Stories that touch hearts

Home  /  SS-24-சிறுகதைப்போட்டி சிறுகதைகள்  /  Chapter 32

CHAPTER 32

மாரிமதி (5 சிறுகதைகள்)

By Sorna Sandhanakumar · September 21, 2026

0

சமூகத்தில் நம்பிக்கை

நேரம் காலை 11:00 மணி

அன்று வியாழக்கிழமை அந்த ஊரில் வார சந்தை நடைபெறும் என்பதனால் அன்று பிச்சைகாரர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
எப்படி ஒரு கடைக்கு ரெகுலர் கஸ்டமர் இருப்பார்களோ அதே போன்று தான் அன்றைய தினம் அந்த பிச்சைக்காரர்கள் அந்த ஊருக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அவர்களுக்காக அனைத்து கடைகளிலும் சில்லறை தனியாக எடுத்து வைப்பது வழக்கம், அப்படி வருபவர்களில் சிலர் இன்முகமும், சிலர் வன்முகமும் கொண்டிருப்பர்.
பிச்சைக்காரர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பிச்சை இடும் கடைக்காரர்களும் இந்த இருமுகத்தினுள் அடங்குவார்கள்….
சில இன்முக கடைக்காரர்கள் இன்முக பிச்சைக்காரர்களிடம் பேசி பழகுவது வழக்கம். அந்த வழக்கம் அவர்களை நல்ல நண்பர்களைப் போலவும் ஆக்கிவிடும் அப்படிப்பட்ட இரண்டு இன்முக நண்பர்களுக்கு இடையேயான இடைப்பட்ட நாள் சந்திப்பு தான் இந்த பதிவு.

அன்று அந்த கடைக்காரன் அருகில் இருக்கும் கடைக்கு செல்லும் வழியில் வாரம் தவறாமல் தனது கடைக்கு வந்து தர்மம் வாங்கி செல்லும் அந்த பிச்சைக்கார பெண்மணியை பார்க்கிறான், பொதுவாகவே அவரிடம் சற்று நகைச்சுவையாக பேசி பழக்கம் இருப்பதனால் அவரிடம் சாதாரணமாக தனது பேச்சை தொடங்கினான் கடைக்காரன்,

”
எக்கா என்ன இன்னைக்கும் இந்த பக்கம் தலையை காட்டுன மாதிரி இருக்கு “

பதிலுக்கு அந்த பிச்சைக்கார பெண்மணியிடம் சிரிப்பு மட்டும்.

”
என்னக்கா சிரிக்கிறீங்க இந்த வாரம் கலெக்ஷன் பத்தலையோ திரும்ப இன்னொரு ரவுண்டு வந்துடலாம்னு வந்துட்டீங்களா என்ன? “

”
ம்ம் ஆமா யா ” சிறு புன்னகையோடு இரத்தின சுருக்கமாக முடித்து கொண்டாள் அந்த பிச்சைக்காரி.

இவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அந்த பிச்சைக்காரியிடம்,
”
சரி கா ” என்று சொல்லி விடை பெற்று கொண்டதை போல் அவனது வேலையை பார்க்க கிளம்பினான் .

நேரம் மெதுவாக கடந்தது மணி இப்போது மதியம் 3:30 ஆகியிருந்தது,

அந்த கடைக்காரன் அந்த பக்கம் மீண்டும் வர பிச்சைக்காரி அங்கேயே அமர்ந்து இருந்தாள், அவளை கடந்து வேகமாக நடந்த கால்கள் அவளை பார்க்கவும் தனது வேகத்தை நிறுத்தி கொண்டது , அவனது கண்கள் பிச்சைக்காரியை நோட்டம் பார்த்தது…. பார்த்ததும் தெரிந்தது அவள் முகத்தில் இருந்த ஏதோ ஒரு துயர் நிறைந்த உணர்வு அதை கண்ட பின் அவளை அப்படியே கடந்து செல்வதில் ஏனோ அவனுக்கு உடன்பாடு இல்லை அதனால் அவளிடம் என்ன ஏது என்று விஷயத்தை கேட்டுவிடலாம் என்ற தீர்க்கமான முடிவோடு அவளின் அருகில் சென்றான்….

”
அக்கா “

” ………………… “

”
எக்கா ” சற்றே குரல் உசந்திருந்தது

”
ம்ம் என்ன தம்பி ” தனது சிந்தனை கலைத்து கேட்டாள் பிச்சைக்காரி

”
என்ன கா ரொம்ப நேரமா இங்கையே உட்கார்ந்து இருக்க முகம் வேற ஒரு மாதிரி இருக்கு? “

”
அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி “

”
எக்கா உன் முகமே சொல்லுது ஏதோ பிரச்சனை இருக்குன்னு ஆனா நீ ஏன் ஒன்னும் இல்லன்னு சொல்லுற “

”
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பா “

அவன் விடுவதாக இல்லை காரணம் அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று அவனது ஆழ்மனம் அடித்து கூறியது. தன்னால் முடிந்த உதவியை அவளுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவளது மனதை தொடும் வண்ணம் அடுத்த கேள்வியை அவளை நோக்கி வீசினான்,

”
அக்கா உனக்கு ஒருவேளை சாப்பாடு போட்டவன் என்கிற முறையில, அந்த உரிமையில கேக்குறேன் நீ என்கிட்ட உண்மையை சொல்லு. “

அவளிடம் மௌனம்.

”
உனக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு நல்லா தெரியுது அதை நீ மறைக்கிறன்னும் தெரியுது,, தயவு செஞ்சு என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லு கா என்னால முடிஞ்ச உதவிய உனக்கு கண்டிப்பா பண்றேன் “

அவனது பேச்சில் அக்கறை மிகுந்து இருந்தது ஆனால் அவளுக்கு தான் அதை முழுமையாக நம்ப முடியவில்லை அதற்கு காரணம் அவளது கடந்த காலமாக கூட இருக்கலாம்.
ஏன் இன்று இவள் இப்படி வந்து அமர்ந்திருக்க காரணமும் இவனைப் போன்று யாராவது ஒருவர் கொடுத்த பொய்யான நம்பிக்கையாக கூட இருக்கலாம், அதன் காரணமாக

அவள் அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவளது அமைதி அவனுக்கு எதையோ உணர்த்தியதை போல் உணர்ந்தான் அதற்கு மேல் அவளிடம் அவன் எதுவும் கேட்கவில்லை பேசவும் இல்லை அமைதியாக அவளிடமிருந்து சிறிது இடைவெளி விட்டு அவனும் அமர்ந்து கொண்டான்….

‘
நீ சொல் என்று நான் வற்புறுத்த போவதில்லை. ஆனால் நீ சொல்லாமல், உன்னிடம் என்ன பிரச்சனை என்று தெரியாமல் இங்கிருந்து நான் நகரமாட்டேன் என்பதை அவளுக்கு குறிப்பால் உணர்த்தும் பொருட்டு அவன் அப்படியாக அவளின் அருகில் அமர்ந்திருந்தான். ‘

நேரம் மெதுவாக கரைந்து கொண்டிருந்தது அவளும் எதுவும் பேசவில்லை அவனும் அப்படியே அமர்ந்து இருந்தான்.

அந்த மௌன நேரம் அவளை, அவனது செயலை பற்றி சற்று சிந்திக்க வைத்தது,

‘
யார் இவன்??
எதுக்காக நம்ம கிட்ட வந்து உட்கார்ந்து நம்ம பிரச்சனையை பத்தி கேட்குறான்??
இவனுக்கு அதை பத்தி என்ன அக்கறை?
நம்ம பிரச்னை பத்தி சொன்னா இவன் என்ன தீர்த்தா வைக்க போறான்??
ஒருவேளை இவன் நல்லவனா இருப்பானா??
அதெப்படி அப்படி இருப்பான் இவனும் மனுஷன் தான, கொஞ்சம் நேரம் பாவம் பாக்குற மனுஷன் ஜென்மம் அடுத்த கொஞ்சம் நேரத்தில தன்னோட சுய நலத்தை பார்த்துட்டு போயிடும் என்று என்னும் போதே அவளது இதழ் ஏளன புன்னகை ஒன்றை உதிர்த்தது.‘

அவளது மனம் அவனை நம்ப மறுத்தது… அதனால் அவன் இருக்கும் திசையை கூட அவள் பார்க்கவில்லை… ஆனாலும் மனித மனம் அத்தனை எளிதில் நம்மை விட்டு விடாதே நமக்கு அருகில் இருப்பவர்கள் நமக்கே தெரியாமல் நம்மை பார்த்தாலும் நமது உள்ளுணர்வு காட்டி கொடுத்து அவன் உன்னை பார்க்கிறான் என்று எச்சரிக்கை செய்து நம்மையும் அவர்களது பக்கம் திருப்பி விடும் அதுபோல நமக்காகத்தான் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான் என்று தெரியும் பொழுது அவன் நம்மளை எந்த கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள அவர்களின் பால் நம் மனம் நம் கண்களை அணிச்சையாகவே திருப்பிவிடும் அப்படித்தான் பிச்சைக்காரியின் கண்களும் கடைக்காரன் பக்கம் திரும்பியது,
அவன் அதே நிலையில் அப்படியே அமர்ந்திருக்க இப்போது கடைக்காரன் மீது அவளுக்கு வெறுப்பு தான் வந்தது அதன் வெளிப்பாடாய் அவளது சிந்தனை,

‘
யாருக்கு என்ன வந்தா இவனுக்கு என்ன?
இவன் வேலைய பாத்துட்டு போக வேண்டியது தானே.
சம்பந்தமில்லாம அடுத்தவங்க பிரச்சனையில மூக்கை நுழைக்க நினைச்சு இப்படி வந்து உக்காந்து நம்மள இங்க இருந்து கிளம்ப வச்சிட்டானே ‘ என்று மனதில் மீண்டும் எண்ணம் கொண்டு அந்த இடத்திலிருந்து நகர ஆரம்பித்தாள் அந்த பிச்சைக்காரி….

‘
தான் இத்தனை கேட்டும் அவளுக்கு அருகில் அமர்ந்தும் கூட என்னிடம் அவள் எதையும் சொல்லவில்லையே அப்படி அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கும்  ‘
அவனது மூளை வேகமாக வேலை செய்தது ஆனால் அந்த வேகத்தால் உபயோகம் தான் இல்லாமல் போனது.

‘
ஒருவேளை இப்படி இருக்குமோ?
இல்லனா அப்படி இருக்குமோ?
இப்படி தான் இருக்கனும். ஒருவேளை இப்படி இல்லனா??? என்று மாற்றி சிந்தனை மட்டும் செய்ய முடிந்ததே தவிர அவளுக்கு இது தான் பிரச்சனை என்ற முடிவுக்கு மட்டும் அவனால் வர முடியவில்லை, காரணம் அவள் இவனிடம் முகத்தை கூட காட்டாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றது தான்.

‘
ச்சே என்னன்னு நம்மளால கண்டுபிடிக்க முடியலையே அந்த அக்காவும் ஒன்னும் சொல்லாம கிளம்பி போயிட்டாளே பாதகத்தி என்று வாய் விட்டு புலம்பிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றான் அந்த கடைக்காரன் வேறு வழி ஏதும் இல்லாமல்.


கடைக்காரன் நல்லவன் தான் ஆனாலும் அவன் கிட்ட தன்னோட பிரச்சனையை சொல்றதுக்கு அந்த பிச்சைக்கார பெண் தயாராக இல்லை அதற்குக் காரணம் இந்த சமுதாயம் அவளுக்கு இழைத்த நம்பிக்கை துரோகமும் அதன் விளைவும் தான்.

இந்த சமுதாயம் எதை நோக்கி போயிட்டு இருக்குன்னு நாம கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நிச்சயமா நமக்கு கண்ணை தான் கட்டும்.
ஏன்னா இந்த சமுதாயத்துல யாரையும் யாரும் நம்பறது போல இல்ல.
நம்பிக்கை என்பது முழுவதும் வற்றிப்போன ஒரு சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இதற்கு காரணம் என்ன என்று யோசித்தால் நிச்சயம் சுயநலம் மட்டுமாகத் தான் இருக்கும்.

ஒருவர் மற்றவரைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் மற்றவர் நலனை பற்றி யோசிக்காமல் தன்னலம் மட்டுமே பெரிது என்று கருதுவதால் தான் நம் சமூகம் இன்று இத்தகைய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் யார் என்று யாரிடமாவது கேள்வியாக கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு மற்றவரை நோக்கி கையை காட்டி விடுவோம்.
அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.
இவர்கள் இப்படி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த சமூகம் அப்படி இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி செயற்கையான சோக முகத்தையும் வர வைத்து கொள்வோம்.

அவர்களையும் இவர்களையும் போலத்தான் நாமும் இருக்கிறோம் என்ற உண்மையை நாம் என்று உணர்கிறோமோ அன்று தான் இந்த சமுதாயத்தின் மீதான பார்வை மாறும். அந்த மாற்றம் தான் சமூகத்தில் இருக்கும் நல்லவர் சிலரை தைரியமாக சுயமாக செயல்பட வைக்கும். அந்த செயல் வளமான நம்பிக்கையான சமுதாயத்தை உருவாக்கும்….

”
அப்போ பொதுநலம் மட்டும் போதுமா தன்னலம் பேண கூடாதா?” என்ற கேள்வி நம் மனதில் எழலாம்,

”
தன்னலம் வேண்டும் தான் அதை நான் இல்லை என்று ஒருபோதும் மறுக்க போவதில்லை ஆனால் தன்னலம் சுயத்தை பேணி காக்க மட்டும் இருக்க வேண்டும் அடுத்தவர் நலத்தை சீர் கெடுக்கும் பொருட்டு இருக்க கூடாது….“

சுயநலத்திற்காக அடுத்தவர் நலத்தை கெடுப்பது எந்த வகையில் நியாயமாகும்?

சுயத்திற்காக அடுத்தவர் நலத்தை கெடுக்காத நிலை வரும் போது சமூகத்தில் நம்பிக்கை என்னும் மலர் மீண்டும் மலரும்.



அன்புடன்,

மாரிமதி

மாரிமதி – தப்புதான்

அவள் பெயர் தமிழரசி,
காதலித்து அந்தக் காதலை பெற்றோர் உற்றோருக்காக மறந்து அவர்கள் காட்டிய மாப்பிள்ளையுடன் தனது மணவாழ்க்கையை ஆரம்பித்தாள்,
அவள் நினைத்ததை விட அவளது மணவாழ்க்கை நன்றாக அமைந்தது தனக்கு வாய்த்த அன்பான கணவரின் காதலில் அவளது முதல் காதலை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்….

மணவாழ்கை நிறைவாக இருக்க கணவன் மனைவி இருவரது காதலுக்கு அடையாளமாய் ஒரு ஆண் மகவயும் பெற்றெடுத்தாள் வாழ்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது ஆனால் இந்த இனிமை எப்போதும் வாழ்வில் நிலையாய் இருப்பது கிடையாதே நிலையற்ற வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி என்பது தானே நியதி அப்படித்தான் தமிழ் அவள் வாழ்விலும் வந்தது…..

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் கணவன் குழந்தையோடு வார இறுதியை கொண்டாட திரையரங்கு சென்று பின் மதிய உணவிற்காக அந்த ஹோட்டல் உள்ளே நுழைந்தாள் அந்த நுழைவு அவளது வாழ்வை மாற்ற போகிறது என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை …..

”
தமிழ் “

”
மாமா “

”
சாப்பிட என்ன வேணும் “

”
நீங்களே எதாவது சொல்லுங்க மாமா “

”
உனக்கு என்ன வேணும் சொல்லு டி “

”
நீங்க என்ன சாப்பிட போறீங்களோ அதையே எனக்கும் சொல்லுங்க மாமா “

”
என்ன தமிழ் நீ “

”
ஏன் மாமா “

”
இன்னைக்கு நீ என்ன சாப்பிட விரும்புறயோ அது தான் மாமாவும் சாப்பிட போறேன் டி அதனால நீயே ஆர்டர் பண்ணு “

”
அச்சோ மாமா எனக்கு என்ன தெரியும் நீங்களே சொல்லுங்க “

”
தமிழ் நீயும் படிச்ச பொண்ணு டி உனக்கும் சில விஷயம் தெரியும் அத எல்லாம் இந்த மாதிரி சமயம் கிடைக்கும் போது தான் நான் தெரிஞ்சுக்க முடியும் அதனால நீயே உனக்கு என்ன புடிக்குதோ அத ஆர்டர் பண்ணு நாம சாப்பிடுவோம் ” என்று அவளின் கணவர் சொல்ல அதற்கு மேல் மறுத்து பேச அவளிடம் வழி இல்லாமல் போனது….

கையில் மெனு கார்டை எடுத்து பார்த்தாள் அதில் ஏராளமான உணவு வகைகளின் பெயர் இருந்தது அதிலும் சில பெயர்கள் என்ன என்று அவளுக்கு புரியவில்லை அது எப்படி இருக்கும் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை அதனால் அவளிடம் ஆர்டர் கொடுப்பதில் ஒரு சிறிய தடுமாற்றம் தெரிந்தது அதை உணர்ந்து கொண்ட தமிழின் கணவர் அவளின் அருகில் நெருங்கி அமர்ந்து அவளுக்கு ஒரு ஒரு உணவின் வகைகளையும் அது எப்படி இருக்கும் என்ற விளக்கத்தையும் கொடுத்தார் அதனால் அவளுக்கு இப்போது ஆர்டர் கொடுப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை உணவினை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டு முடித்த தமிழின் கணவர் குழந்தையை தூக்கி கொண்டு பில் கொடுக்க சென்றார், தமிழ் அப்போது தான் உணவினை உண்டு முடித்து கை கழுவ செல்ல அங்கு கை கழுவும் இடத்தில் நின்ற உருவத்தை பார்த்து திகைப்பு அடைந்தாள், ஏனோ அந்த உருவத்தை கண்டதும் ரத்த ஓட்டம் அதிகமானது, கை கால் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து, உடலில் வியர்வை சுரப்பி தாறுமாறாக வெளியேறியது…...

ஆனால் அவளுக்கு எதிரில் நின்ற உருவம் அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் அவளை கடந்து வெளியே சென்றது…. அந்த உருவம் சென்ற பின்பும் கூட அவள் அதே நிலையில் நின்று இருக்க அவளின் கணவர் வந்து அவளை உளுக்கினான்,

”
தமிழ் “

அதில் திடுக்கிட்டு சுயத்திற்கு வந்தவள் மிரண்ட விழிகளோடு கணவனை பார்க்க,

”
என்ன தமிழ் கை கழுவ வந்த இடத்தில அப்படியே நிக்குற என்ன ஆச்சு “

அவள் பதில் சொல்ல திணறி வாயிலிருந்து வார்த்தையை கொண்டு வர முயற்சி செய்ய, அவளுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணினானோ என்னவோ தெரியவில்லை,

”
கை கழுவிட்டு வா தமிழ் போவோம் ” என்றான் சிரித்து கொண்டே, அப்போதைய நிலைக்கு அவளுக்கு அது நிம்மதியை கொடுத்தாலும் அவளுக்கு அதற்கு மேல் ஏனோ இயல்பாய் இருக்க முடியாமல் போனது. அதனால் அதற்கு மேல் எங்கும் வெளியில் செல்லாமல் தனது கணவரிடம் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்,
மதிய உணவு முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததால் தமிழின் கணவர் வந்ததும் படுக்கை அறைக்குள் நுழைந்து நித்திரையில் ஆழ்ந்தார்.

தமிழின் எண்ணம் முழுவதும் ஹோட்டலில் பார்த்த அந்த உருவத்தின் மீது நிலைத்திருந்தது, ஆம் அது அவளது முன்னாள் காதலன் தான்,

தனது நிலையினை அவனிடம் விளக்கிக் கூறி மனம் ஒத்து அவனிடமிருந்து விலகி வந்து தான் இந்த திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டாள் தமிழ். அவளுக்கு திருமணம் ஆகி ஆண்டு ஐந்து கடந்து விட்டது இதுவரை தனது முன்னாள் காதலனை அவள் கண்டதுமில்லை, அவனை பற்றி நினைத்ததும் இல்லை, அவனைப் பற்றிய நினைவுகள் எதுவும் இல்லாத போதிலும் இந்த எதிர்பாராத நேரத்தில் அவளின் முன்னால் அவன் வந்து நின்றதும் அவனின் தற்போதைய தோற்றமும் அவளை குழப்பம் அடைய செய்திருந்தது….

எப்போதும் தனது தாடியை அழகாய் ட்ரிம் செய்து, மீசையை கச்சிதமாக வைத்திருக்கும் அவன் தனது முகத்தில் சிகை அலங்காரம் என்பதே மறந்து போனது போல் தோற்றம் அளித்தான், அவனது கட்டழகான மேனியும் தனது இயல்பை இழந்து மெலிந்து போயிருந்தது. அவனது இந்த தோற்றம் ஏனோ அவளை வருத்தி கொண்டிருந்தது, அதற்கு காரணமும் இருந்தது,
கடைசியாக அவனிடம் பேசிவிட்டு பிரிந்து வரும் பொழுது அவன் உதிர்த்த வார்த்தைகள்,

”
தமிழ்,
எனக்கு எப்பவும் உன்னோட சந்தோசம் தான் முக்கியம் நான் உன்ன விரும்பினேன்னு சொல்றத விட உன்னோட சந்தோசத்தை தான் அதிகமாக விரும்பினேன் இப்போ இப்படி ஒரு சூழல்ல நீ என்ன விட்டு பிரிஞ்சு போய் இன்னொரு கல்யாணம் பண்ணுனா தான் சந்தோசமா இருப்பேன்னு நீ நினைக்கிறது உனக்கு சந்தோசத்தை கொடுக்கணும்னா அந்த சந்தோஷத்தை உனக்கு கொடுக்குறதுக்கு நான் தயாராக இருக்கேன். இதுக்கு மேல உன்னோட வாழ்க்கையில எந்த சூழலிலும் குறுக்க வந்து நா நிக்க மாட்டேன் அதே போல என் வாழ்க்கையை பத்தின கவலையும் உனக்கு இருக்க வேண்டாம் உன்னோட நினைவுகள் என்னைக்கு என்னை விட்டு போகுதோ அன்னைக்கு தான் எனக்குன்னு தனியா ஒரு வாழ்கையை நா அமைச்சுக்குவேன் நீ எங்க இருந்தாலும் சந்தோசமா இரு ” என்று சொல்லிவிட்டு தமிழின் பதிலை எதிர்பாராமல் அவளிடம் விடை பெற்று சென்றுவிட்டான் அவன்.

அன்று சென்றவன் இன்று தான் அவளின் கண்களில் தென்படுகிறான் அவன் சொன்னது போலவே அவளது வாழ்க்கையை விட்டு விலகி விட்டான்.

ஆனால் அவனது இந்த தோற்றம் தான் அவளது சிந்தையை சிதைத்தது அவனது வாழ்க்கையில் இருந்து தான் விலகி விட்டோமா இல்லையா என்ற சிந்தனையை அவளுக்கு கொடுத்தது...

அவனது அந்த தோற்றத்தை பார்த்ததும் நிச்சயமாக அவனது வாழ்க்கையில் இருந்து தான் விலகி இருக்க சற்றும் வாய்ப்பு இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டாள் அது உண்மையாக கூட இருக்கலாம்….

அதை நினைக்க நினைக்க அவளது மன நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போய்க் கொண்டே இருந்தது இத்தனை காலம் இருந்த மகிழ்ச்சி அவளது மனதை விட்டு விலகியதைப் போன்று உணர்ந்தாள் தன்னால் ஒருவரின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற குற்ற உணர்வை அவளால் தவிர்க்க முடியவில்லை, அந்த உணர்வு மெது மெதுவாக அவளது வாழ்க்கையை நரகமாக்கி கொண்டிருந்தது….

அன்பான கணவனிடமும் ஆசை குழந்தையிடமும் தனது அன்பை செலுத்த முடியாமலும் அவர்களது அன்பை முழுமையாக அனுபவிக்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தாள்….

அப்படியே நாட்கள் நகர நகர அவளது நடைமுறையிலும் மாற்றம் வந்து ஒட்டி கொண்டது இதை எப்படி சமாளிப்பது என்று அறியாமல் அவள் தவித்து கொண்டு நாட்களைக் கடத்த முடியாமல் போக தனது கணவனிடம் தனது நிலையை பற்றிய உண்மையை கூறி விடலாம் என்ற முடிவிற்கு வந்தாள்,

ஆனால் அவளது இன்னொரு மனம்
‘
வேண்டாம் கூறி விடாதே அப்படி நீ கூறினால் அது உன்னோட இந்த மகிழ்ச்சியான வாழ்வை பாதிப்பதாக கூட இருக்கலாம் அதனால தயவு செய்து கூற வேண்டாம் என்று அவளிடம் மல்லுக்கு நின்றது…. அவளது இந்த மன போராட்டம் அவளது உடல் நிலையை வெகுவாக பாதித்தது...

தமிழின் சமீபத்திய நாட்களின் நடவடிக்கையை அவளது கணவன் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தான் ஆனாலும் அவளது மன குழப்பத்தை அவளே தீர்க்கட்டும் நாம் ஏதாவது கேட்க போய் அது அவளை மேலும் பாதிப்படைய செய்து விடக்கூடாது என்று அமைதி காத்தான் ஆனால் அவளது நிலை இன்னும் மோசமாகிக் கொண்டே போனதாலும் அவளது மனதில் இன்னும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை என்பதையும் அவன் உணர்ந்த பின்பு இதற்கு மேல் கேட்காமல் விட்டால் நிச்சயமாக பின் விளைவு மிக மோசமாக இருக்கும் என்பதை தமிழின் கணவர் உணர்ந்து கொண்டார்.
அதனால் இன்று இரவில் அவளிடம் இதைப் பற்றி எப்படியாவது கேட்க வேண்டும் அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தோடு இரவு படுக்கை அறையில் காத்திருந்தான்...

வேலை முடிந்தவுடன் இரவு விரைவாக படுக்கையறைக்கு வந்துவிடும் தமிழ் இப்போது அந்த வழக்கத்தை எல்லாம் மாற்றி இருந்தாள், படுக்கை அறையில் வந்து கணவனுடன் ஊடலும் கூடலுமாக இன்பத்தில் திழைத்தவள் இப்போது மொத்தமாக அதிலிருந்து விலகி இருந்தாள்.

அதையும் தமிழின் கணவர் அவளுக்காக ஏற்று கொண்டார் அவளது எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இத்தனை நாள் எதையும் பெரிது படுத்தாமல் விட்டு விட்டான். தான் அப்படி விட்டதே தவறு என்பதை அவன் உணர்ந்து கொண்டு இப்போது அவளிடம் கேட்க தயாராக இருந்தான், ஆனால் அவள் இன்னும் அறைக்கு வரவில்லை காத்திருந்தான் நேரமும் மெதுமெதுவாக கழிந்து கொண்டே இருந்தது.

நேரம் நள்ளிரவை எட்டியிருந்தது அப்போதும் அவள் அறைக்கு வராததால் அவளை தேடி வெளியே வந்தான் வீட்டின் பின்புறம் நின்று வானத்தை பார்த்து சிலையாக நின்று கொண்டிருந்தாள் தமிழ்…..

அவளை எவ்வளவு அழைத்தும் திரும்பி பார்க்கவில்லை அவளிடம் எந்த அசைவும் இருக்கவில்லை அவளது உணர்வுகள் யாவும் அற்று போயிருந்தது அவளது சுயநினைவும் இப்போது இல்லாமல் போனது…...

தன் ஆசை மனைவியை அப்படி கண்டதும் துடித்துப் போனான் தமிழின் கணவன்…..

”
அய்யோ தப்பு பண்ணிட்டேனே எனக்கு உன் நடவடிக்கையில சின்னதா ஒரு மாற்றம் தெரியவும் உன்கிட்ட வந்து என்னன்னு கேட்டு இருந்தா என்னைக்கு உனக்கு இந்த நிலைமை வந்திருக்காதே அத நான் கேட்காம பெரிய தப்பு பண்ணிட்டேனே என்று கதறி துடித்தான் தமிழின் கணவன்


கதை முற்றும்…...


கணவனோ மனைவியோ தனது துணையிடம் சிறியதாக ஒரு மாற்றம் தெரிந்தாலும் அது என்னவென்று உடனடியாக கேட்டு அவர்களிடம் விளக்கம் பெற்றுக் கொள்வது நல்லது. அப்படி விளக்கம் பெற வேண்டுமென்றால் உனக்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் துணையாக நான் இருக்கேன் நீ எதுக்கும் கலங்க வேண்டாம் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டியது ஒவ்வொரு துணையோட ( கணவன் / மனைவி ) கடமை.


அன்புடன்

மாரிமதி

மாரிமதி – உனக்காக இருப்பேன்

” எங்கே அவள்!!!
என்றே மனம்!!!
தேடுதே ஆவலால் ஓடிவா…..
என்று பாடி கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்த கண்ணன் தனது மனைவி தர்ஷினியை தேடினான்,
அவள் சோபாவின் ஒரு ஓரத்தில் அமர்ந்து ஏதோ தீவிர யோசனையில் அமர்ந்து இருந்தாள் அவளின் அருகில் சென்ற கண்ணன்,

”
மை டியர் பொண்டாட்டி
என்ன டி ஏதோ பயங்கரமான யோசனையில இருக்க,

அவள் கடுப்பாக அவனை பார்த்து தீ பார்வை ஒன்றை செலுத்த,
அவனுக்கு என்னவென்று புரியாமல் அவளை பார்த்து

”
ஏய் என்ன டி என்னை எதுக்கு முறைக்குற,

மீண்டும் அவளிடம் மௌனம்… கூடவே தீ பார்வை இப்போது எரிச்சல் பார்வையாக மாறியிருந்தது

”
இப்போ எதுக்கு நம்மள இப்படி முறைச்சு பாக்குறான்னு தெரியலயே  நாம எதாவது தப்பு பண்ணுனோமா அவன் சிந்தனையை துரிதபடுத்தினான் அவனது சிந்தனைக்கு ஏதும் எட்டவில்லை.

”
ம்ம்ஹும் இது சரிபட்டு வராது பேசாம அவகிட்டயே கேட்டுருவோம். ஏன்னா இவ இப்படி இருந்தா நமக்கு ஒரு வேலையும் ஓடாது என்று தனக்கு தானே பேசி கொண்டு மீண்டும் அவளை அழைத்தான்,

”
அடியேய் என்ன டி ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க,

அவனின் அடியே அவளை எப்போதும் கூடுதல் சந்தோசபடுத்தும் ஆனால் இன்று அதுவே அவளுக்கு எரிச்சலை கொடுக்க அவளிடமிருந்து வார்த்தை சற்றே கடினமாக வந்தது,

”
யப்பா சாமி கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கியா தேவை இல்லாம கடுப்ப கிளப்பாத என்று அவள் இரைய, அதில் சற்றே கலங்கி போனான் கண்ணன்...

அதற்கு காரணம் அவளது வார்த்தை கோபத்தில் வந்து விழ, முகமானது அவனின் மீது வெறுப்பை உமிழ்ந்தது….

அதனால் வீட்டின் உள்ளே வரும் போது இருந்த குதூகலம் இப்போது அவனிடம் முற்றிலும் வற்றி போயிருந்தது, அவன் அமைதியாக நின்றான் அவளும் மறுமொழி எதுவும் பேசவில்லை.

நேரம் ஸ்லோ மோஷன் எபக்ட்டில் நகர்ந்தது அவனுக்கு அதற்கு மேல் பொறுமை போதவில்லை மீண்டும் தனது மனைவியிடம் பேச முயற்சி செய்தான்,

”
அடியே இப்போ எதுக்கு டி கோபமா இருக்க,

அவளிடம் மௌனம்

”
தர்ஷினி உன்கிட்ட தான் டி கேட்குறேன்

அவளிடம் இப்போதும் பதில் இல்லை,
கண்ணன் மெதுவாக பொறுமையை இழக்க ஆரம்பித்தான் காரணம் அவளின் இந்த பேசாத மௌனம்

பொதுவாகவே இது போன்ற கோபம் கணவன் மனைவிக்கும் காதலர்களுக்கும் இடையில் வருவது வழக்கமானது தான் ஏனென்றால் கணவனோ மனைவியோ காதலனோ காதலியோ அவர்களது எண்ணம் எதுவாக இருந்தாலும் தன்னிடம் முழுமையாக வெளிப்படுத்தி விட வேண்டும் என்று நினைப்பது இயல்பு இந்த இயல்பு விதியிலிருந்து கண்ணனும் விலகியவன் அல்ல அதனால் கண்ணனின் கேள்வி ஏற்கனவே கேட்டது தான் என்றாலும் இப்போது சற்று உஷ்ணமாக வெளியேறியது…..,

”
ஏய் தர்ஷினி உன்கிட்ட தான டி கேட்கேன் எதுக்கு இப்படி உட்கார்ந்து கிட்டு இருக்கன்னு பதில் சொல்லாம இப்படி அமைதியா இருந்தா என்ன டி அர்த்தம்…...

கண்ணனின் உஷ்ண வார்த்தைகள் அவளை சற்றே உலுக்கி பார்த்தது, ஆனாலும் காதல் திருமணம் செய்தவர்கள் ஆச்சே அதை வெளிப்படுத்தும் விதமாக வீம்பு செய்து பார் என்றது ஒரு மனம், வேண்டாம் என்று இன்னொரு மனம் கூறியது…. அதற்கும் காரணம் இருந்தது,

என்ன வீம்பு செய்தாலும் விஷயம் வாயிலிருந்து வரும் வரைக்கும் அவன் இந்த இடத்தை விட்டு நகர மாட்டான் என்பது அவளுக்கு தெரியும் அதே நேரம் இப்போது நாம் பேசினால் தான் அவனிடம் நமது கோபத்தை காட்ட முடியும் என்று நினைத்தவள் அவனிடம் சீறினாள்,

”
என்ன யா சொல்ல சொல்லுற நா வீட்ல இருக்குறவங்க கிட்ட ஒன்னு சொல்லி வச்சா நீ வேற ஒன்னு சொல்லுற என்றாள் உஷ்ணம் குறையாத கோபத்தோடு,

”
நீ என்ன டி சொன்ன?? அத மாத்தி நான் என்ன சொன்னேன் அத முதல்ல சொல்லு டி கண்ணனும் அதே தோணியில் எதிர் கேள்வி கேட்க,

”
எங்க வீட்டு விஷயம் பத்தி

”
வீட்டு விஷயமா  நீ என்ன சொன்ன அதை நா என்ன மாத்தி சொல்லிட்டேன்னு கேட்டேன் டி

”
எனக்கு தாய் மாமன்னு எவனும் கிடையாது அதனால எங்க அம்மா வீட்டு பால் காய்ச்சுக்கு நாம தான் சீர் செய்யணும்னு சொல்லி இருந்தேன் இல்ல

”
ஆமா சொல்லி இருந்த, நீ சொன்ன மாதிரி தான் நாம சீர் செஞ்சிட்டு வந்துட்டோம்ல அப்புறம் என்ன அதுல என்ன உனக்கு பிரச்சனை

”
அதுல ஒன்னும் பிரச்சனை இல்ல எனக்கு தாய் மாமன் இல்லன்னு நான் சொல்லி இருக்கேன் நீ எங்க அம்மாவுக்கு சித்தப்பா மவன் இருக்கான் பெரியப்பா மவன் இருக்கான், இருந்தாலும் அவனுங்க எல்லாம் செய்ய மாட்டாங்க அதனால நாம தான் எல்லாம் செய்யணும்னு சொல்லி நம்ம வீட்ல சொன்னியா???

”
ஆமாடி நேத்து மச்சான் கேட்டான் எவ்வளவு செலவு வந்தது யார் வந்தாங்கன்னு அப்போ தான் சொன்னேன். அதுவும் உண்மையைத் தானடி சொன்னேன்

”
நல்லா உண்மையை சொன்ன இப்போ அங்க தான் பிரச்சனையே

”
அதுல என்ன டி பிரச்சனை

”
நான் நீ உண்மைய சொன்னேன்னு சொல்லுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்ன கட்டி தான் அக்கா கிட்ட சொல்லி இருந்தேன் எனக்கு தாய்மாமன்னு யாரும் கிடையாது செய்முறை எல்லாம் செய்யறது நாங்க தான் செய்யணும் வேற ஆள் கிடையாதுன்னு

”
அது எனக்கு எப்படி டி தெரியும் நீ அவங்க கிட்ட சொன்னது

”
நான் தான் உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன் இல்ல எனக்கு தாய் மாமன் கிடையாதுன்னு அவங்க கிட்ட சொல்லி இருக்கேன் அதே மாதிரி நீயும் சொல்லிருன்னு

”
எங்கிட்ட எப்போ டி அப்படி சொன்ன

”
எப்போவா அவளது கோபம் இன்னும் அதிகரித்தது….

”
ஆமா டி எப்போ சொன்ன எனக்கு நினைவு இல்லையே

”
உனக்கு எப்படி யா அதெல்லாம் நினைவுல இருக்கும் உனக்கு தான் ஒண்ணுமே நினைவுல இருக்காதே அப்படி இருந்தா தான் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே

”
அடியே இப்போ இத சொன்னதால உனக்கு என்ன டி பிரச்சனை

”
என்ன பிரச்சனையா ரெண்டு நாளைக்கு முன்ன கட்டி தான்யா சொல்லி இருக்கேன் எனக்கு எவனும் கிடையாதுன்னு ஆனா நீ அதெல்லாம் ஒன்னும் இல்ல அவளுக்கு சொந்தக்காரன் இருக்கான் ஆனா ஒருத்தனும் செய்ய மாட்டான்னு சொல்லி இருக்க, இப்ப என்கிட்ட அவங்க வந்து கேப்பாங்க அவன் அப்படி சொல்றான் நீ இப்படி சொல்ற இதுல யாரு சொல்றது உண்மைன்னு கேட்டாங்கன்னா என்னய்யா நான் பதில் சொல்லுவேன்

”
இதுல என்னடி இருக்கு உண்மைய சொல்லிட வேண்டியது தானே

”
உண்மையை சொல்லவா சொன்னா என்ன நடக்கும்ன்னு உனக்கு தெரியாதா???

இப்போது கண்ணனிடம் அமைதி,

”
சும்மாவே நம்ம வீட்டு ஆளுங்க என்னை மதிக்க மாட்டாங்க இதுல என் சொந்த பந்தம் இருந்தும் செய்ய மாட்டாங்கன்னு சொன்னா அவங்க என்ன இன்னும் கேவலமாக தான் பார்ப்பாங்க நம்ம வீட்டு ஆளுகளை பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீயே இப்படி பேசுனா என்ன அர்த்தம் அவளிடம் கோபமும் தன் வீட்டார் தன்னை ஏளனம் செய்வார்களே என்ற ஆதங்கமும் அப்பட்டமாக தெரிந்தது

தன் மனைவியின் ஆதங்கம் அவனுக்கு நன்றாக புரிந்தது அவளது ஆற்றாமையை நினைத்து அவளுக்கு ஆறுதல் சொல்ல எண்ணினான் ஆனாலும் அவள் கூறுவது பொய் அது என்றிருந்தாலும் ஒரு நாள் வெளியில் வந்து மற்றவருக்கு அம்பலப்படுத்தி விடும் என்ற உண்மையை அவளிடம் இப்போது கூறினால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை என்பதை அவன் நன்றாக உணர்ந்தான் சிறிது நேரம் மௌனமாக நின்று யோசித்தவன் பின் அவளிடம் கூறினான்,

”
அவங்க கேட்டா நான் தான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்லி சொல்லிரு டி,

”
அது எப்படி அவனுக்கு தெரியாம இருக்கும்ன்னு கேட்பாங்க நம்ம வீட்டு ஆளுங்க எந்த விஷயத்தையும் சாதாரணமா விட மாட்டாங்க நோண்டிகிட்டே தான் இருப்பாங்க

”
அதெல்லாம் நோண்ட மாட்டாங்க டி நீ ரொம்ப யோசிக்க வேண்டாம் நா சொன்னதை மட்டும் சொல்லு டி அதுக்கு மேல எதாவது உன்கிட்ட கேட்டா அது எங்கே எங்க வீட்டை பத்தி பேசுது அப்படி பேசுனா தான தெரியும்ன்னு சொல்லிரு டி அதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்று சொல்லி தற்க்காலிக தீர்வு சொன்னான் கண்ணன்….

மறுநாள் தர்ஷினி சொன்னது போலவே அவரது வீட்டு ஆட்கள் கேள்வி கேட்டு நோண்டினார்கள் கண்ணன் கூறியது போல அவளும் கூற அவர்களது பேச்சு அப்போதைக்கு முடிந்தது….. அன்றைய நாளும் அப்படியே முடிந்து போக மறுநாள் பொழுது புணர்ந்தது, தர்ஷினி சற்று அமைதியை கடைபிடிக்க கண்ணன் எப்பொழுதும் போல் அவளிடம் குறும்பு செய்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றான்….

அன்று மதிய உணவுக்காக கண்ணன் வீட்டிற்கு வந்தான் அப்பொழுதும் அவன் தன் காதல் மனைவியை தேடிக்கொண்டு,

”
என்னவளே
என்னவளே
எங்கிருந்தாய் நீதான்….
என்ற பாடல் பாடி கொண்டே வர அவனை ஓடி வந்து இறுக்கமாக கட்டிக்கொண்டாள் தர்ஷினி.

அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான் கண்ணன், அந்த அணைப்பில் அவள் இப்போது குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்,

”
ஏய் தர்ஷினி எதுக்கு டி பொண்டாட்டி அழுகுற அவனது கேள்வியில் காதல் ரசம் சொட்டியது ஆனால் தர்ஷினியால் தான் பதில் பேச முடியவில்லை மேலும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன் அவளது முதுகையை தட்டிக் கொடுத்து தலையை வருடி அவளை சற்று நிதானத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தான்

”
அடியே இப்ப எதுக்குடி அழுவுற ஏன் இப்படி அழுகுற என்ன ஆச்சு என்ன நடந்தது இங்க வா இப்படி உட்காரு என்று அருகில் இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு அவளுக்கு குடிப்பதற்கும் கொஞ்சம் தண்ணீரை கொடுத்தான் அதை வாங்கி குடித்த தர்ஷினி இப்போது ஓரளவிற்கு சமாதானம் அடைந்திருந்தாள், அவளிடம் என்னடி ஆச்சு எதுக்கு அழுகுற என்று கண்ணன் கேட்க,

மீண்டும் கண்ணனை கட்டிக்கொண்டு சாரி மாமா என்றாள் தர்ஷினி

”
எதுக்கு டி

”
நீ நேத்து சொன்ன மாதிரி அவங்க கிட்ட சொன்னேன் மாமா

”
சரி டி அதுக்கு என்ன

”
அவங்க அத அப்படியே மச்சான் கிட்ட சொல்லிருக்காங்க, மச்சான் அத கேட்டுட்டு அவன் என்ன குடும்பம் நடத்துறான்னு கேட்டுருக்காங்க மாமா அது மட்டும் இல்ல அவனை ஒழுங்கா அவ கூட உட்கார்ந்து அவளுக்கு என்ன தேவை அவ குடும்பத்துல யாரு யாரு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க சொல்லுன்னு சொல்லிருக்காங்க

”
சரி டி அதனால என்ன

”
ஏன் மாமா பொய் சொன்னது நான் ஆனா மச்சான் கிட்ட கெட்டு போனது உன் பேர் ஆச்சே தப்பு என்னோடது தான் அதோட பாதிப்பு உனக்கு தான மாமா வந்துருக்கு,

”
அடி லூசு பய பொண்டாட்டி இதெல்லாம் ஒரு பிரச்சனையா டி

”
உனக்கு எதுவும் பிரச்சனை இல்ல தான் மாமா ஏன்னா நீ ஒரு தப்பும் செய்யல அது தெரியாம மச்சான் அவன் என்ன குடும்பம் நடத்துறான்னு கேட்டுட்டாங்களே மாமா அது தான் என்னால தாங்க முடியல,
நீ எப்படி குடும்ப நடத்துற, என்னை எப்படி பார்த்துட்டு இருக்கன்னு எனக்குத்தானே தெரியும். அவளிடம் விசும்பல் அப்படி தெரிஞ்சிருந்த நானே உனக்கு இப்படி ஒரு பேர் வர காரணம் ஆயிட்டேனே என்று கூறியவள் வெடித்து அழ ஆரம்பித்தாள், அவளை கண்ணன் ஆறுதல் படுத்த,

”
சாரி மாமா என்று சொல்லி மீண்டும் கட்டிக் கொண்டு குலுங்கினாள் தர்ஷினி

”
அட லூசு பய பொண்டாட்டி அவ்வளவுதானா நா கூட என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்

”
ஏன் மாமா மச்சான் உன்ன இப்படி சொன்னதுல உனக்கு வருத்தம் இல்லையா

”
நான் எதுக்குடி வருத்தப்படணும் இதே வார்த்தையை நீ சொன்னா நான் வருத்தப்படலாம் மச்சான் சொன்னததுக்கெல்லாம் நான் வருத்தப்பட முடியுமா???

தர்ஷினி அவனை நிமிர்ந்து பார்த்தாள் காரணம் அவன் யாருக்காகவும் தனது சுயமரியாதையை இழக்க கூடாது என்று சொல்பவன் ஆச்சே…… ஆனால் அதை எல்லாம் யோசிக்காமல் கண்ணன் பேசினான்,

”
உன்னோட சந்தோசத்துக்காக உன்னோட சுயமரியாதைக்காக ஒரு சில பொய் இந்த வீட்ல சொல்ல வேண்டி இருக்கு அதை நீ சொல்ற அதை என்கிட்டேயும் சொல்லிடுற அப்படி இருந்தும் அதை நான் மறந்து வீட்ல உண்மைய சொன்னது என் தப்பு தானே நான் மறக்காமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது இல்ல டி.

”
ஆனாலும் என்னோட சுயநலத்துக்காக உன்னோட சுயமரியாதையை நான் கெடுத்துட்டேனே மாமா சாரி மாமா என்று மீண்டும் அவள் அழ

”
அடியே உனக்காக நான் என்னையவே இழக்க தயாரா இருக்கேன் அப்படி இருக்கும் போது இதெல்லாம் ஒரு விஷயமாடி உனக்கென நான் இருக்கேன் அதனால நீ மத்தவங்க பேசுறதெல்லாம் யோசிக்காம சந்தோசமா இரு பொண்டாட்டி என்று சொல்லி அவளை கட்டிக்கொள்ள அவனது மார்பில் முகம் புதைத்து கொண்டாள் தர்ஷினி…..



சுபம்…..


வாழ்க்கையில் கணவன் மனைவி என்பது இன்றியமையாத ஒரு உறவாகும் அந்த உறவிற்காக நம் சுயநலத்தையும் சுயமரியாதையும் விட்டு கொடுக்கலாம் தப்பே இல்லை ஏன்னா மனைவியை (காதலை) விட சிறந்தது எதுவும் இல்லை 


அன்புடன்
மாரி மதி 

மாரிமதி ஊர்வாய்

” டேய் டேய் தம்பி கார்த்தி நில்லு டா ” என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் மகன் கார்த்தியின் பின்னால் ஓடினாள் ராசாத்தி….

அவளது பேச்சு எதையும் காதில் வாங்காமல் விறு விறு என முன்னேறிக் கொண்டிருந்தான் கார்த்தி.
தன் தாய் எத்தனை தூரம் அழைத்தும் அவன் திரும்பி பார்க்கவில்லை, தாயை போல அவனது கண்களும் கண்ணீரை தாரைதாரையாய் இரைத்துக் கொண்டிருந்தது அதை தனது கை கொண்டு துடைக்கக்கூட மறந்தவன் அப்படியே ஒரு பொம்மை போல நடந்தான்.
அவன் சட்டையில் மேலிரண்டு பட்டன்கள் அருந்து எங்கேயோ விழுந்திருந்தது, சட்டை பையும் கிழிந்திருந்தது, முகத்திலும் லேசான காயங்களும் இருந்தது, அதை பார்க்கும் பொழுது அவன் யாரிடமோ மல்லுக்கட்டி வந்திருக்கிறான் என்பது நன்றாக தெரிந்தது...

வீட்டை விட்டு வந்தவன் ஊரையும் கடந்திருந்தான் ஆனால் இப்போது அவனுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை அதனால் அந்த ஊரின் எல்லை முடிவில் நின்று வானத்தை விரக்தியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அப்படி நின்று பார்க்க பார்க்க அவனது கண்கள் ஆறாக இன்னும் ஒழுகியது.

யார் இந்த கார்த்தி???
எதற்காக இவன் இப்படி வந்து நிற்கிறான்???
அவன் தாய் அவன் பின்னாலேயே அழுது கொண்டு வந்ததற்கு காரணம் என்ன???
குட்டியா ஒரு பிளாஷ்பாக் …..


கார்த்தி 20 வயது நிரம்பிய இளைஞன் அப்போதுதான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருந்தான் .
அவனது தாய் ராசாத்தி அருகில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளி ராசாத்தியின் கணவர் கார்த்திக்கு ஐந்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் உயிரிழந்தார். அதிலிருந்து தனி ஒரு ஆளாக தனது குழந்தையை யாருடைய ஆதரவும் இன்றி ராசாத்தி வளர்த்து வந்தாள்.
ராசாத்தியின் கணவர் முன் கோபி என்பதால் அவளுக்கு ஆதரவாக யாரும் இருக்கவில்லை, ராசாத்திக்கு வயதான தாய் மட்டுமே உடன் பிறந்தோர் என்று யாரும் இல்லை கணவன் வழியில் அவனின் முன் கோபத்தால் ஆதரவு என்று எவரும் இல்லை….

இப்படி ஒரு இளம் விதவை இருந்தால் ஊர் வாயிற்கு சொல்லவா வேண்டும் அவள் யாரோடு பேசினாலும் அவளுக்கு பெயர் வேசி தான், தற்செயலாக பார்த்தாலும் அவளுக்கு பெயர் வேசி தான் அப்படித்தான் உண்மை என்ன என்பதை பற்றி யோசிக்காமல் அவரவர் வாய்க்கு வந்தபடி அவரவர் எண்ணம் போல் ராசாத்தி பற்றி அவதூறு பேசியது.
அப்படி யாரோ ஒருவன் தன் தாயைப் பற்றி பேச அவனோடு மல்லு கட்டினான் கார்த்தி, அது கைகலப்பாக மாற கார்த்தி அவனை தாக்கவும் எதிரில் இருந்தவன் கார்த்தியை தாக்கவுமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்...

அப்போது ராசாத்தி பற்றி அவதூறு பேசியவன்,

”
இப்போ நீ வீட்டுக்கு போய் பாருல உங்க ஆத்தா இன்னொருத்தன் கூட படுத்து தான் கிடக்கா சந்தேகம் இருந்தா நீயே நேர்ல போய் பாரு என்று வாய் துடுக்காக பேச அவனிடம் மீண்டும் மல்லு கட்டிவிட்டு அங்கிருந்து வீடு திரும்பியிருந்தான் கார்த்தி

அவன் வந்த நேரம் அவனது வீட்டில் இருந்து ஒரு தடித்த ஆள் வெளியே வர அவனுக்கு சிரிச்ச முகமாய் விடை கொடுத்துக் கொண்டிருந்தாள் ராசாத்தி.

ஏற்கனவே கோவத்தின் உச்சியில் இருந்த கார்த்தி இதை பார்க்கவும் இன்னும் கோபம் கொண்டு ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று இருந்தான். அந்த ஆளுக்கு விடை கொடுத்த ராசாத்தி தன் மகனை பார்க்கவும் இன் முகத்தோடு வரவேற்க, அவனது தோற்றத்தை கண்டதும் திகைத்து போனாள்,

”
ஐயா கார்த்தி என்னடா ஆச்சு ஏன் இப்படி வந்து இருக்க என்ன நடந்தது ” பதட்டத்தோடும் தன் மகனின் மீது இருந்த பாசத்தோடும் கேட்டாள் ராசாத்தி

ஊர் பேசியதும் எவனோ ஒருவன் சொல்லியதும் அதற்கு ஏற்றார் போல் தன் வீட்டிலிருந்து ஒருவன் வெளியேறியதும் அவனது சிந்தை முழுவதையும் ஆட்கொண்டிருக்க, கார்த்தி தனது தாயின் கையை தட்டி விட்டு வீட்டின் உள்ளே சென்றான்.

அவனின் பின்னால் ஓடிய ராசாத்தி என்ன ஏது என்று அவனிடம் விவரம் கேட்க அவன் அவளை அருவருப்பாக பார்ப்பதைப் போல் பார்த்தான் அவனது இந்தப் பார்வையும், அதற்கான அர்த்தமும் புரியாமல் ராசாத்தி அவனை எதிர் நோக்க,

”
ஊர்ல சொல்றதெல்லாம் உண்மையாக்கிட்ட இல்ல இனிமேல் உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன் ” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான் கார்த்தி.

சொல்லின் அர்த்தம் புரியாமல் சிறிது நேரம் யோசித்தவளுக்கு அவன் கூறிய சொல்லின் அர்த்தம் விளங்கிய போது தன் ஈரகுலையை உயிரோடு அறுத்து எடுப்பதை போல் உணர்ந்தாள், உலகம் சுழற்சியை நிறுத்தியதை போல் உணர்ந்தவள் அப்படியே உறைந்து நிற்க அவளைக் கடந்து வெளியே சென்றான் கார்த்தி.

மகன் செல்வதில் சுயத்திற்கு வந்து அவனின் பின்னாலேயே ஓடி வர அவளது எந்த சொல்லையும் காது கொடுத்து கார்த்தி கேட்கவில்லை….

தனக்கான ஆதரவாக இருந்த ஒற்றை உயிரும் இன்று இப்படி பேசிய பின்பு தனது ஓட்டு மொத்த வாழ்நாளையும் வெறுத்திருந்தாள் ராசாத்தி.

தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வீட்டின் உள்ளே நுழைந்தவள் தனது சேலையை எடுத்து தூக்க மாட்டிக்கொண்டாள்,

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கு ஓடிவந்து தகவல் சொல்ல கார்த்தி இப்போது மீண்டும் வீட்டை நோக்கி ஓடி வந்தான், கதவை உடைத்து தன் தாயை தூக்கில் இருந்து இறக்கினான் அவள் மூர்சையாகி இருந்தாள் உடலெல்லாம் சில்லிட்டு போனது...
தன் தாயை அப்படி கண்டவுடன் அவனுக்கு இருந்த கோவம் எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது, சற்று முன் வீட்டிற்கு வந்த அந்த தடித்த ஆள் இப்போது மீண்டும் திரும்பி வந்து இருந்தார்,
அவரது கையில் வெற்றிலை பாக்கும் திருமண பத்திரிக்கையும் இருந்தது,

அவன் யார் என்று விசாரிக்க அப்போது தான் தெரிந்தது, ராசாத்திக்கு தூரத்து உறவு அண்ணன் முறையாம் கார்த்திக்கு மாமன் முறை.
அவர் தனது மகன் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க வந்திருந்தார் கல்யாண மாப்பிளைக்கு கார்த்தி மைத்துனன் முறை என்பதால் பத்திரிகை வைக்கும் பொழுது அவனுக்கு சுருள் வைப்பது கிராமத்து நடைமுறை அதை மறந்து அவர் வந்திருந்தார் ஆனால் கிராமத்தில் அது ஒரு உரிமை என்பதால் அந்த உரிமையை ராசாத்தி விட்டுக் கொடுக்கவில்லை தனது மகனுக்கு சுருள் வைக்க வேண்டும் என்றவள் கேட்டுக் கொண்டதற்காக,
வெற்றிலை பாக்கு வாங்க அந்த தடித்த ஆள் கடைக்கு சென்றார்.

அவரை தான் தவறாக எண்ணி கார்த்தி பேச நிலைமை தலைகீழாக மாறிப் போனது ஆத்திரத்தில் தான் விட்ட வார்த்தைகளை எண்ணி கார்த்தி அலறினான் ஆனால் அதனால் உபயோகம் ஏதேனும் உண்டா??

”
ஐயோ அம்மா நான் தெரியாம பேசிட்டேன்மா என்ன விட்டுட்டு போயிடாத மா….
நீ என்னை வளர்த்தும் நான் இப்படி அறிவில்லாம போயிட்டேனே…. ” அவனிடம் கதறல்,

”
எவன் எவனோ என்னென்னமோ பேசுறதெல்லாம் கடந்து கடந்து வந்தேன் இன்னைக்கு கூட உன்ன ஒருத்தன் தப்பா பேசினான்னு தான அவன் கூட சண்டை போட்டேன், அவன் கூட அடிச்சு மல்லு கட்டிட்டு அவன் சொன்ன ஒரு வார்த்தையை நானே நம்பிட்டேனே….. “

”
நானே உன்னை தப்பா நினைச்சு உன் உயிரையும் குடிச்சுட்டேனே…. “

”
அம்மா என்னை பாரும்மா,
எனக்கு உன்ன விட்டா யார் இருக்காங்க எனக்கு உன்ன தவிர வேற எதுவும் தெரியாதே…. எழுந்துரு மா“

”
அம்மா வீட்டை விட்டு வெளியே போன எனக்கு ஊரு எல்லையை தாண்டுனதுக்கு அப்புறம் எங்க போகனும்னு தெரியலையே மா இப்படி இருக்கிற என்னை விட்டுட்டு உனக்கு போறதுக்கு எப்படி மா மனசு வந்துச்சு… என்ன விட்டுட்டு போகாதம்மா திரும்ப வந்துடுமா நான் யார் பேச்சையும் காதுல வாங்க மாட்டேன்மா,
யாரு என்ன சொன்னாலும் அதை கணக்குல எடுத்துக்க மாட்டேன் மா,”

”
அடுத்தவங்களுக்கு என்னடா தெரியும் நம்மளை பத்தின்னு நீ அடிக்கடி சொல்லி சொல்லி என்னை வளர்த்தயே ம்மா இத்தனை நாளும் அப்படி இருந்த நான் ஏதோ ஒரு இடத்துல சரிக்கிட்டேனே, ஆத்திரத்தில அறிவை இழந்துட்டேனே ம்மா அதனால ஈடு செய்ய முடியாத உன்னை நான் இழந்துட்டேனே என்று அந்த இருபது வயது இளைஞன் கதற ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது….

அவனுக்கென்று ஆறுதல் சொல்லவோ அவனது நிலையை புரிந்து கொள்ளவோ யாரும் இல்லை அந்த ஊர் பேச்சை கேட்டு தான் அவன் அவனது தாயை இழந்து தவிக்கிறான் அதே ஊர் இன்று மாற்றிப் பேசுகிறது,

”
சண்டாள பாவிகளா நல்லா இருந்த ஒரு பிள்ளைய மாத்தி மாத்தி பேசி இப்படி அவளோட உயிரை எடுத்துட்டீங்களே ” என்று ஒரு கிழவி பேச

”
தான் சொந்த மகனோட மனசுலையே விஷத்தை விதைச்சு விட்டீங்களே டா அந்த விஷம் இன்னைக்கு ஒரு உயிரை குடிச்சிருச்சே” என்று இன்னொரு கிழவன் பேசினான்..

இப்படியாக இப்போதும் தன் பங்கிற்கு ஊர் வாய் மட்டும் பேசியது...

ஊர் தன் தாய் உயிரோடு இருக்கும்போது ஒரு மாதிரியும் அவள் இறந்த பின்பு வேறு மாதிரியும் பேசியது கார்த்தியின் காதில் விழுந்தது...
இப்படி மாறி மாறி பேசும் இந்த ஊர் வாயை வைத்து தன் தாயை இப்படி தொலைத்து விட்டேனே என்று எண்ணி கதறி அழுத கார்த்தி,

தன் தவறை உணர்ந்து தாயின் கால்களை இறுக பற்றி கொண்டு அழுதான்… அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தி கதறியவன் தன் தாயின் மார்பில் சாய்ந்து அழுக அவளது இதயத்துடிப்பு மெல்லமாய் அவனுக்கு கேட்டது… தனது தாயின் உயிர் இன்னும் அடங்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட கார்த்தி உடனடியாக ராசாத்தியை தூக்கி தோழில் கிடத்திக்கொண்டு வெளியே ஓடினான்...

தனது ஊரில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று ஓரளவிற்கு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் வர அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்து ஆம்புலன்ஸ் வழியாக அனுப்பி வைத்தார்கள்

ஆம்புலன்ஸில் அமர்ந்த கார்த்தி தன் தாயின் கையை பற்றி கொண்டு அம்மா மன்னிச்சுடுமா இனிமேல் இந்த ஊர் வாய் என்ன பேசினாலும் அதை நான் கண்டுக்க மாட்டேன் கவனத்திக்கு கொண்டு போக மாட்டேன்.

ஊர்வாய் பேசுறதுக்கு எல்லாம் காது கொடுத்தா நாம வாழ முடியாது பா என்று தன் தாய் அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையை தன் சிந்தையில் கொண்டு வந்து அது எத்தனை உண்மை என்பதை உணர்ந்து கண்ணீர் வடித்தான் கார்த்தி …...


கதை முற்றும்…...

ஊர்வாய் பேசும் வார்த்தை எல்லாம் உண்மை என்று நினைத்தும், அவர்களின் வார்த்தைக்கு செவியை கொடுத்தும் நமது உயிருக்கு உயிரான உறவுகளை இழந்து விடாதீர்கள். வாழ்க்கை கார்த்திக்கு கொடுத்தது போல் இன்னொரு வாய்ப்பு எல்லாருக்கும் கொடுத்து விடாது!!!!


அன்புடன்…….,

மாரி மதி

மாரிமதி – முதல் நாள் அன்று

தடக் தடக் சத்தம் மெதுவாய் குறைந்து கீச் என்ற இரைச்சலோடு நின்றது அந்த நீளமான தொடர்வண்டி அதிலிருந்து இறங்கி நெட்டி முறித்து உடலை வில் போன்று வளைத்து சோம்பல் முறித்தான் ஈஸ்வரன்….

”
சப்பா ஒருவழியா ஊரு வந்து சேர்ந்துட்டோம் இப்போ இவ எங்க இருக்களோ தெரியலயே  ” என்ற கேள்வியோடு தனது அலைபேசியை எடுத்து திரையில் தெரிந்த அந்தப் பெண்ணின் நம்பருக்கு அழைத்தான்….

அலைபேசியில் அழைப்பு மணியை கேட்கவும் அதுவரை நிதானமாய் இருந்த அவளது முகத்தில் இப்போது பரபரப்பு தொற்றி இருந்தது உள்ளுக்குள் இதுவரை அவள் அறிந்திடாத ஒரு உணர்வு,

”
ஹேய் பாரு என்ன டி ஆச்சு உனக்கு ஏன் இவ்ளோ பதட்டம் இந்த போன் வர தான இவ்ளோ நேரம் காத்து கிடந்த…, இப்போ அந்த அழைப்பு தான வந்து இருக்கு அப்புறம் ஏன் அட்டன் பண்ணாம முழிச்சிட்டு இருக்க, “

”
ஆமா தான் டி ஆனாலும் ஏனோ இப்போ பதறுதே, இனம் புரியாத ஒரு உணர்வா இருக்கு இத எப்படி வார்த்தையில சொல்ல எனக்கு தெரியல டி “

”
அட ச்சீ ரொம்ப பண்ணாத போன் எடுத்து பேசு டி இப்போவே இரண்டு முறை அழைப்பு வந்துட்டு அப்புறம் அவன் உன்ன பாக்காம ஊர் திரும்பிர போறான் “

”
ஊருக்கா?? “

”
ம்ம் ஆமா நீ இப்படி போன் எடுக்காம இருந்தா அவன் அத தான செய்வான் “

இவ்வாறாக அவளும் அவளது மனசாட்சியும் மாறி மாறி பேசிக்கொள்ள மூன்றாவது முறையாக ஈஸ்வரனின் அழைப்பு பார்வதியின் மொபைல் திரையில் விழுந்தது ….

இப்போது சற்று மனதை தரப் படுத்திக் கொண்டு அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தாள்,
சற்று திணறலோடு,

”
ஈ… ஈஸா….. “

”
பாரு “

”
ம்ம்ம்ம் “

”
ஹேய் எங்க டி இருக்க ட்ரெயின் வந்துட்டு டி நானும் ஸ்டேஷன்ல வந்து இறங்கிட்டேன். “

ஈஸ்வரனின் பேச்சில் ஒரு துள்ளல் இருந்தது தன்னவளை காண போகின்ற ஆனந்தத்தின் வெளிப்பாடாய் வந்த துள்ளல் அது

ஈசனும் பார்வதியும் ஒரு ஆன்லைன் நண்பர்கள்.
உலக வழக்கம் போல் முதலில் நண்பர்களாக அறிமுகமானவர்கள் நாளடைவில் தங்களுக்குள்ளாக இருந்த காதலை உணர்ந்து, நீ இன்றி நான் இல்லை என்பதை போல் அலைபேசியின் துணையோடு ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்து விட்டு, நிதர்சன நிஜ வாழ்க்கையில் இணைவதற்காக, அதற்கு அஸ்திவாரம் இடும் வண்ணம் தங்களது முதல் சந்திப்பை இன்று வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து பார்வதியின் ஊருக்கு ஈஸ்வரன் வந்து விட்டான்….

இருவருக்கும் இடையிலான காதல் வருடத்தைக் கடந்து விட்டது என்றாலும் இன்று தான் அவர்களது முதல் சந்திப்பு.

வருடம் கடந்து இருந்தும் அவனை காண வேண்டும் என்ற ஆவல் குருதியோடு கலந்து இருந்தும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனின் அருகில் செல்ல விடாமல் தடுத்து கொண்டிருந்தது….

இதற்கான காரணம் 

தயக்கமா???
வெட்கமா???
நிதர்சனத்தை நினைத்து பயமா???
விடை அறியவில்லை...
இத்தனை உணர்வு இருந்தும் அவனை காணும் ஆவல் சற்றும் அவளிடம் குறையவில்லை….

”
ஹேய் பாரு கழுதை “

சிந்தை கலைந்து நிதர்சனத்திற்கு வந்தவள்,

”
ஈஸா இப்போ எங்க இருக்க “

”
ம்ம்ம் என் மாமனார் ஊர்ல டி “

”
டேய் அங்க எதுக்கு டா போன?? “

”
உங்க அப்பன் மவள பாக்க டி “

”
யாருடா அது?? உனக்கு தெரிஞ்சவங்களா?? “

”
ஆமா டி நா கட்டிக்க போற பொண்ணு  “

”
அட பாவி டேய் என்ன பாக்க வரேன் என்ன தான் கட்டிக்க போறேன்னு சொல்லிட்டு இப்போ அவ யாருடா அந்த சக்களத்தி “

தலையில் தட்டி கொண்ட ஈஸ்வரன்,
”
டேய் அவ தான் ரொம்ப அறிவுன்னு தெரியும்ல அப்படி தெரிஞ்சும் ஏன் டா இப்படி பண்ணுற ” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு,

”
யேய் லூசு பய பொண்டாட்டி “

”
என்ன டா அதான் சக்களத்தி எவளையோ பாக்க போறியே அவளையே போய் அப்படி கொஞ்சிக்கோ என்ன ஏன் டா அப்படி கூப்டுற “

”
பின்ன உன்ன கூப்பிடாம “

”
என்ன ஏன் டா கூப்டுற அந்த சக்களத்தியவே போய் கூப்டு “

”
அடியே “

”
என்ன “

”
நீதான் டி அந்த சக்களத்தி “

”
நானா  “

”
ஆமா டி கோழி குண்டு கண்ணு “

”
நீ வேற யாரையோ சொன்ன?? “

”
என்ன சொன்னேன் டி?? “

”
கொப்பன் மவளன்னு “

”
உங்க அப்பனுக்கு மக யாரு டி “

”
நான் தான் “

”
அப்போ நீ என்ன தான் சொன்னியா டா ஈஸா “

”
பின்ன வேற யாரை டி சொல்ல முடியும்  “

”
நீ எனக்கு புரியுற மாதிரி சொல்லணும் டா “

”
தப்பு தான் டி “

”
சரி விடு எங்க டா இருக்க?? “

”
அடியே “

”
என்ன டா? “

”
உன் ஊர் ரயில்வே ஸ்டேஷன்ல தான் டி இருக்கேன் “

”
அச்சோ வந்துட்டியா ஈஸா இத முன்னாடியே சொல்ல மாட்டியா டா உனக்கு கூறே இல்ல டா “

”
யாருக்கு எனக்கா சரி தான் டி “

”
டேய் எங்க இருக்க சொல்லு டா வரேன் “
”
டிக்கெட் கவுண்டர் கிட்ட நிக்கேன் டி வா “
”
அங்கையா நானும் அங்க தான டா நிக்கேன் “

என்று சொல்லிக்கொண்டே ஒருவர் மாற்றி ஒருவர் தேட,

அப்போது அவனின் கண்ணில் பட்டாள் அவள்,

அவனது உயரத்தை ஒத்து இருந்த உயரம், மாநிறம், அவள் ஆசைப்பட்டு கேட்டதால் அவளுக்காக தான் அனுப்பி வைத்த தனது கருப்பு நிற சட்டையை அணிந்து கொண்டு ஒப்பனை ஏதும் இல்லாமல் அவளின் அவனுக்கு பிடித்தது போல இயல்பாய் வந்திருந்த தன்னவளை பார்த்து அப்படியே பிரம்மித்து நின்றான் ஈஸ்வரன்.

அவளும் இப்போது அவனை பார்த்து இருந்தாள்,
கார்மேக நிறம், விரைத்த உடல், அவனது பேச்சுக்கும், குணத்துக்கும், குறும்புக்கும், குழந்தை தனத்துக்கும் கொஞ்சமும் பொருந்தி போகாத முகம், ஆனாலும் அதில் தெரிந்த கம்பீரம் அதற்கு வலு சேர்க்கும் அவனது கண்கள் என்று அதிலும் வசீகரம் கலந்தே இருந்தது…. அவனை பார்த்து மீண்டும் தன் இயல்பு தொலைத்து நின்ற இடத்திலேயே உறைந்து போனாள் பார்வதி….

தாவணிக்கு ஜோடி போடும் பாவடையோடு தாவணியை மட்டும் கழட்டிவிட்டு தான் அணிந்த அதே சட்டையை தன்னைக் காண அவள் அணிந்து வந்திருந்த அழகை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஈசன்…. அந்த ரசனையோடு அவளை இப்போது நெருங்கியும் இருந்தான்… அவனது நெருக்கம் பாவம் அவளுக்குத்தான் இதய துடிப்பை எக்குத்தப்பாய் மாற்றி இருந்தது...

அருகில் வந்தவன் அவளது கரம் பற்ற நினைத்து தனது கையை அவரிடம் நெருங்கிக் கொண்டு செல்ல ஏதோ ஒரு உள் உணர்வில் அவள் தனது கையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள் ஒருவேளை வெட்கம் கூட காரணமாக இருக்கலாம் 

”
போலாமா டி “

”
ம்ம்ம் போலாம் ” அவளிடம் அணிச்சையாகவே குரல் வந்தது...

”
சரி வா போவோம்

”
எங்க போவ“
”
அடியே இது உங்க ஊருடி நீதான் என்னைய கூட்டிட்டு போகணும் எங்க போவன்னு என்கிட்ட கேட்டா எனக்கு என்னடி தெரியும்?? “

”
என்னது நானா?? “

”
பின்ன உங்க அய்யாவா? “

அவனைப் பார்த்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தவள் நிற்க்க,
அவனோ ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்திருந்தான்...

”
என்ன எங்க போறதுன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு இப்ப அவனே வெளிய வந்துட்டான் என்று நினைத்துக் கொண்டவன் அவன் பின்னால் ஓட,

”
வெளியே வந்தாச்சு இதுக்கு அடுத்து எங்க போறதுன்னு தெரியலையே  என்று யோசித்தவன்,

”
சரி காத்து வாக்குல கால் போன போக்குல போவோம் என்ற தனக்குத்தானே சொல்லிவிட்டு அந்த கடை தெருவில் நடக்க ஆரம்பிக்க,

அவனின் பின்னால் ஓடி வந்த பார்வதி,

”
என்ன ஈஸா நீ பாட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுட்ட

”
பின்ன வேற என்னடி செய்ய உன்னைய கூப்பிட்டு போக சொன்னா நீ முழிச்சுக்கிட்டு நிக்கிற நமக்கு கிடைச்சதே இந்த ஒரு நாள் தான் இந்த ஒரு நாளு உன்னோட அப்படியே கால் போன போக்குல காத்து வாக்குல உன் கைய புடிச்சுகிட்டு அப்படியே நடந்து போகணும் என்று கண்கள் மூடி சொன்ன தன் காதலனை ரசித்து பார்த்தாள் பார்வதி….

அவன் மீண்டும் பேசினான்….,

”
யோசிச்சு பாரு டி,
நீயும் நானும் இந்த ரோடு முழுக்க ஆள் இருக்காங்க ஆனா அவங்க யாரையும் கண்டுக்காம கைகள் கோர்த்து (அவளது கை இப்போது அவன் வசத்தில்,) கொளுத்தும் சூரியனை மதிக்காம அங்க இங்கன்னு இருக்குற கடைகள் முழுக்க பார்த்துட்டே நடந்து போறோம் டி, மாமா கொஞ்சம் வேகமா நடக்கேன் டி உனக்கு நடக்க முடியல டி ஆனாலும் ஈடு கொடுத்து என்கூடவே வர, இடையில இருந்த ஐஸ்கிரீம் கடையை பார்த்து நீ என்ன இழுத்து நிறுத்தி வாங்கி குடுடான்னு கேட்க நானும் வாங்கி கொடுத்துட்டு நாம 2பேரும் ரோடுன்னு கூட பாக்காம அத சாப்டுட்டே நடக்கோம் டி அது உருகி ஓடுது ஆனா அத பத்தின கவலை எதுவும் நமக்கு இல்ல, இப்போ ஐஸ் காலி ஆகிட்டு டி ஆனா கை முழுக்க வடிஞ்சு இருக்கு அத உன்னோட பாவாடையில குனிஞ்சு துடைச்சுட்டு,
அப்படியே நடந்து பஜார் தாண்டிட்டோம் டி அவன் சொன்னது போலவே அவர்கள் கடந்து தான் இருந்தார்கள்….

அதை கடந்த சிறிது தொலைவில் ஒரு கிராமத்து ரோடு தெரிய அதில் திரும்பி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்,
இதுவரை இருந்த மக்கள் கூட்டமா வாகன இரைச்சலோ எதுவும் அங்கு இல்லை மாறாக சுற்றிலும் இயற்கை எழிலோடு காட்சி கொடுத்தது அந்த கிராமத்து சாலை….

இப்போது தன்னவள் தோள் மீது தன் கைகளை போட்டு தன்னோடு அணைத்து கொண்டு அந்த சாலையில் நடக்க ஆரம்பித்தான்… சிறிது தூரத்தில் நீண்டு உயர்ந்து வளர்ந்து இருந்த ஆலமரம் ஒன்று அவன் பார்வையில் பட அதை நோக்கி அவன் கால்கள் நடக்க அவனோடு அவளும் நடந்தாள்,
ஆலமரத்தின் அடியில் நின்று அங்க இருந்த கிளி குருவி காகம் என்று ஒவ்வொன்றாக இருவரும் சேர்ந்து ரசித்தார்கள் திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை,

”
பாரு பாரு “

”
ம்ம்ம் என்ன ஈசா “

”
உம்மா கொடுப்போமா டி என்று அவன் கேட்க திடுக்கிட்டு போனாள் அவள்,

”
ஹே பாரு இங்கதான் யாருமே இல்லையே டி ரோட்ல நாலா பக்கமும் பார்த்துட்டேன் மதிய நேரம் வேற அதனால யாரும் வரவும் மாட்டாங்க அதனால தைரியமா ஒரே ஒரு முறை ஒண்ணே ஒன்னு மட்டும் டி ” என்று அவன் கெஞ்சலாய் கொஞ்சிட,

”
டேய் மாமா ஊர் முழுக்க சுத்தி கூப்டுட்டு வந்துட்டு எப்படி டா கரெக்ட்டா எங்க ஊர் வரவும் நிப்பாட்டி உம்மா கேட்குற “

”
என்னது உங்க ஊரா “

”
ஆமா டா “

”
அப்போ கண்டிப்பா கிஸ் பண்ணியே ஆகணும் டி “

”
என்னது “

”
ஆமா டி “

”
போடா இவனே “

”
ஹேய் பாரு மாமா சொல்லுறத கேளு டி “

”
மாட்டேன் போடா “
”
அடியே என்று அவளது கரம் பற்றி தன்னோடு இழுத்து அணைத்தான் ஈசன் அவனோடு ஒட்டி கொண்டு அவனது பிடியில் நின்றாள் பார்வதி,

இருவரது மூச்சுக்காற்றும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்ள கண்கள் நான்கும் சங்கமித்துக் கொண்டது அவனது பார்வையில் தன்னை தொலைத்தவள் கண்களை ஓட அவரது இதழ்களை நெருங்கி தன் இதழை அதன் மீது பொருத்தமாக பொருத்திக் கொண்டான்……..

சுற்றம் மறந்து சூழல் மறந்து தன்னையும் மறந்து இருவரும் ஒன்றி போயினர் 

அவர்களது இந்த நெருக்கத்திற்கு சிறிது கொடுத்து அந்த பக்கம் ஒரு பைக் ஹார்ன் சத்தம் கேட்டு சுயத்திற்கு வந்து சிறிது இடைவெளி விட்டு நின்றனர் இருவரும்…...

”
டேய் சேட்டை புடிச்ச பயலே ஏன் டா இப்படி பண்ணுன “

”
காரணமா தான் டி “

”
என்ன காரணம் டா “

”
மை டியர் காதலி இது உங்க ஊரு நாம அடிக்கடி இங்க வருவோம் போவோம் நிறைய நிகழ்வு நடக்கும் சில நிகழ்வு நமக்கு நினைவுல இருக்கும் சில நிகழ்வு நமக்கு மறந்து போகும் ஆனா நாம வாழும் வரைக்கும் நம்மளோட இந்த முதல் சந்திப்பும், முதல் முத்தமும், இந்த இடமும் மறந்து போகாது டி  அதுக்காக தான் இந்த முத்தம் டி என்று அவன் புன்னகை பூக்க,
அவள் வெட்கத்தில் சிவந்து அவன் கூறிய விஷயங்களை தனது நினைவுகளில் பசுமையாய் விதைத்துக் கொண்டாள் 


சுபம்……...


அன்புடன்….
மாரிமதி 

← Previous All Chapters Next →

Leave a Comment