Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 64

CHAPTER 64

முல்லை – 64

By Roja Roslin · October 29, 2026

0

“என்ன எல்லோரும் அப்படி பாக்குறீங்க.

இவன் உங்க ஜீவா தான்” என்றான் ஸ்ரீனிவாசன்.

ஜீவாவை பார்த்ததும் “அண்ணா.“ என்று பதறிய கதிர். காரில் மயங்கி இருப்பவனின் கன்னத்த்தை தட்டி அவனை எழுப்ப,

“சுந்தரசா. என் மாப்பிளையை என்ன பண்ண” என்று கஸ்தூரியும் அந்த இடத்தில் கோவமடைந்தாள்.

“அண்ணா. என்னை பாரு” என்ற கதிர், ஜீவாவை காரில் இருந்து தூக்க, அதே சமயம் நாகராஜன் தண்ணீரை எடுத்து வந்து ஜீவாவின் முகத்தில் தெளித்தான்.

“ஜீவா மாமா.“ என்று முல்லையும் அந்த காட்சியை பார்த்து பதறியவள்,

“ஏங்க மாமாவோட கையில இருக்குற கட்டை கழட்டி விடுங்க” என்றாள்.

கதிர் வேகமாக ஜீவானின் கை காலில் இருக்கும் கட்டை விடுவிக்க. மீண்டும் நாகராஜ் ஜீவாவின் முகத்தில் நீரை தெளித்தான்.

குளிர்ந்த நீர் தன் முகத்தில் வேகமாக பட்டதும் ஜீவா கண் திறந்து பார்த்தவனை, “அண்ணா. அண்ணா. இங்க பாரு.“ என்ற கதிரின் விழிகளில் கண்ணீர் பெருக.

“கதிரு.“ என்றான் ஜீவா மயக்கம் தெளிந்த நிலையில்.

“அண்ணா. உனக்கு ஒண்ணுமில்ல. நீ நல்லா இருக்க. எழுந்துடு” என்று கையை பிடித்து கதிர் மேலே எழுப்பிவிட்டான்.

சோர்வாக இருந்த ஜீவாவின் முன்னே முல்லை கழுத்தில் தாலி வயிற்றில் கதிரின் பிள்ளை என்று தன் தம்பியின் மனைவியாக அவன் முன்னே நிற்க,

ஜீவாவால் முன்பு போல முல்லையை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

“அண்ணா. என்னாச்சு உனக்கு.? நீ எப்படி இவங்க காருல” என்று கதிர் கேட்டதும். ஜீவானின் அருகே திமிராக நின்று இருந்த சுந்தரேசனின் கழுத்தை எட்டி பிடித்து இருந்தான் ஜீவா.

யாரும் எதிர்பாராத நேரம் ஜீவா இத்தகை செயலை செய்து இருக்க.

“டேய் டேய் என் அண்ணனை விடு டா” என்று ஸ்ரீனிவாசன் கத்தினான்.

“டேய். உன்னை கொல்லாம விட மாட்டேன், மனுஷனா நீ. பாவி பாவி. உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்” என்று மேலும் ஜீவா கோபத்துடன் சுந்தரேசனின் கழுத்தை நேரித்தான்.

“அண்ணா. என்ன பண்ற. விடு அவனை” என்று கதிர் ஜீவாவை தடுக்க.

சுந்தரேசனோ ஜீவாவை பார்த்து ஏளனமாக சிரித்தான்.

ஜீவாவின் கோவத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் கதிரும் முல்லையும் குழம்பி இருக்க,

“அட விடு ஜீவா. இப்போ ஏன் என்கிட்ட கோவப்படுற.“ என்று சாதாரணமாக அவன் கையை தட்டிவிட்டான் சுந்தரேசன்.

“அண்ணா. இங்க என்ன நடக்குது. சரி நீ இத்தனை நாளா எங்க போன, இப்போ எப்படி இவங்க கூட இருக்க” என்று கதிர் கேட்க.

“மாமா. என்னாச்சு உங்களுக்கு” என்று முழு அக்கறையுடன் விசாரித்தாள் முல்லை.

“ஜீவா அண்ணா. உங்களுக்கு என்னாச்சு” என்று நாகராஜன் கேட்க. பொறுமை இழந்த வேலனோ.“அட கேக்குறாங்க தானே. சொல்லுங்க உங்களுக்கு என்னதான் ஆச்சு” என்று கத்தினான்.

ஜீவா தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் பார்த்தவன், “டேய் கதிர், எனக்கும் மீனாவுக்கும் கல்யாணம் நடக்க காரணமே இவன் தான்” என்றான் உடைந்த குரலில்.

தன் அண்ணனின் நிலையை பார்த்து கதிர் வருத்தம் அடைந்தவன், “அண்ணா. நான் இப்போ தான் மீனாவை பார்த்து உங்க கல்யாணம் எந்த சூழ்நிலையில நடந்துதுனு கேட்டு தெரிஞ்சிகிட்டேன். ஆனா பாவம் மீனாவுக்கும் அங்க என்னாச்சுன்னு எதுமே தெரியல” என்றான் கதிர்.

“அட. இப்போ அதெல்லாம் தெரிஞ்சி மட்டும் என்ன ஆகப்போகுது. அதான் நீங்க எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல சாக போறிங்களே” என்று கேசவன் சொல்ல.

“டேய் கேசரி. நீ என்னடா அப்போதுல இருந்தே வேகாத ஆப்பம் மாதிரியே பேசிகிட்டு இருக்க” என்றான் வேலன்.

“டேய். யார பார்த்து டா ஆப்பம்ன்னு சொன்ன. இரு இரு. முதல்ல உன்னை போட்டு தள்ளுறேன்” என்ற கேசவன் வேலனை அடிக்க கை ஓங்கிக்கொண்டு வந்தான்.

கேசவன் வரும் வேகத்தை பார்த்து வேலன் அவனை அடிக்கும் முன்னே. கதிர் கேசவனின் மூக்கை பார்த்து ஓங்கி ஒரு குத்து வைக்க. கேசவனின் முகம் ரத்த கலவையாக மாறிப்போனது.

“ம், உனக்கு இது தேவையா” என்று வேலன் கேசவனை முறைக்க.“அப்படியே அந்த சுண்டு மூஞ்சில கூட ஒரு குத்து விடுங்க” என்றான் வேலன்.

“ஹாங்க். இனி இந்த கதிரால என்னை எதுவும் பண்ண முடியாது. இதோ இப்போவே உங்க கதையை நான் முடிக்கிறேன் பாரு” என்ற சுந்தரேசன் யாரும் எதிர்பாராத தருணம் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்த துப்பாக்கியை முல்லையின் நெற்றி பொட்டில் வைத்ததும் கதிரின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போனது.

=============================

“டேய் டேய் முல்லையை ஒன்னும் பண்ணாத” என்று ஜீவா அலற.

“டேய். அவளுக்கு மட்டும் எதாவது ஆச்சு. மவனே அதோட உன்னை நான் உயிரோட புதைச்சுடுவேன்” என்றான் கதிர்.

இங்கே நடப்பதை பார்த்து இதுவரை அமைதியாக இருந்த தனம் சட்டென்று கை தட்டி சத்தமாக சிரித்தவள், “ஹாங். பார்த்தியா சுந்தர். இந்த முல்லைக்காக அண்ணன் தம்பி ரெண்டு பேரும் எப்படி பதறுறாங்க” என்றாள்.

“ம். பதறட்டும். நல்லா பதறட்டும். இவளும் அந்த ரோஜாவும் சேர்ந்து தானே அன்னைக்கு என்னை அந்த அடி அடிச்சாங்க. இப்போ பாரு. இவளோட சேர்த்து இவ வயதுல வளறுற குழந்தையும் என் கையால சாக போகுது “என்றான் சுந்தரேசன்.

“டேய் டேய் வாயும் வயிறுமா இருக்குற பொண்ணு நெத்தில துப்பாக்கியை வைக்கிறியே, நீ எல்லாம் மனுஷனா” என்று நாகராஜன் சுந்தரேசனை நெருங்க,

“டேய். கிட்ட வந்த இவளோட சேர்த்து உன்னையும் போட்டு தள்ளிடுவேன்” என்றான் சுந்தரேசன்.

அறிவு என்பது கடுகளவு கூட இல்லாத ஒருவனிடம் இருந்து முல்லையை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று எண்ணிய கதிருக்கு, அந்த இடத்தில் தன்னுடைய வீர சாகசத்தை காட்டினால் எங்கே அதுவும் முல்லைக்கு பாதகமாக போகிறது என்ற பயமும் இருக்கதான் செய்தது.

“டேய், இப்போ உனக்கு என்ன தான் வேண்டும்” என்ற ஜீவாவும் முல்லையின் நிலையை பார்த்து பயந்து இருக்க,

“ம். வேற என்ன. என் அண்ணனுக்கு இந்த கதிரோட உயிர் தான் வேணும்” என்ற ஸ்ரீனிவாசனின் கண்கள் முல்லையின் மேடிட்ட வயிரை சுட்டிகாட்ட,

அதே சமயம்.“ஆ.“ என்று அலறினான் ஸ்ரீனிவாசன்.

தன் தம்பியின் அலறல் சத்தத்தை கேட்டு சுந்தரேசன் திரும்பும் நொடியில் சட்டென்று கதிர் முல்லையை தன் வசம் அணைத்துக்கொள்ள.““ஐயோ பாம்பு” என்று கத்தினாள் தனம்.

ஸ்ரீனிவாசன் வலியால் துடித்தவன்.“அண்ணா.“ப. பா. பாம்பு கொத்திடுது” என்று கத்தியவனின் கண்களில் கண்ணீர் அவனை அறியாமல் பொங்கி வழிய.“ஐயோ தம்பி.“ என்று பதறினான் சுந்தர்.

“ஏன்டா. இதெல்லாம் உங்களுக்கு தேவையா. வீனா இவங்கள பழி வாங்குறேன் குழி மூடுறேனு இப்படி வந்து பாம்பு கடியை இலவசமா வாங்கிகிட்டு போறிங்களா. நீங்க எப்ப தான் டா திருந்த போறீங்க” என்று வேலன் ஒரு பக்கம் ஸ்ரீனிவாசனை கடிந்துகொண்டான்.

“ஐயோ தம்பி. டேய் என்னை பாரு டா” என்று சுந்தரேசன் தன் தம்பிக்காக அலறியதும்.

“மாமா சார். உடனே அவனுக்கு முதல் உதவி பண்ணுங்க” என்றாள் முல்லை.

“அதெல்லாம் வேண்டாம்ம். என் பொண்ணு வாழ்கை நல்லா இருக்க நான் இவன்கூட சேர்ந்து கதிருக்கு எவ்வளவோ கெடுதல் செய்து இருக்கேன், ஆனா இவன் என்கூட நல்லா பழகிட்டு. இப்போ என்னோட மாப்பிளையையே கடத்தி வச்சி என்கிட்ட விளையாட்டு காட்டி இருக்கான்” என்றாள் கஸ்தூரி.

“கெட்டவுங்க சகவாசம் என்னைக்குமே நமக்கு கேடை தான் விளைவிக்கும். அப்படினு பார்த்தா அந்த பாம்பு உங்கள தான் முதல்ல போட்டு இருக்கனும்” என்று வேலன் சொல்ல.

“டேய் சும்மா இரு டா வேலா” என்று தன் தம்பியை கண்டித்தாள் முல்லை.

“டேய் தம்பி என்னை பாரு டா” என்று சுந்தரேசன் அந்த இடத்தில் தன் தம்பிக்காக துடித்ததும். கதிருக்கு மனசு கேட்காமல் அவனுக்கு முதல் உதவி கொடுத்தவன்.

“டேய். சீக்கிரமா ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போ, “என்றான் கதிர்.

“ஆமா ஆமா சீக்கிரமா அழைச்சிட்டு போ. நாங்க இங்கேயே தான் இருப்போம். அதனால பழி வாங்க நீ பொறுமையா கூட வரலாம். Because for us, fighting is Entertainment” என்றான் வேலன்.

தன் தம்பியின் உயிருக்கு முன்னால் வேறு எதுவும் முக்கியமில்லை என்று எண்ணிய சுந்தர். தன் தம்பியை காரில் அழைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தோப்பில் இருந்து கிளம்பி இருந்தான்.

===========================

எப்படியாவது சுந்தரேசனுடன் சேர்ந்து கதிர் முல்லையை பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய கேசவனும் தனமும் அந்த இடத்தில் காட்சி பொருளை போல நின்று இருந்தவர்களை கதிர் ஏகத்துக்கும் முறைத்து இருந்தான்.

“தூ. நீயெல்லாம் ஒரு பொம்பளையா” என்று கதிர் தனத்தை காரி துப்பியதும். கேசவன் திருத்திருவென முழித்து இருந்தான்.

“ஏன் டா கேசவா. எனக்கும் முல்லைக்கும் கல்யாணம் முடிந்து. இப்போ என்னோட பிள்ளையை முல்லை சுமத்துகிட்டு இருக்காளே. இது தெரிஞ்சும் உன்னால எப்படி டா இன்னும் முல்லையை தப்பான கண்ணோட்டத்துல பார்க்க முடியுது” என்று கேட்டான் கதிர்.

“அது வேற ஒண்ணுமில்ல. காலக் காலத்துல நடக்க வேண்டிய விஷயம் எல்லாம் நல்லதா நடக்காததால தான் இவன் அடுத்தவன் பொஞ்சாதி மேல் ஆசை படுறான் “என்றான் வேலன்.

“ஏன் தனம். நீ நல்லாத்தானே இருந்த, திடிர்னு உனக்கு என்னாச்சு” என்று கதிர் கேட்டதும், “என்னோட இந்த மாற்றதுக்கு காரணமே உன் பொண்டாட்டி முல்லை தான்” என்ற தனத்தின் கண்களில் கண்ணீர் துளிகள் குதித்தது.

அதுவரை தனத்தை கோவமாக முறைத்து இருந்த முல்லை, “ நான் என்ன பண்ணேன்” என்றாள் புரியாத எண்ணத்தில்.

“நீ தான் காரணம். எனக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்காம போனதுக்கு காரணம் நீ தான். எப்போ கதிர் வாழ்க்கையில நீ வந்தியோ. அப்போவே என்னோட இயல்பு நிலையை நான் தொலைச்சிட்டேன்” என்ற தனம். மேற்கொண்டு கண்கள் கலங்க. முல்லைக்கோ தனத்தை பார்த்து கோவம் எழாமல் மாறாக அவள் மீது பரிதாபம் ஏற்பட்டது.

“எனக்கு சாமி வர காரணத்தை வைத்து கல்யாணம் நடக்காம தள்ளி போயிக்கிட்டே இருந்துச்சு. ஆனா கதிரை எனக்கு பேசி முடிக்கும் போது இந்த கல்யாணம் கண்டிப்பா முடியுமுன்னு நான் எவ்ளோ சந்தோசமா இருந்தேன் தெரியுமா” என்ற தனத்தின் கரங்களை ஆறுதலாக கை பற்றினாள் முல்லை.

அது வரை தனம் கோவமாக இருந்தவளின் கண்கள் சட்டென்று கலங்கியும் இருந்தது.

“எனக்கு உங்க ஆதங்கம் புரியுது. ஆனா இதுல என்னோட தப்பு என்ன இருக்கு” என்று கேட்டாள் முல்லை.

அங்கே சில நொடிகள் அமைதி நிலவ. முல்லையின் பார்வை கேசவன் பக்கம் திரும்பியது.

“நீங்க எனக்கு முறைக்கு தாய்மாமன் தானே. அப்போ என் அம்மாவுக்கு சமம் நீங்க. ஆனா நீங்க என்னடானா. தாயாக போற என் மேல இப்படி கேவலமான எண்ணத்தை வளர்த்து வச்சிருக்கீங்களே. இதெல்லாம் நல்லவா இருக்கா” என்று கேட்டாள் முல்லை.

“இங்க பாரு. எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்தே நான் உன்னை தான் நேசிக்கிறேன்” என்று கேசவன் சொல்ல, “ஐயோ கேசவா. உன் காதலி கதிரோட பொஞ்சாதியா ஆகலாம். ஆனா கதிர் பொஞ்சாதி உனக்கு காதலியா வர முடியாதே” என்றான் வேலன்.

“இங்க பாருங்க மாமா. என்னைக்குமே உங்க மேல எனக்கு அப்படியொரு அபிப்ராயம் வந்ததே இல்லை. ஒழுங்கா நீங்க உங்களுக்கு ஏத்த பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கொங்க” என்று முல்லை சொல்ல.“ஏன் கேசவா. பேசாம நீ தனத்தை கல்யாணம் பண்ணிக்கோ, அவங்க தான் நல்லா கேசரி கிண்டுவாங்க” என்றான் வேலன்.

அவன் நகைசுவையாக சொன்னாலும், அந்த இடத்தில் கேசவனும் தனமும் ஒருவரை ஒருவர் பார்த்து இருக்க.

“சின்ன பையனா இருந்தாலும் வேலன் சொல்லுறதும் நல்ல ஐடியா தான்” என்றான் நாகராஜன்.

இதுவரை பழி வாங்கும் எண்ணத்தோடு வளம் வந்த தனமும் கேசவனும் அந்த இடத்தில் மௌனமாக இருக்க, அவர்களுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துக்கொண்டு இருந்தது.

“அடுத்தவுங்கள பழி வாங்குறேன், அவங்களுக்கு பாகோடா வாங்குறேன்னு இனி உங்க வாழ்க்கையை கெடுத்துக்காம போய் புத்திக்கொண்டு பிழைச்சுக்கோங்க” என்ற கதிரின் வார்த்தையை கேட்டு தனம் எதிர்த்து பேசாமல் அங்கிருந்து சென்றவளை பின் தொடர்ந்து கேசவனும் சென்று இருந்தான்.

===========================

பல மாதங்கள் கடந்து ஜீவாவை பார்த்த கதிருக்கு, எங்கே அவன் தன்னை தவறாக எண்ணி விடுவானோ என்ற அச்சம் இருக்கதான் செய்தது.

மீனா ஜீவாவின் கல்யாணம் நடக்க மூலகாரணமே கஸ்தூரி தான் என்று அங்குள்ள அனைவருக்கும் தெரிந்து இருந்தபோதிலும். எப்படி அந்த திருமணம் நடந்தது என்ற உண்மை கஸ்தூரிக்கே தெரியாத ரகசியம் தான்.

ஜீவாவின் கோவமான பார்வை கஸ்தூரியை சுட்டெரிக்க.

“மாமா. எப்படி இருக்கீங்க?” என்று முல்லை அவளாக முன் வந்து ஜீவாவை நலம் விசாரித்தாள்.

முல்லையை அழுத்தமாக பார்த்த ஜீவா. கதிரை உற்று பார்க்க.

“அண்ணா.“ என்று அவன் அழைத்ததும்.“வீட்டுக்கு போகலாமா” என்றான் ஜீவா.

“ஆமா ஆமா. வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று நாகராஜன் அனைவரையும் அழைக்க.

“அக்கா. நீயும் உன் மாமா சாரை அழைச்சிட்டு வீட்டுக்கு கிளம்பு. நாளைக்கு காலையில மீனாவை அங்க வர வைத்து இந்த கதைக்கு ஒரு முற்று புள்ளி வையுங்க” என்றான் வேலன்.

“ஜீவா அண்ணா. நீங்க வாங்க நம்ம காருல போகலாம். நண்பா நீ பாப்பாவை அழைச்சிட்டு வா” என்று நாகராஜன் சொல்ல.

“கஸ்தூரி, வேலன், ஜீவா என்று அனைவரும் அங்கிருந்து நேரே பாண்டியனின் இல்லத்தை நோக்கி பயணித்தார்கள்.

வழியேல்லலாம் ஜீவா அமைதியாகவே வந்தவன், சட்டென்று

“அத்த. நீங்க தேவையில்லாத வேலை ரொம்ப பண்ணிட்டீங்க. ஒழுங்கா உங்க பொண்ணு மரியாதையோடு வாழணும்னு உங்களுக்கு எண்ணம் இருந்தா நாளைக்கு மீனாவை வீட்டுக்கு கிளம்பி வர சொல்லுங்க” என்றான்.

மீனா ஜீவாவுடன் தான் வாழ வேண்டும் என்று எண்ணி கஸ்தூரி போட்ட திட்டம் எல்லாம் மீனாவுக்கே எதிராய் திரும்பி இருக்க. இனி தன்னுடைய கெட்ட எண்ணத்தை வைத்து எதுவும் பண்ண முடியாது என்று உணர்ந்து இருந்தார் கஸ்தூரி.

நாகராஜ் தன் காரை பாண்டியனின் வீட்டில் நிறுத்தியதும் ஜீவா வேகமாக அவன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு இருக்க,

“நாளைக்கு எல்லோரையும் இங்க கிளம்பி வர சொல்லுங்க” என்றான் வேலன்.

=======================

இவர்கள் இங்கே வந்த சில நிமிடங்கள் கடந்து முல்லையும் கதிரும் கூட பாண்டியனின் இல்லத்திற்கு வந்து இருக்க. ஜீவாவின் மூடி இருந்த அறையை தட்ட முயன்றான் கதிர்.

“ஏங்க ஏங்க வேண்டாம். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும். எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்” என்று முல்லை சொல்ல. கதிர் பெருமுச்சுடன் அவன் அறைக்கு சென்றவனை முல்லையும் பின் தொடர்ந்து இருந்தாள்.

நேரம் இரவு 11 மணியை கடந்து இருக்க, முல்லை மிக சோர்வாக கட்டிலில் அமர்ந்தவளின் அருகே பல யோசனைகளை சுமந்த வண்ணம் கதிரும் அமர்ந்து இருந்தான்.

அந்த அறையே சில நிமிடங்கள் அமைதி நிலவ.“நீ படுத்துக்கோ டி. நான் உனக்கு கால் பிடித்து விடுறேன்” என்றான் கதிர்.

“எனக்கு தூக்கம் வரல மாமா சார். எனக்கு கொஞ்சமா பசிக்குது” என்று முல்லை சொன்னதும், “என்ன பசிக்குதா. ஐயோ இப்போ சாப்பாட்டுக்கு நான் எங்க போவேன்” என்று பதறினான் கதிர்.

“ஐயோ மாமா சார். நான் பசிக்குதுன்னு தானே சொன்னேன். நான் என்னமோ உங்ககிட்ட பிரியாணி கேட்ட மாதிரி இப்படி பதறுறீங்க. எனக்கு எதாவது பழம் இருந்தா கூட போதும். இருங்க நான் போய் தோட்டத்துல எதாவது இருக்கான்னு பார்த்துட்டு வரேன்” என்றாள் முல்லை.

“ஏய் இரு இரு. நீ எங்கேயும் போக வேண்டாம். நீ இரு நான் போய் எடுத்துட்டு வரேன்” என்ற கதிர். அவன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் சப்போட்டா வாழை பழம் என்று சில கனிகளை பறித்துக்கொண்டு வந்தவன் அதை அழகாக தன்னவளுக்கு வெட்டியும் கொடுத்தான்.

“இப்போ எல்லாம் நேரம் கெட்ட நேரத்துல பசிக்குது மாமா சார்” என்ற முல்லை பழத்தை சாப்பிட்டுக்கொண்டு இருக்க.

“இப்போ ரெண்டு உயிரா இருக்க ல்ல, அதான் அடிக்கடி பசிக்குது” என்றவன் மற்றவையை மறந்து தன் மனையாளியை மட்டும் நினைக்க ஆரம்பித்து இருந்தான்.

கதிர் கொண்டு வந்த பழங்களை கொஞ்சமாக சாப்பிட்ட முல்லை, “போதும் தூங்கலாமா” என்று கேட்க.

“சாப்பிட்டதும் எல்லாம் படுக்க கூடாது. போய் நூறு முறை நட” என்றான்.

“என்ன. ரெண்டு வாய் பழத்துக்கு நூறு முறை நடக்கணுமா” என்று முல்லை கோவம் கொள்ள.“110.“ என்றான் கதிர்.

“இதெல்லாம் அநியாயம். என்னால முடியாது” என்று முல்லை அடம் பிடிக்க,

“120.“ என்றான் கதிர்.

“யோவ் மாமா சார். நூறே முடியாது சொல்லுறேன், நீங்க என்ன நூறு இரனூறுன்னு ஏத்திகிட்டே போறீங்க” என்று முல்லை கோவம் கொள்ள.“150.“ என்றான் கதிர்.

தன்னவனின் கண்டிப்பு தன் நன்மைக்காக தான் என்று அவள் அறிந்து இருந்தப் போதிலும், கதிரிடம் முல்லை வீண் விவாதம் செய்துக்கொண்டு இருக்க.

“200.“ என்றவனின் வாயை பார்த்து ஓங்கி ஒரு குத்து வைத்தாள் முல்லை.

அவள் அடியை சற்றும் எதிர்பார்க்காத கதிர் அப்படியே ஆடி போய் நின்றவன்,

“என்னடி புருஷனை அடிச்சிட்ட.?” என்று கேட்டதும் தான் முல்லைக்கு அவள் செய்த காரியம் உரைத்தது.

“ஐயோ. சாரி மாமா சார். நான் உங்க வாயை மூட தான் வந்தேன். ஆனா தாடிக்குள்ள உங்க வாய் மறைஞ்சு இருந்ததால சட்டுன்னு செல்லமா அடிச்சிட்டேன்” என்று அவள் சமாளிக்க, “என்ன செல்லமா அடிச்சியா.?” என்றான்.

“ஆ. ஆமா மாமா சார். செல்லமா தான் அடிச்சேன். உங்கள போய் நான் கோவமா அடிக்க முடியுமா” என்றவளின் திருட்டு விழியே அவளின் குட்டை வெளிப்படுத்தி இருக்க.“செல்லமானா எப்படி அடிக்கிறதுனு இப்போ உனக்கு நான் ஒரு டெமோ காட்டுறேன் பாரு” என்றவன் முல்லையை தன் வசம் சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்று அவளின் உள்மனம் அறிந்து இருக்க.

“மாமா சார். நான் விளையாட்டா தான் பண்ணேன்.“ என்று பெண்ணவள் சிணுங்க. முல்லையை முழு காதலுடன் ரசித்து பார்த்தான் கதிர்.

அவனின் ஒற்றை பார்வை ஆயிரம் கவிதைகளை அவளுக்குள் விதைக்க தொடங்கி இருக்க, அந்த இடத்தில் தொடுதல் இல்லாமலேயே இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கொண்ட காதலை உணர்ந்து இருந்தார்கள்.

பல இன்னல்களை தாண்டி இன்று முல்லையுடன் கதிரின் வாழ்கை அமைந்து இருப்பதை எண்ணி உள்ளுற கதிர் மகிழ்ந்து இருந்தவன் முல்லையின் இருப்பக்க கன்னத்தையும் அவன் கரங்களில் ஏந்தி அவள் நெற்றியில் இதழ் பதித்தவனின் ஒற்றை முத்தத்தில் அவன் மொத்த காதலையும் அவளை உணர வைத்து இருந்தான்.

அவன் தந்த முத்தத்திற்கு ஈடாக இவளும் அவன் இருப்பக்க கன்னத்தில் இதழ் பதித்தவள்.

“பட்டு குட்டி என் மாமா சார்” என்று அவன் உதட்டை பிடித்து செல்லம் கொஞ்சினாள்.

“ம். அடிச்சிட்டு இப்போ பட்டு சிட்டுனு ஐஸ் வைக்கறியா. இரு இரு. என் பொண்ணு பிறந்ததும் இருக்கு பாரு உனக்கு” என்றான் கதிர்.

“என்ன பொண்ணா.? ஹலோ மாமா சார். நமக்கு பையன் தான் பிறக்கும்” என்று முல்லை சொல்ல.“இல்ல இல்ல. நமக்கு பொண்ணு தான் பிறக்கும்” என்றான் கதிர்.

“இல்ல பையன் தான்” என்று மீண்டும் முல்லை அழுத்தமாக சொன்னதும்.

“சரி. அப்போ பையன் பொண்ணுன்னு ரெண்டு குழந்தை பெத்துக்கொடு” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தாள் அவள்.

“சரி சரி முறைக்காத டி. ஆணோ பெண்ணோ. எந்த பிள்ளையா இருந்தாலும் அது நம்ம குழந்தை” என்றவன் முல்லையின் கை பிடித்து அந்த அறைக்குள்ளேயே நடக்க வைத்தான்.

“இப்போ எல்லாம் மாசமா இருக்குற பொண்ணை எப்படி பார்த்துக்கணும்னு நிறைய டிப்ஸ் சொல்லுறாங்க. அதுல முதல் விஷயமே. சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கக்கூடாது” என்று கதிர் சொல்ல.

“அப்போ சாப்பிடாம தூங்கலாமா.?” என்று கேட்டாள் முல்லை.

“இந்த மொக்கை காமெடி எல்லாம் போகில போட்டு கொழுத்து. இப்போ நான் சொல்லுறத கேளு” என்று கதிர் அவள் கையை பிடித்துக்கொண்டு அவளை நடக்க வைத்தபடி பேசிக்கொண்டு இருக்க.

“கதிர்.“ என்ற ஜீவாவின் குரல் வாசலின் அருகே கேட்டதும் இருவரும் தன் நடையை நிறுத்த. கதிர் அறையின் கதவை திறந்ததும்.“சாப்பிடுறிங்களா மாமா. டின்னர் பண்ணி தரவா” என்று கேட்டாள் முல்லை.

அவளின் வார்த்தைகள் ஜீவாவின் காதில் விழுந்தாலும்.“கதிர். இன்னைக்கு முல்லைக்கு பிறந்தநாள் தானே. நான். நான் எப்போவோ முல்லைக்காக ஒரு பரிசு வாங்கி வச்சேன். அத இப்போ கொடுக்கட்டுமா.?” என்று ஜீவா கேட்டான்.

தன் அண்ணனின் கேள்வி கதிரின் இதயத்தில் வலியை ஏற்படுத்த.“அண்ணா. முல்லை இப்போ தான் எனக்கு பொண்டாட்டி. ஆனா எப்போவுமே அவ உனக்கு அத்த பொண்ணு தானே” என்ற கதிரின் தோளில் அன்பாய் தட்டி கொடுத்தான் ஜீவா.

அண்ணன் தம்பி இருவரின் புரிதலை பார்த்து முல்லையின் விழிகளும் ஈரமாக மாறி இருக்க. சுவற்றில் இருந்த கடிகாரம் சரியாக இரவு 11. 55ஐ தொட்டு இருக்க.

“ஹாப்பி பர்த்டே முல்லை.“ என்று தன் கையில் இருந்த அன்பளிப்பை முல்லையிடம் நீட்டினான் ஜீவா.

யாம் நேசித்த உள்ளம்

நம்மோடு வாழ்வது மட்டும்

காதலின் வெற்றி அல்ல…

நாம் நேசித்த உள்ளம்

எங்கு வாழ்ந்தாலும்

மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்

என்று எண்ணுவதும் காதலே.

அப்படிப்பட்ட காதலுக்கே

சொந்தக்காரன்

ஜீவானந்தம்.

–தொடரும்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!