Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 60

CHAPTER 60

முல்லை – 60

By Roja Roslin · October 29, 2026

0

தன்னிடம் கதிர் காதலை தெரியப்படுத்திய கணம் முல்லைக்கு வானில் பரப்பதை போல எண்ணம் எழுந்தது.

“நீங்க. நீங்க உண்மையாவே என்னை தான் காதலிச்சீங்களா.“ என்று முல்லை சந்தேகமாக கேள்வி எழுப்ப.

“சாகும் வரை உன்னை மட்டுமே காதலிப்பேன் டி” என்றான் கதிர்.

அவன் இதயத்தில் இவள் தலை சாய்ந்து இருக்க. சட்டென்று அவன் இதயப்பகுதியின் KM எழுத்தை வருடியவள். தன் அழகான விழிகளால் அவனை பார்க்க. அவள் பார்வைக்கு அர்த்தம் விளங்கிகொண்டவன்.

“M னா நீ மட்டும் தான் டி. என் முல்லை. என் மகாராணி. என் மனையாளி. என் மாயாக்காரி. என் மயிலாஞ்சி. என் மிளகாய் வத்தல். இப்படி எல்லா Mமும் நீ மட்டும் தான்” என்ற கதிர் செல்லமாய் அவள் நுனி மூக்கில் தன் நாசியை வைத்து செல்லம் கொஞ்சினான்.

இதெல்லாம் கனவா நினைவா என்று இந்த நொடி வரை முல்லையால் நம்ப முடியாத நிலையில்.

“ஹாப்பி பர்த்டே அண்ணி” என்று கையில் இனிப்புடன் இவர்களின் முன்னே வந்தாள் ரோஜா.

“பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா” என்று வேலனும் கையில் இருந்த கடலை மிட்டையை முல்லையிடம் நீட்ட,

“டேய். உன் அக்காவுக்கு ஒரு சாக்லேட் கூட வாங்கி தர மாட்டியா” என்று கேட்டான் கதிர்.

“கண்ட ரசாயன பொருள் போட்டு தயார் பண்ற சாக்லேட் எல்லாம் என் கையாள என் அக்காவுக்கு வாங்கி தர மாட்டேன். அதனால உங்கள மாதிரியே இருக்குற மலாட்டையை க்கொண்டு தயாரித்த கடலை மிட்டையை கொடுத்தேன்” என்று வேலன் சொல்ல.

“ஐயோ. உங்க மாமா மச்சான் சண்டை எப்போ தான் தீரும்” என்று கேட்டாள் ரோஜா.

“பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா” என்று நாகராஜனும் முல்லைக்கு வாழ்த்து சொல்ல.“அப்போ நீங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து தான் இந்த ஏற்பாட்டை பண்ணிங்களா” என்று கேட்டாள் முல்லை.

“ஆமா. பின்ன உனக்காக வேற யாரு பண்ணுவாங்க” என்று கதிர் கேட்க.

“ஹ்ம். இதுவே லேட் தான். நீங்க ரெண்டு பேரும் தான் ஆரம்பத்துல இருந்தே லவ் பண்ணி இருக்கீங்க. ஆனா பாருங்க ஒருவர் மேல ஒருவர் வச்சிருக்கிற காதலை இதுவரை ஒருவர் கூட உணராமல் தான் இருந்து இருக்கிங்க” என்று விரக்தியாக சொன்னான் வேலன்.

“டேய். எனக்கு என்னடா தெரியும். ஊர் திருவிழா அப்போ ஆசை ஆசையா நான் என் காதலை இவகிட்ட சொல்லலாமுன்னு போகும் போது தான் என் அண்ணன் கையில ஒரு லெட்டர் வச்சிக்கிட்டு முல்லையை அவரு காதலிக்கிறதா சொன்னாரு” என்று கதிர் சொல்ல.

“ஹாங் அவரு தானே சொன்னாரு. ஜீவா மாமாவை காதலிக்கிறதா நான் உங்ககிட்ட சொன்னேனா?” என்று கோவமாக கேட்டாள் முல்லை.

“அக்கா அக்கா இரு. அவர் மேல மட்டும் இதுல குத்தம் சொல்ல முடியாது. ஏன் நீ மட்டும் இத்தனை நாளா இவரு மீனாவை லவ் பண்ணுறதா தானே நினைச்சுகிட்டு இருந்த” என்று வேலன் கேட்க.

முல்லை ஆம் என்ற ரீதியில் தலை அசைத்தாள்.

“ஆகமொத்தம் ரெண்டு பேரும் உங்க காதலை சொல்லாம மாரி மாரி உங்கள நீங்களே கஷ்டப்படுத்தி பார்த்து இருக்கிங்க” என்று நாகராஜன் சொல்ல.

“ஆனா இதுல வாத்தி மேல தான் தப்பு. அண்ணி பாவம்” என்றாள் ரோஜா.

“அம்மா நான் என்ன பண்ணேன்” என்று கதிர் கேட்க.

“பின்ன. மீனா அண்ணியை நீங்க காதலிக்கவே இல்லைனு முல்லை அண்ணிகிட்ட சொல்லி இருந்தா. இவங்க என்னைக்கோ உங்க காதலை ஏத்துகிட்டு இருந்து இருப்பங்களே” என்று ரோஜா சொல்ல,

“ஆனா நான் மீனாவை காதலிக்கிறேன்னு கூட தான் இவகிட்ட சொன்னேதே இல்லை” என்றான் கதிர்.

“மீனாவை காதலிக்கிறதா நீங்க சொன்னது இல்லை தான். ஆனால் நீங்க மீனாவை காதலிக்கிறதாக மூச்சிக்கு 300 முறை மீனா சொன்னதை நம்பி தான் நானும் அது உண்மை என்று நினைத்தேன்” என முல்லை சொல்ல,

“ஆக மொத்தம் நீங்க ரெண்டு பேரும் பேசாததால நடுவுல இருக்குறவுங்க கும்மி அடிச்சிட்டு போயிட்டாங்க” என்றான் வேலன்.

“அப்படி இல்லடா வேலா. அன்னைக்கு மீனா ஒரு லெட்டரையும் ஆதாரமாக காட்டி இவரு மீனாவுக்கு எழுதுன காதல் கடிதம் தான் அதுன்னு சொன்னதால தான் நான் இவரும் மீனாவை நேசிக்கிறார் என்று நம்பினேன்” என முல்லை சொல்ல

“அட அந்த லெட்டர் என் நண்பன் உனக்காக எழுதிய கடிதம் பாப்பா. எப்போ ஜீவா அண்ணனும் நீயும் காதலிக்கிறதா ஜீவா அண்ணன் சொன்னாரோ. அந்த கடிதத்தை கதிர் கசக்கி கீழ போட்டுட்டான். அதை தான் மீனா எடுத்துட்டு வந்து உன்கிட்ட கதிர் அவனை விரும்பறதா சொல்லி இருக்கு” என்று நாகராஜன் சொல்ல.

“ஆனா இதெல்லாம் இத்தனை வருஷம் கடந்து உங்களுக்கு எப்படி தெரிஞ்சது” என்று கேட்டாள் ரோஜா.

“அதுமட்டுமா எங்களுக்கு தெரிஞ்சது. இன்னும் நிறைய விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டோம்” என்று கதிர் சொல்ல

“அப்படி என்ன விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டீங்க” என்று புரியாமல் கேட்டாள் முல்லை.

“அதெல்லாம் இப்போ பேச வேணாம். பொறுமையா பேசி தீர்த்துக்கலாம். இந்த நொடி உன்னுடைய பிறந்தநாளை நாம சந்தோஷமா கொண்டாடணும்” என்று கதிர் சொன்னவன். சுற்றி இருப்பவர்களை மறந்து தன் காதல் மனைவியை இதயத்தோடு அனைத்துக்கொள்ள.

“சரி சரி நள்ளிரவில் வெளியே வந்திருக்கோம். வீட்ல இருக்கிறவங்க நம்மை தேடுவாங்க. வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று வேலன் அழைக்க.

“இல்ல இல்ல. நீங்க எல்லாம் கிளம்புங்க. நாங்க எங்க வீட்டுக்கு போறோம்” என்றான் கதிர்.

கதிரின் வார்த்தையை கேட்டு முல்லை அவனை முறைக்க.

“என்னடி. நம்ம வீட்டுக்கு வர மாட்டியா” என்று கேட்டான் கதிர்.

“அதெல்லாம் அக்கா எப்போ வரலாமுன்னு தான் காத்துகிட்டு இருப்பாங்க. நீங்க அழைச்சிட்டு போங்க” என்று வேலன் சொல்ல.

“நண்பா. நீ இந்த காரை எடுத்துட்டு போ. நாங்க வேலன் காருல முருகன் ஐயா வீட்டுக்கு போறோம்” என்றான் நாகராஜன்.

“என்னடி நம்ம வீட்டுக்கு போகலாமா” என்று மீண்டும் கதிர் கேட்க,

“ம்.“ என்று வெட்கத்துடன் முல்லை சம்மதம் சொல்ல,

ரோஜா, நாகராஜன் மற்றும் வேலன் ஆகிய மூவரும் முருகனின் இல்லத்திற்கு செல்ல. கதிரும் முல்லையும் பாண்டியனின் வீட்டிற்கு சென்றார்கள்.

===================================

வழியெல்லாம் கதிர் இத்தனை காலம் தன்னை நினைத்து எழுதிய கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்துக்கொண்டே வந்தாள் முல்லை.

அவன் எழுதிய வரிகளில் ஒவ்வொரு எழுத்தையும் உன்னிப்பாக வாசித்தவளின் முக பாவத்தை கதிரும் ரசித்துக்கொண்டே மகிழுந்தை குன்னக்குடியை நோக்கி விரட்டினான்.

சில மணி நேரத்தில் இவர்கள் பாண்டியனின் இல்லத்தை அடைந்து இருக்க. காரில் இருந்து இறங்கிய முல்லை தயக்கத்துடனே வாசலில் நின்று இருக்க.

“உள்ள வாடி” என்றான் கதிர்.

அவன் அழைத்தும் உள்ளே செல்லாமல் நின்று இருக்க.

“என்னடி. இன்னும் மாமன் மேல கோவமா.?” என்று கேட்க.

“கோவம் எல்லாம் இல்ல. வருத்தம் தான்” என்றாள் வாடிய முகத்துடனே.

முல்லையின் அருகே சென்று அவள் கரங்களை பற்றியவன்.“இனி பழசை எல்லாம் நினைத்து நம்ம வாழ்க்கையை நாம்மே கெடுத்துக்க வேண்டாம்ம் டி. உள்ள வா” என்றவன். அவளை கையோடு அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.

கிட்டத்தட்ட ரெண்டு மாதங்கள் கடந்து மீண்டும் பாண்டியனின் இல்லத்திற்கு திரும்பிய முல்லையின் முகத்தில் மகிழ்ச்சி இருக்கதான் செய்தது.

“மணி 1am ஆச்சு. மாமா உனக்கு சாப்பிட என்ன ரெடி பண்ணட்டும்” என்று கதிர் கேட்க.

“நைட் ஒரு மணிக்கு யாராவது சாப்பிடுவாங்களா?” என்று கேட்டாள் முல்லை.

“பசி வந்தா நேரம் காலம் எல்லாம் பார்க்கக்கூடாது. சரி சொல்லு என்ன சாப்பிடலாம்” என்று அவன் கேட்க.

“ம். எனக்கு பசிக்குதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று ஆச்சிரியமாக கேட்டாள்.

“அதெல்லாம் உன் கண்ணை பார்த்தே மாமன் நீ என்ன நிக்கிறன்னு கண்டு பிடிப்பேன் டி” என்று கதிர் சொல்ல.

“யாரு. . நீங்களா. ஹாங் ஆமா ஆமா. நல்லா பிடிப்பீங்க” என்று ஏளனமாக சிரித்தாள்.

அவள் தன்னை கேலி செய்கிறாள் என்று அறிந்து இருந்த கதிரோ.“அங்க மட்டும் என்ன வாழுது. நீ கூட நானா சொல்லுற வரைக்கும் நான் உன்ன தான் காதலிக்கிறேன் என்ற உண்மையை நீயும் தானே கண்டுபிடிக்கல” என்று கதிர் கேட்க.

“

அது, அது ஆமா. ஆனா நீங்களும் நானும் ஒன்னு இல்ல. எப்பவும் காதல் விஷயத்துல ஆம்பளைங்க தான் உஷாரா இருக்கனும்” என்றாள் முல்லை.

“ஆம்பளையோ பொம்பளையோ. இந்த விஷயத்துல தப்பு பண்ணது நம்ம ரெண்டு பேரும் தான்” என்று கதிர் சொல்ல.

“தப்பா. , நம்ம என்ன தப்பு பண்ணோம்” என்று புருவம் உயர்தினாள் முல்லை.

தன் மனைவியின் கேள்விக்கு பதில் தரும் முன்னே அவளை தன் இதயத்தோடு இணைத்துக்கொண்டவன்.

“ஆமா டி. தப்பு நம்ம ரெண்டு பேர் மேலையும் தான். என்னதான் நம்ம ஒருவரை ஒருவர் உயிரா காதலித்து இருந்தாலும். அந்த காதலை நம்ம சொல்லிக்காம இருந்தோம் பாரு. அது தான் நம்ம பண்ண பெரிய தப்பு” என்றான் கதிர்.

“ஆனா. ஒரு சிலர் காதல் எல்லாம் சொல்லாமலே புரியுமுன்னு சொல்லுவாங்களே.“ என்று முல்லை மீண்டும் ஒரு கேள்வியை எழுப்ப.

“ம். ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் புரிதல் ரொம்ப கம்மியா இருக்கு போல” என்றான் கதிர்.

“ம். ஆனா எனக்கு இன்னோரு சந்தேகம்” என்று முல்லை மேலும் ஒரு கேள்வியை கேட்டுக்கும் முன்னே” அடியே. மணியாகுது. எந்த சந்தேகமா இருந்தாலும் நீ அப்புறமா கேக்கலாம். வா முதல்ல போய் சாப்பிடலாம்” என்ற கதிர். வேகமாக முல்லையை அடுப்பணைக்குள் அழைத்து சென்றான்.

“ரெண்டு நாளா இந்த வீடு பூட்டி தானே இருந்துச்சு. இப்போ சட்டுனு நீங்க எப்படி சாப்பாடு பண்ண முடியும். அதுக்கு தேவையான பொருள் எல்லாம் யாரு, உங்க பாட்டியா எடுத்துட்டு வருவாங்க” என்று முல்லை இடுப்பில் கையை வைத்துக்கொண்டு சட்டம் பேச.

“நீ உண்மையாவே கேட்டரிங் தான் படிச்சியா” என்று கேட்டான் கதிர்.

“இங்க பாருங்க, என் படிப்பை பற்றி குறை சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்” என்ற முல்லையை பார்த்து அழகாய் சிரித்த கதிர்.

“சரி தாயி. இனி குறை சொல்லல” என்றவன். அடுப்பணையில் இருந்த கோதுமை மாவை நீர் விட்டு கரைத்து, அதில் முழு சீரகம் உப்பு காஞ்ச மிளகாய் என்று இன்னும் இதர மளிகை பொருளை சேர்த்து தோசை கல்லை அடுப்பில் வைத்து கோதுமை தோசையை தயார் செய்துகொண்டு இருந்தவனை ஆச்சிரியமாக பார்த்து இருந்தாள் முல்லை.

தன்னை தான் தன்னவள் கவனித்துக்கொண்டு இருக்கிறாள் என்று அறிந்தவன் முல்லை கண் இமைக்கும் நொடிக்குள் அவளை அலெக்காக தூக்கி அடுப்பணை மேடையில் அமர்த்தியவன்.

“நான் சூடா தோசை போட்டு தறேன். டக்கு டக்குனு சாப்பிடணும்” என்று சொல்ல.

“ம் தோசைக்கு என்ன தொட்டுக்குறது” என்று கேட்டாள்.

“தோசைக்கு நீ என்னை தொட்டுக்கோ. ஆசைக்கு நான் உன்னை தொட்டுக்குறேன்” என்று கதிர் அவளிடம் காதலை பொழிய. சட்டென்று முல்லையின் முகம் வாடி போனது.

“என்னடி என்னாச்சு. தோசைக்கு சட்னி தான் வேணுமா” என்று கதிர் புரியாமல் கேட்க.“அதெல்லாம் இல்ல. எனக்கு. எனக்கு உங்க மேல இன்னோரு விஷயத்துல பயங்கரமான கோவம் இருக்கு” என்றாள்.

“என்ன. அப்படி என்ன கோவம் உனக்கு. அதான் நான் அத்த மாமாக்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேனே.“ என்று கதிர் சொல்ல.

“அந்த கோவம் எல்லாம் இல்ல. என்னதான் நீங்க என்னை விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணாலும், நம்ம முதல் இரவு நம்ம ரெண்டு பேர் சம்மதத்தோட. ஒருவரை ஒருவர் நம்ம புரிஞ்சிகிட்ட பிறகு தான் நடக்கணும்ன்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா நீங்க என்னானா.“ என்ற முல்லையின் வார்த்தை அந்த இடத்தில் அவளின் கண்ணீரால் தடைப்பட்டது.

முல்லையின் கண்ணீர் அவர்களின் இயல்பு நிலையை மாற்றி இருக்க. அங்கே சட்டென்று அமைதி நிலவியது.

நல்ல நேரத்தில் தானும் கவலைக்கொண்டு கதிரையும் கஷ்ட்டப்படுத்துகிறோம் என்று எண்ணிய முல்லை அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டவள்.

“சாரிங்க. இனி முடிஞ்ச கதையை பேச வேணான்னு சொன்ன பிறகும் நான் இதெல்லாம் பேசுறது சரியில்ல. சாரி” என்று முல்லை அவனிடம் மன்னிப்பு கேட்க.

“சரி நீ சாப்பிடு” என்று மேலும் ரெண்டு தோசையை அவள் தட்டில் வைத்தான்.

“ம். இந்தாங்க. நீங்களும் சாப்பிடுங்க” என்று முல்லை தன்னை தானே சமாதானம் செய்துகொண்டவள் அவளே கதிருக்கு தோசையை ஊட்டிவிட, இருவரும் ஒன்றாக இரவு 2 amமணி அளவில் சாப்பிட்டு முடித்தார்கள்.

“ஆமா. நீங்க மீனாவை பார்க்க போனதா வேலன் சொன்னானே. அங்க என்ன தான் நடந்துச்சு. கஸ்தூரி சித்தியை நீங்க பார்த்திங்களா.“ என்று முல்லை கேட்க.

“இப்போ எந்த விவரமும் உனக்கு தெரிய வேண்டாம்ம். முதல்ல நம்ம போய் நிம்மதியா படுத்து தூங்கி. நாளைக்கு முதல் வேலையா கோவிலுக்கு கிளம்புவோம்” என்று கதிர் சொல்ல.

அவன் தன்னிடம் எதையோ மறைக்கிறான் என்று தெரிந்துகொண்டாள் முல்லை.

==================================

இருவரும் அடுப்பணையில் இருந்து நேரே அவர்களின் அறைக்கு செல்ல.

எப்போதும் போலவே கதிர் தரையில் பாயை விரித்தான்.

அடுப்பணையில் வைத்து அவன் மனதை இவள் கஷ்டப்படுத்தும் விதமாக பேசியதால் தான் கதிர் தனியே படுக்க போகிறான் என்று முல்லை எண்ணியவள் தயக்கத்துடன் கட்டிலில் அமர போக.

“ஏய் இரு இரு, இங்க வா. வந்து பாயில படு” என்றான் கதிர்.

“என்ன நான் பாயில படுக்கணுமா.“ என்று முல்லை முகம் சுழிக்க,

“ஆமாடி. பிரசவம் முடியுற வரைக்கும் நீ பாயில தான் படுக்கணும்” என்றவன். அவள் படுக்க போகும் பாய்க்கு அருகே இன்னோரு பாயையும் விரித்து.“ம் வா தூங்கலாம்” என்றான்.

“நீங்க படுங்க. நான் தோட்டதுக்கு போயிட்டு வரேன்” என்ற முல்லை குளியலறை சென்று நைட்டியை மாற்றிக்கொண்டு கதிரின் அருகே வந்து படுக்க.

இரண்டு கைகளையும் தலைக்கு கீழ் கொடுத்து. வெட்டத்தை பார்த்து ஆழ்ந்த யோசனையில் படுத்து இருந்தான் கதிர்.

“என்னாச்சு இவருக்கு. அதான் பாதி பிரச்சனை முடிஞ்சிடுதே. இன்னும் ஏன் ஒரு மாதிரி இருக்காரு” என்று யோசித்துக்கொண்டே முல்லை அவன் அருகே அமர்ந்து அவனையே குறுகுறுவென பார்த்து இருக்க.

“என்னடி அப்படி பாக்குற. தூங்கு” என்றான்.

“நான் தூங்குறது இருக்கட்டும். என்னாச்சு, ஏன் சட்டுன்னு ஒரு மாதிரி ஆகிட்டீங்க” என்று அவள் கேட்க. அவளை அழுத்தமாக பார்த்தவன்.“ஒண்ணுமில்ல. நீ படுத்துக்கோ” என்றான்.

“என்னாச்சுங்க. என்கிட்ட எதாவது கேட்கணுமா” என்று அவள் கேட்டதும்.

“இல்ல. உங்கிட்ட ஒன்னு சொல்லணும்”என்றான் தயக்கத்துடன்.

“என்ன சொல்லணும். சொல்லுங்க.“ என்று அவள் அவன் சொல்ல போகும் செய்தியை கேட்க காத்து இருக்க.

“அது. அது எப்படி சொல்லுறதுனு தெரியல. நான் இப்போ சொன்னா நீ அதை எப்படி புரிஞ்சிப்பன்னு கூட தெரியல” என்று தயக்கத்துடன் பேச.

“என்னங்க. எதாவது பிரச்சனையா” என்று முல்லை சிறு அச்சதுடனே கேட்டாள்.

தன் அருகே தரையில் கால்களை கட்டிக்கொண்டு முல்லை அமர்ந்து இருக்க. படுக்கையில் இருந்து எழுந்து அவள் அருகே கதிரும் அமர்ந்தவன். சிறு தயக்கத்துடன் அவள் கரங்களை பற்றி. அவளின் அடி வயிற்றில் தன் கரங்களை வைத்து.

“என்னை மன்னிச்சுடு டி ரவா லட்டு. அன்னைக்கு. அன்னைக்கு செந்தில் வீட்டுல” என்று கதிர் அவன் வார்த்தையை இழுக்க,

“விடுங்க. இப்போ ஏன் அத பற்றி பேசுறீங்க.“ என்று முல்லை அவன் பேச்சை பாதியில் நிறுத்தினாள்.

“இல்லடி. நான் சொல்லுறத கேளு. அன்னைக்கு செந்தில் வீட்டுல. நான். நான் உங்கிட்ட அப்படி நடந்துக்க காரணம்” என்று கதிர் மேலும் தயங்க.

அவன் என்ன சொல்ல முயற்சிக்கிறான் என்ற குழப்பத்தில் அவனை மட்டுமே கவனித்து இருந்தாள்.

“அன்னைக்கு அந்த செந்தில் நாதாரி தான் அவங்க முதல் இரவுக்கு அவன் சாப்பிட வாங்கி வச்ச பல்லான லேகியத்தை எனக்கே தெரியாம நான் குடிச்ச ஜூஸ்ல

கலந்து கொடுத்துட்டான் டி, அத நான் அன்னைக்கு குடிச்சதால தான் உன்கிட்ட உன் சம்மதம் இல்லாம” என்று கதிர் மேலும் தயங்க. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சரியாக புரிந்துகொண்டாள் முல்லை.

கதிர் பக்க நியாயத்தை தெரிந்துகொண்ட முல்லை அவனை அழுத்தமாக பார்த்தவள்.“ அப்போ நீங்களா என்னை.“ என்று கேட்கும் முன்னே.

“ஐயோ இல்லடி. சத்தியமா நான் சுயநினைவோடு உன்ன.“ என்று கதிர் மேலும் பேச முயன்றவனின் முன்னே கைகளை நீட்டி அவன் வார்த்தையை தடுத்தவள் அவனை அழுத்தமாக முறைத்து பார்த்தாள்.

“அடியே. அப்படி பார்க்காதடி. நான். நான் பண்ணது தப்பு தான். ஆனாலும்” என்று கதிர் மேற்கொண்டு பேசும் முன்னே. முல்லை குப்பென்று சத்தமாக சிரித்து இருந்தாள்.

இந்த செய்தியை கேட்டு முல்லை ஆத்திரம் அடைவாள் என்று கதிர் எண்ணி இருக்க, அவளின் இந்த நகைப்பு அவனுள் பல கேள்விகளை எழுப்பி இருக்க.

“இப்போ ஏண்டி சிரிக்கிற” என்று கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் தராமல் மேலும் மேலும் அவனை பார்த்து அவள் சிரிக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கதிர்.“அடியே என்ன பைத்தியம் மாதிரி சிரிக்கிற.“ என்று கேட்டான்.

“அது. அது வந்து.“ என முல்லை மேலும் சிரிக்க.“ஏய் இப்போ சொல்ல போறியா இல்லையா” என்று கதிர் குரலை உசத்தினான்.

“இல்ல, நான் கூட.“ என்று முல்லை மேலும் சிரித்தவளை கதிர் முறைத்து பார்க்க.

“இல்லங்க, நான் கூட உங்களுக்கு ஆசை வந்து தான் என்னை.“ என்று முல்லை மேலும் அவள் வார்த்தையை வளர்க்கும் முன்னே சத்தமாக சிரித்தவளை கதிர் அனல் பறக்கும் பார்வை பார்த்தான்.

“முறைக்காதிங்க. நான் உண்மையை தானே சொன்னேன். அன்னைக்கு செந்தில் அண்ணன் அந்த லேகியத்தை தரலைனா. உங்களுக்கு எங்க ஆசை வர போகுது. எனக்கு எங்க பிள்ளை பிறக்குறது” என்று முல்லை கேட்க.

“ஓ. அப்போ அவன் கொடுத்த லேகியத்தால் தான் நமக்குள்ள அதெல்லாம் நடந்துச்சுனு சொல்லுறியா” என்று கேட்டான் கதிர்.

தன்னிடம் கோவம் கொண்ட கதிரின் தாடியை அவள் வசம் இழுத்தவள்.“அப்படினு நானா சொன்னேன். நீங்க தானே சொல்றிங்க” என்று முல்லை மீண்டும் கிண்டலாக சிரிக்க.

“வேணாடி. வயத்துல பிள்ளை இருக்குனு பார்க்குறேன். இல்லைனு வையென்” என்று கதிர் அவளை கட்டி பிடிப்பது போல பாவனை செய்ய.“ஐயோ பயந்துட்டேன்” என்று மேலும் சிரித்தாள் முல்லை.

“அடியே. என்ன விட்டா ரொம்ப லந்து பண்ற. என்ன பயம் விட்டு போச்சா.“ என்று அவளை கோவமாக அவன் நெருங்க,

உண்மையில் அவன் ஆத்திரம் அடைந்தான் என்று எண்ணிய முல்லை.

பயந்துப்போய் அமர்ந்த வண்ணமே நடுங்கியவளை பார்த்து கதிர் இப்போது சத்தமாக சிரித்தான்.

அவன் சிரிப்பில் முல்லை அவனை கோபமாக முறைக்க.“அவ்வளவு பயம் இருக்குதானே. அப்புறம் ஏன் என்கிட்ட இப்படி சண்டித்தனம் பண்ணுற” என்று கதிர் கேட்க.

“பயமா. . எனக்கா. உங்ககிட்டயா. வாய்ப்பில்லை கதிரு. வாய்ப்பில்லை” என்றாள் முல்லை.

“ஏய். என்ன சொன்ன கதிரா. அடியே நான் உனக்கு புருஷன். புருஷனை பேர் சொல்லி எல்லாம் கூப்பிடக்கூடாது, தெரியும் இல்ல.?” என்று கதிர் கேட்க

“ஓ. . அப்படியா. அப்ப நீங்க மட்டும் பொஞ்சாதியை வாடி போடின்னு கூப்பிடலாமா.?” என்று பதிலுக்கு இவள் ஒரு கேள்வியை எழுப்பினாள்.

“இப்ப என்ன.? நான் உன்னை வாடி போடின்னு கூப்பிடக்கூடாது அவ்வளவு தானே,

சரி டி ரவா லட்டு

இனிமே டி போட்டு கூப்பிட மாட்டேன் டி”

என்று கதிர் சொல்ல.

“சரிடா கதிர் பையா. நீ இனி அப்படியே கூப்பிடு. நானும் உன்னை வாடா போடான்னு கூப்பிடுறேன்” என்றாள் முல்லை.

“என்னடி. வர வர வாய் ரொம்ப நீளுது. பழைய கதிரை பாக்கணுமா.?” என்று கதிர் கேட்க,

“ஐயோ வேண்டாம்ம் வேண்டாம்ம். அந்த சிடுமூஞ்சி கதிர் எனக்கு வேண்டவே வேண்டாம்ம். இந்த கதிரே நல்லாதான் இருக்கு” என்று முல்லைச் சொல்ல.

“அப்படியா. அப்போ இந்த கதிரை உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கொஞ்சும் குரலில் அவன் கேட்க.

“ம். ரொம்ப பிடிச்சிருக்கு” என்று முல்லை அழகாய் தலையசைக்க.

“அப்படி என்ன உனக்கு பிடிச்சிருக்கு” என்று கதிர் கேட்க.

“ம். இப்படி நல்ல புள்ளையா சமத்தா என்கிட்ட உட்கார்ந்து பேசுற இந்த கதிரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவள், மீண்டும் அவன் தாடியை செல்லமாக வருடி கொடுத்தாள்.

தன்னை செல்லம் கொஞ்சும் அவள் கரங்களைப் பிடித்து முத்தமிட்ட கதிர், “ எனக்கும் இந்த ரவா லட்டை ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்படித்தான் அப்படித்தான்னு இல்ல. எனக்கு என் முல்லை எப்படி இருந்தாலும் பிடிக்கும்” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க.

இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலக்க. முல்லை வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

“ம். நேரமாகுது தூங்கலாமா” என்ற முல்லையின் குரல் குழைந்து இருக்க.“தூங்கணுமா” என்று கதிர் ஏக்கத்துடன் கேட்க.

“இப்பவே மணி மூணாச்சி” என்றாள் முல்லை.

“ஆமா மூணாச்சு, ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா. நம்மள மாதிரி காதல் ஜோடிகள் மூணு மணிக்கு மகிழ்ச்சியா இருந்தா தான் மோட்சம் கிட்டும்” என்று கதிர் சொல்ல.“ என்ன மோட்சமா.?என்ன சொல்றீங்க” என்று புரியாமல் கேட்டாள் முல்லை.

“அடி பைத்தியக்காரி. ஒரு குழந்தைக்கு அம்மாவாக போற. இது கூட தெரியல பாத்தியா, சரி சரி கவலைப்படாத, நான் உனக்கு கற்றுக் கொடுக்கிறேன்” என்று கதிர் சொல்ல

“என்ன கத்துக் கொடுக்கப் போறீங்க” என்று முல்லை தயங்க.

“அதுவா, அது.“ என்று மெல்ல மெல்ல அவன் விரல்களைக் கொண்டு முல்லையின் வதனத்தில் அவன் கோலமிட.

அவன் தொடுதலில் முல்லையின் உடல் சிலிர்த்து அடங்கியவள்.“ மாமா சார். என்ன பண்றிங்க” என்று அவனை கொஞ்சும் குரலில் கேள்வி கேட்க.

“இந்த மாதிரி என்னை நீ கூப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு.“ என்று அவளின் இதழ்களை அவன் வருடினான்.

“மாமா சார்.“ என்று மீண்டும் அவள் அழைக்க.

“இந்த குரலில் ஏதோ ஒரு மயக்கம் இருக்குடி” என்றவன் முல்லையின் தோள்களை பற்றி அவள் தேகத்தில் கொடியேன படர்ந்தவன்,

அவள் நெற்றி, கண்கள், நாசி, இதழ்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் ரசித்து ருசித்து அவளுக்கு முத்தமிட்டவனின் அதரங்கள் அவளை தொட தொட முல்லையின் மேனி எங்கும் ஆயிரம் மலர்கள் மலர தொடங்கியது.

அவன் முத்தங்கள் தொடர. அவளின் மொத்தமும் அவன் வசம் இணங்க.

பெண்ணவளின் கழுத்து வளைவில் இதழ் பதித்தவனின் சிலிர்பில், “ஐயோ.“ என்று அவள் அலறினாள்.

பசியில் தவித்த பிள்ளைக்கு விருந்திணை படைத்து அதை குழந்தை ருசிக்கும் முன்னே பந்தியில் இருந்து பிந்திக்கு செல் என்பதை போல இவர்களின் கூடல் பாதியில் தடைப்பட.

“என்னடி. என்னாச்சு” என்று குழைவாக கேட்டான் கதிர்.

“வயத்துல பாப்பா இருக்கும் போது இதெல்லாம்.“ என்று அவள் தயங்க.

“நீயே எனக்கு பெரிய பாப்பா தான் டி. மாமா அதெல்லாம் அசால்ட்டா டீல் பண்ணுவேன் பொண்டாட்டி. You don”t worry” என்றவன். இருந்தும் அவள் சம்மதத்திற்காக காத்து இருக்க.

பெண்ணவளின் மௌனமே அவனின் காதல் பயணத்திற்கு சம்மதம் கொடுத்து இருக்க,

மங்கையேனும் மலரின் நடுவே மறைந்து இருந்த மகரந்த தேனை. தேனி இவன் அந்த மலரே ரசிக்கும் வண்ணம் ருசித்து பறுகியவனின் காதலில் முல்லை பூ இவள் மீண்டும் தன் மணவாளனின் கூடலில் மகிழ்வுடன் கூடி இருக்க.

இங்கே காமம் தோற்று, காதல் வென்று, இல்லறம் அது நல்லறமாக மாறி இருந்தது.

–தொடரும்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!