அண்ணா மன்னிச்சிடுங்க, நீங்க பொறுமையா இருங்க நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்”என சிந்து சொல்ல அமைதியானான் ராகவ்.
“வாரே வா. அப்ப நான் சந்தேகப்பட்டது சரிதான்.அப்ப இவன் உன் கள்ள புருஷன் தான்.நீ சொல்லவும் இவ்வளவு நேரம் எகிறிக்கிட்டு வந்தவன் அமைதியா நிக்கிறான் பாரு”என மனோ மீண்டும் எள்ளலாக சிந்துவைப் பார்த்து பேச கோபத்தில் மனோவை அடித்து இருந்தாள் சிந்து.
“நானும் பார்த்துகிட்டு இருக்கேன்.அளவில்லாம பண்ணிக்கிட்டு இருக்கீங்க . உங்க கண்ணுல படாம நாங்களும் எங்கயாவது வந்து வாழனும்னு நினைச்சா அங்கேயும் வந்து எங்களை விடாமல் தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கீங்க
இதுக்கு மேல எல்லாம் உங்களுக்கு பயந்து பயந்து ஊரைவிட்டு எல்லாம் காலி பண்ண மாட்டேன்.
உங்களுக்கு என்ன வேணும்”என்று சிந்து கேட்டாள்.
இதுதான் சமயம் என்று எதிர்பார்த்து இருந்தவனோ “ எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா? பூர்வீக வீட்ட என் பேர்ல எழுதி கொடு.அப்புறம் விஷ்வத்த என்கிட்டயே கொடுத்திரு”என கேட்க, சிந்துவின் மனம் பதறியது!!
“ஏற்கனவே எங்கள மிரட்டி இருந்த சொத்தை எல்லாம் எழுதி வாங்கி குடிச்சு குடிச்சு ஒன்னும் இல்லாம ஆகிட்டீங்க இப்ப பூர்வீக வீடு ஒன்னு தான் இருக்கு. அதையும் எழுதி கேட்டு எங்களை டார்ச்சர் பண்ணிக்கிட்டு என சிந்து கண்கலங்கி கேட்க, அங்கிருந்த அனைவருக்கும் சிந்துவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது!!
“ இப்ப பூர்வீக வீடு தான வேணும் ஒரு வக்கீல் கிட்ட பேசிட்டுஉங்க பேர்ல மாத்துறதுக்கு எல்லாம் பண்றேன்.அது வர பொறுமையா இருங்க
ஆனா விஷ்வத்த என்கிட்ட இருந்து
பிரிச்சரலாம்னு நினைக்காதீங்க.அது ஒரு நாளும் நடக்காது!”என சிந்து கோபத்தில் கூறினாள்.
“என் பையன எப்படி நீ தர மாட்டேன்னு சொல்லுவ?”.. என மனோ கேட்க,
“அவன் என் பையன்” என கதறி அழுதாள் சிந்து. அதை பார்த்தவன்,
“ சரி ரொம்ப அழுகாத! உனக்கு விஷ்வத் வேணும்னா நீயே வச்சுக்க எனக்கு பூர்வீக வீட்டை மட்டும் எழுதி கொடு”என மனோ நல்லவன் போல சொல்ல , என்ன ஜென்மமோ என்பதைப்போல அங்கிருந்த அனைவரும் பார்த்தனர்.
சிந்து மட்டும் அவனை சாதாரணமாக பார்த்தாள்.ஏனென்றால் அவனுடைய முழுமையான குணம் அவளுக்கு தான் தெரியுமே!!
“பூர்வீக வீட்டை எப்ப எழுதி தருவ?” என மனோ கேட்க, “ உடனே எப்படி எழுதி தர முடியும் அதற்கான ஏற்பாடுகளை பண்ணனும்” எனசிந்து தன் தரப்பை சொல்ல,
“உன்னைய நான் நம்ப மாட்டேன். நீ எனக்கு டாடா காமிச்சிட்டு போயிருவ?, எனக்கு தெரிஞ்ச வக்கீல் வச்சு நானே எல்லா புரோசிஜரையும் பார்த்துக்கிறேன்!!
நீங்க வந்து கையெழுத்தை மட்டும் போடு” என மனோ சொல்ல,
“சரி நீங்களே ரெடி பண்ணிட்டு வாங்க,இப்ப இங்க இருந்து கிளம்புங்க ” என சிந்து அழுது கொண்டே மனோவை பார்த்து கையெடுத்து கும்பிட,
மனோ போகாமல் தன் தலையை சொரிந்தான்!!
சிந்து அவனைப் பார்த்து “என்ன பணமா?”என கேட்க
மனோ இளித்தான்.
தனது கைப்பையை திறந்து அதில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்து, “முதல்ல இங்கிருந்து கிளம்புங்க”என சிந்து சொல்ல
“என் மாமா மகளே!, இப்ப எதுக்கு இவ்வளவு அவசரப்படுற? எனக்கு வேண்டியது கிடைச்சா நான் எதுக்கு இங்கே நிக்க போறேன்!
நாளைக்கு வக்கீலோட வருவேன் எல்லாத்துக்கும் தயாரா இரு” என சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அப்போது,
பக்கத்தில் நின்ற ராகவையும், அவனை கட்டிப்பிடித்து நிற்கும் விஷ்வத்தைப் பார்த்து,
“கண்டவனெல்லாம் உனக்கு அப்பா ஆகிட முடியாது நான் தான் உன்னோட அப்பா” என நக்கலாக அந்த சிறு குழந்தையிடம் சொல்லிவிட்டு ராகவையும் பார்த்து
“உனக்கு இருக்குடா? என்னையவே அடிச்சிட்டில!!.. உனக்கு இருக்குது” என பல்லை கடித்துக் கொண்டு எச்சிலையும் துப்பி கொண்டே சொல்லிக்கொண்டு தள்ளாடி அவ்விடத்தை விட்டு மெதுவாக நடந்து சென்றான்.
சிந்து , ராகவ், விஷ்வத் மூவரும் மனோ செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர்!!
அங்கு நின்றவர்கள் மெதுவாக தங்களுக்குள்ளாக எதை எதையோ பேசி விட்டு கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.
சிந்து “ராகவை பார்த்து அண்ணா மன்னிச்சிடுங்க, என்னால உங்களுக்கும் கஷ்டம்!!
மாமா உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசிட்டு போறாரு?. நீங்க எதையும் மனசுல வச்சுகிடாதீங்க அண்ணா” என கண்கள் கலங்கி மன்னிப்பு கேட்க,
“அவன் பேசின பேச்சுக்கு மூஞ்சிய ஒடச்சிருப்பேன்!!, உங்க குடும்ப விஷயத்துல நான் தலையிட கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன்!
பேசாம இந்த குடிகார பயலே போலீஸ்ல புடிச்சு கொடுக்க வேண்டியது தானே?, அவன வச்சு உதவி இல்லை என்றாலும் நீங்க நிம்மதியாவது இருப்பீங்க” என ராகவ் சொல்ல
“அத்தைக்காக மட்டும் தான், மாமா பண்ற எல்லாத்தையும் பொறுத்துக்க வேண்டியது இருக்கு!!
நீங்களே பார்த்தீங்க தானே, மாமாவ நீங்க லேசா தட்டவும் இதுக்கு மேல என்னால பாக்க முடியாதுனு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க
மாமாவ மட்டும் நான் போலீஸ்ல புடிச்சு குடுத்தா அத்தை ரொம்ப வருத்தப்படுவாங்க?” என சிந்து கூறினாள்.
“கண்டிப்பா வருத்தப்படத்தான் செய்வாங்க!!,.. அதுக்காக நீங்களும் இப்படி தொந்தரவை சகிச்சுக்கிட்டு இருப்பீங்களா?
இங்க பாரு, அந்த ஆளு வந்ததிலிருந்து பயந்துகிட்டு என்னை கட்டிப்பிடிச்சுட்டு ராகவ் மாமா என்னைய காப்பாத்துங்க நான் அவர்கிட்ட போகலைன்னு சொல்றான்!!
பெத்த புள்ள பயந்து பக்கத்துல போகாத அளவுக்கு அந்த ஆளோட நடவடிக்கை இருக்கு” என ராகவ் சொல்ல,அப்போதுதான் விஷ்வத்தை பார்த்தாள் சிந்து.
பயந்த கோழிக்குஞ்சு நடுங்குவதைப் போல் ராகவ் கால்களை பிடித்து நடுங்கிக் கொண்டிருந்தான் விஷ்வத்.
“விஷ்வத் குட்டி அம்மா கிட்ட வாங்க” என சிந்து சொல்ல, அசையாமல் விஷ்வத் ராகவின் கால்களை பிடித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தான்!!
“என்னாச்சுடா?.. அப்பா போயிட்டாரு நீ அம்மா கிட்ட வாங்க”என சிந்து சொல்ல, மருண்டு விழித்தான் விஷ்வத்.
“ அம்மா கூப்பிட்டுக்கிட்டே
இருக்காங்கல்ல, ஏன் அமைதியா இருக்க அம்மா கிட்ட போ” என ராகவ் சொல்ல, அப்போதும் விஷ்வத்தின் நடவடிக்கைகளில் மாற்றமில்லாமல் இருக்க,
ராகவ் தன் காலை பிடித்துக் கொண்டிருக்கும் விஷ்வத்தை தன் கை கொண்டு, தூக்க அப்போதுதான்
ராகவிற்கு தெரிய வந்தது விஷ்வத்திற்கு காய்ச்சல் அடிப்பது!!
“சிந்து உடம்பு ரொம்ப சுடுது!! பயத்துல விஷ்வத்துக்கு காய்ச்சல் வந்துட்டு போல பிள்ளையை உள்ள கூட்டிட்டு போயி சிரப் இருந்தா குடு”என சொல்ல
“அவனுக்கு டெம்பரேச்சர் அதிகமான பிக்ஸ் வந்துரும் அண்ணா” என விஷ்வத்தை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.
சிந்து பதற்றத்தில் வீட்டிற்குள் நுழைய, அங்கு ஓரமாக அழுது கொண்டிருந்த சிந்துவின் மாமியார்
அவள் வருகையை பார்த்து , விஷ் வத்துக்கு என்ன ஆச்சு மனோ ஏதாவது பண்ணிட்டானா?அந்த படுபாவி புள்ளைய என்ன பண்ணுனான்?” என கேட்டுக்கொண்டே தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு சிந்துவின் அருகில் வர,
“விஷ்வத்துக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது! சிரப் கொடுக்கணும்” என சொல்லிவிட்டு சிரப் பாட்டிலை தேட, சிரப் பாட்டிலை காணவில்லை!!
ஒரு வழியாக அங்கும் எங்கும் தேடி
சிரப்பை கண்டுபிடித்து விட, சிரப்பாட்டில் காலியாக இருந்தது!!
“அச்சச்சோ சிரப் வாங்கனும்னு நினைச்சேன் மறந்துட்டேனே” எனசிந்து சொல்லிக் கொண்டு விஷ்வத்தை பார்க்க, டெம்பரேச்சர் அதிகமானதால்
விஷ்வதிற்க்கு பிக்ஸ் வந்தது!!
விஷ்வத்… என கத்திக்கொண்டு சிந்து அலறி அடிக்க ,சிந்துவின் மாமியாரும் விஷ்வத் என கத்த தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ராகவ் காதுகளில் இரு பெண்களின் அலறல் சத்தம் கேட்க எதையும் யோசிக்காமல்.
“என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைய விஷ்வத்தை பார்த்து அதிர்ந்தான் ராகவ்
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களை மதிப்பீடுகளின் தந்து விட்டு செல்லுங்கள்.