Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 45

CHAPTER 45

முல்லை – 45

By Roja Roslin · October 29, 2026

0

“அடியே. இங்க நான் உனக்கு டிரஸ் எடுத்து தர தான் டி அழைச்சிட்டு வந்தேன். அது புரியாம நீ ஏன் டி என் மாணத்தை வாங்குற” என்று கதிர் கேட்க.

அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள்.

“ம். அந்த பயம் இருக்கனும் மாமா சார். இனி என்னை தவிர எந்த பொண்ணையாவது பார்க்க போறேன்னு சொன்னிங்க. அப்புறம் மூக்கு மேல இருக்குற ரெண்டு கண்ணையும் நொண்டி விட்டுடுவேன்” என்ற முல்லை கெத்தாக கடைக்குள் நுழைந்தாள்.

“அடி குட்டி சாத்தான், கொஞ்ச நேரத்துல நம்மள கோத்து விட்டு இருப்பாளே” என்ற கதிரோ. முல்லையை தொடர்ந்து கடைக்குள் செல்ல.

“சார் என்ன பாக்க போறிங்க” என்று அங்குள்ள ஆடவர் கேட்டார்.

“ம். லேடீஸ் Section எங்க இருக்கு” என்று கதிர் கேட்க.

“8th floor சார்” என்றதும். முல்லையை அழைத்துக்கொண்டு லிப்ட் மூலம் கதிர் 8ஆவது மாடிக்கு சென்றான்.

லிப்ட்க்குள் முல்லையும் கதிரும் மட்டும் தனியே இருக்க.

“ஏய். நீ என்ன சொன்ன. உன்னை தவிர நான் வேற யாரையும் பார்க்க கூடாதுனு தானே சொன்ன” என்று கதிர் கேட்க.

“அது, அது நான் வந்து” என்று முல்லை. சற்று முன் அவசரப்பட்டு பேசிய வார்த்தைகளை யோசித்து மண்டையை சொரிந்துகொண்டாள்.

“சொல்லு டி, அப்படி தானே சொன்ன.“ என்று கதிர் கேட்க.

“ஆமா. அப்படி தான் சொன்னேன்.

அதான் உங்களுக்கு நான் இருக்கேனே. நீங்க ஏன் மத்த பொண்ணை சைட் அடிக்கணும்” என்று முல்லை கேட்டதும்.

“ஓ, அப்போ உன்னை சைட் அடிக்கவா” என சட்டென்று கேட்டு இருந்தான் கதிர்.

“ஹலோ மாமா சார். நான் உங்க பொஞ்சாதி. நீங்க என்னை சைட் எல்லாம் அடிக்கக்கூடாது. எனக்கு நீங்க பொண்டாட்டி என்ற மரியாதையும், உரிமையும் தான் தரவேண்டும்” என்று முல்லை சொன்னதும். கதிர் கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டான்.

அவன் சிரிப்பின் அர்த்ததத்தை அறிந்திடாத முல்லையோ.“என்ன சிரிக்கிறீங்க” என்று கேட்டதும், சட்டென்று அவள் இடையில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன்.

““மரியாதை எல்லாம் மனசுல இருக்கு தான். அப்போ என்கிட்ட இருந்து மனைவி என்ற உரிமையை நீ எதிர்பார்த்தால். கணவன் என்ற உரிமையில நான் உன்னை எடுத்துக்கலாம் தானே” என்ற கதிரின் கேள்வியில் உள்ள அர்த்தம் முல்லைக்கு புரியும் முன்னே. அவள் முன் அழகு மொத்தமும் அவன் அணைப்பில் அவனின் மார்போடு இணைந்து இருக்க.

அதே தருணம் லிப்ட்டின் கதவு திறந்த வேகத்தில்.“ டேய் கதிர்.“என்ற ஆடவனின் குரலில் கதிரும் முல்லையும் ஒரு சேர லிப்ட்க்கு வெளியே நின்று இருந்த நபரை பார்த்து ஒருவரை ஒருவர் விலகி நின்றுகொண்டார்கள்.

அவன் சிரிப்பின் அர்த்ததத்தை அறிந்திடாத முல்லையோ.“என்ன சிரிக்கிறீங்க” என்று கேட்டதும், சட்டென்று அவள் இடையில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன்.

““மரியாதை எல்லாம் மனசுல இருக்கு தான். அப்போ என்கிட்ட இருந்து மனைவி என்ற உரிமையை நீ எதிர்பார்த்தால். கணவன் என்ற உரிமையில நான் உன்னை எடுத்துக்கலாம் தானே” என்ற கதிரின் கேள்வியில் உள்ள அர்த்தம் முல்லைக்கு புரியும் முன்னே. அவள் முன் அழகு மொத்தமும் அவன் அணைப்பில் அவனின் மார்போடு இணைந்து இருக்க.

அதே தருணம் லிப்ட்டின் கதவு திறந்த வேகத்தில்.“ டேய் கதிர்.“என்ற செந்திலின் குரலில் கதிரும் முல்லையும் ஒரு சேர லிப்ட்க்கு வெளியே நின்று இருந்த நபரை பார்த்து ஒருவரை ஒருவர் விலகி நின்றுகொண்டார்கள்.

கதிரும் செந்திலும் பாலிய நண்பர்கள். செந்திலின் வருங்கால மனைவியான மைனாவும் முல்லையின் தோழி என்பதால் செந்திலுக்கு கதிர், முல்லை ஆகிய இருவரையும் தெரிந்து இருந்தது.

லிப்டைத் திறந்ததும் இவர்களின் அன்னோனியமான காட்சியை பார்த்து

“டேய் இங்கே என்னடா நடக்குது. உனக்கு கல்யாணம் நடந்துடுச்சுன்னு கேள்விப்பட்டேன். ஆனா நீ என்னடா உன் மாமன் பொண்ணு கூட எசக்கு பிசக்கா சுத்திக்கிட்டு இருக்க” என்று செந்தில் வேண்டுமென்றே கேட்டான்.

“டேய் பக்கி. நான் கல்யாணம் பண்ணதே என் மாமன் மகளை தான்” என்றான் கதிர்.

“செந்தில் அண்ணா எப்படி இருக்கீங்க. மைனா எப்படி இருக்காள்” என்று முல்லை நலம் விசாரிக்க.

“அவளுக்கு என்னம்மா நல்லா தான் இருக்கா. எங்களுக்கு வர வெள்ளிக்கிழமை கல்யாணம். இப்ப கூட முறைப்படி கதிர் வீட்டுக்கு வந்து பத்திரிக்கை கொடுக்கணும்னு தான் கிளம்பினேன். ஆனா அதுக்குள்ள அம்மா போன் பண்ணி சாமிக்கு துணி எடுத்துட்டு வர சொன்னாங்க. அதற்காக தான் கடைக்கு வந்தேன். ஆனால் நான் கடையிலேயே இப்படி ஒரு தரிசனத்தை பார்ப்பேன்னு எதிர்பார்க்கல” என்ற செந்திலை பார்த்து தர்ம சங்கடமாக தலையை சொறிந்து கொண்டான் கதிர்.

“சரி சரி எவ்வளவு நேரம் தான் லிப்ட்டுக்குள்ளயே நிப்பீங்க. அடுத்து யாரும் மேல போயிட்டு கிழே வர வேண்டாம்மா. வாங்க வெளியே” என்று செந்தில் சொல்ல.

கதிரும் முல்லையும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே லிப்டினில் இருந்து வெளியே வந்தார்கள்.

“அப்புறம் மச்சி என்ன கல்யாணம் எல்லாம் அடிதடியா நடந்துச்சுன்னு பசங்க சொன்னாங்க. என்னதான்டா பிரச்சனை” என்று செந்தில் கேட்க.

“அதை ஏன் மச்சான் கேக்குற. எல்லாம் ஒரு பொறாம புடிச்ச ஈத்தர பண்ண வேலை” என்றான் கதிர்.

“எப்படியோ டா. உனக்கு முல்லை தான் முல்லைக்கு நீதான்னு கடவுள் என்னைக்கோ எழுதி வச்சிருக்காரு. அதனாலதான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்துருக்கு. சரி சரி நீங்க எப்போ வீட்டுக்கு போவீங்க. நானும் உங்க வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க வரணும்” என்று செந்தில் சொல்ல.

“இன்னும் ரெண்டு மணி நேரத்துல போய்டுவோம்” என்றான் கதிர்

“சரி மச்சான். எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. நான் முடிச்சுட்டு சாயங்காலத்துக்குள்ள பத்திரிக்கை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரேன்” என்று செந்தில் சொல்ல.

“சரிடா பார்க்கலாம்”

என்று கதிர் சொன்னதும்.

செந்தில் துணி கடையில் இருந்து வெளியேறி இருந்தான்.

“ஏன் மாமா சார். மைனாவுக்கும் செந்தில் அண்ணனுக்கும் எங்க கல்யாணம் நடக்க போகுது” என்று முல்லை கேட்க

“தெரியல டி. பத்திரிகையை பார்த்தா தெரியும்” என்றான் கதிர்.

“சரி சரி. நீ சீக்கிரமா உனக்கு தேவையான துணியை எல்லாம் எடுத்துக்கோ. அப்படியே ரவிக்கை தைக்க தேவையான துணியும் வாங்கிடு” என்ற கதிர். அவன் பங்குக்கு முல்லைக்காக சில சுடிதாரை தேடி எடுத்தான்.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட புடவை சுடிதார் என்று அனைத்தையும் ஒரு இடத்தில் குவித்து வைத்த கதிர்.

“முல்லை. இதெல்லாம் பிடிச்சு இருக்கானு பாரு. இல்லைனா வேற மாடல் வேற கலருன்னு உன் டேஸ்ட்க்கு ஏற்ற மாதிரி எடுத்துக்கோ” என்றான்.

“என்ன விளையாடுறிங்களா. நீங்க என்ன சின்ன கடையே வைக்கிற மாதிரி வாங்குறீங்க. எனக்கு ரெண்டு புடவை ரெண்டு சுடிதார் போதும்” என்ற முல்லை அவள் எடுத்த துணியை மட்டும் பில் கவுண்டரில் கொண்டுப்போய் வைத்தாள்.

“ஆமா மத்த விஷயமெல்லாம் வாங்கிகிட்டியா” என்ற கதிரின் கண்கள் கடையில் ஒரு ஓரமாக அடுக்கி வைத்து இருந்த உள்ளாடைகளை பார்க்க.

“ஐயோ ஆமா. அத மறந்துட்டேனே” என்ற முல்லை ஓடிப்போய் தனக்கான தேவைகளை வாங்கி வந்தாள்.

“போதுமா. வேற எதாவது வேணுமா” என்று கதிர் கேட்க.

“ஏன் மாமா சார். வீட்டுல இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களே. அவங்களுக்கு எதுவும் வாங்க வேணாமா” என்று முல்லை கேட்க.

“பெண்களை பொறுத்த வரை அவங்களா செலக்ட் பண்ணி வாங்கிக்கிறது தான் சரியா இருக்கும்” என்றான் கதிர்.

“ம். இருந்தாலும் வீட்டுல கஸ்தூரி சித்தி இருக்காங்க” என்று முல்லை தயங்க.

“அவங்களுக்கு தேவைன்னா ஜெகா மாமாவை அழைச்சிட்டு வந்து வாங்குவாங்க. நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காத” என்ற கதிர்.

“ஹாங் மேடம். அதோ அங்க இருக்குற டிரஸ் கூட pack பண்ணுங்க” என்றான்.

“அந்த டிரஸ் எல்லாத்தையும் பில் பண்ணவா சார்” என்று staff girl கேட்க.

“ம். ஆமா எல்லாத்தையும் பில் பண்ணி நான் சொல்ற அட்ரஸ்க்கு அனுப்பிடுங்க” என்ற கதிரை கேள்வியாக பார்த்தாள் முல்லை.

“என்ன மாமா சார் ஏன் எல்லா துணியும் வாங்குறீங்க” என்ற முல்லையை காதலோடு பார்த்தவன்.

“ஏய் பைத்தியகக்காரி. நீ என்கூட இல்லாத போதே வருஷத்துக்கு பத்து துணி உனக்காக எடுத்து வச்சவன் டி நான். இப்போ நீ இந்த கதிரோட பொஞ்சாதி.

உனக்கு இதுகூடவே நான் பண்ண மாட்டேன்” என்ற கதிரின் பதிலில் அவள் மீது அவன் கொண்ட காதலை உணர்த்தும் உணராமலும் தான் இருந்தாள் முல்லை.

“என்ன சொல்றிங்க, நான் இல்லாத போது எனக்காக துணி எடுத்தீங்களா” என்று முல்லை கேட்க.

“ஹாங். அது. அது ஆமா. எப்போவும் அம்மாவுக்கு வாங்கும் போது உனக்கும் வாங்குவோம் தானே அத சொன்னேன்” என்று கதிர் நிலைமையை சமாளித்தான்.

ஒரு காரியத்திற்கு பொய்யான விளக்கத்தை சொல்வதைக் காட்டிலும், அமைதியாக இருப்பதே மேல் என்ற கூற்றை அறிந்திடாத கதிர்.

மேலும் மேலும் முல்லையை அவன் விரும்பிய செய்தியையும்.

இந்த நொடி வரை அவளை அதிகமாக விரும்புகின்ற செய்தியையும்.

அவன் காலம் முடியும் வரை அவளை மட்டுமே விரும்பப் போகிறான் என்ற நற்செய்தியையும் அவளிடம் தெரியப்படுத்த தவறியவனின் காதலை முல்லையும் உணர தவற விட்டாள்.

பாண்டியனின் இல்லத்தில், “என்னடி மீனா சொல்ற. கதிரா அந்த முல்லை மேல அன்பா இருக்கிறான்” கஸ்தூரி ஆச்சிரியமாக கேட்டார்.

“எனக்கு அப்படி தான் தோணுது” என்ற மீனாவின் முகத்தில் கோவம் தெரிந்தது.

“சரி சரி. யாரோ யார் மேலையோ அன்பா இருக்கட்டும். ஆமா இந்த ஜீவா எங்க தான் போனான்” என்று கஸ்தூரி கேட்க.

“அவரு எங்க போனா எனக்கு என்ன” என்றாள் மீனா.

“அடி செ, என்ன.? ஜீவா உன்னை தொட்டு தாலி கட்டிய புருஷன். உங்க ரெண்டு பேருக்கும் எப்படிடா கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு நானே ஒன்னும் புரியாம தவிச்சு போய் இருந்தேன். எந்த சாமி புண்ணியமா உனக்கு ஜீவா கிடைச்சிட்டான்” என்றார் கஸ்தூரி.

தன் அம்மாவின் பேச்சை கேட்டு மேலும் கடுப்பான மீனா.

“ஆனா இதெல்லாம் எப்படினு தான் தெரியல” என்றவளை பார்த்து

“அதெல்லாம் ஏன் இப்போ நீ நினைச்சுகிட்டு இருக்க. நீ இந்த வீட்டோடா மூத்த மருமக. அந்த சந்தோசத்தை மட்டும் அனுபவி டி” என்றார் கஸ்துரி.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் வேளை, “வாங்க மாமா. வாங்க அத்த” என்ற ரோஜாவின் குரலில்.

“யார் வந்து இருக்காங்க” என்று ஜீவாவின் அறையில் இருந்து மீனாவும் கஸ்தூரியும் வெளியே வந்தார்கள்.

“என்ன மா ரோஜா. எப்படி இருக்க” என்ற முருகனுடன் இரண்டு நபர்கள் உள்ளே நுழைய.

“அந்த பையை எல்லாம் அங்க வச்சிடுங்க” என்றார் பார்வதி.

இரண்டு நபர்கள்கிட்டத்தட்ட 6பைகளை எடுத்து வந்து வீட்டின் மத்தியில் உள்ள மேசை மேல் வைக்க.

“என்ன மச்சான். என்ன பை இது” என்று கேட்டுக்கொண்டே பாண்டியன் தன் அறையில் இருந்து வெளியே வந்தார்.

“என்னடி மீனா. இதெல்லாம் என்னவா இருக்கும்” என்று கஸ்தூரி மீனாவின்

காதை கடிக்க.

“எனக்கு மட்டும் என்ன தெரியும். நானும் உன் கூட தானே இருக்கேன்” என்றாள் மீனா.

“என்ன மச்சான். என்ன பை இதெல்லாம்” என்று மீண்டும் பாண்டியன் கேட்க.

“வேற ஒண்ணுமில்ல அண்ணா. முல்லைக்கு துணி மணி வாங்கினோம். அதான் கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தோம்” என்ற பார்வதி. கஸ்தூரியை பார்த்து முறைக்க.

“ஓ. சித்தியோட அன்புல இந்த குண்ணக்கூடியே குளிர்ந்து போகுது போங்க” என்றார் கஸ்தூரி.

“ஹாங். அது குளிரட்டும். ஆமா நீ என்ன. கதிர் முல்லை கல்யாணம் முடிஞ்ச சந்தோஷத்துல நடந்தே பாதயாத்திரை போனதா கேள்விப்பட்டேன். எப்ப திரும்பி வந்த” என்று கிண்டலாக கேட்டார் பார்வதி.

“ம். என்ன பார்வதி அக்கா. பேச்சுல குசும்பு தெரியுது. ஆமா இது என்ன இந்த வீட்டுல முல்லையை தவிர்த்து ரெண்டு வயசு பொண்ணு இருக்கும் போது அவளுக்கு மட்டும் துணி எடுத்துட்டு வந்து இருக்கிங்க” என்று வம்பு இழுக்கும் வகையாக கேட்டார் கஸ்தூரி.

“அத்த. அவங்க பொண்ணுக்கு அவங்க எடுத்துட்டு வராங்க. எனக்கு எடுத்துக்கொடுக்க என் அப்பா இருக்காரு. மீனா அண்ணிக்கு வேணும்னா நீங்க எடுத்துக்கொடுங்க” என்று ரோஜா சொல்ல.

“என்ன ரோஜா. என் அம்மாகிட்ட பணம் இல்லைனு குத்தி காட்டுறியா” என்று கேட்டாள் மீனா.

“அண்ணி. நான் குத்தியும் காட்டல கத்தியும் காட்டல. நான் உண்மையை தான் சொன்னேன். அதுவும் இல்லாம கஸ்தூரி அத்தைகிட்ட பணம் இல்லைனு யார் சொன்னது. ஏன்?அவங்க வட்டிக்கு குட்டி போட்டு வாங்குற பணத்தை எல்லாம் உங்களுக்கு கொடுக்க தானே சேர்த்து வச்சிருக்காங்க” என்றாள் ரோஜா.

“ரோஜா. கஸ்தூரிக்கு எப்பவுமே சொந்த பந்தங்களை விட பணம் தான் முக்கியம். நீ அவ கதையை விடு. ஆமா எங்க முல்லையும் கதிரும் மாப்பிளையும். அவங்க வீட்டுல இல்லையா” என்று பார்வதி கேட்க.

“நான் தான் அவங்கள கோவிலுக்கு போயிட்டு வர சொன்னேன்” என்றார் பாண்டியன்.

“ஓ. நல்லது மாமா. அப்புறம். நம்ம ஊருல டாக்டர்க்கு படிச்ச மாப்புள ஒருத்தர் நம்ம சொந்தத்துல பொண்ணு இருந்தா சொல்ல சொன்னாங்க. நான் நம்ம ரோஜாவை பற்றி சொன்னேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா எதாவது ஒரு கோவில்ல பொண்ணு பார்க்குற நிகழ்வை ஏற்பாடு பண்ணலாம்” என்று முருகன் சொல்ல.

“ரோஜாவை பற்றி எல்லாத்தையும் சொன்ன பிறகும் கூடவா அவங்க இவளை பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லிருக்காங்க.?” என்று கேட்டார் கஸ்தூரி.

“ஏய். என்ன நாக்கு உனக்கு. ஏன் இப்படியெல்லாம் பேசுற. அதெல்லாம் நாங்க எல்லா விவரத்தையும் சொல்லியாச்சு. அவங்களுக்கு ரோஜாவை பொண்ணு பார்க்க இஷ்டம் தான்”என்றார் பார்வதி.

கஸ்தூரி பேசிய வார்த்தையை ரோஜா ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத நிலையில். சட்டென்று பாண்டியனின் முகம் மட்டும் வாடி இருக்க.

“நல்ல இடமா இருந்தா சின்னமாவுக்கு சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடலாமே” என்ற நாகராஜன் கையில் இரண்டு இளநீருடன் இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தான்.

கவலையாக இருந்த பாண்டியனுக்கு நாகராஜனின் குரல் தைரியத்தை கொடுக்க.“நீங்க வீட்டுக்குள்ள வரத பார்த்தேன் ஐயா. இந்தாங்க இளநீர் குடிங்க” என்று தன் கையில் இருந்த இளநீரை பார்வதி மற்றும் முருகனிடம் கொடுத்தான் நாகராஜன்.

“ம். இவனுக்கு தான் டி ஒன்னும் புரியல. பாரு. திறந்த வீட்டுல ஏதோ நுழையுற மாதிரி இவனா உள்ள வரான் பாரு”

என்று கஸ்தூரி சொல்ல.

“மச்சான். கதிர் வந்ததும் நான் பேசிட்டு சொல்லுறேன். நாகராஜன் சொன்னது போல. ரோஜா கல்யாணத்தை நல்லப் படியா நடத்திடலாம்” என்றார் பாண்டியன்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க.

“சார்.“ என்ற அழைப்புடன் பத்து பைகளோடு மூவர் வாசலில் நின்று இருந்தார்கள்.

“சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்” என்று நாகராஜன் கேட்க.

“நாங்க RR ஷோ ரூம்ல இருந்து வந்து இருக்கோம். Mrs. முல்லை கதிர்வேலன் வீடு தானே இது” என்று நபர் கேட்க.

“ஆமா” என்றாள் ரோஜா.

“மேடம். அவங்க எங்க கடையில எடுத்த துணிகளை எல்லாம் நாங்க door on டெலிவரி பண்ண வந்து இருக்கோம்” என்று அந்த நபர் சொல்ல.

“ஹாங் உள்ள எடுத்துட்டு வந்து வைங்க” என்ற ரோஜாவின் முகம் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.

“thanks mam நாங்க போய்ட்டு வரோம்” என்ற நபர்கள். பாண்டியன் வீட்டில் இருந்து வெளியேற,

“என்ன இது. கதிர் மாமா. வீட்டுல இருக்குற எல்லோருக்கும் துணி வாங்கிட்டு வந்து இருக்காரா” என்று கேட்டாள் மீனா.

“அண்ணி. வாத்தி முல்லை அண்ணிக்கு மட்டும் தான் வாங்கிக்கொடுத்து இருப்பாரு” என்று ரோஜா சொல்ல.

மீனா கஸ்தூரி என்று இருவரும் ஒருவரை ஒருவர் சலிப்பாக பார்த்துக்கொண்டார்கள்.

“பரவாயில்ல பார்வதி. முல்லையும் கதிரும் சந்தோசமா தான் இருக்காங்க” என்று முருகன் பார்வதியின் காதோரம் தன் மகிழ்வை பகிர்ந்துக்கொள்ள.

அதே சமயம் கதிர்வேலனின் பைக் பாண்டியனின் இல்லத்திற்குள் நுழைந்தது.

முருகனை பார்த்த முல்லை.“அப்பா”

என்று ஓடி வந்து முருகனை

கட்டிக்கொள்ள.

“அம்மாடி முல்லை, எப்படி மா இருக்க?” என்று தன் மகளை நலம் விசாரித்தார் முருகன்

“நான் நல்லா இருக்கேன் அப்பா. அம்மா நீங்க எப்படி இருக்கீங்க” என்று முல்லை பார்வதியை நலம் விசாரிக்க.

“இது என்னடி அநியாயமா இருக்கு , பார்வதி அக்கா எப்போ உனக்கு அம்மாவாக மாறினா” என்று குத்தல் பேச்சு பேசினார் கஸ்தூரி.

பதிலுக்கு பதில் பேசும் பார்வதிக்கு ஏனோ கஸ்தூரியின் இந்த பேச்சு வேதனையை கொடுக்க.“ஏன் சித்தி இப்படி பேசுறீங்க. இனி பார்வதி அம்மா மனசு கஷ்ட்டப்படுற மாதிரி பேசாதீங்க” என்றாள் முல்லை

“ஒரு சிலருக்கு எல்லாம் பிறவி குணம் மாறாது முல்லை. நீ அவங்கள விட்டு தள்ளு. அப்புறம் மாமா நீங்க எப்படி இருக்கிங்க?” என்று கதிர் முருகனையும் பார்வதியும் நலம் விசாரித்தான்.

“வாத்தி. அவங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க. நீங்க என்ன அதற்குள்ள வீட்டுக்கு வந்துட்டீங்க? நான் தான் உங்கள அண்ணிக்கூட இன்னைக்கு முழுக்க என்ஜோய் பண்ண சொன்னேனே” என்று ரோஜா சொல்ல.

“நானும் அப்படிதான் பிளான் பண்ணேன். ஆனா நம்ம செந்தில் அவன் கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருந்தான் அம்மா” என்றார் கதிர்

“என்ன நண்பா சொல்லுற? செந்திலுக்கு கல்யாணமா.?” என்று நாகராஜன் கேட்க.

“ஏன்? டா எனக்கு எல்லாம் கல்யாணம் நடக்காதா?” என்று கேட்டுக்கொண்டே கதிரின் நண்பன் செந்திலும். அவன் அம்மா பாரிஜாதமும் வீட்டுக்கு நுழைந்தார்கள்.

“வாங்க வாங்க எப்படி இருக்க்கிங்க” என்று பாண்டியன் நலம் விசாரிக்க.

“நாங்க நல்லா இருக்கோம் அப்பா” என்ற செந்தில் அங்குள்ள அனைவரிடமும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருந்தவனுக்கு ரோஜா மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்த செந்திலும் அவனின் அம்மா பாரிஜாதமும் தட்டில் பட்டு புடவை வைத்து, பழங்களை அடுக்கி, பத்திரிக்கையை எடுத்து வந்து நேரே ரோஜாவிடம் நீட்டினார்கள்.

“என்ன நீங்க. இந்த வீட்டுக்கு

என் அண்ணன் தானே பெரியவரு. நீங்க என்ன இந்த பொண்ணுகிட்ட பத்திரிகையை கொடுக்குறிங்க” என்று கஸ்தூரி கேட்க

“என் மகனுக்கு இன்னைக்கு கல்யாணம் நடக்க காரணமே ரோஜா தானே”

என்றார் பாரிஜாதம்.

ஆம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே செந்தில் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தான்.

பாரிஜாதாம் அவனை தங்களின் குலதெய்வ கோவிலான பாண்டி கோவிலுக்கு அழைத்து சென்று இருந்த தருணம்.

ரோஜாவிற்கு அருள் இறங்கி

அவள் சொன்ன வாக்கினால் தான் செந்தில் மீண்டும் நலமாக இருக்கிறான் என்று இன்று வரை செந்திலின் அம்மா நம்பி இருக்கிறார்.

ஆகையால் தான் இன்று செந்திலின் திருமணத்துக்கு ரோஜா தாலி எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று பாரிஜாதாமே நேரே வந்து பாண்டியனிடம் சம்மதம் கேட்டார்.

“என்ன சொல்றிங்க நீங்க. கன்னி பொண்ணு எப்படி உங்க பையன் கல்யாணத்துக்கு தாலி எடுத்துக்கொடுப்பா” என்று கஸ்தூரி கேட்க.

“அண்ணா. உங்கள என் உடன் பிறந்த சகோதரனாக நினைத்து வேண்டிக் கேட்டுக்குறேன். ரோஜாவை என் பையன் கல்யாணத்த முன்ன நின்னு நடத்தி தர சொல்லுங்க” என்று பாரிஜாதம் கேட்டதும்

பாண்டியனுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் போனது.

நீண்ட நிமிடங்கள் பாரிஜாதம் பத்திரிக்கை தட்டை கையில் ஏந்தி இருக்க. சட்டென்று ரோஜா செந்திலின் தலை மீது கை வைத்தவள்.

“யார் என்ன பிரச்சனை பண்ணாலும் உனக்கு துணையா உன் குலதெய்வம் உன்னை காத்து நிற்கும்” என்றவளின் கர்ஜனையில் சுற்றி இருக்கும் அனைவரும் உரைந்து போனார்கள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!