விஷ்வத்தின் நிலையை பார்த்து பதறி அவனை தூக்கிவிட்டு ராகவ் வெளியே ஓடி வர பெண்கள் இருவரும் அவனை பின் தொடர்ந்து ஓடி வந்தனர்!!
வாசலில் எந்த வாகனங்களும் வராமல் இருக்க ராகவ் தன் கையில் வைத்திருந்த விஷ்வத்தை சிந்துவின் கைகளில் கொடுத்து “ஒரு நிமிஷம் தம்பிய புடிச்சுக்க நான் என்னோட கார் சாவியை எடுத்துட்டு வந்துடறேன்” என அவசர அவசரமாக தன் வீட்டுக்குள் ஓடி அவனுடைய கார் சாவியை எடுத்து வந்தான்.
வாசலில் நின்ற அவனுடைய காரை ஸ்டார்ட் செய்துவிட்டு சிந்துவையும் வையும், மீனாட்சியையும் ஏற்றிக் கொண்டு மிக வேகமாக மருத்துவமனை நோக்கி விரைந்தான் ராகவ்.
அரை மணி நேரத்தில் போக வேண்டிய மருத்துவமனைக்கு ஐந்து நிமிடத்தில் போய், விஷ்வத்தை மருத்துவமனையில் சேர்த்து விட,அங்கு விஷ்வத்க்கு அவசரமாக ட்ரீட்மென்ட் செய்யப்பட்டது!!
“விஷ்வத்துக்கு ஒன்னும் ஆகாதுல?” என அழுது கொண்டே சிந்து கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது , கவலைப்படாத!” என்று சிந்துவின் மாமியார் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
ராகவுக்கும் பயமாகத்தான் இருந்தது, ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாதவாறு அமைதியாக இருந்தான்!!
சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்த செவிலியர் பெண் ஒருத்தி, “டாக்டர் உங்கள உள்ள கூப்பிடுறாங்க?” என சொல்ல வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தனர் மூவரும்!!
“ஏம்மா பார்த்தா படிச்சவங்க மாதிரி தெரியுது! ஏற்கனவே பிக்ஸ் வர்ற பையன் தானே அப்ப கவனமா பாத்துக்க மாட்டீங்களா? பிக்ஸ் வந்ததுக்கு அப்புறம் கூட்டிட்டு வந்து இருக்கீங்க.
பிக்ஸ் வந்தால் என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியுமில்ல என்ன இவ்வளவு அலட்சியம்?”என மருத்துவர் கடுமையாக பேச, சிந்து
தேம்பித் தேம்பி அழுதாள்.
பக்கத்தில் இருந்த ராகவை
பார்த்து, “நீங்க பையனுக்கு யாரு?”என கேட்க,
“இந்தப் பொண்ணோட அண்ணன், அந்த பையனோட மாமா” என கூறினான். மீனாட்சியும் சிந்துவும் ஒருமுறை ராகவை உயர்வாக பார்த்தனர்.
“வீட்ல இத்தனை பேர் இருந்து ஒரு பையன ஒழுங்கா பாத்துக்க முடியலையா?நல்லவேளை எப்படியோ கொஞ்சம் முன்னாடியே கொண்டு வந்துட்டீங்க, இல்லைன்னா அந்த பையனோட நிலைமை கொஞ்சம் சீரியஸ் தான்.
பையன் ஏதோ ரொம்ப பயந்த மாதிரி தெரியுது, அதனால அவனுடைய நரம்புகள் தன்னிச்சையா இயங்க மறுத்திருக்கு, ஏற்கனவே அவனுக்கு காய்ச்சலும் இருந்திருக்கு, அதனாலதான் பிக்ஸ் வந்து இருக்கு. இப்ப பையன் நார்மலா தான் இருக்கான்.
நர்ஸ் கிட்ட மருந்து மாத்திரை எழுதி கொடுத்து இருக்கேன்.அதை மெடிக்கல்ல வாங்கி நர்சுக்கிட்ட எந்த நேரத்துல எப்பப்ப பையனுக்கு கொடுக்கணும்னு கேட்டுக்கிடுங்க,
பையனை இனிமேல் கவனமா பாத்துக்கிருங்க.இன்னைக்கு நைட்டு மட்டும் அப்சர்வேசன்ல வச்சுட்டு கூட்டிட்டு போங்க”என டாக்டர் சொல்லி விட நன்றி என சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்தனர்.
“நீயும்,அம்மாவும் விஷ்வத்த உள்ள போய் பாருங்க. நான் மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிட்டு வர்றேன்” என சொல்லிவிட்டு சென்றான் ராகவ்.
மீனாட்சியும், சிந்துவும் விஷ்வத் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தனர்.
சிந்து மகனை பார்த்து அழுது கொண்டே அவன் அருகில் சென்று துயில் கொண்டிருந்த விஷ்வத்தின் தலைக்கேசத்தை மெதுவாக தடவி விட்டாள்.
“எல்லாம் அந்த பாவி பயலால வந்தது அவன் தான் புள்ளைய பயமுறுத்தி ஹாஸ்பிடல் வர கொண்டு வந்துட்டான், அவன் உயிரோட இருக்கிற வரை என் பேரனும் மருமகளும் நல்லா இருக்க முடியாது.அவன ஒரு வழி பண்ணனும்” என தன் மனதிலே நினைத்துக் கொண்டார் மீனாட்சி.
இங்கு
குணா, மணி, திவ்யா, வருண் , ஷாலினி நால்வரும் தங்களின் கொலிக் ராஜ் வீட்டு பங்க்ஷனுக்கு வந்திருந்தனர்!!
“மச்சான் நான் இன்னிக்கு அழகா இருக்கேனா?”என குணா கேட்க
ஏண்டா நல்லாத்தானே இருக்க! என மணி கூறினான்.
“ராஜு மச்சினிச்சியை கரெக்ட் பண்ணி ராஜுக்கு சகலையாகலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்குத்தான் என்னோட பர்சனாலிட்டி இன்னைக்கு எப்படி இருக்குன்னு கேட்டேன்” என குணா சொல்ல,
“மச்சினிச்சிக்கு கல்யாணம் முடிஞ்சு மூணு புருஷன் இருக்காங்கன்னு உன்கிட்ட ராஜு சொல்லலையா?” என ஷாலினி கேட்டாள்.
“என்னது மூன்று புருஷனா? இது எப்ப?”என அதிர்ந்தான் குணா.
மற்ற மூவரும் குணாவின் அதிர்ச்சியை பார்த்து சிரித்தனர்.
“இல்லடா மன்னிச்சிடு, மூணு புருஷன் இல்ல, மூணு பிள்ளைங்க” என ஷாலினி சொல்ல அப்போதுதான் உயிரே வந்தது குணாவிற்கு.
ராஜுவின் கல்யாணத்திற்கு ஐந்து பேரும் போகும் போது ராஜுவின் மச்சினிச்சி சைட் அடித்தாள்.குணாவும் அந்தப் பெண் பின்னாடி சென்று சைட் அடித்துக் கொண்டிருந்தான்!!
அதைப் பார்த்து மற்ற நாலுபேரும் குணாவை கிண்டல் அடித்திருந்தனர். அன்னையிலிருந்து ராஜூவின் சகலை என்றே குணாவை கிண்டல் செய்வார்கள். ராஜு திருமணம் முடிந்த சில நாட்களுக்கு சென்னையை விட்டுவிட்டு தன் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்று விட்டார். இப்போ ஆறு மாதத்திற்கு முன்னாக தான் மீண்டும் இந்த கம்பெனியின் வேலைக்கு வந்திருந்தான். இந்த இடைவெளியில் அனைவரும் அந்தப் பெண்ணை மறந்து விட்டனர். நேற்று முன்தினம் ராஜு தன் வீட்டு விசேஷத்திற்கு அழைத்த போது மீண்டும் அந்தப் பெண்ணை நினைவு வந்தது குணாவிற்கு!
அதனால் தான் குணா ஆபீஸில் உள்ள வேலையை அவசர அவசரமாக முடித்துவிட்டு ராஜு வீட்டுக பங்ஷனுக்கு வர நினைத்தது. இந்த பழைய நினைவுகள் எல்லாம் அவன் கண் முன் வந்து போனது.
“மூணு புள்ள இருக்ககா? தெரிஞ்சிருந்தா நான் இங்க வந்து இருக்க மாட்டேன் . இப்படியே என் வீட்டுக்கு கிளம்புறேன் நீங்க போயிட்டு வாங்க?” என குணா சொல்ல,
“இவள தூரம் வந்துட்ட உன் சைட்ட பாத்துட்டு போயிருவோம்” என ஷாலினி அவனின் கைகளை விடாப்பிடியாய் பிடித்து இழுக்க அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது!
இவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைய ராஜூ இவர்களைப் பார்த்து “வாங்க, உள்ள வாங்க”என வரவேற்க ஐவரும் உள்ளே சென்றனர்!!
அங்கு ராஜுவின் உறவினர்கள் மற்றும் அவனோடு வேலை செய்யும் அனைவரும் அங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு அனைவரும் கதை அடித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர, இவர்களுக்கு தேநீரும்,சிற்றுண்டியும் ஒரு பெண்மணி வந்து கொடுத்தார்!
குணாவின் கண்கள் மட்டும் ராஜுவின் மச்சினிச்சியை தேடிக் கொண்டிருந்தது!!
“என்ன மச்சான் உன் சைட்டை தேடற போல, அவளுக்கு மூணு புள்ள இருக்குதாம் மறந்துடாத?”என மணி அவனுக்கு ஞாபகப்படுத்த
“அதை ஏன்டா ஞாபகப்படுத்துற நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு கொஞ்ச நேரம் சும்மா இருடா, லேசாவாது அவளை பாத்துக்கறேன்” என வாட்டமாய் சொல்ல நால்வரும் சிரித்தனர்.
வருனுக்கு சிந்துவின் நினைவாகவே இருந்தது.இன்றைய நாள் அவள் பதட்டமாகவே இருப்பது போல் அவனுக்கு தோன்றியது!
ஆனால், வருண் கேட்டால் சிந்து எதையும் கூற மாட்டாள் என்று தோன்றியதால் வருண் அவளிடம் எதையும் கேட்கவில்லை.
இங்கு
திவ்யா ராகவிற்க்கு அழைப்பை மேற்கொண்டு இருந்தாள்.
ராகவ் மருத்துவமனையில் மருந்துகளை வாங்க அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்ததால் திவ்யாவின் அழைப்பை ஏற்கவில்லை!
காலையில் ராகவ், ‘நீ போயிரு நான் அங்க வந்துருவேன்’ என ஏற்கனவே சொல்லி இருக்க தன் காதலனை காண தவிப்போடு காரிகையும் காத்துக் கொண்டே இருந்தாள். ஆனால் காதலனின் வருகை தாமதம்
ஆகிக் கொண்டே இருந்தது.
எல்லாரும் வெவ்வேறு மன நிலமையில் இருக்க, “ என்னங்க எப்படி இருக்கீங்க, என்னைய மறந்துட்டீங்களா? “என்ற குரல் கேட்க தங்களுக்குள்ளாக பேசிக் கொண்டிருந்த நால்வரும் யார் என திரும்பி பார்க்க அங்கு ராஜுவின் மச்சினிச்சி தான் நின்று கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த குணாவின் முகம் பிரகாசமானது. “நான் நல்லா இருக்கேன், உங்கள மறக்க முடியுமா?” என இளித்துக் கொண்டே கேட்க,
‘மச்சான் அவளுக்கு புள்ள இருக்கு புருஷன் இங்கதான் இருப்பான். நீ ஜொள்ளு வடிக்காத, புருஷன் காரன் பாத்தர போறான்’என அவர்கள் நால்வருக்கும் மட்டும் கேட்கும் குரலில் மணி சொல்ல மூவரும் சிரிப்பை அடக்க முடியாமல், வாய் விட்டே சிரித்து விட்டனர்.
“இவங்க எல்லாரும் ஏன் சிரிக்கிறாங்க?” என கேள்வி கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறினான் குணா.
கதையை படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டு செல்லுங்கள்.