என்னதான் கதிர் தன் கழுத்தில் விருப்பமில்லாமல் தாலி கட்டி இருக்கின்றான் என்று முல்லையின் ஒரு பக்க மூளை சொல்லிக்கொண்டு இருந்தாலும். அவனின் அன்பும், அக்கறையும், தொடுதலும், உரிமையும் முல்லைக்கு கதிரின் காதலை உணர்த்தியதை முல்லையும் உணரத் தொடங்கி இருந்ததால் அப்படி ஒரு வார்த்தையை சொல்ல. இதனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத மீனா
“எனக்கு தெரியும் முல்லை, நீ எதை வச்சு இப்படி பேசுறன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று மீனா சொல்ல
“என்ன உளர்ற. எதை வச்சு நான் பேசுறேன்” என்று கேட்டாள் முல்லை.
“அதான் நான் பார்த்தேனே. நேத்து நீயும் மாமாவும் முத்தம் கொடுத்துகிட்டு நின்ன காட்சியை நானும் பார்த்தேன்” என்று மீனா சொல்ல.
“இதெல்லாம் சபையில் பேசுறியே உனக்கு அசிங்கமாக இல்லையா” என்று கேட்டாள் முல்லை
“அசிங்கத்தை எல்லாம் விடு முல்லை. நீயும் நானும் அக்கா தங்கச்சி தானே. நம்ம இத பத்தி எல்லாம் பேசிக்கலாம். ஆனா இப்ப நான் சொல்றத நீ நல்லா புரிஞ்சுக்கோ. மாமா உனக்கு முத்தம் கொடுத்தது கண்டிப்பா உன் மேல இருக்கிற அன்பாலையோ காதலாலையோ இருக்கவே இருக்காது.
இந்த ஆம்பள பொம்பள சில பேர் கல்யாணம் முடிஞ்ச கையோட புது துணையோடு மோகத்துல அவங்க கூட வாழ்ந்து ஒரு பிள்ளையை பெத்துக்க நினைப்பாங்க பாரு. அப்படி ஒரு இயல்பான மனநிலையில தான் கதிர் மாமா உன்னை நெருங்குவாரே தவிர. அவருடைய மனசுல என்னைக்குமே நீ இடம் பிடிக்கவே முடியாது” என்ற மீனாவின் பேச்சில் முல்லையின் விழியோரத்தில் கண்ணீர் கசிய.
“அப்போ மாமா சார் மனசுல நான் அவருக்கு என்னவாக இருக்கிறேன்.?” என்று முல்லை தனக்குள்ளே கேட்க தொடங்கினாள்.
அன்றைய தினம் இரவு நேரம் 10 மணியை கடந்து இருக்கும்.
“என்ன அண்ணி. இன்னும் எத்தனை மணி நேரம் தான் சாப்பிடாம இருப்பிங்க. போய் சாப்பிடுங்க” என்றாள் ரோஜா.
“மாமா சார் வந்ததும் சாப்பிடறேன் ரோஜா” என்ற முல்லையின் விழிகள் கதிரை எதிர்பார்த்துக் காத்து இருந்தது.
“மாமாவுக்கு வீட்டுக்கு வரவே விருப்பம் இல்லை போல. அதான் வரல” என்று மீனா கிண்டலாக சொல்ல.
பொறுத்து பொறுத்து பார்த்த முல்லை.
“ஆமா மீனா. உன் கழுத்துல தாலி கட்டியதுல இருந்து ஜீவா மாமாவுக்கு இங்க வரவே பிடிக்கல போல” என்றாள் முல்லை.
இவர்கள் இருவரின் பேச்சை கேட்ட ரோஜாவுக்கோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் போனது.
முல்லையின் பதிலில் கடுப்பான மீனா.
“நான் போய் படுத்துக்கறேன். எப்படியா இருந்தாலும் கதிர் மாமா குடிச்சிட்டு தான் வரும். நீ அவருக்காக காத்துக்கிட்டு இருக்காம போயி படு. அவர் நாகராஜ் வீட்டுல தூங்கிடுவாரு” என்றவள் ஜீவாவின் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.
மீனாவின் பேச்சில் எரிச்சலான முல்லைக்கு இன்று கதிர் மீண்டும் குடித்துவிட்டு வீடு திரும்புவானா என்ற அச்சம் இருக்கத்தான் செய்தது.
முல்லையின் சிந்தையை அறிந்திருந்த ரோஜா.“அண்ணி. வாத்தி முன்னாடி எல்லாம் குடிக்கு அடிமையாகல. நடுவுல தான் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாரு. நீங்க வேணா பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா வாத்தி குடிப்பழக்கத்தை விட்டுடுவாரு” என்று ரோஜா சொல்ல. முல்லை பதில் சொல்லாமல் கடமைக்கென்று சிரித்து வைத்தாள்.
இரவு மணி பத்தரையைக் கடந்தும் கதிர் வீடு திரும்பாமல் இருக்க. ரோஜாவும் சோர்வாக முல்லையிடம் பேசிக்கொண்டு இருந்தவளை.
“ரோஜா, நீ போய் தூங்கு. மாமா சார் வந்ததும் நானும் அவரும் சேர்ந்து சாப்பிடறோம்” என்று முல்லை சொல்ல.
“நானும் அததான் சொல்ல நினைச்சேன் அண்ணி. இனி உங்க புருஷனை நீங்களே பாத்துக்கோங்க. எனக்கு தூக்கம் வருது”
என்ற ரோஜா வேண்டுமென்றே கதிர் முல்லைக்கு தனிமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியவள் அவளும் தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.
நேரம் இரவு 11 மணியை கடந்து இருக்கும். கதிர் சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தவனின் கண்கள் சாப்பாட்டு மேசையில் தலை சாய்ந்து உறங்கிக் கொண்டு இருந்த முல்லையை உள்வாங்கியது.
“இவ என்ன ரூம்ல போய் தூங்காம இங்க படுத்துகிட்டு இருக்கா?” என்று தனக்குள் எண்ணிய கதிர், “ஏய் ரவாலட்டு. இங்க ஏன்டி தூங்குற. போய் ரூம்ல படு”
என்றதும் உறக்கம் களைந்து முல்லை எழுந்தவள்,
கதிரை ஏகத்துக்கும் முறைத்துப் பார்க்க,
“என்ன லுக்கு. இங்க ஏன் படுத்திருக்க. போ, உள்ள போய் தூங்கு” என்றான் கதிர்.
கதிரை மேலிருந்து கீழ் வரை முறைத்துப் பார்த்த முல்லையோ.“மணி என்ன ஆகுது? இப்பதான் வீட்டுக்கு வர நேரமா?என்ன குடிச்சிட்டு வந்திருக்கீங்களா?” என்று கேட்க, கதிரோ அவளை அழுத்தமாக முறைத்தவன்.
“குடிக்கல. வேலை இருந்துச்சு”என்றவன் நேராக தன் அறைக்குள் சென்று. சட்டையை கழட்டி ஆணியில் மாட்டியபடி துண்டை எடுத்துக்கொண்டு தோட்டத்து பக்கம் சென்றான்.
தன் கேள்விக்கு நின்று பதில் தராத கதிரை பார்த்து முல்லை மேலும் கோபம் அடைந்தவளாக அவனை பின் தொடர்ந்து தோட்டத்து பக்கம் சென்றவள்.
“மாமா சார். கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியாதா”என்றவளை மேலும் அழுத்தமாக பார்த்த கதிரோ.“அதான் சொன்னேனே” என்றான்.
“என்ன சொன்னீங்க. ஏன் லேட்டுன்னு கேட்டேன், வேலை இருந்துச்சுன்னு சொன்னிங்க, ஆனா என்ன வேலைன்னு சொல்லல. குடிச்சீங்களான்னு கேட்டேன். இல்லன்னு சொல்றீங்க. ஆனா பார்த்தா நம்பற மாதிரி இல்லையே” என்ற முல்லையை புருவம் இடுக்கி பார்த்தான்.
“ஏண்டி, குடிச்சியானு கேட்ட. இல்லன்னு சொல்லிட்டேன். நீ நம்பளனா நான் என்ன பண்றது” என்று கதிர் கேட்க.
“ம். நீங்க ஊதுங்க. நீங்க குடிச்சு இருக்கீங்களா இல்லையான்னு நான் கண்டுபிடிக்கிறேன்” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு போலீஸ் அதிகாரியைப் போல கதிரை கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெண்ணவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
“என்ன. ஊத சொன்னா சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க. என்னை யாராலயும் ஏமாத்த முடியாது. நீங்க குடிச்சு இருக்கீங்களா இல்லையான்னு நான் கண்டுபிடிக்கிறேன். ம், ஊதுங்க” என்று முல்லை சொல்ல,
அடிமேல் அடி வைத்து முல்லையை நெருங்கிய கதிரோ. தன் இதழ்கள் குவித்து பெண் அவளின் காதோரத்தில் ஊதியதும் உடல் சிலிர்த்து போனது முல்லைக்கு.
கதிரின் அருகாமையும். அவனின் வியர்வை மனமும் முல்லையின் நிலைமையை எடுத்து சொல்ல. கதிரோ தன் கண்முன்னே நின்றிருக்கும் பெண் அவளை பார்த்து.“ இப்பவாது நான் குடிக்கலைன்னு நம்புறியா. இல்ல வேற ஏதாவது பண்ணி காட்டணுமா” என்று கேட்க.
“ம். நம்பறேன்” என்றவள் மேற்கொண்டு அங்கே நில்லாமல் வேக வேகமாக சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
மீனா பேசிய பேச்சுக்கும். கதிரின் உரிமையான நடவடிக்கைக்கும் இனி அவனிடம் சற்று தள்ளி இருக்க வேண்டும் என்று மனதளவில் எண்ணிய முல்லைக்கு ஆரம்பமே அடிவாங்கி இருக்க.
கதிரை பார்த்ததும் அவளின் வீராப்பு எல்லாம் வீணாகிப் போனது.
“இல்ல இல்ல முல்லை, மீனா சொன்னது உன் மூளையில இருக்கணும். மாமா சாருக்கு மனசார நம்மள பிடிக்காம நீயும் அவரை நெருங்க கூடாது. அவரையும் உன்னை நெருங்க விடக்கூடாது.
இந்த ஒரு விஷயத்துல நீ தெளிவா இருக்கணும். இல்லன்னா அந்தப் பக்கி மீனா சொன்ன மாதிரி வெறும் ஈர்ப்புக்காக மாமா சார் உன் கூட வாழற மாதிரி ஆகிடும்.
அப்படி மட்டும் ஒரு நிலைமை வரவே கூடாது.
வாழற காலம் கொஞ்சமா இருந்தாலும் கூட. முழு காதலோட வாழனும்” என்று முல்லை தனக்குள் பேசிக்கொண்டு இருந்தவளின் செய்கையை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு அவள் பேசியது புரியவில்லை என்றாலும்.
அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை சரியாக கனித்திருந்தான்.
கை கால்களை அலம்பிவிட்டு தன் முகத்தை துடைத்தபடி சமையலறைக்குள் நுழைந்த கதிர்.“என்னடி தூங்காமல் இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்று கேட்க
“சாப்பிட வேணாமா. நேத்து நைட்டே நான் சாப்பிடாமல் தூங்கிட்டேன்” என்ற முல்லை வேகவேகமாக தோசையை வார்த்துக் கொண்டு இருந்தாள்.
“என்ன நீ சாப்பிடலையா. ஏன் இன்னும் சாப்பிடல” என்று கதிர் கேட்க.
“ம். நீங்க வராம எப்படி சாப்பிடுறது” என்றவள். மெலிதாக வார்த்த தோசையை தட்டில் வைத்து கார சட்டினியுடன் கதிரிடம் நீட்ட, அவனும் சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவன். சூடான தோசையை பிய்த்து அதை பட்டும் படாமல் சட்டினியில் முக்கி முதல் வாயை முல்லையின் வாய்க்குள் திணித்தான்.
கதிரின் செயலில் அவளை முறைத்தவள்.“நான் உங்கள சாப்பிட சொன்னேன்” என்று சொன்னதும்.“இப்போ என்ன. நம்ம சேர்ந்தே சாப்பிடலாம்” என்றான்.
மனதில் பல கேள்விகளோடு முல்லை தோசை வார்க்க.
“அம்மா சாப்பிட்டாங்களா” என்று தன் தங்கையை விசாரித்தவன். அப்படியே அவன் தந்தையை பற்றி கேட்டு அறிந்து கொண்டான்.
“இவுக என்ன. ஏன் மீனாவை பற்றி எதையும் கேக்க மாட்டுறாக. ஒரு வேள நம்ம தப்பா நினைபோமுன்னு பேசாம இருக்காகளா.“ என்று முல்லை தன் மனதின்னுள் நினைத்து இருந்தாலும். அவள் வாய் மொழி பேசாமல் இருந்தவளின் கண்கள் பேசும் அழகினை தன் ஓர விழிகளில் கவனித்து தான் இருந்தான் கதிர்.
கிட்டத்தட்ட 5தோசை வார்த்து முடித்தவளை.“நீ உக்காரு நான் ரெடி பண்ணுறேன். இன்னும் ரெண்டு தோசை நீ சாப்பிடு” என்று கதிர் சொன்னதும்.
“ஐயோ. வேணா வேணா மாமா சார். நான் ஏற்கனவே இங்க வந்து நிறைய சாப்பிடுறேன். இங்க பாருங்க எனக்கு தொப்பை கூட விழுந்து இருக்கு” என்றவள் அழகாய் தன் வயிற்றின் மேட்டு பகுதியை கதிரிடம் காட்ட, அவன் விழிகளோ அவள் அழகினை மேலும் கீழும் சேர்த்து ஆராய… ஆராதிக்க, துடித்தது.
“இந்த வயசுலயே தொப்பை விழுந்தா நான் எதிர்காலத்துல புளி மூட்டை போல தான் ஆக போறேன்” என்று முல்லை புல்ம்ப. கதிரின் விழிகளோ அவளின் இடையில் இருந்து விலகாமல் அதே இடத்தில் உறைந்து நின்றது.
தன்னை தான் தன்னவனின் விழிகள் உள் வாங்கிக்கொண்டு இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்திடாத பெண்ணவளோ.
“இதுக்கு தான் நான் நேரம் கெட்ட நேரத்துல சாப்பிடுறது இல்ல. இங்க பாருங்க மாமா சார். நாளையில இருந்து நீங்க 8pm மணிக்கெல்லாம் வீட்டுல இருக்கனும். நேரத்தோடு சாப்பிட்டு, நேரத்தோடு படுத்தா தானே உடம்பு நல்லா இருக்கும்” என்ற முல்லையின் வார்த்தை அப்போது தான் முழுதாய் அவனின் காதில் விழுந்தது.
வெயில் படாத மலர் வனமாய் அவளின் இடையழகு இவனை சுண்டி இழுக்க. கடினப்பட்டு தன் கவனத்தை வேறுபக்கம் திருப்பியவன்.“க்கும்.“ என்று தன் குரலை செருமி.
“இப்போ ஏன் டி புலம்புரவ. சுகர் கட் பண்ணா தானாக உடம்பு குறையும்.“ என்றவன். இதற்கு மேல் இங்கே நின்றால் மீண்டும் முத்த யுத்தம் அரங்கேறும் என்று பயந்தவனாக அவன் அறையை நோக்கி ஓடி இருந்தான்.
கதிரின் அறிவுரையை கேட்ட முல்லையோ.“ஆமா, மாமா சார்கிட்ட டிப்ஸ் கேட்டு எப்படியாவது நம்ம சின்ன தொப்பையை சரி செய்தே ஆகணும்” என்று உறுதிக்கொண்டவள். அடுப்பைனையை சுத்தம் செய்து. ஒரு சொம்பு தண்ணீருடன் தங்கள் அறைக்குள் நுழைய. அங்கே கதிர் எப்போதும் போலவே கையில் செல் போனை வைத்து பார்த்து இருந்தான்.
“ஏன் மாமா சார். உங்களுக்கு தூக்கம் வரலையா. மணி 11. 30ஆச்சே” என்று முல்லை கேட்க.
“ம். பொறுமையா தூங்கலாம்.“ என்றவன் முல்லையை உறுத்து பார்க்க,
“என்ன பார்க்குறீங்க” என்று கேட்டாள்.
“ம். இந்த ஜீவா அண்ணன் எங்க தான் டி போய் இருக்கும். ஒரு வேள நான் உன் கழுத்துல தாலி கட்டியதை தெரிஞ்சு அண்ணனுக்கு நம்ம மேல வருத்தமா” என்று கதிர் கேட்க.
“இதுல அவக வருத்தப்பட என்ன இருக்கு.
அவரு கூட தான் மீனா கழுத்துல தாலி கட்டினாரு. அதுக்காக நம்ம ரெண்டும் பேரும் என்ன அவர்க்கிட்ட வருத்தமா பட்டோம்” என்று கேட்டாள் முல்லை.
முல்லையின் கேள்வியில் அவளின் மனநிலையை சரியாக கணிக்க தவறிய கதிரோ.“ஆமா. உனக்கு வருத்தமா இல்லையா” என்று கேட்க.
“எதுக்கு வருத்தம்” என்று கேட்டாள் முல்லை.
“இல்லடி. எதிர் பார்த்த வாழ்கை கிடைக்கலைனா வருத்தம் இருக்க தானே செய்யும்” என்று கதிர் சொன்னதும்.
“ஏன் நீங்க வருத்தமா இருக்கீங்களா” என்று கேட்டாள் முல்லை.
“வருத்தம் இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, ஜீவா” என்று கதிர் சொல்லும் முன்னே. ”ஓ. சரி, நல்லது.
வருத்தத்தோடே படுத்து தூங்குங்க” என்ற முல்லை வேக வேகமாக கட்டிலில் படுத்து போர்வையால் தன்னை தலை முதல் கால் வரை போர்த்திகொண்டாள்.
“ஏய் ரவா லட்டு. என்ன பேசிகிட்டு இருக்கும் போதே படுத்துட்ட” என்று கதிர் கேட்டதும்.
“எனக்கு தூக்கம் வருது. குட் நைட்” என்றவளின் இதயம் ரணமாய் மாறி இருந்தது.
“என்னாச்சு இவளுக்கு நல்லா தானே பேசிகிட்டு இருந்தா. சரி லேட் நைட் ஆச்சுன்னு படுத்துட்டா போல” என்று எண்ணிய கதிரும் விளக்கை அனைத்தவன்.
தரையில் பாய் விரித்து படுத்துக்கொண்டான்.
மறுநாள் எப்போதும் போலவே பாண்டியனின் இல்லத்தில் காலை வேலை நடந்துக்கொண்டு இருக்க.
“அம்மாடி முல்லை. இன்னைக்கு சனிக்கிழமை.
நீ என்ன பண்ணுற.
கதிர் கூட சனிஸ்வரர் கோவிலுக்கு போயிட்டு வா” என்றார் பாண்டியன்.
“ம். சரி மாமா.“ என்ற முல்லை.
தன் அறைக்குள் இருக்கும் பையில் இருந்த பட்டுப் புடவையை எடுத்து ஓரம் வைத்தவள். சோகமாக கட்டிலில் அமர்ந்தாள்.
கதிர் இதே தருணம் அவன் அறைக்குள் நுழைந்தவன்.“ஒய் ரவா லட்டு. என்னாச்சு ஏன் சோகமா இருக்க” என்று கேட்டதும்.
“எனக்கு எல்லா ஜாக்கெட்டும் டைட்டா ஆகிடுது மாமா சார். இப்போ நான் கோவிலுக்கு என்ன புடவை கட்டிக்கிட்டு வரது” என்று கவலையாக கேட்டாள் முல்லை.
“என்னடி நீ. ஏன் உன்கிட்ட சுடிதார் இல்லையா” என்ற கதிரின் பார்வை அவளின் பையை ஆராய.
“கோவிலுக்கு யாராவது சுடிதார் போட்டுட்டு வருவாங்களா” என்றவள். முதல் வேலையாக ஊசியை எடுத்து ரவிக்கையின் தையலை பிரித்துக்கொண்டு இருந்தாள்.
“ஏன் சுடிதார் போட்டுட்டு வந்தா சாமி உன் கண்ணை குத்திடுமா” என்ற கதிரை ஏகத்துக்கும் முறைத்தவள்.
“இப்படி எல்லாம் பேசுனா நான் தான் உங்க வாயில குத்துவேன்” என்று தன் கையில் இருந்த ஊசியைக் கொண்டு கதிரின் வாயை குத்துவதை போல பாசாங்கு கட்டினாள் முல்லை.
“ஏய். என்ன.? கை நீளுது வாய் நீளுது. என்ன விஷயம்” என்று கதிர் மிரட்ட.
அவன் குரலில் முல்லைக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தாலும்.
“நா. நான் என்ன பண்ணேன். நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொன்னேன்” என்றாள்.
“ம். இருந்தாலும் ஓவரா தான் டி சவுண்ட் விடுற. இருக்கட்டும் வச்சிக்கிறேன்” என்றவன், தனக்கான சட்டையை அணிந்துகொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.
கதிர் சென்றதும் அறையின் கதவை தாழிட்டவள். சிவப்பு நிற பட்டுபுடவையை அணிந்துக்கொண்டு அதற்கு தோதான அணிகலங்களை மாட்டிக்கொண்டு கண்ணாடி முன்னே நின்று தன்னை திருப்தியாக பார்த்துக்கொண்டவள்.
கையில் சின்ன பர்ஸுடன் அறைனுள் இருந்து வெளியே வந்தாள்.
“அண்ணி. கிளம்பியாச்சா. வாவ் உங்களுக்கு இந்த புடவ ரொம்ப அழகா இருக்கு.“ என்ற ரோஜா. கையில் மல்லி பூ சரத்தோடு முல்லையை நெருங்க,
“என்ன மா ரோஜா. உன் சின்ன அண்ணியை தான் விழுந்து விழுந்து கவனிப்பிய்யா,” என்ற குத்தும் கேள்வியோடு பாண்டியனியன் இல்லத்திற்குள் நுழைந்தார் கஸ்தூரி.
கஸ்தூரியை பார்த்ததும் ரோஜாவின் முகம் இறுக்கத்தை கடன் வாங்கிகொண்டது.
“அம்மா.“ என்ற அழைப்போடு. மீனா கஸ்தூரியை நோக்கி ஓடி வர,
“வாங்க சித்தி, எப்படி இருக்கீங்க?” என்று கஸ்தூரியை நலம் விசாரித்தாள் முல்லை.
“எனக்கு என்னமா நான் நல்லா தான் இருக்கேன். ஆமா நீ எங்க கிளம்பிட்ட” என்ற கஸ்தூரி. கண்ணாலே முல்லையை எரித்துக்கொண்டு இருக்க.
“நாங்க கோவிலுக்கு போறோம்” என்றாள் முல்லை.
“நாங்கனா யாரு. நீயும் ரோஜாவுமா” என கஸ்தூரி கேட்க.“நான் ஏன் அவங்ககூட போகனும் அத்த. முல்லை அண்ணியும் வாத்தியும் தான் கோவிலுக்கு போறாங்க” என்றாள் ரோஜா.
“ம், இப்போ மட்டும் அந்த ஜீவா இருந்து இருந்தா என் பொண்ணும் தான் இப்படி ஜோடியா வெளியே கிளம்பி இருப்பாள்” என்றார் கஸ்தூரி.
“ஆமா ஆமா அத்த. நானும் ஜீவா அண்ணனுக்காக தான் காத்து இருக்கேன். அவரு வந்தா தான் மீனா அண்ணிக்கு மகிழ்ச்சி” என்ற ரோஜாவை கோவமாக முறைத்தாள் மீனா.
“வா கஸ்தூரி. எப்படி இருக்க?” என்ற கேள்வியோடு தன் அறையில் இருந்து பாண்டியன் வெளியே வர,
“அப்பா. ஜெகா மாமா எப்படி இருக்காருன்னு தான் நீங்க கேக்கணும். இவங்கள ஏன் நலம் விசாரிக்கிறீங்க” என்றான் கதிர்.
“என்ன கதிரு. புது மாப்பிள்ளை திமிரா” என்ற கஸ்தூரியை பார்த்து முறைத்த கதிரோ.“எனக்கு உங்கள விடவே திமிர் கம்மி தான்” என்றவன்,
“முல்லை. வா கிளம்பலாம்” என்றதும்.
“சாப்டாச்சா நீங்க” என்றார் பாண்டியன்.
“அப்பா. இன்னைக்கு முழுக்க அண்ணியும் வாத்தியும் கோவில் ஹோட்டல்ன்னு வெளியேவே ஜாலியா இருந்துட்டு வரட்டும்” என்று ரோஜா சொல்ல.
“அது எப்படி. கோவிலுக்கு போனா நேரா வீட்டுக்கு தான் வரணும்” என்றாள் மீனா.
மீனாவின் பொறாமை குணத்தை அறிந்து இருந்த கதிரோ.“ நேரா வந்தா முட்டு சந்துல தான் முட்டிக்கனும்” என்றவன்.
நேரே சென்று பைக்கை ஸ்டார்ட் செய்ய.
“நான் போய்ட்டு வரேன்” என்ற முல்லை. கதிருடன் அவன் பைக்கில் பாண்டியனின் இல்லத்தில் இருந்து வெளியேறி இருந்தாள்.
கதிரும் முல்லையும் ஜோடியாக செல்வதை பார்த்து மீனாவிற்கு காண்டு ஏற. முல்லையின் வாழ்வில் இருக்கும் மகிழ்ச்சி தன் மகளின் வாழ்க்கையில் இல்லையே என்று கஸ்தூரி உள்ளுக்குள் கருகி போனார்.
பாண்டியனின் இல்லத்தில் இருந்து கதிர் நேரே அவன் இருசக்கர வாகனத்தை கோவிலை நோக்கி விரட்டியவன், சைடு மிரரில் தன்னவளின் அழகை ரசித்தப்படியே தான் வண்டியை இயக்கினான்.
சில நிமிடங்களில் இவர்கள் இருவரும் கோவிலை சென்றடைய.
கடவுள் பெயரில் அர்ச்சனை செய்தப்பின் கோவில் படிக்கட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்கள்.
“மாமா சார். இந்த கோவில்ல இப்போ எல்லாம் பிரசாதமா புளியோதரை குடுக்கறது இல்லையா” என்று கேட்டாள்.
“சாய்ங்காலம் தான் தருவாங்க. ஏன் உனக்கு பசிக்குதா” என்று கதிர் கேட்க. கண்கள் சுருக்கி”ம். லைட்டா” என்றவளின் முக பாவனையை பார்த்து சிரித்தான்.
“சரி வா கிளம்பலாம்” என்ற கதிர். நேரே முல்லையை ஹோட்டளுக்கு அழைத்து செல்ல. இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து நல்ல உள்ளம் படைத்த சிலர் வாழ்த்தியும் சென்றார்கள்.
“உனக்கு என்னடி வேணும்” என்று கதிர் கேட்க.
“ஏன். எனக்கு என்ன பிடிக்குமுன்னு உங்களுக்கு தெரியாதா” என்று கடுக்கடுத்தாள் முல்லை.
“அடியே. உனக்கு என்னை தவிர எல்லாம் பிடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்ற கதிரை ஏகத்துக்கும் முறைத்த முல்லையோ.“உங்கள பிடிக்காதுன்னு நான் எப்ப சொன்னேன்” என்று கேட்டாள்.
“ம். பிடிக்காதுன்னு சொல்லல. ஆனா என்னை உனக்கு பிடிக்குமுன்னு கூட தானே
நீ சொன்னதே இல்லை” என்று கதிர் கேட்க.
“ஆமா சொல்றாங்க.“ என்று வாய்க்குள் புலம்பினாள்.
இவர்கள் இருவரும் எப்போதும் போலவே தனக்குள்ளே பேசி இருக்க. அதே சமயம் இவர்கள் ஆர்டர் செய்த உணவை வெயிட்டர் மேசை மேல் எடுத்து வந்து வைக்க.
கதிரும் முல்லையும் காலை உணவை சாப்பிட்டு முடித்து ஹோட்டலில் இருந்து வெளியேற,
கதிர் நேரே முல்லையை பெரிய ஷோ ரூம் ஒன்றுக்கு அழைத்து சென்றான்.
“மாமா சார் நம்ம ஏன் இங்க வந்தோம்” என்று முல்லை கேட்க.
“ம். இங்க பொண்ணுங்க எல்லாம் அழகா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் சைட் அடிக்க வந்தேன்” என்றான்.
கதிரின் பதிலில் முல்லை கிளுக் என்று சிரிக்க.“என்னடி சிரிக்கிற. ஏன் நான் சைட் அடிக்கக்கூடாதா” என்று கேட்டான்.
“ஹாங் அடிக்கலாமே. நல்லா அடிக்கலாம்” என்ற முல்லை மேலும் தனக்குள் சிரிக்க, “எதுக்கு இப்படி சிரிக்கிற” என்று பொறுமை இழந்தவனாக கேட்டான்.
“இல்ல மாமா சார். நீங்க சைட் அடிச்சா எப்படி இருப்பிங்கனு யோசிச்சேன்” என்று முல்லை சொன்னதும்.
“ம். உள்ள வா. லைவா எப்படி இருக்கும்னு காட்டுறேன்” என்ற கதிர். முல்லையை அழைத்துக்கொண்டு துணிகள் இருக்கும் பெரிய ஷோ ரூமுக்கு சென்றான்.
இவர்கள் இருவரும் ஜோடியாக உள்ளே நுழைய்ந்ததும்”வாங்க மேடம் என்ன பாக்க போறிங்க.“ என்று கடையில் பணிபுரியும் பெண் முல்லையிடம் கேட்டாள்.
“ஹாங். நான் எதுவும் பார்க்க வரல மேடம், இதோ என் மாமா சார் உங்கள எல்லாம் சைட் அடிக்க வந்து இருக்காரு” என்று சத்தமாக முல்லை சொல்ல. அங்கே பணிபுரியம் சில பெண்கள் கதிரை ஒரு மார்க்கமாக பார்த்தார்கள்.
“அடியே. என்னடி பேசுற. அங்க பாரு எல்லா பொண்ணும் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க” என்று கதிர் சொல்ல.
“நீங்க தானே அவங்கள பார்க்க போறதா சொன்னிங்க. இப்போ அவங்க ஏன் மாமா சார் உங்கள பார்க்குறாங்க. ஓ. இதுக்கு பேர் தான் அழகுல மயிங்கி போய் பாக்குறதா” என்ற முல்லையை பார்த்து கதிர் கடுப்பாகி தான் போனான்.