இதே தருணம் மறுபக்கம்,
“என்னடா ஜீவா நீ. இப்படி அவசரப்பட்டு தப்பிக்க முயற்சி பண்ணி இப்போ அநியாயமா ஒரே அடியா சாக போறியே” என்ற ஒருவன், முகமூடி அணிந்துகொண்டு கையில் இருந்த கத்தியை ஜீவாவின் உடலில் இறக்கி இருக்க.
“ஐயோ. வேணா மாமாவை ஒன்னும் பண்ணாதீங்க, ஜீவா மாமா.“ என அலறியப்படி
கனவு கண்டு எழுந்து அமர்ந்தாள் மீனா.
அவள் குரலை கேட்டு கஸ்தூரி அறைக்குள் ஓடி வர, “என்னாச்சு மீனா.?” என்று விசாரித்துக்கொண்டே சரஸ்வதியும் உள்ளே வந்தார்.
“மாமா, ஜீவா மாமாவை. ஜீவா மாமாவை யாரோ கொலை பண்ற மாதிரி கனவுகண்டேன்” என மீனா சொன்னதும்,
“என்ன கொலையா” என்று அதிர்ச்சி அடைந்தார் கஸ்தூரி.
“ஆமா மா கொலை தான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு, இருங்க உடனே நான் இந்த விஷயத்தை கதிர் மாமாவுக்கு போன் பண்ணி சொல்றேன்” என்று மீனா சொல்ல, “ஏன் அவர்கிட்ட சொன்னா அவர் என்ன பண்ண போறாரு” என்று கோவமாக கேட்டாள் தனம்.
“அதானே. அவனுக்கு தெரிஞ்சா அவன் சந்தோசம் தான் படுவான். அப்போ தானே சொத்து முழுக்க அவன் பேருக்கு வரும் ” என்று கஸ்தூரி அலுத்துக்கொள்ள,
“என் தம்பி ஒன்னும் அப்படி நினைக்கிற ஆளில்லை” என்றார் சரஸ்வதி.
“இங்க பாரு. இன்னோரு முறை நீ அந்த மாங்காய் மடையனுக்கு சப்போர்ட் பண்ணினா உன்னை வீட்டை விட்டு வெளிய துரத்தி விட்டுடுவேன்” என்று தனம் தன் அம்மாவை கடிந்துகொண்டாள்.
“ஏங்க. உங்க பையனை வேணான்னு சொன்ன கதிரை உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிடிச்சிருக்கு” என்று கஸ்தூரி கேட்க, “அத நீங்க தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க” என்று கேட்டார் சரஸ்வதி.
“அம்மா. கஸ்தூரிக்கிட்ட ஏன் கோவப்படுற, நம்ம தம்பிக்கு நிச்சயம் பண்ண ரோஜாவை கட்டி தர மாட்டேன்னு அந்த கதிர் உனக்கு போன் பண்ணி சொல்லி இருக்கான். ஆனா நீ அவனுக்காக இன்னும் சப்போர்ட் பண்றியா” என்று கேட்டாள் தனம்.
“ஏய் வாயை மூடு, முதல்ல உன் தம்பியோட பழக்க வழக்கம் என்னனு நீ தெரிஞ்சிக்கோ, அப்புறமா நீ என் தம்பியை குறை சொல்லலாம்” என்றார் சரஸ்வதி.
“என்ன சொல்றிங்க.? கல்யாணம் நின்னுபோச்சா.?” என்று மீனா பதற்றம் அடைய, “ஆமா மீனா. கதிர் போன் பண்ணி இனிமே இந்த கல்யாணம் நடக்கவே நடக்காதுன்னு கண்டிப்பா சொல்லிட்டான்” என்றார் சரஸ்வதி.
“ஆமா ஆமா அவர் சொன்னா நாங்க கல்யாணத்த நிறுத்திடுவோமா. இல்ல இல்ல கண்டிப்பாக ரோஜாவுக்கும் என் தம்பிக்கும் கல்யாணம் நடந்தே தீரும்” என்றாள் தனம்.
“ஏண்டி மீனா. அந்த கதிர் இங்க வந்து உன்கூட பேசுனானா” என்று கஸ்தூரி கேட்க, “ம்” என்றாள் மீனா,
“என்ன டி பேசுனான் அவன். சொல்லு என்ன பேசுனான்” என்று கஸ்தூரி கோவமாக மீனாவை நெருங்கி செல்ல,
“ஜீவா மாமாவை பற்றி தான் பேசினோம்” என்றாள் மீனா.
“இப்போ என்ன அவனுக்கு புதுசா ஜீவா மேல அக்கறை. இல்ல இல்ல இனிமே அவனை நான் சும்மா விடமாட்டேன்” என்றார் கஸ்தூரி.
“அம்மா. போதும், சும்மா கத்திகிட்டு இருக்காத. நம்ம முதல்ல இங்க இருந்து கிளம்பலாம். நமக்குன்னு ஒரு வீடு இருக்கும் போது நம்ம ஏன் இங்க இருக்கனும்” என்று கேட்டாள் மீனா.
“நமக்கு வீடு இருந்தும் நம்ம இங்க இருக்கோணும்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என்று கஸ்தூரி சொல்ல, “என்ன பொல்லாத காரணம் என்று கேட்டாள் மீனா.
“இந்த காரணம் காரியத்தை தெரிஞ்சிகிட்டு நீ என்ன பண்ண போற. ஒழுங்கா நீ போய் ரெஸ்ட் எடு” என்ற கஸ்தூரி தனத்தை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருக்க, அதே சமயம் தனத்தின் தம்பி ரவி உள்ளே நுழைந்தான்.
“டேய் ரவி வா வா. நம்ம உடனே போய் அந்த கதிர் குடும்பத்தை நாக்கை பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வரலாம்” என்று தனம் ரவியை அழைக்க, “மறுபடியும் என்னதான் அக்கா பிரச்சனை” என்று கடுப்புடன் கேட்டான் ரவி.
“இன்னும் என்னடா நடக்கணும். அதான் உனக்கும் ரோஜாவுக்கும் நடக்க இருந்த கல்யாணத்தை அந்த கதிர் நிறுத்திட்டானே” என்று தனம் சொல்ல, “என்ன கல்யாணம் நின்னுடுத்தா” என மகிழ்ச்சியாக கேட்டான் ரவி.
“நீ என்னடா நான் கல்யாணம் நின்ன செய்தியை சொன்னால் நீ கோவப்படுவன்னு தானே நினைச்சேன். ஆனா நீ என்னடா சிரிச்ச முகமா பேசுற” என்று புரியாமல் கேட்டாள் தனம்.
“அக்கா. நான் எப்பவோ சொல்லிட்டேன் எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்லைனு. அதனால இந்த கல்யாணம் நின்னது எனக்கு சந்தோஷம் தான்” என்ற ரவி தன் கைபேசியுடன் அவன் அறைக்குள் புகுந்துகொண்டான்.
தன் தம்பியின் செயலில் தனம் கோவம் கொள்ள.“இதான் உன் தம்பி லட்சணம்” என்ற சரிஸ்வதியும் அங்கிருந்து சமயலரையை நோக்கி நகர்ந்தார்,
“என்ன தனம் இது. உன் வீட்டுல உன் பேச்சை யாருமே கேக்க மாட்டாங்களா” என்று கஸ்தூரி கேட்க, அவரை கொலை காண்டில் முறைத்தாள் தனம்.
“என்னை ஏன் முறைக்கிற”என கஸ்தூரி கேட்க.“இனி இவங்க யாரையும் நான் நம்புறதா இல்ல. நீங்க வாங்க. நம்ம நேரா போய் சுந்தரேசனை பார்க்கலாம்” என்ற தனம் கஸ்திரியை அழைத்துக்கொண்டு காவல் நிலையதுக்கு சென்றாள்.
“போங்கடி போங்க. அவனே ஒரு அரைகுறை ஆசாமி. எந்த விஷயத்தையும் முழுசா முடிக்காத முனுசாமி. அவன்கிட்ட போய் ஐடியா கேளு. நல்லா பண்ணுவான்” என்று சமையலறையில் இருந்து சரஸ்வதி குரல் கொடுக்க.
“என்னங்க சொல்றிங்க. இவங்க அந்த ஆளை போய் பார்த்தா பிரச்சனை இன்னும் அதிகமா தானே ஆகும்” என்றாள் மீனா.
“ஹாங்க். என் தம்பி பார்க்காத பிரச்சனையா, அதெல்லாம் அவன் அசால்ட்டாடா டீல் பண்ணுவான். இங்க பாரு மீனா. நான் உன் நல்லதுக்கு சொல்லுறேன். நீயும் ஜீவாகூட சேர்ந்து வாழு. இனி கதிர் முல்லையை நீ தொல்லை பண்ணாத” என்று சரஸ்வதி மீனாவை எச்சரிக்க,
“ஏன். நான் தொல்லை பண்ணா எனக்கும் டீல தூக்க மாத்திரை கலந்து தருவிங்களா” என்று சிரித்தப்படியே கேட்டாள் மீனா.
“ஐயோ இல்ல மீனா, நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். நீ ஜீவா கூட தான் வாழனும். பாவம் முல்லை. வாயும் வயிறுமா இருக்கு. இனி அவங்களையும் சந்தோசமா வாழ விடு. அவளும் உன் தங்கச்சி தானே” என்று சரஸ்வதி சொல்ல.
“ம்.“ என்ற மீனா மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து இருந்தாள்.
===========================
மறுபக்கம்.
ஆதரவற்ற இல்லத்தில் முல்லையின் பிறந்தநாளை முன்னிட்டு அவள் கரங்களால் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்ட நிலையில்.
“சரி. வாங்க நேரத்தோடு வீட்டுக்கு போகலாம்” என்றார் பாண்டியன்.
“அப்பா. நானும் முல்லையும் இன்னைக்கு மாதோப்புல தங்கிட்டு நாளைக்கு காலையில வீட்டுக்கு வரோம்” என்று கதிர் சொல்ல.
“அப்போ வாங்க நம்ம எல்லாம் வீட்டுக்கு போகலாம்” என்றார் முருகன்.
“நாகா அண்ணா. நான் இவங்கள என் காருல வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன். நீங்க ரோஜா கூட வாங்க” என்று வேலன் சொல்ல.“டேய் டேய் என்னடா பண்ணுற” என்று பல்லை கடித்தான் நாகராஜ்.
“என்னத்தான் உனக்கு நான் தம்பியா இருந்தாலும். ரோஜாவுக்கு நானும் ஒரு முறையில மாமா தான்” என்று வேலன் சொல்ல.“ஓ. அதான் மாமா வேலை பார்க்குறியா” என்று கதிர் கேட்டதும்.
“ஆமா மாமா.“ என்றான் வேலன்.
“ஐயோ. நீங்க ரெண்டு பேரும் சத்த சும்மா இருங்க. ரோஜா. நீ நாகா அண்ணன் கூடவே போ. டேய் வேலா நீ இவங்கள ஒழுங்கா வீட்டுக்கு அழைச்சிட்டு போ” என்று முல்லை சொல்ல.
“அக்கா. அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ ஜாக்கிரதையா இரு” என்றான் வேலன்.
“டேய். என் பொண்டாட்டியை எனக்கு பார்த்துக்க தெரியும் டா” என்று கதிர் சொல்ல.“நான் சொன்னதே என் அக்காவை உங்கிட்ட இருந்து ஜாக்கிரதையா இருங்கன்னு தான்” என்ற வேலன். பாண்டியன் முருகன் பார்வதி என்று மூவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
“மச்சான். நீயும் பார்த்து போ டா, அம்மா போனதும் எங்களுக்கு மெசேஜ் பண்ணுங்க” என்று தன் தங்கையை பார்த்து கதிர் சொல்ல, “ஓ. அப்போ போன் பண்ணி உங்கள டிஸ்டர்ப் பண்ணாம உங்களுக்கு மெசேஜ் மட்டும் பண்ண சொல்றிங்களா” என்று கிண்டலாக கேட்டாள் ரோஜா.
“ஐயோ நான் அப்படி எல்லாம் சொல்லல” என்று கதிர் பதறியதும்.“நான் சும்மா தான் சொன்னேன் வாத்தி. சரி நாங்க கிளம்புறோம். நீங்க போய் வண்டியை எடுங்க” என ரோஜா நாகராஜை பார்த்து கட்டளையிட. அவனோ தயக்கத்துடனே தன் வண்டியை அங்கிருந்து விரட்டினான்.
“மேடம். எல்லோரும் போயிட்டாங்க. இப்போ நம்மளும் போகலாமா” என்று கதிர் கேட்க.“ம். போகலாம் மாமா சார், “ என்ற முல்லையின் முகமும் மனதும் மகிழ்ச்சியில் மலர்ந்து இருந்தது.
ரோஜாவை அழைத்து சென்ற நாகராஜ் வழியெல்லாம் அமைதியாகவே தன் வாகனத்தை விரட்ட.
“ஹலோ.“ என்றாள் ரோஜா.
“என்ன சின்னமா. எதாவது வேணுமா” என்று நாகராஜ் கேட்க.“என்ன. சின்னமாவா. யோவ்.“ என்றாள் அதட்டலுடன்.
“நீங்க எனக்கு சின்னமா தானே” என்று அவன் கேட்க, “ஓ. அப்போ உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லையா” என கேட்டாள் ரோஜா.
அவள் கேள்விக்கு அவன் பதில் மௌனமாக இருக்க, “உங்கள தான் கேக்கறேன்” என்றாள்.
“நான் எப்படி உங்கள கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க என்னோட நண்பனின் தங்கை” என்று அவன் சொல்ல.
“ம். ஆனா உங்களுக்கு நான் தங்கை இல்லையே” என்றாள்.
மீண்டும் அங்கே அமைதி நிலவ.
“சரி. நான் அப்பாகிட்ட உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனு சொல்லிடுறேன்” என்றவள் அவளின் கைபேசியை எடுக்க, “ ஐயோ இருங்க சின்னமா” என்று அலறினான் நாகராஜ்.
“இங்க பாருங்க. நீங்க இப்படியெல்லாம் சொன்னா அப்புறம் பெரிய ஐயா மனசு கஷ்ட்டப்படும்” என்றவன்.
“ஆமா. உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா” என்று கேட்டான்.
“என்ன கேள்வி இது. இஷ்டம் இருக்குறதால தானே நானே உங்ககிட்ட இந்த கல்யாணத்தை பற்றி பேசுறேன்” என்று அவள் சொல்ல.
“ஆனா உங்க அந்தஸ்துக்கும் என்னோட வருமானதுக்கும் ஏண்ணி வச்சாலும் எட்டாதே” என்றான்.
“ஏணி போட்டு எட்டி பறிக்க இது என்ன வாழை மரமா. இது வாழ்கை சார். உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்னா சொல்லுங்க. இல்லைனா மேற்கொண்டு இதைப்பற்றி பேச வேண்டாம்ம்” என்றாள் ரோஜா.
“இல்ல சின்னமா. நான் இப்போ தான் ஏதோ சின்னதா ஒரு தொழிலில் தொடங்கி இருக்கேன். இதுல வர வருமானத்தை வச்சி நீங்க எப்படி சந்தோசமா வாழ முடியும்” என்று நாகராஜ் கேட்க. தன்னை பற்றி யோசிக்கும் நாகராஜனின் இயல்பு ரோஜாவிற்கு பிடித்து இருந்தது.
“இங்க பாருங்க. நீங்க போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறிங்க தானே” என்று அவள் கேட்க, “ஆனாலும் நான் குடிசையில தானே தங்கிருக்கேன்” என்றான்.
“ம். சரி. அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் நம்மளும் ஒரு மாடி வீடு கட்டலாம்” என்று அவள் சொல்ல.
அதற்கும் அவன் அமைதியாகவே இருந்தான்.
“என்னாச்சு.“ என்று அவளாகவே மீண்டும் அவனிடம் பேச்சுகொடுக்க.“எனக்கு என் சம்பாதியத்துல வாழற பொஞ்சாதி தான் வேணும்” என்றான்.
“புரியல. உங்க சம்பாதியாம்னா என்ன” என்று அவள் கேட்க.
“நான் வராதச்சனை எல்லாம் வாங்க மாட்டேன்” என்றான்.
“இப்போ உங்களுக்கு யார் சார் வரதட்சணை எல்லாம் தர போறாங்க. நானும் உங்க சம்பாதியத்துல தான் மாடி வீடு கட்டலாமுன்னு சொன்னேன்” என்றாள் ரோஜா.
“இல்ல சின்னமா அது.“ என்று மேலும் இவன் பேச ஆரம்பிக்க.
“இங்க பாருங்க. நானும் படிச்சிருக்கேன். கல்யாணம் முடிஞ்சதும் நானும் வேலைக்கு போறேன். நீங்களும் பிஸ்னஸ் பண்ணுங்க. அதெல்லாம் நம்ம சிறப்பாவே வாழலாம்” என்று ரோஜா நம்பிக்கை கொடுக்க.
அவளை கேள்வியாக பார்த்தான் நாகராஜ்.
“என்ன அப்படி பாக்குறீங்க. நான் ஏன் இந்த கல்யாணத்துல இவ்ளோ ஆர்வமா இருக்கேன்னு தானே பாக்கறீங்க” என்று ரோஜா கேட்க.“ம்” என்று அவன் தலையசைத்ததும், “ஏன்னா உங்கள விட்டா எனக்கு வேற இளிச்சவாய் மாப்புள கிடைக்க மாட்டான்” என்று ரோஜா சொன்னதும், “அடிப்பாவி” என்றான் நாகராஜ்.
“என்ன பாவியா” என்று அவனை இவள் அடிக்க போக, “சின்னமா. நீங்க அப்படியே உங்க சின்ன அண்ணன் மாதிரி” என்றவன் ஒரு வழியாக இறுக்கத்தை தளர்த்தி ரோஜாவிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தான்.
==============================
இதே தருணம்.
மாதோப்பில் சூரியன் மறையும் நேரம். சுற்றிலும் மாமரங்கள் நிறைந்த அந்தத் தோப்பின் நடுவே ஒரு சிறிய ஓலைக் குடிசையின் வாசலில் போடப்பட்டுள்ள கயிற்றுக் கட்டிலில் கதிரும் முல்லையும் அமர்ந்திருக்கிறார்கள். மாமரத்து இலைகளின் சலசலப்பும், குயிலின் ஓசையும் மட்டும் அங்கே கேட்டுக்கொண்டு இருந்தது.
முல்லை கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து, கண்களை மூடி காற்றை சுவாசித்தவாறு “மாமா சார் இங்க பாருங்களேன். காத்து எவ்ளோ ஜில்லுனு இருக்குன்னு. ஊருக்குள்ள இப்படி ஒரு அமைதியையே பார்க்க முடியாதுல்ல?”என்றாள்
கதிர் முல்லையையே ரசித்தபடி, “ஆமா முல்லை. அதான் உனக்கு பிடிக்குமேன்னு இங்கயே தங்கிடலாமுன்னு சொன்னேன்” என்றவன்.“நீ சந்தோசமா இருக்கீயா டி” என கேட்டான்.
முல்லை வெட்கத்துடன் சிரித்தபடி”எனக்கு உங்க கூட இருக்குறது தான் சந்தோஷம். ஆனா, இப்படி தனியா, யாரும் தொந்தரவு இல்லாம, உங்க கூட இந்த கட்டிலுல உக்காந்து பேசுற சுகமும் தனி தான் மாமா சார். இந்த நிமிஷம் இப்படியே நின்னுட்டா எவ்ளோ நல்லா இருக்கும்ன்னு தோணுது?”என்றாள்.
“நிக்காது முல்லை. ஆனா நாம நினைச்சா இந்த நிமிஷத்தை இன்னும் அழகாக்கலாம். இந்த மாதோப்பு, இந்த குடிசை, நீ, நான். இதுக்கு மேல எனக்கு என்ன வேணும் சொல்லு?”என்றான் அவனும் காதலுடனே.
முல்லை கேலியாக.“ ஆஹான். சுடு மூஞ்சி காட்டாம, கண்டதை யோசிக்காம, முழுசா என் கூட பேசுறீங்களே. அதுவே எனக்கு பெரிய அதிசயம் தான்.“ என்றாள் முல்லை.
கதிர் சிரித்துக்கொண்டே “நிறைய யோசனை இருக்கு தான். ஆனா அதெல்லாம் தாண்டி எனக்கு முக்கியம் நீதானே? இந்த மரத்துக்கு எப்படி வேர் முக்கியமோ, அப்படி தான் எனக்கு நீ. என் காதல் உனக்கு வெளிய தெரியாம இருக்கலாம், ஆனா நீ இல்லாம நான் இல்ல. “என்றான் அவளை இருக அணைத்தப்படி.
“ஏங்க. சும்மா இருங்க. ” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்க “திடீர்னு இப்படி பேசுனா எனக்கு என்னவோ பண்ணுது. “என்றாள்
கதிர் மெதுவாக அவள் கையை பிடித்துக்கொண்டு, “உண்மையத் தானே சொன்னேன். இந்த குடிசையில, இந்த கட்டிலுல உக்காந்து, வாழ்க்கை பூரா உன் கூட இப்படியே பேசிக்கிட்டு இருக்கணும்னு தோணுது முல்லை. “என்றான்
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க. மாமரத்து இலைகளின் ஊடே வந்த நிலா வெளிச்சம் அவர்கள் முகத்தில் விழுந்தது.
நிலவொளியில். கதிரவனின் வார்த்தையில் நொடிக்கு நூறு முறை முல்லை மலர் அவளின் இதழ்கள் அழகாய் மலர்ந்து இருக்க, “பசிக்குதா டி” என கேட்டான்.
“ஐயோ மதியம் சாப்பிட்டதே வயிறு Fulla இருக்கு. வேணும்னா இப்போ ஒரு கருப்பு டீ குடிக்கலாம்” என்று முல்லை சொல்ல.
“சரி. நீ இரு நான் டீ போடுறேன்” என்ற கதிர் குடிசைக்குள் இருக்கும் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தான்.
“நானும் உங்களுக்கு உதவ வரேன்” என்ற முல்லை அவனை பிரிய மனமில்லாமல் அவனுடன் குடிசைக்குள் செல்ல.
இருவரின் நெருக்கமும் காதலும் அக்கறையும் நாளுக்கு நாள் அதிகரித்து க்கொண்டே போனது.
சில நொடியில் கதிர் தேநீரை தயாரித்தவன்.“இந்தா சூடா இருக்கு. பொறுமையா குடி. நான் இதோ இப்போ வரேன்” என்றவன், குடிசையில் இருந்து வெளியே சென்றான்.
அவன் சென்றதும் முல்லை ஊதி ஊதி டீயை குடித்துக்கொண்டு இருக்க.
கதிரின் கைபேசி சிணுங்கியது.
போன் திரையில் புது எண் தெரிந்ததும்.
“மாமா சார் உங்களுக்கு போன்” என்று முல்லை குடிசையில் இருந்து வெளியே வர, அதே தருணம் வெள்ளை நிற கார் ஒன்று மாதோப்புக்குள் நுழைந்தது.
============================
“இந்த நேரத்துல யார் வராங்க” என்று யோசித்தபடி முல்லை தோப்பின் நுழைவாயிலை பார்க்க. அதே சமயம் குடிசையின் பின் புறத்தில் இருந்து வந்த கதிர்,
“முல்லை. இது ஸ்ரீனிவாசன் கார் தானே. இவன் எப்படி வெளிய வந்தான்” என்று கேட்டான் கதிர்.
“மாமா சார். இவங்க ஏன் இங்க வராங்க” என்று முல்லை பயந்த இருக்க. காரில் இருந்து சுந்தரேசன் மற்றும் அவனின் தம்பி ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் இறங்கிய நிலையில். இவர்களுடனே கேசவனும் வந்து இருக்க. சற்றும் தாமதிக்காமல் யாருக்கும் தெரியுமால் கதிரின் கைபேசியில் இருந்து நாகராஜயை அழைத்தாள் முல்லை.
“என்னடா கதிரு. ஜெயில்க்குள்ள இருக்க வேண்டிய நாங்க எப்படி வெளிய இருக்கோமுன்னு பார்க்குறியா” என்ற சுந்தரேசன் திமிராக அவன் காரில் சாய்ந்துக்கொண்டு கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டு அணைத்தான்.
இதே சமயம் கைபேசி வாயிலாக இவர்களின் குரலை கேட்ட நாகராஜன். ஏற்கனவே சாப்பாடு செய்த பாத்திரங்களை எடுத்து செல்வதற்காக வேலனை அழைத்துக்கொண்டு மாதோப்பை நோக்கி வந்துகொண்டு இருந்தவன், இன்னும் அதீத வேகமாக காரை விரட்டியவன், அடுத்த சில நொடிகலிலேயே அங்கே வந்து சேர்ந்தான்.
“என்னடா. வாங்குனது எல்லாம் உனக்கு பத்தலையா” என்ற கதிர் சற்றும் பயம் இல்லாமல் இவர்கள் முன்னே சண்டைக்கு நிற்பதை போல நின்று இருக்க.“மாமா சார் நீங்க சும்மா இருங்க” என்றாள் முல்லை.
“ஹாங் ஆமா ஆமா மாமா சார் நீங்க சும்மா இருங்க” என்று கேசவன் முல்லையை கேலி பேச.
“ஏன்டா. உங்க மூணு பேரையும் எத்தனை முறைதான் அடிக்கிறது. உங்களுக்கு என்னதான்டா வேணும்” என்றபடி நாகராஜன் அங்கே வந்தான்.
“அட பாருடா, நீங்களும் வந்துட்டீங்களா” என்று ஸ்ரீனிவாசன் கேட்க,
“டேய், நான் கேட்டு நீங்க கொடுத்தா அது பிச்சை. அதனால எனக்கு தேவையானதை நானே எடுத்துப்பேன்” என்றான் சுந்தரேசன்.
“அவ்ளோ தானே. சரி எடுத்துக்கோ” என்று வேலன் சொல்ல.“என்ன.“ என்று ஸ்ரீனிவாசன் புரியாமல் கேட்க, “அதான் இங்க இத்தனை மாங்கா இருக்கே. போ. வேணும் என்கிறதை எடுத்துக்கிட்டு போ” என்றான் வேலன்.
“ஹா, பரவாயில்ல டா. உனக்கு கூட காமெடி சென்ஸ் நல்லா வேலை செய்து” என்று சுந்தரேசன் சொல்ல,
“இத சொல்ல தான் வண்டியை கலப்பிகிட்டு வந்தியா” என்று கேட்டான் வேலன்.
“டேய் நீ சும்மா இரு. இங்க பாரு சுந்தர். இப்போ உனக்கு என்ன தான் வேண்டும்” என்று கதிர் பொறுமை இழந்தவனாக கேட்க, “உன் உயிர் தான்” என்றான் கேசவன்.
“டேய் எதாவது அசிங்கமா சொல்லிட போறேன். ஒழுங்கா ஓரம் போய் நில்லு” என்ற கதிர்.“ஆமா. இவனுங்க எப்படி வெளிய வந்தாங்க” என்று கேட்டதும்,
“நாங்க தான் போய் இவங்கள ஜாமின்ல வெளிய அழைச்சிட்டு வந்தோம்” என்றபடி கஸ்தூரியும் தனமும் சுந்தரேசனின் காரில் இருந்து கீழே இறங்கினார்கள்.
“இங்க பாருங்க அண்ணா. குடி கெடுத்த ரெண்டு பேரும் ஒரே வண்டியில இருந்து இறங்குறாங்க” என்று வேலன் சொல்ல.
“நீங்க திருந்தவே மாட்டீங்களா” என்று கேட்டான் கதிர்.
“திருந்த நாங்க என்னடா தப்பு பண்ணோம். நீ தான் என் பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டு, இதோ இந்த முல்லைக்கூட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்க”என்ற கஸ்தூரியை கடுப்பாக முறைத்தான் கதிர்.
“அட, இவங்ககிட்ட என்ன பேச்சு. பேசாம வந்த வேலையை முடிங்க.“ என்ற தனம் முல்லையை கோவமாக முறைத்து பார்க்க.
“என்ன மேடம் சமையல் ஷோ எதாவது பண்ண போறிங்களா” என்று கேட்டான் வேலன்.
“டேய். விஷயம் தெரியாம திமிரா பேசாத, இப்போ உங்க கதிரோட குடுமி எங்க கையில” என்று ஸ்ரீனிவாசன் சொல்ல.
“நான் குடுமி எல்லாம் போடுறது இல்லையே” என்றான் கதிர்.
“ஏய் என்னங்கடா. நாங்க 5 பேரும் இந்த நேரத்துல உங்கள மொத்தமா முடிச்சிட்டு போகலாமுன்னு வந்தா. நீங்க எங்கள வச்சி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று சுந்தரேசன் கோவப்பட்டதும்.“என்ன நீ எங்கள முடிக்க போறியா” என்று கதிர் கிண்டலாக கேட்டான்.
“ஆமா டா கதிர். உங்கள முடிக்க தான் போறோம். இதோ இதே தோப்புக்குள்ள வச்சி உங்க நாலு பேர் கதையையும் நாங்க முடிக்க போறோம்” என்று ஸ்ரீனிவாசன் சொன்னதும்.
“ஐய. யார் இவன். சரியான பைத்தியமா” என்று வேலன் கேட்க.“இவனுங்க சரியான பைத்தியம் இல்ல டா. சரியாகத பைத்தியங்க” என்றான் கதிர்.
“ஏன்டா, உன் மண்டையில மூளை தான் இருக்கா, இல்ல வெறும் மண்ணு மட்டும் தான் இருக்கா” என்று கதிர் கேட்க, “ஐயோ மாமா சார். இவங்கள எல்லாம் இங்க இருந்து போக சொல்லுங்க. சண்டை எல்லாம் நமக்குள்ள வேண்டாம்ம்” என்றாள் முல்லை.
“என்ன சண்ட எல்லாம் வேணாமா. இங்க பாரு பாப்பா. உங்க கூட சண்ட வரணும்னு இதுவரை நான் எத்தனையோ பிளான் பண்ணிருக்கேன். ஆனா எந்த திட்டத்திலும் எனக்கு வெற்றி மட்டும் கிடைத்த பாடு இல்லை” என்று சுந்தரேசன் சொல்ல.
“எப்படி கிடைக்கும். அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும் “என்றான் கதிர்,
“ஆமா டா. எனக்கு நல்ல மனசு இல்ல தான். அதனால தான் உன் அண்ணன் ஜீவாவை போட்டு தள்ள போறேன்” என்று சுந்தரேசன் சொன்னதும்.“என்ன என் அண்ணனா” என்று கதிர் பதறும் வேளை.
“ஆமா உன் அண்ணன் தான் கதிரு” என்றான் கேசவன்.
என்னதான் கஸ்தூரி. கேசவன் சுந்தரேசனுடன் சேர்ந்து கூட்டு சதிகள் செய்து இருந்தாலும். ஜீவா இவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் என்று அறிந்திடாத கஸ்தூரிக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்து இருக்க,
“என்ன கேசவா. என்ன சொல்லுற. ஜீவா மாப்புள எங்க இருக்காருன்னு உனக்கு தெரியுமா” என்று கேட்டார் கஸ்தூரி.
“ஏன் தெரியாம. இதோ உன் மருமகன் ஜீவா இங்க தான் இருக்கான்” என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள் கார் டிக்கியை திறக்க. அங்கே ஜீவா கை கால் வாயில் கட்டுக்கட்ட பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்தவனை பார்த்து கதிர் முல்லை கஸ்தூரி என்று மூவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
–தொடரும்