கதிர் அறைந்த வேகத்தில் வலி தாங்காமல் முல்லை கட்டிலில் விழுந்தாள்.
“அடுத்து ஒரு முற இப்படி கேவலமா பேசினன்னு வையென். உன்ன கொன்னுடுவேன்” என்று ஒற்றை விரல் நீட்டி அவளை எச்சரித்திவன் கோவமாக அறையின் கதவை திறந்துகொண்டு மின்னல் வேகத்தில் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்.
கதிரின் அறையில் இவர்கள் இருவரின் உரையாடல் வெளியே இருக்கும் உறவுகளின் செவியில் கேட்க. கதிர் கோவமாக வீட்டை விட்டு சென்றவனை பார்த்து ரோஜா ஏதும் புரியாமல் முல்லை இருக்கும் அறையை எட்டிபார்த்தாள்.
“என்ன மா ரோஜா. ஊருக்கு போன இடத்துல உன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் எதாவது மனஸ்தாபமா” என்று பாண்டியன் கேட்க.
“அம்மாடி முல்லை என்னடா ஆச்சு” என்று கேட்டுக்கொண்டே பார்வதி கதிரின் அறைக்குள் நுழைய. அவரை பின் தொடர்ந்து ரோஜாவும் உள்ளே சென்றாள்.
கட்டிலில் முகத்தை புதைத்துக்கொண்டு முல்லை குலுங்கி அழும் காட்சியினை பார்த்து ரோஜாவிற்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில்.“முல்லை. வெளியே வா” என்று தன் மருமகளை அழைத்தார் பாண்டியன்.
“அம்மாடி முல்லை. என்னமா.
என்னமா ஆச்சு” என்று அறையின் வாசலின் நின்றப்படி முருகனும் தன் மகளை அழைக்க.
“முல்லை இங்க பாரு” என்று முல்லையின் முகத்தை தன் வசம் திருப்பிய பார்வதியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போக.
“அண்ணி.“ என்று கண்கள் கலங்கினாள் ரோஜா.
கோவத்தில் கதிர் முல்லையின் கன்னத்தில் அடித்த வேகத்தில் அவளின் கன்னம் சிவந்து உதட்டோரத்தில் ரத்தம் கசிந்து இருக்க.“முல்லை. என்னாச்சு. ஏன் இப்படி கன்னம் சிவந்து உதட்டுல ரத்தம் வருது” என்று பார்வதி பதற்றத்துடன் கேட்க.
அதே சமயம்.“என்ன ரத்தம் வருதா, யாருக்கு ரத்தம் வருது, எங்க ரத்தம் வருது” என்று ராகத்துடன் கஸ்தூரி கதிரின் அறையை எட்டிபார்த்தவரை தொடர்ந்து மீனாவும் தன் அறையில் இருந்து வெளியே வந்திருந்தாள்.
“இங்க என்ன தான் நடக்குது. முல்லை. இப்போ நீ வெளியே வரியா. இல்ல நான் உள்ள வரணுமா” என்று பாண்டியன் கர்ஜித்த குரலில், அழுது வீங்கிய முகத்துடன் கண்ணீருடன் தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் முல்லை.
தன் மகளை அந்த நிலைமையில் பார்த்ததும் முருகனின் விழிகள் ஈரமாக.
“ஐயையோ. என்ன முல்லை என்னாச்சு” என்று இல்லாத அக்கறையை க்காட்டினாள் கஸ்தூரி.
கதிர் முல்லைக்கு இடையே ஏதோ பெரிய பிரச்சனை நடந்து இருக்கிறது என்று புரிந்துகொண்ட மீனா.“அம்மா, கொஞ்சம் அமைதியா இரு” என்று தன் அம்மாவை அடக்கினாள்.
தன் முன்னே முல்லை கண் கலங்கி நின்றவளை பார்த்து.“ரோஜா. எங்க இருந்தாலும் கதிர் இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்தாகணும்” என்ற பாண்டியனின் வார்த்தையில் ரோஜா வேகமாக நாகராஜனின் தென்னதோப்பு வீட்டுக்கு ஓடினாள்.
“மனுஷனா அவன். நல்ல வேள என் பொண்ணு அந்த ரக்ஷானை கல்யாணம் பண்ணிக்கல” என்று கஸ்தூரி நேரம் பார்த்து வார்த்தையில் நஞ்சை கலக்க.
முருகனோ அந்த இடத்தில் தன் மகளின் நிலையை பார்த்து மனதளவில் உடைந்து தான் போனார்.
இதான் சமயம் என்று கஸ்தூரி இஷ்டத்துக்கு பேசிக்கொண்டு இருக்க.“நான் தான் சொன்னேனே முல்லை. கதிர் மாமா மனசுல என்னைக்குமே நீ இடம் பிடிக்கவே முடியாது. மாமா உன்னை எப்பவும் ஏத்துக்கவே ஏத்துக்காது. நான் அன்னைக்கு சொல்லும் போது என்னை எப்படி கிண்டல் பண்ண. ஆனா இப்போ பார்த்தியா உன்னை அவரு நேசிக்க கூட வேண்டாம். அடலீஸ்ட் இப்படி வெறுத்து கை நீட்டாம இருக்கலாமே” என்று மீனாவும் அவள் பங்குக்கு பதனி விற்க ஆரம்பித்து இருந்தாள்.
மீனா கஸ்தூரி என்று இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் முல்லையின் காதில் தேவையில்லாத பாடல்களை பாடிக்கொண்டு இருக்க.
பாண்டியனோ கதிரின் வருகைக்காக வாசலை பார்த்துக்கொண்டு இருந்தவர் கண்ணுக்கு முல்லையின் முகத்தை பார்க்கவே தயக்கமாக இருந்தது.
முருகன், பார்வதி, பாண்டியன், மீனா, கஸ்தூரி என்று அனைவரின் முன்னிலையிலும் காட்சி பொருளை போல நின்று இருந்த முல்லைக்கு தன்னை நினைத்து தன் மேலேயே கோவம் எழுந்து இருக்க. இதற்கெல்லாம் காரணமே கதிர் தான் என்று அவள் மனதில் அவன் மீது அளவில்லாத கோவம் எழுந்தது.
“அம்மாடி முல்லை அழாத மா. இரு கதிர் மாப்புள்ள வரட்டும். நம்ம என்ன ஏதுன்னு விசாரிப்போம்” என்று முருகன் முல்லைக்கு தைரியம் கொடுக்க.
“ஆமா. நீங்க விசாரிச்சு மட்டும் இங்க என்ன மாற போகுது” என்றாள் கஸ்தூரி.
“அண்ணா. இங்க என்ன நடக்குது. கதிர் மாப்புள எப்படி எங்க பொண்ண கை நீட்டி அடிக்கலாம்” என்று பார்வதி பாண்டியனிடம் முல்லைக்காக வாதாடிக்கொண்டு இருக்க.
“பார்வதி நீ அமைதியா இரு. கதிர் மாப்புள்ள வந்ததும் மாமா என்ன ஏதுன்னு விசாரிப்பாரு” என்றார் முருகன்.
“நீங்க என்ன விசாரிச்சாலும் சரி. அது என்ன பொம்பள மேல கை வைக்கிற பழக்கம்” என்று பார்வதி கோபத்துடன் முல்லையை தான் பெற்ற பிள்ளையாக எண்ணி பாண்டியனிடம் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“பார்வதி, சொல்றேனே நீ கொஞ்சம் அமைதியா இரு” என்று முருகன் சற்று குரலை உசத்த.
“முடியாது முடியாது. இந்த உலகலத்துல எந்த புருஷனாலும் பொண்டாட்டி வாயை மூடவே முடியாது” என்ற தத்துவத்தோடு கதிர் வீட்டுக்குள் நுழைந்தவனின் கோவப்பார்வை முல்லையை மட்டும் தான் உள்வாங்கி இருந்தது.
, , , , , , , ,
அவனின் பேச்சிலும் செயலிலும் கதிர் போதையில் இருப்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்ட.
“கதிர் மாப்புள்ள. என்னப்பா இதெல்லாம். என் பொண்ண கை நீட்டி அடிக்கிற அளவுக்கு உங்களுக்கு அவ மேல என்ன கோவம்” என்று உடைந்த குரலில் கேட்டார் முருகன்.
“கோவமா. வெறி. இவ மேல எனக்கு கொலை வெறி இருக்கு. இவ பேசுன பேச்சுக்கு இப்போ கூட இவள நான்.“ என்று பல்லைகடித்துக்கொண்டு முல்லையை அடிக்க கை ஓங்கிக்கொண்டு போனவனை தடுத்து நிறுத்தி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார் பாண்டியன்.
“தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளையை இப்படியா எல்லோர் எதிரிலும் அடிப்பீங்க” என்று முருகன் அந்த இடத்திலும் கதிருக்காக பரிந்து பேச. இந்த முறை சிவந்த கன்னத்துடன் கதிரின் கண்கள் முல்லையை பார்த்து இருந்தது.
“தலைக்கு மேல மட்டுமா இவன் வளர்ந்து இருக்கான். தற்குறியால்ல வளர்ந்து இருக்கான். எவ்ளோ திமிர் இருந்தா பொம்பள புள்ள மேல கை வைப்பான். அதுவும் என் மருமக மேல” என்று பாண்டியன் மீண்டும் கதிரை அடிக்க கை ஒங்க.“போதும் நிறுத்துங்க மாமா” என்ற மீனாவின் குரலில். பாண்டியன் தான் ஓங்கிய கையை கீழே போட்டார்.
“என்ன மாமா நீங்க. கதிர் மாமா முல்லையை அடிக்கிற அளவுக்கு போய் இருக்காருன்னா. அப்படி முல்லை என்ன பண்ணான்னு தானே நீங்க கேக்கணும். அத விட்டுட்டு கதிர் மாமாவை அடிக்கிறீங்க” என்று மீனா அவனுக்காக பரிந்து பேச.
கதிர் தத்து தடுமாறி மீனாவின் முன்னே சென்று நின்றான்.
முல்லையின் கண்கள் கதிரையும் மீனாவையும் உள்வாங்கி இருக்க.
“மீனா. உனக்கு தான் என்னைக்குமே என் மனசு புரியும். நீ தான் எப்பவுமே எனக்காக பேசுவ. நீ கிரேட்” என்று கதிர் குடி போதையில் மீனாவிற்கு புகழாறம் சூட்ட.
முல்லைக்கு மேலும் அழுகை தான் முட்டிக்கொண்டு வந்தது.
“வாத்தி. இங்க வாங்க முதல்ல. ஏன் இப்படி பண்றிங்க” என்ற ரோஜா. தன் அண்ணனின் கையை பிடித்து தன் அருகே நிறுத்தியவள்.
“அப்பா. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிப்போம். இப்போ எல்லோரும் அவங்கவங்க ரூமுக்கு போங்க” என்றாள் ரோஜா.
பாண்டியனுக்கும் போதையில் இருக்கும் கதிரிடம் என்ன பேசுவதேன்றே புரியாமல் போக.“அது எப்படி இந்த குடிகாரன் எப்போ பாரு குடிச்சிட்டு பிரச்சனை பண்ணுவான், அத நம்ம கண்டுக்காம இருக்கணுமா. அண்ணா இதுக்கு நீங்க தான் தீர்வு சொல்லணும். பாவம் முல்லை. ஏன் கதிர் இப்படி பண்ணுறான். அவனை நீங்க கண்டிக்கவே மாட்டிங்களா” என்ற கஸ்தூரி ஆனமட்டிலும் கதிர் முல்லைக்கு பிரச்சனையை உண்டாக்க முயற்சி செய்துக்கொண்டு இருந்தாள்.
“அத்த. நீங்க சத்த கம்முனு இருங்க. முல்லை அண்ணி நீங்க ரூமுக்கு போங்க. நான் உங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்” என்று ரோஜா சொல்ல.
“ஆமா ஆமா சாப்பிட கொடுங்க. நல்லா சாப்பிட்டு என்னை பார்த்து திமிரா கேள்வி கேப்பா, கொடுங்க கொடுங்க. நல்லா சாப்பாடு கொடுங்க” என்று மீண்டும் கதிர் போதையில் பேசிக்கொண்டு இருந்தான்.
“நண்பா. நீ வா. வந்து என் வீட்டுல படு” என்று வேகமாக வீட்டின்னுள் நுழைந்த நாகராஜன் கதிரை தன்னோடு அழைக்க.
“வா பா எஜமான். கதிர் இந்த வீட்டை விட்டு வெளியவே போகல. அப்புறம் எப்படி குடிச்சான். உன் வீட்டுல தான் வாங்கி வச்சி அவனை குடிக்க வச்சி வெடிக்க பாக்கறியா” என்று கஸ்தூரி கேட்க.
“இவன் குளிச்சிட்டு வரதுக்குள்ள. இவன் வீட்டுல இருந்த வெளிநாட்டு சர்க்க எடுத்து குடிச்சுட்டேன். ஏன் உனக்கும் வேணுமா” என்று குடி போதையில் கஸ்தூரியை பார்த்து கேட்டான் கதிர்.
இதுவரை கதிரையும் முல்லையையும் எதிர் எதிரே நிற்க வைத்து என்ன பிரச்சனை என்று கேளாமல். கதிர் உளறுவதை மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்த பார்வதிக்கு கோவம் எழுந்த நிலையில்.
“என்ன அண்ணா. என்ன இதெல்லாம். நாங்க இருக்கும் போதே முல்லையை கதிர் இப்படி கொடுமை படுத்துனா. நாங்க இல்லாத போது எங்க பொண்ணு நிலைமை என்ன தான் ஆகும்” என்று பார்வதி கேட்க.
“ஐயோ ஐயோ ஐயோ, இது உலக மகா நடிப்பால்ல இருக்கு” என்று கதிர் அவன் வாயில் கை வைத்துக்கொண்டான்.
கதிரின் செய்கையில் பார்வதி புருவம் உயர்த்த.
“நீயே ஒரு கொடுமைக்கார சித்தி தான். நீ இப்போ ரவா லட்டுக்கு நல்லது நினைக்கிறியா” என்று கதிர் கேட்டு வைக்க.
“மாப்புள்ள என்னப்பா இதெல்லாம். ஏன் இப்படி பேசுற” என்று கேட்டார் முருகன்.
இதுவரை பார்வதியை பார்த்து கதிர் பேசிக்கொண்டு இருந்தவன். சட்டென்று திரும்பி முருகனை பார்த்தவன்.
“ஐயோ மீசை மாமா. நீங்களா. நீங்க தானே இந்த பாறுக்கூட சேர்ந்துகிட்டு, உங்க ஒரே பொண்ண ஹாஸ்டல்ல சேர்த்திங்க” என்று கதிர் கேட்க.
“டேய் கதிர்” என்று மீண்டும் கர்ஜித்தார் பாண்டியன்.
“இருங்கப்பா. ஏன் கத்துறீங்க. நான் என்ன பொய்யா சொல்லுறேன். நான் உண்மையை தானே பேசுறேன். இதோ இவங்க ரெண்டு பேருக்கும் முல்லை வேண்டாம்த பிள்ள தானே” என்று கதிர் கேட்க.“வாத்தி நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. முதல்ல உங்க ரூமுக்கு போங்க” என்றாள் ரோஜா.
“அண்ணா. இங்க நடக்குற எதுவும் சரியில்ல. கதிருக்கு என்னதான் ஆச்சு. ஏன் எங்கள இப்படி அவமான படுத்துறது மட்டும் இல்லாம, முல்லையை கை ஓங்கி அடிக்கிற அளவுக்கு முரடனா நடந்துக்கணும்” என்று பார்வதி கேட்க.
“ஏய் யார பார்த்து முரடன்னு சொல்லுற” என்று கைகளை மடக்கிக்கொண்டு பார்வதியிடம் பாய்ந்துக்கொண்டு வந்தான் கதிர்.
“டேய் டேய் என்னடா பண்ணுற. அவங்க உனக்கு மாமியார் டா” என்று பாண்டியன் தன் மகனின் கையை பிடித்து அவனை கட்டுப்படுத்த,
“ஆமா. பெரிய மாமியார். இவளே எனக்கு பொண்டாட்டியான்னு சந்தேகமா இருக்கு. இதுல இந்த கிழவி எனக்கு மாமியாரா. இங்க பாருங்க, என் கோபத்தை கிளறாதீங்க. ஒழுங்கு மரியாதையா எல்லாரும் என் கண்ணுல படாம எங்கேயாவது ஓடிப் போயிடுங்க. ஆமா உங்கள யார் இந்த வீட்டுக்கு வர சொன்னாங்க. போங்க. அதான் பொண்ண கட்டி கொடுத்துட்டீங்க இல்ல. இன்னும் ஏன் இங்க நின்னுகிட்டு எனக்கு பாடம் சொல்லித்தறிங்க” என்று மீண்டும் கதிர் அதீத போதையில் யாரையும் மட்டு மரியாதையின்றி பேசிக்கொண்டு இருக்க, இது வரை பொறுத்திருந்த முல்லையோ.“போதும் நிறுத்துறீங்களா” என்று சத்தமாக கத்தினாள்.
“என்னடி சத்தமெல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு. நாலு சுவத்துக்குள்ள நிக்க வச்சு என்னை அசிங்கப்படுத்தனது போதாதுன்னு இப்போ குடும்பத்துக்கு எதிர்லையும் நிக்க வச்சு என்ன கேவலப்படுத்த போறியா” என்று கதிர் முல்லையைப் பார்த்து கோபமாக கேள்வி கேட்க.
“ஐயோ நண்பா போதும் நிறுத்து. வா நம்ப வீட்டுக்கு போகலாம்” என்று மீண்டும் நாகராஜன் தன் நண்பனை தன்னோடு அழைத்தான்.
“டேய் இருடா. இவ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் வரமாட்டேன்.
சொல்லுடி. என்ன.? இப்பவும் எல்லோர் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்த போறியா” என்று கதிர் கேட்க.
“அப்படி என்ன மாமா முல்லை உங்களை அசிங்கப்படுத்திட்டா?” என்று இவர்கள் இருவரின் வாழ்க்கையை கெடுக்கும் விதத்தில் மீனா கதிரை கேள்வி கேட்டாள்.
“கேளு மீனா. நல்லா கேளு. என் மனசுல இருக்குற சோகத்தை எல்லாம் நீ தான் கேட்கணும்” என்று கதிர் மீனாவிடம் அழுது புலம்பும் நிலையில் தன் மனதில் இருப்பதை சொல்ல முற்பட,
“சொல்லுங்க மாமா சொல்லுங்க. உங்களுக்காக நான் இருக்கேன். எனக்கு அப்பவே தெரியும் மாமா. உங்க ரெண்டு பேருக்குள்ள ஒத்துமையை இல்ல. நீங்களும் நானும் தான் கல்யாணம் பண்ணி இருக்கணும். ஆனா அந்த கல்யாணம் தான் நடக்காம போயிடுச்சு, இருந்தாலும் உங்க அழகுக்கும் அறிவுக்கும் ஏத்த மாதிரி நீங்க பொறுமையா வேற பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனா நீங்க கல்யாணம் பண்ணும் போது இந்த வாழ்க்கை நிலைக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று தன் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் மீனா சபைக்கு நடுவே அவள் கெட்ட எண்ணத்தை கொட்டி தீர்க்க. பார்வதிக்கோ மீனாவை அடிக்கும் அளவிற்கு கோபம் எழுந்தது.
“இதெல்லாம் உனக்கு தெரிஞ்சிருக்கு மீனா. ஆனா எனக்கு தெரியாம போச்சே, இவ என்னை என்ன சொன்னா தெரியுமா” என்று கதிர் தன் ஆள்காட்டி விரலை நீட்டி முல்லையை குற்றம் சொல்ல,
“சொல்லுங்க மாமா. முல்லை உங்களை என்ன சொன்னா. எதனால நீங்க அவளை அடிச்சீங்க. சொல்லுங்க மாமா” என்று மீனா கேட்க.“அதை எப்படி நான் என் வாயால சொல்லுவேன்” என்று இல்லாத கண்ணீரை துடைத்தான் கதிர்.
“பரவால்ல மாமா. சொல்லுங்க. உங்க மனசுல இருக்குற ஆதங்கத்தை எல்லாம் என்கிட்ட சொல்லுங்க மாமா. சொல்லுங்க, “ என்று மீனா கேக்க.
“அத எப்படி நான் என் வாயால சொல்லுவேன்” என்று மீண்டும் கதிர் தன் மனதில் உள்ள கவலையை மீனாவிடம் சொல்ல முற்பட்டவன் சொல்லாமலேயே இருக்க,
இங்கே நடக்கும் கூத்தையெல்லாம் பார்த்து அதீத கோபம் அடைந்த முல்லை.
“இன்னும் எவ்வளவுதான் என்னையும் என் அம்மா அப்பாவையும் அசிங்கப்படுத்தலாம்ன்னு இருக்கீங்க” என்று கோபத்துடன் கேட்டாள் முல்லை.
“என்ன. நான் உங்கள அசிங்க படுத்துறேனா. எங்க என்னை பார்த்து சொல்லு. நானா உங்கள அசிங்கப்படுத்துறேன்.“ என்ற கதிரின் அருகாமையில் முல்லைக்கு மதுவின் நாத்தம் குமட்டிக்கொண்டு வர,
“ஆங் ஆமா ஆமா. உனக்கு என்னை பார்த்தா வாந்தி தான் வரும்” என்று சீரினான் கதிர்.
கதிர் மனதில் என்ன உள்ளது. முல்லையின் கோவத்துக்கு என்ன காரணம் என்று தெரியாமல் அனைவரும் குழம்பி போக.“கதிர் மாப்புள்ள. உங்களுக்கு என்னதான் ஆச்சு. ஏன் இப்படியெல்லாம் நடந்துக்குறீங்க. நீங்க எல்லோரும் சென்னைக்கு போகும் போது சந்தோசமா தானே போனீங்க. ஆனா ஏன் வந்ததும் வராததுமா இப்படியொரு பிரச்சனை” என்று முருகன் கேட்டார்.
“ஆமா ஆமா. ரொம்ப சந்தோசமா தான் சென்னை போனோம். நீங்க அத பார்த்திங்க பாருங்க,” என்று கதிர் கோபத்துடன் கேட்க.
“அப்பா. இவர்கிட்ட பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல. நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க.“ என்று முல்லை சொல்ல.“என்னமா முல்லை நீ. இப்போ ஏன் மச்சானை கிளம்ப சொல்லுற” என்று கேட்டார் பாண்டியன்.
“பின்ன என்ன மாமா. இவரு எப்படியெல்லாம் பேசுறாருனு நீங்களும் பார்த்துட்டு தானே இருக்கீங்க. இதுக்கு மேல என் அம்மா அப்பா இங்க இருந்தா இத விட கேவலமா தான் பேசுவாரு. வேணா மாமா. அவங்க கிளம்பட்டும்” என்று முல்லை இவள் படும் வேதனையை தன் தந்தை பார்க்க வேண்டாம்ம் என எண்ணியவள் அங்கிருந்து முருகனையும் பார்வதியையும் கிளம்ப சொல்ல,
“yes yes get out.“ என்று உருமினான் கதிர்.
“சரி பா கதிர் நாங்க போறோம், அம்மாடி முல்லை. நீ கவலைப்படாத. எல்லாம் சரியாகும். பார்வதி நீ வா நம்ம
கிளம்பலாம்” என்று முருகன் சொல்ல.
முல்லை எதிரே வந்து நின்றான் கதிர்.
முல்லை கதிரை முறைத்து பார்க்க.
கதிர் முல்லையை அடிபட்ட பார்வை பார்த்தவன்.“என்னை பார்த்து எப்படிடி அப்படி ஒரு வார்த்தை கேட்ட” என்ற கதிர். அதித போதையில் தடுமாறியவனை நாகராஜன் தாங்கி பிடிக்க.
“நாகா. இன்னைக்கு வாத்தியை நீங்க உங்க வீட்டுல படுக்க வச்சிக்கோங்க” என்றாள் ரோஜா.
“முல்லை. நீ எதுக்கும் கவலைப்படாத. கதிர் மாப்புள நல்லவன் தான். கல்யாணம் முடிந்த கையோட இப்படி முரண்பாடு எல்லாம் வரது சகஜம் தான். நீ வருத்தப்படாத” என்ற முருகன், பார்வதியை அழைத்துக்கொண்டு கனத்த இதயத்தோடு பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறியதும். முல்லை அழுதப்படியே
தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.
நாகராஜன் கதிரை அவன் வீட்டுக்கு அழைத்து சென்று இருக்க. பாண்டியன் கவலையுடன் அவர் அறைக்கு செல்ல. இங்கே என்ன தான் நடக்கிறது என்று புரியாமல் ரோஜாவும் கவலையில் இருக்க. கஸ்தூரியும் மீனாவும் மட்டும் எல்லை இல்லாத மகிழ்ச்சியில் மிதந்துக்கொண்டு இருந்தார்கள்.
அழுது அழுது ஒருக் கட்டத்தில் சோர்ந்து போன முல்லை பசி மயக்கத்தில் கண்கள் அசர்ந்தவள்,
“முல்லை கதவ திற. முருகன் மாமாவும் பார்வதி அக்காவும் போன கார் Accident ஆகிடுதாம் முல்லை. கதவ திற முல்லை” என்று தன் அறையின் கதவை கஸ்தூரி தட்டும் சத்தம் கேட்டு கண்கள் விழித்த முல்லையின் காதில் கஸ்தூரி சொன்ன செய்தி இடியென இறங்கியது.
–தொடரும்