Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 47

CHAPTER 47

முல்லை – 47

By Roja Roslin · October 29, 2026

0

சிறிது நேரம் கடந்த நிலையில்,

“நீங்க போய் அவரை பார்க்கலாம்” என்று செவிலியர் சொல்ல, முல்லை, ரோஜா, நாகராஜன் என்று மூவரும் சிகிச்சை அறைக்குள் செல்ல. அப்பொழுதுதான் கதிரின் முகம் கொஞ்சமாக தெளிவாய் இருந்தது

“என்ன வாத்தி. இப்ப எப்படி இருக்கீங்க” என்று ரோஜா கேட்க. கதிரின் கண்களோ. முல்லையிடம் இருந்து நகராமல் இருக்க. முல்லை அழுது அழுது அவள் முகம் வீங்கி இருந்தது.

“நண்பா இப்போ எப்படி பீல் பண்ற” என்று நாகராஜன் கேட்க.“பரவால்ல. சரி கிளம்பலாமா” என்ற கதிர். கட்டிலில் இருந்து எழ முயன்றவனை தாயாக தாங்கிக் கொண்டாள் முல்லை

முல்லையின் கண்ணீரும் அவளின் அரவணைப்பும் கதிருக்கு அவன் மீது அவள் கொண்ட அன்பையும் காதலையும் உணர்த்தினாலும். அவன் மனதில் உள்ள சில தேவையற்ற எண்ணங்கள் அவளுடன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ள தடையாக இருந்தது.

“இல்ல. பரவால்ல. நானே நடந்து வரேன்” என்ற கதிர் முல்லையின் கைகளை தட்டி விட. கோபம் கொண்ட முல்லையோ

“உங்களுக்கு எங்கேயாவது அறிவு இருக்கா. எதுக்காக இப்படி தேவையில்லாம கார்ல வரும்போது கண்டதையும் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குறீங்க. என்ன? உங்கள கேட்க யாரும் இல்லைன்னு நினைக்கிறீங்களா. இப்பதான் குளுக்கோஸ் போட்டு இருக்காங்க. உடம்புல சத்து இல்லாம இருக்கு. நான் தான் உங்களை கையை பிடித்து காருக்கு அழச்சிட்டு போறேனே. எதுக்காக என் கைய தட்டி விடுறீங்க?”

என்று அதிகப்படியான கோபத்தில் முல்லை கதிரிடம் வாதாட. மேற்கொண்டு கதிர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

“வாத்தி. என்ன ஆச்சு உங்களுக்கு. அண்ணி தான் உங்களை காருக்கு அழைச்சிட்டு வரேன்னு சொல்றாங்களே, வாங்க போகலாம்” என்று ரோஜா சொல்ல, “ஏன் இவ அழச்சிட்டு வரலனா எனக்கு நடந்து வர தெரியாதா” என்றான் கதிர்.

“இங்க பாருங்க மாமா சார். என் பொறுமைக்கும் ஒரு அளவிற்கு. இப்ப நீங்க ஓவரா பேசினீங்கன்னா டாக்டரை கூப்பிட்டு ஊசி எடுத்து உங்க வாயில குத்த சொல்லிடுவேன். ஒழுங்கா வாங்க போகலாம்” என்று முல்லை மேலும் கோபம் கொள்ள, கதிர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் முல்லையின் அரவணைப்பில் காரை நோக்கி நடந்தான்.

“வாத்தி. வேணும்னா நம்ப வீட்டுக்கு போகிடலாமா” என்று ரோஜா கேட்க, “ஐயையோ இல்லாமா. கல்யாணத்துக்கு நீங்க தான் தாலி எடுத்து குடுக்கணும்ன்னு செந்தில் அம்மா வீடு ஏறி வந்து கேட்டதுக்கு பிறகும் நம்ம போகாமல் இருந்தால் சரி வராது. இங்க இருந்து இன்னும் ரெண்டு மணி நேரம் தான். வாங்க கிளம்பலாம்” என்று கதிர் சொல்ல.

மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்கி வந்த நாகராஜன் தன் காரை பொறுமையாக மீண்டும் செந்திலின் வீட்டை நோக்கி விரட்டினான்.

பின் இருக்கையில் கதிரும் முல்லையும் அமர்ந்திருக்க. சோர்வாக இருந்த கதிரை தன் மடியில் படுக்கும்படி கண் ஜாடை செய்தாள் முல்லை.

“என்னடி. கண்ணு ரெண்டும் கதகளி ஆடுது” என்று கதிர் கோவமாக கேட்க.

“படுங்க மாமா சார்” என்று மீண்டும் தன் மடியை காட்டினாள் முல்லை.

“ம். நான் என்ன குழந்தையா. உன் மடியில படுத்துக்க” என்று கதிர் கேட்க.

“இங்க பாருங்க. நான் உங்க மேல செம கோவத்துல இருக்கேன். ஏதோ சோர்வா இருக்கீங்களேன்னு படுக்க சொன்னா ஓவரா சீன் காட்டுறீங்க. என்னதான் உங்க மனசுல நினைச்சுகிட்டு இருக்கீங்க” என்று முல்லை சண்டையிட.

“அப்படி ஒன்னும் நீ என் மேல பரிதாபப்பட்டு உன் மடியில என்னை படுக்க வைக்கணும்ன்னு எனக்கு அவசியம் இல்லை” என்று கதிரும் பதிலுக்கு அவளிடம் வாதாடினான்.

“பீச், நானும் பொறுத்து பொறுத்து நல்ல புள்ளையா இருந்துகிட்டு இருக்கேன். நீங்க என்ன ரொம்ப ஓவரா தான் போறீங்க. இங்கிருந்து செந்தில் அண்ணன் வீட்டுக்கு போக ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகும்னு எனக்கும் தெரியும். ஒழுங்கா வந்து படுங்க” என்ற முல்லை.

கதிர் சற்றும் எதிர்பார்க்காமல் அவன் காலரை இழுத்து பிடித்து தன் மடியில் படுக்க வைத்துகொண்டாள்.

முல்லையின் செயலில் சட்டென்று கதிரின் கண்கள் கலங்க. முல்லை அரவணைப்பாக கதிரின் கேசத்தை வருடி கொடுக்க, இருவரின் கண்களும் கலங்கியது. இவர்களின் இனம் புரியாத காதல் உணர்வில்.

சில மணி நேரத்திலேயே நாகராஜன் விரட்டிய கார் செந்தில் இல்லத்தின் வாசலை சென்றடைய.

கதிரோ முல்லையின் மடியில் சிறு பாலகனை போல தான் படித்து இருந்தான்.

“ஹ்ம். என்ன சின்னமா இது. உங்க அண்ணன் கல்யாணம் முடிச்சு என் தங்கச்சியை வாந்தி எடுக்க வைப்பான்னு நினைச்சா. இவன் இப்படி வாந்தி எடுத்து சுருங்கிப்போய் படுத்து இருக்கானே.“ என்று நாகராஜன் கேட்க. ரோஜாவோ அவனை முறைத்தாள்.

“சரி சரி முறைக்காதீங்க. நீங்க சும்மா பார்த்தாலே உங்க முகத்துல ஒரு பிரகாசம் தெரியுது” என்ற நாகராஜனை பார்த்து.

“பிரேகாஷ் ராஜா. அது யார்” என்று கேட்டாள் ரோஜா.

“சரிடா போச்சு போங்க. பிரேகாஷ் ராஜ் இல்ல சின்னமா. ப்ரகாசம்” என்று நாகராஜன் சொல்ல.“அது யாரா வேணா இருக்கட்டும். முதல்ல காருல இருந்து கிழே இறங்குங்க” என்றாள் ரோஜா.

கார் நின்றது கூட தெரியாமல் முல்லை மடியில் கதிரும் கதிர் முதுகில் முல்லையும் படுத்து இருக்க. ரோஜா அந்த காட்சியை தன் செல் போனில் படம்ப் பிடித்துக்கொண்டாள்.

“சின்னம்மா என்ன பண்றீங்க” என்று நகரராஜன் புரியாமல் கேட்க.“ தெரியல போட்டோ எடுக்குறேன்” என்றவள்.

“அண்ணி. அண்ணி” என்று பொறுமையாக முல்லையை எழுப்ப. பெண்ணவள் கண்கள் மலர்ந்து பார்த்தவளின் விழிகளின் எதிரே கதிர் உறங்கிக்கொண்டு இருந்தான்.

தன்னவனை கண்டு கீற்று புன்னகை மலர்ந்த பெண்ணவள்.

“என்ன ரோஜா. ஊருக்கு வந்தாச்சா” என்று கேட்டதும். முல்லையின் குரலில் கதிரும் கண் விழித்தவன் சோர்வாக தான் இருந்தான்.

“நண்பா. செந்தில் வீட்டுக்கு வந்தாச்சு” என்று நாகர்ஜன் சொல்ல. வாசலில் கார் நிற்பதை பார்த்து செந்தில் வாசலுக்கு ஓடி வந்தவன்.“ வாங்க வாங்க” என்று இவர்களை அன்பாகவே வரவேற்றான்.

இவர்கள் அனைவரும் நலம் விசாரித்தபடி வீட்டுக்குள் நுழைய.“நண்பா. நீயும் முல்லையும் மாடி ரூம்ல தங்கிக்கோங்க. ரோஜா நீ மைனா ரூம்ல தங்கிக்கோக்க. டேய் நாகா, நீ வா டா என் ரூம்ல தங்கிக்கோ” என்றான் செந்தில்.

“அண்ணா. மைனா எங்க” என்று முல்லை கேட்க.“ அவ அழகுக்கு அழகு சேர்க்க போய் இருக்கா மா. இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் மைனாவும் வந்துடுவாங்க. நீங்க மாடிக்கு போய் Fresh ஆகுங்க” என்று செந்தில் சொன்னதும்.

முல்லையும் கதிரும் மாடியில் உள்ள அறைக்கு சென்றார்கள்.

உள்ளே சென்றதும் கதிர் சோர்வாக கட்டிலில் அமர்ந்தவன் அருகே முல்லையும் வந்து அமர்ந்ததும்.

அவளையே கதிர் முறைத்து பார்க்க.

“என்ன மாமா சார் முறைக்கிறிங்க. உங்களுக்கு இதெல்லாம் தேவை தானா. யாருகிட்ட வீம்பு காட்ட இதெல்லாம் பண்ணுறீங்க” என்று முல்லை மீண்டும் கதிரிடம் சரசம் செய்ய ஆரம்பித்தாள்.

“இங்க பாருடி. நானே ரொம்ப கடுப்புல இருக்கேன். இனி உன்கூட நான் பேசவே மாட்டேன். இப்போ ஒழுங்கா ஓடிடு” என்று கதிர் முல்லையை எச்சரிக்க,

“சரியான முசுடு நீங்க. என்கிட்ட நீங்க பேசலைனா ரொம்ப நல்லதா போச்சு” என்று முகத்தை திருப்பிக்கொண்டு முல்லை குளியலறைக்குள் புகுந்தாள்.

கிட்டத்தட்ட பத்து நிமிடம் கடந்து முல்லை குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவள். வாசலில் இருக்கும் விளக்கை நிறுத்த சுவிட்ச் போர்டில் கை வைத்த வேகத்தில்.“அம்மா.“ என்று அலறிய நிலையில் கிழே விழுந்தாள்.

முல்லையை பார்த்து “அடியே ரவா லட்டு” என்ற கதிர். பதறி அடித்துக்கொண்டு கிழே சரிந்து இருந்தவளை தூக்கி மடியில் சாய்த்துக்கொண்டவன் கண்ணுக்கு முல்லையின் வலது கை முழுதும் நீல நிறமாக காட்சி அளித்ததும்.

“முல்லை.“என்ற கதிரின் குரல் அந்த கட்டடத்தையே ஆட்டம் காண வைத்தது.

முல்லை தன் ஒற்றை கண்ணை திறந்து பார்த்தவள்.“மாமா சார்.“ என்றதும் கதிரின் காது வழியே அவள் குரல் அவன் இதயத்துக்கு சென்று சற்று முன் நின்று போன அவன் இதய துடிப்பை தட்டி எழ வைத்தது.

தன் மடியில் இருந்த முல்லையை.

“ஏய் முல்லை. உனக்கு ஒன்னும் ஆகலயே.?”என அதிர்ச்சி அடைந்தவனாக கதிர் கேட்க.

“ஐயம் ஆல் ரைட் மாமா சார்” என கண்கள் சிமிட்டினாள் முல்லை.

“இல்லடி உனக்கு ஷாக்.“ என்று கதிர் கேள்விக்கேட்கும் முன்னே தன் இரண்டு கைகளை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்து.“அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகல. நான் சும்மா ஆக்ட் பண்ணேன்” என்றாள் முல்லை.

அவள் பதிலில் கோவமடைந்த கதிர்.“என்ன விளையாட்டு இது.“ என்று அவளை அடிக்க கை ஓங்கியதும் பயத்தில் முல்லை கண்கள் மூடி.“அடிக்காதீங்க மாமா சார். நான் விளையாட்டுக்கு தான் பண்ணேன்” என்று கொஞ்சும் குரலில் அவனிடம் பவ்யமாக பேசினாள்.

முல்லையின் செயலில் கதிர் கோவம் அடைந்தாலும். அவளின் பாவமான முகத்தை பார்த்து தன்னை தானே கதிர் சமாதானம் செய்துகொண்டவன். சிடு சிடுத்த முகத்துடன் தரையில் இருந்து எழுந்து மீண்டும் கட்டிலில் சென்று அமந்துகொண்டான்.

கதிரை பின் தொடர்ந்து சென்ற முல்லையும்.“மாமா சார் ஏன் என் மேல கோவமா இருக்கீங்க” என்று கேட்டதும்.

“பீச். அதெல்லாம் விடு. இப்போ ஏன் நீ ட்ராமா பண்ணிக்கிட்டு இருக்க. நான் உண்மையாவே உனக்கு ஷாக் அடிச்சிடுதுனு எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா” என்றான்.

“ம் தெரியுமே, நீங்க பயந்ததால தானே என்கூட பேசவே மாட்டேன்னு சொல்லி இதோ இப்போ பேசுறீங்க.“ என்று முல்லை சொல்ல.“ஓ. அப்போ என்னை பேச வைக்க தான் இப்படி ட்ராமா பண்ணியா” என்று கேட்டான்.

“ட்ராமா இல்ல மாமா சார். நீங்க ஏன் என் மேல கோவமா இருக்கீங்கன்னு எனக்கு தெரியல. அதான் உங்கள மறுபடியும் என்கிட்ட பேச வைக்க நான் இப்படி பண்ணேன்” என்று முல்லைச் சொல்ல அப்பொழுதும் கதிர் கோபத்துடன் வேறு பக்கமாக திரும்பி அமர்ந்துக்கொண்டான்.

கதிரை சமாதானம் செய்யும் முயற்சியில் முல்லை தோற்றுப்போனவள்.

“சரி மாமா சார். அப்போ உண்மையாவே எனக்கு ஷாக் அடிச்சா நீங்க என்கிட்ட பேசுவீங்க தானே.“ என்றபடி வேகமாக சுவிட்ச் போடை நோக்கி சென்றவள், தன் கையை பியூஸ்சில் வைப்பதற்கு முன்பு கதிர் முல்லையை தன் வசம் இழுத்து அணைத்து இருந்தான்.

அவன் அணைத்ததும் வார்த்தைகள் மறந்து இருவரும் பார்வையால் தங்களின் உணர்வுகளை பரிமாறிகொண்டாலும் இருவருக்கும் அவர்களின் காதலை புரிந்துக்கொள்ளும் திரன் இல்லாமல் தான் போனது.

அவன் அணைப்பில் அவள் அடங்கி இருக்க.

“ஏன் மாமா சார் என்கிட்ட பேச மாட்டுறீங்க. என்னை உங்களுக்கு பிடிக்கலையா” என்று. அவள் புருவ முடிச்சுகள் வளைந்து நெளிந்து அவனிடம் மௌனமாக கேள்வி எழுப்ப.

“பைத்தியக்காரி. என்னை மீறி உன்னை என் அளவுக்கு பிடித்து போக ஒருத்தன் இனி பிறந்து தான் வரணும். அதுவும் அவன் நம்ம பையனா தான் டி இருக்கனும்” என்று கதிர் இந்த முறையும் தனக்குள் தான் அவன் காதல் வசனத்தை சொல்லிக்கொண்டான்.

இருவரும் இப்படியே ஒருவரை பார்த்து ஒருவர் மௌனத்திலும் ஜாடையிலும் தங்கள் உணர்வுகளை பரிமாறிக்கொண்டு இருக்க.

“மாமா சார்.“ என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.

அவள் அழைப்பினை அவன் செவிகள் கேட்டு இருந்தாலும். அவனை மறந்து அவள் அழகினை ரசித்து இருந்தவன்.

“இனி அப்படியெல்லாம் பேசாத டி” என்றான்.

கதிர் எதைப்பற்றி சொல்கிறான் என்று முல்லை புரியாமல் அவன் விழிகளையே பார்த்திருக்க. என்னதான் நீ வேறொருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி இருந்தாலும் இனி என் வாழ்வில் நீதான், உன் வாழ்வில் நான் தான். நம் இருவருக்கும் ஒரே வாழ்க்கை தான். என்று மனதில் நினைத்தவன். மேற்கொண்டு அந்த அறையில் நில்லாமல். வேகமாக கிழே இறங்கி சென்று இருந்தான்.

“மாமா சார் எதைப் பற்றி பேச வேண்டாம்முன்னு சொல்றாரு. நான் அப்படி என்ன பேசினேன்” என்று முல்லை மேலும் இவர்கள் இருவரின் உரையாடலை எண்ணிப் பார்த்தவளுக்கு இன்னமும் அவள் ஜீவாவை பற்றி பேசியதால்தான் கதிர் தன்னிடம் கோபமாக இருக்கின்றான் என்ற உண்மை புரியாமல் போனது.

யோசித்துப் பார்த்து தோல்வியடைந்த முல்லை.“எது எப்படியோ, இப்போ மாமா சார் நம்மகிட்ட பேசுறாரே, அதுவே போதும்” என்று எண்ணியபடி அவளும் மாடியில் இருந்து கீழே இறங்கிச் செல்ல. அதே தருணம் செந்திலின் வருங்கால மனைவி மைனாவும். செந்திலின் அம்மா பாரிஜாதமும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

“அடடே. வாங்க வாங்க எப்போ வந்திங்க. பிரயாணம் எல்லாம் சுகம் தானே.“ என்று வந்தவர்களை பாரிஜாதம் வரவேற்க, “அடியே முல்லை. எப்படி டி இருக்க. என்னடி நீ ஆசை பட்ட மாதிரியே உன் மாமனை கல்யாணம் பண்ணிகிட்டியா.“ என்ற மைனாவின் வாயை ஓடி சென்று அடைத்து இருந்தாள் முல்லை.

மைனாவின் வார்த்தையில் உள்ள அர்த்தத்தை புரிந்திடாத கதிரும்.

இயல்பாகவே நின்று இருக்க.

“ஏய் இதுக்கு மேல வாயை திறந்த வாயை உடைச்சிடுவேன்” மைனாவை கண்டித்தாள் முல்லை.

யாருடைய கேட்ட நேரமோ அந்த இடத்தில அப்போதைக்கு ரோஜாவும் அங்கே இல்லாமல் போக. மைனா பேசிய வார்த்தைகள் யார் காதிலும் விழாமல் போனது

“என்ன மைனா கல்யாணத்துக்கு தயாரா ஆகிடியா” என்று கதிர் கேட்டதும்.“எங்க கல்யாணத்தை விடுங்க. நீங்க ஏன் என்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணீங்க” என்று உரிமையாக கோவித்துக்கொண்டாள் மைனா

“அது. அது வந்து” என்று கதிர் திக்கி திணற.“மைனா அக்கா வாத்திக்கு நடந்தது திடீர் கல்யாணம்” என்று சொல்லிக்கொண்டே roja அந்த இடத்திற்கு வந்தாள்

“அம்மாடி ரோஜா வா வா நீ வந்ததும் தான் எனக்கு உயிரே வந்துச்சு” என்று பாரிஜாதம் ரோஜாவை கோவில் அறைக்குள் அழைத்து செல்ல.“டேய் உன் அம்மாவுக்கு வேற வேலையே இல்லையா” என்று மைனா செந்திலை கடிந்துகொண்டாள்

“அப்புறம் மச்சான் வேற என்ன செய்தி” என்று மைனாவிடம் இருந்து தப்பிக்கும் வகையில் செந்தில் கதிரை அழைத்துக்கொண்டு வாசலுக்கு செல்ல “ஏய் நீ வா நம்ம உள்ள போகலாம்” என்று மைனாவும் முல்லையை அழைத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள்.

“என்னடி கதிர் அண்ணன் மீனாவை தானே காதலிச்சாரு. அப்புறம் எப்படி உன்னை” என்று மைனா கேட்டதும் முல்லையின் விழிகளில் கண்ணீர் தேங்கியது

“என்னடி ஏன் கண் கலங்குற”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மைனா. நான் ஆசைப்பட்ட வாழ்கை எனக்கு கிடைக்காதுனு தெரிஞ்ச பிறகு தான் நான் ஜீவா மாமாவை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னேன். ஆனா இதெல்லாம் எப்படி ஏன்னு தெரியாம மாமா சார் கூட எனக்கு கல்யாணம் முடிஞ்சுடுது” என்று முல்லை சொன்னதும் மைனா அவளை நட்புடன் அணைத்துக்கொண்டாள்

“சரி சரி இதுல அழ என்ன இருக்கு. உன் காதல் உண்மை என்ற பட்சத்துல தானே உன் மாமா சார் உனக்கு கிடைச்சு இருக்காரு”

“ஹாங் கிடைச்சதெல்லாம் சந்தோஷம் தான். ஆனா அவர் மனசுல நான் இல்லாம நான் எப்படி அவர்கூட சந்தோஷமா இருக்க முடியுமா”

“என்னடி உளறுற உன் மேல கதிர் அண்ணனுக்கு விருப்பம் இல்லைனு சொல்லுறியா”

“பின்ன. அவர்க்கு தான் என்னை பிடிக்காதே. அவர் மீனாவை தானே நேசிச்சாறு”

“ம் இருக்கலாம் டி. ஆனா மீனாவுக்கு தான் இப்போ ஜீவா அண்னன் கூட கல்யாணம் ஆகிடுதே. இந்த ஜென்மத்துல நீங்க ரெண்டு பேரும் தான் ஜோடி”

“ஹாங் நல்ல ஜோடி போ”

“என்னடி ரொம்ப சிலுத்துக்குற , “

“பின்ன என்ன. அவர் என்கிட்ட பத்து வார்த்தை தான் பேசுறாரு. அதுவும் சண்டை போடுற மாதிரி தான் இருக்கும்”

“ஏய் லூசு இப்போ தான் அப்படி இருக்கும். உங்க ரெண்டு பேருக்கும் பிள்ளை குட்டின்னு ஆச்சுன்னா இதெல்லாம் பழகி போயிடும்”

“நீ தான் லூசா. அவரு என்கிட்ட முகம் கொடுத்தே பேச மாட்டுறாருனு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன புள்ள குட்டின்னு பைத்தியம் மாதிரி பேசுற”

“ஏய் இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இவ்ளோ கோவப்படுற”

“பின்ன என்ன. எங்க கல்யாணம் தான் அவர் மனசுல நான் இருக்கேனான்னு தெரியாம அவசர அவசரமா நடந்துச்சு. ஆன எங்க இல்லற வாழ்கை நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்ட பிறகு தான் நடக்கணும். அப்போ தான் இந்த கல்யாணத்துக்கு ஒரு அர்த்தம் இருக்கும்”

“ம். நீ சொல்றதும் சரி தான். சரி விடு உங்க கல்யாணத்தை நடத்தி வைத்த அதே கடவுள் உங்க பிரெச்சனையையும் தீர்த்து வைப்பாறு” என்று மைனா சொல்ல. இதே சமயம் செந்தில் நாகராஜன் கதிர் என்று மூவரும் வெளியே ஆண்களுக்கே உரிய கிண்டல் நையாண்டியென்று ஜாலியாக இருந்தார்கள்.

அன்றைய தினம் இரவு நேரம். நாளை மாலை நடக்க இருக்கும் செந்தில் மைனா வரவேற்புக்காக தேவையான வற்றை அவர்கள் இல்லத்தில் இருந்தப்படியே அனைவரும் பார்த்து பார்த்து செய்துகொண்டு இருந்தார்கள்.

“சரி சரி நேரம் பத்து ஆகிடுச்சு வாங்க எல்லோரும் சாப்பிடலாம்” என்று செந்திலின் அன்னை பாரிஜாதம் அழைக்க “அம்மா நான் கொஞ்சம் கஞ்சி வச்சிக்கட்டுமா” என்று கேட்டாள் முல்லை.

“ஏமா கல்யாணம் சாப்பாடு தயாரா இருக்கு, எந்த நேரத்துல எதுக்கு கஞ்சி” என்று பாரிஜாதம் கேட்க, “கஞ்சி எனக்கில்ல மாமா சாருக்கு” என்றாள் முல்லை.

“என்ன சொல்ற முல்லை கதிர் அண்ணனுக்கா? ஏன் அவருக்கு உடம்பு சரியில்லையா?” என்று மைனா கேட்க

“ஆமா. கொஞ்சம் ஸ்டொமக் அப்செட். இன்னைக்கு நைட்டு கஞ்சி குடிச்சு மாத்திரை போட்டா உடம்பு சரியா ஆகிடும்” எனமுல்லை சொல்ல.

“அதெல்லாம் எனக்கு தேவையில்ல. இப்போ உடம்பு நல்லா தான் இருக்கு” என்ற கதிர் அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

கதிரின் செயலில் மேலும் முல்லை கோபம் கொண்டவள்.“சரி. நீங்க எல்லாம் சாப்பிடுங்க. எனக்கு தலை வலிக்குது. நான் போய் படுத்துகிறேன்” என்றபடி மாடியில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்ல. இவர்கள் இருவருக்குள் இருக்கும் பனிப்போரை பார்த்து ரோஜாவிற்கு கோபம் தான் எழுந்தது.

“வாத்தி. என்னதான் நடக்குது இங்க. ஏன் சும்மா சும்மா முல்லை அண்ணியை வம்பு பண்ணுறீங்க. உங்க நல்லதுக்கு தானே அவங்க சொல்லுறாங்க. ஏன் கஞ்சி குடித்தா தான் என்ன” என்று ரோஜா கேட்க.

“இல்லை ம்மா. அது” என்று கதிர் பேச வருவதற்குள். ரோஜா கோவமாக எழுந்து மைனாவின் அறைக்கு சென்றாள்.

“முல்லை சொன்னது போல. கதிர் அண்ணனுக்கு உண்மையாவே அவளை பிடிக்கல தான் போல” என்று மைனா தனக்குள் நினைத்து இருக்க.

“என்னாச்சு மைனா. ஏன் நீ ஒரு மாதிரி இருக்க.“ என்று கேட்டான் செந்தில்.

“ஏன் செந்தில். பாவம் முல்லை. இந்த கதிர் அண்ணன் ஏன் இப்படி பண்ணுது” என்று மைனாவும் கதிர் மீது வருத்தம்க்கொள்ள.

“சரி சரி விடு. சீக்கிரம் அவங்களுக்குள்ள நடக்க வேண்டியது நடந்தா இந்த சண்டை எல்லாம் சரியாகிடும்” என்ற செந்திலுக்கு முல்லை மீது கதிர்க்கொண்டு இருக்கும் காதல் தெரியாமல் போனது.

“நண்பா. தங்கச்சி உன் நல்லதுக்கு தானே சொல்லும். போ. போய் முல்லையை சாப்பிட அழைச்சிட்டு வா. பாவம் காலையில இருந்து அது சாப்பிடவே இல்லை” என்று நாகராஜனும் முல்லைக்கு பரிந்துப்பேச. கதிர் கடுப்புடன் மாடிக்கு சென்றவன் கண் முன்னே கட்டிலில் கண்கள் கலங்கிய நிலையில் படுத்து இருந்தாள் முல்லை.

முல்லையை அந்த நிலைமையில் கண்டதும் கதிர்க்கே அவளை பார்த்து பாவமாக இருக்க.“ச்சீ நம்ம ஏன் இப்படி ஆகிட்டோம். பாவம். அவ மனசுல எவ்வளவோ கவலை இருக்கும். இதெல்லாம் தெரிஞ்சும் அவ மேல நம்ம வருத்தப்படுவது ரொம்ப பெரிய முட்டாள்தனம். நம்ம நேசித்த மனசை இப்படி கஷ்டப்படுத்தி பாக்குறதும் ஒரு வகையில கேவலமான புத்தி தான்” என்று கதிர் தன்னைத்தானே நொந்து கொண்டவன் அழுது கொண்டிருக்கும் முல்லையின் அருகே சென்று

“ஏய் ரவா லட்டு.“ என்று உரிமையோடு அவளை அழைத்தான்.

அவன் குரல் அவள் காதில் கேட்டாலும் முல்லை பதில் பேசாமல் மேலும் அழுதவளின் அருகே வந்து அமர்ந்தான் கதிர்.

“இந்தாடி. இப்போ ஏன் அழற?”

“ஏன்னு உங்களுக்கு தெரியாதா “

“தெரியாம தானே கேக்குறேன். சொல்லு ஏன் அழற”

“நான் அழ நீங்க தான் காரணம்”

“அது தெரியும். ஆனா என்ன காரணம்”

“அத நீங்க தான் சொல்லணும். ஏன் என்கிட்ட இப்படி சிடு மூஞ்சியா இருக்கீங்க. நம்ம கல்யாணம் பண்ணது உங்களுக்கு பிடிக்கலைனா, நான் வேணா என் அப்பா வீட்டுக்கே போய்டவா”

“ஹாங். அப்புறம்”

“ம், விழுப்புரம். நான் என்ன கதையா சொல்லுறேன்”

“பின்ன நீ கதை தான் சொல்லுற”

“ஓ. என்னோட குமுறல் உங்களுக்கு கதையா தெரியுதாக்கும்”

“ப்ச். இங்க பாரு”

“பாத்துட்டு தானே இருக்கேன்”

“ஆங். நல்லா பார்த்த.“

“அங்க பார்க்க எதாவது நல்லா இருந்தா தானே பார்க்க”

“ஏய் என்ன லந்தா”

“லந்தும் இல்ல பந்தும் இல்ல. நீங்க சாப்டிகளா, போக. போய் படுக”

“இல்ல. நான் சாப்பிடல”

“ஓ. ஏன்வாம். சார் ஹோட்டல் போக போறிகளா”

“ஏய். ஏண்டி நீ வேற”

“ஆமா. நான் வேற தான். நான் உங்களுக்கு வேறையே தான். சரி இப்படியே இருந்துட்டு போறேன்” என்றவள்.

கண்கள் மூடி அப்படியே கட்டிலில் படுத்துக்கொள்ள. பட்டும் படாமல் அவள் கூந்தலை வருடியவனின் சுவரிசத்தில் மேலும் கண்கள் கலங்கினாள் முல்லை.

அவள் கண்ணீருக்கு அவன் காரணம் என்று அறிந்துருந்த கதிரோ.“ஏய் ரவா லட்டு. சாரி டி.“ என்றதும் வாரி அடித்து எழுந்து அமர்ந்தாள் முல்லை.

கதிரின் கண்களை உற்று பார்த்த முல்லை.“என்ன சொன்னிக. சாரியா.?” என்றதும்,

“ம். சாரி தான்” என்றான் கதிர்.

“ஏது. உங்களுக்கு சாரி எல்லாம் கேக்க வருமா.“ என்று முல்லை ஆச்சிரியமாக பார்த்தவள்.“வெளிய மழை வருதா” என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் சட்டென்று சிரித்த கதிரோ.“சரி வா சாப்பிட போகலாம்” என்றான்.

“எனக்கு வேண்டாம்ம். நீங்க சாப்பிட்டீங்க தானே எனக்கு அது போதும்.“ என்று முல்லை சொல்ல.“ஏய் வான்னு சொல்லுறேன் தானே” கோவமாக கத்தினான் கதிர்.

“ஐயோ மாமா சார். உண்மையாவே எனக்கு வேணா. நான் diet இருக்க போறேன். சோ நைட் food avoid பண்ண போறேன்” என்று முல்லை சொல்ல.

“அடியே. நான் தான் உன்னை உடம்ப குறைக்க சுகர் கட் பண்ண சொன்னனே” என்றான் கதிர்.

“ஹாங். நீங்க சொன்னதுல இருந்தே நான் daily சுகர் கட் பண்ணேன் மாமா சார். but அப்பவும் No use” என்று முல்லை சொல்ல.

“என்ன. சுகர் கட் பண்ணியா. ஆனா இன்னைக்கு காலையில கூட காபில சக்கர போட்டு தானே குடிச்ச “என்றான் கதிர்.

“ஆமா, பின்ன காப்பில சர்க்கரை போடாமல் மிளகாய்த்தூளா போடுவாங்க” என்று முல்லை கேட்க

“அடியே. அப்புறம் எப்படி சுகர் கட் பண்ணேன்னு சொல்ற?” என்று கேட்டான் கதிர்.

“என்ன மாமா சார் உளறுறீங்க. சுகர் கட் பண்றதுனா கத்திரிக்கோலை எடுத்து சக்கரை பாட்டில்க்குள்ள இருக்கிற சர்க்கரையை கட் பண்ணனும் அப்படித்தானே. அதைத்தானே மூணு வேளையும் செஞ்சேன்” என்று முல்லைச் சொல்ல,

“அடியே. என்னடி. என்னை வைத்து காமெடி பண்றியா?” என்று கதிர் கேட்டதும். வாய்விட்டு சத்தமாக சிரித்தாள் முல்லை.

அவள் சிரிப்பில் இவன் முகமும் மலர்ந்து இருக்க.

“சரி வா சாப்பிட போகலாம்” என்று முல்லையை அழைத்துக்கொண்டு கிழே இறங்க. இவர்களுக்கு முன்னே ரோஜா அனைவருடனும் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.

“அம்மா. என்ன நீங்க. நான் சாப்பிடாம நீங்க சாப்பிட மாட்டீங்களே” என்று கதிர் தன் தங்கையை பார்த்து கேள்வி எழுப்ப.

“அதெல்லாம் போன மாசம். அதான் உங்களுக்குன்னு உங்க பொஞ்சாதி வந்தாச்சே. இனி நீங்க என்னமோ பண்ணுங்க” என்றாள் ரோஜா.

“கதிர் தம்பி. இந்தா பா கஞ்சி. முல்லை சொன்னது போல இப்போதைக்கு வயதுக்கு காரசாரமா எதுவும் சேர்த்துக்காத” என்று பரிஜாதம் சொல்ல. கதிர் இரவு உணவை முடித்தவன் மாத்திரையையும் உட்கொண்டான்.

“அண்ணி. நீங்க வந்து சாப்பிடுங்க.“ என்று ரோஜா முல்லைக்கு பரிமாற. இவர்கள் அனைவரும் நாளை நடக்க இருக்கும் வரவேற்புக்கு தேவையான விஷயங்களை பேசிக்கொண்டு இருக்க.

“முல்லை. இந்தாடி மருதாணி வச்சிக்கோ” என்று மைனா ஒரு கிண்ணத்தில் அரைத்த மருதாணி இலையை நீட்டினாள்.

“ஐ. மருதாணி.“ என்று முல்லை ஆசையாக வாங்கிக்கொண்டவள். அவளாக ஒரு கையில் வைத்துக்கொண்டு.“ரோஜா. எனக்கு இந்த கைலயும் வச்சி விடுறியா” என்று கேட்டாள்.

“அண்ணி. எனக்கு தூக்கமா வருது. நான் போய் தூங்கறேன்” என்ற ரோஜா கண் இமைக்கும் நொடியில் அவளுக்கு தரப்பட்ட அறைக்குள் நுழைந்துக்கொள்ள.

“முல்லை. நீ மைனாக்கிட்ட கொடு மா. அவ வச்சி விடுவா” என்றான் செந்தில்.

“இல்ல இல்ல. எனக்கும் தூக்கம் வருது. வேணும்னா கதிர் அண்ணன் வச்சி விடட்டும். நான் போய் படுக்க போறேன்” என்று மைனாவும் அங்கிருந்து சென்று விட. முல்லை பாவமாக மீதம் இருக்கும் மருதாணியை டேபிள் மீது வைத்தவள் மாடியில் இருக்கும் அறைக்கு சென்றாள்.

நாகராஜன், செந்தில், கதிர் என்று மூவரும் கல்யாணத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை பற்றி பேசிக்கொண்டு இருக்க.

“எல்லோரும் சீக்கிரம் போய் படுங்க பா. நாளைக்கு சொந்தக்காரங்க வந்துடுவாங்க” என்றார் பாரிஜாதம்.

“சரி டா காலையில பாப்போம்.“ என்ற கதிர் யாரும் பார்க்காத நேரம் மேசை மேல் இருக்கும் மருதாணி கிண்ணத்தை எடுத்துக்கொண்டு மாடிக்கு செல்ல. தன் நண்பனின் செயலில் தனக்குள் சிரித்துக்கொண்டான் நாகராஜன்.

மாடியில் உள்ள அறைக்குள் நுழைந்த கதிர். கட்டிலில் ஒரு கை மருதாணியுடன் படுத்து இருக்கும் முல்லையின் அருகே அமர்ந்தவன். அவள் கையில் தன் கரங்களால் மருதாணியை வைத்ததும்

உள்ளங்கை சிலிர்த்து முல்லை விழிகள் மலர்ந்து கதிரை பார்த்தாள்.

“ஏன். . . மேடம் வாய் திறந்து என்கிட்ட மருதாணி வச்சிவிடுன்னு கேக்க மாட்டிங்களா” என்று கதிர் கேட்டதும்.

“நான் கேட்டு நீங்க முடியாதுனு சொன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிடும்” என்றாள் முல்லை.

கதிர் தன் தொடை மீது அவள் கையை பிடித்துகொண்டவன்.

“நீ என்ன கேட்டு நான் முடியாதுன்னு சொன்னேன்” என மருதாணியை வைத்தப்டியே கேட்டான்.

“ம். அப்போ நான் என்ன கேட்டாலும் முடியாதுனு சொல்லாம பண்ணுவிங்களா?” என்று முல்லை கேட்க.

“ம். கேளு என்ன பண்ணனும்” என்றான் கதிர்.

“இப்போ நம்ம சென்னை தானே வந்து இருக்கோம். நம்ம மறுபடியும் குன்னக்குடி போறதுக்குள்ள என்னை பீச்சுக்கு அழைச்சிட்டு போறிங்களா” என்ற முல்லை. ஆசையாக கேட்டவள் சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.

“ம். பீச்சுக்கு தானே. சரி. நாளைய மறுநாள் செந்தில் கல்யாணம் முடிஞ்சதும். நம்ம போயிட்டு வரலாம்” என்று கதிர் சொல்ல.

“thanks மாமா சார், நீங்க ரொம்ப நல்ல புள்ள தான்” என்றவள். அவன் தன் கையை பிடித்து மருதாணி வைக்கும் அழகை இவளும் அழகாக ரசித்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு வழியாக கதிர் மருந்தாணியை வைத்து முடிக்க.

“ஆ. ஐயோ” என்று சிணுங்கினாள் முல்லை.

“ஏய் என்னாச்சு.“ என்று கேட்டுக்கொண்டே கதிர் அங்கிருந்த குளியலறையில் தன் கையை கழுவிக்கொண்டு வர,

“மாமா சார் என் முதுகுல என்னமோ ஊருது” என்று நெளிந்தவளை பார்த்து கதிருக்கு சிரிப்பு வந்தது.

“ஐயோ மாமா சார் சிரிக்காதிங்க. இங்க வந்து என்னனு பாருங்க” என முல்லை அழைத்ததும். மிகவும் கஷ்டப்பட்டு முல்லைக்கு உதவி செய்த கதிருக்கு.

“ஹ்ம். இப்போ மட்டும் நம்மள மாதிரியே இவளும் என்னை காதலிச்சி இருந்தா. இந்நேரம் இவள நான் மருதாணி இல்லாமலேயே சிவக்க வச்சி இருப்பேன்” என்று எண்ணிய கதிர்.

“நேரமாகுது படு டி” என்றவன். கட்டிலின் ஒரு பக்கத்தில் படுத்து வராத உறக்கத்தை வர வைத்து கண்களை மூடிகொண்டான்.

தனக்காக கதிர் அவன் பிடியில் இருந்து இறங்கி வந்து முல்லை கையில் மருதாணியை வைத்தவன். முல்லையின் ஆசைப்படியே அவளை கடற்கரைக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்லி இருக்க,

“எப்படியாவது மாமா சார்க்கிட்ட மனசு விட்டு பேசி கல்யாணத்துக்கு முன்னாடி எங்க ரெண்டு பேர் வாழ்க்கையில என்ன நடந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்து, இனி நம்ப ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து மனசார நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க வேண்டும் என்று தெளிவா பேசிடனும்” என்ற எண்ணத்தோடு அன்றைய தினம் இரவு கதிரின் அருகே படுத்து முல்லையும் உறங்கினாள்.

மறுநாள் காலை அழகாய் புலர்ந்தது.

ரோஜாவிற்கு அந்த வீட்டில் பாரிஜாதம் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்துகொண்டு இருக்க. அவள் முகமோ இயல்புக்கு மாறாக வாடி இருந்தது.

“என்ன சின்னமா. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என்ற கேள்வியோடு நாகராஜன் ரோஜாவின் முன்னே வந்து நிற்க.

“உங்கள நான் அப்படி கூப்பிடாதீங்கன்னு தானே சொன்னேன்” என்று கோவமாக அவனை கடிந்துகொண்டாள் ரோஜா.

“சரிங்க. இனி அப்படி கூப்பிடல. ம், வேற எப்படி கூப்பிடுறது. சாமி, அம்மன், ஐயா இப்படி எதாவது சொல்லி கூப்பிடவா” என்று நாகராஜன் விளையாட்டாக கேட்க.

“ஹலோ. நீங்க என்னை அழைக்கவே வேண்டாம்ம். போய் வேற வேலை எதாவது பாருங்க. சும்மா நொய் நொய்ன்னு எப்போ பாரு எதையாவது பேசிக்கிட்டே இல்லாம” என ரோஜா முதல் முறையாக நாகராஜனிடம் வெறுப்பை உமிழ்ந்தாள்.

ரோஜாவின் பேச்சில் நாகராஜனும் வருத்தம்க்கொள்ள.“மன்னிச்சுக்கோங்க, என்னதான் இருந்தாலும் நான் உங்க வீட்டு வேலைக்காரன் தானே. என்னோட தரத்தை மறந்து நான் உங்ககிட்ட இப்படி உரிமையா பேசி இருக்கக்கூடாது” என்றவன். ரோஜா உதிர்த்த வார்த்தையை அவள் உணரும் முன்னே நாகராஜன் அங்கிருந்து சென்று இருந்தான்.

தன் வார்த்தையால் மனம் வாடிய நிலையில் அங்கிருந்து சென்ற நாகராஜனின் முதுகை வெரித்துப் பார்த்துக் கொண்டு இருந்த ரோஜாவின் மனதில் என்னதான் பிரச்சனை உள்ளது என்பதை அவளும் அறிந்திட தவறி இருந்தாள்.

அன்றைய நாள் முழுதும் செந்தில் மைனாவின் சொந்த பந்தங்கள் அந்த வீட்டில் நிரம்பி வழிய, மாலை நேரம் இவர்கள் ஏற்பாடு செய்த வரவேற்பும் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

செந்திலின் சகோதரனாக கதிரும். மைனாவின் சகோதிரியாக முல்லையும் அங்குள்ள வேலைகளை பார்த்து பார்த்து செய்து கொண்டு இருக்க, செந்திலின் அம்மா பாரிஜாதமோகிட்டத்தட்ட ரோஜாவை குறி சொல்லும் பெண்ணாகவே பாவித்து அங்குள்ள அவரின் சொந்தக்காரர்களில் நிறைய பேருக்கு குழந்தை இல்லை, திருமணம் ஆகவில்லை, உடல்நிலை சரியில்லை, இப்படி பல பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஆளாக மாற்றி வைத்து இருக்க, ஊரார் கைப்பாவையாக மாறி இருக்கும் ரோஜாவிற்கு தன்னை நினைத்து அவளுக்கே முதல் முறை கோபம் எழுந்தது.

அன்றைய வரவேற்பு முடிந்து சொந்த பந்தங்கள் சில பேர் வீட்டிலும். மீதம் இருப்பவர்கள் அங்கிருந்து கிளம்பி இருக்க.

மறுநாள் காலை சுபமுகூர்த்த நேரத்தில் உற்றார் உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் செந்தில் மைனாவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்க, கூடியிருக்கும் அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

ஒருவழியாக இவர்களின் திருமணம் நல்ல முறையில் நடந்து இருக்க.

புது மனஜோடியுடன் சேர்ந்து கதிர் முல்லை நாகராஜன் ரோஜா என்று அனைவரும் பந்தியில் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

ரோஜா நாகராஜனின் மனம் புண்படும்படி பேசியதிலிருந்து அவனும் ரோஜாவிடம் முகம் கொடுத்து பேசுவதை தவிர்த்து இருக்க. மாலை 6மணி அளவில்.

“செந்தில். இப்போ நாங்க பீச்சுக்கு போயிட்டு வரோம். நாளைக்கு விடியகாத்தால நாங்க ஊருக்கு கிளம்புறோம்” என்றான் கதிர்.

“டேய் டேய் இருடா. இப்போ பீச்சுக்கு எல்லாம் நீ போக வேணாம். இன்னைக்கு நமக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்ற செந்தில் அவன் கையில் இருந்த பழ ரசத்தை கதிரிடம் நீட்டினான்.

“அடேய். அப்படி என்னடா வேலை” என்று புரியாமல் பாணத்தை அருந்தியப்படி கதிர் கேட்க.

“மச்சான். இன்னைக்கு எனக்கு முதல் இரவு டா. நீ தானே எனக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கணும்” என்று செந்தில் கதிரை கேட்க. எதிர்ச்சையாக இதை கேட்ட நாகராஜன் சட்டென்று சிரித்து விட்டான்.

தன் நண்பனின் ஏளன சிரிப்பில் கோபம் கொண்ட கதிர்.“இப்போ எதுக்குடா சிரிக்கிற” என்று அவனைக் கடிந்து கொள்ள “பின்ன, கல்யாணம் பண்ணி பத்து நாள் ஆகுது, ஆனா நீ பாய விட்டே இன்னும் எழாமல் தானே இருக்க. உன்கிட்ட போய் இவன் ஐடியா கேட்கிறான் பாரு.“ என்று நாகராஜன் தன் நண்பர்களை கேலி செய்தான்.

“அதெல்லாம் என் நண்பனுக்கு செம்மையா நடக்கும்.“ என்று செந்தில் சொல்ல,

“மாமா சார் பீச்சுக்கு போகலாமா” என்று கதிர் முன்னே வந்து நின்றாள் முல்லை.

“முல்லை. நாளைக்கு நீங்க பீச்சுக்கு போகலாம். இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் தான் முன்ன நின்னு இவங்களுக்கு முதல் இரவு ஜோடிப்பை செய்யணும். நான் ரோஜாவ அழைச்சுக்கிட்டு மருவத்தூர் கோயில் வரைக்கும் போயிட்டு வரேன். நாகா. உன் கார்த்தியே போயிடலாமா” என்று பாரிஜாதம் கேட்க.

“சரிமா. வாங்க நம்ம கிளம்பலாம். நண்பா அப்போ நாளைக்கு ஊருக்கு போறதுக்கு முன்னாடி பீச்சுக்கு போகலாம்” என்றான் நாகராஜன்.

“கதிர் தம்பி. இன்னும் கொஞ்ச நேரத்துல பூ பழமெல்லாம் வந்துடும். செந்தில் ரூம்மை அலங்காரம் பண்ணிடுப்பா. நாங்க நேரத்தோட கிளம்பி விடியல் காலைக்குள்ள வீட்டுக்கு திரும்பி வந்துடுறோம்” என்றார் பாரிஜாதம்.

“அண்ணி. நீங்க அப்பாவுக்கு போன் பண்ணி விவரத்தை சொல்லிடுங்க” என்று ரோஜா சொல்ல. நாகராஜன் பாரிஜாதம் ரோஜா என்று மூவரும் கதிரின் காரில் மேல்மருவத்தூர் கிளம்பினார்கள்.

“என்ன மாமா சார் இது. . நம்ம இன்னைக்கு பீச்சுக்கு போகலாம்ன்னு நினைத்தோமே.“ என்று முல்லை சோகமாக கேட்க.

“நாளைக்கு போகலாம். இப்ப நீ போய் ரெஸ்ட் எடு. நான் செந்தில் ரூம்மை அலங்காரம் பண்ணிட்டு வரேன்” என்றான் கதிர்.

“இருங்க இருங்க நானும் வந்து அலங்காரம் பண்றேன்” என்று முல்லையும் கதிருக்கு துணையாக செந்திலின் முதல் இரவு அறையை ஜோடிக்க.

KM இருவரும் தன் பார்வையால் அவர்களின் எண்ணங்களை பரிமாறிக் கொண்டாலும். ஒருவர் மனதில் ஒருவர் தங்கள் மீது இருக்கும் காதலை மற்றொருவர் உணர்ந்த பிறகே இவர்களுக்குள் முதலிரவு நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்

தான் இருவருமே இருந்தார்கள்.

செந்தில் வீட்டில் இருக்கும் பெண்மணிகள் அவர்கள் மைனாவை முதல் இரவுக்காக தயார் செய்து கொண்டு இருக்க.

ஒரு குவளையில் பாலை எடுத்துக்கொண்டு மைனா அவள் முதலிரவு அறைக்குள் சென்றாள்.

இதேசமயம் மாடியில் தங்களுக்காக ஒதுக்கிய அறையில் முல்லை கதிருக்காக காத்திருந்தவள் மனதில்,

“இன்னைக்கு எப்படியாவது மாமா சார்கிட்ட மனசு விட்டு பேசிடனும்” என்ற எண்ணத்தில் கட்டிலில் அமர்ந்து இருந்த தருணம், கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கதிரின் முகத்தில் மாற்றம் தெரிந்தது.

“என்ன மாமா சார் ஏன் இவ்வளவு லேட்டா வந்தீங்க. உங்களுக்காக தான் காத்துகிட்டு இருந்தேன். வாங்க வாங்க உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வந்து இப்படி உட்காருங்க” என்று முல்லை கட்டிலை சுட்டிக்காட்ட.

கதிர் உள்ளே நுழைந்த வேகத்தில் தன் அறையின் கதவை தாழிட்டவன், முல்லை திரும்பும் நொடிக்குள் அவளை இழுத்து கட்டி அணைத்து தன் மார்போடு அவளை இணைத்துக் கொண்டவன் முல்லை சுதாரிக்கும் முன்பே தன் அதரங்களால் அவள் இதழ்களை இழுத்து பிடித்து ஆழ்ந்த முத்தத்தை பதித்துக் கொண்டு இருந்தவன் செயலில் மூச்சு அடைத்துப் போனாள் முல்லை.

சில நொடிகள் முத்த யுத்தத்தில் தன்நிலை உணர்ந்த முல்லை, கதிரை தன் வசம் இருந்து தள்ளிவிட முயன்றவளின் வேகம் தோற்றுப்போய் கதிரின் அணைப்பில் மேலும் முல்லை இறுகி இருக்க. கதிரின் முகத்தில் இதுவரை முல்லைக் கண்டிடாத மாற்றம் தெரிந்தது.

“மாமா சார் என்ன பண்க, என்னை விடுக” என்று முல்லை பேசும் எந்த வார்த்தையும் கதிரின் காதில் விழாமல் இருக்க. இமைகள் மூடி மேலும் மேலும் முல்லையில் தேகம் முழுதும் தன் இதழ்களால் முத்த மழை பொழிந்து கொண்டு இருந்தான் கதிர்.

ஒரு கட்டத்தில் அவன் அணைப்பில் அவன் மீது இவள் கொண்ட காதலை உணர்ந்து, அவன் தொடுதலில் கிறங்கிய முல்லை அவனுக்கு ஈடு கொடுத்து அவளும் அவனுக்கு முத்தமிட, இருவரின் தேகமும் ஒன்றோடு ஒன்று இணைத்து இருக்கும் வேளையில் அப்படியே தன்னவளை கட்டில் மேல் சரிதான் கதிர்.

தேகம் சூடேறி, ஆணவன் விரல்கள் பெண்ணவள் விரல்களில் கோர்க்க. இருவரின் ஆடைகளும் அனாதையாக கீழே கிடந்த நிலையில் தன் நிலை இழந்து கதிர் தாரிகையின் தேகத்தில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துணிந்தவன் அணைபில் அவளும் கண்கள் மூடி அவன் தரும் சுகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துக் கொண்டு தான் இருந்தாள்.

முல்லையின் அழகில் பித்தான கதிர்.“அழகி டி நீ” என்று அவன் உச்சரித்த அந்த நொடி தன் சுயநினைவை பெற்றவளாக தன் மீது இருந்த ஆணவனை தன் வசம் இருந்து முல்லை தள்ளி விட்டதும் கதிருக்கு கோபம் எழுந்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவளை வலுக்கட்டாயமாக தன் வசம் அணைத்தான்.

“ஏய். இப்போ எதுக்கு என்னை தள்ளிவிட்ட” என்று கதிர் கோபத்துடன் கேட்க.

“இல்ல. இது வேண்டாம்ம்” என்று திக்கித் திணறிய முல்லை தன் ஆடைகளை எடுக்க முயன்றவளின் கரங்களைப் பிடித்து வலுக்கட்டாயமாக மீண்டும் கட்டிலில் சரித்து, அவள் மீது படர்ந்தவன்.

“எனக்கு வேணும், இப்பவே நீ வேணும்” என்ற ஒரே சொல்லில், அவள் தேகத்தை தன் வேகம் கொண்டு அடக்கியவன் அவள் அனுமதியின்றி, தன்னுடைய காதலை மறந்து, காமம் தலை தூக்கி, மொத்தமாக அவளுடன் கலந்தவனின் செயலில்.

தேக கூடலின் இன்ப வலியை மறந்து.

கதிரின் அடக்குமுறையால் ஏற்பட்ட வலியில் முல்லையின் கண்களில் கண்ணீர் கசிந்து. இதயம் ரணமாகி, அவள் உதடுகளை தன் பற்களால் கடித்துக்கொண்டவளின் இதழ் ஓரத்தில் ரத்தம் கசிந்து KM இருவர் மனதிலும் காதல் இருந்தாலும். அங்கே கதிரின் காம உணர்வு வென்றது –

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!