Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 59

CHAPTER 59

முல்லை – 59

By Roja Roslin · October 29, 2026

0

முல்லையும் தன்னை காதலிக்கிறாள் என்ற உண்மையை அவளே தெரியப்படுத்தி இருக்க. இது கனவா இல்லை நினைவா என்று யூகிக்க முடியாத அளவில் கதிர் உறைந்து போய் நின்று இருந்தான்.

தன் மனதில் உள்ள காதலை இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவனிடம் தெரியப்படுத்த முடிந்ததை எண்ணி முல்லை கவலைக்கொண்டவள்.

“நீங்களே உடம்பு முடியாம இருக்கிங்க. இப்போ போய் நான் வேற உங்கக்கிட்ட தேவையில்லாததை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கேன்” என்ற முல்லை.

கண்களை துடைத்துக்கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.

தன்னை கடந்து சென்றவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கதிர் சிலையென நின்று இருக்க.

“அப்போ முல்லை என்னை தான் நேசிச்சாளா.?” என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்டவன் இந்த நொடி வரை அவன் காதலின் சொந்தக்காரி முல்லை என்ற உண்மையை அவளிடம் சொல்ல தவறி இருந்தான்.

கதிர் காதலை இவன் அவளிடம் சொல்லவில்லையே தவிர. முல்லை காதலை அவள் தெரியப்படுத்திய காட்சியினை எண்ணி உள்ளுற மகிழ்ந்தவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

“என் முல்லை. என் ரவா லட்டு என்னை தான் காதலிக்கிறாள்.“ என்று வாய் விட்டு மமகிழ்ந்தவன். கண்ணாடி முன்னே நின்று அவன் முகத்தை பார்க்க. அங்கே இவன் கண்ணுக்கு தெரிந்தது என்னவோ முல்லை இவனிடம் சொன்ன காதல் கதை தான்.

“மடையா மடையா. நீ சரியான மாங்கா மடையா தான் டா. அவ உன் மேல வச்சிருந்த காதலை புரிஞ்சிக்காம இத்தனை வருஷம் காதல் தோல்வியில் புலம்பிகிட்டு இருந்தியே. ச்சி உண்மையா நீ மடையன் தான்” என்று கதிர் தன்னை தானே நொந்துக்கொண்டவன். அவளை எண்ணியப்டியே கட்டிலில் படுத்து அவளை நினைத்து கனவு காணவும் ஆரம்பித்தான்.

இதே தருணம் தன் மனதில் இருந்த காதலை முல்லை நேருக்கு நேர் கதிரிடம் சொன்னதை எண்ணி முல்லையும் கலகத்துடன் தோட்டத்துப்பக்கம் நின்று இருக்க.

“என்ன அண்ணி. கொஞ்ச நேரம் நீங்க தூங்கலையா” என்று கேட்டுக்கொண்டே ரோஜா அங்கே வந்து சேர்ந்தாள்.

“இப்போ தூங்குனா நைட் தூக்கம் வராது ரோஜா” என்று முல்லை சொல்ல,

“என்னாச்சு அண்ணி எதாவது பிரச்சனையா” என்று கேட்டாள் ரோஜா.

“ஹாங். இல்ல இல்ல பிரச்சனை எல்லாம் இல்ல. ஆமா உன் கல்யாண வேலை எல்லாம் எப்ப ஸ்டார்ட் பண்ண போறோம்” என்று முல்லை கேட்க.

“நீங்க நம்ம வீட்டுக்கு வந்ததும் ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான்” என்றாள் ரோஜா.

“என்ன நான் வந்ததுமா. என்ன ரோஜா விளையாடுறியா” என்று முல்லை கேட்க.

“உண்மைய தான் சொல்லுறேன். நீங்க வாங்க அண்ணி நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றாள் ரோஜா.

“இல்ல ரோஜா. என்னை நீ கம்பெல் பண்ணாத” என்று முல்லை சொல்ல.

“ரோஜா. அம்மாடி ரோஜா.“ என்று தன் மகளை அழைத்தார் பாண்டியன்.

ரோஜா உள்ளே சென்றதும் மீண்டும் முல்லை தனிமையில் தோட்டத்தில் நடந்துக்கொண்டு இருந்தவள் மனதில் பாரம் கூடி போக.“பீச். அவசரப்பட்டு நம்ம இவரை நேசிச்ச விஷயத்தை சொல்லிட்டோமா?” என்று முல்லை கவலைக்கொள்ள.

இதே சமயம் கதிர் இருக்கும் அறையினுள் இருந்து முல்லையின் கைபேசி ஒலி எழுப்பியது.

“போனை இங்க வச்சிட்டு இவ எங்க போனா?” என்று பேசிக்கொண்டே கதிர் போனை on செய்ய.“அக்கா. நீ சொன்ன மாதிரி மீனா போன் நம்பரை டிரேஸ் பண்ணியாச்சு, அவங்க இப்போ தனம் வீட்டுல தான் இருக்காங்க” என்றான் வேலன்.

“ஓ. இதுக்கெல்லாம் மூலகாரணமா இருக்குறவுங்க தனம் வீட்டுல தான் இருக்காங்களா. இரு உடனே நான் கிளம்பி வரேன்”என்றான் கதிர்.

“ஹலோ. இது என் அக்கா போன் தானே. நீங்க ஏன் அவங்க போனை எடுத்தீங்க” என்று வேலன் கேட்க.

“உன் அக்காவே எனக்கு தான் சொந்தம். இதுல இந்த போனை எடுத்ததுக்கா நீ சீன் போடுற” என்று கதிர் கேட்க.

“போனை என் அக்காகிட்ட கொடுங்க” என்றான் வேலன்.

“டேய் அடங்கு டா. சரி சொல்லு இப்போ நீ எங்க இருக்க” என்று கதிர் கேட்க.

“ம். நானும் நாகா அண்ணனும் தனம் வீட்டு பக்கத்துல தான் இருக்கோம்” என்றான் வேலன்.

“சரி. நீ அங்கேயே இரு. நான் கிளம்பி வரேன்” என்ற கதிர் சற்றும் தாமதிக்காமல் தன் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி இருக்க. முல்லை சில நிமிடங்கள் கடந்து வந்து பார்த்தப்போது கதிர் அறையில் இல்லை என்று அறிந்துகொண்டு.“ரோஜா உங்க அண்ண எங்கே?” என்று அவளிடம் கேட்க.

“ரூம்ல தானே இருந்தாரு” என்றாள் ரோஜா.

“இல்ல ரோஜா. அவரு ரூம்ல இல்ல.“ என்று முல்லை கதிரை தேட.“பாப்பா கதிர் தம்பி அப்போவே பைக்ல வெளிய போயிடுது மா” என்றார் இசக்கி.

“இப்போதான் ஹாஸ்பிட்டல் போயி மருந்து மாத்திரை வாங்கிட்டு வந்து அவரை ரெஸ்ட் எடுக்க சொன்னோம். அதுக்குள்ள இவரு எங்க கிளம்பி போனாரு” என்று ரோஜா கேட்க.

“இது என்ன புது பழக்கம். வீட்டில் இருக்கிற ஆம்பளைங்க வெளிய போகும் போது பெண்களிடம் சொல்லிட்டு போற பழக்கம் இல்லையா” என்று கேட்டார் பார்வதி.

முல்லைத் தன் காதலை தெரியப்படுத்தியதால் தான் குழப்பத்தில் கதிர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்று எண்ணிய முல்லைக்கு மனக்குழப்பம் அதிகரிக்க. இதே சமயம் கதிர் முருகன் வீட்டில் இருந்து நேரே சென்றது என்னவோ தனத்தின் இல்லத்திற்கு தான்.

==============================

“என்னடா நண்பா நீ ஏன் இங்க வந்த” என்று நாகராஜன் கேட்க.

“என்ன முன்னால் காதலியை பார்க்க ஆசையா. உங்களுக்கு எல்லாம் அசிங்கமா

இல்ல. என் அக்கா உங்க மேல உயிரே வச்சிருக்கா. ஆனா நீங்க என்னன்னா என் அக்காவை அழ வச்சிட்டு இங்க வந்து சீன் போட போறிங்களா” என்று கேட்டான் வேலன்.

அவன் கேள்வியில் கதிர் அவனை ஏகத்துக்கும் முறைத்தவன்.“டேய் ச்சி வாயை மூடு. என்னடா விட்டா ஓவரா பேசுற. யாருக்கு யார் முன்னால் காதலி” என்று கதிர் கேட்க.“உங்களுக்கு தான். உங்களுக்கு மீனா முன்னால் காதலி தானே” என்று கேட்டான் வேலன்.

“டேய் மடையா, எனக்கு முன்னால், பின்னால், அந்த நாள், இந்த நாளுன்னு எல்லாம் நாளும் ஒரே காதலி தான். அது உன் அக்கா முல்லை மட்டும் தான்” என்று கதிர் சொல்ல.

“இது என்ன புது கதை” என்று கேட்டான் வேலன்.

“தம்பி. இது புது கதையெல்லாம் இல்ல பா. இது தான் உண்மை கதை. என் நண்பன் முல்லை பாப்பாவை தான் காதலிக்கிறான்” என்று நாகாவும் சொல்ல.

“இல்ல. நான் நம்ப மாட்டேன்” என்றான் வேலன்.

“நீ நம்பினாலும் சரி தும்பினாலும் சரி. என் காதலி முல்லை மட்டும் தான்” என்று கதிர் சொல்ல.

“ஐ கதிரு. வா பா உள்ள வா” என்று வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த கதிரை உள்ளே அழைத்தார் தனத்தின் அம்மா சரஸ்வதி.

“அண்ணா. இந்த அம்மா என்ன இவங்க பொண்ணையே எதிர்த்துகிட்டு கதிருக்கு இப்படி சப்போர்ட் பண்ணுது” என்று வேலன் கேட்க.“அவங்க நம்ம கதிரோட தீவிர பக்தர்” என்று நாகராஜன் சொல்ல

“ஓ. . பரவாயில்லயே.“ என்றான் வேலன்.

“தம்பி. தமிழ் நாட்டுல கதிருக்கு இப்படி வெறியர்கள் இருக்கும் வரை என் நண்பனை யாரும் ஒன்னும் பண்ண முடியாது” என்று நாகராஜன் சொல்ல,

“ஆமா. தமிழ் நாட்டு மக்களுக்கு வேற வேலை இல்ல பாருங்க. போங்க. போய் வந்த வேலையை பாருங்க. நான் ஒரு போன் பண்ணிட்டு வரேன்” என்று அங்கிருந்து சற்று தள்ளி சென்றான் வேலன்.

கதிரும் நாகராஜனும் தனத்தின் வீட்டுக்குள் செல்ல.“வாங்க கதிர் எப்படி இருக்கீங்க” என்று நலம் விசாரித்தாள் தனம்.

“உன்கிட்ட பேச எனக்கு ஒன்னுமில்ல. முதல்ல கஸ்தூரியை வெளிய கூப்பிடு” என்று கதிர் கோவமாக பேச.

“என் மேல ஏன் கோவப்படுற. நான் என்ன பண்ணேன்” என்று பவ்யாமாக பேசினாள் தனம்.

“ஏய். அதான் கதிருக்கு உன்கூட பேச பிடிக்கலையே. இன்னும் ஏன் நீ கதிரை இம்சை பண்ணுற. கதிரு நீ உக்காரு. நான் உனக்கு டீ போட்டு கொண்டு வரேன்” என்று சரஸ்வதி சொல்ல.

“எனக்கு அதெல்லாம் வேணா அக்கா. கஸ்தூரியை வர சொல்லுங்க” என்றான் கதிர்.

“கஸ்தூரி இங்க இல்ல கதிரு. யாரோ கேசவன் போன் பண்ணான்னு கஸ்தூரி கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் கிளம்பி போனாங்க. ஆனா மீனா உள்ள தான் இருக்கா” என்று சரஸ்வதி சொல்ல.

“நான் மீனாவை பார்க்கலாமா” என்று கேட்டான் கதிர்.

“உங்க குடும்பம் தான் மீனாவை ஹாஸ்பிடல்ல நிற்கதியா விட்டுட்டு போயிடுதே. இப்போ ஏன் நீங்க மீனாவை பார்க்கணும்” என்று தனம் கேட்க.

“நீ சந்துல சிந்து படாம ஓரமா போய் நில்லு”என்றான் கதிர்.

“கதிர். மீனா அந்த ரூம்ல தான் இருக்கா, “ என்று சரஸ்வதி சொல்ல.

“நாகா நீ இரு. நான் போய் மீனாவை பார்த்துட்டு வரேன்” என்ற கதிர் அவள் இருக்கும் அறைக்குள் நுழைய.

தனம் சற்றும் தாமதிக்காமல் கஸ்தூரியை கைபேசி வாயிலாக அழைத்தவள், கதிர் இங்கே வந்து இருக்கும் செய்தியை தெரியப்படுத்தி இருந்தாள்.

“இவன் ஏன் இப்போ மீனாவை பார்க்க வந்தான். இல்ல இல்ல. அவன் மீனாகிட்ட பேச கூடாது, அவகிட்ட பேசி அவங்களுக்கு எப்படி கல்யாணம் நடந்துச்சுனு கதிர் தெரிஞ்சிகிட்டா அப்புறம் நான் இத்தனை நாள் போட்ட பிளான் எல்லாம் வீனா போயிடும்” என்று கஸ்தூரி சொல்ல, அவரிடம் இருந்து கேசவன் கைபேசியை தன் வசம் வாங்கினான்.

“கதிர் இப்போ உன் வீட்டுல தானே இருக்கான். பேசாம கதிருக்கு மயக்கம் மருந்து கலந்த டீயை கொடுத்துடு” என்று கேசவன் சொல்ல,

“என்ன மயக்கம் மருந்தா” என்று தனம் வாயை பிளந்தாள்.

“தனம். உன் அம்மா வச்சி இருக்க தூக்க மாத்திரையை கதிருக்கு போட்டு கொடுத்துடு, “ என்று கஸ்தூரியும் சொல்ல.

“அப்படி பண்ணா நான் தானே மாட்டுவேன்” என்றாள் தனம்.

“இல்ல இல்ல நீ மாட்டிக்க மாட்ட. அந்த கதிரை கடத்தி வச்சி நான் முல்லையை என் இடத்துக்கு வர வச்சிடுவேன். அந்த கதிர் சுயநினைவோடு இருந்தா என்னால அவனை எதுவும் பண்ண முடியாது.

எனக்கு முல்லை வேணும்.

கஸ்தூரிக்கு கதிர் ஒழிஞ்சா தான் பாண்டியன் சொத்து மொத்தமும் மீனாக்கு கிடைக்கும். அதான் சொல்றேன். நீ உடனே கதிரை எப்படியாவது அங்கேயே இருக்க வைக்க பாரு” என்றான் கேசவன்.

“அது எப்படி. மீனாக்கு மட்டும் தான் சொத்தா. அப்போ என் தம்பிக்கு” என்று தனம் கேட்க.

“அட. உன் தம்பியை விடு. கதிர் கதை முடிஞ்சா எனக்கு முல்லையும் அவளோட சொத்தும் கிடைக்கும். அப்புறம் உனக்கு என்ன வேணுமோ அதை நான் பண்ணுறேன்” என்று கேசவன் அவன் ஒரு திட்டத்தை போட.

“தனம். அந்த சுந்தரேசனை போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க. இப்போ அந்த கதிர் கையில நான் மாட்டினா அவன் என்னை உயிரோட சமாதி கட்டுவான்.

Pls தனம். நீ எப்படியாவது அந்த கதிரை அங்கிருந்து போகாதப்படி பண்ணிடு” என்று கஸ்தூரி தனத்திடம் உதவி கேட்க.

நீண்ட நொடி யோசனைக்கு பிறகு.

“சரி நான் பார்த்துக்குறேன்” என்று சம்மதம் சொன்னாள் தனம்.

==========================

அன்றைய தினம் நேரம் இரவு 8pm தாண்டியும் கதிரிடம் இருந்து முல்லைக்கோ ரோஜாவுக்கோ எந்த தகவலும் இல்லாமல் போக.“என்ன அண்ணி இது. வாத்திக்கு போன் பண்ணா தான் எடுக்கலைனு பார்த்தா, இந்த நாகாவும் வேலனும் கூட போனை எடுக்கலையே” என்றாள் ரோஜா.

“ஒரு வேள நான் அவரை தான் காதலிச்சேன்னு சொன்னதால அவர் என்கிட்ட கோச்சுகிட்டு அவரோட வீட்டுக்கு போயிட்டாரா” என்று முல்லை தனக்குள் ஒரு கேள்வியை எழுப்பி இருக்க.

“அண்ணி அங்க பாருங்க உங்க தம்பி வராரு” என்றாள் ரோஜா.

“டேய் வேலா. உன் மாமா எங்கடா” என்று முல்லை கேட்க.“தெரியலையே அக்கா. அவரு என்கிட்ட கடைசியா தனம் வீட்டுல இருக்குற மீனாவை பார்க்க போறதா சொன்னாரு” என்று வேலன் சொல்ல,

“என்ன மீனாவை பார்க்க போனாரா.?” என்று கேட்டாள் முல்லை.

“ஆமா அக்கா. அவர் மீனாவை பார்க்க தான் போனாரு. ஏன் இன்னும் வீட்டுக்கு வரலையா” என்று வேலன் கேட்க.

“ஒரு வேள நம்ம வீட்டுக்கு போய் இருப்பாரா” என்று கேட்டாள் ரோஜா.

“சரி சரி. அவரு என்ன சின்ன பிள்ளையா. உடம்பு வலிக்குதுன்னு சரக்கு போட கூட போய் இருக்கலாம். நீங்க போய் நேரத்தோடு சாப்பிட்டு படுங்க” என்று வேலன் சொல்ல. முல்லை தன் அறைக்குள் சென்றவளுக்கு இதயம் முழுதும் பாரமாக மாறியது.

“நான் அவரை தான் காதலிச்சேன் என்ற உண்மை தெரிந்தும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமல் நேரா மீனாவை பார்க்க போய் இருக்காருன்னா. அப்போ நான் ஏன் அவருக்கு பொஞ்சாதியா இருக்கனும்” என்று தனக்குள் புழுங்கி அழ ஆரம்பித்தாள் முல்லை.

நேரம் இரவு 10pm நெருங்கியும் கதிர் வீட்டுக்கு வராமல் இருக்க.

“அண்ணி. நீங்க நேரத்தோடு சாப்பிட்டு மாத்திரை போடுங்க” என்றாள் ரோஜா.

“எனக்கு பசிக்கல ரோஜா. நீங்க சாப்பிடுங்க” என்ற முல்லை அப்படியே கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

நேரம் 11pm மணியை நெருங்கியது.

முல்லையின் கைபேசி ஒலி எழுப்ப. தூக்கம் கலைந்து எழுந்தவள்.

“என்ன இது புது நம்பரா இருக்கு. ஒரு வேள ஜீவா மாமா தான் call பண்ணுறாரா” என்று எண்ணிக்கொண்டே கைபேசியை உயிர்ப்பித்து “ஹலோ” என்றதும்.

“என்ன முல்லை. நிம்மதியா தூங்குறியா” என மறுமுனையில் இருந்து குரல் கேட்க.

“ஹலோ யார் பேசுறீங்க” என்று கேட்டாள் முல்லை.

“நான் யாருன்னு நீ தெரிஞ்சிக்கணும்னா.? இல்ல உன் புருஷனை நான் என்ன பண்ணேன்னு உனக்கு தெரியனுமா?” என்று அந்த நபர் கேட்க.

தன்னை யார் மிரடுகிறார்கள் என்று புரியாமல் முல்லை குழம்பி போனாள்.

“என்ன முல்லை. நான் யாருன்னு யோசிக்கிறியா?” என்று அந்த நபர் கேட்க.

“நீ யாரா இருந்தா எனக்கு என்ன. முதல்ல போனை கட் பண்ணு” என்று முல்லை கோவம்க்கொள்ள,

“அட இரு மா. உன் புருஷன் கதிர் இப்போ என்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்கான். அதனால நீ என்ன பண்ற. நேரா கிளம்பி நான் மெசேஜ்ல அனுப்பி வைக்கிற முகவரிக்கு வந்து சேரு” என்ற நபர் கைபேசி இணைப்பை துண்டிக்க.

“ஹலோ ஹலோ. ஹலோ.“ என்று முல்லை கத்தியவளின் குரலைக்கேட்டு வேலன் மற்றும் ரோஜா ஆகிய இருவரும் அவளின் அறைக்குள் நுழைந்தார்கள்.

“என்ன அக்கா என்னாச்சு” என்று வேலன் கேட்க.“என்ன அண்ணி கெட்ட கனவு எதாவது கண்டிங்களா” என்று கேட்டாள் ரோஜா.

“ரோஜா. ரோஜா உன் அண்ணன். டேய் வேலா உன் மாமாவை, உன் மாமாவை யாரோ கடத்திட்டிங்களாம்” என்று முல்லை பதற, “அக்கா. அவர் என்ன ஸ்கூல் பையனா அவரை யாராவது கடத்திகிட்டு போக” என்று வேலன் கேட்க,

“டேய் லூசு. இங்க பாரு யாரோ ஒருத்தன் லொகேஷன் அனுப்பி உடனே என்னை அங்க கிளம்பி வர சொல்லுறான்” என்றாள் முல்லை.

“அண்ணி ஒரு வேள அந்த கேசவன். அந்த கேசவன் தான் வாத்தியை கடத்தி இருப்பானா” என்று ரோஜா கேட்க.

“ஐயோ அப்போ உண்மையாவே உங்க வாத்தியை கடத்திட்டாங்களா” என்று கேட்டான் வேலன்.

“டேய் வேலா. வா டா உடனே அந்த கேசவனை போலீஸ்ல புடிச்சி கொடுப்போம்” என்று முல்லை பதற.

“அண்ணி இருங்க இருங்க. நீங்க இப்போ எங்கேயும் போக வேணா” என்றாள் ரோஜா.

“இல்ல. அவன் என்னை தான் வர சொன்னான். நான் போகலைனா உன் அண்ணனை எதாவது பண்ணிடுவான். டேய் வேலா நீ வா நம்ம போகலாம்” என்று முல்லை வேலனை அழைக்க. இருங்க இருங்க நானும் வரேன்” என்றாள் ரோஜா.

நேரம் 11. 30 pm மணியை கடந்து இருக்க. இவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் எந்த தகவலும் தெரியப்படுத்தாமல் ரோஜா, முல்லை, வேலன் ஆகிய மூவரும் கைபேசியில் தெரிந்த முகவரியை தேடி முருகன் வீட்டில் இருந்து கிளம்பி இருக்க.

“என் வாழ்க்கையில ஒரு நாள் கூட எனக்கு நிம்மதியே கிடைக்காதா” என்று கண்கள் கலங்கினாள் முல்லை.

“அக்கா அழாத. இன்னையோட உன் பிரச்சனைக்கு எல்லாம் ஒரு Fullstop வச்சிடலாம்” என்று வேலன் தைரியம் கொடுக்க.“அவருக்கு ஒன்னும் ஆகாதுல்ல” என்று முல்லை கதிரை நினைத்து கவலைகொண்டாள்.

அடுத்த பத்தே நிமிடத்தில் வேலன் அவன் காரை கோவில் மண்டபத்தின் அருகே நிறுத்தியவன்.

“அக்கா இந்த இடத்துல தான் லொகேஷன் காட்டுது. ஆனா இங்க யாரும் இல்லையே” என்று வேலன் சொல்ல.

“அண்ணி நீங்க காருலயே இருங்க, நானும் வேலனும் இங்க வேற யாராவது இருக்காங்களான்னு பார்த்துட்டு வரோம்” என்ற ரோஜா. வேலனுடன் காரில் இருந்து இறங்கிக்கொண்டாள்.

===============================

அந்த இடமே மை இருட்டாக இருக்க. காரின் head லைட்டில் இருந்து வந்த வெளிச்சம் மட்டுமே அந்த இடத்தை ஒளிர செய்தது.

வேலனும் ரோஜாவும் அங்கிருந்து சென்றவர்கள் பத்து நிமிடங்கள் கடந்தும் காருக்கு திரும்பாமல் இருக்க.

“இவங்க எங்க போனாங்க. இந்த இடம் திருவிழா நடக்குற இடமாச்சே. நம்ம இங்க இருக்குறது தெரிஞ்சாலே ஊர் பஞ்சாயத்து ஆகிடுமே” என்று முல்லை தனக்குள் எண்ணிக்கொண்டே காரில் இருந்து கீழே இறங்கினாள்.

கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அங்கே இருள் சூழ்ந்து இருக்க.

சட்டென்று முல்லையின் கைபேசி ஒலி எழுப்பியது.

சற்று முன் முல்லையை மிரட்டிய அதே எண்ணில் இருந்து மீண்டும் இவளுக்கு அழைப்பு வர, “ஹலோ” என்று முல்லை உச்சரிக்கும் நேரம்.

“உன் புருஷனை நீ உயிரோட பார்க்கணும்னா. உன் எதிர்ல இருக்குற மண்டப வாசலை திறந்துகிட்டு நேரா உள்ள வா” என்று அந்த நபர் போனில் கட்டளையிட்டதும். முல்லை தயக்கத்துடன் மண்டபதின் உள்ளே நுழைந்தாள்.

முல்லை உள்ளே நுழைந்ததும் படார் என்று கதவுகள் மூட. அவளோ பயத்தில் நடுங்கியவள் தலைக்கு மேல் உதிரி பூக்கள் மலை அருவி என்ன அவள் மேல் விழுந்தது.

பூக்களின் நறுமணத்தில் இங்கே என்ன நடக்கிறது என்று முல்லை யோசித்துக் கொண்டே அவள் அடி மேல் அடி வைத்து முன் நோக்கி செல்ல. அவள் பாதம் பூமியில் பதிய பதிய அழகாய் ஒவ்வொரு விளக்கும் சுடர் விட செய்தது.

மண்டபத்தின் தூண்களில் முல்லை மலர் கொடி படர்ந்து இருக்க.

முல்லை அந்த இடத்தை ஆச்சிரியமாக பார்த்தவள் கண்ணுக்கு முல்லையின் மூன்று வயதில் அவளை கதிர் தோளில் தூக்கிக்கொண்டு நிற்பது போல புகைப்படம் தெரிந்தது.

முல்லையிடமே இல்லாத அந்த படத்தை அவள் அதிசயமாக பார்த்தவள். அந்த படத்தை தொட்டு பார்க்க.

அதன் அருகே முல்லை பத்து வயதில் கதிருடன் கை கோர்த்து நின்றப்படி இருந்த புகைப்படமும் இருந்தது.

இந்த படங்கள் எல்லாம் இங்கே எப்படி இருக்கிறது என்ற குழப்பத்துடன் முல்லை மேலும் முன்னேறி செல்ல. அங்கே அழகான தங்க நிற பெட்டி இருக்க. அவள் சிறு அச்சதுடனே அந்த பெட்டியை திறந்து பார்க்க. அதில் பல வருடங்களாக கதிர் பத்திர படுத்தி வைத்து இருந்த அவனது கைக்குறிப்பு புத்தகம் இருந்தது.

அந்த புத்தகத்தை கேள்வியாக முல்லை திறந்து பார்க்க. அதில் முதல் பக்கத்திலேயே KM என்று எழுதி இருந்ததை வாசித்தவளின் மனதில் அந்த எழுத்துக்கு சொந்தம் கதிர் மீனா என்று எண்ணிகொண்டவளின் கண்கள் கண்ணீரை தத்து எடுத்துக்கொண்டது.

இருப்பின்னும் அந்த புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்பி பார்த்தவளின் கண்ணுக்கு “இன்று என் காதலியின் பிறந்தநாள். அவளிடம் என் காதலை தெரியப்படுத்த மையினால் கடிதம் எழுதினால் அது காகிதத்துக்கு மட்டுமே சொந்தம் என்பதால், அவள் பெயரையும் என் பெயரையும் சேர்ந்து என் இதயபகுதியில் பச்சை குத்தி அவளுக்கு என் காதலை புரிய வைக்க போகிறேன்” என்று கதிர் எழுதி வைத்த எழுத்தை படித்து முல்லை பெருமூச்சு எடுத்தவள் மனதில் இந்த நொடி வரை KM என்றால் கதிர் மீனா என்ற எண்ணம் மட்டுமே இருந்து இருக்க.

“இன்று ஊர் திருவிழா. என் காதலை சொல்ல என் அழகியை ஆசையாக காண போன எனக்கு அவள் மனதில் என் மீது காதல் இல்லை என்று தெரிந்த கணம் நான் நடைப்பினமாக மாறினேன்” என்று அந்த காகிதத்தில் எழுதி இருக்க.

அந்த காகிதத்தின் நடுவே இருந்த புகைப்படத்தை பார்த்த முல்லையின் கண்களில் ஆச்சிரியம் மிளிர்ந்தது.

முல்லை அந்த படத்தில் பாவாடை சட்டையுடன் இரட்டை ஜடையில் நின்று இருந்தவளின் புகைப்படத்தின் கீழே IU டி ரவா லட்டு. நீயும் நானும் நூறு வருஷம் சந்தோசமா வாழணும்” என்ற கதிரின் கையெழுத்தை பார்த்த முல்லை வேக வேகமாக அந்த கைக்குறிப்பு புத்தகத்தை புரட்டி பார்க்க. அந்த புத்தகம் முழுவதிலும் முல்லைக்காக கதிர் எழுதிய எழுத்துக்கள் மட்டுமே மின்னி க்கொண்டு இருந்தது.

தான் காண்பது கனவா இல்லை நினைவா என்ற குழப்பத்தில் முல்லை.“அப்போ அப்போ KM னா.?” என்று வாய் திறந்து கேள்வி எழுப்ப. அவளை சுற்றி நூற்று கணக்கான விளக்குகள் ஒளிர்ந்த தருணம்.

“KM னா ஒரே அர்த்தம் தான் டி என் பொண்டாட்டி. அது இந்த கதிரும் முல்லையும் மட்டும் தான்” என்ற குரல் கேட்கும் திசையை நோக்கி முல்லை திரும்பி பார்க்க.

கதிர் கையில் பல வண்ண மலர்களை க்கொண்டு தொடுக்கப்பட்ட பூங்கொத்தை ஏந்திக்கொண்டு முல்லையின் முன் மண்டியிட்டவன்,

“நீயாவது உன்னோட பதிமூன்று வயதுல இருந்து தாண்டி என்னை காதலிக்கிற. ஆனா நான். நீ உன் அம்மா வயத்துல வளர்ந்த செய்தியை கேட்ட கணமே உன்னை நேசிக்க ஆரம்பிச்சவன். இனி என் உடல் மண்ணுக்குள் போனாலும் உன்னை காதலிச்சிகிட்டு மட்டும் தாண்டி இருப்பேன் என் அழகி பொண்டாட்டியே” என்றவனின் வார்த்தையை கேட்டு முல்லையின் விழிகள் ஈரமாக.

சட்டென்று எழுந்து கதிர் முல்லையின் நெற்றியில் இதழ் பதித்தான்.

தன்னை போலவே

கதிரும் முல்லையை தான் நேசித்து இருக்கிறான் என்று அறிந்துகொண்ட முல்லைக்கு இவர்கள் வாழ்வில் யாரால் இத்தனை குழப்பமும் ஏற்பட்டது என்று யூகிக்கும் முன்னே வாசலில் வெடி சத்தம் கேட்டு முல்லை பயத்தில் துள்ளி குதிக்க. கதிரோ அவளை காதலாக தன் இதயத்தோடு அணைத்துக்கொண்டவன்.“இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் முல்லை” என்றதும். முல்லையின் விழிகள் மேலும் ஆச்சிரியத்தில் அழகாய் விரிய.

அவள் வாய் மலர்ந்து அவனிடம் நன்றி கூறும் முன்னே அவள் வார்த்தையோடு சேர்த்து முல்லையின் இதழ்களின் நடுவே ஒளிந்து இருந்த தேனையும் தன் அதரங்களால் களவாடி இருந்தான் முல்லையின் கதிர்வேலன்.

தொடரும்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!