Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 46

CHAPTER 46

முல்லை – 46

By Roja Roslin · October 29, 2026

0

“அப்பா. பாண்டி ஐயா. உன்னை தான் மலை போல நம்பி இருக்கேன். என் மகன் கலயாணத்தை நீ தான் ஐயா முடிச்சு தரணும்” என்ற பாரிஜாதம் ரோஜாவின் காலில் விழுந்ததும்.

செந்திலும் அவ்வாறே செய்ய.

“எல்லாம் நல்லா படியா முடியும்.

நானே நல்லபடியா முடித்து தருவேன்” என்ற ரோஜாவின் கண்கள் ரத்த சிவப்பை கூட்டி இருந்தது.

“போதும் ஐயா. எனக்கு இது போதும்” என்ற பாரிஜாதம் ரோஜாவை கையெடுத்து கும்பிட. அப்படியே ரோஜா கிறங்கியவளை கை தாங்கலாக தாங்கிக்கொண்டாள் முல்லை.

“நண்பா. சின்னம்மாவை ரூம்ல படுக்க வையுங்க” என்று நகரராஜன் சொன்னதும்.

முல்லையும் கதிரும் ரோஜாவை அவள் அறைக்குள் அழைத்து சென்று படுக்க வைத்தார்கள்.

“எனக்கு இப்போ தான் அண்ணா நிம்மதியா இருக்கு. இதே மாதிரி ரோஜா வந்து இந்த கல்யாணத்தை முடித்துக்கொடுத்துட்டா எனக்கு அது போதும்” என்ற செந்திலின் அம்மா சில நிமிடங்கள் பாண்டியனின் குடும்பத்தில் உள்ள நபர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“சரி கதிரு. எங்களுக்கு நேரம் ஆகுது நாங்க கிளம்புறோம். டேய் நாகா. நீயும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுனும். மீனா அண்ணி. நீங்களும் ஜீவா அண்ணன் கூட வந்துடுங்க. நீங்க எல்லோரும் வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்ற செந்தில், அனைவரிடத்திலும் இருந்து விடைபெற்று தன் அம்மாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

செந்தில் சென்றதும் பத்திரிகையை எடுத்து வாசித்து பார்த்த கதிர், “கல்யாணம் சென்னையில வச்சிருக்காங்க” என்றான்.

“அப்போ. நீங்க எல்லோரும் கல்யாணத்துக்கு சென்னை போறிங்களா” என்று பார்வதி கேட்க,

“செந்தில் அம்மா தான் நேர்ல வந்து மரியாதையா சொல்லிட்டு போய் இருக்காங்களே. போய் தானே ஆகணும்” என்றான் கதிர்.

“அப்போ ரோஜா.“ என்று பார்வதி கேட்க.

“பாரிஜாதம் தான் ரோஜா கையால தாலி எடுத்து தரணும்னு ஆசை படுறாங்களே. போய்ட்டு வரட்டும்” என்றார் பாண்டியன்.

செந்தில் திருமணம் சென்னையில் நடப்பதால் தன் தந்தை சம்மதிக்க மாட்டார் என்று எண்ணி இருந்த கதிருக்கு பாண்டியனின் வார்த்தை மகிழ்வை கொடுக்க.

“கதிர். செந்தில் உனக்கும் நாகராஜனுக்கும் பிரண்டு தானே.

பேசாம நீ, நாகராஜ், ரோஜா, முல்லை நாலு பேரும் சென்னைக்கு செந்தில் கல்யாணத்துக்கு போயிட்டு வாங்க” என்றார் பாண்டியன்.

“மாமா. அப்போ நானு” என்று மீனா இத்தனை நாள் கடந்து பாண்டியனிடம் பேச. இந்த வீட்டில் முல்லைக்கு எதிரே மீனா அடிக்கடி பேசும் வார்த்தைகளை கேட்டு இருந்த பாண்டியனுக்கு மீனாவின் நடவடிக்கை கோபத்தை கொடுத்திருக்க.

“இவங்க சென்னை போறதுக்குள்ள உன் புருஷன் வந்துட்டா அவர் கூட நீ போகலாம்” என்ற பாண்டியன், மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறி இருந்தார்.

“மாப்ள. நானே உங்ககிட்ட முல்லையை அழச்சிட்டு ஹனிமூன் எங்கேயாவது போயிட்டு வாங்கன்னு சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா ஜீவா மாப்பிள்ளை ஊர்ல இல்லாத நேரத்துல நீங்க இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டீங்கன்னு தான் நான் இதைப்பற்றி பேசல. ஆனா இப்ப பாருங்க உங்க நண்பனின் கல்யாணம் சென்னையில நடக்க போகுது. அத காரணமாக வைத்து நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க” என்று முருகன் சொல்ல. மீனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

ஆனால் மாறாக கஸ்தூரி. ரோஜா, முல்லை, கதிர் என்று எந்த பிக்கள் புடுங்கலும் இந்த வீட்டில் இல்லாத சமயத்தில். பாண்டியனின் இல்லத்தில் ஒரு சில பொறுப்புகளை மீனா கையில் எடுத்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பு என்று எண்ணியவருக்கு எப்படியாவது இவர்கள் அனைவரும் சென்னை செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது.

அதுவும் இல்லாமல் முதல் வேலையாக இவர்கள் நால்வரும் சென்னை செல்வதை உடனடியாக சுந்தரேசனுக்கு கைப்பேசி வாயிலாக தகவலையும் அனுப்பி இருந்தார் கஸ்தூரி.

அன்றைய தினம் இரவு நேரம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க. ரோஜா சோர்வாக இருந்தவளை.“என்னமா உனக்கு செந்தில் கல்யாணத்துக்கு போவதற்கு விருப்பம் இருக்குதானே” என்று கேட்டார் பாண்டியன்.

“ம். போய்ட்டு வரேன் அப்பா” என்று ரோஜா சொல்ல. அனைவரும் இரவு உணவை முடிக்க.

முருகனும் பாண்டியனும் கால் நடையாக தோட்டத்து பக்கம் நடந்துக்கொண்டு இருந்தார்கள்.

வீட்டின் முற்றத்தில் பார்வதியின் அருகே ரோஜாவும் முல்லையும் அமர்ந்து இருக்க.

“ஏண்டி மீனா. ஜீவா எங்க தாண்டி போனான்” என்று கேட்டாள் கஸ்தூரி.

“என்னை அதெல்லாம் கேக்காத, அவரு என்ன என்கிட்டய்யா எங்க போறேன்னு சொல்லிட்டு போனாரு” என்ற மீனா கடுப்பாக அமர்ந்து இருந்தாள்.

இவர்கள் அனைவரும் ஆளுருக்கொரு கதைகளை பேசிக்கொண்டு இருக்க.

முல்லையின் விழிகளோ கதிரை தேடியது.

“என்ன அண்ணி. வாத்தி எங்கன்னு தேடுறிங்களா” என்று ரோஜா கேட்டதும்.

“அவர ஏன் நான் தேட போறேன்” என்ற முல்லை ஒரு நொடி தன் விழிகளால் மீண்டும் கதிரை தேடியவள்.

“ஆமா. உங்க அண்ணன் எங்கே” என்று கேட்டாள்.

முல்லையின் கேள்வியில் ரோஜா சிரித்துக்கொண்டவள்.“அதோ நீங்க கேட்டதும் உங்க மாமா சார் வந்துட்டாரு”

என்றாள்.

இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கண்டுகொள்ளாத கதிர் நேரே சமையல் அறைக்குள் நுழைய.

“அம்மா. நான் போய் தண்ணி குடிச்சிட்டு வரேன்” என்ற மீனா அங்கிருந்து அடுப்பணையை நோக்கி நடந்தாள்.

கதிர் சமையலறையில் இருந்து மிளகை எடுத்துக்கொண்டு திரும்பியவனின் கண் எதிரே மீனா நின்று இருந்தவள், “மாமா. நீங்க சென்னைக்கு போகாதீங்க” என்றவளை ஏகத்துக்கும் முறைத்தான் கதிர்.

“ஏய். நான் எங்க போனோம் எங்க போகக்கூடாதுன்னு நீ முடிவு பண்ணாத. போ. போய் தூங்கு” என்ற கதிர் சமையலறையில் இருந்து வெளியேறியவன் நேரே அவன் அறைக்கு சென்றான்.

“கதிர் சென்றதும் மீனா கோபத்துடன் அவள் அறைக்குள் செல்ல. இந்த காட்சியினை பார்த்து இருந்த முல்லையோ. நேரே தங்கள் அறைக்குள் சென்றவள்.

“மாமா சார். இங்க என்ன நடக்குது” என்று சத்தமாக கேட்டாள்.

கிட்டத்தட்ட ஐந்து மிளகை வாயில் போட்டு கதிர் மென்றவன்.“என்னடி. ஏன் இப்போ கத்துற” என்று கேட்டதும்,

“மீனா. இல்ல இல்ல ஜீவா மாமா. ஹாங். ஜீவா மாமா எங்க போனாரு. ஏன் அவர பற்றி எந்த தகவலையும் விசாரிக்காம இருக்கீங்க” என்ற முல்லையை அழுத்தமாக பார்த்தான் கதிர்.

மீனா அடிக்கடி கதிரிடம் பேசுவதயோ. முல்லையும் கதிரும் சேர்ந்து இருப்பதை விரும்பாத மீனாவின் மனநிலை ஜீவா மீண்டும் வீட்டுக்கு வந்தால் தான் சரியாகும் என்று எண்ணி முல்லை ஜீவாவை பற்றிய பேச்சை எடுக்க.

அதை தவறுதலாக புரிந்துகொண்ட கதிரோ.

“ஜீவா என் அண்ணன்.

உன்னை விடவே என் அண்ணனை பற்றிய தகவலை எப்படி விசாரிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்றவன். வேகமாக இவர்கள் அறையில் இருந்து வெளியேறியவனின் முகத்தில் உள்ள கடுமையையும், கண்ணில தெரிந்த கோவத்தையும் பார்த்து முல்லைக்கு உள்ளுற பயம் எழுந்தது.

அன்றைய தினம் மீனா அவள் அறையில் கடுங்கோவதில் அமர்ந்து இருந்தாள்.

“என்னடி மீனா ஏன் சோகமா இருக்க?” என்ற கேள்வியோடு கஸ்தூரி உள்ளே நுழைந்தார்.

“அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல முல்லையும் கதிர் மாமாவும் சென்னை கிளம்புறாங்க”.

“ஆமா. கிளம்புறாங்க, இப்போ என்ன அதுக்கு?”

“அம்மா எப்படியாவது இவங்க போகாம தடுக்க முடியாதா?”

“ஏய். என்ன நீ பைத்தியம் மாதிரி பேசுற, அவங்க போறத நம்ம ஏன் தடுக்கணும்?”

“அம்மா கதிர் மாமாவுக்கு முல்லையை பிடிக்காது.“

“ஏய் லூசு, அந்த தாடிக்காரனை கூட தான் முல்லைக்கு பிடிக்காது”

“ஹாங் உனக்கே தெரியுது இல்ல. அப்படி இருக்கும் போது இவங்க ஏன் அம்மா ஒண்ணா போகணும்?”

“மீனா உன் கேள்வில கொஞ்சம் கூட நியாயம் இல்ல”

“ஆமா ஆமா நியாயத்தை பற்றி நீயெல்லாம் பேசாத. அதுவும் இல்லாம இங்க என்ன நியாயமா நடந்து இருக்குனு, நீ நான் பேசுற வார்த்தையிலே குத்தம் கண்டுபிடிக்கிற?”

“மீனா நிறுத்து. இப்போ என்ன உனக்கு. அவங்க எங்கேயோ போறாங்க. நீ இனி கதிர் முல்லையை பற்றி கவலைப்படாம உன் வாழ்க்கையை வாழற வழியை பாரு”

என்ற கஸ்தூரி கோவமாக அந்த அறையில் இருந்து வெளியே செல்ல. இவர்கள் இருவரும் அறையில் பேசிக்கொண்டு இருந்ததை எதிர்ச்சியாக கேட்டுக்கொண்டு இருந்தார் பார்வதி.

“இந்த கஸ்தூரி தான் வில்லினு நினைச்சா. அவ பெத்த பொண்ணு வில்லாதி வில்லியா இருக்காளே. இல்ல இல்ல இந்த மீனா அடங்கணுமுனா முதல்ல அந்த ஜீவா எங்க இருக்கான்னு முல்லை அப்பாகிட்ட சொல்லி தேட சொல்லணும்” என்று எண்ணிய பார்வதி முருகனை பார்த்து பேச வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதே சமயம்.

“மாமா சார் உங்க துணியையும் இதே பையில வாசிக்கிறீங்களா” என்று முல்லை கேட்க ,

“எனக்காக யாரும் எங்கேயும் இடம் தர வேண்டாம்ம். நான் வேற பையை எடுத்துக்குறேன்” என்ற கதிர் கோவமாக அவன் அறையில் இருந்து வெளியே செல்ல. முல்லையின் முகம் சட்டென்று வாடி போனது.

ஜீவாவை பற்றி முல்லை பேசியதில் இருந்தே கதிருக்கு ஏனோ மனசு சரில்லாமல் போக. முன்பை போல முல்லையிடம் சகஜமாக பேசுவதை கதிர் தவிர்த்து இருந்தான்.

இது தான் காரணம் என்று அறிந்திடாத முல்லையோ அவளுக்குள் ஏதேதோ எண்ணங்களை வளர்த்துக்கொண்டவள் என்ன சொல்வதென்றே தெரியாமல் சென்னைக்கு செல்ல தயாராகினாள்.

இதே சமயம் ரோஜா பாண்டியனின் அறையில் அவருக்கு தேவையான மருந்துகளை எல்லாம் எடுத்து வைத்தவள்.

“அப்பா. சரியான நேரத்துக்கு மருந்து போடுங்க. வெளிய தனியா போகாதீங்க. போனுக்கு சார்ஜ் போட மறந்துடாதீங்க” என்று ரோஜா தன் தந்தைக்கு சிறு பிள்ளைக்கு சொல்வதை போல அறிவுரையை சொல்லிக்கொண்டு இருந்தாள்

“அடடா. என்னமா நீ. அதான் நாங்க கூட இருக்கோமே. மாமாவை நாங்க பார்த்துக்க மாட்டோமா? நீ கவலைப்படாத. உன் மேல நம்பிக்கை வச்சி அந்த பாரிஜாதம் அவங்க பையன் கல்யாணத்தை உன் தலைமையில நடத்த ஆசை படுறாங்க. போயிட்டு வாங்க. எல்லாம் நல்லதாகவே நடக்கும். நான் இங்க இருந்து பார்த்துக்குறேன்” என்று முருகன் சொல்ல ரோஜாவும் சம்மதமாக தலை அசைத்துக்கொண்டாள்.

அன்றைய தினம் மாலை நேரம் நாகராஜன் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருக்க.

“அப்போ நாங்க போய்ட்டு வரோம்.“ என்று அனைவரிடமும் பொதுவாக சொன்னான் கதிர்வேலன்.

“போனதும் போன் பண்ணுங்க” என்று பார்வதி சொல்ல.“இந்தா மா முல்லை. இந்த கவரை செந்தில் கல்யாணத்துல மொய் வச்சிட்டு” என்று பணத்தை கொடுத்தார் முருகன்.

“ரோஜா, முல்லை. பார்த்து ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க” என்று பார்வதி சொல்ல.

நல்ல நேரத்தில் நாகராஜன் கதிர்வேலன் முல்லை ரோஜா என்று நால்வரும் காரில் சென்னையை நோக்கி பயணிக்க, மீனா இவர்கள் செல்லும் வரை தன் அறையில் இருந்து வெளியே வராமல் இருக்க, கஸ்தூரியும் அந்த நேரத்தில் வீட்டில் இல்லாமல் போனார்.

காரின் முன் இருக்கையில் நாகராஜன் அருகே கதிர் உர் என்று அமர்ந்து இருக்க.

பின் இருக்கையில் முல்லையும் ரோஜாவும் தோழிகளை போல அரட்டை அடித்துக்கொண்டு வந்தார்கள்.

“ஏன் ரோஜா. நீ இதற்கு முன்னே சென்னை போய் இருக்கியா” என்று முல்லை கேட்க.

“பத்தாவுதுல ஒரு நாள் tour அழைச்சிட்டு போனாங்க. ஆமா நீங்க போய் இருக்கீங்களா” என்று ரோஜா கேட்க.

இல்லை என்று உதட்டை பித்துகினாள் முல்லை.

“நண்பா. நம்ம நேரா செந்தில் வீட்டுக்கு போகலாமா இல்ல மண்டபத்துக்கு போகலாமா” என்று நாகராஜன் கேட்க.

“அவன் தான் நம்பள வீட்டுக்கு வர சொன்னானே. நேரா நம்ம அங்கேயே போகலாம்” என்றான் கதிர்.

“ஆமா. கல்யாணம் நாளைய மறுநாள் தானே” என்று ரோஜா பொதுவாக கேட்க.

“ஆமா சின்னமா. ஆனா நாளைக்கு சாய்ங்காலம் reception” என்றான் நாகராஜன்.

“அப்போ நாளைக்கு காலையில நம்ம சென்னையை சுத்தி பாக்கலாமா” என்று ரோஜா கேட்க.

“உங்களுக்கு விருப்பமுனா தாராளமா போகலாம்” என்றான் கதிர்.

இப்படியே இவர்களுக்குள் பேசிக்கொண்டு வர, காரில் அமர்ந்ததில் இருந்தே கதிரும் முல்லையும் முகம் கொடுத்து பேசாததை கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் ரோஜா.

இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று எண்ணியவள்.

“வாத்தி. எனக்கு பசிக்குது எதாவது சாப்பிட வாங்கி தாங்க” என்று ரோஜா சொன்னதும். நாகராஜன் காரை ஒரு ஹோட்டலின் முன்னே நிறுத்தினான்.

“அண்ணி வாங்க சாப்பிடலாம்” என்று ரோஜா முல்லையை அழைக்க.

“எனக்கு பசிக்கல ரோஜா. நீ போய் சாப்பிட்டுட்டு வா” என்றாள் முல்லை.

“நான் மட்டும் எப்படி போய் தனியா சாப்பிடுறது. சரி அப்போ வாத்தி நீங்க வாங்க என்கூட” என்று ரோஜா கதிரை அழைக்க.“மாமா சார் தான் ரொம்ப ஹோட்டல்ல சாப்பிட மாட்டாரே” என்றாள் முல்லை.

“ஆமா. இவளுக்கு அப்படியே என்னை பத்தி ரொம்ப தெரியும். இவ சொல்லிட்டா நம்ம சாப்பிட மாட்டோமா” என்று தனக்குள் எண்ணிய கதிரோ.

“அப்படியெல்லாம் இல்ல. நான் சாப்பிடுவேன்” என்றவன் வேகமாக ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

“ரோஜா. இவுகளுக்கு என்னாச்சு. ஏன் என்கிட்ட முகத்தை திருப்பிகிட்டு போறாக” என்று முல்லை கேட்க.

“அவரு அப்படி தான். சரி நீங்க வாங்க, வந்து காபியாவது குடிங்க” என்றாள் ரோஜா.

தனியாக காரில் எப்படி இருப்பது என்று எண்ணிய முல்லையும் ரோஜாவுடன் ஹோட்டளுக்கு செல்ல.

“நாகா. நீங்களும் வாங்க” என்றாள் ரோஜா.

இவர்கள் உள்ளே செல்லும் முன்னே கதிர் அமர்ந்து இருக்கும் மேசையின் மேலே இட்லி தோசை பூரி பொங்கல் என்று அணைத்தும் அடுக்கி வைத்து இருக்க.

“என்ன இது பாதி ஹோட்டலே விலைக்கு வாங்கி வச்சிருக்கான்” என்றபடி கதிர் அருகே வந்தான் நாகராஜன்.

“என்ன வாத்தி. இதெல்லாம் யாருக்கு” என்று ரோஜா கேட்க.“ம் எனக்கு தான்” என்ற கதிர் வேண்டுமென்றே மேசை மேல் இருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

கதிரின் செயலில் முகம் மாறிய முல்லையோ. வேறொரு இருக்கையில் அமர்ந்து காபியை பருக. அவளுடன் நாகராஜனும் அமர்ந்து இருந்தான்.

ரோஜாவும் கதிர் ஆர்டர் செய்த சாப்பிட்டில் இருந்து இட்லியை மட்டும் சாப்பிட.

“வேற ஏதாவாது வேணுமா அம்மா” என்ற கதிர். ஒரு பேச்சுக்கு கூட முல்லைக்கு என்ன வேண்டும் என்று கேட்க வில்லை.

மாறாக முல்லையை கடுப்பேத்த வேண்டும் என்று எண்ணிய கதிர் மேலும் மேலும் அங்கிருந்த சாப்பாட்டை எல்லாம் சாப்பிட்டு முடித்தவன்.“எவ்…“ என்று இறுதியாக ஏப்பத்தோடு கையை அலம்ப சென்றான்.

அவனை பின் தொடர்ந்து சென்ற ரோஜாவோ.“ஏன் வாத்தி. ஏன் உங்க பொஞ்சாதிக்கு என்ன வேணுமுன்னு நீங்க கேக்கவே இல்ல” என்று ரோஜா கேட்க,

“அவளுக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே” என்றவனின் மனதில் என்ன இருக்கிறது என ரோஜவிற்கும் புரியவில்லை.

“என்ன நண்பா போகலாமா” என்று நாகராஜன் கேட்டதும்.“ஹாங் வா போகலாம்” என்ற கதிர் ஜம் என்று காரில் ஏறி அமர்ந்துக்கொண்டான்.

ரோஜா முல்லை பின் இருக்கையில் அமர்ந்து இருக்க. மீண்டும் நாகராஜன் காரை சென்னையை நோக்கி விரட்டினான்.

எதற்க்காக கதிர் தன் மீது வருத்தமாக இருக்கிறான் என்று எண்ணிய முல்லை ஒரு கட்டத்தில் கண்கள் அசர்ந்து உறங்கிக்கொண்டு வர,

“வாத்தி. எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு. நீங்க கொஞ்ச நேரம் பின்னாடி வந்து உக்காருங்க” என்று ரோஜா சொல்ல. நாகராஜன் ஓரமாக வண்டியை நிறுத்திய வேகத்தில் கதிர் பின் இருக்கையிலும் ரோஜா முன் இருக்கையிலும் மாறி அமர்ந்திருக்க, முல்லை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு விஷயம் தெரியாமல் போனது.

மீண்டும் நாகராஜன் சென்னையை நோக்கி காரை விரட்ட. தன் அருகே அமர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் முல்லையை ஓரப்பார்வையில் முறைத்துக் கொண்டு வந்தான் கதிர்.

“இந்த நாடகத்தில் மட்டும் தான் கணவனும் மனைவியும் பக்கத்தில் உட்காரும்போது புல்லரிக்கும். காதுல சிம்பண்ணிப் பாட்டு கேட்கும். மனசுக்குள்ள பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும் போல. ஹ்ம். இவ பக்கத்துல நான் வந்து உக்காந்து எவ்வளவு நேரம் ஆகுது. எங்கயாவது இவளுக்கு என்னை பற்றிய உணர்வு இருக்கா. ஹ்ம், நல்லா பிடிச்சு வச்ச பிள்ளையார் கணக்கா தூங்குகிறாளே” என்று கதிர் முல்லையை மனதளவில் வசைப்பாடிக் கொண்டே வந்தான்.

சில நிமிடங்கள் கடந்து நிலையில் ரோஜாவும் கண்கள் அசர. நாகராஜன் பொறுமையாக வண்டியை விரட்டும் வேளையில் கதிருக்கு லேசாக வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்தது.

“என்ன இது. இவளை கடுப்பேத்த நம்ம கொஞ்சம் அதிகமா தான் சாப்பிட்டோமா.“

என்று கதிர் நினைக்கும் நேரம்.

“டேய் நாகா வண்டியை கொஞ்சம் நிறுத்து” என்றதும். நாகராஜன் break பிடித்து காரை ஓரமாக நிறுத்த, அவன் வண்டியை நிறுத்திய வேகத்தில் முல்லையும் ரோஜாவும் கண் விழித்தனர்.

“என்னாச்சு ஏன் காரை நிறுத்துனீங்க” என்று ரோஜா கேட்க.

கதிர்வேகமாக காரிலிருந்து இறங்கியவன் லோடவென்று வாந்தி எடுத்தான்.

“அய்யய்யோ மாமா சார் என்ன ஆச்சு என்ன ஆச்சு” என்று முல்லையும் பதற்றத்தில் அவன் பின்னே இறங்கியவள் கதிரின் தலையைப் பிடித்துக் கொள்ள.

முல்லையை வெறுப்பேத்த வீம்புக்காக கதிர் உண்ட உணவு அனைத்தும் வாய் வழியே வந்தது.

“ஐயோ வாத்தி என்னாச்சு” என்று ரோஜாவும் பதறிய நிலையில், மேலும் மேலும் கதிர் வாந்தி எடுத்தவன், ஒரு கட்டத்தில் சோர்ந்து அப்படியே கிழே அமர்ந்தான்.

“மாமா சார் மாமா சார்” என்று முல்லையும் பதற.“dei நண்பா என்னடா” என்று நாகராஜன் ஒரு பக்கம் பதற்றம் அடைந்தான்.

“அண்ணா. இங்க பக்கத்துல கிளினிக் எதாவது இருக்கா” என்று முல்லை கேட்க.

“ஹேய் அதெல்லாம் வேண்டாம்ம்” என்றான் கதிர்.

“நீங்க வாயை மூடுங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. ரோஜா வா உன் அண்ணனை கிளினிக் அழைச்சிட்டு போகலாம்” என்று முல்லை சொல்ல.

“ஆமா வாத்தி. வாங்க டாக்டரை பார்ப்போம்” என்றாள் ரோஜா.

அந்த ஊர் மக்களை விசாரித்து அருகே இருக்கும் மருத்துவமனைக்கு கதிரை இவர்கள் அழைத்து செல்ல. கிட்டத்தட்ட 5 முறைக்கு மேல் வாந்தி எடுத்து தன் உடலில் உள்ள நீர் சத்தை இழந்து இருந்தான் கதிர்.

கதிரை மருத்துவர் பரிசோதித்து சத்துக்காக குலஃகாஸ் ஏற்ற முடிவு செய்து அவனுக்கு ட்ரிப்ஸ் போட்டு விட. முல்லையோ கண்களில் கண்ணீருடன் ஜன்னல் வழியே அவனை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.

சில நிமிடங்களில் மருத்துவர் சிகிச்சை அருகில் இருந்து வெளியே வர,

“டாக்டர் டாக்டர் என் மாமா சாருக்கு என்ன ஆச்சு” என்று பதற்றம் அடைந்தாள் முல்லை.

“அவருக்கு food பாய்சன் ஆகிருக்கு. நீர் சத்து ரொம்ப கம்மியா இருக்கு. குளுக்கோஸ் போட்டிருக்கேன். கொஞ்ச நேரம் கடந்து நீங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்” என்று மருத்துவர் சொல்ல.

மேலும் முல்லையின் கண்கள் கலங்கியது.

“நாங்கள் போய் அவரை பார்க்கலாமா” என்று ரோஜா கேட்க.

“இன்னும் கொஞ்ச நேரம் கடந்து போய் பாருங்க” என்றார் மருத்துவர்.

“நான் உடனே ஐயாகிட்ட போன்ல விஷயத்தை சொல்லிட்டு வரேன்” என்று நாகராஜன் சொல்ல.

“அதெல்லாம் வேண்டாம்ம் நாகா. இப்போ விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சா மீனா அண்ணி இதுதான் நல்ல தருணம் என்று தேவையில்லாத கட்டுக்கதை எல்லாம் கட்ட ஆரம்பிச்சிடுவாங்க. இப்ப என்ன.? ஃபுட் பாய்சன் தானே. கொஞ்ச நேரத்துல சரியா ஆகிடும். நீங்க யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம்ம்” என்றாள் ரோஜா.

“அண்ணி, இப்போ எதுக்கு நீங்க அழுதுகிட்டு இருக்கீங்க. இதெல்லாம் சகஜம் தானே. வாத்திக்கு கார்ல ரொம்ப தூரம் டிராவல் ஆகாது. இதெல்லாம் நினைச்சு நீங்க அழாதீங்க. முதல்ல நீங்க இப்படி உட்காருங்க” என்று ரோஜா முல்லையை ஒரு இருக்கையில் அமர வைத்தாள்.

“எதுக்காக மாமா சார் அதிகமா சாப்பிட்டு இப்படி தேவையில்லாத பிரச்சினையை எல்லாம் இழுத்து வச்சுக்கணும்” என்று முல்லை கதிரை பற்றி நினைத்து இருந்தவளுக்கு மேலும் மேலும் கண்கள் கலங்கியது.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்த நிலையில் மீண்டும் முல்லை ஜன்னல் வெளியே கதிரை பார்க்க. அவனோ சோர்வுடன் கட்டிலில் படுத்திருந்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!