• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
44
வள்ளியின் ஆச்சரியப் பார்வையில் வாய்விட்டுச் சிரித்தான் கார்த்திகேயன்‌.

"நீ எந்த உலகத்துல வாழுற வள்ளி?" எனக் கேட்டுச் சிரித்தான்.

"அய்யோ இந்த மல்லிகா செய்றது எவ்ளோ பெரிய துரோகம். இவங்களுக்காகத் தானே இவங்க புருஷன் வெளிநாட்டுல போய்க் கஷ்டப்பட்டு வேலைச் செஞ்சிட்டு இருக்காரு. ஆனா இவங்க அவங்களுக்குத் துரோகம் செஞ்சிட்டு இருக்காங்க. எவ்ளோ பெரிய பாவம் இது" என்றிவள் கூறவும்,

"பாவம் புண்ணியம்லாம் இப்ப யாரு பார்க்கிறா வள்ளி? மல்லிகாவோட புருஷனுக்கு இவ செய்றதுலாம் தெரிஞ்சிருக்கக் கூட வாய்ப்பிருக்குனு தான் எனக்குத் தோணுது. எது எப்படியோ இதுலருந்து உதயா வெளில வந்தா சந்தோஷம் தான். அப்பா அதுக்கான முயற்சிகள் எடுக்கிறேன்னு சொல்லிருக்காங்க" என்றான் கார்த்திகேயன்.

"மாமா கிரேட்ங்க. நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ இப்படி ஒரு நல்ல குடும்பத்துல வாக்கப்பட்டிருக்கேன். முருகனுக்குத் தான் நன்றி சொல்லனும்" என்றவள் கையெடுத்துக் கும்பிட,

"ஆமா முருகர் தான் நம்மளை சேர்த்து வச்சிருக்காரு வள்ளி" என்று ஆமோதித்தான் கார்த்திகேயன்.

அடுத்து வந்த வாரத்தில் இவளுக்கு மீட்டிங் இருக்க, காலையில் கிளம்பும் பொழுதே கார்த்திகேயனிடம் பதட்டத்துடன் உரைத்திருந்தாள் வள்ளி.

"மீட்டிங்ல பேச வேண்டியதுலாம் தயார் செஞ்சிட்ட தானே வள்ளி" எனக் கேட்டான் கார்த்திகேயன்.

"ஹ்ம்ம் ஓரளவுக்குச் செஞ்சிட்டேன். மீதி இன்னிக்குப் போய்ப் பார்க்கனும்" பயத்துடன் உரைத்தாள் வள்ளி.

"ஓகே இப்ப எதையெல்லாம் நினைச்சு இப்படி நீ பயப்படுற! அதைச் சொல்லு" கையில் பேனாவையும் தாளையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான் கார்த்திகேயன்.

"என்ன செய்றீங்க? டைமாகுது கிளம்புங்க" என்று வள்ளி அவசரப்படுத்த, "இப்படி நீ பிராக்டிஸ் செஞ்சீனா தான் உன் பயத்தைப் போக்க முடியும் வள்ளி" என்றான்.

"புதுசா எதுவும் இல்லைங்க. அன்னிக்கு நான் தியா மேடம்கிட்ட சொன்ன அதே காரணங்கள் தான்" என்றாள்.

"ஓ ஓகே! அப்ப நான் சொல்றதை கூடச் சேர்ந்து சொல்லு" என்றவன்,

"இன்னிக்கு நான் மீட்டிங்ல தைரியமா பேசுவேன்" என்று சொல்லி விட்டு அவளின் முகத்தைப் பார்க்க,

அவள் சங்கோஜத்துடன் அவனைப் பார்க்க, "இதுக்குப் பேரு பாசிட்டிவ் மேனிபெஸ்டேஷன். நம்ம எண்ணங்கள் தான் நம்மளை வழி நடத்தும் வள்ளி. நான் இப்ப சொல்றதைச் சொல்லு " என்றான்.

அவள் சின்னக் குரலில் சொல்ல, "ம்ப்ச்" என்றவன் அவளைத் தள்ளிச் சென்று கண்ணாடியின் முன் நிறுத்தி பின்னே நின்று கொண்டான்.

"இப்ப உன் முகத்தைப் பார்த்துச் சத்தமா சொல்லு"

"நான் இன்னிக்கு மீட்டிங்ல தைரியமா பேசுவேன்" என்றவன் சொன்னதும்,

இவளும் கண்ணாடியைப் பார்த்தவாறு சத்தமாய் உரைத்தாள்.

"என் மேனேஜரும் க்ளையண்ட்டும் சந்தோஷமாகுற மாதிரி கான்பிடன்ட்டா பேசுவேன்" என்றவன் சொன்னதும் அவனின் பின்னேயே இவளும் சொன்னாள்.

"டுடே இஸ் மை டே! வள்ளிக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும்" என்றவன் சொல்ல, இவளும் அப்படியே சொன்னாள்.

கண்ணாடியில் அவள் முகம் பார்த்துச்‌ சிரித்தவனாய் அவளைத் தன்புறம் திருப்பி இறுக அணைத்து அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன், "ஆல் இஸ் வெல்" என்றான்.

அவளும் அவனை இறுக அணைத்தவளாய், "ஆல் இஸ் வெல்" என்றாள்.

ஒரு விதமாக மனத்திற்குள் புதுத் தெம்பு வந்தது போல் மனப்பலம் அதிகரித்தது போல் உணர்ந்தாள் வள்ளி.

உள்ளம் குதூகலித்திட, "லவ் யூ கார்த்தி" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவன் இதழ் முறுவலித்திட, "இதை அட்வான்ஸ்ஸா வச்சிக்கிறேன். இன்னிக்கு மீட்டிங்கை சக்சஸ்புல்லா முடிச்சிட்டு வந்ததும் நான் சொல்லிக் கொடுத்த மாதிரி முத்தம் கொடுக்கனும் சரியா!" என்று கண் சிமிட்டினான்.

"முத்தம் தானே கொடுத்துட்டாப் போச்சு" என்று அவனது மறுகன்னத்திலும் முத்தமிட்டவள், "சரி சரி வாங்க டைம் ஆகிடுச்சு" என்று பையினை எடுத்தாள்.

அன்று மதியம் உணவு இடைவேளையின் போதும் அங்கேயே உண்டு விட்டு இந்த மீட்டிங்காகத் தன்னைத் தயார்படுத்துதலில் அவள் இருக்க, "ஆல் த பெஸ்ட் வள்ளி! யூ கேன் டூ இட் (All the best Valli! You can do it) என்று அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான் கார்த்திகேயன்.

அவனின் குறுஞ்செய்தியைப் பார்த்ததும் மகிழ்ந்தவளாய், துடிக்கும் இதயத்தை அனுப்பி வைத்தாள் வள்ளி.

அன்று மூன்று மணிக்கு மேல் மீட்டிங் முடிந்த மறுநொடி கார்த்திகேயனுக்கு அழைத்தாள்.

"நான் உங்களை உடனே பார்க்கனும்" அமைதியான குரலில் அவள் கூறவும், "இதோ வரேன். கேண்டீன்க்கு பின்னாடி இருக்க ஜிம்க்கு வா" என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ஏதும் சொதப்பி விட்டாளா என்று யோசித்தவாறே அங்கு அவன் வந்து நின்றதும், குதூகலத்துடன் அவனை நோக்கி ஓடி வந்தவள் சட்டென அவனை அணைத்து விட்டு தள்ளி நின்றாள் வள்ளி.

திடுமென எதிர்பாரா அவளின் இச்செயலில் திகைத்து விழித்து அவளைப் பார்த்தவன் குறும்புச் சிரிப்புடன், "என் பொண்டாட்டிக்கு நான் வேணும் போலயே" என்று அவளை அவன் அணைக்கப் போவது போல் போக,

"அய்யோ பப்ளிக் பப்ளிக்" என்று விலகி நின்றாள் வள்ளி.

"இந்த நேரத்துல இங்கே யாரும் வர மாட்டாங்கனு தான் உன்னை இங்கே வர சொன்னேன். யாரும் இல்லாததுனால தானே தைரியமா அவசர கட்டிப்பிடி வைத்தியம் செஞ்ச" என்று கண் சிமிட்ட,

"மீட்டிங் பத்தி கேட்காம கடலைப் போட்டுட்டு இருக்கீங்க?" என்று அவனை முறைத்தாள் அவள்.

"அதான் என் பொண்டாட்டி முகம் தவுசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி எரியுதே" என்றவனாய் அவளின் கன்னத்தைக் கிள்ளினான்.

"சரி வா அப்படியே டீ குடிச்சிட்டே பேசுவோம்" என்றவன் அவளுக்கும் சேர்த்து தேநீர் ஆர்டர் கொடுத்து, இரண்டு தேநீர் கோப்பையையும் எடுத்து வந்து மேஜையில் வைத்தான்.

"மேனேஜர் கால் முடிஞ்சதும், சூப்பர் பிரசன்டேஷன்னு மெசேஜ் செஞ்சாரு" சந்தோஷமாய் உரைத்தாள் வள்ளி.

"ஹ்ம்ம் குட்! குட்" என்ற கார்த்திகேயன், "இதை எல்லா மீட்டிங்கும் ஃபாலோ செஞ்சி, 'பயமா.. எனக்கா.. நெவர்னு' சொல்ற வள்ளியா நீ மாறனும்" என்று ஊக்கமூட்டினான்.

அன்றிரவு வெற்றியின் கொண்டாட்டமாய் வள்ளியை முத்தப்பாடங்களை எடுக்க வைத்து அவளைக் கொண்டாடி மகிழ்ந்தான்.
 
Joined
May 20, 2025
Messages
44
நாள்கள் பறந்தோட இவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதமாகி இருந்த நிலையில் ஒரு நாள், அலுவலகத்தில் வேலைச் செய்து கொண்டிருக்கும் போதே வள்ளிக்கு அழைத்த கார்த்திகேயன், "உனக்கு இப்ப ஒருத்தங்க கால் செய்வாங்க. அவங்க கேட்குறதுக்குலாம் பதில் சொல்லு போதும்" என்று அவளை மறுமொழி பேச விடாமல் அழைப்பை வைத்திருந்தான்.

அவன் வைத்த மறுநிமிடம் அவளுக்கு அழைப்பு வந்தது.

கார்த்திகேயனின் மனைவி வள்ளி தானே என்று கேட்டுப் பேசியவர்கள், அவளின் திருமணத்தைப் பற்றியும் காதலைப் பற்றியும் சில கேள்விகள் கேட்டனர். அவர்கள் கேட்டவனவற்றுக்குத் தனது மனத்தில் தோன்றியதைக் கூறியிருந்தாள் வள்ளி. விவாதம் போன்று சில கேள்விகளைக் கேட்டதற்கு அவளின் கருத்துகளைப்‌ பகிர்ந்து கொண்டாள்.

அவர்கள் இணைப்பை வைத்த மறு நொடி கார்த்திகேயனுக்கு அழைத்தவள், அவர்கள் அழைத்துப் பேசியதைக் கூறி விட்டு, "ஆமா யாரு அவங்க? எதுக்கு இந்தக் கேள்வி எல்லாம் கேட்குறாங்க" எனக் கேட்டாள்.

"அதை நான் சாயங்கலாம் சொல்றேன்" என்று விட்டான்.

மாலை மகிழுந்தில் வீட்டிற்குச் செல்லும் போது அதையே அவள் கேட்க, "இன்னும் ரெண்டு மூனு நாள் கழிச்சி இதுக்குப் பதில் சொல்றேனே" என்று விட்டான் கார்த்திகேயன்.

அன்று சனிக்கிழமை காலை தாமதமாக எழுந்தவனின் அலைப்பேசிக்கு வந்த அழைப்பையேற்றுப் பேசி விட்டு வைத்ததும் மகிழ்வில் துள்ளிக் குதித்தவனாய், "வள்ளி" என்று சத்தமாய் அழைத்திருந்தான்.

அத்தையுடன் சமையலறையில் வேலைச் செய்து கொண்டிருந்தவள், 'எதுக்கு இப்படிக் கத்துறாரு' என்று எண்ணியவளாய், "இதோ வரேன் அத்தை" என்று உரைத்து விட்டு அறையை நோக்கிச் சென்றாள்.

அவள் அறைக்குள் நுழையவும், "நாம செலக்ட் ஆகிட்டோம் வள்ளி" என்று கத்தியவாறு அவளை அணைத்துத் தூக்கிச் சுற்றிக் கீழே இறங்கினான் கார்த்திகேயன்.

திடீரென்று அவன் தூக்கிச் சுற்றியதில் நெஞ்சம் படபடக்க லேசாய் அலறியவாறு அவனின் தோளை இறுக்கமாய்ப் பற்றியவள், அவன் இறக்கிவிட்ட பிறகும் தலைச்சுற்றலில் அவனை அணைத்தவாறு நின்றிருந்தாள்.

"நாம செலக்ட் ஆகிட்டோம் வள்ளி" என்று அவளின் முகத்தைப் பற்றியவாறு அவன் கூறவும், அவள் புரியாது அவனைப் பார்க்க,

"அன்னிக்கு உனக்குப் போன் செஞ்சி பேசினாங்களே, நம்ம லவ் பத்திலாம் கேட்டாங்களே" என்று நினைவுறுத்த,

"ஆமா" என்று கேள்வியுடன் அவனைப் பார்த்தாள் வள்ளி.

"ஹ்ம்ம் அன்னிக்கு ஆக்சுவலா அவங்க உன்னை இன்டர்வியூ செஞ்சாங்க. இன்டர்வியூனு சொன்னா பயந்துடுவியேனு கேஷ்வலா பேசுனு விட்டுட்டேன்" என்றான்.

"என்ன இன்டர்வியூ?" அவள் இன்னுமே புரியாத பார்வை பார்க்க,

"ஜியா தமிழ் சேனல்ல நடக்குற பேசு தமிழா ஷோல பேச நாம செலக்ட் ஆகியிருக்கோம் வள்ளி. அதுக்கு நடந்த செலக்ஷன் பிராசஸ் தான் அது" என்றவன் சொன்னதும் திகைத்துப்போய் அவனைப்‌பார்த்தாள்.

"டிவி சேனல் ஷோல செலக்ட் ஆகிருக்கோம்மா? அதோட செலக்ஷன் பிராசஸ்லயா நான் அன்னிக்கு பேசினேன். அதுல செலக்ட் வேற ஆகிருக்கேனா?" என்று ஆச்சரியத்துடன் அவள் கேட்க,

"ஆமா வள்ளி. என்னோட இன்ஸ்டால நம்மளோட போட்டோஸ்லாம் போடுவேன்ல. அதைப் பார்த்துட்டு தான் லவ் மேரேஜ் டாபிக் ஒன்னு இருக்கு, நீங்களும் உங்க மனைவியும் சேர்ந்து வந்து பேசுறீங்களானு கேட்டு எனக்குச் சேனல்ல இருந்து கால் செஞ்சாங்க. வாய்ப்பு வீடு தேடி வரும் போது விட்டுட கூடாதுல. அதான் ஓகே சொன்னேன். ஆனா உன்கிட்ட சொன்னா நீ பயந்துடுவியேனு தான், செலக்ட் ஆனா சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். நாளைக்குக் காலைலயே ஷூட்க்கு வரச் சொல்லிருக்காங்க" மகிழ்வுடன் அவன் உரைத்திருந்ததைத் திகிலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் வள்ளி.

"இதெல்லாம் தேவையாங்க நமக்கு. அப்புறம் ஏதாவது பேசிட்டோம்னா கழுவி கழுவி ஊத்திடுவாங்க. மீம்ஸ்லாம் போடுவாங்க. அசிங்க அசிங்கமா திட்டுவாங்க" நினைக்கும் போதே அவளின் உள்ளம் இடியைப் போல் படபடத்துக் கொண்டிருக்க,

"வேண்டாம் கார்த்தி" என்று பயந்த விழிப் பார்வையுடன் அவனைப் பார்த்திருந்தாள் வள்ளி.

"இதைத் தான் தியா மேடம் நம்மளை நாமளே பயமுறுத்திக்கிறதுனு சொன்னாங்க. ஃப்யூச்சர்ல என்ன நடக்கும்னே தெரியாம நீயே ஏன் இப்படி ஆகிடுமோ அப்படி ஆகிடுமோனு நினைச்சு பேனிக் ஆகுற! நான் தான் உன் கூட இருக்கேன்ல எது வந்தாலும் பார்த்துக்கலாம். அவங்க கேட்குற கேள்விக்கு உன் மனசுல பட்டதைப் பேசு. நானும் உன் கூடவே தான் உட்கார்ந்திருப்பேன். ஜோடியா தான் உட்கார வைப்பாங்க" என்றான்.

அவன் இவ்வளவு கூறியும் அவளின் முகம் தெளியாது இருக்க, "நாளைக்கு என்ன டிரஸ் போடலாம்னு பார்க்கலாம் வா! இரண்டு பேருக்கும் மேட்சிங் டிரஸ் இல்லனா வாங்கனும்" கண்டிப்பாகப் போய்த் தான் ஆக வேண்டும் என்று மறைமுகமாக அவளுக்கு உணர்த்தியவனாய் அவளைத் திசைத்திருப்பி அடுத்தடுத்த வேலையில் மூழ்கிப் போக வைத்தான்.

அன்றிரவு இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட தாமோதரனும் பார்வதியும் மகிழ்வுடன் வாழ்த்துத் தெரிவித்தனர்.

வள்ளியின் சோக முகத்தைப் பார்த்து, "ஏன்மா உனக்கு இதுல விருப்பம் இல்லையா?" எனக் கேட்டார் தாமோதரன்.

"இல்ல.. அம்மா அப்பா ஏற்கனவே என்னால தான் அவங்க மானம் மரியாதைலாம் போச்சுனு சொன்னாங்க. இப்ப பப்ளிக்கா போய்க் காதல் திருமணத்தைப் பத்தி நாங்க பேசினா என்ன நினைப்பாங்களோ, இதுனால என்ன பிரச்சினைலாம் உருவாகுமோனு பயமா இருக்கு மாமா" என்றாள் வள்ளி.

தாமோதரன் வாயைத் திறக்கும் முன் சற்று கோபமாய் இடையிட்ட கார்த்திகேயன், "உங்கப்பா அம்மா இது வரைக்கும் என்கிட்டயோ இல்ல அம்மா அப்பாக்கிட்டயோ பேசியிருக்காங்களா வள்ளி. உன்கிட்ட மட்டும் தானே பேசிட்டு இருக்காங்க. இதுல பெரிசா பிரச்சினை வரதுக்கு என்ன இருக்கு சொல்லு?" எனக் கேட்டான்.

கார்த்திகேயன் வள்ளியின் பெற்றோர் தனது பெற்றோரிடமும் தன்னிடமும் பேச்சுக்குக் கூடப் பேசாது ஒதுங்கி இருப்பது மனத்தை அரித்துக் கொண்டே இருந்தது. அதை இன்று வெளிப்படுத்தி இருந்தான்.

"கார்த்தி என்ன பேசுற? பொண்ணைப் பெத்துவங்களுக்குக் கோபம் இருக்கத் தான் செய்யும்" என்று அவனை அதட்டிய தாமோதரன்,

"இதெல்லாம் போட்டு மனசுல குழப்பிக்காதமா! இவங்க நினைப்பாங்க அவங்க நினைப்பாங்கனுலாம் யோசிச்சு மனசை போட்டுக் குழப்பிக்காம நாளைக்கு அவங்க ஷோல கேள்விக் கேட்கும் போது உன் மனசுல என்ன தோணுதோ அதைப் பேசுமா" என்று ஊக்கமளித்தார்.

அன்றிரவு படுக்கையில் கார்த்திகேயன் மறுநாள் பேசுவதைக் குறித்து யோசித்தவாறு படுத்திருக்க, "அம்மா அப்பா உங்ககிட்ட பேசாம இருக்கிறதே நல்லது தான் கார்த்தி" என்றாள் வள்ளி.

அருகில் படுத்திருந்தவளை நோக்கி திரும்பியவனாய், "ஏன் அப்படிச் சொல்ற?" எனக் கேட்டான்.

"அம்மா எப்ப பேசினாலும் எப்ப குழந்தைப் பெத்துக்கிறதா இருக்கனு அதையே கேட்குறாங்க கார்த்தி. எனக்கே என் உடம்புல எதுவும் பிரச்சினை இருக்குமோனு யோசிக்கிற அளவுக்குப் பேசுறாங்க" வருத்தத்துடன் உரைத்தாள்.

"அவங்க பிறந்து வளர்த்த விதம் அப்படி. அவங்க அனுபவத்தை வச்சி அவங்க பேசுறாங்க. அதை ஏன் நீ பெரிசா எடுத்துக்கிற" என்று ஆறுதல் உரைத்தான்.

"ஆனாலும் நாம ஒரு செக்அப் செஞ்சிக்கலாமா கார்த்தி?" என்று தயக்கத்துடன் கேட்டாள்.

"அவங்களுக்காகனு இல்லாம உனக்கு இப்ப குழந்தை பெத்துக்கிட்டா நல்லாயிருக்கும்னு தோணுதா வள்ளி" எனக் கேட்டான்.

அவனின் தோளில் சாய்ந்தவளாய், "உங்களை மாதிரி ஒரு குட்டி கார்த்தி வேணும்னு எனக்கும் ஆசை தான் கார்த்தி" என்றாள்.

"ஏன்? குட்டி வள்ளி வேண்டாமா?" எனச் சிரிப்புடன் கேட்டான்.

"இல்ல எனக்கு என் கார்த்தி மாதிரி தான் வேணும்" அவன் மீசையுடன் விளையாடியவாறு அவள் ஆசையுடன் உரைக்க, "சரி அப்ப முதல்ல உன் ஆசைக்கு என்னை மாதிரி ஒரு பையன், அப்புறம் என் ஆசைக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு பெத்துக்கலாம் சரியா" என்று அவள் நெற்றியோடு அவன் முட்டவும், வெட்கத்துடன் அவனுள் புதைந்து உயிரினில் கலந்தாள் அவள்.

மறுநாள் காலை அவர்களின் திருமண உடையான பட்டு வேட்டி சட்டையிலும் பட்டுப்புடவையிலும் கிளம்பிச் சென்றிருந்தனர் இருவரும்.

ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வர இரவு ஆகியிருந்தது.

வீட்டை நோக்கி மகிழுந்தில் பயணித்து வந்திருந்த போது, "நீ இவ்ளோ பேசுவனு நினைக்கலைடா வள்ளி" மகிழ்வுடன் அவன் கூற, "நானுமே நினைக்கலைங்க. என்னமோ நீங்க பக்கத்துல இருந்த தைரியத்துல பேசிட்டேன். ஆனா பேசின எல்லாத்தையுமே டெலிகேஸ்ட் செய்ய மாட்டாங்க தானே" என்றாள்.

"ஆமா எடிட்டிங்ல எதுலாம் வரும் வராதுனு ஆங்கர்கே தெரியாது. நாம பேசினதை மொத்தமாவும் தூக்கி போட்டுடலாம். போடாமலும் இருக்கலாம். இரண்டு வாரம் ஆகும் டெலிகேஸ்ட் ஆகனு சொல்லிருக்காங்க. பார்ப்போம்" என்றான்.

"ஆனா நல்ல அனுபவமா இருந்ததுங்க. எனக்கு இருக்கும் இந்தப் பயம்லாம் கொஞ்சம் கொஞ்சமா போயிடும்னு நம்பிக்கை வந்திருக்கு. எல்லாம் உங்களால தான். தேங்க்ஸ் கார்த்தி" கியரில் இருந்த அவனது கரங்களைப் பற்றியவாறு உரைத்தாள்.

"மை ப்ளஷர் பொண்டாட்டி" என்றான்.

அந்நிகழ்ச்சியின் விளம்பரத்துலேயே வள்ளி பேசியதை அவர்கள் ஒளிபரப்பிவிட, அக்காணொளியைக் கண்டு வள்ளியின் அன்னை அவளை அழைத்துத் திட்டித் தீர்த்தார்.
 
Top