மறுநாள் காலை பொழுது அழகாய் மலர்ந்தது. முல்லை கண் விழிக்கும் போது அவள் அருகே அவளின் ஆடவன் இல்லை.
உடல் சோர்வில் விடியல் வேளையில் இருவரும் கூடி கழித்த நிமிடங்களை தன் சிந்தையில் அசை போட்டு பார்த்த முல்லைக்கு அவளை மீறி முகம் வெட்கதால் சிவந்து போனது.
எப்படியெல்லாம் தன்னவனுடன் முழு காதலோடு அவளின் உணர்வையும் உரிமையையும் உடலையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைக்கொண்டாளோ, அதை விடவே அதிகப்படியான மகிழ்வை தனக்கு அள்ளிகொடுத்த ஆதவன் எங்கே என்று அவளின் அஞ்சனம் கலைந்த விழிகள் தேடிக்கொண்டு இருந்தது.
சுவற்றில் மாட்டி இருக்கும் கடிகாரம் 7மணியை எடுத்துக்காட்ட.
மெதுவாய் எழுந்து, தன் ஆடைகளை சரி செய்துகொண்டவள், தோட்டத்து பக்கம் சென்று முகம் கழுவிக்கொண்டு இருக்க,
அவளுக்காக வேப்பங்குச்சியை
க்கொண்டு கொடுத்தான் கதிர்.
முதலில் அவனை இயல்பாக பார்த்தவள்,
இவளால் ஏற்பட்ட அவன் உதட்டோர சிறு காயத்தை பார்த்ததும் வெட்கத்தால் தலை கவிழ்ந்து இருக்க.
“என்னடி. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே.“ என்று கேட்டான்.
“நீங்க ஏன் சீக்கிரம் எழுந்திங்க” என்று அவன் கேள்விக்கு எப்போதும் போலவே இவள் எதிரி கேள்வி கேட்க.
“உன்ன பக்கத்துல வச்சிக்கிட்டு மாமானால சும்மா தூங்க முடியாதே” என்றவனின் பதிலில் பெண்ணவளின் பற்களை சுத்தம் செய்யும் வேப்பங்குச்சி கூட தேனாக இனித்தது.
“நீ பல் துலகிட்டு வா, நான் சுடு தண்ணி எடுத்து வைக்கிறேன்” என்றவன். வேகமாய் சென்று முல்லைக்காக காத்து இருந்த சுடு நீரை சரியான அளவில் குளிர்ந்த நீரில் கலந்து வைத்து,
“வாடி குளிக்கலாம்” என்று அழைத்தான்.
“என்ன. குளிக்கலா. மாவா. என்ன கிண்டல் பண்றிகளா. அதெல்லாம் வேணா. நான் தனியாவே குளிச்சிப்பேன்” என்று முல்லை சிணுங்கினாள்.
அவளின் நிலையை பார்த்து கண்களை சிமிட்டியவன், “ஐ. இது நல்லா இருக்கே. நான் பொதுவா தான் வாடி குளிக்கலாமுன்னு சொன்னேன். நீ பேசுறத பார்த்தா மாமா உன்னை குளிப்பாட்டி விட ஆசை படுற மாதிரி தெரியுது” என்று கதிர் கிண்டலாக கேட்க,
“விளையாடாதீக. நான் அந்த அர்த்தத்துல சொல்லவே இல்ல” என்ற முல்லை வேகமாக குளியலறை சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள்.
“சரி சரி. பொறுமையா குளிச்சிட்டு வா” என்று கதிர் சொல்ல,
“எங்களுக்கும் தெரியும்” என்ற முல்லையின் இதழில் புன்னகை மலர்ந்த வண்ணமாகவே இருந்தது.
கிட்டத்தட்ட பத்து நிமிட குளியலுக்கு பிறகு.“ஐயையோ. இவரு பண்ண சேட்டையில நம்ம மாத்து துணி எடுக்காம வந்துட்டோமே” என்று முல்லை யோசித்தவள், அருகே இருந்த துவாலையை மார்பு வரை சுற்றிக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.
================================
ஈர கூந்தலுடன் அரைகுறை ஆடையில் தன் முன்னே நின்று இருந்த பெண்ணவளை பார்த்து,
“என்னடி நீ. இந்த குளிர்ல இப்படியா வந்து நிப்ப, நான் ஒரு லூசு. உனக்கு மாத்து துணியை அங்கயே எடுத்துட்டு வந்து வச்சிருக்கணும்.“ என்று பதறியவன், வேகமாக அருகே இருந்த இன்னோரு துவாலையைக்கொண்டு முல்லையின் ஈர கூந்தலில் சுற்றினான்.
சட்டென்று மின் விசிறியை அனைத்தவன்,
“இந்தா டி உடனே துணியை மாத்திக்கோ” என்று சிவப்பு நிற சேலையை அவள் முன்னே நீட்ட,
“புது புடவையா. எனக்கா. .?” என்று அவள் ஆச்சிரியமாக கேட்க,
“பின்ன என்னக்கா, உனக்கு தான் டி.“ என்றான் சிரித்த முகத்துடன்.
புடவை என்றாலே பெண்களுக்கு பிரியம் தான். அதுவும் தன்னவன் தனக்காக வாங்கி கொடுத்த சேலை என்றால் சொல்லவே வேண்டாம்ம். முல்லையின் மனதில் அப்படியொரு மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.
“எனக்கு சிவப்பு கலர் பிடிக்குமுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று அவள் கேட்க.“உனக்கு நீலம் தான் பிடிக்குமுன்னு எனக்கு தெரியும்” என்றான் கதிர்.
“ஓ, அப்போ ஏன் இந்த சிவப்பு?” என்று அவள் கேட்க.“ஏன் பிடிக்கலையா.?” என்று கேட்டான்.
“ரொம்ப பிடிச்சி இருக்கு. கலர்ல என்ன இருக்கு. எனக்காக நீங்க வாங்கிட்டு வந்தது தான் பெருசு” என்று அவள் சொல்ல.
“இந்த புடவையை பார்த்ததுமே உனக்கு மட்டும் தான் இந்த சேலை நல்லா இருக்கும்னு தோணுச்சு, அதான் வாங்கினேன்” என்று அவன் சொல்ல.“தேங்க்ஸ்” என்றாள் அவள் பதிலுக்கு.
“அதெல்லாம் நீயே வச்சிக்கோ. புடவ கூடவே ப்ளௌஸ் இருக்கு. சீக்கிரம் புடவையை கட்டிட்டு என்னை கூப்பிடு” என்றவன் அறையின் கதவு வரை சென்றதும், “இந்த நேரத்துல என்னோட ஹெல்ப் எதாவது வேணுமா” என்று திரும்பி கேட்டான்
அவன் கேள்வியின் சுச்சமத்தை புரிந்தவள், “ஆமா. போகும் போது கதவ ஒழுங்கா சாத்திட்டு போகனும். அது தான் நீங்க எனக்கு பண்ற பெரிய ஹெல்ப்” என்றாள் முல்லை.
“ம். தெரியுமே. என் உதவி எப்பவும் கட்டிவிட தேவைப்படாது. கழட்டி விட தான் தேவைப்படும்” என்றவன் கதவை மூடிக்கொண்டு சிறு நகைப்புடனே வெளியே செல்ல,
“ஹப்பா. என்ன வாய் இவுகளுக்கு.“ என்று தன்னை ரசிக்கும் தன்னவனை இவளும் ரசித்த வண்ணம் அவன் வாங்கி தந்த சேலையை
அழகாய் உடுத்திகொண்டாள்.
புடவையை கட்டிக்கொண்டு கண்ணாடி முன்னே நின்று கூந்தலில் முடிந்து இருக்கும் ஈர துணியை அவள் கழட்டும் நேரம் கையில் சாம்பிராணி தூபத்தோடு வந்து நின்றான் கதிர்.
“என்ன நீங்க. நீங்க ஏன் இதெல்லாம் பண்ணுறிக” என்று முல்லை கேட்க,
“நான் பண்ணாம வேற யாரு பண்ணுவாங்க” என்றவன். முல்லையை கட்டிலில் அமர வைத்து, அவனே அவன் கரங்களால் அவள் கூந்தலுக்கு தூபம் போட்டான்.
வீடே சாம்பிராணி வாசனையில் மனம் வீச.
முல்லையோ தன்னவனின் செயலில் நொடிக்கு நூறு முறை அவன் மீது காதல் வசம்க்கொண்டு இருந்தாள்.
“தலையை பின்னிட்டு சீக்கிரம் வாடி. கோவிலுக்கு போகலாம்” என்று அவன் அழைக்க,
“டீ காபி எல்லாம் குடிக்க வேணாமா” என்றவள், அவளின் சிகையை அலங்கரித்துக் கொண்டாள்.
“அதெல்லாம் வெளிய போய் சாப்பிட்டோம். நீ முதல்ல கிளம்பு” என்றவன். தானும் அலமாரியில் இருந்து புது சட்டையை எடுத்து அணிந்துகொண்டவன்.
“போகலாமா” என்று கேட்க.
அவனை ஒரு மார்க்கமாக முறைத்து பார்த்தாள் முல்லை.
“என்ன டி அப்படி பாக்குற” என்று இவன் புரியாமல் கேட்க,
“புடவை வாங்கிக்கொடுத்தா போதாது” என்று அவள் மீதி வாசகத்தை சொல்லி முடிப்பதற்குள், “நான் தான் கட்டி விடுறேனு சொன்னேனே.“ என்றான்.
“ஐய. பெரிய காமெடி தான். நான் கேட்டது. எனக்கு இந்த புடவை எப்படி இருக்குனு நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே. அத தான் கேட்டேன்” என்றவளின் முகம் வருத்தமாக மாறிப்போக,
“இந்த பட்டுப்புடவை மட்டும் இல்ல. நீ எந்த புடவை கட்டினாலும் உனக்கு சூப்பரா இருக்கும்” என்றான்.
அவன் தன்னை புகழ்ந்தது அவள் மனதிற்கு மகிழ்வை கொடுத்தாலும்,
“ஹாங் நான் கேட்ட பின்னாடி தான் சொல்லுவிங்களாக்கும்” என்று முகத்தை திருப்பிக்கொண்டவள், அதே கோபத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.
“இவ என்ன சரியான கோவக்கார கிளியா இருக்காளே, “ என்று தன் மனைவியின் செயலை ரசித்தப்டியே கதிரும் வண்டி சாவியுடன் வெளியே செல்ல,
“நம்ம பைக்ல போகலாமா” என்று கேட்டாள் முல்லை.
“என்ன பைக்லையா. . . நோ நோ நோ. வயத்துல பாப்பா இருக்கும் போது நம்ம பைக்ல போகக்கூடாது” என்றவன். முல்லையை அழைத்துக்கொண்டு காரில் ஏறிய சில நிமிடங்களிலேயே கோவில் வாசலில் காரை நிறுத்தினான்.
கோவிலுக்குள் செல்லும் முன்னே முல்லைக்கு மலர்களை வாங்கி கொடுத்தவன், அவளை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான்.
“சாமிக்கு அரச்சனை பண்ணலையா.?” என்று முல்லை கேட்க,
“நீ கருவை சுமந்துகிட்டு இருக்கும் போது கருவறைக்குள் இருக்குற கடவுளுக்கு அர்ச்சனை பண்ணக்கூடாது” என்றான் கதிர்.
அவன் பதிலில் அவனை கேள்வியாக பார்த்தவள்.“இதெல்லாம் நீங்க நம்புறீகளா?” என்று கேட்க. ,
“சில விஷயங்களை எல்லாம் நம்பனும். சரி சாமியை கும்பிடு” என்றவன் அவளுடன் சேர்ந்து இவனும் கடவுளை வணங்கினான்.
பூசாரி இருவருக்கும் கடவுளின் தீபாரதணையை காட்ட. மனதார இறைவனை வணங்கியவர்கள் இருவரும் தெப்பக்குளம் அருகே எதிர் எதிரே அமர்ந்தார்கள்.
=============================
சூரிய ஒளி குளத்தின் நீரில் ப்ரதிபலிக்க. முல்லையோ கண் இமைக்காமல் கதிரை பார்த்து இருந்தாள்.
“என்னடி அப்படி பாக்குறவ. எதாவது என்கிட்ட சொல்லணுமா.?” என்று அவன் வினாவினாவ,
“சொல்ல வேணா. கேக்கணும்” என்று அவள் சொல்ல.“என்ன கேக்க போற” என்றான்.
“நேத்து இந்த நேரமெல்லாம் நமக்குள்ள நிறைய பிரச்சனைகள் இருந்துச்சு. ஆனா இந்த நொடி இந்த உலகத்துல ரொம்ப சந்தோசமா இருக்குறது யாருன்னா. அது நானா தான் இருக்கும்”என்றவளின் கரங்களை பற்றி.“நானும் தான்” என்றான்.
“ஆமா. நம்ம ரெண்டு பேர் மட்டும் இல்ல, நம்ம பிள்ளையோடு சேர்ந்து மூணு பேரும் சந்தோசமா தான் இருக்கோம். ஆனா இதெல்லாம் எப்படி.?” என்று கேட்டாள்.
சில நொடி அமைதிக்கு பின்னே பெருமூச்சு எடுத்தவன்.“எல்லாத்துக்கும் காரணம் இருக்கு” என்றான்.
“அதான் என்ன காரணம்” என்று அவள் கேட்க.“நேத்து நான் மீனாவை பார்க்க தனம் வீட்டுக்கு போனேன்” என்று நேற்றைய தினம் நடந்த கதையை சொல்ல ஆரம்பித்தான் கதிர்.
(இடம் தனத்தின் இல்லம். நேற்றைய தினம் நடந்த காட்சி)
கேசவன் மற்றும் கஸ்தூரியின் பேச்சைக்கேட்டு தனம் தூக்க மருந்து கலந்த பானத்தை கதிருக்காக தயாரித்து வைத்து அவன் வருகைக்காக காத்து இருந்தாள்.
கதிர் நேரே மீனா இருக்கும் அறைக்கு சென்றவன். கரு கலைந்த கவலையில் அமர்ந்து இருந்த மீனாவை கோவத்தோடு முறைத்தான்.
“மாமா.“ என்று அவனை மீனா அழைக்க.
“ச்சி பேசாத. பொண்ணா நீ. எந்த ஒரு தாயும் செய்ய துணியாத காரியத்தை நீ பண்ணி இருக்கியே. நீயெல்லாம் என்னடி ஜென்மம்” என்று கோவமாக கதிர் கேட்க. மீனா சத்தம் போட்டு கதறி அழுதாள்.
அவள் கண்ணீரில் எந்த வித போலி தன்மையும் இல்லை என்பதை கதிர் அறிந்துக்கொண்டவன், “இப்போவாது சொல்லி தொலையென். உனக்கும் ஜீவா அண்ணனுக்கும் என்னதான் ஆச்சு, ஜீவா அண்ணா முல்லையை எந்த அளவுக்கு விரும்புச்சுன்னு எனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருந்தும் அண்ணன் எப்படி உன்னை கல்யாணம் பண்ணுச்சு” என்ற கதிரின் வார்த்தையில் மீனா மேலும் அழுதாள்.
“உன்னை தான் கேக்கறேன் சொல்லு” என்று மீண்டும் அவன் கேட்க, “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மாமா. அன்னைக்கு நான் எப்பவும் போல ஒரு receptionக்காக அந்த பொண்ணுக்கு மேக் அப் பண்ண தான் போனேன். எனக்கு வேலை முடிஞ்சதும் அப்பா வந்து அழைச்சிட்டு போவாருன்னு அம்மா சொன்னாங்க. நான் அப்பாவுக்காக காத்து இருந்தேன்.
அப்பாவும் அங்க வந்தாரு. அவரு என்னை சாராயக்கடை இருக்குற தெரு மூலையில நிற்க வச்சிட்டு அந்த கடைக்குள்ள போனாரு. அப்போ என் மூக்குல துணி வச்சி யாரோ என்னை பலவந்தமா காருக்குள்ள இழுத்து போட்டாங்க. அது மட்டும் தான் எனக்கு நினைவு இருக்கு. மறுநாள். மறுநாள் காலையில” என்று மீனா குலுங்கி அழுத்தவளின் கண்ணீரை பார்க்க கதிருக்கு பாவமாக இருந்தது.
“மறுநாள் காலையில நான் கண் விழிச்சு பார்க்கும் போது என் பக்கத்துல ஜீவா மாமா இருந்தாரு. நானும் அவரும் ஒண்ணா இருந்த மாதிரி அந்த மேத்தையில எங்க ஆடை எல்லாம் கலைந்து கிடந்தது.“ என்ற மீனா மேற்கொண்டு பேச முடியாமல் வெம்பி அழுதாள்.
“என்ன சொல்ற. ஜீவா அண்ண அங்க எப்படி.?” என்று கதிர் அதிர்ச்சி அடைய,
“எனக்கு தெரியல. எனக்கு எதுவுமே புரியல. நான் எப்படி அங்க போனேன். ஜீவா மாமா எப்படி அங்க வந்தாரு. எங்க ரெண்டு பேருக்குள்ள என்னாச்சு, இப்படி எதுவுமே எனக்கு தெரியாது” என்று மீனா கதறி அழுதாள்.
அந்த இடத்தில் மீனாவை எப்படி சமாதானம் செய்வது என்று கதிருக்கு தெரியவில்லை,
“அந்த நொடி எனக்கு செத்து போயிடாலாமுன்னு தான் மாமா தோணுச்சு. ஏன் எப்படின்னு நான் யோசிக்கும் நேரம் ஜீவா மாமாவும் மயக்கம் தெளிஞ்சு எழுந்துட்டாரு. ஆனா அவர்கூட அன்னைக்கு என்னை பார்த்ததும், அவரும் தான் இடிஞ்சி போயிட்டாரு” என்றவள் பொங்கி வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“மீனா நீ எப்படி இங்க. நான். எனக்கு. நமக்கு என்னாச்சுன்னு, அந்த இடத்துல ஜீவா மாமாவும் தான் பதறி போனாரு. எங்களுக்குள்ள என்னாச்சு. நாங்க எப்படி அங்க போனோம். இது எதுவும் எங்களுக்கு தெரியாது. ஆனா அப்போ ஜீவா மாமா போனுக்கு ஒரு கால் வந்துச்சு. அந்த போன்ல அவரு முதல்ல கோவமா பேசினாரு. அப்புறம் அவங்கள கெஞ்சினாரு. முடிவா உன்னால முடிஞ்சத பண்ணுடான்னு போனை வச்சிட்டாரு” என்று மீனா சொல்ல.
“அண்ணன் யார்கிட்ட பேசுச்சு” என்று கேட்டான் கதிர்.
“எனக்கு தெரியாது மாமா. ஆனா அந்த நொடியே மாமா என்கிட்ட கோவமா, உடனே இங்க இருந்து போவோம் வான்னு, என்னை அழைச்சிட்டு அங்க இருந்து வெளிய வந்துட்டாரு.
அப்புறம் தான். நம்மள மீறி நம்மை வச்சி யாரோ என்னமோ பண்ணுறாங்க. இப்போ அதெல்லாம் பேச நேரம் இல்ல. நான் என் Friendக்கு போன் பண்ணுறேன். நம்ம அவன் வீட்டுக்கு போகலாம். நமக்கு இன்னைக்கு கல்யாணம்ன்னு ஜீவா மாமா கோவமாவும், அதே சமயம் கட்டளையாவும் சொன்னாரு. அவர மீறி அங்க என்னால எதுவும் பேச முடியல. அந்த நிலைமையில எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுனே தெரியல. அவரும் எனக்கு மேற்கொண்டு யோசிக்க அவகாசம் கொடுக்கல. வேற வழியே இல்லாம தான் அன்னைக்கு நானும் ஜீவா மாமாவும் கல்யாணம் பண்ணிகிட்டோம்” என்று மீனா அவளுக்கும் ஜீவாவுக்கும் திருமணம் முடிந்த நிகழ்வை சொல்லி முடித்தாள்.
அவள் சொல்ல சொல்ல கதிரின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் தோன்றியது. இருப்பினும் எந்த பாவமும் பண்ணாத மீனாவிடம் என்ன கேட்பது என்று அவனுக்கும் தெரியவில்லை.
“உடம்ப பார்த்துக்கோ மீனா. இருந்தாலும் நீ கருவை கலைத்தது தப்பு” என்ற கதிர் மேற்கொண்டு அங்கே நில்லாமல் வேகமாய் அந்த அறையில் இருந்து வெளியேற.“என்ன நண்பா போகலாமா” என்று கேட்டான் நாகராஜன்.
“ம் போகலாம் டா. அக்கா மீனாவை பார்த்துக்கொங்க” என்று கதிர் சரஸ்வதியிடம் சொன்னவன். சோபாவில் படுத்தபடியே உறங்கிக்கொண்டு இருந்த தனத்தை கேள்வியாக பார்த்தான்.
“அது வேற ஒன்னுமில்ல தம்பி. கஸ்தூரி கூட சேர்ந்து இவ உனக்கு ஜூஸ்ல எதையோ கலந்து கொடுக்க பிளான் பண்ணா, நான் யாரு. உனக்கு அக்காவாச்சே. அதான் என் பொண்ணுன்னு கூட பார்க்காம இவ குடிச்ச டீல என்னோட தூக்க மாத்திரையை கலந்துட்டேன்” என்று சரஸ்வதி சொல்ல,
“நல்ல காரியம் பண்ணீங்க, தேங்க்ஸ் அக்கா” என்ற கதிர் தன் நண்பனுடன் அங்கிருந்து கிளம்பிய கதையை இன்று கதிர் கோவிலில் அமர்ந்தப்படி முல்லையிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.
===============================
“என்னங்க சொல்லுறீங்க. ஐயோ மீனா பாவம். யாரு இப்படியெல்லாம் பண்ணி இருப்பாங்க. அப்போ ஜீவா மாமாவுக்கு போன் பண்ணது யாரு. ஜீவா மாமா எப்படி அங்க போனாரு” என்று முல்லை பல கேள்விகளை எழுப்ப.
“இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது ஜீவா அண்ணன் மட்டும் தான்” என்றான் கதிர்.
“ஐயோ. மீனாவை நினைச்சா பாவமா இருக்கு. என்னதான் நான் உங்கள சின்னதுல இருந்து காதலிச்சு இருந்தாலும். என் விருப்பம் இல்லாம நமக்குள்ள நடந்த கூடலை என்னால ஏத்துக்கவே முடியல.
அதனால தான் நான் உங்ககிட்ட வெறுப்பா இருந்தேன். உங்ககிட்ட சண்ட போட்டேன். ஏன். நமக்கு குழந்தை பிறக்க போற செய்தி கூட எனக்கு முதல்ல சந்தோஷத்தை தரல.
எனக்கே இப்படி எல்லாம் தோணுச்சுனா, மீனா பாவம்ங்க, அவ மனநிலையில இருந்து பார்த்தா தான் அவளோட கஷ்டம் புரியும்” என்று முல்லை மீனாவுக்காக கவலைகொண்டாள்,
“ம். ஆனா ஒன்னு டி. கண்டிப்பா இந்த பிரச்சனைக்கும் கஸ்தூரிக்கும் சம்மதம் இருந்தே தீரும்” என்று கதிர் சொல்ல.“ம். கண்டிப்பா இருக்கும்” என்றாள் முல்லை.
“நான் நேத்து தனம் வீட்டுல இருந்து வந்ததுமே உன் தம்பியையும் நாகாவையும் அழைச்சிட்டு போய் கஸ்தூரியை தேடினேன். ஆனா அந்த குடி கெடுத்தவ எங்க போனான்னே தெரியல” என்று கதிர் ஆதங்கம் கொள்ள. முல்லையோ ஜீவாவிற்கு என்னானது. இப்போ ஜீவா எங்கே என்ற கேள்விக்கு விடையை யோசித்துக்கொண்டு இருந்தாள்.
நீண்ட நொடிகள் கடந்த நிலையில்.“சரி டி.
நீ ரொம்ப யோசிக்காத. இனி எல்லாத்தையும் மாமா நான் பார்த்துப்பேன். நீ வா நம்ம கிளம்பலாம்” என்ற கதிர். கோவிலில் இருந்து நேரே முல்லையை அவளுக்கு பிடித்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றவன். அவளுடன் சேர்ந்து தானும் காலை உணவை சாப்பிட்டு முடித்தான்.
“நிறைய சாப்பிட்டுட்டேன். சரி வீட்டுக்கு போகலாமா” என்று முல்லை கேட்க,
“பொறுமையா போகலாம். இப்போ நம்ம வேற இடத்துக்கு போகலாம் வா” என்றவன் முல்லையை அழைத்துக்கொண்டு சற்று தூரம் அவன் காரில் பயணம் செய்தான்.
பயணக்கலைப்பில் முல்லை சோர்வானவள் அப்படியே கண்கள் அசர்ந்து இருக்க. உறங்கும் தன் உடையாளய் ரசித்து பார்த்தப்படி காரை சீராக விரட்டினான்
கதிர்.
மதிய வெயில் காரின் கண்ணாடி வழியே பெண்ணவளை முகம் சுருங்க வைக்க. காரில் ACயை ஆன் செய்தவன், மெதுவாய் அவள் தலையை தன் தோள் மீது சாய்த்தபடி
காரை விரட்டினான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தில்.“மேடம்.“ என்று உறங்கும் தன் மனைவியை கதிர் எழுப்ப,
“ம்.“ என்ற சிணுங்களோடு எழுந்தவள், “தூங்கிட்டேனா.?” என்று கேட்டாள்.
“நைட் நேரத்துல நல்ல புள்ளையா தூங்கணும். அத பண்ணாம என்கூட சண்டை போட்டா இப்படி தான் பகலுல தூக்கம் வரும்” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.
“சரி சரி. என்னை அப்புறமா முறைக்கலாம், கீழ இறங்கு” என்றவன் தானும் காரில் இருந்து கீழே இறங்க.“எங்க வந்து இருக்கோம்” என்ற கேள்வியோடு இறங்கினாள் முல்லை.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மாமரங்கள் மட்டுமே தெரிய.
வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ந்த இடமாகவே இருந்தது அந்த மாந்தோப்பு.
“ஐ. என்ன மாமா சார். இத்தனை மாமரம் இருக்கு. ஐயோ அங்க பாருங்க மாங்காய்” என்று முல்லை துள்ளி குதித்தவள்,
“இது யாரோட தோப்பு. நான் மாங்கா கேட்டா எனக்கு தருவாகளா” என்று முல்லை ஏக்கமாக கேட்க. அவளின் ஆர்வத்தை தன் காரில் சாய்ந்தப்படி மார்புக்கு நடுவே கையை கட்டிக்கொண்டு ரசித்து பார்த்து இருந்தான் கதிர்,
“சொல்லுங்க மாமா சார், எனக்கு ஒரு மாங்கா தருவாங்களா” என்று மீண்டும் ஆசையாக அவள் கேட்க.
“இந்த தோப்புக்கு உடையவங்க அந்த குடிசைக்குள்ள தான் இருக்காங்க, உனக்கு வேணும்னா நீயே போய் கேட்டுக்கோ” என்றான்.
“ம். நான் கேட்டா அவங்க கொடுப்பாங்களா. வேணும்னா நம்ம காசுக்கொடுத்து கேக்கலாமா” என்று முல்லை கேட்க, “ம். போய் கேளு டி” என்றான்.
“நீங்களும் வாங்க மாமா சார். ஒண்ணா போய் கேக்கலாம்” என்று அவள் அழைக்க, “நம்ம என்ன பொண்ணு கேக்கவா போறோம், ஜோடியா போய் கேட்க. நீ மட்டும் போய் கேளு” என்றான்.
“ரொம்ப தான் பன்றிக. சரி நானே போய் கேக்குறேன், ஆனா உங்களுக்கு ஒரு கடி கூட தர மாட்டேன்” என்றவள், சிறு தயக்கத்துடன் மான் தோப்பின் நடுவே அமைந்து இருந்த குடிசைக்குள் நுழைந்தாள்.
“ஏங்க. வீட்டுல யார் இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டே முல்லை உள்ளே நுழைந்தவள், “இங்க இருக்குற மாங்காய் ஒண்ணே ஒன்னு நான் எடுத்துக்கவா” என்று கேட்டவளின் கண்கள் குடிசைக்குள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடியது
“ஒன்னு மட்டும் இல்ல. இந்த தோப்பே வேணும்னாலும் எடுத்துக்கோங்க முதலாளி அம்மா” என்றபடி குடிசைக்குள் கதிர் நுழைய.“என்ன. என்ன சொன்னிக. முதலாளி அம்மாவா.“ என்று ஆச்சிரியமாக கேட்டாள் முல்லை.
அவள் கேள்விக்கு இவன் பதில் சொல்லும் முன்னே அவனின் கரங்கள் தன்னவளின் இடையை சுற்றி வளைத்து அவளின் கழுத்தில் முகம் பதித்தவன்.
“ஆமா. முதலாளி அம்மா. இந்த மாந்த் தோப்புக்கு எஜமானியே நீ தான்” என்றான்.
“என்ன மாமா சார் சொல்லுறீங்க. இவ்ளோ பெரிய தோப்பு நம்மளோடதா” என்று இவள் நம்ப முடியாமல் மீண்டும் கேள்வி எழுப்ப,
“ஆமாடி பொண்டாட்டி. இந்த தோப்பு தான் என் ரவா லட்டுக்கு இந்த மாமன் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு” என்றவன்,
மனம் நிறைந்த மகிழிச்சியோடு முல்லையின் உச்சந்தலையில் இதழ் பதித்தான்.
துன்பத்தில் மட்டும் இல்லாமல், இன்பத்திலும் கூட கண்கள் இரண்டும் ஈரமாகும் என்பதை போல. முல்லையின் மான் விழிகளில் ஆனந்த கண்ணீர் கசிந்தது.
“இனிமே நீ எதுக்காகவும் அழவே கூடாது டி. போதும். நம்ம அழுதது எல்லாம் போதும். இனி நம்ம சந்தோசமா வாழலாம்” என்றான் முழு காதலுடன்.
“நான் ஒரு மாங்காய்க்கு தானே ஆசைப்பட்டேன். நீங்க என்ன இவ்ளோ பெரிய தோப்பே வாங்கி கொடுத்து இருக்கிங்க” என்று அவள் கொஞ்சும் குரலில் கேட்க.
“உன் மாமன் யாருன்னு உனக்கு தெரியாதாக்கும், நீ ஆசைப்படுறது எதுவா இருந்தாலும், அது நீ ஆசைப்பட்ட அளவை விடவே அதிகமா உனக்கு வாங்கி கொடுப்பேன்” என்றவன் செல்லமாக அவள் நாசியை சீண்டினான்.
“ஹாங். சார் இவ்ளோ காதலை மனசுல வச்சிக்கிட்டு தான் என்கிட்ட அப்படி சண்டை போட்டீங்களாக்கும்” என்றவள் பொய்யாக கோவம் க்கொண்டு குடிசையில் இருந்து வெளியே வந்தாள்.
அவள் சென்றதும்.“ஹாங். நீ மட்டும் என்னவாம்” என்று இவனும் அதேபோல பொய்யாக கோவம் கொண்டப்படி வெளியே வர, அந்த தோப்பின் அழகை ரசித்தபடி நின்று இருந்தாள் முல்லை.
“என்னடி. ஒரு மாங்காய் பரித்து தரவா” என்றவன். முல்லைக்காக மரத்தில் தொங்கும் கனிந்த பழத்தை தேடிக்கொண்டு இருக்க,
“ஆமா. உங்ககிட்ட நான் கேட்கனுமுன்னே இருந்தேன், இத்தனை வருஷம் இல்லாம. உங்கள தான் நான் லவ் பண்ணேன்னு நீங்க எப்படி தெரிஞ்சிகிட்டிங்க.? என்று முல்லை சந்தேகமாக கேட்டாள்.
“அதுவா.“ என்று கதிர் சொல்லும் முன்னே. ஒரு மாங்காயை தேடி பறித்தவன் “ஆ.“ என்று கத்தியதும்,
“ஐயோ மாமா சார்.“ என்று முல்லை அலற, யாருக்கு என்னானது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
–தொடரும்