“கதிர்“ என்ற பெண்ணின் குரல் கேக்கும் திசையை நோக்கி கதிரும் ரோஜாவும் திரும்பி பார்க்க,
அதே சமயம் காரை பார்க் செய்துவிட்டு நாகராஜன் வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவனின் கைபேசிக்கு செந்திலிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு செந்தில்” என்ற நாகராஜனிடம்
“டேய். முல்லை நம்ம வீட்ல தான்டா இருக்கா. கதிர் ஏன் லூசு மாதிரி அவளுக்கு accident ஆச்சு, GH ல சேர்த்து இருக்காங்கன்னு உளறிட்டு உங்கள வேற அங்க அழைச்சிட்டு போயிருக்கான்” என்று செந்தில் கேக்கும் கேள்வியில் நாகராஜன் மேலும் குழம்பி போக.
“வாத்தி. தனா எப்படி இங்க? என்று ரோஜா புரியாமல் கதிரிடம் கேள்வி கேக்கும் தருணம். தலையில் கட்டுடன் கதிரை நோக்கி வந்துகொண்டு இருந்தாள் இன்றும் அவனை மட்டுமே உயிருக்கும் மேலாக நினைக்கும் தனா.
தனத்தை பார்த்ததும் கதிருக்கு குழப்பம் தான் ஏற்பட்டது.
“வாத்தி. இங்க என்ன நடக்குது” என்று roja கேட்க.
“கதிர்” என்று கண்கள் கலங்கிய நிலையில் தனம் இவர்கள் அருகே வந்தவளின் தலையில் சிறு கட்டு கட்டி இருந்தது.
“தனா. நீ எப்படி இங்க?” என்று கதிர் கேட்க.
“நீங்க எப்படி கதிர் இங்க. நீங்க குன்னக்குடியில் தானே இருப்பிங்க?” என்று கேட்டாள் தனம்.
“இல்ல. நான். நாங்க Frnd கல்யாணத்துக்கு இங்க வந்தோம். ஆமா நீ எப்படி இங்க. அப்போ எனக்கு வந்த போன்.“ என்று கதிர் கேட்க.
“சாரி கதிர். எனக்கு தான் சின்ன accident ஆச்சு. என் போன் டைரில உன் பேரை My husband கதிருனு நம்ம நிச்சியம் நடக்க இருந்த நேரத்துல எழுதி இருந்தேனா. அத பார்த்துட்டு என்னை காப்பாத்துன ஒருவர் உங்களுக்கு call பண்ணிட்டாரு” என்றாள் தனா.
தனலட்சுமி சொல்வதில் நெல் அளவும் உண்மை இல்லை என்பதை அறிந்து இருந்த ரோஜா.
“என்ன உளறுறிங்க. ஆமா நீங்க எப்படி சென்னையில?” என்று சந்தேகேமாக கேட்டாள்.
“நானும் ரவியும் இங்க ஒரு வேலையா வந்தோம். நான் காலையில கோவில் போகும் போது எனக்கு சின்ன accident” என்று தனம் சொல்ல.“அக்கா.“ என்ற அழைப்போடு தனத்தின் தம்பி ரவி அங்கே வந்தான்.
தனம் பேசும் வார்த்தையில் ரோஜாவின் புருவம் சந்தேகமாக ஏறி இறங்க. அதே சமயம்”அக்கா. என்னாச்சு உனக்கு. ஐயோ எப்படி உனக்கு அடிப்பட்டுச்சு” என்று பதறினான் ரவி.
“எனக்கு சின்ன அடி தான் ரவி. இங்க பாரு கதிர்.“ என்று தனம் சொல்ல.
ரவி இவர்களை பார்த்து கடமைக்கென்று சிரித்தவன்.
“அக்கா உனக்கு பெரிய அடி இல்லையே” என்று கேட்டான்.
“இல்ல டா. சின்ன அடி தான். சரி கதிர். நீங்க மட்டும் தான் சென்னை வந்திங்களா. ஏன் உங்க Wife முல்லை வரலையா.“ என்று தனம் கேட்க.
“எங்க அண்ணியும் தான் எங்க கூட வந்து இருக்காங்க” என்றாள் ரோஜா.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் நேரம்,
“நண்பா. முல்லை செந்தில் வீட்டுல தான் இருக்கா. நீ வா நம்ம கிளம்பலாம்” என்று நாகராஜன் சொல்ல.
“ஆனா நான் தான் வீட்டுல அவளை தேடினேனே” என்று ஏதும் புரியாமல் கேட்டான் கதிர்.
“வாத்தி. அதெல்லாம் நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம். நீங்க வாங்க நம்ம கிளம்புவோம்” என்ற ரோஜா. தனத்தை சந்தேக பார்வையுடன் கடந்து சென்றாள்.
“தனா. நாங்க கிளம்புறோம். நீங்க பார்த்து போங்க” என்று கதிர் சொல்ல, “தேங்க்ஸ் கதிர். எப்பவுமே உனக்கு என் மேல தனி அக்கறை தான்” என்று சிரித்துக்கொண்டாள் தனம்.
தனத்தை பார்த்து மேலும் கடுப்பான ரோஜா.“வாத்தி நேரமாகுது வாங்க போகலாம்” என்று அதே கடுப்புடன் சொல்ல.
“எப்படி இருக்க ரோஜா” என்று கேட்டான் ரவி.
அவன் கேள்வியில் ரோஜாவிற்கு மேலும் கடுப்பு ஏற்பட.“எனக்கு என்ன. நான் ரொம்பவே சந்தோசமா இருக்கேன்” என்ற ரோஜா மருத்துவமனையில் இருந்து வேகமாக வெளியேறி இருந்தாள்.
கதிரும் நாகராஜனும் ரோஜாவை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி இருக்க. தனம் ரவியை பார்த்து வில்லியை போல சிரித்தாள்.
தன் அக்காவின் செயலை பார்த்து சிறு கோபத்துடன், “அக்கா. என்ன பண்ற நீ. என்ன ட்ராமா இது” என்று கேட்டான் ரவி.
“ட்ரமா தான் டா. இப்போ தான் இந்த ட்ராமாவை ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். அதுவும் கூட்டணி ஆளோடு” என்று தனம் சொன்னதும். மேலும் குழம்பி போனான் ரவி.
தன் தம்பியின் முக மாற்றத்தை பார்த்து மேலும் சிரித்தவள், “டேய் தம்பி. இன்னைக்கு காலையில நான் மயிலாப்பூர் கோவிலுக்கு போனேன். அங்க முல்லை சாமி முன்னாடி உக்காந்து அழுதுகிட்டு இருந்தாள். அவ அழுகையை வச்சே அவளுக்கும் கதிருக்கும் என்னமோ பிரச்சனை இருக்குனு நான் தெரிஞ்சிகிட்டேன்.
ஆனா குன்னக்குடியில இருக்குற முல்லை, இங்க எப்படி வந்தான்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு. அதனால உடனே கஸ்தூரிக்கு போன் பண்ணேன்” என்று தனம் சொல்ல.
“கஸ்தூரினா. ஓ. அந்த பாண்டியனோட தங்கச்சியா” என்று கேட்டான் ரவி.
“ஆமா டா. எதிர்க்கு எதிரி நண்பன் என்பதை போல அந்த கஸ்தூரி கூட நான் எப்போவும் காண்டக்ட் வச்சிக்கிட்டேன். அவங்களுக்கு போன் பண்ணும் போது தான் அவங்க சொன்னாங்க முல்லை, கதிர், ரோஜா மூணு பேரும் சென்னை போய் இருக்காங்கனு. அவங்க சொன்னதை வச்சி பார்த்தா வந்த இடத்துல கதிருக்கும் முல்லைக்கும் என்னோமோ பிரச்சனை வந்து இருக்கும்னுனு நானே யூகிச்சு உடனே ஒரு பிளான் போட்டேன்” என்ற தனம்.
செந்தில் வீட்டில் இருந்து மன வேதனை தாங்காமல் முல்லை கோவிலுக்கு வந்து இருந்த தருணம். அவளை கண்களில் கண்ணீருடன் பார்த்தவள், கதிரை எப்படியாவது தன்னை பார்க்க வர வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு யாரோ ஒருவர் பேசுவதை போல கதிரின் கைபேசிக்கு தனமே கால் செய்து அவனை மருத்துவமனைக்கு வர வைத்த நிகழ்வுகளை சொல்லி முடித்தாள்.
தன் அக்காவின் வார்த்தையை கேட்ட ரவி.
“ஆனா இதெல்லாம் எதுக்காக நீ பண்ற. அதான் அந்த ஆளுக்கு முல்லை கூட கல்யாணம் ஆகியிருச்சே” என்று ரவி கேட்க.“ஆனா என்ன” என்று கிண்டலாக கேட்டாள் தனம்.
“அக்கா. நீ சொல்றதை பார்த்தா. நீ கதிரை.“ என்று ரவி இழுக்க.“சத்தியமா இல்ல டா. இதென்ன நாடகமா. அடுத்தவன் புருஷனை நான் கல்யாணம் பண்ண ஆசை படுறதுக்கு.“ என்று தனம் கேட்டதும் ரவி பெருமுச்சு எடுத்தவன்.“அப்பா நான் கூட பயந்துட்டேன்” என்றான்.
“இரு இரு டா. நான் கதிரை கல்யாணம் பண்ணிக்க எல்லாம் ஆசைப்படல. ஆனா அந்த கதிரையும் முல்லையையும் பிரிச்சி விட என்ன பண்ணணுமோ அத பண்ணப்போறன்” என்று தனம் சொல்ல, “என்ன அக்கா சொல்ற. அப்படி என்ன பண்ண போற” என்று ரவி கேட்க.
“ம். உனக்கும் ரோஜாவுக்கும் மறுபடியும் சம்மந்தம் பேச போறேன்” என்று தனம் சொல்ல. ரவியின் மூளை மேலும் குழப்பத்துக்கு ஆளானது.
—————————————————————
இதே சமயம் நாகராஜன் விரட்டிய கார் செந்தில் வீட்டை நோக்கி பயணிக்க.
“வாத்தி. இந்த தனம் பேசுறத கேட்டா எனக்கு என்னமோ சந்தேகமாவே இருக்கு. அவங்க வார்த்தையில கொஞ்சமும் உண்மை இல்லாத மாதிரி எனக்கு தோணுது” என்றாள் ரோஜா.
தன் தங்கையின் வார்த்தையை காதில் வாங்காத கதிருக்கு எண்ணமெல்லாம் முல்லை மீது மட்டுமே இருக்க.
“ஏன் நண்பா. முல்லை வீட்ல இருக்கும் போது. யாரோ போன் பண்ணத நம்பி இப்படி தான் ஹாஸ்பிடல் வர வருவியா” என்று நாகராஜன் கேட்க.
“டேய். தெரிஞ்ச மாதிரி பேசாத. காலையில நான் பார்க்கும் போது முல்லை வீட்ல இல்லை” என்றான் கதிர்.
கதிரின் வார்த்தையில் சின்ன பதற்றம், கோவம், தடுமாற்றம் என்று அனைத்துமே நிறைந்து இருக்க.
“வாத்தி. உங்களுக்கும் அண்ணிக்கும் எதாவது பிரச்சனையா” என்று கேட்டாள் ரோஜா.
தன் தங்கையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கதிர் குழப்பத்தில் இருக்க. இதே தருணம் நாகராஜன் விரட்டிய காரை செந்தில் வீட்டின் வாசலில் நிறுத்தினான்.
காரில் இருந்து வேகமாக இறங்கிய கதிரோ.“முல்லை, முல்லை” என்று தன் மனைவியின் பெயரை ஏலம் விட்டப்படி வீட்டுக்குள் நுழைய, “என்னப்பா கதிரு நீ. முல்லை கோவிலுக்கு போனது தெரியாம யாரோ போன் பண்ணதை நம்பி எங்க போய் அலைஞ்சிட்டு வர” என்று கேட்டார் பாரிஜாதம்.
“அதானே. ஏன் அண்ணா. முல்லை கோவிலுக்கு போனது உங்களுக்கு தெரியாதா” என்று மைனா கேட்க.
“டேய் முல்லை மாடியில தான் இருக்கு. போ. போய் பேசு” என்றான் செந்தில்.
கதிர் வேகமாக மாடியில் உள்ள அறைக்கு சென்றவன்.“ஏய். என்கிட்ட சொல்லாம எங்க போன நீ. உன்ன காணாம எனக்கு உயிரே போன மாதிரி ஆச்சு தெரியுமா” என்ற கதிரின் குரலை கேட்டு முல்லைக்கு கோவம் தான் வந்ததே தவிர. அவன் நிலையை அங்கே அவள் அறிந்திடவில்லை.
கட்டிலின் மீது இருந்த பையில் முல்லை தன் உடமைகளை அடுக்கிக்கொண்டு இருந்தவள், தன் அருகே நின்று இருக்கும் கதிரின் முகத்தை நேருக்கு நேர் பார்த்திடாமல் தான், அவள் வேலைகளை செய்துக்கொண்டு இருந்தாள்.
“நான் காலையில எழுந்ததும் உன்ன வீட்டுல காணாம ரொம்ப பயந்துட்டேன். அதே நேரத்துல ஏதோ புது நம்பருல இருந்து எனக்கு போன் வந்துச்சு. அவங்க என்னமோ என் wifeக்கு accident ஆச்சு, தலையில அடிபட்டு இருக்குன்னு என்ன உடனே GHக்கு வர சொன்னாங்க.
நானும் உனக்கு தான் accident ஆச்சுன்னு பயந்து போய் ஹாஸ்பிட்டல் போனா. அங்க தனலட்சுமி தலையில கட்டோட நின்னுகிட்டு இருக்கு” என்று கதிர் சொல்ல. அதுவரை கதிர் பேசுவதை கண்டுகொள்ளாத முல்லையின் செவிகள் தனத்தின் பெயரை கேட்டதும் கூர்மையாக மாறியது.
“நல்ல வேள. உனக்கு ஒன்னும் ஆகலையே அதுவே எனக்கு போதும். சரி. நீ என்ன காலையிலேயே கோவிலுக்கு போயிட்டு வந்து இருக்க. ஏன்? நான் எழுந்ததும் என்கிட்ட சொல்லி இருந்தா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே போய் இருக்கலாமே.“ என்றான் கதிர்.
கதிரின் எந்த கேள்விக்கும் பதில் தராத முல்லை. வேகமாக அவள் துணிகளை அடுக்கி வைத்தவள்.
கதிரிடம் பேசாமல் அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.
முல்லையின் செயலில் மேலும் குழப்பமடைந்த கதிருக்கு அவள் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கின்றாள் என்றே யூகிக்க முடியாமல் போனது.
“இவ என்ன நம்ம என்ன பேசினாலும் பதிலே சொல்ல மாட்டுறா. ஒரு வேள நேத்து நைட் நம்ம இவகிட்ட நடந்துகிட்டத வச்சி கோவமா இருக்காளா” என்று கதிர் சரியாக கணித்தவன். அடுத்த நொடியே.
“இல்ல இல்ல. ஒரு வேள நம்மகிட்ட வெக்கப்படுறா போல” என்று தற்குறி தனமாக எண்ணிகொண்டான்.
, , , , , , , ,
மாடியில் இருந்து கீழே இறங்கிய முல்லையை பார்த்து, “அண்ணி, என்ன நீங்க எங்க போனீங்க, ஏன் வெளிய போகும் போது வாத்திகிட்ட சொல்லாம போனீங்க” என்று ரோஜா கேட்க.
“உன் அண்ணன் நல்லா தூங்கிகிட்டு இருந்தாரு அதான் நானே பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்” என்றாள் முல்லை.
“ம், கோவிலுக்கு போனது எல்லாம் ஓகே தான். ஆனா இனிமே சொல்லிட்டு போ. நாங்கயெல்லாம் ரொம்பவே பயத்துட்டோம்” என்று நாகராஜனும் அவன் பங்குக்கு முல்லையை தங்கை என்ற முறையில் அன்பாக கண்டித்தான்.
“சரி சரி. முல்லைக்கு கோவில் போகணும்னு தோணிருக்கும் அதனால போய் இருப்பா. இத ஏன் இப்போ இவ்ளோ பெரிய சீனா மாத்துறீங்க. வாங்க வாங்க எல்லோரும் சாப்பிடலாம்” என்று மைனா அனைவரையும் காலை உணவை சாப்பிட அழைத்தாள்.
“முல்லை. நீயும் கதிரை சாப்பிட கூப்பிடு மா” என்று பாரிஜாதம் சொல்ல. அதே சமயம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் கதிர்.
“மச்சான் வாடா சாப்பிடலாம். ரோஜா நாகா வாங்க வந்து உக்காருங்க” என்று செந்திலும் அழைக்க. அனைவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை சாப்பிடுக்கொண்டு இருக்க. மறந்தும் முல்லையின் விழிகள் கதிரை தீண்ட வில்லை.
“ஏன் மச்சான். எத்தனை மணிக்கு பீச்க்கு போறிங்க” என்று செந்தில் கேட்க.
“சாப்பிட்டு கிளம்புனா சரியா இருக்கும். கொஞ்ச நேரம் பீச்சை பார்த்துட்டு அப்படியே ஊருக்கு கிளம்பிடுவோம்” என்றான் கதிர்.
“ஏன் முல்லை. உனக்கு சென்னையில வேற எந்த இடமாவது சுத்தி பார்க்கணும்ன்னு ஆசை இருக்கா” என்று மைனா கேட்க.
“அப்படி எந்த ஆசையும் இல்ல” என்ற முல்லை கடமைக்கென்று சாப்பிட்டு முடித்தவள் அடுப்பணைக்குள் நுழைந்து கொண்டாள்.
முல்லையின் செயலில் கதிருக்கு சஞ்சலம் ஏற்பட. அவளிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்ற தயக்கத்தில் கதிரும் தவித்து தான் போனான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்.
பாரிஜாதம் தாம்புல தட்டில் பூ பழம் புது துணி என்று முறையாக வைத்து.“கதிர் முல்லை. இந்தாங்க இத வாங்கிக்கோங்க. நீங்க ரெண்டு பேரும் செந்தில் மைனா கல்யாணத்தை முன்னாடி நின்னு பண்ணிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி” என்று சொன்னவாரு கையில் இருந்த தட்டை அவர்கள் முன்னே நீட்டினார்.
“என்னமா நீங்க. இது நம்ம வீட்டு கல்யாணம். நாங்க முன்னாடி நின்னு பண்ணாம வேற யாரு பண்ணுவாங்க”என்ற கதிர் சிரித்த முகத்துடன் அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொள்ள. மருந்துக்கும் மறந்து சிரிக்கும் நிலையில் இல்லாமல் போனாள் முல்லை.
“ரோஜா. இந்தாமா நீயும் வாங்கிக்கோ. ராஜா நீயும் வா” என்றவாரு முறையாக செந்திலின் அம்மா இவர்கள் அனைவருக்கும் தாம்புலம் கொடுக்க.
“சரி ம்மா. நாங்க நேரத்தோடு கிளம்புறோம்” என்ற கதிர். முல்லையை பார்க்க.
அவளோ அவனை பாராமல்.
“மைனா நான் கிளம்புறேன்” என்றாள்.
நேற்று இருந்த முக பொலிவு இன்று முல்லையிடம் மறைந்து இருப்பதை பார்த்து, “என்ன டி முல்லை. ஏன் ஒரு மாதிரி இருக்க. உடம்பு சரியில்லையா” என்று கேட்டாள் மைனா.
“அதெல்லாம் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்” என்று முல்லை சொல்ல.“என்னடி நைட் எல்லாம் தூங்கலையா” என்று கிண்டலுடன் மைனா கேட்ட கேள்வி முல்லைக்கு வெட்கத்தை கொடுக்காமல் கடுப்பை தான் கொடுத்தது.
“உன்ன தான் கேக்குறேன். என்ன அண்ணா உன்னை நேத்து நைட் எல்லாம் தூங்க விடலையா” என்று மீண்டும் மைனா இரட்டை அர்த்தத்தில் கேட்க.“ஐயோ மைனா இப்போ ஏன் நீ தேவையில்லாததை எல்லாம் பேசுற” என்று பொறுமை இழந்தவளாக கத்தினாள் முல்லை.
“ஏய் இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி கத்துற. சரியான லூசு டி நீ. சரி ஊருக்கு போனதும் போன் பண்ணு” என்ற மைனா முல்லையின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் இயல்பாகவே அவளை அணுகினாள்.
ஒரு வழியாக அனைவரிடத்தில் இருந்தும் விடைபெற்று ரோஜா, கதிர், முல்லை, நாகராஜன் என்று அனைவரும் மீண்டும் குன்னக்குடி திரும்ப. தன் ஊருக்கு செல்வதற்கு முன்னதாக சென்னை கடற்கரையில் நாகராஜன் காரை நிறுத்தினான்.
பின் இருக்கையில் ரோஜா மற்றும் முல்லை அமர்ந்து இருக்க. காரில் ஏறி அமர்ந்ததில் இருந்தே முல்லையின் அமைதி கதிரை கவலைக்கு ஆளாக்கியது.
இவர்கள் இருவருக்கும் என்ன தான் பிரச்சனை என்று யோசித்து யோசித்து விடை அறியாமல் ரோஜாவும் குழம்பி இருக்க.
“வாத்தி நீங்க அண்ணியை அழைச்சிட்டு கடல்ல காலை நனைச்சிட்டு வாங்க” என்று ரோஜா சொல்ல.“ இல்ல ரோஜா. நான் எங்கேயும் வரல. உனக்கு வேணும்னா நீ உன் அண்ணன்கூட கடலுக்கு போய்ட்டு வா” என்று சிறு கடுப்புடன் சொன்னாள் முல்லை.
“என்ன அண்ணி. வாத்தியும் நானும் போய் என்ன பண்றது. நீங்க உங்க மாமா சார்கூட ஜோடியா போயிட்டு வாங்க” என்று ரோஜா சொல்ல.
“போதும் ரோஜா. எல்லாம் நீ சொன்ன மாதிரி தான் நடக்கணுமா என்ன. எனக்கு போக விருப்பம் இல்லைனா விடேன். எப்போ பாரு இத பண்ணு அத பண்ணுனு எதாவது ஒன்னு சொல்லிகிட்டே இருக்க” என்று இயல்புக்கு மாறாக முல்லை கோபத்துடன் பேசியதும் ரோஜாவின் முகம் வாடி போனது.
இதுவரை பொறுமையாக இருந்த கதிர். முல்லை ரோஜாவை சத்தம் போட்டு பேசியதை கேட்டு கோவம் கொண்டவன்.
“ஏய். இப்போ அம்மா என்ன சொன்னாங்கன்னு நீ இப்படி கத்துற” என்று கேட்டதும்,
“நான் ஒன்னும் கத்தல. எனக்கு கடலுக்கு வர பிடிக்கலைனு தான் சொன்னேன்” என்ற முல்லை வாட்டமாக காரின் பின் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி தலையை பின் பக்கமாக சாய்த்தப்படி தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டாள்.
முல்லையின் கோவத்தை பார்த்த ரோஜாவோ.“வாத்தி. நம்ம வேணும்னா இன்னோரு நாள் சென்னைக்கு வரலாம். இப்போ வாங்க நேரத்தோடு ஊருக்கு போகலாம்” என்ற ரோஜா காரின் மறுபக்க கதவை திறந்துகொண்டு உள்ளே அமந்துக் கொண்டாள்.
“நண்பா. நீயும் வந்து உக்காரு” என்று நாகராஜன் கதிரை அழைக்க. யார் பேசுவதையும் காதில் வாங்காத முல்லை கண்களை மூடியப்படியே அமர்ந்து இருக்க. அவளையே முறைத்து பார்த்த வண்ணம் காரில் அமர்ந்தான் கதிர்.
நாகராஜன் விரட்டிய கார் குன்னக்குடியை நோக்கி பயணிக்க.
நெடுஞ்சாலை முழுதும் காரினுள் அமைதி நிலவியது.
, , , , , , , , …
கிட்டத்தட்ட 8மணி நேர பயணத்தில் இடை இடையே காரை நாகராஜன் அங்கங்கே நிறுத்தினாலும் முல்லை யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்தவள் தண்ணீர் கூட குடிக்காமல் தான் இருந்தாள்.
கதிருக்கும் முல்லைக்கும் என்னவோ பிரச்சனை உள்ளது என்று புரிந்துகொண்ட ரோஜாவும் அவர்கள் வாழ்வில் ஒரு கட்டத்துக்கு மேல் நாம் தலையிடக்கூடாது என்று எண்ணியவள், எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருக்க. கதிருக்கு இந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்ற பக்குவம் இல்லாமல் போனது.
இரவு 7மணி அளவில் நாகராஜன் விரட்டி வந்த கார் குன்னக்குடியில் உள்ள பாண்டியனின் வீட்டை வந்து அடைய. காரில் இருந்து வேகமாக இறங்கி வீட்டுக்குள் நுழைந்த முல்லை யாரிடமும் ஏதும் பேசாமல் அவளின் அறைக்குள் நுழைந்தவளை கேள்வியாக பார்த்து இருந்தார் பாண்டியன்.
“அப்பா. எப்படி இருக்கீங்க” என்று முல்லையை தொடர்ந்து வந்த ரோஜாவின் குரலில் பாண்டியன் சிரித்த முகத்துடன்.“என்னமா கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சதா” என்று கேட்க.
“வா மா ரோஜா. பிரயாணம் எல்லாம் சுகமா” என்று கேட்டார் முருகன்.
“8மணி நேர பயணம் மாமா. உடம்பு வலிக்குது” என்று ரோஜா சொல்ல.
“முல்லை எங்க மா” என்ற கேள்வியோடு பார்வதி அங்கே வர,
“முல்லை. அம்மாடி முல்லை” என்று பாண்டியன் கதிரின் அறையை நோக்கி குரல் கொடுத்தார்.
பாண்டியனின் குரலுக்கு முல்லை பதில் தராமல் இருக்க. அதே தருணம் கதிர்வேலன் வீட்டுக்குள் வந்தவன் நேரே அவன் அறைக்கு சென்று பார்க்க, அங்கே கட்டிலில் தலை முதல் பாதம் வரை தன்னை போர்த்திக்கொண்டு முல்லை கட்டிலில் படுத்து இருந்தாள்.
“அம்மாடி முல்லை.“ என்று மீண்டும் பாண்டியன் அவள் பெயரை சொல்லி அழைக்க.“அப்பா. அவளுக்கு தல வலிக்குதுன்னு படுத்து இருக்கா” என்று தன் அறையில் இருந்தப்படியே குரல் கொடுத்தான் கதிர்.
என்னதான் தலைவலியாக இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு பதில் தராத முல்லையின் மீது பாண்டியனுக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்க. தன் தந்தையின் மனதை அறிந்துக்கொண்ட ரோஜா அவரிடம் இயல்பாக பேசுவதை போல அவர் சிந்தையை மாற்ற முயற்சி செய்தாள்.
“அப்புறம் மா நாகா எங்கே” என்று பாண்டியனும் இயல்பாக பேச்சை தொடங்க. கதிர் தன் அறையின் கதவை சாத்தியவன். படுத்து இருந்த முல்லையின் போர்வையை கோவமாக இழுத்த வேகத்தில் முல்லை கண்ணீருடன் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
கலங்கிய விழிகளுடன் அமர்ந்து இருந்த தன் மனைவியின் மனதை அறிந்திடாத கதிரோ.“என்னாச்சுன்னு இப்போ இப்படி மூஞ்சிய திருப்பிகிட்டு இருக்க. உனக்கு என்ன தான் பிரச்சனை” என்று கதிர் கேட்க. அவனை எரிக்கும் பார்வையில் சுட்டேரித்தாள் முல்லை.
“என்னத்துக்கு இப்படி முறைக்கிற. உன் மனசுல என்ன தான் இருக்கு. வாயை திறந்து பேசுனா தானே எனக்கும் எதாவது விளங்கும்” என்று கதிர் நேரடியாக முல்லையை கேள்வி கேட்க.
“என் மனசுல என்ன இருக்குனு தெரியாம தான் என்க்கூட ஒண்ணா இருந்திங்களா??” என்று அதித கோபத்துடன் கேட்டாள் பெண்ணவள்.
அவள் கேள்வியில் கதிரின் முகம் இறுக்கமாக மாறி,
“என்ன பேசுற நீ. நேத்து நைட் நடந்ததை வச்சி தான் கோவமா இருக்கியா” என்று கேட்டான் கதிர்.
“ஆமா கோவம் தான். கொஞ்சம் கூட புரிதலோ, காதலோ, விருப்பமோ இல்லாமல் வெறும் உடம்பும் உடம்பும் மட்டும் சேருறதுக்கு என்ன பேர் தெரியுமா” என்று முல்லை கேட்க.
கதிர் தன் வலது கையை மூடி அவன் கோவத்தை கட்டுப்படுத்திகொண்டவன்.
“ஏன். நான் உன் புருஷன் தானே?” என்று கேட்டு வைத்தான்.
கதிரின் வார்த்தையில் அவன் காதலை அங்கே முல்லை புரிந்துகொள்ள தவறியவள் அவன் முகத்தை நேரே பார்த்து.“என் விருப்பமே இல்லாம நீங்க என்னை தொட்டது. முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் என்னை ரேப் பண்ண மாதிரி தான் இருந்துச்சே தவிர. நீங்க என் புருஷன்னு ஒரு துளிக்கூட எனக்கு எண்ணம் தோணல” என்று முல்லை சொல்ல. கதிரின் உடம்பெல்லாம் தீயாய் எறிந்தது.
கதிரின் காதலை அவனும் சொல்லாமல், அவளும் உணராமல் இவர்கள் இருவரின் எண்ணங்களும் இரு துருவமாய் வளர்ந்து வர, “உங்களுக்கு கூட அந்த இடத்துல நான் பணத்துக்கு உடம்ப விக்குற பொண்ணு மாதிரி தான் தெரிஞ்சு இருப்பேனே தவிர. உங்க பொஞ்சாதியா தெரிஞ்சு இருக்க மாட்டேன். அப்படி நீங்க என்னை உங்க பொண்டாட்டியா எண்ணி இருந்தா என் சம்மதம் இல்லாம என்னை நீங்க தொட்டு இருக்கவே மாட்டீங்க. உங்களுக்கு தேவை என் மனசு இல்ல. உங்களுக்கு தேவை என் உடம்பு மட்டும் தானே.“ என்று முல்லை அடக்கி வைத்த கோவத்தை எல்லாம் வார்த்தையாக மாற்றி அவன் நெஞ்சில் ஈட்டியை இறக்க.
தன் மீது உள்ள தவறை அறிந்தும், முல்லையின் வார்த்தையில் உள்ள வலியை உணர்ந்திடாத கதிர் கோவம் கொண்டு முல்லையின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைய. அவன் அடித்த வேகத்தில் முல்லை கன்னம் சிவந்து தொப்பேன்று கட்டிலில் விழுந்தாள்.
தொடரும்