• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 20, 2025
Messages
20
சரத்- ஷாலினி கல்யாணத்தோட முதல் நாள் நைட் எல்லாரும் மண்டபத்துக்கு வந்துட்டாங்க.

மணமகன் அறை,

சரத்: கோபமாக உட்கார்ந்து இருந்தான்.

சரத் ஃப்ரெண்ட் : டேய் ஏன் இப்படி கோவமா இருக்க நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு.

சரத்: கோவமா தாண் டா வருது என்னை கல்யாணம் பண்ணிக்க போற வா இன்னொருத்தன் பின்னாடி சீனியர் சீனியர் ன்னு சுத்துறதும் அவன் குழந்தையை கொஞ்சறதும் எனக்கு சுத்தமா பிடிக்கல.

சரத் ஃபிரண்ட் : டேய் அந்த பொண்ணு ரொம்ப ஜாலி டைப் டா அதான் எல்லாரும் கூடயும் ஃப்ரீயா பேசுறா என்னை அண்ணா அண்ணான்னு உரிமையோட கூப்பிடுவா அந்த பொண்ண போய் தப்பா நினைக்கிறியே டா .

சரத்: அவ உன்னையும் மயக்கிட்டாளா டா நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற.

சரத் ஃபிரண்ட்:ச்சீ உன்கூட மனுஷன் பேசுவனா( எழுந்து வெளியே போய்ட்டான்).

மணமகள் அறை,

ஷாலினி: அவ பிரெண்ட்ஸ் கூட பேசிகிட்டு இருந்தா .

அபிநயா :ஷாலு உன்ன கட்டிக்க போறவரு சிரிக்கவே மாட்டாரா எப்ப பார்த்தாலும் உர்ருன்னு இருக்காரு.

ஷாலினி: அவருக்கு நான் அபி, சீனியர் கூட பேசுறது சுத்தமா பிடிக்கல டி.

மதி: ஏண் டி அவங்க என்ன பண்ணுனாங்க.

ஷாலினி : அதான் எனக்கும் தெரியல.

( டோர் தட்டுற சத்தம் கேட்டது )

ஜெனி :போய் ஓபன் பண்ணா.

அபி: உள்ள ஓடி வந்தான்.

ஷாலினி :நீ இன்னும் தூங்கலையா.

அபி: தூக்கம் வரல நீங்க ஏன் மிஸ்ஸ தூங்க விடாமல் டிஸ்டர்ப் பண்ணறீங்க. மிஸ் பாவம் தானா. (ஷாலினி பிரண்ட்ஸை பார்த்து சொன்னான் ).

மதி: ரொம்ப தான் பாவம் உங்க மிஸ்.

அபி: சீக்கிரம் எல்லாரும் தூங்குங்க. அப்ப தான் காலைல மிஸ் பிரெஷ்ஷா இருப்பாங்க.

ஷாலினி: சரி டா செல்லம் நீங்க போங்க நாங்க தூங்குறோம்.

அபி : ஓகே பாய் குட் நைட்.

ஷாலினி :குட் நைட்.

காலை,

மண்டபத்துல எல்லாரும் ரொம்ப பரபரப்பா வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க.

ஷாலினி: சூர்யா செலக்ட் பண்ண புடவை கட்டி பிரைடல் மேக்கப் பண்ணி ரொம்ப அழகா இருந்தா.

ஷாலினி பிரெண்ட்ஸ் எல்லாம் அவளை கிண்டல் பண்ணி பேசிகிட்டு இருந்தாங்க.

அப்போ தான் ரூமுக்கு வெளியே ஏதோ சத்தமா இருக்கேன்னு இவங்க எல்லாரும் எழுந்து வெளியில் போனாங்க.

ஷாலினி அம்மா: ஐயோ என் பொண்ணு வாழ்க்கை போயிடுச்சு நான் என்ன பண்ணுவேன் அப்படின்னு சொல்லி (ரொம்ப அழுதாங்க ).

ஷாலினி அப்பா :என்ன சொல்றதுன்னு தெரியாம அதிர்ச்சியில் உட்கார்ந்து இருந்தாரு.

ஷாலினி : வினய் கிட்ட போனா என்னடா ஆச்சு ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்காங்க.

வினய்: அவ கையில ஒரு லெட்டரை கொடுத்தான்.

அந்த லெட்டர்ல சரத்திற்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனும், ஷாலினிக்கும் சூர்யாவுக்கும் உள்ள உறவை தப்பு தப்பாக பேசி எழுதி இருந்தான்.

ஷாலினி: அழுது கிட்டே கீழே உட்கார்ந்தாள்.

அபி : மிஸ் அழாதீங்க ( அவ கண்ணை துடைச்சி விட்டான்).

சூர்யா: அவனால தான் ஷாலினி வாழ்க்கை கெட்டுப் போச்சுன்னு நெனச்சு வருத்தத்துல உட்கார்ந்து இருந்தான்.

லட்சுமி:( ஷாலினி அப்பா கிட்ட வந்தாங்க ) இப்போ என்னதான் பண்ண போற இப்படியே உட்கார்ந்து இருந்தா ஷாலினி வாழ்க்கை என்ன தான் ஆகிறது.

ஷாலினி அப்பா: எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அக்கா. என் பொண்ணு கல்யாணம் மண்டபம் வரை வந்து நின்னு போயிடுச்சே இனிமேல் யாரு அவளை கல்யாணம் பண்ணிக்குவாங்க.

கதிரேசன்: அதுக்குன்னு இப்படியே விட முடியுமா நம்ம பொண்ணு வாழ்க்கை வீணா போயிடுமே.

அபி: அப்பா ஷாலினி மிஸ்ஸ நீயே கல்யாணம் பண்ணிக்கோங்க.

இதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சியாகி நின்னாங்க.

சூர்யா: அபி என்ன பேச்சு இதெல்லாம் கொஞ்சம் அமைதியா இரு.

அபி: அப்பா ஷாலினி மிஸ் பாவம் அழறாங்க பாரு. எனக்கு அவங்க அழுவதை பார்க்க கஷ்டமா இருக்கு.

சூர்யா: அபி சும்மா இரு.

கதிரேசன்: சூர்யா அபி சரிதான் உனக்கு ஒன்னும் அவ்வளவு வயசு ஆகலையே. அந்த சரத் உன்னையும் ஷாலினியையும் சேர்த்து வைத்து தானே பேசி இருக்கான். ஷாலினிக்கு வேற மாப்பிள்ளை பார்த்தாலும் அவனும் அப்படி தான் பேசி ஷாலினி மனதே கஷ்டப்படுத்துவான்.

சூர்யா: என்ன பா நீங்களும் இப்படி பேசுறீங்க. நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன். எனக்கு ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கான். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ஷாலினிக்கு ஏதோ குறை இருக்குன்னு அதான் இரண்டாம் தாரம் என்று அவளை தான் தப்பா பேசுவாங்க.

வினய்: அவன் அம்மா,அப்பா கிட்ட போய் ஏதோ பேசினான்.

ஷாலினி அப்பா : (சூர்யா கிட்ட வந்தாரு) தம்பி ப்ளீஸ் என் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்துங்க( கை எடுத்து கும்பிட்டாரு).

சூர்யா: மாமா ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாதீங்க.

ஷாலினி அப்பா: உரிமையா? மாமானு சொல்றது உண்மைனா தயவு செய்து என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கங்க.

கதிரேசன்: சூர்யா அவர் தான் அவ்ளோ கெஞ்சுறார்ல ஏதாவது சொல்லு பா. இதுல அபி வாழ்க்கையும் அடங்கி இருக்கு.

சூர்யா : சரி பா நான் ஷாலினியை கல்யாணம் பண்ணிக்குறேன்.

வினய்: சூப்பர் மாமா வாங்க வாங்க அவனை அழச்சிட்டு போய் பட்டு வேஷ்டி,சட்டை போட்டு கழுத்துல மாலை போட்டு மண மேடைக்கு அழச்சிட்டு வந்தான்.

ஷாலினி : அவளும் கழுத்துல மாலை போட்டு அபி கைய புடிச்சுகிட்டு மண மேடையை நோக்கி நடந்து வந்தா.

அபி :ஷாலினி அவன் அம்மாவா வரப்போறதை நினைச்சு ரொம்ப சந்தோசமாக இருந்தான்.

வினய்: அவனுக்கும் சூர்யா அவன் மாமாவா வர்றதுல ஹேப்பியா இருந்தான்.

ஷாலினி அம்மா, அப்பா: மனநிறையோட இருந்தாங்க.

கதிரேசன், லட்சுமி : சூர்யா வேற மேரேஜ் பண்ணாம தனியா குழந்தையோட கஷ்டப்படுகிறான் என்று நிறைய நாள் நினைச்சு கவலைப்பட்டு இருந்தாங்க. இப்போ அந்த கவலை தீர்ந்த சந்தோஷத்தில் இருக்காங்க.

இப்படி எல்லாரும் சந்தோசமாக இருக்க ஷாலினி, சூர்யா மனநிலையோ வேற மாதிரி இருந்தது.

சூர்யா: சுஜிக்கு துரோகம் பண்றதா நினைத்து கவலையில இருந்தான்.

ஷாலினி :சூர்யா சுஜிய எந்த அளவு லவ் பண்றான்னு தெரிஞ்சும் அவனை கல்யாணம் பண்ணிக்க போறோம்னு நினைச்சு கவலையில இருந்தா.

எல்லா சணங்கும் முடிந்து ஆசீர்வாதம் பண்ணி வாங்கிட்டு வந்த தாலியை ஐயர் சூர்யா கையில் எடுத்துக் கொடுத்தார்.

சூர்யா: (ஷாலினி இந்த நிமிஷத்திலிருந்து நீ என்னோட மனைவி. எனி சுஜி பேரை சொல்லி உன் மனதை நான் கஷ்டப்படுத்த மாட்டேன் இது தாலி மீது சத்தியம்) ஷாலினி கழுத்துல தாலியை கட்டினான்.

ஷாலினி : (தலை குனிஞ்சு கண்ணை மூடினால்) சீனியர் இந்த நிமிஷத்திலிருந்து அபிக்கு அம்மாவா மட்டுமே இருப்பேனே தவிர உங்களுக்கு மனைவியாய் சுஜி அக்கா இடத்தை பிடிக்க ஒரு நாளும் நினைக்க மாட்டேன் இது அபி மேல் சத்தியம்.

சூர்யா: தாலி கட்டினதும் ஷாலினியோட தாலி, நெற்றி வகுடுல குங்குமம் வச்சு விட்டான்.

அப்புறம் சூர்யா ஷாலினி கால் விரல் பிடித்து மெட்டி போட்டு விட்டான். அப்புறம் அக்னி சுற்றி பெரியவர்கள் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாங்க.

அப்புறம் வந்த எல்லாரும் விஷ் பண்ணிட்டு கிப்ட் கொடுத்துட்டு போனாங்க.


தொடரும்....
 
Top