நேரம் கடந்தது.
கட்டிலின் மீது ஆடவனின் ஆதிகத்தில் பெண்ணவள் துவண்டு போனாள்.
ஆணின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அவனே அறிந்திடாத நிலையில். கதிரின் தேக சூடு தணியும் வரை வஞ்சியின் தேகத்தில் தஞ்சம் அடைந்தான்.
அவன் தரும் சுகம் பெண்ணின் இதயத்தில் தீராத வலியை தான் உண்டாக்கியதே தவிர. ஒரு துளிக்கூட அவளுள் அவன் மீது அந்த நொடி காதல் உணவர்வை உண்டாக்க வில்லை என்பது தான் உண்மை.
கதிர் உடலளவில் அவளை ஆட்கொண்டு இருந்தானே தவிர அவளின் உள்ளத்தை நூல் அளவும் நெருங்க வில்லை.
சில நிமிட கூடலின் முடிவில் பெண்ணின் தேகத்தில் இருந்து தன்னை விடுவித்துகொண்டவன். மாதுவின் போதையில் மயங்கி அவள் அருகே அப்படியே சரிந்தான்.
சில நிமிடங்களில் தன்னுடைய அனுமதியின்றி கதிரின் கூடல் முல்லைக்கு நரக வேதனையை கொடுத்து இருக்க. கதிரால் கழட்டி வீசப்பட்ட அவளின் ஆடைகளை எடுத்துக்கொண்டு கலங்கிய விழிகளோடு குளியலறை புகுந்தவள் தண்ணீரை திறந்து அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்து “ஓ.“
என்று கத்தி அழத் தொடங்கினாள்.
நீண்ட நேரம் அழுதவளுக்கு தன் மீது கதிருக்கு காதலே இல்லாமல் வெறும் உடல் சுகத்துக்காக இவளுடன் கூடி இருக்கிறான் என்ற எண்ணம் பசு மரத்து ஆணியை போல அவள் மனதில் பதிந்து இருந்தது.
நொடிகள் நிமிடங்களாக மாறின.
நிமிடங்கள் சேர்ந்து சில மணி துளிகளை கடந்து இருக்க, அழுது அழுது ஒரு கட்டத்தில் சோர்ந்து போன பெண்ணவள் குளியலறையில் தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்தாள்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல். அவன் காதல்க் கொண்ட பெண்ணோடு மனைவி என்ற உரிமையில் ஈருடல் ஓர் உயிராக கலந்த கதிருக்கு முல்லையின் மனதில் அவன் அகல பாதாளதுக்கு சென்ற விஷயம் தெரியாமல் களைப்பில் நிம்மதியாக படுத்து இருந்தான்.
தன்னை பற்றிய எண்ணமே இல்லாமல் நினைத்ததை முடித்த திருப்த்தியில் தான் கதிர் தூங்குகிறான் என நினைத்த முல்லைக்கு அவனை அந்த நிலைமையில் பார்க்க பார்க்க கோவம் எழுந்தது.
நீண்ட நொடிகள் உறங்கும் கதிரை அருவருப்பாக பார்த்த முல்லை. அந்த அறையில் உள்ள பால்கனிக்கு சென்று வெறும் தரையில் படுத்து அழ தொடங்கியவளுக்கு எப்போது உறங்கினோம் என்று அவளுக்கே நினைவில்லாமல் போனது.
இதே தருணம். ரோஜாவுடன் கோவிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்த செந்திலின் அன்னை பாரிஜாதம் ரோஜாவை கடவுளை போல பாவித்து அவளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
இவர்கள் பயணிக்கும் காரை விரட்டும் நாகராஜன் செந்திலின் வீட்டை நோக்கி வாகனத்தை நகர்த்த. வழியெல்லாம் ரோஜாவின் முகம் கடுங்கோவத்தில் சிவந்து இருப்பதை அவனும் கவனித்து தான் இருந்தான்.
“ராஜா. இன்னும் வீட்டுக்கு போக எத்தனை மணி நேரம் ஆகும்” என பாரிஜாதம் கேக்க.
“ஒரு மணி நேரத்துக்கு மேலாகும்” என்றான் நாகராஜன்.
“அப்போ ஒரு டீ கடையில நிறுத்துப்பா” என்று பாரிஜாதம் சொல்ல. கார் ஒரு தேநீர் கடைக்கு எதிரே நின்றது.
“ரோஜா. உனக்கு என்ன வேணுமோ சொல்லிக்கோ” என்ற பாரிஜாதம் வேகமாக கழிவறையை நோக்கி நடக்க.
“ரோஜா காரில் இருந்து இறங்காமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
பரிஜாதத்தை தொடர்ந்து நாகராஜன் காரில் இருந்து இறங்கியவன்.“உங்களுக்கு குடிக்க என்ன வாங்கி வரட்டும்” என்று ரோஜாவை கேட்க.
“எனக்கு எதுவும் வேணா” என்றவள் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டு கடுப்பாகவே அமர்ந்து இருந்தாள்.
ரோஜாவை பார்த்து பெருமூச்சோடு நாகராஜன் டீ கடைக்கு சென்றவன்.
கையில் டீ மற்றும் பிஸ்கட்டுடன் ரோஜா முன்னே வந்து நின்று அவளை மேலும் கடுப்பேத்தும் விதமாக தனியே அவன் மட்டும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க.
“என்ன ராஜா. ரோஜாவுக்கு சாப்பிட எதுவும் வாங்கிக்கொடுக்கலையா” என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தார் பாரிஜாதம்.
“அவங்களுக்கு எதுவும் வேணாமா. ஆனா இங்க டீ ரொம்ப நல்லா இருக்கு. நீங்க குடிங்க” என்று நாகராஜன் வேண்டும் என்றே ரோஜாவை கண்டுகொள்ளாமல் இருக்க. ரோஜாவின் கோவம் மொத்தமும் நாகராஜன் மீது திரும்பிக்கொண்டு இருப்பதின் அர்த்தம் ரோஜாவுக்கே புரியாமல் தான் இருந்தது.
விடியல் காலை ஐந்து மணி அளவில். செந்தில் வீட்டில் கதிருக்காக கொடுத்து இருந்த அறையின் கட்டிலில் நேற்றைய இரவு நடந்த சம்பவங்ள் எதுவுமே நினைவில்லாதப்படி மாதுவின் போதையில் கதிர் உறங்கி இருந்தவன் லேசாக கண்கள் மலர்ந்தான்.
கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து தன் ஆடைகளை சரி செய்தவனின் தலையில் யாரோ கல்லை போட்டது போல வலி இருந்துக்கொண்டு இருக்க.
உடம்பெல்லாம் கூட அடித்து போட்டது போல கழுத்தை நெட்டு முறித்தவன்.“என்ன இது இப்படி தலை வலிக்குதே” என்று தனக்குள் புலம்பினான்.
கண்ணில் மண்ணை கொடியத்தை போல எரிச்சல் தாங்காமல் தன் கைக்கொண்டே அவன் கண்களை கசக்கிய கதிரின் சிந்தையில் ஏதோ ஒரு நிகழ்வு வந்து வந்து போனது.
“என்ன இது. என்னைக்குமே இல்லாம இப்படி உடம்பு வலிக்குதே” என்று எண்ணியவனின் கண்கள் இரண்டும் முல்லையை தேட.
“ரவா லட்டு, எங்க டி போன” என்று சத்தமாகவே முல்லையை அழைத்தான் கதிர்.
அவள் பெயரை உச்சரித்தவனின் உடலில் ஏற்பட்ட ஏதோ ஒரு மாற்றத்தை அவனாலும் உணர தான் முடிந்தது.
சில நொடிகள் ஆழ்ந்து யோசித்தவனுக்கு நேற்றைய தின இரவு முல்லையின் அருகாமை கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வர, பதறி அடித்து கட்டிலில் இருந்து எழுந்தவன் குளியலறை சென்று தண்ணீரை அள்ளி எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு மாற்று உடையில் அறையில் இருந்து வேகமாக கிழே இறங்கி வந்தான்.
கதிரின் கண்கள் முல்லையை தேட. அதே தருணம் செந்தில் அவனின் முதல் இரவு அறையில் இருந்து சோம்பல் முறித்தபடி வெளியே வந்தான்.
“என்ன மச்சான். நேத்து எல்லாம் சுபமா முடிந்ததா” என்று செந்தில் சம்மந்தமே இல்லாமல் கதிரை கேட்க.
“டேய். என்ன உளறுற” என்ற கதிரோ சமையல் அறைக்குள் முல்லை இருப்பாளா என்று அவளை தேடி அடுப்பணைக்குள் சென்றான்.
முல்லை அங்கே இல்லாததை அறிந்துகொண்ட கதிர்.“எங்க போனா இவ. ஐயோ அப்போ நேத்து நைட்.“
என்று யோசித்தவனின் இதயம் வேகமாக துடிக்க. மீண்டும் வீட்டின்னுள் முல்லையை தேடினான் கதிர்.
“டேய் மச்சான். என்னடா. காலையில்லையே தங்கச்சியை தேடுற. ஏன் நேத்து நைட் நீ ஒழுங்கா வேலை பார்க்கலையா” என்று கிண்டலாக கேட்டான் செந்தில்.
அவனின் நக்கல் பேச்சில் கதிருக்கு ஏதோ பொறி தட்ட.
“அப்புறம் மச்சான். ஜூஸ் நல்லா இருந்துச்சா” என்று வழிந்துகொண்டே கேட்டான் செந்தில்.
தன் நண்பனின் கேள்வியில் முகம் இறுகிய கதிர்.“என்ன ஜூஸ் டா. என்ன பேசுற நீ” என்று பல்லை கடித்தான்.
“அட. அதான் மச்சான். நேத்து நான் கொடுத்தேனே பழ ஜூஸ். அதுனால தானே நீ இப்போ குட்டி போட்ட பூனையைப் போல காலை எழுந்ததும் உன் பொண்டாட்டியை தேடி அலையுற” என்று செந்தில் கேட்க.
“என்னடா உளறுற. அப்படி என்ன ஜூஸ் கொடுத்து தொலைஞ்ச” என்று கேட்டான் கதிர்.
“அதுவா மச்சான். நேத்து எனக்கு முதல் இரவு தானே. அதான் இரவெல்லாம் அயராது வேலை பார்க்க சில பல லேகியங்களை வெளியுறல இருந்து வர வச்சி. பல சமாச்சாரங்களை அதுல மிக்ஸ் பண்ணி ஒரு ஜூஸ் தயாரிச்சு, நானும் குடிச்சிட்டு அதுல பாதி உனக்கும் கொடுத்தேன்” என்று சொன்னான் செந்தில்.
தன் நண்பனின் பேச்சை வைத்தே நேற்றைய தினம் இரவு கதிர் முல்லையிடம் எல்லை மீறுவதற்கு அந்த பாணம் தான் காரணம் என்று புரிந்துகொண்டவன் தன் தலையில் அடித்துக்கொண்டு வேகமாக மீண்டும் மாடிக்கு ஓடினான்.
“டேய் டேய் பாவம் டா அந்த பொண்ணு. மீதியை ஊருக்கு போய் வச்சிக்கோ மச்சான்” என்று செந்தில் கத்தியவன்,
“பேசாம நம்மளும் அடுத்த ரவுண்டு போகலாம்” என்று விசில் அடித்துக்கொண்டே மீண்டும் அவன் அறைக்குள் புகுந்தான்.
செந்திலின் அதிக பிரசங்கித்தனத்தால் கதிருக்கு முல்லையிடம் பெருத்த அவமானம் ஏற்படப்போகிறது என்று உணர்ந்த கதிர் நேற்றைய தினம் இரவு நேரம் நடந்த அசம்பாவிதத்திற்காக அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காக வேக வேகமாக மாடியில் உள்ள அறைக்குள் நுழைந்தவன் மூளையில் சட்டென்று பொறித்தட்டி அதே இடத்தில் நின்றான்.
“நேத்து நம்மையும் மீறி இப்படி ஒரு விஷயம் நடந்துடுச்சு. இப்ப போயி செந்தில் கொடுத்த மருந்தால தான் அவளை நம்ப நெருங்கனும்னு சொன்னா நம்மை தப்பா நினைப்பாளா. இல்ல புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் நடக்கிறது சகஜமுன்னு எண்ணி இந்த விஷயத்துல என்னை தவறாக எண்ணாமல் இயல்பாக இருந்திடுவாளா” என்று இருதலைக்கொல்லி எறும்பாக கதிரின் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.
“இல்ல இல்ல. நேத்து நம்ம முழு விருப்பத்தோடு தான் முல்லையுடன் சேர்ந்து நம் வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறோம் என்று முல்லை நம்பினால் தான். மேற்கொண்டு அவ நம்மக்கூட சந்தோஷமாக வாழ ஆரம்பிப்பாள்” என்று முடிவெடுத்த கதிர் தங்கள் அறைக்குள் நுழைந்தவன்.
மீண்டும் அவர்கள் அறைக்குள் முல்லையைத் தேட. அவள் அங்கே இல்லை என்றதும் பால்கனி பக்கம் சென்று பார்த்தான்.
அங்கேயும் தன்னவள் இல்லை என்று அறிந்த கதிர் மீண்டும் மொட்டை மாடிக்கு சென்று அங்கே அவளை தேட, எங்கும் அவள் இல்லை என்றதும் கதிருக்கு பதற்றம் அதிகரித்தது.
“என்ன இவ. எங்க போயிருப்பா. ஒருவேளை நேத்து நம்ப ரொம்ப முரட்டுத்தனமா நடந்து இருப்போமா. ச்சே. ஒரு கன்றாவியும் நினைவுக்கு வரல, ஆனா அவகிட்ட நம்ப தப்பா நடந்துக்கட்டது மட்டும் நினைவிருக்கு. போச்சி போச்சி. என் இத்தனை நாள் காதல ஒரே நாள் இரவுல இந்த செந்தில் பையன் குழி தோண்டி பொதச்சிட்டான்” என்று தனக்குள் புலம்பிய கதிர் அதே பதற்றத்துடன் மொட்டை மாடியில் இருந்து கிழே வந்தவன் மீண்டும் அறைக்குள் நுழைய. அங்கே அவனின் கைபேசி அலறியது.
“யார் இது, புது நம்பரா இருக்கு.“ என்று எண்ணியபடி கைபேசியின் திரையில் தெரிந்த எண்ணை வாசித்தப்படி போனை on செய்த கதிர், “ஹலோ யார் பேசுறது” என்று கேட்க.
எதிர் முனையில் இருந்து.“சார். உங்க Wife க்கு தலையில அடிபட்டு GHல அட்மிட் பண்ணிருக்கோம். Pls கொஞ்சம் சீக்கிரமா வரிங்களா” என்று ஒருவனின் குரல் கேட்க.
“ஹலோ. என் முல்லைக்கு என்னாச்சு. நீங்க யார் பேசுறீங்க. என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கதிர்வேலன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னே கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
“ஐயோ. முல்லைக்கு என்னாச்சு. GH ன்னு சொல்லறாங்களே. இவ எப்போ வெளிய போனா. முல்லை.“ என்று பதறிய கதிர். call log சென்று. மீண்டும் incoming காலில் இருக்கும் எண்ணுக்கு dail செய்ய. மறுமுனையில் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போனது.
முல்லைக்கு என்னானது என்று தவித்து போன கதிர். வேகமாக வீட்டை விட்டு வெளியே வர, அதே சமயம் நாகராஜனின் கார் அங்கே வந்தது.
——————————-
“என்ன கதிர். எங்கப்பா வேகமா கிளம்புற” என்ற பாரிஜாதம் காரில் இருந்து இறங்க.
“என்னாச்சு வாத்தி. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என்ற ரோஜாவும் காரில் இருந்து இறங்க.“முல்லை. முல்லைக்கு accident ஆச்சுன்னு போன் வந்துச்சு மா” என்றான் கதிர்.
கதிரின் வார்த்தையை கேட்டு அனைவரும் பதற்றம் அடைய.“என்ன நண்பா சொல்லுற. முல்லைக்கா.?” என்று புரியாமல் கேட்டான் நாகராஜன்.
“வாத்தி. முல்லை அண்ணி இவ்வளவு காலையில எங்க போனாங்க. அவங்களுக்கு எப்படி accident?” என்று ரோஜாவும் புரியாமல் குழம்பியவள்.
“எந்த நம்பருல இருந்து போன் வந்துச்சு. மறுபடியும் அந்த எண்ணுக்கு போன் பண்ணிங்களா” என்று கேட்டாள்.
“ஆங் பண்ணேன். அவங்க போன் எடுக்கல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. GH. அவங்க முல்லையை GH ல அட்மிட் பண்ணிருக்குறதா சொன்னாங்க. அதுவும் அவளுக்கு தலையில அடிப்பட்டு இருக்குனு சொன்னாங்க” என்ற கதிரின் கண்களில் கண்ணீரும் எட்டிப்பார்த்தது.
“தம்பி என்னப்பா சொல்லுற. நீ சொல்றதை கேட்டா எனக்கே பயமா தான் இருக்கு. ராஜா. நீ உடனே கதிரை GH அழைச்சிட்டு போ. நான் போய் செந்திலை வர சொல்லுறேன்” என்றார் பாரிஜாதம்.
“இல்ல இல்ல. நாங்க முதல்ல GH போறோம். செந்தில் அண்ணா அவர் பைக்ல வரட்டும். வாத்தி வாங்க போகலாம்” என்ற ரோஜா பதற்றதுடன் காரில் ஏறி அமர. கதிரை அழைத்துக்கொண்டு நாகராஜன் ரோஜா என்று மூவரும் GHக்கு சென்றார்கள்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியெல்லாம் கதிரின் இதயம் இயல்பை விடவே வேகமாக துடிக்க. அவன் முகம் முழுதும் வியர்வை துளிகள் பூக்க தொடங்கி இருந்தது.
“நண்பா. தங்கச்சிக்கு ஒன்னும் ஆகாது. நீ பயப்புடாத” என்று நாகராஜன் தன் நண்பனுக்கு ஆறுதல் சொல்ல.
“ஆமா. முல்லை அண்ணி ஏன் வெளிய போனாங்க. அப்படியே போனாலும் அவங்க உங்கள அழைச்சிட்டு போக வேண்டியது தானே” என்று கேட்டாள் ரோஜா.
“அதானே. பாப்பாவுக்கு இங்க யாரை தெரியுமுன்னு தனியா வெளிய போயிருக்கு” என்று நாகராஜனும் அவன் பங்குக்கு கேள்வி எழுப்ப.
“ஐயோ. முல்லைக்கு என்னாச்சுன்னு தெரியலையே” என்று தனக்குள் துடித்து போனான் கதிர்.
சில நிமிடங்களில் நாகராஜன் GH வாசலில் அவன் காரை நிறுத்த.
கதிரும் ரோஜாவும் மருத்துவமனைக்குள் ஓடினார்கள்.
GH அவரச சிகிச்சை பிரிவில் முல்லையின் பெயரை சொல்லி கதிர் விசாரிக்க.
“அந்த பேருல யாரும் இங்க அட்மிட் ஆகல “என்றார் அங்கே பணிபுரியும் செவிலியர் ஒருவர்.
“வாத்தி. இப்போ எங்கன்னு போய் அண்ணியை பற்றி விசாரிக்கிறது. நீங்க வேணும்னா மறுபடியும் அந்த நம்பருக்கு call பண்ணுங்க” என்று ரோஜா சொல்ல.
“கதிர்.“ என்ற பெண்ணின் குரல் கேக்கும் திசையை நோக்கி கதிரும் ரோஜாவும் திரும்பி பார்க்க,
அதே சமயம் காரை பார்க் செய்துவிட்டு நாகராஜன் வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவனின் கைபேசிக்கு செந்திலிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு செந்தில்” என்ற நாகராஜனிடம்
“டேய். முல்லை நம்ம வீட்ல தான்டா இருக்கா. கதிர் ஏன் லூசு மாதிரி அவளுக்கு accident ஆச்சு, GH ல சேர்த்து இருக்காங்கன்னு உளறிட்டு உங்கள வேற அங்க அழைச்சிட்டு போயிருக்கான்” என்று செந்தில் கேக்கும் கேள்வியில் நாகராஜன் மேலும் குழம்பி போக.
“வாத்தி. இவங்க எப்படி இங்க? என்று ரோஜா புரியாமல் கதிரிடம் கேள்வி கேக்கும் தருணம். தலையில் கட்டுடன் கதிரை நோக்கி வந்துகொண்டு இருந்தாள் இன்றும் அவனை மட்டுமே உயிருக்கும் மேலாக நினைக்கும் பெண் ஒருவர்.
தொடரும்