முனியாண்டி ஹோட்டல்
நாலடி சந்து, அதற்கு பின்புறம் சற்று வரிசையான ஓட்டு வீடுகள், இடதுபுறம் பவா மெடிக்கல் வலது புறம் ராஜேஸ்வரி மளிகை கடை, அதன் அருகில் முருகன் கறிக்கடை, நாலு ரோடு சந்திக்கும் முச்சந்தியில் முனியாண்டி ஹோட்டல் இருக்கு.
பழைய காலத்து ஓட்டு வீடு தான் இப்போது ஹோட்டலாக இருக்கு. உள்ளே சென்றால் ஓடுகளின் மேல் எல்லாம் கருப்பு அடஞ்ச புகைமூட்டம்.
சரியில்லாத தரைத்தளம். இடது புறத்தில் நாலு மேஜை, வலது புறத்தில் மூன்று மேஜை, மொத்தம் ஏழு மேஜை மட்டும் போடப்பட்டு இருந்தது.
காலையில் பூரி ,தோசை, வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர் சாதம், பூரிக்கு குருமா தோசைக்கு சாம்பார் சட்னி, காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரை தான் தோசையும், பூரியும் இருக்கும்.
நண்பகல் சோறு தான். சோற்றுக்கு சிக்கன் குழம்பு, ரசம், சாம்பார், சிக்கன் கிரேவி, மோர் இருக்கும்.
மூணு மூணு வரை தான் அதுக்கு அப்புறம் ஆறு மணியிலிருந்து புரோட்டா, தோசை சப்பாத்தி,இட்லி.
புரோட்டா நல்லா பெரிதாக சுடா நல்லா இருக்கும். சப்பாத்தியும் சுட சுட நல்லா இருக்கும்.
முனியாண்டி கல்லாப்பெட்டியில் அருகே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.
குட்டையான உயரம், முண்டா பனியன், கைலி கட்டிக்கொண்டு கண்ணே கரைன்னு என்று முகம்.
தொப்பை வெளியில் தெரிந்தபடி இருக்க கடைக்குள் உள்ளே வந்து பார்சல் கட்ட தொடங்கி விட்டார்.
அடிக்கடி போன் வந்து கொண்டே இருக்க ஹலோ
ம்…சொல்லுங்க
மொத்தம் பத்து பார்சல்
சரி அண்ணே கட்டிடறேன்னு சொல்லுவார் முனியாண்டி.
கடைக்கு எகுத்தாப்புல இவரோட மளிகை கடை இருக்கு.
சின்ன கடை தான் பெரிய கடை இல்லை.
இவருடைய மனைவியை பஞ்சவர்ணம் தான் கடையை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.
பஞ்சவர்ணத்துக்கு அம்பது வயசு பார்க்க முப்பது வயசு பொம்பள மாதிரி இருப்பா.
நல்ல குண்டு, குட்டையான உயரம், சுருண்ட கூந்தல்.
பஞ்சவர்ணத்திற்கு ஒரு மகன் கல்லூரியில் கோவையில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.
ஒரு மக உண்டு.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.மல்ல மல்லிகை கடைக்கு ஆள் வராத நேரங்களில் ஹோட்டல் கடைக்கு வந்து சாம்பார் ,சட்னி, பார்சல் கட்ட ஆரம்பித்து விடுவாள்.
பற்றாக்குறைக்கு இட்லி அவித்து கொடுப்பாள் பஞ்சவர்ணம்.
மெயின் ரோட்டில் இருந்து உள்ளே இருக்கும் கடைதான் முனியாண்டி கடை.
மெயின் ரோட்டில் இருக்கும் ஹோட்டல் கடைகளில் எட்டில் எட்டு ரூபாய், முனியாண்டி கடையில் விலை மிகவும் குறைவு தோசை 15, இட்லி 6 ரூபாய், காசுக்கு தகுந்த நல்லா சாப்பாடு தான் சாம்பார் அவ்வளவு ருசியாக கெட்டியாக இருக்கும்.
சட்டினி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தான்.
தக்காளி சட்னி , தேங்காய் சட்னி தண்ணி ஊத்தாம நல்லா கெட்டியா இருக்கும்.
மெயின் ரோடு கடைக்கு சென்று சாப்பிடும் அனைவரும் இங்க தான் வருவார்கள்.
ஹிந்தி காரர்கள் பெரும்பாலும் அதிகம்.
இரவு 12 மணி வரை கடை இருக்கும்.
முனியாண்டிக்கு ஒரு டிவிஎஸ் வண்டி உண்டு.
அதுல பார்சல் எல்லாம் யார் ,யாருக்கு கொடுக்க வேண்டுமோ?
அங்கே எல்லாம் சென்று கொடுத்துவிட்டு தான் வருவார்.
கடைக்கு தேவையான எல்லா பொருட்களையும் பெரும்பாலும் வண்டியிலேயே வாங்கி வந்து விடுவார், காலையில சரியாக 7 40க்கு பார்க்கலாம் அவர உழவர் சந்தையில் இருந்து காலையிலேயே வாழையிலை வாங்கிக் கொண்டு வருவார்.
முனியாண்டி கடைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறான் சமூக நாதன்.
ஆமாம்.. சண்முகநாதன் தான்.
தனது கிராமத்தை விட்டு இங்கு வந்து திருப்பூர் பின்னாலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
கிட்டத்தட்ட மூன்று வருடமாக தனியாக சமைத்து உண்டு வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறான் .
சன்முக நாதன் அளவான ஓட்டு வீடு வாடகைக்கு எடுத்து அங்குதான் தங்கி இருக்கிறான்.
முனியாண்டி கடைக்கு இப்போது தான் வந்து தினமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான்.
தினமும் பணம் கொண்டு தான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறான்.
திடீர்னு சண்முகநாதனிடம் பணம் தட்டுப்பாடு ஏற்பட ஒரு நாளுக்கு குறைந்த செலவில் சாப்பிட நினைத்தான்.
சண்முகநாதன் வேறு ஒரு நண்பர்களிடத்தில் ஒரு லட்சம் வாங்கி இருக்கிறான்.
அதற்கு வட்டி கட்டவே வாங்குற சம்பளம் சரியா இருக்கு.
ஒரு நாளைக்கு இரவு மட்டும் தான் சாப்பிட்டான்.
தினம் காசு கொடுத்து சாப்பிட சன்முக நாதனுக்கு சற்று சிரமமாக இருந்தது.
முனியாண்டி கடையில் ஒரு மாதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.
காசு பற்றாக்குறைவினால் இரவு மட்டுமே சாப்பிட ஆரம்பித்தான்.
முனியாண்டி கிட்ட தினமும் இங்கே தான் சாப்பிடுறேன் இரவு மட்டும் சாப்பிட்டுகிறேன், எனக்கு அடுத்த மாசம் அஞ்சாம் தேதி சம்பளம் கிடைக்கும் மொத்தமாக கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னான் சண்முகநாதன்.
முனியாண்டி சண்முகநாதனிடம்
இப்படித்தான் சொல்லுவாங்க
.ஆயிரம் ,இரண்டாயிரம், ஆறாயிரம் வந்த பிறகு ஓடிப் போயிடுவாங்க ..
என்னோட கடை இப்படியே தான் இருக்கு.
பாத்தீங்களா!
இப்படியே தான் இருக்குது.
இப்ப எல்லாம் யாருக்கும் கொடுக்கிறது இல்லை கடன்.
சண்முகநாதனிடம் கம்பெனியில் வேலை செய்யும் ராஜசேகர் சொல்லித்தான் முனியாண்டி கிட்ட கேட்டான்.
சண்முகநாதன் அப்பா பேரு விசுவநாதன்.
பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட அப்பா ஊரை விட்டு வந்தவன் தான் இந்த சண்முகநாதன்.
சண்முகம் என்ற பெயருக்கு பின்னால் அப்பா பேரு நாதன் என்பதை சேர்த்துக்கொண்டு சண்முகநாதன் வச்சுகிட்டான்.
சண்முகநாதனுக்கு ஜாதகத்துல தோஷம் செவ்வாய் தோஷம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் கம்பெனில வேலை செய்து கொண்டு இருக்கும்போது தேன்மொழியை பார்த்தான். கிட்டத்தட்ட தேன்மொழியோடு பழக்கம் தான்.
முனியாண்டி ஹேட்டலில் சாப்பிட்டு முடித்த பிறகு தான் ஆலமரச்செல்வனுக்கு தெரியும் சட்டை பையில் இருந்த பணத்தை காணவில்லை.
கை கழுவி விட்டு தனது சட்டை பாக்கெட் லில் தேடி பார்த்தான்.
காணவில்லை.
முனியாண்டி கிட்ட அண்ணே பணத்தை காணவில்லை நாளைக்கு தரேன்னு சொன்னான்
ஆலமரச்செல்வன்.
பரவாலப்பா..
பிறகு தெனமும் இரவு இங்கே சாப்பபிடு
அடுத்த மாசம் கூட சேர்த்து கொடுன்னு
முனியாண்டி சொல்ல ஆலமரச் செல்வனுக்கு
கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது.
—————————
அவனும் அவளும்
சிவப்பு சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து, உடுமலைபேட்டை புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். சரியாக 11. 00 மணி அளவில் பேருந்தில் மக்கள் கூட்டம். பேருந்துகளின் இரைச்சல் சத்தம்.
கால் செய்தான் வர 12:30 ஆகுமே என்ற ஒரு சிறு தகவல் நேராக பேருந்து பின்புறம் சென்றான். இதழ் வாங்குவதற்காக ஒரு கடையில் போய் புக்ஸ் சென்டர் எங்கு இருக்கிறதுன்னு கேட்க, பத்து கடை தள்ளிப் போங்க .நேரா போங்க பெண்டுல பாருங்க இருக்கும். கடைக்கு சென்றான் புரவி இதழ் இருக்குதா என்று கேட்டான்.புரவி இதழ் அப்படின்னா? என்று கடையிலிருந்து ஒரு பெண் கேட்டாள்.
மாத இதழ் என்றான்.
இருங்க இதோ வரேன். உள்ளே கடையில் 20 வயது மதிக்கத்தக்க ஒருவன் புத்தகங்களை அடுக்கி கொண்டிருந்தான் ,அந்தப் பெண் அவனிடம் ஏதோ சொன்னது திரும்பி அவன் வந்தான் என்ன வேணும்.
புரவி மாத இதழ் இருக்குதா…..
இங்க இல்லங்க .கலைமகள் புக் சென்டரில் இருக்கும்.
எங்க இருக்குது என்றான். பழைய பஸ் ஸ்டாண்டுங்க நேரா போங்க கொஞ்சம் தூரம் தான் .
நடந்தான்…..
கொஞ்ச தூரம் சென்றபின் கலைமகள் புக்ஸ் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது ,உள்ளே சென்றான் புரவி இதழ் இருக்குதா என்றான். புரவி இதழா!!! கடைக்காரர் அறுவது வயது மதிக்கத்தக்க அவர் கடையில் உள்ளே அமர்ந்து தினமலர் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.
இங்க இல்லைங்க என்றார் .நேராக புதிய பேருந்து நிலையத்திற்கு நடந்தே வந்தான்.
மணி 12.10. கால் செய்தான், திரும்பவும் ஒரு பதில்.
மூணாறு பஸ் நிக்கும் இல்ல அங்க வந்துருங்க, வந்துருவேன். வெள்ளை நிறத்தில் நீல நிறத்தில் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதப்பட்டிருந்தது பேருந்து போகும் இடங்கள்.
பேருந்து வந்தது அவளது முகம்.
தூரத்தில் நின்றவரே அவளை கணித்து விட்டான் பேருந்து வந்து நின்றது, முன்னாள் போய் நின்றான்.
பளபளக்கும் கண்ணாடி பாரதி பெண்களுக்காக இந்தியா என்ற இதழை தொடங்கினார் ,அந்த இதழின் நிறமும் சிவப்பு,
இவள் அணிந்திருந்த மேல் சட்டையும் சிவப்பு, கால் சட்டை மட்டும் கருப்பு .
காதில் கருப்பு வண்ண தோடுகள் ,காதுக்கு ஏற்றவாறு கையில் கருப்பு நிற வளையல். காதோரத்தில் அந்த தோடு மட்டும் அசைந்து கொண்டிருந்து, தோளில் பெரிய பை, அதன் உள்ளே உடைகள்.
சூரியனைப் போல் பிரகாசமாக இருந்தது அவளது முகம் ,பளபளக்கும் கண்ணாடியில் உள்ளே என்னை பிரதிபலிக்கும் கருமை நிற விழிகள் அந்த விழிகளுக்கு மேல் கண் மையிட்டு தீட்டப்பட்டு இருந்தாள். இரு புருவங்களுக்கும் மை
தீட்டி இருந்தாள்,அது பட்டையாக அழகாக இருந்தது.
கண்ணுக்கு மை……. அழகு.
உண்மைதான் அவளுக்கு அவள்தான் அழகு.
எனக்கு செய்வது தெரியவில்லை.எழுத்தாளர்
ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதையை படித்து விட்டு பொள்ளாச்சி டப் ஸிலிப் போக வேண்டும் நீண்ட நாள் கனவு.
அவளும் அவனும் நேராக ஓட்டல் கடைக்கு சென்றார்கள் அவளும், அவனும் கை கழுவி விட்டு அமர சப்ளையர் வந்தார் ,என்ன வேணும் சிக்கன் பிரியாணி, குஸ்கா , தக்காளி சாதம், தயிர் சாதம் இப்படி அடுக்கிக் கொண்டே போனான். சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா என்றான் நீங்க சாப்பிடுங்க எனக்கு தக்காளி சாதம் மட்டும் போதும் என்றாள். பின் இருவருக்குமே தக்காளி சாதம் வந்தது. அவன் அவளது எதிரில் அமர்ந்து இருந்தான். அவள் கொண்டுவந்த பையை பத்திரமாக சேரில் வைத்தாள்.
வாழை இலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது தக்காளி சாதம் சட்னி என்று வாழை இலையில் உணவு. சாப்பிட முடியல என்றாள், ஏன் என்றேன் அதிகமா இருக்குது.
சாப்பிட முடியலன்னா என்னுடைய இலையில் எடுத்து வை என்று சொல்ல அவனுக்கு ஆசைதான், இருந்தாலும் அவள் என்ன சொல்வாளோ !என்று தயக்கத்துடன் இருந்தான்.
பின்பு அவளும் எந்த பதிலும் சொல்லவில்லை.
அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு இருந்தான் போய் கை கழுவுங்க ன்னு சொல்ல.அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் காப்பி சாப்பிடுறீங்களா என்றாள்.
வீட்ல அம்மா, அப்பா, பாப்பா, எல்லாம் எப்படி இருக்காங்க என்றான்.
எல்லோரும் நல்லா இருக்காங்க…..
பழனியில் என்ன படித்த
11வது,12வது அங்கு தான் படித்தேன்
ஏன்? முருகன் ரொம்ப பிடிக்கும் அதனால பழனியில் படிக்கணும்னு ஒரு ஆசை அதனால அங்க படித்தேன் அப்புறம் ராஜபாளையம் அது எங்க சித்தி இருக்காங்க இப்ப போவீங்களா ராஜபாளையம் அப்ப போறது இல்ல ஒரு சண்டையா ஆயிருச்சு என்று அவள் சொல்ல அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் நெடுநேரம்.
அவளிடம் எந்த பதில் என்று சொல்வது என்று அவனுக்கு தெரியவே இல்லை.அவனது மனம் துடிதுடித்து கொண்டுஇருந்து.
ஆம்……. அது மனம் அல்லவா சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்க சென்றாள் வேண்டாம் நானே கொடுத்துக்கிறேன் என்றான் தனது மணி பிரஷ் இருந்து 500 ரூபாய் தாளினை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினான். ₹ 195 ரூபாய் ,போக மீதி ₹5 இவன் கையில் கடைக்காரர் கொடுத்தார்.
வெளியே வந்ததும் ஏ டி எ ம் போக வேண்டும் என்றாள் ஏன்? என்றேன், ஏதோ ஒரு காரணத்தை சொன்னாள். அவனுக்கு நினைவில்லை . அவன் அவளையை பார்த்து தன்னை மறந்து விட்டான். ஏடிஎம் -யில் பணத்தை எடுத்து விட்டு இருவரும் சாலை ஓரத்தில் நடந்து வந்தார்கள்.
இருவரும் உடனடியாக பேருந்து ஏறவில்லை.
உடுமலைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிற பொள்ளாச்சி வரும் பேருந்துகள் எல்லாம் கூட்டமாக இருந்தது.
பேருந்து வர ஓடிப்போய் அவன் பேருந்தின் உள்ளே சென்று இடத்தை போட்டான், அவளை ஜன்னல் ஓரத்தில் அமர வைத்து விட்டு அவள் பக்கத்தில் அவன் அமர்ந்து கொண்டான்.
பேருந்து பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.
அவன் பேச்சை தொடர்ந்தான் ஏன் வளவி எல்லாம் போட மாட்டியா?
ஏன் இந்த போட்டு இருக்கேன் பாரு…. அப்படி ன்னு…
தனது கையை காட்டினாள்
இது கையில் இருந்து வளையலை உருவி அவனிடம் கொடுத்தாள். அவன் அந்த வளையலை தொட்டு பார்த்தான் அது பிளாஸ்டிக் வளையல் .
அவள் அன்று ரொம்பவும் அழகாக இருந்தாள்
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அவரது முடி காற்றில் ஆடிக்கொண்டே வந்தது தனது கையினால் அதனை எடுத்து விட்டு எடுத்து விட்டுக் கொண்டே இருந்தாள்.அவன் சொன்னான் அந்த ஜன்னலை சாத்து ….உடனே ஜன்னலை சாத்தினாள்.
எப்ப கல்யாணம் என்றான் அவள் சிரித்தாள்.
அந்த சிரிப்பில் ஓராயிரம் வலிகள்,எதையோ பறி கொடுத்த நிலை துயரம் எல்லாமே பளிச்சென்று தெரிந்தது.
வால்பாறையில எத்தனை வருஷம் இருந்த……
ஏழு மாசம் இருந்தேன்.
திருப்பி வரவில்லையா வரவில்லை,, நீங்க தேடி போகலையா, நான் எதுக்கு போகணும் போக வேண்டும். என்ன படிக்கிறாங்கன்னு கூட தெரியாது. நான் ஏன் போகணும் ?என்னோட நியாயங்களா செவத்து கிட்ட தான் சொல்லணும். அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று போன் வந்தது காதில் வைத்து வலது கையை செல்போன் மீது வைத்து பேசிக்கொண்டே இருந்தாள்.
பத்து நிமிடங்கள் பேசி இருப்பாள் அதுவரையிலும் பேருந்தில் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதனை அவன் கேட்டுக் கொண்டே வந்து கொண்டே இருந்தான். மீண்டும் அவன் கேட்டான் எப்ப கல்யாணம்!!!!
பேருந்தில் இருந்து இளையராஜாவின் குரலில் ஒரு பாடல்
“ஆசை மட்டும் இல்லாத ஆள் ஏது கூறு…. அந்த வழி போகாத ஆள் எதுகூறு…
புத்தனும் போனா பாதை தான் பொம்பள என்னும் மோகம்தான்”
என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உன்ன பத்தி சொல்லு ஏன் எழுத போறீங்களா….. இல்ல சொல்லு .
சற்று நேரம் அமைதியாக இருந்தாள்
பேருந்து பொள்ளாச்சி வந்தடைந்தது பேருந்தில் இருந்து கீழே இறங்கி சுரங்கப்பாதை வழியாக இருவரும் நடந்து மறுபுறம் சென்றனர்.
அங்கு கேரளா செல்லும் பேருந்துகள் வெள்ள நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் நின்று கொண்டிருந்தன.
வெள்ளை நிற பேருந்தில் அழகாக மலையாளத்திலும் தமிழிலும் அந்தப் பேருந்து செல்லும் ஊர் பொறிக்கப்பட்டு இருந்தது அவள் அந்தப் பேருந்து உள்ளே ஏறி முன்னாள் அமர்ந்தாள்.பேருந்து
செல்ல நேரமாயிற்று .
அவள் பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.அவன் ஜன்னலுக்கு நேராகவே நின்று கொண்டிருந்தான், பேருந்து செல்ல ரெடியாக இருந்தது. அவன் அவளைப் பார்த்து கேட்டான்
எப்ப சொல்லுவ!! எப்ப சொல்லுவ !!
நான் கல்லூரி போயிட்டு ,கால் பண்றேன், இல்ல மெசேஜ் பண்றேன்.
வெகு நேரமாக அங்கேயே நின்றுக் கொண்டு அந்த பேருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
பேருந்து சென்று கொண்டே இருந்தது….
அவனிடமிருந்து பேருந்து வெகுத் தூரம் சென்று விட்டது. அவன் திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டே இருக்கிறான்.
எப்ப சொல்லுவ எப்ப சொல்லுவன்னு……..
அங்கு அவனை சுற்றி யாரும் இல்லை
அவன் மட்டுமே தனியாக நின்று கொண்டு இருக்கிறான்.
அவளுடைய பதிலுக்காக….
ஒரு மாதத்திற்குப் பின் மெசேஜ் வந்தது நாளை நான் காலேஜ் போறேன் எத்தனை மணிக்கு என்று அவன் கேட்க எப்பவும் போல தான் என்றாள் அவள்.
சற்று தாமதமாகவே பேருந்து நிலையத்திற்கு சென்றான் இல்லையென்றால் அரை மணி நேரத்துக்கு முன்பாக போய் காத்திருப்பான் .பேருந்து வந்தது .அவள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். பேருந்தில் இருந்தவளே தூரத்தில் இருந்து கண்டு கொண்டு விட்டான் அவன்.
ஜவுளி கடையில் வெளியே ஒரு பெரிய பொம்மை வைத்திருப்பார்கள், அது போன்ற ஒரு ஆடையை அணிந்து வந்தாள்.
பச்சை நிற ஆடை.
வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க
எல்லாம் நல்லா இருக்காங்க
சாப்பிடலாமா
அதுக்கு முன்னாடி கடைக்கு போகணும் என்றாள்
எந்த கடைக்கு ஜவுளி கடைக்கு சரி வா என்று அழைத்து சென்றான் மெயின் ரோட்டின் ஜவுளி கடைகள் அவ்வளவு அதிகமாக இல்லை.
சற்று தள்ளி விசாரித்துக் கொண்டே சென்றான் ஒரு கடையில் இங்கு ஜவுளி கடை எங்க இருக்கு என்று கேட்டான்.
அவள் அமைதியாக அவன் பின்னால் நடந்து கொண்டே வந்தாள்
கொஞ்சம் வெயிலு
சாலையின் ஓரத்தில் இருந்த கடையிடம் நல்ல ஜவுளி கடை எங்க இருக்கு என்று கேட்டான் அவன் நேரா போங்க நேரா போய் பின்னாடி திரும்பினீங்கன்னா சிவ கணேஷ் ஜவுளிக்கடை இருக்குது டிரஸ் எல்லாம் சும்மா நல்லா இருக்கும் பாருங்க
நேராக ஜவுளி கடைக்கு செல்ல மெட்டீரியல்ஸ் எடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு படியாக மேலே ஏறி இருவரும் மாடிக்கு செல்ல மேலே ஒருவர் நின்று கொண்டிருந்தார் இருவரும் அங்கு சென்றார்கள் நீங்க கேளுங்க என்றால் அவள் மெட்டீரியல்ஸ் இருக்குதா இருக்குதுங்க என்ன டிசைன்ல உங்களுக்கு வேணும் அவர் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டார் அவளும் ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
தனது சோத்து கையை வாயில் வைத்து திரும்பிக் கொண்டிருந்தாள்.
என்ன அன்ற அதே தான் சொன்ன இல்ல சளி ,இருமல் ,தடுமம்.
அவளது பேக்கே அவன் தோளில் தொங்கவிட்டு இருந்தான் அதிலிருந்து வாட்டர் கேனையை எடுத்து தண்ணீர் குடித்தாள்.
மாத்திரை போட்டையா என்றான்…. இல்ல .
சாப்பிட்டு தான் போட வேண்டும்.
கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டாள்.வேறு யாருடன் யாரிடமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள். என்ன என்றேன் விடுதி ஹாஸ்டல்ல ஒரு பொண்ணு இருக்குது ரொம்ப கஷ்டப்படுற பொண்ணு அந்த பொண்ணுக்கு ஒரு துணி எடுத்து கொடுக்கலாம்ன்னு தான் ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு 300 ,250 குள்ள எடுக்கலாம் என்று தான் அங்கே பிரெண்ட் இருக்கா அவ கிட்ட கேட்டுட்டு இருக்கேன் என்றாள். ஒவ்வொரு சுடிதாராக பார்த்தாள்
விலை கூடுதலாக இருந்தது.
கடைசியில் ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டாள்.
இப்படியும் மாடிப்படி இருந்து கீழே இறங்கி பிளவுஸ் எடுக்க வேண்டும் என்றால் திரும்பி கீழே இறங்கி நடந்து சென்றோம்.
இரண்டு கட்டப்பை அவளது பேக் எடுத்துக்கொண்டு கீழே இறங்கி பணம் செலுத்தும் இடத்திற்கு வந்தோம். அவர் தனது விலை உயர்ந்த செல்போனினால் கூகுள் பிளேயில் பணம் செலுத்தினாள்.
இருவரும் ஒரு ஓட்டலில் மட்டன் பிரியாணி ,சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க அவள் வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்த சிக்கனை எடுத்து நீட்டினாள். அதற்கு முன்னால் முன்பாகவே அவன் எங்க சமைத்துக் கொண்டு வந்தியா இல்லையா என்றான் .பேக்ல இருக்குது என்றாள். அந்த பைக்கில் இருந்து எடுத்தான்.சின்ன டப்பா வடிவத்தில் இருந்தது, அதில் சுற்றி பிளாஸ்டிக் கவர் இருந்தது வெளியே எடுத்து வைத்தான்.
அவன் சிக்கன் பிரியாணியும் ,அவள் மட்டன் பிரியாணியும் சாப்பிட்டார்கள். அவள் கொண்டு வந்த சிக்கனை இருவரும் பாதி பாதியாக சாப்பிட்டு முடித்தார்கள். இருவரும் எழுந்து கையை கழுவ அவனிடம் மணி பிரஷ்யை கொடுத்தாள்.
மணி பிரஷ் என்ன புதுசா இல்ல பழசு தானே புதுசு மாதிரி இருக்குது என்றான்.
இருவரும் சாப்பிட்டு முடித்து பொள்ளாச்சி பேருந்து ஏறினார்கள் .ஒரு முக்கா மணி நேரத்தில் பேருந்து பொள்ளாச்சி வந்தடைந்தது .பொள்ளாச்சி வந்ததும் இருவரும் நடந்தே பேருந்து நிற்கும் இடத்திற்கு வர இடையில் கொய்யா பழத்தை பார்த்தாள். கொய்யாப்பழம் வேணும் என்றாள்.
அரை கிலோ கொய்யாப்பழத்தை நல்ல பழமாக பார்த்து போடுங்க என்று சொல்ல அவ்வளவு நானும் நல்ல பழங்களை எடுத்து கொடுத்தோம். நேராக ஓட்டலுக்கு சென்றோம் அங்கு இரவு சாப்பாடு கடையிலிருந்து தான் வாங்கிட்டு போகணும் இங்கேயே வாங்கிக்கலாம் என்று சொல்லி பொள்ளாச்சியில் ஒரு பேமஸான ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள். புரோட்டா சப்பாத்தி …என்ன ஏதோ வாங்கினாள் வாங்கி தனது பேக் பையில் திணித்தாள் சிலது போகவில்லை ஒவ்வொன்னா எடுத்து தனியா வைத்துவிட்டு ஒவ்வொன்றாக அடுக்கி வைத்தாள்.
பேருந்து நிலையத்திற்கு வந்ததும் தனித்தனியாக பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. ஒரு பேருந்தில் கூட்டமே இல்லை உள்ளே ஏறினால் சுத்துமுத்து பார்த்தாள்… என்ன யாருமே இல்லை என்றாள். கீழே இறங்கினால் மற்றொரு பஸ்ஸில் வந்தது அதில் ஏறினாள்.
சரி.
எனக்கு ஒரு டைரி மில்க் பிஸ்கட் வாங்கிட்டு வாங்க என்று சொன்னாள். பக்கத்தில் இருந்த கடையில் டைரி மில்க் பிஸ்கட்டை வாங்கி வந்து அவளிடம் கொடுத்து விட்டு வெளியே நின்று கொண்டிருந்தான் .பேருந்து நின்று கொண்டிருந்தது நீங்க போங்க என்றாள்.
அவன் மிக நேரமாக அங்கே நின்று கொண்டு இருந்தான் நீ..
போங்க.
சரி என்று சொல்லிவிட்டு பேருந்து ஏறினான்.
அவளை பார்த்தவாறு…
மீண்டும் ஒரு மாத கால இடைவெளிக்கு பின் கல்லூரியில் லீவு என்றாள்.
நானும் வரேன் வேண்டாம் என்கூட பிள்ளைகள் வருவாங்க அதனால வேண்டாம் ரிட்டன் வரும்போது சொல்றேன் வாங்க என்றாள்.
அரை மணி நேரத்திற்கு முன்னாடியே பேருந்து நிலையத்திற்கு வந்து வெகு நேரமாக உட்கார்ந்து இருந்தான் அவன் சரியாக 12:30க்கு போன் வந்தது.
மலைகளுக்கு இடையே வந்து கொண்டிருக்கிறேன் அதனால் டவர் சரியாக கிடைக்காது சரி…..பஸ்லே இருக்குற டயர் வெடித்து விட்டது இன்னும் பத்து நிமிஷம் ஆகுமா வந்துடறேன்.
சரியாக ஒரு மணிக்கு பேருந்து உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. அவன் பேருந்துக்கு நேரே நின்று கொண்டிருந்தான். ஒவ்வொருத்தவரா பேருந்துலிருந்து இறங்கிக் கொண்டு இருந்தனர். பேருந்து படியில் ஒரு சிறுமி வாந்தி எடுத்து விட்டது .அந்த வாந்தி படியில் மேல் வெள்ளை வெள்ளையாக கிடந்தது பேருந்து உள்ளே இருந்து இறங்கி கொண்டு இருப்பவர்கள் பார்த்து நிதானமாக படியில் இறங்கி கொண்டு இருந்தார்கள் அவள் கடைசியாக இறங்கி வந்தாள்.வரும்போது கையில் தொட்டுவிட்டால் போல கீழே இறங்கி மேல பட்டுடுச்சு.
தனது பையில் இருந்த வாட்டர் கேனை எடுத்து ஓரமாக நின்று கையை கழுவி கொண்டு இருக்க இங்க இருக்கு பாரு அவன் சொல்ல திருப்பி வாட்டர் கேன் எடுத்து கையை நன்றாக கழுவினாள்.
பேருந்து நிலையத்தில் அதிகமான கூட்டம் நெரிசல் இது வெறும் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சாப்பிடலாமா என்றான் அவன் சாப்பிடலாம் சாலை ஓரத்தில் வேகமாக நடந்து கங்கா சைவ அசைவ உணவகம் ஹோட்டலுக்கு சென்றார்கள் இருவரும் டேபிள் பக்கத்தில் இருக்கும் சேரில் அமர சப்ளையர் என்ன வேணும் என்றா ள்.என்ன இருக்கு என்றான் அவன்.
தக்காளி சாதம் ,தயிர் சாதம், புரோட்டா ,சப்பாத்தி, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, ,பூரி, இட்லி, தோசை, என்ன வேணும் சாப்பாடு இருக்குதா?
இருக்குது.
பெரிய வாழை இலை எடுத்து வந்து போட்டான் இருவரும் அமர சாப்பாடு வந்தது அளவு சாப்பாடு இல்ல எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி சாப்பிட்டுக்கலாம் என்றான் சப்ளையர் சாதத்தை எடுத்து இலையில் போட்டான் சாம்பார் ஊற்றினால் கூட்டு , ஊறுகாய்,அப்பளம் வைத்தான்.
அவளுக்கு அப்பளத்தை சப்ளையர் வைக்கும் போது அப்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டான் அப்பளம் பிடிக்காதா அவளுக்கு
மெதுவாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் இருவரும். அக்கா என்ன பண்றாங்க நல்லா இருக்காங்களா? நல்லா இருக்கா ஆமா என்ன பண்றாங்க துணிக்கடையில வேலை பார்க்கிறா என்ன சொல்ற ஸ்கூல் தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தா அவங்க வீட்டுக்காரர் சரி இல்ல இப்ப துணிக்கடையில வேலை பாத்துட்டு இருக்கேன் எவ்வளவு சம்பளம் கடை எல்லாம் அவளுடைய கண்ட்ரோல்ல தான் இருக்குது.
அதுதான் கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படிக்க சொல்லி இருக்குது எழுத சொல்லி பார்க்கலாம் என்ன பண்றான்னு தெரியல
வேற என்ன சாப்பிடுறீங்க சிக்கன் வேண்டாம் அவன் சப்ளையரை உடனே கூப்பிட்டாள்.
சிக்கன் இருக்குதா இருக்குதுங்க சிக்கன் கிரேவி வேணுமா சிக்கன் வேணுமா சிக்கனை சொல்லு என்றான் அவன் சிக்கன் கொண்டு வாங்க
சிக்கனை கொண்டு வந்து டேபிள் மீது வைத்தான் அதில் பாதி அவளுக்கு எடுத்து வைத்தான் அவன் ஏநீங்க சாப்பிடுங்க நீங்க தான் ஹாஸ்டல்ல இருக்கீங்க சாப்பிட மாட்டீங்க சாப்பிடுங்க என்றாள்.
நீ கொஞ்சம் சாப்பிடு என்று பாதி சிக்கனை எடுத்து அவள் இலையில் வைத்தான்.
சிக்கன் நல்லா இருக்குல்ல என்றாள் நல்லா இருக்குது இப்படித்தான் ஹாஸ்டல் பக்கத்துல ஒரு கடையில வெளியே சிக்கன் சாப்பிட வந்தோம் சிக்கன் நல்லா இருந்தது விலை கூடுதல். விலைக்கு தகுந்த மாதிரியே ரேட் தான் கடைசில ஃபீட் பேக் கேட்டாங்க நாங்க எதுவும் சொல்லல என் கூட என் பிரெண்ட்ஸ் வந்து சாப்பிட்டாங்க அவங்களுக்கு கால் பண்ணி கேட்டு இருக்காங்க அப்புறம் என்கிட்ட சொல்ல சொன்னாங்க நான் சொன்னேன் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டால் ஒரே டேபிள்ல மட்டும் கவனிக்க கூடாது .எல்லா டேபிள்லயும் இருக்குற ஆளுங்கள கவனிக்கணும் அப்படின்னு.
சாப்பிட்டு முடித்து எழுந்து இருவரும் சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் ஊருக்கு வரியா எப்ப இப்ப எல்லாம் ஊருக்கெல்லாம் வர முடியாது எங்க ஊருக்கு வா பார்க்கலாம் என்றாள்.
இருவரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து அடைந்து பேருந்துக்காக காத்திருந்தார்கள் எல்லா பேருந்தும் கூட்டமாக வந்து கொண்டிருந்தது பேருந்து வருது என்றாள் கூட்டமாக இருக்குது அடுத்த பேருந்துல போகலாம் என்றான் வர எல்லா பேருந்தும் கூட்டமா தான் வருது பேருந்து தூரத்தில் இருந்து வரும் பொழுதே ஓடிப்போய் சீட்டு போடலாம் என்று சொல்லி ப பேருந்து உள்ளேன் ஒவ்வொரு சிட்டிலும் ஆள் அமர்ந்திருந்தார்கள் சுற்றி முற்றி பார்த்தான் எல்லா சீட்டிலும் மனித தலைகள்.
கடைசியில் சீட் கிடைக்கவில்லை நின்று கொண்டே இருவரும் பயணித்தார்கள் அவன் பேருந்து நடுவில் நின்று கொண்டிருந்தான் அவள் பேருந்தின் முன்னே நின்று கொண்டிருந்தாள் ,கண்டக்டர் டிக்கெட், டிக்கெட் என்று கேட்டுக் கொண்டு அதன் வர தூரத்திலிருந்து அவனைப் பார்த்து டிக்கெட் எடுத்தாச்சு என்றாள்.
பேருந்து சென்று கொண்டே தான் இருந்தது இன்னும் பொள்ளாச்சி வர அரபு மணி நேரம் இருக்கிறது அவனுக்கு ஒரே வருத்தம் எனக்கு ஒரு முறை இவ்வளவு நேரில் பார்க்கிறோம். அவள் பக்கத்தில் உட்கார்ந்து கூட பேச முடியவில்லை. நிற்க முடியவில்லை என்ற ஒரு வருத்த ம் அவனை துரத்தி கொண்டே இருந்தது.
பேருந்தில் வேற சரியான கூட்டம் முன்னாடி அவளை பார்த்தான் அவள் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தாள்.
பேருந்து பாதி தூரம் வந்த பின் நகர்ந்து நகர்ந்து அவளிடம் வந்தான் .என்ன அங்க இருந்து இங்க வந்துட்டீங்க என்றாள் ஒன்னும் இல்ல என்றான். அவன் மனதிற்கு சொல்லிக் கொண்டான் உன் பக்கத்தில் நின்று கொண்டு வர வேண்டும் . பேருந்து பொள்ளாச்சி வந்து அடைந்தது இருவரும் இறங்கி கடைக்கு சென்றார்கள். இருவரும் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டார்கள் சாப்பிட்டு இருவரும் பேருந்து நிலையத்திற்கு திரும்பி வர…
மணி இரண்டு முப்பது
வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய பேருந்து நின்று கொண்டிருந்தது அதில் ஏறி உள்ளே அமர்ந்தாள்.
பேருந்து எடுக்க இன்னும் சற்று நேரம் ஆகும் இவனும் படியின் மீது ஏறி உள்ளேயே அவரிடம் இரண்டு நிமிடம் உட்கார்ந்தான் பின்னாடி வேற கல்லூரி படிக்கும் நான்கு அமர்ந்து இருந்தார்கள் அவள் அவர்களிடம் ஏதோ பேசினான் சரி, பார்த்து போ. சொல்லிவிட்டு பேருந்து பேருந்து விட்டு கீழே இறங்கினான் . பேருந்தின் எதிரே வெளியே நின்று அவளுக்கு எதிரே அவளை பாத்துக்கொண்டே இருந்தான் வெகு நேரமாக ,சரி போங்க .
ஏன்!
ஏன் உடனே தன்னது சட்டை பையில் இருந்த செல்போனை எடுத்து அவளுக்கு கால் செய்தான் ஏன் !
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் .
ஒரே காலேஜா இல்ல வேற ,சரி போங்க..
சரின்னு சொல்லிவிட்டு அந்த பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பினான் அங்கேயே ஒரு பேருந்து நின்று கொண்டிருந்தது பேருந்தில் ஏறி அவளுக்கு கால் செய்தான் பேருந்து ஏறிவிட்டேன் சரி ஹாஸ்டலுக்கு போயிட்டு கால் பண்ணு சரி பண்றேன் இல்லனா மெசேஜ் பண்றேன் சரியா நான் ஈவினிங் போயிட்டு பேசுறேன் என்றான் அவன் வெகு நேரமாக செல்போனை பார்த்துக் கொண்டிருந்தான் அவளுடைய காலுக்காக மெசேஜ் காக…..
இரண்டு மாதங்களுக்குப் பின் அவளை அதே இடத்தில் பார்த்தான் தெரிந்துவிட்டு இறங்கியதும் இருவரும் சாலையில் நடந்து ஜவுளி கடைக்கு சென்றார்கள் எதுக்கு இப்ப கடைக்கெல்லாம் வேண்டாம் என்றாள் அவள்.
டிரஸ் எடுக்க தான் இப்ப எல்லாம் டிரஸ் எல்லாம் வேண்டாம் இங்கே எடுத்துக்கிருவோமா இல்ல பொள்ளாச்சி போயி எடுத்து தரலாமா என்றான் இங்கே எடுத்துட்டு பொள்ளாச்சி போய் சாப்பிட்டு போலாம் என்றான் நேராக சிக்னலை தாண்டி இருவரும் நடந்து ஜவுளி கடையிலுள்ள நுழைய பெரிய கடை வெளியில் அந்த கடையில் வேலை செய்யும் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வாங்க என்றாள்
டிரஸ் எடுக்கணும் என்றான்.
என்ன டிரஸ்…
சின்னப் பிள்ளைகளுக்கு போடுற மாதிரி டிரஸ்
சின்னப்பிள்ளைன்னா ?குழந்தையா?
ஒன்பது வயசுங்க
ஆண் குழந்தையா?
பெண் குழந்தையா ?
அதை சொல்லுங்க..
பெண் குழந்தை தாங்க.
பாப்பாவுக்கு எல்லாம் இப்ப வேண்டாம் என்றாள் அவள்.
சரி …
அப்போ உனக்கு எடுத்துக்க உங்களுக்கு போட்டுக்க என்றால் அவன் மேல போங்க என்றால் கடையில் வேலை செய்யும் பெண்
அப்போ உனக்கு எடுத்துக்க பொங்கலுக்கு போட்டுக்க என்றான்.
மேல போங்க என்றாள் கடையில் வேலை செய்யும் பெண். இருவரும் படியில் ஏறி மேலே செல்ல என்ன வேண்டும் கடையில் உள்ளே இருக்கும் பெண் கேட்டால் சுடிதார் ரெடிமேட்டா ஆமா ரெடிமேட் தான் என்றாள்….அவள்.
இப்ப லேட்டஸ்ட் வந்திருக்கிறது எடுத்து போடுங்க..
கடையில் வேலை செய்யும் பெண் ஒவ்வொரு சுடிதாராக எடுத்து வெளியே போட்டால் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி இருந்தது சிலது சின்ன பிள்ளைகளுக்கு போடுற மாதிரி இருந்தது சுடிதார் பார்த்து அவன் இதெல்லாம் வேண்டாங்க நல்லாவே இல்ல வேற எதுவும் எடுத்து போடுங்க என்றான். மறுபடியும் வேற மாடலில் சுடிதாரை எடுத்து போட்டுக் கொண்டே இருந்தாள். கடைசியில் அவள் விருப்பமான பூ போட்ட சுடிதாரையே எடுத்துக் கொண்டாள்.
கடையில் துணிக்கு வேண்டிய தொகையை அவன் ஜி.ப்ளே மூலம் செலுத்தி விட்டான் கடைக்காரன் சுடிதாரை கவர் பண்ணி ஒரு பெரிய பையில் போட்டு கொடுத்தான் அதை அவள் கொண்டு வந்திருக்கும் பையில் உள்ளே இருவரும் வைத்தனர் நேராக நடந்து சாலைக்கு இருவரும் வந்தன பேருந்துகள் வேகமாக சென்று கொண்டிருந்தன .சாலை ஓரத் இருக்கும் வியாபாரிகள் அழகான ஆப்பிள்கள் ஆரஞ்சுகள் முந்திரிகள் என அனைத்தும் அடிக்கடி வைத்திருந்தார்கள்.
சாப்பிட வேண்டும் என்றாள். ஏன் பசிக்குதா என்றான் சாப்பிடனும்.
இருவரும் சாலையோரத்தில் இருக்கும் அஜ்மீர் சைவ, அசைவ உணவகம் பெரிய பலகை போட்டிருந்த கடைக்கு சென்றார்கள். இருவரும் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டார்கள் .அவளும் ஏதோ சொன்னாள்.இவனும் ஏதோ சொன்னான் .இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டே இருந்தார்கள்.
இன்று இருவர் வந்து பொள்ளாச்சி பேருந்து ஏறினார்கள் பேருந்தில் ஒரே கூட்டம் இரு நான் சீட்டு இருக்குதுன்னு பார்க்கிறேன் என்று சொல்லி பேருந்து ஏறி பார்த்தான். இரண்டு பேர் இரண்டு சீட்டில் அமர்ந்திருந்தார்கள். உள்ளே சென்றதும் கொஞ்சம் மாறி உட்காருங்கள் என்றான்.
அவளும் பேசினாள். அவனும் பேசினான் நிறைய பேசினார்கள்.
ஊரிலிருந்து கொண்டு வந்த சாக்லேட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள். இந்த சாக்லேட் சாப்பிட்டு இருக்கீங்களா என்றாள்
ஓ… இதுவா இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருக்கிறேன்.
கொடைக்கானல் ஊட்டியிலே நிறைய விப்பாங்க என்றான்.
வெளியில் இருந்து அந்த டப்பாவை எடுத்து அதில் ஒரு பீஸ் எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் வாங்கி வாயில் போட்டு மென்று தின்றான் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது .அத்தை நல்லா இருக்காங்களா?
நல்லா இருக்காங்க ,அதே வேலைக்குதான் போறாங்களா ?
ஆமா ….இப்ப வேலை இல்ல.
வீட்ல தான் இருக்காங்க.
அவன் சொன்னான் ஊருக்கு வர லாம்னு தான் நினைத்தேன் உன்னை யோசனை பண்ணுனேன் அதனால தான் வர முடியல
பேசாம வீட்ல சொல்ற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருங்க என்று அவள் சொன்னாள்.
இருவருக்கும் இடையே பேச்சு நின்றது. பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது.
அவன் சற்று மௌனமானான் அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.
அவள் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். ஜன்னல் வழியே எதை ஒன்றை பார்த்தவாறு யோசனையில் அவள் கண்கலங்கினாள்.
அவனுக்கு தெரியாமல் அவள் கண்ணை துடைத்தாள்.
இருவருமே எதுவுமே பேசவில்லை.
அவன் அவளிடம் சொன்னான் எது நடந்தாலும், என்ன நடந்தாலும் , எந்த பிரச்சனை வந்தாலும் நீதான் .பேருந்து இப்பொழுது வேகமாக சென்று கொண்டிருந்தது.
————————-
வைகையின் பிறப்பிடம்.
பொன்னையா வீட்டிலிருந்து உத்தமபாளையம் கிராமச்சாடி வந்து விட்டான். தனது பழைய சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து கால் செய்ய…
என்னடா வந்துட்டியா ?
என்றான் பிரபு.
அங்கேயே இரு பத்து நிமிஷத்துல வந்துருவேன். ரொம்ப நேரமாக நின்று கொண்டிருந்தான் பொன்னையா.
எதிரே.. கரும்பு கட்டுகள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டு இருக்க பக்கத்தில் ஒருவர் பீடியை பற்ற வைத்துக் கொண்டு புகையை மூக்கின் வழி விட்டுக் கொண்டிருந்தார்.
செல்போனை எடுத்து முகநூல் பக்கம் நுழைந்தான். ஒருத்தி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உடன் அழகான புகைப்படத்தை பதிவிட்டு இருக்க ஒருவன் கீழே “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” பதிவை போட்டிருந்தான்.
அதற்கு தேங்க்யூ….. அவளுடைய
மறு பதிலை பார்த்தான்.
பிரபு இரு சக்கர வாகனத்தில் நீல நிற சட்டை அதற்கு தகுந்தாற் போல் வேட்டி பக்கத்தில் வந்து வண்டியை நிறுத்தினான்.
மணி “பதினொன்று”
பொன்னையா பின்னால் அமர்ந்தான்.
என்ன சரக்கு போட்டு போகலாம் டா! என்றான் பிரபு.
“மேல கடை இருக்கு அங்க போயி பார்த்துக்கலாமா”
பெட்ரோல் போட வண்டியை வளைத்தான். முன்நூறு ரூபாய்க்கு போட்டு சின்னமனூர் ஹைவேஸ் போகும் பாதையில் எ.டி.ம் இருக்கும் இடத்தில் வண்டியை போய் நிறுத்தினான்.
மலைகளுக்கு இடையே டவர் எல்லாம் கிடைக்காது. சும்மா செல்ல நோண்டிக்கிட்டு வரக்கூடாது. பொன்னையாவை பார்த்து முக சுழிப்புடன் சொல்லிவிட்டான். இருசக்கன வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே..
ஒருவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். சாலையில் சென்றவர்களும் பதறி அடித்துப் போய் ஓடினார்கள். லேசான காயம் தான் உயிர் பிழைத்தார்கள் என்று கூட்டத்தில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். எதிரே வந்த டோம்போ வண்டி குறுக்கே வந்து விட்டான். பொறுமை இழந்து கூட்டம் விலகி சென்றது. இருசக்கர வாகனத்தை சாலையை நோக்கி வேகமாக ஓட்டினான். இடதுபுறம் ஓடைப்பட்டி நாலு கிலோ மீட்டர்.
ஆனைமலையான் பட்டி இரண்டு கிலோமீட்டர். பச்சை நிற எழுதப்பட்டிருந்தது. இருபுறங்களும் வாழை மரங்களும் திராட்சை குடிகளும் செந்நிற மண்ணில் செழித்து வளர்ந்திருந்தது. மேகமலையை எப்படியாவது ஒரு நாள் நான் பார்த்து விட முடியாதா! “அது எப்படி இருக்கும்”. பொன்னையாவின் மனதில் உதித்துக் கொண்டே இருந்தது. தீராத கனவுகளுடன் சென்று கொண்டிருக்கும் போது தான் செக் போஸ்ட் வந்தது.
பெரிய முறுக்கு மீசை வைத்த ஒருவர் வண்டியை நிப்பாட்டினார். பக்கத்தில் வந்து வண்டியை கூர்ந்து கவனித்தார் . “வண்டியில ஒன்னும் இல்ல” சார்…
போயிட்டு அஞ்சு மணிக்குள்ள வந்துருங்க… என்றார்
கொஞ்சம் தூரம் சென்ற பின் சாலை வளைவும் நெளியுமாக சென்றது. அடர்ந்த மரங்கள், அழகிய பூக்கள் எங்கிருந்தோ வேற்று கிரகணத்துக்கு வந்தது மாதிரி உணர்ந்தான் பொன்னையா.
கருமையான கருமேகங்கள் திரண்டு மலை முகடுகளில் தவழ்ந்து கிடந்தன. தனது சட்டை பையில் இருந்து செல்போனை எடுத்து வளைந்து
“நெளிந்து போகும் பாதை மங்கை மேகூந்தலோ”….
பாடலை போட்டான் பொன்னையா. பூரம் செல்ல செல்ல உயரமான மலை ப்பகுதியில் தேயிலை செடிகள் கண்ணில் உலாவின. பிரபு தேயிலைத் தோட்ட எக்ஸ்டேட்லே வேலை செய்தவன். அவனுக்கு இது எல்லாம் அத்துபடி. பிரவீன் அப்பா ஹைவேஸ் அணை கட்டும் போது “ஒன்னா ரூபா” சம்பளத்துக்கு வேலை பார்த்தவர். உன்னுடைய உறவுக்காரர்கள் எல்லாம் இங்கே தான் தங்கி வேலை செய்கிறார்கள். பொன்னையாவோ தனது வாழ்நாளில் ஒருமுறையாவது தேயிலைத் தோட்ட எஸ்டேட் களை பார்க்க வேண்டும் என்பது அவனுடைய மிகப்பெரிய கனவு.
இருவரையும் முந்தி அடித்துக்கொண்டு ஒரு பெரிய ட்ராவல் பஸ் கடந்தது. நேற்று பருவமடைந்த அழகானபெண்கள் இருந்தார்கள். கேரளாவில் இருந்து சென்று கொண்டிருக்கிறது.
அதில் ஒருத்தியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே வந்தான் பொன்னையா. அவளது கூந்தல் வளைந்து செல்லும் சாலையைப் போல மேடும் பள்ளமாகவும் இருந்தது.
பெரிய வளைவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி.. உயரமான பாலத்தின் மேல் என்று போட்டோ எடுத்தார்கள் . பெரிய மலையின் மேல் நின்று பார்க்கும் பொழுது அடுக்குமாடி குடியிருப்புகள் அணு துகள்கள் போல காட்சியளித்தன. மேலே செல்ல செல்ல சாலைகள் குறுகலாகவும் தூரத்திலும் அடர்ந்த செடிகள்.
பிரபுவை பார்த்து… “ரொம்ப மோசமா இருக்கு” என்றான் பொன்னையா.
டேய்….!
இதையெல்லாம் சரி பண்றதுக்கு சில ரூல்ஸ் இருக்குது தெரியுமா?
ஆலமரம் போல் கிளைகளை பரப்பிக் கொண்டிருந்த மரத்தின் அடியில் குரங்குகள் எங்களை பார்த்தவாறு நின்றது.
அது எங்கள் இருவரையும் நோக்கி வர வண்டியில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து நீட்டினான் பொன்னையா.
விறு விறு என பிடுங்கிக் கொண்டு ஓடியது…
சின்னமனூர் ஹைவேஸ் வந்தடைந்தோம்.
மிகப்பெரிய அணை வயது முதிர்ந்த கிழவியின் முகத்தில் விழுந்த கோடுகளை போல அணை வற்றி எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது.
பெரும் இரைச்சல் சத்தத்துடன் பேருந்து இரவங்கலார் நோக்கி இருவரையும் முந்தி அடித்துக்கொண்டு வேகமாக பின்னால் வந்தது. இருவரும் மணலாறு சென்றடைந்தோம். உயர்ந்த மலைகளுக்கு இடையே தேயிலை செடிகள் மீது பனித்துளிகள் படர்ந்து இருந்தன அவற்றின் அருகில் சென்று பொன்னையாவும் ,பிரபும் விதவிதமான ஸ்டைலுகளில் போட்டோ எடுத்தனர்.
மெல்லிய இலைகளின் நுனிக்கொழுந்தே தனது கைகளால் வருடி கொண்டிருந்தான் பொன்னையா.
தேயிலை எஸ்டேட் அருகில் வானத்திலிருந்து மழையினை பெய்து வித்த வானம் போலவே மணலாறு பகுதியில் அடர் நீல நிறமாக தண்ணீர் இருந்தது. பொன்னையா வெகு நேரமாக அந்த தண்ணீரையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். சாலையில் சில இடங்களில் யானைகளின் எச்சங்கள் காணக் கிடந்தன.
மணலாறில் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்தது. உள்ளே சென்று சாப்பாடு இருக்குதா ன்னு கேட்டான் பிரபு.
கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரெடி பண்ணுறேன் கடைக்காரன் சொல்ல பிரபு வெளியே வந்தான்.
சற்று விரைவில் நின்று கொண்டிருந்த பொன்னையாவை பார்த்து…
டேய்…
அந்த தெரியுது பாத்தியா!
அதுதான்
“வெள்ளிமலை”
இதுக்கு மேல போனோம்னா “மகாராஜா மெட்டு”
அதுக்கடுத்தாப்புல ஊரு இல்ல..
அப்படியே தேக்கடி போயி சேந்துரும் மலை.
இப்படியே தேயிலை எஸ்டேட் பக்கம் போனேன்னா!
ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல..
“ஆன பார்க்கலாம்”
கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்துல நின்னுகிட்டு இருக்கும்.
கீழே எல்லாம் வருமான்னு கேட்டான் பொன்னையா.
இப்ப வராதுடா!
நைட்டு டைம் தான் வரும்.
“இந்த மனுசன் இருக்கானே மனுஷன்”
“உலகத்திலேயே கேடுகெட்ட புத்தியே மனுசனுக்கு மட்டும் தான் இருக்கு”
விவசாயத்தை அழிக்கிறான்.
விலை நிலங்களை அழிக்கிறான்.
“வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க சொன்னா பூச்செடிகளை வளர்த்துட்டு திரிகிறங்கே” பாவம் யானைகள் என்ன பண்ணும்
ரோட்டுக்கு தான் வரும்.
நாங்கள் இரு மலைகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்தோம். உயரத்திலிருந்து விழும் பச்சை நிற ங்களின் மனம் எங்கள் நாசிகளில் நிறைந்தது.
அங்கிருந்து விழும் அவற்றின் தன்மையை உணர முடிந்தது.
நாங்கள் மேல் நோக்கி சென்றோம்.
கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தாண்டி விட்டோம்.
அடர்ந்த மரங்களுக்கு இடையில் மிகப்பெரிய உருவம் தெரிந்தது. தனது செல்போனை எடுத்து படம்பிடித்தான் பொன்னையா.
வெறும் நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கின செல்போனில் படம் தெளிவாக இல்லை.
பொன்னையா நெருங்கி சென்றான். மரக்கிளைகளை ஒடித்து தனது தும்பிக்கையால் வாயினில் நுழைத்து கொண்டிருந்தது.
இவ்வளவு பெரிய உயிரினத்தை
மனிதன் எவ்வளவு கேவலமான செயல்களில் ஈடுபடுத்திகிறான் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
அதன் கருமையான கருவிழிகள் எங்களை நோக்கி பாய்ந்தன. சுருள் சுருளான தோல்கள். பட்டாம்பூச்சி றெக்கை போல அதன் காதுகள்.
உலகத்தில் உள்ள அனைத்தையும் மறந்து விட்டு யானையவே பார்த்துக் கொண்டிருந்தான். என் இதயம் பேச தொடங்கியது.
கரு மேங்கள் சூழ்ந்தன.
மழை வர மாதிரி இருந்தது.
மழை பெய்யவில்லை.
பொன்னையா பேச தொடங்கினான்.அவனால் பேச முடியவில்லை.அவன்
வாழ்வின் பெரிய ஆனந்தம்.
யானை ..பக்கத்தில் இருக்கின்ற பெரிய மரத்தடியில் நின்று மரக்கிளையை உடைத்துக் கொண்டிருந்தது.
தேக்கடி மலையின் தொடர்ச்சி இந்த மலை தான். மேகமலை வைகையின் பிறப்பிடம்.சுருளி அருவி இந்த மலையில் இருந்து தான் உருவாகிறது.
பிரபு கிழே இருந்து டேய்.. வாடான்னு கூப்பிட்டா ன்.
அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு..
மேலே பார்த்தான் பத்து யானைகள் நின்று கொண்டிருந்தது.
கோம்பை மா.மணிகண்டன்.
தேனி.
செல்:8883157402.
வாக்குமூலம்
செந்நிற ஓடுகளால் வேயப்பட்ட அறையில், சூரியனின் கதிர்கள் பட்டு பழுத்த கம்பியினை மீண்டும் பழுக்க காய்ச்சினால் எப்படி பழுப்பு ஏறுமோ! அதேபோலத் தான் வெப்பம் அறையை பழுக்க காய்ச்சி கொண்டுருக்க புரண்டுபடுத்தான். தூக்கம் வரவில்லை. தனது நிர்வாணத்தை மறைத்துக் கொண்டிருந்த முண்டாப் பணிகளை கழட்டி அறையில் தொங்கவிடப்பட்டிருந்த கம்பியில் தூக்கி எறிந்தான்.சரியாக கம்பியின் மேலே விழுந்தது. நடு முதுகில் ஓடையாக வாய்க்கப் பெற்ற அவனின் வியர்வைத்துளிகள் மலையிலிருந்து ஓடையை நோக்கி பாய்ந்து வரும், வெள்ளத்தைப்போல ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து மூஞ்சியினையும் மூக்கினையும் துடைத்தான். மீண்டும் மீண்டும் வியர்க்க, நாலு இன்ச் சிமெண்ட் கல்லால் கட்டப்பட்ட அறையில் இருந்து சாமி எறும்புகள் உருண்டு வரிசையாக வெளிவந்தது. வந்து இறைவனை தேடிக் கொண்டிருந்தது. பூசப்படாத அந்த அறையில் சுவரின் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை போல அதிகமாக இருக்க, ஓட்டையிலிருந்து, பூரான்களும், வண்டுகளும் ஊர்ந்து சென்றன. இடது பக்கத்தில் இருஜோடி செப்பல்கள் மூன்று ஜோடி ஷூக்களும் கிடந்தன.ஏழு மாதத்திற்கு முன் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள “சசிகலா புட்வேர்ஸ்” கடையில் கடைக்காரரிடம் இருநூற்று ஐம்பது சொல்லி வெறுமனே, கிழிந்து தொங்கி கொண்டிருந்த சட்டை பாக்கெட்டில் இருந்து எரநூறு கொடுத்து வாங்கி இன்றோடு எட்டு மாதம் கடந்து விட்டன. சுவரில் பெரிய கண்ணாடி போல,தமிழ்நாடுஆசிரியர் சங்கத்திலிருந்து வழங்கப்பட்ட காலாண்டர் தொங்கிக்கொண்டிருந்தது. கிழமைகள் முடிய, முடிய தனது பையில் இருந்து மார்க்கரை எடுத்து அடித்து விட்டு காலண்டரை பார்த்துக் கொண்டிருந்தான். அறையில் சிலந்தி பூச்சிகள் தங்கள் இருப்பிடத்தை அழகாக அங்கும், இங்கும் கட்டிக்கொண்டிருந்தது. வலதுபுறத்தில் பெரிய அரிசி மூட்டையும், அதன் பக்கத்தில்,பெரிய கரண்ட் அடுப்பும்இருக்க,அரிசியை எடுத்து வட்டியில் ஊறவைத்தான். தூக்கம் வரவில்லை.அறையின் மேல்புறத்தில்தமிழ்நாவல்களும்,சிறுகதைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இன்றே நாள் படித்து முடித்து விடவேண்டும்ன்னு தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நிலையில், வ.மு.கோமுவின் சகுந்தலா வந்தாள் நாவலை புரட்டினான்.அவனின் வியர்வைத் துளிகள் சொட்டு சொட்டாக புத்தகத்தின் மேல் விழுந்து கொண்டிருந்தது. அறையை விட்டு வெளியே வந்தான்.மணி மூணு.அனைவரும் சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில்,பக்கத்து விட்டு ஓவியா எதிரே இருந்த கல்லில் துணியை “மடார் மடாரொன” அடித்துது வைத்து கொண்டிருந்தாள். “வான் விழிகள் தவழ்ந்து வந்து கெஞ்சும் இடை .இடையில் ஓராயிரம் காவியங்கள் கவிபாடும்” அவளை பின்னால் இருந்து பார்த்தான். மாபிஞ்சுகள் இப்பொழுதுதான் காயாக மாற தொடங்கி விட்டு இருக்கின்றன,கனிகளை பறிப்பவனுக்கு மட்டும்சொந்தம்.அவள் நீலநிற வண்ணத்தில் நைட்டி அணிந்து அவளுக்கு நீலவண்ணமே எடுப்பாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் .கண்ணாடி போட்ட வளையல்களை மேலேஏத்தி விட்டு,ஏத்தி விட்டு துணியைது வைத்துக் கொண்டிருக்க, அந்த வளையல்களின் ஓசை கேட்டு பாம்பு ராணிகளும், கரட்டான்களும் தனது பொந்தியிலிருந்து வெளியே வந்தன. துவைக்கும் கல்லின் பக்கத்தில் வந்து கொண்டிருந்தன. “ஐயோ“ன்னு கதறினாள். அவளது கருவிழிகள் செந்நாயிகளின் கருவிழிகள் போல கூர்மையாக திரண்டன.
ஏன்?
என்னாச்சு! ஓடிவந்தான். கையை காட்டி இங்க பாருங்க என்றாள். ஆலமரம் போல் நிழலை பரப்பிக் கொண்டிருந்த வேப்ப மரத்திலிருந்து குச்சியை உடைத்து அவைகளை விரட்டினான். அவைகள் தப்பி பிழைத்தோம் என்று ஓடின.
உங்களுக்கு லீவா! ஆமா.. “காலையிலேயே துவைக்க வேண்டியதுதானே” இப்ப வந்து துவைக்கிற.. காலையில வீட்ல வேலைஇருந்தது .“அதுதான் வர முடியல ”சரி…சரி.. “செமஸ்டர் எப்ப” அடுத்த மாசம். காலேஜ் உனக்கு லீவா? “இல்ல நான் தான் லீவு போட்டு இருக்கேன். இவனுக்கு ஓவியா மேல ஒரு கண்ணுதான் ”திருப்பூரில் குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி.மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் ஓவியா. இவளுக்கு சரியாகத்தான் பேர்வைத்திருக்கிறான் இவஅப்பன். பேரில் மட்டும் ஓவியா அல்ல! குணத்திலும் ஓவியாதான். கம்மாய்களும் குளங்களும் நிறைந்த செம்மண்ணில் பிறந்து வளர்ந்து ,கடை கோடிகிராமத்தில் படித்து ஆசிரியராகி இன்று வெறுமனே ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த அறையில் தங்கியிருக்கிறான் ஓவியன்.
“ஏப்ரல் மேயிலை பசுமை மேயிலை காஞ்சு போச்சுடா. .ஊரும் புடிக்கல உலகம் புடிக்கல போரு போருடா”ன்னு முணு முணுத்து கொண்டே நாளை வேற “ஸ்பெஷல் கிளாஸ்” அறையில் இருந்த பன்னிரொண்டாவது தமிழ் புத்தகத்தை எடுத்து ஒரு பகுதியினை வாசிக்க ஆரம்பித்தான் .தலைக்கு மேலே ஒரு குண்டு பல்பு மட்டும் அறைக்கு வெளிச்சத்தை பரப்பிக் கொண்டு இருக்க, அவனது உடல் வியர்க்க தொடங்க, துண்டை எடுத்து துடைத்தான். ஆயிரம் ரூபாய்க் குரூம் கிடைத்தால் போதும்னு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அந்த அறையில் காத்தாடி இல்லை. எலிகள் பொந்துகளுக்கு இடையே ஓடி ஓடி வந்து விளையாண்டு கொண்டிருந்தது
.கொசுக்கடியில்இரவு முழுவதும் தூங்கி விட்டுகிழக்கு திசையில்செம்மையான கதிர்களால் சற்று மங்களான வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக் ககதவின் அறையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடத்தில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்து விட்டு சுவற்றில் மாட்டபட்டிருந்த கண்ணாடியை எடுத்தான்.போகின்ற வழியில் குப்பையில் போடுகின்ற கண்ணாடி.நான்கு பக்கங்களும் உடைந்து ஒரு பக்கம் மட்டும் முக்கோண வடிவில் தெரிய, தனது முகத்தைப் பார்த்து வட்ட வடிவிலான பெரிய சீப்பில் தலையை வாரினான். வெளியே வந்து ஓவியா துவைக்கும் கல்லை பார்த்தான் அவள்வரவில்லை. ஓவியாவின் அப்பன்ரங்க சாமி திருப்பூர்ல பெரிய மேஸ்திரி. வான் உயர்ந்த கட்டிடத்தில் வேலைசெய்துகொண்டிருந்த போது இடறி விழுந்து காணாமல் போன பிணமாக கண்டெடுத்தார்கள்
.ஓவியாவின் அம்மா ரங்கம்மாள் பக்கத்தில் இருக்கிற கம்பெனியில் கைமடிக்கிற வேலைக்கு சென்று தன்மகளைப் படித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். ரங்கம்மாளுக்கு ஐம்பது நெருங்கிவிட்டது. சுவற்றில் சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடித்தாற் போல தலையில் நரைமுடி .செங்காட்டு மண்ணெடுத்து செய்து வித்தஉதடுகள். மாமரங்கள் நிறைந்திருக்கின்ற மாந்தோப்பில் கல்லாமாங்காயை ஒத்திருக்கின்ற அவ்வளவு அகன்ற மார்பு காம்புகள். வயதை தாண்டினாலும் பார்ப்பவர்கள் ”கிழடின்னு” சொல்லாத அளவில் இருந்தாள் ரங்கம்மாள் .பல்துவக்கும் பிரஷை எடுத்துப் பார்த்தான். ஒருபக்கம் அழுக்குகளால் நிரம்பி இருந்தது. டப்பாவில் எடுத்து கழுவிவிட்டு பல்லைதுலக்கினான்
.கதவுகள் உடைந்திருந்த பாத்ரூமில் குளித்து விட்டு வேகமாக ஆடைகளை மாற்றிக் கொண்டு அறையியை பூட்டி விட்டு கிளம்பினான். மணி எட்டரை நெருங்கிக் கொண்டிருந்தது.பஸ் ஸ்டாப்புக்குச் சென்று கொண்டிருக்கும் போதுதான் இவன் எதிரே முப்பத்திரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன்,கணவன் ஒரு பையினை வைத்து நின்னுகிட்டு இருந்தான் .பார்ப்பதற்கு சோளத் தட்டை எப்படி இருக்குமோ! அதேபோல அவள் உடல்.
இப்பொழுது மூக்குத்தி அவ்வப் போது கண் அடித்து கொண்டிருந்தது. கலையில் காலையிலேயே விரியத் தொடங்குகின்ற மல்லிகை பூவ சூடி இருந்தாள். அவளது மார்புகள் பழனி முருகன் கையில் இருக்கும் வேலினை போன்று கூர்மையாக உடைத்து கம்பீரமாய் நிமிர்ந்து கொண்டு இருந்தது. தூரத்திலிருந்து ஒரு டவுன் பஸ் வந்தது. கூட்டமாய் ஏறினார்கள். வயதான பல்போன கிழவன் ஆடுகளுக்கு தழைகளை உடைத்து கட்டாமல் அப்படியே பஸ்ல ஏற்றினான். கண்டக்டர் சத்தம் போட யாராது!
“கீழே இறங்கியா” கத்தினார். கிழவன் கீழே இறங்கிவிட்டான் .ஓவியன் பஸ்ஸில் உள்ளே நடுவில் நின்று கொண்டிருக்க, பக்கத்து சீட்டில் கல்லூரி படிக்கும் ஒருத்தி தனது செல்போனில் வாட்ஸ் அப்பில்
“ஹாய்டா….
சாப்டியா”
தனது காதலனுக்கு கடலை போட்டுக் கொண்டிருந்தாள் .ஓவியன் இறங்கும் இடம் வரும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மணி “எட்டு” வேகமாக நடந்துகொண்டிருந்தான் சரியாக எட்டு நாப்பத்தி அஞ்சுக்கு பள்ளி வளாகம் வந்துவிட்டான் .ஆபீஸ் ரூம் சென்று “அட்டனன்ஸ்” நோட்டை எடுத்து கையெழுத்து.மறு முனையில் பிரின்ஸ் பால்சார்.
“குட் மார்னிங்” சார்..
ஐயா.
.வாங்க
“குட்மார்னிங்
”பெரிய விலாசமான டேபிள் மேல் அழகான கண்ணாடிகள் ,இடது புறத்தில் விலைஉயர்ந்த கம்ப்யூட்டர். அதற்குப் பக்கத்தில் விவேகானந்தர் போட்டோ. கிளாஸ் இருக்கா!
சார்..
ஆமாங்க..
சார்..
டூவத் இருக்கு..
அடிக்கிற வெயிலுக்கு “ஒரு மணிவரை ”கிளாஸ் வச்சா பரவால்ல சரிதானா.. ரொம்ப வெயில் சார்.
“நிக்க முடியல “சார்.
நீங்க மேல போயி எல்லா டீச்சர்களையும் கீழ வர சொல்லுங்க.. சார் ஓவியன் மாடிப்படி ஏறி சென்றான் .“வெளியே கிடந்த டேபிளில் ரம்யா டீச்சர் உக்காந்து எழுதிக் கொண்டிருந்தாங்க ”பக்கத்துல போயி“ வணக்கம்” என்றான்.
வணக்கம்சார்..
பிரின்ஸ்பல் சார் எல்லாத்தையும் கீழ கூப்பிடுறாரு
வாங்க. அனைவரும் பிரின்ஸ்பால் அறைக்கு செல்ல.. வந்துட்டாங்களா!
“வந்துட்டாங்க“ சார் .என்றான் ஓவியன். மொத்தம் இருபது பேரா.. ஓவியன் சார்..
உங்களுக்கு பதில் செல்வி டீச்சர் கிளாஸுக்கு போகட்டும் நீங்க என் கூட வந்துருங்க ..கிளாஸ் இருக்கிறவங்க மட்டும் கிளாஸ் எடுக்குறீங்க.
.மத்தவங்க பத்து மணிக்கு ஸ்கூல் பஸ் வரும் நோட்டீஸ் எடுத்துக்கிட்டு “கேன்வாஸ்” போகணும்“ யார் யாருக்கு என்ன டூட்டின்னு நோட்ல எழுதி கையெழுத்து போட்டு போங்க”
10 மணிக்கு கொடிக் கம்பம் பக்கத்துல வந்துரும் வண்டி. சரியா.. பெயரு எழுதி இருக்கவங்க எல்லாம் கண்டிப்பா “கேன்வாஸ்”வந்தாக வேணும் .அனைவருக்கும் ஒரே சட்டம்தான் மாத்த எல்லாம் முடியாது.
அப்புறம் “சிவியரா ஆக்சன்” எடுக்க வேண்டியதா இருக்கும். கடுமையான எச்சரிப்புடன் சொல்லிவிட்டார் .ஒரு நோட்டில் A,B,C,D குரூப் பிரித்து ஒவ்வொரு குரூப்புக்கும் அஞ்சு அஞ்சு பேர் பிரித்தாயிற்று.
.ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் கொடுத்தாச்சு. சரியாக.. பத்து மணிக்கு கோயிலுக்கு பெயிண்ட் அடித்தாற் போல மஞ்ச கலர்ஸ் கூல் பஸ் வந்து நின்றது. அனைத்து ஆசிரியர்களும் ஏறினார்கள். பஸ்க்குள்ள வெக்கை
.“ஒருகாத்து கூட வீசல”
வெயிலுக்கு இதமாக அனைவருக்கும் தலைக்கு ஒருதொப்பி கொடுக்கப்பட்டது.
பஸ் பக்கத்தின் ஒரு ஏரியாவை நோக்கி நின்றது. இந்த ஊர் பெயர் “கொடுவாய்.
தெரியாதவங்க தெரிந்து கொள்ளுங்கள். இந்த பக்கம் ஒரு வீதி போகுது. எதிரே வலது பக்கம் ஒரு வீதி போகுது இறங்குங்க. எப்படியும் அறுபது பேராவது பிடித்து விடவேணும். பாத்துக்குங்க சரியா.” புன் முறுவலுடன் பிரின்சிபல் சொல்லிவிட்டார்.
ஓவியன், தாமரைச்செல்வி, முத்துச்செல்வி மூணு பேரும் இடது பக்க வீதியில் சென்றார்கள். ஒருவீதியும் உயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், சில ஓட்டு வீடுகள், காம்பவுண்டு வீடுகள், சில வீடுகள் கேட் பூட்டப்பட்டிருந்தது. பூட்டப்பட்ட வீட்டின் முன்னால் அனைத்து டீச்சர்களும் அம்மா…. சார்..
பிச்சை எடுப்பதை போல கூவிக் கொண்டிருந்தார்கள்.
அழகான ஒருபெண் வெளியேவந்தாள்.
“வணக்கம்”மேடம் நாங்க இறைவி ஸ்கூல்”
“யாரும் சின்ன குழந்தைகள் இருக்காங்களா”! ஸ்கூல்ல சேக்குற மாதிரி..
யாரும் இல்லங்க..
இருந்தா சொல்லுங்க. தனது கையில் இருந்த நோட்டீசை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தான் ஓவியம். கொஞ்ச நேரம் நிழலை பார்த்து நின்னுகிட்டு போலாம் சார்.
முத்து செல்வி டீச்சர் சொல்ல ..ஆலமரம் போல் நிழலை பரப்பிக் கொண்டிருந்த புங்க மரத்து அடியில் நிழலில்அமர்ந்தார்கள்.சார்..
“எனக்கு வெயிலு சேராது” சார்
“பிரின்ஸ்பல்” சார்கிட்ட கேன்வாஸ் வரலைன்னுதான் சொன்னேன். கண்டிப்பா வந்தேதான் ஆகணும் அப்படின்னு சொல்லிட்டாரு சார். என்ன “கொடுமை” சார் உடம்பெல்லாம் எறியுது.. சார்.. வெயில்ல நடந்தா தலைவலி வேற வருது சார்..ஓவியன் டீச்சரிடம் பேசாமல் லீவு போட்டு வீட்டிலே இருக்க வேண்டிய டீச்சர்.
ஸ்பெஷல் கிளாஸ் வேற இருக்கு இல்லசார். அதனால தான் சார் வரேன். நம்பள நம்பி தான் பிள்ளைகளும் ஸ்கூலுக்கு வர்றாங்க.” பத்து நிமிடமா கழித்து எழுந்து சென்றார்கள். நோட்டீசில் இறைவி வெற்றி மேல்நிலைப் பள்ளிபெயர் குண்டான எழுத்தில் அழகாக இருந்தது. ஸ்கூல் முன்னால் மாணவியல் புத்தகத்தை படித்து பார்த்தவாறு புகைப்படங்கள். சிறுவர்கள் சுத்தின மாதிரி படங்கள், கபாடி போட்டிக்கு மிகப் பெரிய கோப்பை வென்ற மாதிரியும் நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டு இருந்தன .பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க போதுமானதாக இருந்தது.
பூட்டி இருக்கும் வீட்டில் முன்னால் நோட்டீசுகளை போட்டு விட்டு சென்றார்கள்.
ஒரு மரத்தடியில் அஞ்சு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் .குழந்தைகளை நோக்கி செல்ல..
“டேய்..எல்லாம் எந்த ஸ்கூல் படிக்கிறீங்க !என்ன படிக்கிறீங்க! தாமரைசெல்வி டீச்சர் கேக்க.. குழந்தைகள் சிரித்துக் கொண்டே பதிலை..
“புலோரி மேரிஸ் ஸ்கூல்”
ஆறாவது படிக்கிறோம். “வேற ஸ்கூல் சேஞ்ச் பண்ற மாதிரி இருக்கா”
இல்ல”
உங்க அம்மா எல்லாம் எங்க இருக்கிறாங்க!
அந்த குழந்தை வீட்டை நோக்கி கையை காட்டியது.
வணக்கம்மேடம்.
நாங்க
“இறைவி ஸ்கூல்ல இருந்து வராம்.” தாமரைசெல்வி டீச்சர் பேசதொடங்கினாள்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் ,யோகா, சிலம்பம் ,போர்ட்ஸ் எல்லாத்துக்கும் இம்பார்ட்டெண்ட் .எங்க ஸ்கூல்ல சேர்த்துவிட்டீங்கன்னா! உங்க குழந்தை நல்லா இங்கிலீஷ் பேசும். நல்லா தெளிவா உச்சரிப்புயுடன் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொடுக்கிறோம்.
உங்க மகன் “இங்கிலீஷில்பேசினால் உங்களுக்கு சந்தோசம்தானே ”மெட்ரிக், சி.பி.எஸ்.சி எல்லாம் இருக்கு.
பீஸ் எவ்வளவுங்க?
குழந்தையின் பெற்றோர் கேட்க.. “இருவாத்தி மூவாயிரத்து ஐநூறுங்க” மொத்தமா கட்ட தேவையில்லை மூணு தவணையாக கட்டிக் கொள்ளலாம். ஸ்கூல் வேண் வேற இருக்குது. வீட்டு பக்கத்திலேயே வந்து இறக்கிவிட்டுபோய்விடும். உங்க மகன் இங்கிலீஷ் நல்லா பேசுறதுக்கு நாங்க கேரண்டி சரிங்களா?
நாங்க வாக்கு கொடுக்கிறோம் நல்லா இங்கிலீஷ் பேசுவான். ஒரு தடவை ஸ்கூல்ல வந்து நேரில் பாருங்க உங்களுக்கே பிடித்து போய்விடும்.
ஓவியன் நோட்டீசை அந்தப் பெண்ணிடம் கொடுத்தான் இதுல ஆபீஸ் நம்பர் இருக்கு கால் பண்ணுங்க.
“எங்களுக்கு தெரியாத அவங்க சொல்லுவாங்க ‘’
பேர மட்டும் சொல்லுங்க
”நாங்க எழுதுகிறோம்.
“எல்லையப்பன்”
அப்பா
பேருங்க.
“கருப்புசாமி”
போன் நம்பர்?
……
ஏரியா பேரு என்ன பேரு?
கே.கே நகர் .கொடுவாய்
“ஸ்கூல்ல இருந்து கால் பண்ணுவாங்க பேசுங்க”
ஆகட்டுங்க…
நாங்க வராம். உச்சிப் பொழுது மணி பன்னிரெண்டு. ஸ்கூல் வேன் வந்து நின்றது பிரின்ஸ்பல் வந்தார்.
என்னப்பா எவ்வளவு ஆச்சு?
நூறா?
எழுவதா?
பத்துன்னு… தாமரைச்செல்வி டீச்சர் சொல்ல..
பத்தா?
இவ்வளவுதானா?
எப்படியும் ஐம்பத தொட்டுறனும்..
“எல்லோரும் வாங்க” மரத்தடியில் மோர் குடுக்குறாங்க ,நல்லா குடித்துவிட்டு கேன்வாஸ் பண்ணுங்க.. மரத்தடியில் “அகில இந்திய கட்சியின்னு ”பெயர் குறித்த பலகை. அதற்கு கீழே பெரிய டம்மில் மோர். வயதான கிழவன் கலக்கி இருந்தார் .கிளாசில் அனைவருக்கும் ஊற்றிகொடுத்தார்
எந்த ஸ்கூல்மா? இறைவி ஸ்கூல்ங்கய்யா” குடித்துவிட்டு அனைவரும் வேனில் ஏறினார்கள் .தாமரைசெல்வி டீச்சரை பார்த்து பிரின்சிபல் இந்த ஊரு
“கொடு-வாய்” பேசுற வாயிலதான் இருக்கு அட்மிஷன். அதுக்குத்தான் இருக்கு சரிங்களா? அடுத்த வீதி வந்து விட்டது எல்லாரும் இறங்குங்க…
தூரத்திலிருந்து ஒருவர் டீச்சர்கள் வருவதையே பார்த்துக்கொண்டிருந்தார்.
சார்.
ஸ்கூல்ல இருந்துவராம். “சின்ன குழந்தை யாரு இருக்காங்களா”
பீஸ் எவ்வளவுங்க?
தாமரைசெல்வி
நோட்டீசை அவரிடம் கொடுத்து தெளிவாக பேசினாள். நீங்க சார்.. வீட்டுக்காரரை பார்த்து கேட்டாள். நான்அரசு பள்ளியில வேலை பார்க்கிறேன்.
“நாங்களும் கேன்வாஸ் போகணும்
“ஸ்டென்த் இல்லை. அடுத்து வாரத்தில் இருந்து போலாம்னு முடிவு பண்ணிவச்சிருக்கோம்
ஏங்க சார்.
“கவர்மெண்ட்ஸ் கூல்லையே உங்க குழந்தைகளை படிக்க வைக்கலாமே” நீங்கசொல்றது சரிதான்..
“எங்களுக்கு மேல இருக்கிற அதிகாரிகள் கேட்கணுமே”
பேர் மட்டும் சொல்லுங்க.. நாங்க எழுதிக்கிறோம் ஒரு வேற்பிக்கேஷனுக்காக.. தாமரைச்செல்வி டைரியில் பேரை எழுதினாள்.
மணிஒன்று..
எல்லாரும் முடித்து விட்டு மெயின் ரோட்டில் வந்து நில்லுங்க .இரண்டு மூன்று வீதி சுற்றி விட்டு மீண்டும் வந்தார்கள். களைப்பா இருக்கிறாங்க.. நேரா அந்த மெயின் ரோட்டில் தண்ணிபழம் போட்டு இருந்தாங்க இல்ல அங்க விடுங்க வண்டிய டிரைவரிடம் சொன்னார்.
வெயிலுக்கு நல்லா குளிர்ச்சியா இருக்கும்.
“நல்லா சாப்பிடுங்க’
கேன்வாஸ் நாளைக்கு போகணும்இல்ல
அதனால நல்லா சாப்பிடுங்க”
வேன் பள்ளி நோக்கி வந்தது. அடுத்த நாள் காலை பத்து மணிக்கு பிரின்சிபால் அறையில் அமர்ந்திருந்தார்.
நாப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஆபீஸ் ரூமுக்கு வந்தாள். ஆபீஸில் கோண உச்சி எடுத்து தலை சீவி இருந்த ரம்யா நிமிர்ந்தாள்.
வாங்க..
“சொல்லுங்க”
என்றாள்
ரம்யா.
டி.சி.வாங்க..
ஏங்க..
வேற
ஸ்கூல்ல
சேர்க்கபோறோம்.
அப்படியா?
ஆமாங்க..
பிரின்ஸ்பல் சாரா பாருங்க..
வெளியில வெயிட் பண்ணுங்க சார் வந்துருவாரு.
“ஒரு மணிநேரம் ஆச்சு அந்த பெண் வெளியே உட்கார்ந்து இருந்தாள். ”யாரும்எதுவும் கண்டு கொள்ளவே இல்லை.
ரம்யா அந்தப் பெண்ணிடம் வந்து உள்ள போங்க சார் வந்துட்டாரு என்றாள்..
வாங்கம்மா..
“உட்காருங்க”
…தம்பி
நல்லபடியாக டென்த் முடிச்சுட்டான்.
“டி.சி ”வேணும் சார்.
எங்கம்மா..
இங்கேயே போட்டுக்கலாம்ல
“லெவன்த்”
பக்கத்துல சின்னப்பையன் யாருங்க?
“என்பையன் தான்” சார்.. ரெண்டு பேருக்கும் சேர்த்து இங்கே அட்மிஷன் போட்டுக் கொள்ளுங்கள் அம்மா.
இல்ல சார்..
பெரியவன் டென்த் முடிச்சுட்டான். தமிழ்ல அவன் பெயரை எழுதத்தெரியாது..
சார்..
“நான் வட்டிக்கு முப்பது லட்சம் வாங்கி பீஸ்கட்டினேன்.
“ஒரு பிரயோஜனமும் இல்லைங்க”..
கண்ணீர் அவளை அறியாமலேயே வந்தது.
“தாரை தாரையாக”
அதாம்மா பாஸ் பண்ணிட்டான் இல்ல.
“ஜஸ்ட் பாஸ்” எடுத்து..
பாஸ் பண்ணி என்னதான் சார்செய்ய..“
ஒரு பேங்க்ல போயி ஒரு ஃபாம் பில்லப் பண்றது ஒன்னும் தெரியாம படிச்சு என்ன பண்ண போறான்” சொல்லுங்க சார்.
“இங்க அட்மிஷன் போடும் போது உங்க பையன நல்லமார்க் எடுக்க வைக்கிறதும் இங்கிலீஷ்ல பேச படிக்க வைக்கிறது எங்களோட கடமைன்னு இங்க இருக்குற டீச்சர் எல்லாம் வாக்கு கொடுத்தாங்க” ஒரு எழவும், மண்ணாங்கட்டியும் அவன் மண்டையில ஒன்னும் இல்ல…
“தமிழ் கூட விடுங்க”
சார்.. இங்கிலீஷ் மீடியம் தான் படிச்சான்.
இங்கிலீஷ் கூட வாசிக்க தெரியல. சார்.. அவள் கண்ணில் இருந்து இன்னும் கண்ணீர் திவலைகள் டேபிள் மீது சிதறின.
இங்கே பாருங்கம்மா..
இங்கு இருக்கிற டீச்சர் எல்லாம் நல்லாத்தான் சொல்லி தராங்க அவங்க மேலயும் குற்றம்சொல்லமுடியாது.
உங்க பையன் மேல குற்றம் சொல்வதா?
வண்டியிலே இருக்கிற நாலு டயர்களை கழட்டி மாட்டுனா சரியா மாட்டிருவான்
ஆனா என் படிப்புல மேல வரதுக்கு இன்னும் கொஞ்சம் லேட் ஆகுங்க.. பிரின்ஸ்பல் அம்மாவிடம் சொல்ல.. சரிங்க
சார் விடுங்க. “டி.சி.மட்டும் கொடுங்க “இவ்வளவு பணம் செலவழித்து படிக்க வைப்பதற்கு கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு போறான்”
சரிங்கமா..
“வெளியே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”
தனது டேபிள் இருக்கும் டெலிபோனில் இருந்து ஆபீஸ் ரூமுக்கு பிரின்ஸ்பல் கால்செய்தார்
.சொல்லுங்க …சார்ன்னு இழுத்தாள்…ரம்யா ப்ளீஸ் முழுசா கட்டியாச்சா!
வேற எதுவும் தொகை இருக்குதான்னு பார்த்துட்டு டி.சி.கொடுக்கணும் புரிஞ்சதுங்களா!
சரிங்க சார்.. இந்த அம்மா எழுந்து உள்ளே வர..
“வெயிட் பண்ணுங்கம்மா“
என்ன அவசரம் அதுக்குள்ள! ரம்யா சொன்னாள்.
தலையை கவிழ்ந்து படி ரங்கம்மாளும்,அவளுடன் வந்த தனது மகனை மடியில் வைத்தவறே.. ரொம்ப நேரம் வரை உட்கார்ந்து இருந்தாள்.
ஓவியன் மாடியில் இருந்து இருவரையும் பார்த்துக் கொண்டேஇருந்தான்.
–கோம்பை மா.மணிகண்டன்.
சிவரஞ்சனியும் அவனை காதலித்தாள்.
தீபாவளி அன்று எல்லோரும் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் .பட்டாசு வெடித்து, புதுத் துணிகள் உடுத்தி சந்தோசமாக இருப்பார்கள். ஒவ்வொரு வீடுகளில் கறி எடுத்து சமைத்து குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியுடன் இருப்பபார்கள்.தீபாவளி அன்று சிவமணி என்று விடியற்காலையில் அஞ்சு மணிக்கு எல்லாம் மூணாறு பேருந்து ஏறி விட்டான். சிவமணி எதற்காக ஏறினான்,என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இரவு முழுவதும் சிவமணி தூங்கவில்லை. ஏனென்றால் சிவரஞ்சனிடம் இருந்து அப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஒரே முடிவாகிவிட்டது. அவளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று சிவரஞ்சனி என்ன சொல்லி இருப்பாள். சிவமணி மூணாறு சென்றால் தான் தெரியும். விடியற்காலை மூணு மணிக்கு எல்லாம் எழுந்து குளித்துவிட்டு தனக்கு பிடித்தமான சட்டைக்கு தகுந்தாற் போல் பேண்ட் அணிந்து கொண்டு பல்லடம் பேருந்து நிலையத்தில் உடுமலை பேருந்துக்காக காத்திருந்தான்.மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. பேருந்து நிலையத்தின் மஞ்சள் நிற விளக்கின் ஒளி பிரகாசமாய் பேருந்தை பிரவேசித்துக் கொண்டிருக்கிறது.கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் பத்து நிமிடங்களுக்கு ஒவ்வொரு முறை வந்து கொண்டிருக்கின்றன. பொள்ளாச்சி பேருந்தும் அடிக்கடி வந்து போகின்றன. ஆனால் உடுமலை பேருந்து வரவே இல்லை. உடுமலை சென்றால் தான் மூணாறு செல்ல அங்கிருந்து பேருந்து ஏற முடியும். சிவமணி தன் கையில் கட்டி இருக்கும் கருப்பு நிற கை கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொள்கிறான். தனது பாக்கெட்டில் இருக்கும் செல்போனை எடுத்து வாட்ஸ் அப் பக்கம் சென்று நொண்டி கொண்டு நின்று கொண்டிருக்கிறான். சரியாக நாலு மணிக்கு உடுமலை பேருந்து வரும் என்று ஆட்டோக்காரர்கள் சொல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏறி பின்செட்டில் அமர்ந்து கொண்டான்.. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிவரஞ்சினியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியதுதானே ஏன் ! இவ்வளவு நாள் கழித்து இந்த பதிலை சொல்கிறாள் என்று சிவமணி நினைத்துக் கொண்டே வந்தான். கண்டக்டரிடம் உடுமலை செல்ல எவ்வளவு நேரமாகும் என்று கேட்க ஒரு மணி நேரத்தில் சென்று விடும் என்று அவர் சொன்னார். பொழுது விடியும் சமயம். அஞ்சு முப்பதுக்கு மணிக்கு சிவமணி உடுமலை வந்து விட்டான். அவளை பார்த்தே தீர வேண்டும் என்று ஒரே முடிவு தான். சிவமணிக்கு முப்பது வயது . இது நாள் வரை மூணாறு சென்றதில்லை முதன்முதலாக சிவரஞ்சனிக்காக மூணாறு செல்கிறான். பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டான். பத்து நிமிடத்திற்கு பின் பேருந்து குறிஞ்சிக்கோட்டையை தாண்டி சென்று கொண்டிருக்க உயரமான மலைகள் தெரிய ஆரம்பித்தன….. மூணாறு சென்று அவள் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என்ற ஒரே யோசனை இன்னைக்கு வேற ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ன செய்வது. ஏது! செய்வது என்ற ஒரே யோசனையில் அமைதியாக யோசித்தான். யோசித்துக் கொண்டே இருந்தான். ஏற்கனவே அவள் அனுப்பிய முகவரி அவனிடம் பத்திரமாக இருந்தது, அது அவன் தம்பி வேலை செய்யும் கம்பெனி முகவரி. எது எப்படிவேண்டுமானலும் இருக்கட்டும். மூணாறு சென்று பார்த்துக் கொள்ளலாம் ,இன்று எப்படியாவது அவளை பார்த்தே தீர வேண்டும். என்ற ஒரே நம்பிக்கை தான்..உயரமான மலைகள்.மலைகளை சூழ்ந்து
உயரமான நெடிய மரங்கள்.. பேருந்து சின்னாறு தாண்டி சென்று கொண்டிருக்க…சிவரஞ்சனி கிட்டத்தட்ட பத்து மாதங்களாக சிவமணியுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் முன்பு அவனை வர சொல்லி பார்த்து விட்டு தான் செல்வாள். மூன்று மாதங்களாக விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் முன் அவள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஒதுக்கி கொண்டே வந்தாள்.சிவரஞ்சனி. கேரளாவில் விக்டோரியா கல்லூரியில் முதுகலைத் தமிழ் இரண்டமாண்டு படித்து வருகிறாள்.
விடுமுறைக்கு வரும் போதெல்லாம் இருவரும்அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். பொள்ளாச்சியில் அவளுக்காக காத்திருப்பான் சிவமணி. ஒரு நாள் அப்படி காத்திருக்கும் பொழுது அவள் பேருந்தை விட்டு இறங்கியவுடன் நேராக ஜவுளி கடைக்கு சென்று அவளுக்கு அழகிய ,அவளுக்கு பிடித்த நேரத்தில் சேலை எடுத்துக் கொடுத்தான். மறுநாளே அந்த சேலையை கட்டி சிவமணிக்கு போட்டோ அனுப்பினாள். போட்டோவை பார்த்து அழகா இருக்க ஐ லவ் யூ என்றான்.
சிவரஞ்சினியும் பதிலுக்கு என்ற பதிலை வாட்ஸ் அப்பில் அனுப்பினாள்.
மலைகளுக்கிடையே பேருந்து சென்று கொண்டே இருக்கிறது. சிவமணிக்கு மூணாறு போய் எப்படி அவளை கண்டுபிடிப்பது என்ற ஒரே ஓசனையில் பேருந்தில் அமர்ந்திருந்தான்.
அவளிடம் போய் என்ன சொல்வது! எப்படி பார்ப்பது !அவளை வீட்டில் பார்த்ததுமே எப்படி பேசுவது !என்ன பேசுவது !அவள் வீட்டில் அனைவருமே இருப்பார்கள். என்ற பயம் வேற சிவமணிக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. என்ன ஆனாலும் சரி அவளை பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தான் பயணித்துக் கொண்டிருக்கிறான் சிவமணி.சிவமணியிடம் சிவரஞ்சனி அவருடைய பழைய வாழ்க்கையின் கதைகளை சொல்லியும் இருக்கிறாள். இருந்தாலும் பரவாயில்லை நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று மனப்பூர்வமாக உறுதியளித்தான் சிவமணி.
நாலு பக்கமும் உயர்ந்த மலைகளுக்கு இடையே பேருந்து நின்றது. பக்கத்தில் இருந்தவரிடம் இதுதான் மூணாற என்று கேட்டான். பதிலுக்கு அவர் ஆமா இதுதான் என்றார். பேருந்தை விட்டு இறங்கி சுற்றிலும் முற்றிலும் பார்த்தான். இவள் அனுப்பிய முகவரியை செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தான். நேராக ஆட்டோக்காரர்களிடம் சென்று முகவரியை காண்பித்து இது எங்க இருக்கு என்று கேட்டான் சிவமணி.
ஆட்டோக்காரர் வயது சற்று குறைந்தவர் அதனால் முகவரி சரியாக தெரியவில்லை பக்கத்தில் இருந்த ஆட்டோக்காரருடன் கேட்க அவர் அவனுக்கு புரியிற மாதிரி பதிலும் சொன்னார். சாலை ஓரத்தில் கார்கள் தென் பட்டன அவை சுற்றுலா பயணிகளுக்கான வாகனம் என்பது தூரத்தில் இருந்து பார்க்கும் போதே சிவமணிக்கு தெரிந்தது. ஆட்டோக்காரரிடம் எவ்வளவு என்று கேட்டான் சிவமணி. இருபது ரூபாய் பதிலை சொல்ல ஆட்டோக்காரர் சரி என்றான் சிவமணி. ஏறுங்கனே என்றான் ஆட்டோக்காரர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான் .அங்கு ஒரு டீ டெலிவிஷன் இருக்குது அங்க வந்து பெரும்பாலும் ஊனமுற்றவர்கள் தான் வேலை செய்றாங்க அவங்க தங்கறதுக்கு அங்கே பக்கத்துல இடம் இல்ல வேறொரு பக்கத்தில் இடம் இருக்குது சொல்லி கொண்டு வந்தான் ஆட்டோகாரன். சிவமணிக்கு ஒண்ணுமே புரியவில்லை! சரி என்ன ஆனாலும் போங்க பார்க்கலாம் என்று ஒரு முடிவு தான் இருந்தான்.
அண்ணே இன்னொன்னு டி டெலிவிஷன் இருக்குது. எங்க போலாம்னு நீங்க சொல்ற இடம்அதுவாகதான் இருக்கும் என்று சொன்னான் ஆட்டோக்காரன்.
ஆட்டோவை திருப்பிஅந்த இடத்திற்கு ஓட்டினான் ஆட்டோக்காரன்.
அண்ணே நீங்க தமிழ்நாடா என்றான் ஆட்டோக்காரன்.ஆமா என்றான் சிவமணி.
எந்த ஊரு அண்ணே..
நான் மதுரப்பா என்றான் சிவமணி.
ஆட்டோ சென்று கொண்டே இருந்தது டீ டெலிவிஷன் கம்பெனியில் இறங்கி வாட்ச்மேனிடம் கேட்டுப் பார்க்கலாம் அண்ணே என்று ஆட்டோவைவிட்டு இருவரும் இறங்கினார்கள். சிவமணி நேராக வாட்ச்மேனிடம் முகவரியை காண்பித்தான்.
இது பிரகாஷ் வீடு தானே இங்கே தான் அவர் சேலரி அக்கவுண்ட்ல வேலை பாக்குறாரு அந்த தெரியுது பாருங்க மேல மல அதுல இருந்து இரண்டாவது வீடு.
வேணுமுன்னா ஆபீஸ்ல அவரு போன் நம்பர் கேட்டு வாங்கிக்கோங்க என்று சொன்னார் வாட்ச்மேன். சிவமணி வேண்டாம் சார் நான் நேர்ல போய் பாத்துக்குறேன் என்றான்.
சிவமணி செல்போனில் படம் பிடித்து உயர்ந்த மலைகள் சிவரஞ்சனிக்கு அனுப்பினான் . அவள் வாட்ஸ் அப்பை பார்த்துவிட்டு my husband come in my come சிவமணிக்கு அனுப்பினாள். சிவரஞ்சனிடம் இருந்து இப்படி ஒரு பதிலை சிவமணி எதிர்பார்க்கவே இல்லை. ஆட்டோ மேல மல பக்கத்தில் போய் நின்றது. இங்கு பிரகாஷ் வீடு என்று கேட்டான் வெளியே இருந்த வீட்டுக்காரரிடம் சிவமணி. ஓ அதுவா வேலை இரண்டாவது வீடு என்று சொன்னார் அந்த வீட்டுக்காரர்.
ஆட்டோக்காரனிடம் இருபது ரூபாய் எடுத்து நீட்டினான் சிவமணி. உன்னைய ரொம்ப தூரம் அண்ணே.. நூறு ரூபா குடுங்க அட்ரஸ் ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சி இருக்கு. என்ன செய்வது என்று தெரியவில்லை .தனது சட்டை பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்து ஆட்டோக்காரனிடம் நீட்டினான்.
பிரகாஷ் என்ற பெயரை சொன்னால் இரண்டு மூன்று பேர் வீட்டுக்காரர்கள் பெயர் அதுவாக இருக்கும் என்று நினைத்தான் சிவமணி. அதனால் சிவரஞ்சனியின் அப்பா பெயரையும் அம்மா பெயரையும் சொன்னவுடன் வீட்டைத் தெளிவாக சொன்னார்கள் பக்கத்தில் இருந்தவர்கள்.கதவைத் தட்டினான் சிவமணி. இரண்டு மூணு முறை தட்டினான் .
தகரம் போட்டோ வீடு .வெளியில் ஒரு பப்பி நாய் ஒன்று ஓடிக்கொண்டு கத்தி கொண்டு இருந்தது. வீடு தாழிட்டு இருந்தது. வாசற்படியில் செருப்பல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வாசலுக்கு முன் ரோஜா செடிகள் ,தேயிலை செடிகள் ,டேலியா பூ செடிகள் வளர்ந்து பூக்களோடு பூவாக நிமிர்ந்து நின்று பசுமையாக இருந்தது.சிவமணி கதவை தட்டி கொண்டே இருந்தான். இருந்து பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் கதவை திறந்தான்.
யாரு? என்று கேட்டான் அந்த இளைஞன்.
சிவரஞ்சனி இருக்காங்களா என்றான் சிவமணி.
அவன் மேலேயும் கீழேயும் சிவமணியை பார்த்தான்.
அதான்பா சிவரஞ்சனி கூட பனிமலரும், கவி மலரும் ரெண்டு பேர் இருக்காங்க..
அவங்க குழந்தைங்க என்றான் சிவமணி.
இல்ல மாதிரி பதிலே சொன்னான் அந்த இளைஞன்.வீட்டிற்கு
உள்ளே போய் திரும்பி வந்தான் இளைஞன்.
சிறிது நேரத்தில் சிவரஞ்சனி வெளியே வந்தாள். வாங்க வாங்க.. என்றால் சிவமணியை பார்த்து
அவளுக்கு பிடித்தமான பிங்க் கலர் நைட்டியுடன் இருந்தாள். காலில் அதே கலரில் நகத்துக்கு நக பாலிஷ் தீட்டு இருந்தாள். தெரிந்துவிட்டு இறங்கி நேராக பேக்கரிக்கு சென்று வாங்கிய ஸ்வீட் டை சிவரஞ்சனியின் மகளான பணிமலரிடம் தீபாவளி நல்வாழ்த்துகள் என்று சொல்லி கொடுத்தான்.
பனி மலரும் வாங்கிக்கொண்டு சிவமணியே பார்த்துக்கொண்டு நின்றாள். வா என்று கூப்பிட்டான் சிவமணி அவள் சிவமணியை பார்த்துக் கொண்டிருந்தாள். சிவரஞ்சனி பயப்படுற கொஞ்சம் என்று சொன்னாள்.
எங்க அக்கா என்றான் சிவமணி.
பனிமலர் பதில் சொல்ல வில்லை.
சிவரஞ்சனி இருக்கா என்றாள்.பனிமலர் அஞ்சாம் வகுப்பும், கவிமலர் ஆறாம் வகுப்பும் மூணாறில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள்.
சிவமணி வீட்டை சுற்றி சுற்றி பார்த்தான். இரண்டு பெட்ரூம் .ஒரு பெரிய கிச்சன் ரூம்.பேசிக்கொண்டு இருக்கும்போது சிவரஞ்சனி அம்மா உள்ளே இருந்து வர..அம்மா இவரு..
ஈரோடுல வேலை பாக்குறாரு பூம்பாறை வரை வந்தாரா அதுதான் பாத்துட்டு போலாம்னு வந்திருக்கிறார் என்று அம்மாவிடம் சிவரஞ்சனி கூற சரி சரி … டீ ஏதும் போட்டு கொடு என்று சொல்லிக் கொண்டு கட்டைப்பை எடுத்துக்கொண்டு வெளியே …நீயும் வந்துரு என்று சொல்லிவிட்டு வேக வேகமாக நடக்க தொடங்கினாள். சிவரஞ்சனி அம்மா.பிரகாஷ் அவரது மனைவியும் இப்பொழுதுதான் எழுந்து வந்திருந்தார்கள்.
இது அண்ணா இது அண்ணனோட மனைவி சிவமணியை பார்த்து சிவரஞ்சனி சொன்னாள்.
பிரகாஷ் சிவமணிக்கு எதிராக உட்கார்ந்தார்.
எந்த கிளாஸ் எடுக்குறீங்க என்று கேட்டார் பிரகாஷ். லெவன்த் ,டூவத் என்றான் சிவமணி.
சிவரஞ்சனி டீயும், தட்டில் பணியாரமும் போட்டுக் கொண்டு வந்தாள்.
கொடுத்துவிட்டு ரூமுக்கு சென்று விட்டாள்.
பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விட்டான் சிவமணி. சரி நான் கிளம்புறேன் என்றான் சிவமணி.
கிளம்பும் முன் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு சரி நான் கிளம்புறேன்.. சொல்லி பணி மலருக்கும், கவி மலருக்கும் பாய் பாய்…என்று கையை காட்டினான். சிவரஞ்சனி சிவமணியே பார்த்துக்கொண்டு நின்றாள்.
தனது ரூமுக்கு சென்று சிவ மணி எடுத்துக் கொடுத்த, சேலகளை எடுத்துப் பார்த்தாள்.
சிவரஞ்சனி அறியாமலே கண்ணீர் துளிகள் சேலையை நனைத்திருந்தன.
— கோம்பை மா.மணிகண்டன்.