Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 62

CHAPTER 62

முல்லை – 62

By Roja Roslin · October 29, 2026

0

மரத்தில் இருந்து தன் மீது விழுந்த பாம்பை பார்த்து “ஆ.“ என கதிர் கத்தியதும்.

“ஐயோ.“ என்று அலறினாள் முல்லை.

“ஏங்க பாம்புங்க.“ என்ற முல்லை தாவி கதிரின் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டதும், “பாம்பு தான் டி” என்றான் அவன் பயமே இல்லாமல்.

இவர்கள் இருவரையும் கண்டுகொள்ளாமல் பாம்பு அங்கிருந்து வேறெங்கோ சென்று இருக்க.

“என்ன இது. இங்க பாம்பு எல்லாம் இருக்குமா.“ என பயந்தவளாக கேட்டாள் முல்லை.

“பாம்பு, பூரான், பல்லி, வண்டு, தேளு, அணிலு இப்படி எல்லாமே இருக்கும் தான். சரி நீ வா. நான் மாங்காயை கழுவி தரேன்” என்றான் கதிர்.

“ஆனா இந்த மரத்துல எந்த அணிலும் காணோமே.“ என்று முல்லை கேட்க,

“ம். நம்ம தோட்டத்துல இருக்குற அணில் எல்லாம் அறிவை வளர்க்க Prekg போய் இருக்கு” என்றவன், அவன் பரித்த மாங்காயை கழுவி முல்லையிடம் நீட்டினான்.

“ம். ஹா. . . புளிப்பா இனிப்பா ஐயோ சூப்பரா இருக்கு மாமா சார்” என முல்லை நாவை தட்டி தட்டி ருசிக்க. அவள் இதழ் ஓரத்தில் உமிழ் நீர் வடிவதை கூட பொருட்படுத்தாமல் அவள் உண்ணும் அழகை இவன் கண் இமைக்காமல் ரசித்து இருந்தான்.

“என்னடி நீ. உனக்கு மாங்காய்னா இம்புட்டு பிரியமா” என கதிர் கேட்க,

“ட்டா.“ என மீண்டும் நாக்கை தட்டி மேலும் அந்த மாங்காகனியை ஒரு கடி கடித்தவள்,

“முன்னாடி எல்லாம் மாம்பழம் தான் பிடிக்கும் மாமா சார், ஆனா இப்போ தான் மாங்காய் மேல கொல்ல பிரியம்” என்றவள் வாயில் உள்ள மாங்காய் துண்டை கடித்து விழுங்கினாள்.

“அப்போ இன்னோரு மாங்காய் பரித்து தரட்டுமா” என்று அவன் கேட்க,

“இப்போ வேணா. வீட்டுக்கு போகும் போது பரிச்சிட்டு போகலாம்” என்றவள்,

“ஆமா உங்களுக்கு மாங்காய் பிடிக்காதா” என்று கேட்டாள்.

“நான் இளையராஜா ரசிகன் டி. எனக்கு உன் தொட்டில் மாங்காய் தான் பிடிக்கும்” என்றவன் மேற்கொண்டு அங்கே நில்லாமல் குடிசைக்குள் சென்று அங்குள்ள கயிற்று கட்டிலில் அமர்ந்துக்கொண்டான்.

“என்கிட்ட எங்க தொட்டில் இருக்கு.“ என்று முல்லை தன்னவனின் குறும்பு பேச்சை புரிந்துகொள்ளாமல் குடிசைக்குள் வந்தவள், அவன் அருகே அமர்ந்ததும். முல்லையின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டான் கதிர்.

“கொஞ்ச நேரம் தூங்குறியா. தண்ணி வேணுமா” என்று அவளை விழுந்து விழுந்து கவனித்தவனின் செயலில் முல்லை மீண்டும் இன்று புது பிறப்பை உணர்ந்தாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்ம். ஆனா நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லையே” என்று அவள் கேட்க.

“அதான் முந்தைய நாள் நீயே என்னை தான் விரும்புறேன்னு சொன்னியே டி. அதுவும் இல்லாம நீ என்னை தான் சின்ன வயசுல இருந்து காதலிக்கிறன்னு உன் தம்பியும் தான் நேத்து சொன்னான்” என்றான் கதிர்.

“யாரு. வேலனா. அவன் எப்படி” என்று இவள் புரியாமல் கேட்க,

“அவன் தான் டி நேத்து கோவத்துல, நீங்க எல்லாம் ஒரு ஆளுன்னு உங்கள போய் என் அக்கா சின்ன வயசுல இருந்து காதலிச்சுது பாருங்க, நீங்க என் அக்காவோட காதலுக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத ஆளுன்னு, ரொம்ப கோவமா அவன் தான் உண்மையை சொன்னான்” என்ற கதிர் முல்லையின் பாதங்களை இதமாக பற்றிக்கொடுத்தான்.

“அப்போ நானும் என் தம்பியும் சொன்னதால தான் மாமா சாருக்கு என்னுடைய காதல் புரிஞ்சு இருக்கு, அப்படித்தானே” என்று முல்லை கேட்க,

“இதுல புரிதலை தாண்டி, நம்ம நம்முடைய காதலை உணர்வதற்கு முன்னாடி நம்ம கூட இருக்கிறவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவங்க சொன்னதை நம்பிட்டோம்” என்றான் கதிர்.

“மாமா சார். நம்ம இன்னைக்கு வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு போய் மீனாவை பார்க்கலாமா” என்று முல்லை கேட்க,

“வேண்டாம். தனம் வீட்ல இருக்கிற மீனாவை போய் பார்த்தா இன்னும் பிரச்சனை பெருசாகும்” என்றான் கதிர்

“நம்ம ஏன் மீனாவை நம்ம வீட்டுக்கு அழச்சிட்டு வரக்கூடாது” என்று முல்லை கேட்க, “ஆனால் அப்பா மீனா மேல கோவமா இருக்காரு” என்றான்

“மீனா மேல எந்த தப்பும் இல்லை மாமா சார். பாவம். அவ உங்களை எந்த அளவுக்கு நேசிச்சானே எனக்கு தெரியும்” என்று முல்லை மீனாவிற்காக பரிந்து பேச,

“ஆமாமா, அவ என்ன காதலிச்சதெல்லாம் உனக்கு தெரியுது. ஆனா நான் உன்னை காதலிச்சது தெரியல, அப்படித்தானே” என்று கேட்டான்.

“எப்படி தெரியும். தாடிக்குள்ள இந்த சிடு மூஞ்ச மறச்சு வச்சுக்கிட்டு, பார்க்கும்போதெல்லாம் முறைச்சுக்கிட்டு இருந்தா எப்படி தெரியும்” என்று கதிரை முல்லை சீண்ட,

“ஓ. ஆனா இந்த மூஞ்ச தானே நீயும் சின்ன வயசுல இருந்து காதலிக்கிற.“ என்று கேட்டான் அவன்.

“என்ன பண்ண. இந்த ஜென்மத்துல இந்த கதிர் தான் இந்த முல்லையோட புருஷன்னு விதியில் எழுதி இருக்கு” என்று அவள் சலித்துக் கொள்ள,

“என்னடி வேண்டாம் வெறுப்பா சொல்ற. ஏன் இந்த மாமனை உனக்கு பிடிக்கலையா” என்று அவன் கேட்க,

“அது எப்படி உங்களை பிடிக்கலைன்னு சொல்லுவேன். உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று தன் கால்களை பற்றி இருக்கும் தன்னவனின் கன்னங்களைப் பிடித்து செல்லம் கொஞ்சினாள் முல்லை.

================================

சிறுவயதில் இருந்து இவர்களை ஒருவர் ஒருவர் எப்படி எல்லாம் காதலித்தார்கள் என்று ஒருவரை மாற்றி ஒருவர் தன் மனதில் உள்ள நினைவுகளை பகிர்ந்து இருக்க. அந்த இடமே இவர்கள் இருவருக்காக உருவாக்கப்பட்ட தேவலோகமாய் காட்சியளித்தது.

பசி, தாகம், தூக்கம், சோர்வு என்று அனைத்தையும் மறந்து இந்த காதல் தம்பதிகள் ஒருவரை ஒருவர் ரசித்து இருக்க,

“ஆமா. எனக்கு ஒரு சந்தேகம். இந்த வேலனுக்கு ஏன் என்ன பார்த்தாலே பிடிக்கல” என்று கேட்டான் கதிர்.

“என்ன கேட்டா. எனக்கு என்ன தெரியும். அதை நீங்க என் தம்பிகிட்ட தானே கேட்கணும்” என முல்லை சொல்ல,

“என்ன. இங்கே என் பெயர் அடிப்படுது. என்ன விஷயம்” என்ற கேள்வியோடு முல்லையின் தம்பி KV உள்ளே நுழைந்தான்.

“டேய் வேலா, வா வா. நீ எப்படிடா இங்க” என்று முல்லை ஆச்சரியமாக கேட்டவள்,

தன் கணவனின் வசமிருந்து எழுந்து அமர.“உன் தம்பி தாண்டி இந்த இடத்தையே விலைபேசி முடித்துக் கொடுத்தான்” என்றான் கதிர்.

“ஓ. எனக்கு தெரியாம இவ்வளவு விஷயம் நடந்திருக்கா” என்று முல்லை ஆச்சரியப்பட,

“அம்மாடி முல்லை. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மா” என வாழ்த்தியப்படி குடிசைக்குள் நுழைந்தார் பாண்டியன்.

“மாமா.“ என்று மரியாதையுடன் முல்லை கட்டிலில் இருந்து எழுந்தவள், “ரொம்ப நன்றி மாமா” என்றவள் கண் எதிரே பார்வதி, ரோஜா என்று இருவரும் வந்து நிற்க. நாகராஜனும் சக்கர நாற்காயில் முருகனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

இவர்கள் அனைவரும் ஒன்று கூடி முல்லைக்கு, “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்றதும் முல்லை நெகழ்ச்சியில் மனம் மகிழ்ந்தவளுக்கு வார்த்தை வர மறந்து போனது.

“என்ன மாப்ள. நேத்து நைட்ல இருந்து எங்க பொண்ண வீட்டு பக்கமே அனுப்பி வைக்கல. பிறந்தநாளுக்கு திகட்ட திகட்ட பரிசு கொடுக்குறீங்க போல.“ என்று பார்வதி மன நிறைவோடு கதிரை விசாரிக்க,

“இது ஆரம்பம் தான். இனி வருஷ வருஷம் அண்ணி பிறந்த நாளுக்கு வாத்தி என்ன எல்லாம் பண்ண போறாரு பாருங்க” என்றாள் ரோஜா.

“அம்மாடி முல்லை, ரொம்ப சந்தோஷமா டா, காலையில தான் வேலன் உங்க ரெண்டு பேரோட காதல் கதையை சொன்னான். பார்த்தியா. சொந்தத்துக்குள்ள நீங்க ஒருவரை ஒருவர் இந்த அளவுக்கு நேசித்து இருக்கீங்க. ஆனா எங்களுக்கு தான் அது புரியாமல் போயிடுச்சு” என்று முருகன் வருத்தம் கொண்டார்.

“எங்க. நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முட்டிக்கிட்டு நின்னா சின்னஞ்சிறுசங்க மனசுல இருக்குற காதல் உங்களுக்கு எப்படி தெரியும்” என்று வேலன் கேட்க,

“ஆமப்பா. தெரிஞ்சிருந்தா நாங்களே கதிருக்கும் முல்லைக்கும் என்னைக்கோ கல்யாணத்த பண்ணி வச்சிருப்போம்” என்றறார் பாண்டியன்.

“ஆமா ஆமா. சொந்ததுக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்கிறது எல்லாம் பெரிய விஷயமா. இதே உங்க புள்ள இல்லாத பட்ட பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டிருந்தா, நீங்க கட்டியா கொடுத்திருப்பீங்க” என்று வேலன் கேட்க,

“என்னப்பா நீ. இப்படி சொல்ற, எங்களுக்கு பணம் காசு எல்லாம் முக்கியம் இல்லை. குணமான பொண்ணும் பையனும் தான் எங்களுக்கு முக்கியம்” என்றார் பாண்டியன்.

“அடேய். இப்ப நீ எதுக்குடா தேவையில்லாதத எல்லாம் பேசுற” என்று கதிர் அவன் மச்சான் வேலலனை கடிந்து கொள்ள,

“ஹலோ, உங்க கதை ஓவர் ஆயிடுச்சு. நீங்க உங்க காதலியை கரம் பிடிச்சுட்டீங்க. போதாக்குறைக்கு உங்கள மாதிரியே ஒரு குட்டி கதிரையோ முல்லையோ பெத்து எடுக்கப் போறீங்க. நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. நான் சொல்ல வந்தது வேற கதை” என்றான் வேலன்

“என்னடா, என்ன பொடி வச்சு பேசுற மாதிரி இருக்கு” என்று முல்லைக்கேட்க,

“ஆமா. இங்க இருக்குறவங்க எல்லாம் இட்லி பாருங்க. நான் பொடி வச்சு உங்களை தொட்டு சாப்பிட. நான் பொடியும் வைக்கல கடியும் வைக்கல. ஆமா எனக்கு ஒரு சந்தேகம்” என்று வேலன் சொல்ல,

“என்னப்பா உன் சந்தேகம்” என்றார் பாண்டியன்.

“ரோஜாவுக்கு பார்த்து இருக்கீங்களா ஒரு தடியன். அவனை எதுக்காக ரோஜாவுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க” என்று வேலன் கேட்க,

“இது என்ன கேள்வி. அந்த மாப்பிள நல்லா படிச்சிருக்காரு. நல்ல இடம். அதனால தான் கல்யாணம் பண்ண போறோம்” என்றார் பாண்டியன்.

“மாப்பிள்ளை படிச்சிருந்தா போதுமா. ரோஜா போய் வாழ போற இடம் நல்ல இடமா இருக்கணும்னு அவசியம் இல்லையா?” என்று வேலன் கேட்க

“ஏன். அங்க சரஸ்வதி அக்கா இருக்காங்களே. அவங்க அம்மாவை நல்லா பார்த்துப்பாங்க” என்றான் கதிர்.

“அக்கா. இந்த தோப்புளையே உன் புருஷன் தான் பெரிய மாங்காய் போல” என வேலன் கதிரை கிண்டல் செய்ய,

“டேய், நான் முன்னதாகவே சொல்லிருக்கேன். என் மாமா சாரை பத்தி தப்பா பேசாத” என்று தன் தம்பியை கண்டித்தாள் முல்லை.

“சரி சரி உன் புருஷன் அறிவாளி தான். அந்த கதை எல்லாம் விடுங்க. ரோஜாவை நீங்க சரஸ்வதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கல, அந்த ரவிக்கு தானே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. ஆனா அந்த ரவி நல்லவன் வல்லவன் எல்லாம் இல்ல. அவன் சரியான கடைந்து எடுத்த அயோக்கியன்” என்று வேலன் ரவியை குற்றம் சொல்ல.

“என்னப்பா என்னென்னமோ சொல்ற” என்று கலங்கினார் பாண்டியன்

“என்னடா. என்ன சொல்ற” என்று கதிரும் நம்ப முடியாமல் கேட்க.

“ஆமா நண்பா. அந்த ரவியோட கேரக்டர் சரியில்ல” என்று நாகராஜனும் அதையே சொல்ல.

“அப்படி என்ன பண்ணான், வேற எதாவது பொண்ணுகூட பழக்கம் வச்சிருக்கானா” என்று கண்களை உருட்டினார் பார்வதி.

“பொண்ணுங்ககூட பழக்கம் இருந்தா கூட வயசு கோளாறுன்னு சொல்லலாம். ஆனா அவருக்கு பசங்க கூட தொடர்பு இருக்கு” என்றான் வேலன்.

வேலனின் பதிலில் யாருக்கும் ஏதும் புரியாமல் போக, “என்ன சொல்ற வேலா. பசங்க கூட பழக்கம்னா என்ன அர்த்தம்” என்று முல்லை கேட்க,

“அவரு ஒரு Gay அக்கா” என்றான் வேலன்.

“டேய். என்னடா நீ பாட்டுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுற” என்று முல்லை தன் தம்பியை கடிந்துகொள்ள,

“பாப்பா. வேலன் சொல்றது உண்மை தான். நாங்க இன்னைக்கு காலையில தான் அவனை பற்றி முழு விவரத்தையும் விசாரிச்சோம்” என்றான் நாகராஜன்.

“என்ன விசாரிச்ச நீ” என்று கதிர் கேட்க,

“ஆமா. ஒரு அண்ணனா நீங்க தான் இதெல்லாம் பண்ணனும், ஆனா பாருங்க என் அண்ணன் விசாரிச்சு இருக்காரு” என்று வேலன் மீண்டும் கதிரை சீண்ட,

“இரு வேலா. நண்பா இன்னைக்கு காலையில எதார்த்தமா ரவியை நாங்க ஒரு பையன்கூட பார்த்தோம். அங்க அந்த பையன் ரவியோட சட்டையை பிடிச்சிகிட்டு அழுதுகிட்டு இருந்தான். இவனும் அவனுக்கு என்னமோ சமாதானம் சொல்லிக்கிட்டு இருந்தான்.

கடைசியா அந்த பையன் சமாதானம் ஆனதும் ரவி அவனோட நெத்தில முத்தம் கொடுத்துட்டு அங்க இருந்து கிளம்பிட்டான். அவன் போனதும் நானும் வேலனும் அந்த பையன்கிட்ட பேச்சு கொடுத்து என்ன ஏதுன்னு விசாரிச்சோம்.

அப்போ தான் அவன், இந்த ரவிக்கூட வெளிநாட்டுல ஒண்ணா வேலை பார்க்கும் போது இவன்கூட sexual relation ல இருந்தாதா சொன்னான். அது மட்டும் இல்லாம நம்ம சின்னமாவை பணத்துக்காக தான் அவன் கல்யாணம் பண்ணிக்க போறானாம்.

கல்யாணம் முடிஞ்சதும் இவங்கள இங்கேயே விட்டுட்டு அவன் மறுபடியும் ஊருக்கு போய் அந்த பையன் கூட சந்தோசமா வாழ போறதா இந்த பையனுக்கு சத்தியம் பண்ணிக்கொடுத்து இருக்கான்” என்று நாகராஜன் தனத்தின் தம்பி ரவியை பற்றிய உண்மையை சொல்ல சொல்ல கதிருக்கு ரவி மீது கொலை வெறி அதிகரித்தது.

“ஐயோ. அப்போ என் பொண்ணோட கல்யாணம்” என்று பாண்டியன் தலையில் இடி இறங்கியதை போல அதே இடத்தில் அமர்ந்ததும்,

“மாமா. இந்த விஷயம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னதாகவே தெரிஞ்சதை எண்ணி நீங்க சந்தோசம் தான் படணும்” என்று முல்லை அவருக்கு ஆறுதல் சொன்னாள்.

ரவியை பற்றிய உண்மை தெரிந்து அனைவரும் மனதளவில் நொறுங்கி போக, ரோஜா மட்டும் அவள் முகத்தில் எந்த வருத்தமும் இல்லாத நிலையில் நின்று இருந்தாள்.

“என்னமா ரோஜா. இந்த கல்யாணமும் நின்னு போச்சுன்னு கவலையில இருக்கியா” என்று பார்வதி கேட்க,

“எனக்கு தான் கல்யாணமே வேணான்னு சொன்னேனே. நான் அப்பா சந்தோசத்துக்காக தான் அந்த ரவியை கட்டிக்க சம்மதம் சொன்னேன்” என்றாள் ரோஜா.

“ஹ்ம். பணம் அந்தஸ்து ஜாதி மதம் எல்லாம் பார்த்து மாப்பிளையை தேடுனா இப்படி தான் ஆகும்” என்று வேலன் கோவமாக பேச,

“டேய். நாங்க ஒன்னும் அதுக்கெல்லாம் முக்கியதத்துவம் தர ஆளுங்க இல்ல” என்றான் கதிர்.

“சும்மா பொய் சொல்லாதீங்க, அந்தஸ்து கௌரவம் எல்லாம் பார்க்குறதால தான் உங்க கண் எதிர்லயே மாப்புள இருக்கும் போது வெளிய போய் மாப்பிளையை தேடுனீங்களா.?” என கேட்டான் வேலன்.

“என்ன கண் எதிர்ல மாப்புளயா” என்று குழம்பிய கதிர், “டேய். என்ன நீ என் அம்மாவையே கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறியா” என்று கதிர் கோவமாக கேட்க,

“உங்களுக்கு அப்பாவாக நான் ஆள் இல்ல, அதுவும் இல்லாம ரோஜா எனக்கு அண்ணி மாதிரி, நான் என் அண்ணன் நாகராஜன் இருக்கும் போது, ஏன் வெளிய போய் மாப்புளயை தேடுனீங்கன்னு கேட்டேன்” என்ற வேலனின் வார்த்தையை கேட்டு யார் அதிர்ச்சி அடைந்தார்களோ என்னவோ, ரோஜாவும் நாகராஜும் விக்கத்து போனார்கள்.

==============================

“டேய் வேலா என்ன பேசுற நீ. நான் போய் சின்னமாவை. இல்ல இல்ல. நான் எப்பவும் அவங்கள அப்படி ஒரு எண்ணத்துல பார்த்ததே இல்ல” என்று நாகராஜன் பதறியதும், “அப்போ பார்க்கலனா என்ன. இப்போ பாருங்க” என்றான் வேலன்.

வேலனின் வார்த்தையை கேட்டு கதிர் நாகராஜனை அழுத்தமாக பார்க்க, “ஐயோ நண்பா. சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, நான் போய் எப்படி சின்னமாவை” என்ற நாகராஜனின் பார்வை ரோஜா மீது பதிய, அவளோ அவனை கொலை காண்டில் முறைத்து பார்த்தாள்.

“சின்ன பையனா இருந்தாலும் வேலன் சொல்லுறதும் சரி தானே” என்று முருகனும் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க,

““யாரோ ஊர் பேர் தெரியாத மாப்புளைக்கு என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்து அவ வாழ் நாள் எல்லாம் எப்படி இருக்கான்னு நான் கவலை படுறதுக்கு பதிலா, சின்ன வயசுல இருந்தே இந்த குடும்பத்துக்காக பாடுபட்ட நாகராஜனுக்கு என் மகளை கட்டிக்கொடுக்க எனக்கு சம்மதம் தான்” என்றார் பாண்டியன்.

தன் தந்தையின் வார்த்தையை கேட்டு ரோஜா அமைதியாக இருக்க, “அண்ணா. நீங்க சொல்றது எல்லாம் சரி தான். ஆனா” என்று பார்வதி இழுவையாக ஏதோ சொல்ல வரும் முன்னே,

“ஐயா. என்னை மன்னிச்சிடுங்க, என்னதான் நான் கதிருக்கு நண்பனாக இருந்தாலும், உண்மையில் நான் உங்க வீட்டு வேலைக்காரன் தான். நான் போய் எப்படி சின்னமாவை கல்யாணம் பண்ணிக்க முடியும், இல்ல என்னால முடியாது” என்றான் நாகராஜன்.

“டேய். என்னடா நீ வேலைக்காரன் அது இதுன்னு பேசுற. என்ன அடி வேணுமா” என்று கதிர் தன் நண்பனை கடிந்துகொள்ள,

“மாமா சார் இருங்க, பெரிய மாமாவுக்கு நாகா அண்ணனை ரோஜாவிற்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க சம்மதம் என்ற பட்சத்துல ரோஜாவும் நாகா அண்ணனும் மனசு விட்டு பேசி ஒரு நல்ல முடிவா நம்மகிட்ட சொல்லட்டும்” என்றாள் முல்லை.

“ஆமா ஆமா. முல்லை சொல்றதும் சரி தான், என்னதான் பணம் காசு இருந்தாலும் திருமண வாழ்க்கைக்கு தேவை மணமக்களின் சம்மதம் தான். இவங்க ரெண்டு பேரும் பேசி முதவெடுத்து நமக்கு நல்ல பதிலா சொல்லட்டும்” என்று முருகன் சொல்ல,

“அக்கா. உடனே உன் புருஷனை அந்த முரசுக்கு போன் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லிடு” என்றான் வேலன்.

“அவங்க பேர் சரசு.“ என்ற கதிர், சிறு முறைப்புடனே குடிசையில் இருந்து வெளியே சென்றவன், அவன் கைபேசி வாயிலாக பக்குவதுடன் தனத்தின் தம்பி ரவியை ரோஜாவிற்கு திருமணம் செய்து தர முடியாது என்று சரஸ்வதியிடம் எடுத்து சொல்ல,

“என்னப்பா கதிர். கல்யாணத்துக்கு எல்லாம் தயாரான நிலையில இப்படி சொன்னா எப்படி.?” என்று கேட்டார் சரஸ்வதி.

“கல்யாணத்துக்கு முக்கியமே பொண்ணும் மாப்பிளையும் தான். ஆனா உங்க புள்ள பொண்ணுக்கு பதிலா இன்னோரு பையனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான். அதனால அவன்கிட்ட மனம் திறந்து பேசி அவனுக்கு எது நல்லதோ அதை பண்ணுங்க” என்ற கதிர் கைபேசி இணைப்பை துண்டிதான்.

ரோஜா நாகராஜ் கல்யாணத்தை பற்றி இவர்கள் பேசியதும் அவர்கள் இருவரின் மனதிலும் இறுக்கம் ஏற்பட.

“ரோஜா. நீ பொறுமையா யோசிச்சு பாண்டியன் மாமாகிட்ட சம்மதம் சொல்லு”என்றாள் முல்லை.

“ஹலோ ஹலோ. பாண்டி மாமாகிட்ட பேசுறதுக்கு முன்னாடி நீங்க என் அண்ணன்கிட்ட பேசுங்க” என்று வேலன் நாகராஜனை கைகாட்ட.“ஹாங் இதோ வரேன் கதிர்” என்று அழைக்காத தன் நண்பனை தேடி தலைத்தெரிக்க ஓடினான் நாகராஜ்.

அவனின் நிலையை கண்ட முல்லை சத்தமாக சிரித்து இருக்க, “எங்க போக போறாரு. வீட்டுக்கு போய் நான் பேசிக்கிறேன்” என்றாள் ரோஜா.

“எப்படியோ. அந்த பாண்டி ஐயா இந்த கல்யாணத்தை நல்ல விதமா முடிச்சு வச்சா எனக்கு போதும்” என்று பாண்டியன் இறைவனை வணங்கியிருக்க,

“சரி வாங்க நம்ம தோப்பை சுற்றி பார்க்கலாம்” என்று ரோஜா முல்லையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

================================

“ஏன் மச்சான்.“ என்று கதிர் பொதுவாக அழைக்க, “நான் ஒன்னும் உங்க மச்சான் இல்ல” என்று கடுக்கடுத்தான் வேலன்.

“ஐ. ஆசையை பாரு. நான் என் நாகா மச்சானை அழைத்தேன்”என்ற கதிர், “மதியம் சாப்பாடு ஆர்டர் பண்ணிடலாமா” என்று கேட்க,

“அதெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்துல நாகா அண்ணனோட கடையில இருந்து பாத்திரம் பண்டம் எல்லாம் இங்க வந்துடும், நானே என் அக்காவுக்கு பிறந்தநாளுக்கு பிரியாணி ரெடி பண்றேன்” என்றான் வேலன்.

“ஓ. அப்போ நான் என் பொண்டாட்டி பிறந்தநாளுக்கு” என்று கதிர் சொல்லி முடிக்கும் முன்னே, “என்ன கேசரி கிண்ட போறிங்களா” என்று வேலன் கிண்டலாக கேட்க, “இல்ல. Mango கேக் பண்ண போறேன்” என்றான் கதிர்.

“ஓ. அப்போ இன்னைக்கு ஆம்பளைங்க எல்லாம் சேர்ந்து சமைக்க போறிங்களா” என்று பார்வதி கேட்க,

கதிர் தன் மனைவிக்காக வாங்கிக்கொடுத்த மாதோப்பில் தடப்புடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் கடந்த நிலையில், அறுசுவை விருந்து தயாராகி இருக்க,

நாகராஜின் வேனில் சென்று முல்லை கையால் ஆதரவற்ற பெரியவர்கள் பிள்ளைகள் என்று அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்ட நிலையில்,

அங்குள்ள அணைத்து நல் உள்ளங்களும் முல்லைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவளை மனநிறைவோடு ஆசிர்வாதம் செய்தார்கள்.

“மாமா சார். என்ன இதெல்லாம், என்னைக்குமே இப்படி ஒரு பிறந்தநாளை நான் கொண்டாடியாதே இல்லையே.“ என்று முல்லை கண்கள் கலங்க,

“நீயே மறந்தாலும் இனி வருஷ வருஷம் நாங்க உன் பிறந்தநாளை கொண்டாடுவோம் தான் அக்கா” என்றான் வேலன்.

“டேய் இது என் டயலாக் டா” என்ற கதிர் வேலனை முறைக்க,

“உங்க வசனமா இருந்தாலும் டைம்மிங் ரைம்மிங்ன்னு சரியான நேரத்துல சொல்லிடனும் மாமா சார்,

அப்படி சொல்லாம Gap விட்டா இப்படி தான் நடுவுல புகுந்து யாராவது fill பண்ணிடுவாங்க” என்று முல்லை கதிரை கிண்டல் செய்ய,

அந்த இடமே சிரிப்பு சத்தத்தில் நிறைந்து இருந்தது.

தொடரும்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!