க மட்டும் இல்ல. நீங்க என் அக்காகிட்ட காட்டுற அக்கறையே எனக்கு அப்படி தான் தெரியும்” என்று வேலன் எப்போதும் போலவே கதிரிடம் பிரச்சனையை இழுக்க.

“எனக்கெல்லாம் நடிக்க தெரியாது டா டால்டா” என்றான் கதிர்.

“பரவாயில்ல. இப்போவது உண்மையை ஓத்துகிட்டிங்களே” என்ற வேலனை கதிர் முறைக்க. அதே சமயம் கஸ்தூரியும் மீனாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

இத்தனை நாட்கள் கடந்து ஜீவா மீனாவை பார்க்க. அவளோ தயக்கத்துடன் நின்று இருந்தவளுக்கு, அடுத்து அவள் வாழ்வில் என்ன நடக்க போகிறது என்ற யோசனையில் முழுகி இருந்தாள்.

யார் முதலில் மௌவனத்தை உடைப்பது என்று தெரியாமல் அனைவரும் அமைதியாக நின்று இருக்க,

“பாண்டியன் மாமா. நீங்க தானே பஞ்சாயத்து தலைவரு. நீங்களே இந்த Get to கெதர் எதுக்குன்னு உங்க பெரிய பையன்கிட்ட கேட்டு சொல்லுங்க” என்றான் வேலன்.

“டேய் சும்மா இரு டா” என்று வேலனை முல்லை கண்டிக்க, “அண்ணா. இங்க நடந்த எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம்” என்று பவ்யாமாக பேசினார் கஸ்தூரி.

“நீங்க தான் காரணமுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா ஏன் இப்படி பண்ணீங்க.“ என்று கோபத்துடன் கேட்டாள் ரோஜா.

“என் பொண்ணு மீனா தான் இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா வரணும்னு ஆசைப்பட்டு தான் இப்படி பண்ணேன்” என்று கஸ்தூரி உண்மையை கூற. மீனாவும் ஜீவாவும் அவரை கொலை காண்டில் முறைத்தார்கள்.

அனைவரும் தன் மீது கோவமாக இருக்கிறார்கள் என்று அறிந்துக்கொண்ட கஸ்தூரி, “தப்பு தான். எதுவா இருந்தாலும் நான் உங்ககூட பேசாம, அந்த சுந்தரேசனை நம்பி போனது தப்பு” என்று கஸ்தூரி மேலும் அவர் தவறை ஒப்புக்கொள்ள, மீனாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“மீனா. நீ ஏன் அழற. அழாத மீனா” என்று முல்லை மீனாவுக்கு ஆறுதல் கூற.

அவளோ குனிந்த தலையை நிமிறாமல் சிலையென அப்படியே நின்று இருந்தாள்.

“ஆமா. இங்க இவ்ளோ பிரச்சனை இருக்கும் போது நீங்க எங்க போனீங்க” என்று ரோஜா தன் பெரிய அண்ணனை கேள்விக் கேட்க,

“நேத்து நைட் நீங்க எப்படி அந்த சுண்டு பையன்கூட கார் டிக்கில இருந்திங்க” என்று கேட்டான் வேலன்.

ஆளாளுக்கு ஜீவாவை கேள்விக்கேட்டதும், பெருமூச்சுடன், “நான் சென்னைக்கு போய் இருந்தேன்” என்றான் ஜீவா.

“சென்னைக்கா. ஏன் அண்ணா, அங்க ஏன் போன” என்று கதிர் கேட்க, “அங்க என் Friend சைபர் Crime ல ஒர்க் பண்ணுறான், அவனை பார்க்க தான் போனேன்” என்று ஜீவா சொல்ல. யாருக்கும் ஏதும் புரியாமல் அவனின் அடுத்த வார்த்தைக்காக காத்து இருந்தார்கள்.

“சரி. நீ உன் நண்பனை பார்க்க தான் போக போறன்னு எங்ககிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாமே” என்று பார்வதி கேட்க,

“அன்னைக்கு இருந்த சூழ்நிலையில எனக்கு உங்க யாரையும் பார்க்கவே தைரியம் இல்லை” என்றான் ஜீவா.

“ஜீவா அண்ணா. நான் கூட உங்களுக்கும் மீனா அண்ணிக்கும் எப்படி கல்யாணம் நடந்ததுன்னு உங்கள ஆயிரம் முறை கேட்டு பார்த்துட்டேன். நீங்க மட்டும் அன்னைக்கே இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு சொல்லி இருந்திங்கனா, இன்னைக்கு இவ்ளோ பிரச்சனை வந்து இருக்காது” என்றாள் ரோஜா.

தன் தங்கையின் வார்த்தையை கேட்டு ஜீவா மெல்லிதாய் புன்னகைத்தவன், “இல்ல ரோஜா. அன்னைக்கு நான் சொல்லிருந்தா, இந்நேரம் நம்ம குடும்ப மனமே போய் இருக்கும்” என்ற ஜீவா, மேற்கொண்டு அவன் பேச்சை தொடர்ந்தான்.

“அன்னைக்கு திருச்சி MLA வை நம்ம ஊர் ஹாஸ்பிடல்ல சேர்த்து இருந்ததால நான் அவருக்கு துணையா அங்க தான் இருந்தேன்.

அப்போ எனக்கு Un known callல இருந்து ஓரு போன் வந்துச்சு.

அந்த போன்ல பேசுன ஒருத்தன், உன் மாமா பொண்ணை HH லாட்ஜ்க்கு ரெண்டு பேர் வலுகட்டாயமா இழுத்துட்டு போறாங்கன்னு சொன்னான்.

அவன் சொன்னதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. நான் எதை பத்தியும் யோசிக்காம நேரா அந்த லாட்ஜ்க்கு போனேன்.

நான் உள்ள போனது மட்டும் தான் எனக்கு நினைவு இருக்கு, அப்புறம் காலையில எழுந்து பார்த்தா என் பக்கத்துல” என்று ஜீவா அவன் வார்த்தையை ஒர்கணம் நிறுத்த. மீனா மேலும் அழத்தொடங்கி இருந்தாள்.

“என்னை சுத்தி என்ன நடந்துச்சுனு நான் யோசிக்கிறதுக்குள்ள, எனக்கு மறுபடியும் அதே UN known நம்பர்ல இருந்து ஒரு Call வந்துச்சு.

“நேத்து நீயும் உன் அத்த பொண்ணும் ஒண்ணா இருந்த வீடியோ என்கிட்ட இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வீடியோவை உலகம் முழுக்க பார்க்குற மாதிரி லிங்க் ஷேர் பண்ண போறேன்னு” அவன் அந்த போன்ல மிரட்டினான்.

நான் பதிலுக்கு அவன் யாரு என்னனு கேக்குறதுக்குள்ள, அவன் என்கிட்ட 50லட்சம் பணம் கேட்டான்.

சரி அந்த பணத்தை கொடுத்துடலாமுன்னு கூட நான் யோசிச்சேன். ஆனா எதுக்காக நான் பணம் தரணும். யாரோ எவனோ எங்கள வச்சி பணம் சம்பாதிக்க நான் உதவியா இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணேன்.

என்ன நடந்தாலும் சரி. அவன் மிரட்டலுக்கு நான் பயப்புடக்கூடாது.

அப்படியே அவன்கிட்ட அந்த வீடியோ இருந்து, அவன் அந்த வீடியோவை ஷேர் பண்ணாலும் மீனாவுக்கு எந்த வித அசிங்கமும் வந்துட கூடாதுன்னு தான் நான் உடனே அவ கழுத்துல தாலி கட்டி இங்க அழைச்சிட்டு வந்தேன்” என்று ஜீவா சொல்ல. தனக்காக யோசித்த ஜீவாவை ஒரு கணம் குற்ற உணர்ச்சியோடு பார்த்தாள் மீனா.

நான் மீனா கழுத்துல தாலி கட்டினாலும். மீனா மனசுல கதிரும். என் மனசுல முல்லையும் இருக்கும் போது எங்கனால கண்டிப்பா சேர்ந்து வாழ முடியாதுன்னு எனக்கு தெரியும்.

ஆனாலும் எங்கள வச்சி பணம் சம்பாதிக்க பார்த்தவனை என்னால அப்போதைக்கு இப்படி தான் off பண்ண முடிஞ்சது.

மீனா கழுத்துல நான் தாலி கட்டியதும் எனக்கு அந்த நம்பர்ல இருந்து எந்த போனும் வரல.

ஆனா நான் தான் என்னை நேசித்த முல்லைக்கு துரோகம் பண்ணிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில நிம்மதியா வாழ முடியாம. தண்ணி அடிக்க ஆரம்பிச்சேன்.

மீனாவும்கிட்டத்தட்ட என் நிலைமையில தான் இருந்தாள்.

நாங்க ரெண்டு பேரும் நிம்மதியா இல்ல.

எங்க ரெண்டு பேரால முல்லையும் கதிரும் கூட நிம்மதியா இல்லனு நினைச்சு தான். அன்னைக்கு நான் கதிரை பார்த்து லாட்ஜ்ல நடந்த விஷயத்தை சொல்லிடலாம்னு முடிவு பண்ணி அவன் ரூமுக்கு போனேன்.

நான் போன போது கதிர் அவன் ரூம்ல இல்ல, மாறாக அவன் டைரி மட்டும் அவனோட கட்டில்ல இருந்திச்சு” என்ற ஜீவா கதிரை பார்த்து சின்னதாக சிரித்தவன்.

அன்னைக்கு தான் கதிர் நெஞ்சுல பச்சை குத்தி இருக்கும் M என்ற எழுத்துக்கு சொந்தக்காரி முல்லைன்னு தெரிஞ்சிகிட்டேன்” என்றவனின் வார்த்தையை கேட்டு மீனா மேலும் அழுதாள்.

அந்த இடத்துல கதிரோட டைரில முல்லை மேல அவன் வைத்து இருந்த காதலை தெரிஞ்சிகிட்டேன்.

நானும் முல்லையும் நேசிக்கிறோமுன்னு தெரிஞ்ச பிறகு தான் கதிர் அவன் காதலை யார்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டான்னு நினைச்சேன். ஆனா முல்லையும் கதிரை தான் காதலிச்சா என்ற உண்மையை முருகன் மாமா சொன்ன போது எனக்கே தெரியாம நான் எவ்ளோ பெரிய தப்ப பண்ணி இருக்கேன்னு உணர்ந்தேன்” என்று ஜீவா சொல்ல.

“என்ன முருகன் மாமாவா” என்று கதிர் அதிrச்சியுடன் கேட்டான்.

ஆமா கதிர். நான் உன் ரூம்ல இருந்த டைரியை படிச்சு முடிக்கும் போது தான் முருகன் மாமா நம்ம வீட்டுக்கு வந்தாரு.

அவரும் பேச்சு வாக்குல என் பொண்ணு முல்லை ஆசைப்பட்ட மாதிரி கதிர்க்கூட அவளுக்கு கல்யாணம் நடந்தா நல்லா இருக்குமுன்னு பார்வதி அத்தக்கிட்ட அவர் பேசுகிட்டு இருந்ததை நான் கேட்டேன்.

அப்போ தான் நான் என் விருப்பத்தை முல்லைகிட்ட சொல்லியும் அவ பல வருஷம் கடந்து என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதுங்குண்டான காரணம் எனக்கு புரிஞ்சிது.

நான் பண்ண தப்ப நானே சரி பண்ணனும்னு நினைச்சேன். நீயும் முல்லையும் ஒருவரை ஒருவர் விரும்புறத உங்ககிட்ட சொல்லி உங்கள சேர்த்து வைக்கணும்னு நான் முடிவு பண்ணேன்.

ஆனா அதுக்குள்ள கோவில்ல ரோஜாவுக்கு சாமி வந்து உனக்கும் முல்லைக்கும் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதுன்னு ஊர் ஆளுங்க பேசிக்கிட்டாங்க.

அந்த செய்தியை கேட்டு நீங்க ரெண்டு பேர் நல்லா இருந்தா போதும்ன்னு நினைச்சு தான் நான் எனக்கும் மீனாக்கும் நடந்த அநியாயத்துக்கு பின்னாடி யார் இருக்காங்கனு கண்டுப்பிடிக்க சென்னைக்கு கிளம்பி போனேன்” என்றான் ஜீவா.

“அப்போ முல்லை அக்காவுக்கு கல்யாணம் நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு நீங்க கோச்சிக்கிட்டு இந்த ஊரை விட்டு போகலையா” என்று வேலன் கேட்க. இல்லை என்று தலை ஆட்டினான் ஜீவா.

நான் சென்னைக்கு போனதுமே என் Friendகிட்ட எல்லா விவரத்தையும் சொல்லி அவனை விசாரிக்க சொன்னேன். அவனும் அவனோட ஆளுங்கள வச்சி இந்த கேவலமான செயலுக்கு பின்னாடி ஸ்ரீனிவாசனோட குடும்பம் தான் இருக்குதுனு உண்மையை கண்டு பிடிச்சி சொன்னான். என்று ஜீவா சொன்னதும் கஸ்தூரி தலையை குனிந்து கொண்டார்.

ஆனா எதுக்காக அவன் இதெல்லாம் பண்ணான்னு தெரிஞ்ச போது தான் எனக்கு அவன் மேல கொலை வெறியே அதிகமாச்சு.

என்ற ஜீவா கோவமாக தன் கையை மடக்கி மேசை மேல் தட்டியதும் கஸ்தூரியின் முகத்தில் வியர்வை வடிந்தது.

“வேற எதுக்கு. உங்க தம்பி அவன் தம்பியை அடிச்சதுக்கு பழி வாங்க தான் இதெல்லாம் பண்ணி இருப்பான்” என்று வேலன் சொல்ல.

“ஆமா. கதிர் ஸ்ரீனிவாசனை அடிச்சததால. நம்ம ரோஜாவை ஸ்ரீனிவாசனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அந்த சுந்தரேசன் கஸ்தூரி அத்தைகிட்ட உதவி கேட்டு இருக்கான்.

அதுக்கு இவங்களும். நீ கேட்ட உதவியை நான் பண்ணுறேன். ஆனா அதுக்கு பதிலா என் பொண்ணுக்கும் ஜீவாவுக்கும் நீ தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கேசவன் கூட சேர்ந்துகிட்டு அந்த சுந்தர்கிட்ட போய் கூட்டு சேர்ந்து இருக்காங்க” என்று ஜீவா சொல்ல.

மீனா தன் அம்மாவை வெறுப்பாக பார்த்தாள்.

“அந்த சுந்தரும் பிளான் பண்ணி மீனாவை கடத்தி, மீனாவை லாட்ஜ்ல மயக்கம் அடைய வச்சி. எனக்கு போன் பண்ணி என்னையும் அங்க வர வச்சி,

எங்க ரெண்டு பேருக்கும் inject பண்ணி எங்க வாழ்க்கையையே அழிச்சிட்டான்” என்று ஜீவா சொன்னதும்.

“ஐயோ அந்த பாவி இவ்ளோ கீழ் தரமா

நடந்துகிட்டான்னு எனக்கு தெரியாது ஜீவா” என்று கண்கள் கலங்கினாள் கஸ்தூரி.

ஜீவா நடந்ததை சொல்ல சொல்ல கதிருக்கு ஆத்திரம் எழுந்த நிலையில்.“இனி அவனை நான் சும்மாவே விட மாட்டேன்”என்றவன் வாசலை நோக்கி விரைந்து சென்றான்.

“டேய் கதிர் நில்லுடா” என்று தன் இளைய மகனின் கோவத்தை கட்டுப்படுத்தும் விதமாக பாண்டியன் கத்தியதும்,

“இல்ல ப்பா. அவனை இனி நான் சும்மா விடவே மாட்டேன்” என்றான் கதிர்.

“வாத்தி. போதும் நிறுத்துங்க, இனி அவனை நீங்க என்ன பண்ணாலும் ஜீவா அண்ணன் மீனா அண்ணி வாழ்க்கையில நடந்த அசம்பாவிதம் மாறபோறது இல்ல” என்று ரோஜா கதிரை அடக்கினாள்.

“பார்த்தியா கஸ்தூரி. நீ பண்ண பாவம் உன் பொண்ணோட வாழ்க்கையை மட்டும் இல்லாம என் புள்ளையோட வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சிடுது” என்ற பாண்டியனின் வார்த்தையை கேட்டு கஸ்தூரி மேலும் கண்கள் கலங்கினாள்.

“ஆமா. அப்போ உங்க நண்பனை வச்சி அந்த வீடியோ ஆதாரத்தை எல்லாம் நீங்க அழிச்சிட்டீங்களா இல்லையா” என்று வேலன் கேட்டான்.

“எல்லாம் சரிபண்ணிட்டோம். ஆனா இதுக்கெல்லாம் காரணமானவனை சும்மா விடக்கூடாதுன்னு தான் நான் சுந்தரேசனை தேடி அவன் வீட்டுக்கு போனேன். அப்போ தான் அவன் ஆளுங்க என்னை அடிச்சு அவங்க வீட்டுல அடச்சி வச்சிட்டாங்க. நான் அங்க இருந்து தப்பிச்சு தான் ஒரு முறை முல்லைக்கு போன் பண்ணேன். நான் போன்ல உண்மையை சொல்றதுக்கு முன்னாடி மறுபடியும் அவங்ககிட்ட மாட்டிகிட்டேன்” என்று ஜீவா சொல்ல. இதற்கெல்லாம் காரணமாக இருந்த கஸ்தூரியின் மீது தான் அனைவரின் கோவமும் திரும்பியது.

“சுந்தரேசன் தான் இதுக்கெல்லாம் காரணமுன்னு தெரிஞ்சதுமே நீங்க மாமா சார்கிட்ட இந்த விஷயத்தை சொல்லிருந்தா, இன்னைக்கு இவ்ளோ பெரிய குழப்பம் வந்து இருக்காது” என்று முல்லை சொல்ல,

“ஆமா ஆமா அப்படி சொல்லிருந்தா இந்நேரம் உன் புருஷன் உள்ள தான் இருந்து இருப்பாரு” என்றான் வேலன்.

“ஆமா முல்லை. கதிருக்கு தெரிஞ்சா இவன் அந்த ஸ்ரீனிவாசன் குடும்பத்தையே கொன்னு புதைச்சி இருப்பான். அதனால தான் நானே இந்த விஷயத்தை முடிச்சிடலாமுன்னு நினைச்சேன்” என்று ஜீவா சொல்ல,

“சரி சரி இனி முடிஞ்ச கதையை யாரும் பேசாதீங்க” என்றார் பார்வதி.

இங்கே செய்யாத தவறுக்கு மீனாவும் ஜீவாவும் அவர்கள் வாழ்க்கையையே இழந்து இருந்த நிலையில்.

“மீனா. இனி நீ அழாத. உனக்கு நடந்த விஷயம் எல்லாம் கெட்ட கனவா நினைத்து மறந்துடு மீனா” என்றாள் முல்லை.

“நான் பண்ண பாவம் தான் என் பொண்ணு வாழ்கை இன்னைக்கு நாசமா போக காரணம். ஜீவா. என் மேல இருக்குற கோவத்துல என் பொண்ணை தண்டிச்சிடாத” என்று கஸ்தூரி கதறி அழுததும். ஜீவா மீனாவை அழுத்தமாக பார்த்தான்.

“மாமா. மீனா பாவம் மாமா. அவ வாழ்க்கையில அவளை மீறி என்னென்னமோ நடந்துபோச்சு. இனி நம்ம தான் அவளுக்கு ஆறுதலா இருக்கனும். pls மாமா. மீனாவை இனி இங்கேயே இருக்க சொல்லுங்க” என்று முல்லை மீனாவுக்காக பாண்டியனிடம் பரிந்து பேசினாள்.

“நம்ம வீட்டு வாரிசை மீனா கருவுலேயே கொன்னுட்டா என்ற கோவம் எனக்கு இன்னும் இருக்கு முல்லை. ஆனா அதுக்காக மீனா ஜீவா கூட வாழ கூடாது என்ற தண்டனையை எல்லாம் நான் கொடுக்க மாட்டேன். இது அவங்க வாழ்கை, இனி அவங்க தான் அவங்க வாழ்க்கையை பற்றி பேசி முடிவெடுக்கணும்” என்ற பாண்டியன். அவர் அறைக்குள் சென்று இருந்தார்

கதிரும் முல்லையும் தான் ஒருவரை ஒருவர் காதலித்து இருக்கிறார்கள் என்று ஜீவாவுக்கு தெரிந்து இருந்தாலும், அந்த இடத்தில் கதிர் தன் அண்ணனிடம் இது வரை இயல்பாக பேசாமல் இருக்க,

தன் தம்பியின் தோளில் ஜீவா ஆறுதலாக கை போட்டான்.

“கதிர், யார் யாரை வேணாலும் காதலிக்கலாம். ஆனா அந்த காதல் கல்யாணத்துல முடியனும்னா அதுக்கு கண்டிப்பா கடவுளோட ஆசிர்வாதம் வேண்டும்.

அந்த ஆசிர்வாதம் உனக்கும் முல்லைக்கும் இருந்ததால தான், நீங்க ரெண்டு பேரும் இப்போ ஒரு குழந்தைக்கு தாய் தகப்பன் ஆக போறீங்க. நீங்க நல்லா இருக்கனும்” என்ற ஜீவா அவன் அறைக்குள் நுழைய போனவன் ஒரு கணம் மீனாவை பார்த்தான்.

மீனாவும் அந்த இடத்தில் என்ன செய்வது என்று புரியாமல் நின்று இருக்க.

ஜீவா அவள் கையை பிடித்து தன் அறைக்குள் அழைத்து சென்றான்.

இது வரை மீனாவின் எதிர்காலத்தை எண்ணி கஸ்தூரி கலங்கி போய் நின்றவளுக்கு அப்போது தான் உயிரே வந்து இருக்க.

“அக்கா. இன்னைக்கு உனக்கு செக் அப் போகணுமே, நீ கிளம்பலையா” என்று கேட்டான் வேலன்.

“ஆமாடா. நான் மறந்தே போயிட்டேன்.

இரு இரு நான் போய் கிளம்புறேன்” என்று முல்லை அவள் அறைக்கு செல்ல,

“என்ன டி உனக்கு இன்னைக்கு செக் அப் இருக்கா” என்று கேட்டான் கதிர்.

“ஆமா மாமா சார் இன்னைக்கு செக் அப் இருக்கு” என்ற முல்லை கையில் செல் போனுடன் வந்தவள்.

“என்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் அப்பா வீட்டுல இருக்கு. நான் போகும் போது எடுத்துட்டு போறேன்” என்றாள் முல்லை.

“அக்கா. உன்னோட ரிசல்ட் எல்லாம் நானே எடுத்துட்டு வந்துட்டேன். நீ வந்தா மட்டும் போதும்” என்று வேலன் வாசலில் இருந்து குரல் கொடுக்க.“என்னடி. என்னை விடவே உன் தம்பி நம்ம புள்ள மேல அக்கறையா இருக்கான்” என்று கேட்டான் கதிர்.

“இருக்காத பின்ன. அவன் தானே நம்ம பிள்ளைக்கு தாய் மாமன். அதான் குழந்தை மேல பாசமா இருக்கான்” என்று முல்லை சொல்ல.“பயபுள்ள அவ்ளோ நல்லவன் இல்லையே” என்றான் கதிர்.

“போதும் மாமா சார். எப்போ பாரு அவனை குறை சொல்லிகிட்டே இருக்காதிங்க” என்று முல்லை தன் தம்பிக்கு பரிந்து பேச.

அவளுடன் சேர்ந்து கதிரும் மருத்துவ மனைக்கு கிளம்பினான்.

முல்லையும் கதிரும் ஒன்றாக காரின் அருகே வந்ததும்.“அக்கா. இவரு எங்க வராரு” என்று கேட்டான் வேலன்.

“டேய். என் பொண்டாட்டி செக் அப்க்கு நான் வராமல் எப்படி டா” என்று கதிர் முறைத்ததும்.

“சரி சரி வாங்க” என்று அலுத்துகொண்டான் வேலன்.

வழியெல்லாம் கதிரும் முல்லையும். ஜீவா மீனா கதையை பேசிக்கொண்டு வர,

“இனி அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. ஆனாலும் நம்ம ரோஜாவை ஸ்ரீனிவாசனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுன்னு இந்த சுந்தரேசன் எவ்ளோ பெரிய வேலையை பார்த்து இருக்கான்” என்று முல்லை புலம்பினாள்.

“விடு அக்கா. இனி அந்த கதையை பேசாத. நீ மாசமா இருக்கும் போது நல்லதை மட்டுமே நினைக்கணும். அதனால கூடுமானம் வரை உன் மாமா சாரை பற்றிக்கூட நீ நினைக்காத” என்று வேலன் சொல்ல.

“டேய், கண்டிப்பா நீ என்கிட்ட அடி வாங்க போற பாரு” என்று கதிர் கடுப்பாக சொல்ல. அதே சமயம் வேலன் காரை மருத்துவமனை வாசலில் நிறுத்தினான்.

“சரி சரி. என்னை நீங்க அப்புறம் அடிக்கலாம். இப்போ எங்க அக்காவை நீங்க உள்ள அழைச்சிட்டு போங்க. நான் போய் சிஸ்டர் எங்கன்னு படுத்துட்டு வரேன்” என்றான் வேலன்.

“என்னடா சொல்ற. உனக்கு சிஸ்டர் இருக்காங்களா” என்று கதிர் புரியாமல் கேட்க, “ம். நான் உங்க சிஸ்டரை பார்க்க போறேன்” என்ற வேலன் நேரே மருத்துமனைக்குள் செல்ல.

“என்னடி இவன் லூசு மாதிரி பேசிட்டு போறான்” என்று கேட்டான் கதிர்.

“ஏங்க. அவன் அவனோட ஆளை பார்க்க போறான். நீங்க வாங்க நம்ம உள்ள போகலாம்” என்ற முல்லை தன் கணவனுடன் முதல் முறையாக தன் பிள்ளையின் வளர்ச்சியை பரிசோதிக்க சென்று இருந்தாள்.

சில நிமிடங்களில் மருத்துவர்.

“Mrs. முல்லை கதிர்வேலன்” என்று அழைக்க. தன் காதல் மனைவியை அழைத்துக்கொண்டு கதிர் மருதுவரின் அறைக்குள் சென்றான்.

“போன முறை ஸ்கேன் எடுத்து பார்க்கல, இப்போ பார்த்துடலாமா” என்று மருத்துவர் கேட்க.“குழந்தை நல்லா தெரியுமா டாக்டர்” என்று ஆர்வமாக கேட்டான் கதிர்.

“ம். நீங்களே வந்து பாருங்க” என்று மருத்துவர் கதிரையும் அழைக்க,

முல்லையை கை தாங்கலாக கட்டிலில் படுக்க வைத்து. சில கருவிகளை க்கொண்டு அவள் வயிற்றில் உள்ள கருவை மானிட்டர் மூலம் கதிருக்கும் முல்லைக்கும் மருத்துவர் சுட்டிகாட்டினார்.

“டாக்டர் டாக்டர். இதான் என் குழந்தையா. .“ என்ற கதிரின் விழிகள் ஆச்சிரியத்தில் விரிய, “குழந்தை இல்ல Mr.“என்ற மருத்துவரின் பதிலில் முல்லையும் கதிரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து இருக்க.

“குழந்தை இல்ல. இவங்க தான் உங்க குழந்தைகள்” என்ற மருத்துவரின் வார்த்தையில் முல்லையின் விழிகளில் ஆனந்த கண்ணீர் பெறுக. கதிரோ மேலும் குழம்பிப்போய் நின்று இருந்தான்.

–தொடரும்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!