அனைவருக்கும் வெளிநாடு செல்லும் கனவு கண்களில் மின்ன வெகு சிரத்தையோடு தங்களின் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்!!
நம் நாயகியின் மனமோ தன் மகனையே நினைத்துக் கொண்டிருந்தது.
ஆபீஸில் வேலை நேரம் முடிந்து அனைவரும் ஒவ்வொருவராக சென்று விட்டனர்.
ஹெச் ஆர்… வருணை அழைத்து, “என்னாச்சு வருண் ?ப்ராஜெக்டை செஞ்சு முடிச்சிட்டீங்களா?இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்” என கேட்க,
“செஞ்சுகிட்டே இருக்கோம் சார், இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்” என்று வருண் கூறினான்.
“நேரம் ஆகிட்டு, அப்போ ஒன்னு பண்ணுங்க!!… நம்ம கொலீக் ராஜு வீட்டில பங்க்ஷன் இன்னைக்கு தான், நான் அங்க போகணும்.அதனால கிளம்புறேன். உங்களையும் இன்வைட் பண்ணிருக்கான்ல?” என ஹெச். ஆர் கேட்க
“ஆமா சார் நாங்களும் போகணும். கண்டிப்பா வந்துடனும்னு வற்புறுத்தி சொன்னாரு”என வருண் கூறினான்.
“சரி நீங்க ப்ராஜெக்ட்ட முடிச்சுட்டு எனக்கு மெயில் பண்ணுங்க.
நான் பாத்துட்டு எதாவது கரெக்ஷன் இருந்தா உங்களுக்கு சொல்றேன். நீங்க அத சரி பண்ற மாதிரி இருக்கும்.
இன்வாய்ஸ் எல்லாம் சரியா பண்ணிருங்க.அதுல எந்த தப்பும் விட்ற கூடாது.அதுல தான் வினோத் டீம் தப்பு பண்ணிட்டாங்க.நீங்க சரியா பண்ணிருங்க”என ஹெச். ஆர் சொல்ல, “சரி சார்” என கூறினான் வருண்.
இங்கு அனைவரும் சென்று விட வருண் மணி, குணா, ஷாலினி, திவ்யா, சிந்து என ஆறு பேரும் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
எப்படியோ ஆறு பேரின் உழைப்பில் ப்ராஜெக்ட் முடிக்கப்பட்டது.ஆனால் வெகு நேரமாகிருந்தது.
மச்சான்,” ராஜு வேற கண்டிப்பா வந்துருன்னு சொன்னா வரலைனா சங்கட்டப்படுவான்”என மணி சொல்ல,
“ஆமா மச்சான், கண்டிப்பா போகணும், ஆனா இப்பவே நேரம் ஆயிருச்சு”என கூறினான் குணா.
“இப்ப என்ன செய்யலாம்?” என கேட்டனர் ஷாலினியும் திவ்யாவும்!!
வருணுக்கு ஒரு யோசனை தோன்ற சிந்துவைப் பார்த்து,” நீங்களுமா பங்க்ஷன் வர்றீங்க?”எனக் கேட்க
“ இல்ல வருண் “என கூறினாள் சிந்து.
“சரி அப்போ ஒரு வேலை பண்ணுங்க. நாங்க ஃபங்ஷன் போகணும்.இப்பயே லேட் ஆயிருச்சு அதனால நாங்க அஞ்சு பேரும் இப்ப கிளம்புறோம்.நீங்க இந்த டாக்குமெண்ட மட்டும் ஹெச் ஆர் சாருக்கு அனுப்பிட்டு, உங்க மெயில்லையும் காப்பி பண்ணி வச்சிருங்க”என சொல்ல,
“அது வந்து வருண்…” என ஏதோ சொல்ல வர, “ ப்ளீஸ் ராஜு எங்க கூட இந்த ஆபீஸ்ல ரெண்டு வருஷமா வேலை பார்க்கிறான்.கண்டிப்பா நாங்க எல்லாரும் போகணும்.போகலைனா வருத்தப்படுவான்.எங்களுக்கு நேரம் இருந்தா நாங்களே முடிச்சுட்டு போயிருவோம்.ஆனா இப்ப நேரம் இல்ல,
அதான் உன்கிட்ட சொல்றோம். நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க “என திவ்யாவும் சொல்ல அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு
“சரி நான் பாத்துக்கிறேன் நீங்க கிளம்புங்க “..என கூறிவிட்டாள் சிந்து.
“ரொம்ப நன்றி” என ஷாலினி, மணி குணா திவ்யா என நால்வரும் சொல்ல, “ சிந்து உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே? அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லிருங்க!”என வருண் தன் சந்தேகத்தை கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல!நான் பாத்துக்குறேன் வருண் “ என சிந்து சொல்ல ஐவரும் விடைபெற்றனர்.
இங்கு ப்ராஜெக்டை தன்னுடைய லேப்டாப்பில் காப்பி பேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தாள்!!!
அப்பொழுது சிந்துவின் அலைபேசி அடித்தது. யாரென எடுத்துப் பார்க்க சிந்துவின் மாமியார் எண்ணில் இருந்து வந்திருந்தது.
“ஹலோ அத்தை”
“சிந்து நீ எப்ப வருவ?.. இங்க மனோ விஷ்வத்த கேட்டு ரொம்ப பெரிய பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கான்.
தர மாட்டேன்னு சொல்லியும் கேட்காம, விஷ்வத்த தூக்கிக்கிட்டு போக பார்க்கிறான். பயத்துல விஷ்வத்தும் அழுகிறான்”என பதட்டமாய் சொல்லி முடித்தும் முடிக்காமலும் இருக்க,
“இந்த வந்துடறேன் அத்தை”என சொல்லிவிட்டு, தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு , தன்னுடைய ஹேண்ட் பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு விரைந்தாள் வீட்டிற்கு!!
இங்கு
மனோ பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்க சத்தம் அதிகமாக கேட்டதை கண்டு எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்தான் ராகவ்.
“அம்மா என் பையன கொடு”என நிக்க திராணியில்லாமல் குடிபோதையில் கேட்டுக் கொண்டிருந்தான் மனோ.
மனோவின் அம்மாவோ,” ஏண்டா குடிகார பயலே இப்படி குடிச்சிட்டு வந்து உயிரை வாங்குற?ஒழுங்கா இங்கிருந்து போ. பெத்த மகனாச்சேன்னு நீ பண்றது எல்லாம் பொறுத்து போய்க்கிட்டு இருக்கேன். இல்ல போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுவேன்” என சொல்ல, சிரித்தான் மனோ.
“போலீசா?.. வர சொல்லு! என் மகனை நீங்க வச்சுக்கிட்டு என்கிட்ட குடுக்க மாட்டேங்கிறீங்கன்னு நான் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் “… என அந்தப் போதையிலும் தள்ளாடி கொண்டே பேசினான்.
வலுக்கட்டாயமாய் விஷ்வத்தின் கையைப் பிடித்து, அப்பா கூட வாடா என கூப்பிட, விஷ்வத் பயந்து கொண்டு நான் வரமாட்டேன். உன் கூட வந்தா நீ என்னை அடிப்ப. நான் அம்மாகூடயே இருக்கிறேன்”என அந்தப் பிஞ்சு சொல்லி அழுக, அங்கு பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் மனோவை சத்தம் போட்டனர்.
“இது எங்க குடும்ப விஷயம்!!..இதுல யாரும் தலையிடாதீங்க?”என அசிங்கமாய் மனோ பேச அனைவரும் அமைதியாக இருந்தனர்.
இங்கு நிலவரம் மோசமாக மாற, விஷ்வத்தின் அழுகையை காண முடியாமல் , இவ்வளவு நேரம் அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராகவ் அங்கு வந்தான்!!
ராகவை பார்த்ததும்,” அங்கிள் அப்பா கூட போறதுக்கு எனக்கு விருப்பம் இல்லை அப்பாவை போக சொல்லுங்க”என விஷ்வத் அழுது கொண்டே ராகவின் பக்கத்தில் சென்று சொல்ல
“சார் அதான் பையன் வரமாட்டேன்னு சொல்றான்ல. ஏன் வலுக்கட்டாயமா கூப்பிடுறீங்க.குடிச்சிட்டு வேற வந்து இருக்கீங்க” என ராகவ் சொல்ல,
“ நீ யார்டா, நான் குடிச்சிட்டு வருவேன் இல்ல குடிக்காம வருவேன்!என் பையன நான் கூப்பிடுறேன் உனக்கு என்ன?”என மனோ கேட்டான்
“ அது இல்ல சார், இது உங்க குடும்ப விஷயம்தான்… ஆனா பையன் பயப்படுறான்ல!”என அழுது கொண்டிருந்த விஷ்வத்தை பார்த்து சொல்ல,
“அது எனக்கு தெரியும்!!.. போடா ***** பயலே” என மனோ ராகவை பார்த்து கேட்ட அடுத்த நொடி கோபத்தில் மனோவை அடித்திருந்தான் ராகவ்.
ஏற்கனவே போதையில் தள்ளாடி இருந்தவன் வாங்கிய அடியின் வீரியத்தின் காரணமாக நிலத்தில் விழுந்தான்!!
“தம்பி அடிக்காதப்பா, அவன் அடிதாங்க மாட்டான்”என தடுத்த சீதாவின் முகத்திற்காக ஒரு அடியோடு விட்டுவிட்டான் ராகவ்.
சீதாவின் மனமோ மகன் கீழே விழுந்ததை பார்க்கவும் பதறியது!!.. பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பிள்ளையாயிற்றே!
விழுந்தவனை தூக்க முயற்சி செய்ய,
“ கிழவி ஆளு வச்ச அடிச்சிட்டு , அடிக்காதீங்கன்னு சொல்லி நடிக்கவா செய்ற?”என மனோ சீதாவை பார்த்து கேட்டான்.
“ஏண்டா இப்படி பேசுற? இப்படி அடி வாங்கி சாவவாடா உன்னை பெத்தேன்?”என சீதா அங்கலாய்த்து கொண்டே தூக்கிவிட மெதுவாய் எழுந்த மனோவோ, எதிரே கடுங்கோபத்தில் நின்று கொண்டிருந்த ராகவை பார்த்து,
“எதுக்குடா என்னை அடிச்ச? யார்ரா நீ “என கேட்டுக்கொண்டே ராகவை திருப்பி அடிக்க முயற்சி செய்ய
“ஒழுங்கா ஓடிரு, நீ இதுக்கு மேல இங்க நின்னு தகராறு பண்ணுனால் என்ன நடக்கும்னு நான் சொல்ல மாட்டேன்”என ராகவ் தன்னை அடிக்க வந்த மனோவை லேசாக தள்ளிவிட, போதையில் இருந்ததால் மீண்டும் கீழே விழுந்தான் மனோ!!
விழுந்த மனோவை பார்த்து, “ யாரடா தே**பயலேனு சொல்ற? சரி ஏதோ குடிபோதையில் உளறிக்கிட்டு இருக்கன்னு நானும் பொறுமையா உன் கிட்ட பேசிட்டு இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவியா?” என்று கேட்டான்.
அவனின் கால்களை பயத்தில் கட்டிப்பிடித்து இருந்த விஷ்வத்தை பார்த்து, “ இங்க பாரு இது உன் மகன் தானே? உன்னைய பார்த்துட்டு எப்படி பயப்படுறான் பாரு,அந்த அளவுக்கு உன் லட்சணம்.
இவனுக்கு நீ நல்ல தகப்பனா நடந்திருந்தேனா இந்நேரம் அப்பா நானே உன் கூட வரேன்னு உன்னை கட்டிப்பிடிச்சு உன் கைபிடிச்சுட்டு கூட வந்திருப்பான்.
இவன் உன்னைய பார்த்து பயப்படறதுலையே தெரியுது நீ எப்படி நடந்து இருக்கேன்னு, ஒழுங்கா ஓடிரு இல்ல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து, முட்டிக்கு முட்டி தட்டிருவேன்?”என ராகவ் சொல்லிக் கொண்டிருக்க
தன் வீட்டு வாசலில் கூட்டமாக ஆட்கள் நிற்பதை பார்த்துவிட்டு, பயந்து கொண்டு “என்னாச்சுன்னு தெரியலையே?”என நினைத்துக் கொண்டு, கூட்டத்தை நகர்த்திக்கொண்டு வந்தாள் சிந்து.
மனோ கீழே விழுந்து கிடப்பதை பார்த்துவிட்டு , அங்கு பார்க்க சீதா அழுது கொண்டிருந்தார்!!
விஷ்வத்தோ ராகவ் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான்!!
அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகித்துவிட்டாள் நம் நாயகி.
“இங்க பாரு எப்படி அடி வாங்குகிறானு,
பெத்த மனசு இவன் இப்படி அடி வாங்குறதை பார்க்க முடியல?
நான் உள்ள போறேன்!” என சொல்லிவிட்டு, அழுது கொண்டு உள்ளே ஓடினார் சீதா .
அங்கு வந்த சிந்துவை பார்த்ததும் மனோவிற்கு கோபம் வர, “ வாடி வா?.. உன்னத்தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்!!.. யார்டி இவன், என் மகனை நான் கேட்டா என்னைய வந்து அடிக்கிறான். இவன்தான் உன் கள்ள புருஷனா?” எனக் கேட்க அங்கே இருந்த அனைவரும் அதிர்ந்தனர்