“ராஜுவின் மச்சினிச்சி ஏன் இவங்க எல்லாரும் சிரிக்கிறாங்க?”என கேட்க
“ஒன்னும் இல்ல சும்மா அவங்களுக்குள்ள வேற எதையோ பேசி சிரிக்கிறாங்க,
இங்க டிஸ்டபன்ஸா இருக்கு , நம்ம ரெண்டு பேரும் தனியா பேசுவோமா?”
என்று கேட்டான் குணா.
அந்தப் பெண் சரியென சொல்ல இவர்கள் நால்வரும் குணாவை முறைத்தனர்.
இந்த முறை குணா இவர்களை நக்கலாக பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே சென்றான்.
இங்கு ஷாலினியோ குணா செல்வதை பார்த்து இருவரும் என்ன பேசுவார்கள், என்ன செய்வார்கள் என்று யோசித்து நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்.
“என்ன அம்மணி ரொம்ப கோவமா இருக்கிற மாதிரி தெரியுது?”என திவ்யா நக்கலாக கேட்க,
“ஏண்டி என் நிலைமை பார்த்தா உனக்கு கிண்டலா தெரியுதா?” என ஷாலினி கோபமாக கேட்டாள்.
“நான் என்னடி பண்ணுனேன்” என திவ்யா கேட்க
“நானே அந்த கருவாச்சி என் ஆள கடத்திட்டு போயிருவாளோனு பயத்துல ஒக்காந்து இருக்கேன். அது தெரியாம நீ நக்கல் பண்ணிக்கிட்டு இருக்க” என சொல்லிவிட்டு நகத்தை கடித்து மீண்டும் துப்பினாள்.
“இது எப்போதிலிருந்து?” என திவ்யா அதிர்ச்சியாக கேட்க” ரொம்ப நாளாவே தான். நானும் என் மனசுல உள்ளதை எப்படியாவது அவன் கிட்ட சொல்லலாம்னு பார்த்தா, அவன் பக்கத்துல இருக்குற என்னைய தவிர எல்லாரையும் பார்த்து கிட்டு இருக்கான்”
என சோகமாய் சொல்ல,
“விடுடி அவனுக்கு உன்னோட அருமை தெரியல, இப்ப கூட பாரு மூணு பிள்ளைங்க இருக்கு,அவ கூட போறான்” என கூறினாள் திவ்யா.
“அவளுக்கு பிள்ளை எல்லாம் இல்ல”என ஷாலினி சொல்ல
“என்னடி சொல்ற? நீதான சொன்ன அவளுக்கு மூணு புள்ள இருக்குன்னு”
“அது வந்து திவ்யா….. நான் பொய் சொன்னேன்”
“ என்னடி சொல்ற? “
“ஆமாம், ராஜுக்கு கல்யாணம் முடிஞ்சப்ப குணா அந்தப் பொண்ணு பின்னாடி கல்யாண வீடு முழுக்க சுத்துனது நமக்கு தெரியும். நீங்க எல்லாரும் அதை விளையாட்டாவே எடுத்து சிரிச்சீங்க. என்னால அதை இயல்பா எடுத்துக்க முடியல.
நம்ம கல்யாணத்தை முடிச்சிட்டு வெளிய கிளம்பி வரும்போது அந்த பொண்ணு என்னைய தேடி வந்து,
நீங்க குணாவோட பிரண்டு தானே? அவரை எனக்கு புடிச்சிருக்கு, இத அவர்கிட்ட சொல்ல வெட்கமா இருக்கு நீங்களே அவர்கிட்ட சொல்லுறீங்களானு சொல்லிட்டு ஒரு லெட்டரை எழுதி, அதுல அந்த பொண்ணோட போன் நம்பரையும் எழுதி கொடுத்துச்சு. அத குணா கிட்ட குடுத்தால் அந்த புள்ளைய தேடி போவான். அவங்க ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிப்பாங்கன்னு நினைச்சுகிட்டு அந்த லெட்டரை யாருக்கும் தெரியாம வாங்கிட்டு என்னோட வீட்டுக்கு போயிட்டேன்.
நான் நினைச்ச மாதிரி எதுவும் நடந்திட கூடாதுன்னு திட்டம் போட்டு மாமா மகன் கிட்ட கொடுத்து’ என்னைய மன்னிச்சிருங்க. எனக்கு ஊர்ல அத்தை மகள் இருக்கா. அவளைத்தான் நான் கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லச் சொன்னேன். அவனும் நான் சொன்னத அப்படியே சொல்லிட்டான்.
அந்தப் பொண்ணு என்னை மன்னிச்சிருங்க,எனக்கு உங்கள ரொம்ப புடிச்சி இருந்துச்சு!அதனால தான் உங்ககிட்ட சொன்னேன். பரவால்ல எனக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் போலன்னு வருத்தப்பட்டு சொல்லிட்டு போனை வச்சிட்டா’ என நடந்ததை கூறினாள் ஷாலினி.
“என்னடி இவ்வளவு நடந்து இருக்கு. குணா அந்த பொண்ண நெனச்சு எவ்வளவு பீல் பண்ணிக்கிட்டு
இருந்தான்னு உனக்கு தெரியும் தானே!! ஒரு வார்த்த அவன் கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம்ல?” என திவ்யா சொல்ல
“சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்.அவ பின்னாடியே போய் இருந்திருப்பான். குணா எனக்கு மட்டும் வேணும்னு நினைச்சேன்.அதனாலதான் அந்த பொண்ணு சொன்னதை எதையும் சொல்லல. இப்ப அந்த பொண்ணு ஏதாவது சொல்லிட்டால் பெரிய பிரச்சனையாயிடும் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல?” என பதட்டப்பட்டாள் ஷாலினி.
“அதெல்லாம் ஒன்னு ஆகாது.
நீ எதுவும் பீல் பண்ணாத,இப்ப அவனே வந்து என்ன நடந்துச்சுன்னு சொல்லுவான்” என திவ்யா சொல்ல ஷாலினிக்கும் அதுவே சரியென பட இருவரும் அமைதியாக இருந்தனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு அங்கு வந்த
குணா கோபத்தில் ஷாலினியின் கன்னத்தில் அறைந்திருந்தான்!!
குணா அடித்த அடியில் ஷாலினியின் கண்ணில் கண்ணீர் வர மற்ற நால்வரும் “இப்ப எதுக்கு அவள அடிச்ச? என கேட்டனர்.
“அது எங்க ரெண்டு பேருக்குள்ள பர்சனல் அத கேட்காதீங்க” என குணா சொல்ல
“எங்களுக்கு தெரியாம என்ன பர்சனல் உங்க ரெண்டு பேருக்கும்! அப்படியே பர்சனல் இருந்தாலும் பொது இடத்தில இப்படியா கை நீட்டுவ?” என கேட்டாள் திவ்யா.
வருண் மெதுவாக திவ்யாவின் கையை பிடித்து” எதுவும் பேசாத?” என தடுக்க அமைதியானாள் திவ்யா. குணா கோபமாக நிற்க ஷாலினி அழுதுக் கொண்டிருந்தாள்.மற்ற மூவரும் யாருக்கு சமாதானம் சொல்லுவது என்று தெரியாமல் நின்றனர்.
ஒன்றாக வந்த ஐவரும் ஒருவர் மற்றவரிடம் பேசாமல் நின்று கொண்டிருக்க அவர்களின் அருகில் வந்தார் ஹெச்.ஆர்.
“எப்ப வந்தீங்க, வேலைய முடிச்சிட்டீங்களா?ஏன் எனக்கு இன்னும் மெயில் அனுப்பல! இவ்வளவு நேரம் உங்க மெயிலுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்” என்று ஹெச். ஆர் சொல்ல ஐவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
அவர்களின் முகப்பாவத்தை கவனித்த ஹெச் ஆர், “ என்னாச்சு பதில் சொல்லாமல் ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கீங்க?”என கேட்க,
“இன்னும் மெயில் வரலையா சார்”
என கேட்டான் வருண்.
“அந்த மெயிலுக்கு தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் மேன்,மெயில் இன்னும் வரல?”என சொல்ல,
‘இந்நேரம் சிந்து வேலைய முடிச்சு மெயில் அனுப்பி இருக்கணும். ஆனால் ஏன் அனுப்பல?’என வருண் யோசித்தான்!
“சாரி சார் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு அனுப்பிடுவோம்”என வருண் சொல்ல,
“நேரமில்ல, அலட்சியமா இருக்காதீங்க?” என கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
“ஏற்கனவே இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இந்த சிந்து வேற? முடிக்க முடியலைன்னா அப்பவே என்னால முடியாதுன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே!” என்று கோபமாக திவ்யா கேட்டுக் கொண்டே சிந்துவிற்கு அழைப்பை விடுத்தாள்.
சிந்து பதட்டத்தில் அலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றதால் அழைப்பை ஏற்கவில்லை.
“சிந்து போன எடுக்கலையா? நில்லு என்னோட போன்ல இருந்து ட்ரை பண்ணி பாக்குறேன்” என மணி அவனுடைய அலைபேசியில் இருந்து சிந்துவிற்கு அழைப்பை மேற்கொள்ள அழைப்பை ஏற்கவில்லை.
அனைவரும் சிந்துவை வசை பாடி கொண்டிருக்க சிந்துவுக்கு
ஏதோ ஆயிருக்குமோ? என்று படபடப்பாக இருந்தது வருணுக்கு மட்டும் !
அவளுடைய போன் எண்ணை தவிர அவளை பற்றி எதுவும் தெரியாததால் என்ன செய்யெல்லாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்!
மற்ற நால்வரும் ‘இந்த சிந்து செய்ய முடியாதுன்னு அப்பவே சொல்லி இருந்தால் நம்ம முடிச்சுட்டு வந்து இருப்போம்ல,
இவ்வளவு அலட்சியமா இருப்பாளா?போன் பண்ணுனால் கூட எடுக்க மாட்டேங்குறா!அவள நம்பிட்டு வந்தது நம்ம மேல உள்ள தப்பு’ என சிந்துவை பற்றி அதிருப்தியில் பேச ஆரம்பித்து விட்டனர்.
நண்பர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட வருணோ, சிந்துவின் இச்செயல் தன் நண்பர்களோடு
கொண்ட நட்பையும் அவளின் வேலையையும் பாதிக்கும் என்று உணர்ந்து,
“காய்ஸ் நீங்க எல்லாரும் இருங்க. நான் என்னாச்சுன்னு பாத்துட்டு வந்துடறேன்” என சொல்லிவிட்டு தன்னுடைய புல்லட்டை எடுத்துக் கொண்டு தன்னுடைய ஆபீஸிற்க்கு விரைந்தான்.
அங்கு சிந்து போட்டதை போட்டபடி சிஸ்டத்தை கூட ஆப் செய்யாமல் போயிருக்க, ஏதோ தவறாக நடந்து திருக்கிறது என்பதை மட்டும் யூகித்தான் வருண்.
தன்னவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று தவிப்போடு யோசிக்க தொடங்கினான் நம் நாயகன்.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டு செல்லுங்கள்.