Stories that touch hearts

Home  /  SS-26 'இதயத்தின் இரண்டாம் ராகம்' அறிவிப்பு  /  Chapter 1

CHAPTER 1

SS-26 “இதயத்தின் இரண்டாம் ராகம்” குறுநாவல் போட்டி

By Sorna Sandhanakumar · September 25, 2026

0

வணக்கம் நட்புகளே!

மீண்டும் அடுத்த கதை போட்டியுடன், உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

SS26 – “இதயத்தின் இரண்டாம் ராகம்” குறுநாவல் போட்டிக்கு உங்களை வரவேற்கிறேன்.

“இதயத்தின் இரண்டாம் ராகம்- மறுமணக் கதைகள்!”
தலைப்பே நமக்குப் பல கதைகள் சொல்லும். நீங்களும் பல கதைகள் கொடுக்கலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் 👇👇👇

  1. போட்டிக்காலம் அக்டோபர் 1 முதல் ஜனவரி 15 வரை. போட்டிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.
  2. குறுநாவலுக்கான வார்த்தை அளவு 25,000 வார்த்தைகள் முதல் 35,000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.
  3. நீங்கள் எழுதும் கதை, தலைப்போடு ஒத்துப்போக வேண்டும். அதாவது, மறுகாதல் கிடையாது. மறுமணம் பற்றி கதைகள் இதில் இடம்பெற வேண்டும்.
  4. கதையின் முடிவு சுபமானதாக இருக்க வேண்டும். சோகமான முடிவில், இதற்கு இது சரியான முடிவென்று, அனைவரையும் கவலைப்பட வைக்கும் எண்ணம் இருந்தால் வைக்கலாம்.
  5. காதல் கதைதான் என்றாலும், எல்லை மீறிய வார்த்தைகளையோ, காட்சிப்படுத்துதலையோ தவிர்க்க வேண்டும்.
  6. எழுத்துப் பிழைகள், சந்திப்பிழைகள் சரியாக இருக்க வேண்டும். அத்துடன் வாக்கிய முடிவின் பின் தொடர் புள்ளிகள் வைப்பதை முடிந்தளவு குறைக்கவும்.
  7. எத்தனை கதை எழுதலாம் என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.
  8. இங்கு போட்டப்படும் கதை, இதற்கு முன் வேறு எங்கும் பதிவிட்டிருக்கக் கூடாது.
  9. பெயரை மறைத்து எழுதுவதோ, அல்லது நேரடியாக எழுதுவதோ உங்கள் விருப்பம்.

போட்டி முடிவுகள்:

எழுத்தாளர்களுக்கு:

  1. போட்டியின் முடிவில் மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்படும்.
  2. முதல் பரிசு பெறும் வெற்றியாளருக்கு, 10 கிராம் வெள்ளி, இரண்டாம் பரிசு பெறும் வெற்றியாளருக்கு, 5 கிராம் வெள்ளி. மூன்றாம் பரிசு பெறும் வெற்றியாளருக்கு, 5 கிராம் வெள்ளி பரிசாக வழங்கப்படும்.
  3. போட்டியில் பங்கேற்கும் எழுத்தாளர்களுக்கு மின்சான்றிதழும், சிறப்புப்பரிசும் வழங்கப்படும்.

வாசகர்களுக்கு:

சிறந்த விமர்சனம் கொடுக்கும் வாசகர்கள் மூவருக்கு, வரலாற்றுப் புதினம் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

எழுத விரும்புவோர்,
sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும். இல்லையெனில் எனது முகநூல் இன்பாக்ஸில் தெரிவிக்கவும்.

நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்

← Previous All Chapters Next →

Leave a Comment