“என்ன ரோஜா உன் அண்ணி கருவை கலைக்கனும்னு ஹாஸ்பிடல் வந்திருக்காங்க” என்று ரோஜாவின் தோழி சொன்ன வார்த்தையை கேட்டு ரோஜாவின் விழிகள் அசைய மறுத்த நிலையில், “என்னமா என்ன ஆச்சு” என்று கதிரும் பதற்றம் அடைய.
“அண்ணி. அண்ணி கரு கலைக்க ஹாஸ்பிட்டல் போயிருக்காங்களாம்” என்று ரோஜா சொன்ன வார்த்தையை கேட்டு நாகராஜன், பாண்டியன் என்று தொடங்கி கதிரின் தலையிலும் இடி இறங்கியதைப் போல உணர்ந்தார்கள்.
இயல்பாகவே ஆத்திரத்தில் புத்தியை இழந்து நிற்கும் கதிருக்கு இந்த செய்தி கொலை வெறியை ஏற்படுத்த. வேகமாக வாசலில் நிற்க்கும் தனது பைக்கை எடுத்துக்கொண்டு சிவகங்கையை நோக்கி கதிர் சீறி பாய்ந்து இருந்தான்.
ரோஜா சொன்ன விடயத்தில் இருந்து இந்த நொடி வரை வெளிவர முடியாத நிலையில் அதிர்ச்சியில் இருந்த பாண்டியனின் கையை பிடித்துக்கொண்டு ரோஜா கண்கள் கலங்க.
“இவ்ளோ வேகமா இந்த குடிகாரன் எங்க போறான்” என்று கேட்டுக்கொண்டே கஸ்தூரி வீட்டுக்குள் நுழைந்தார்.
“அப்பா. அப்பா அழாதீங்க அப்பா” என்று ரோஜா தன் தந்தைக்கு ஆறுதல் கூற.
“என்ன ரோஜா. என்ன விஷயம். ஏன் அண்ணன் அழுது” என்று கஸ்தூரி கேட்க.
“நாகா. வாத்தி சிவகங்கைக்கு தான் போய் இருப்பாரு. நீங்க உடனே வண்டி எடுங்க. நம்மளும் முருகன் மாமா வீட்டுக்கு போகலாம்” என்றாள் ரோஜா.
“என்ன ரோஜா. சிவகங்கைக்கு ஏன் போறிங்க. என்ன. சீமாட்டி முல்லையை அழைச்சிட்டு வர போறிங்களா” என்று கஸ்தூரி கேட்க.
“அத்த. நிலைமை தெரியாம எங்கள கோவப்படுத்தாதீங்க” என்று ரோஜா சொல்ல. அதற்குள் நாகராஜன் அவன் காரை தயாராக வைத்து இருந்தான்.
“அப்பா நீங்க வாங்க. இன்னையோடு இந்த பிரச்சனைக்கு நம்ம ஒரு முடிவு கட்டலாம்” என்ற ரோஜா தன் தந்தையை அழைத்துக்கொண்டு காரில் ஏற,
“இருங்க இருங்க நானும் வரேன்” என்று கஸ்தூரி காரின் முன் இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டார்.
கஸ்தூரியை கடுப்பாக பார்த்த நாகராஜன்.“நான் போய் வீட்டை பூட்டிட்டு வரேன்” என்றவன், கண் இமைக்கும் நேரத்தில் வேலையை முடித்துக்கொண்டு தன் காரை சிவங்கங்கையை நோக்கி விரட்டினான்.
காரின் பின் இருக்கையில் ரோஜாவும் பாண்டியனும் கதிக்கலங்கிய நிலையில் அமர்ந்து இருக்க.“என்னமோ பெரிய சம்பவம் நடந்து இருக்கு போல,
இந்த மகிழ்ச்சியை நம்ம மட்டும் எப்படி அனுபவிக்கிறது. இப்போன்னு பார்த்து மீனா அவ தோழி வீட்டுக்கு போயிட்டா. ம். பேசாம அந்த தண்ட தனத்துக்கு மெசேஜ் அனுப்புவோம்” என்று எண்ணிய கஸ்தூரி. அவர் கைபேசியில் இருந்து தனத்துக்கு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தார்.
_—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
இதே தருணம் தனமும் ரவியும் தன் அன்னையுடன் சேர்ந்து BB பார்த்து கொண்டு இருக்க.
“டேய் டேய் தம்பி வா டா உடனே முல்லையோட அப்பா வீட்டுக்கு போகலாம்” என்று ரவியை அழைத்தாள் தனம்.
“அக்கா. நம்ம ஏன் அங்க போகணும்” என்று ரவி கேட்க.“என்னடி. கதிரும் முல்லையும் ஒன்னு சேர்ந்துட்டாங்களா” என்று மகிழ்ச்சியாக கேட்டார் சரஸ்வதி.
தன் தாயென்று கூட பாராமல் அருகே இருந்த கரண்டியைக்கொண்டு சரஸ்வதி தலையில் டக்கென்று தட்டிய தனம்.
“விட்டா அவங்க சேர்ந்து வாழ நீ மொட்டை அடிக்கிறேன்னு வேண்டிப்ப போல.“ என்று கோபத்துடன் கேட்டாள்.
“அக்கா. அவங்கள விடு. நீ சொல்லு, நம்ம ஏன் அங்க போகணும்” என்று ரவி கேட்க.
“அதெல்லாம் போகும் போது சொல்லுறேன். இப்போ வா போகலாம்” என்று தனம் தன் தம்பியை அழைக்க.
“நானும் வரேன்” என்று சரஸ்வதியும் தன் பிள்ளைகளோடு சிவங்ககைக்கு கிளம்பினார்.
—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
இவர்கள் ஆளுக்கொரு ஒரு பக்கம் முருகனின் வீட்டுக்கு பயணம் மேற்கொள்ள.
சில மணி நேரத்தில் கதிர் தன் இரு சக்கர வாகனத்தில் சிவகங்கையை அடைந்து இருந்தவன், முருகனின் வீட்டு கதவை எட்டி உதைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து இருந்தான்.
“முல்லை. ஏய். ஏய் உன்ன தாண்டி எங்க இருக்க, எங்க டி இருக்க, ஒழுங்கு மரியாதையா வெளியே வா” என்று கதிர் அதீத கோபத்துடன் கத்தியவன் அருகே இருந்த பூ ஜாடியை எட்டி உதைக்க. அது இவன் அடி தாங்காமல் கிழே விழுந்து உடைந்தது.
“யாருங்க நீங்க. ஏன் இங்க வந்து கத்திகிட்டு இருக்கீங்க” என்று பெண்னொருவர் அடுப்பணையில் இருந்து வெளியே வர, “எங்க முல்லை” என்று கண்கள் சிவக்க கேட்டான் கதிர்.
“முல்லை பாப்பா.“ என்று அந்த பெண்மணி சொல்லும் முன்னே.“கதிர் தம்பி வா பா. எப்படி தம்பி இருக்க” என்று அவனை நலம் விசாரித்துக்கொண்டே இசக்கி வெளியே வர, “அக்கா. முல்லை எங்கே” என்று அதே கேள்வியை இன்னும் அழுத்தமாக கேட்டான் கதிர்.
“முல்லை பாப்பா, ஐயாவையும் அம்மாவையும் அழைச்சிட்டு வேலன் தம்பிக்கூட ஹாஸ்பிடல் போய் இருக்கு கதிரு. நீ உக்காரு நான் உனக்கு காபி தண்ணிக்கொண்டு வரேன்” என்ற இசக்கி அடுப்பணைக்குள் நுழைய.
“அக்கா யாரு இந்த ஆளு. பார்க்க ரவுடி பையன் மாதிரி இருக்கான்” என்று கேட்டாள் புதிதாக அங்கே வேலைக்கு சேர்ந்து இருந்த பணிப்பெண்.
“ஐயோ பொண்ணே. என்ன நீ. அவர் தான் முல்லை பாப்பாவோட புருஷன். முருகன் ஐயாவோட மருமகன்” என்று இசக்கி சொல்ல.
“பார்க்க குடிகாரன் மாதிரி இருக்காரே. பாவம் முல்லை பாப்பா. அதனால தான் இவர பிடிக்காம அப்பா வீட்டோட வந்துடுதா” என்று அந்த பெண் கேட்டு வைத்தாள்.
இவர்கள் பேசுவது நன்றாக கதிரின் காதில் விழுந்து இருக்க. சும்மாவே ஆடி தீர்ப்பவனுக்கு தாரை தப்பட்டம் அடித்ததை போல ஆகி இருந்தது.
“இந்த வீட்டுல வேலை செய்யுற ஆளுக்கூட நான் முல்லைக்கு பொருத்தம் இல்லைனு நினைக்கிறதால தான் அவ என் பிள்ளையை அழிக்க துணிஞ்சு இருக்கா” என்று எண்ணிய கதிர். அதே கோபத்துடன்.“அக்கா. அவ எந்த ஹாஸ்பிடல் போய் இருக்காள்” என்று கேட்டான்.
கதிரின் கோவமான குரலில் பயந்து போன இசக்கி.“ப. பாப்பா GH தான் போய் இருக்கு தம்பி” என்றதும். கதிர் மின்னல் வேகத்தில் அரசு மருத்துவ மனையை நோக்கி தன் இருசக்கர வாகனத்தை விரட்டி இருந்தான்.
—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
இதே சமயம் காரில் புலம்பிய நிலையில் பாண்டியன் தன் மகளின் அருகே அமர்ந்து இருக்க.“அங்க பாரு அங்க பாரு கதிர் GH பக்கம் போறான்” என்று கஸ்தூரி கத்தியதும், நாகராஜ் காரை GH வாசலில் நிறுத்த. அதற்குள் கதிர் மருத்துமனைக்குள் நுழைந்து இருந்தான்.
ரோஜா, நாகராஜ், பாண்டியன் என்று மூவரும் மருத்துவ மனைக்குள் நுழைய.
“ஏம்மா தனம் எங்க இருக்க நீ” என்று ஆவள் தாங்காமல் தன் கைபேசியில் இருந்து கஸ்தூரி தனத்துக்கு அழைப்பு விடுக்க.
“முல்லையோட அப்பா வீட்டுக்கு தான் வரோம்” என்றாள் தனம் அதே ஆவளோடு.
“இல்ல தனம், சம்பவம் முருகன் வீட்டுல நடக்க போறது இல்ல. சம்பவம் நடக்க போற இடம் GHல” என்று கஸ்தூரி சொல்ல.
“ஓ, சூப்பர். அப்போ இன்னும் பத்து நிமிஷத்துல நாங்க அங்க இருப்போம்” என்ற தனத்தின் முகமெல்லாம் பிரேகாசமாக இருந்தது.
—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
அரசு மருத்துவமனையில் திரும்பும் இடமெல்லாம் கூட்டமாக இருக்க.
சிலர் மகிழ்ச்சியாகவும், சிலர் கவலையாகவும் அங்கங்கே நின்று இருந்தார்கள்.
“அம்மாடி ரோஜா. இந்த போக்கிரி பையன் எங்கன்னு பாரு மா. கோவத்துல அந்த புள்ளையை என்னாவது பண்ணிட போறான்” என்று பாண்டியன் சொல்ல.
“ஐயா நீங்க இப்படி உக்காருங்க, கதிர் எங்கன்னு நான் போய் பாக்குறேன்” என்றான் நாகராஜன்.
“அப்பா நீங்க இப்படி உக்காருங்க” என்று ரோஜாவும் சொல்ல. பதற்றதுடன் பாண்டியன் அமர்ந்து இருக்க. அவர் அருகே நல்ல பிள்ளையை போல கஸ்தூரியும் வந்து நின்றுக்கொண்டார்.
ரோஜாவின் விழிகள் கதிர் முல்லையை தேட. அவள் கண்ணுக்கு தெண்பட்டது என்னவோ தனம், ரவி, சாவித்ரி தான்.
“இவங்க எப்படி இங்க?” என்று ரோஜா புருவ முடிச்சீயுடன் கேள்வி கேட்க.“என்ன ரோஜா நீங்க எப்படி இங்க?” என்று தனம் முந்திக்கொண்டு கேள்வி கேட்டாள்.
“நாங்க இருக்குறது இருக்கட்டும். நீங்க இங்க என்ன பண்றிங்க” என்று ரோஜா கேட்க.
“அது. அது நாங்க. ஹாங். நாங்க இந்த ஊர்ல அம்மன் கோவிலுக்கு வந்தோம். அப்போ என் அம்மாவுக்கு சட்டுன்னு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குனு சொன்னாங்க. அதான் இங்க அழைச்சிட்டு வந்தோம்” என்று தனம் அழகாய் ஒரு கதையை சொல்ல. எப்போதும் போலவே தனத்தின் வார்த்தையில் உண்மை இல்லை என்று
அறிந்து கொண்ட ரோஜாவே தனத்தின் அம்மா சரஸ்வதியை சந்தேகமாக பார்த்தாள்.
“ஐயோ. இவள பெத்ததுக்கு ரெண்டு கழுதையை பெத்திருந்தால் கூட அதை மேய்த்து வாழ்க்கையை ஓட்டி இருக்கலாம்” என்று தனக்குள் முனங்கிய சரஸ்வதியோ “ஆமா, எனக்கு தான் தலைவலி” என்று சொல்ல, “ என்ன.? தலைவலியா?” என்று ரோஜா கேட்க,
“இல்ல இல்ல நெஞ்சு வலி. நெஞ்சு வலி” என்று தன் மகளின் கேவலமான செயலுக்கு வேறு வழியே இல்லாமல் துணை போனார் சரஸ்வதி.
ரவி, தனம், கஸ்தூரி என்று மூவரும் கதிர் முல்லை சண்டையை வேடிக்கை பார்க்க காத்து இருந்த தருணம். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கால்களை தாங்கியப்படி பார்வதி ஒரு சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வர, அவரை தொடர்ந்து முருகனை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வந்தார் KV @ கந்தவேலன்.
“அண்ணா அங்க பாரு உன் சம்மந்தி.“ என்று கஸ்தூரி சொல்லும் தருணம்.
“மாமா.“ என்று முருகன் பாண்டியணை அழைக்க.
“ஓ. என் குழந்தையை அழிக்க குடும்பமா தான் இங்க கிளம்பி வந்து இருக்கீங்களா” என்று கேட்டுக்கொண்டே கதிர் அங்கே வந்து நிற்க்க.
“மாப்புள. நீங்க எல்லாம் இங்க என்ன பண்ணுறிங்க” என்று புரியாமல் கேட்டார் முருகன்.
—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
“ஏன். நாங்க இங்க வந்தனால உங்க குட்டு எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆச்சுன்னு பயப்படுறிங்களா” என்று கஸ்தூரி கேட்க.
“இந்தா கஸ்தூரி. என்ன பொடி வச்சி பேசிகிட்டு இருக்க. என்ன விஷயம்” என்று பார்வதி கதிரை முறைத்து பார்க்க.
“என்ன முறைக்கிறிங்க. எங்க அவ” என்று வார்த்தையால் சீறினான் கதிர்.
“யார மாப்புள்ள கேக்குறீங்க. என்னமா ரோஜா. நீங்க எல்லாம் இங்க என்ன பண்ணுறீங்க” என்று முருகன் கேட்க.
“நாங்க பண்ணுறது இருக்கட்டும். நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் எல்லாமே பண்றிங்களா” என்று அதீத கோவத்தில் கதிர் கேட்க.
“இந்தாப்பா கதிர். என்ன பிரச்சனை உனக்கு. ஏன் இப்படி தலை கால் புரியாம பேசுற. என்னாச்சு” என்று கேட்டார் பார்வதி.
“இன்னும் என்ன ஆகணும். எவ்வளவு தைரியம் இருந்தா என் பிள்ளையை கலைக்க முல்லையை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு வந்து இருப்பிங்க” என்று கதிர் கேட்க. முல்லை கருவுற்ற செய்தியை அறிந்திடாத பார்வதியும் முருகனும் ஒருவரை பார்த்து ஒருவர் கேள்வியாக புருவம் இடுங்கினார்கள்.
“என்ன பார்வதி. ஒன்னும் தெரியாத பாப்பா, பத்து மணிக்கு போட்டாளா தாப்பான்னு சொல்லுற மாதிரி. முல்லையை கருகலைக்க இங்க அழைச்சிட்டு வந்துட்டு எதுவுமே தெரியாத மாதிரி முகத்தை வச்சிக்கிற” என்று கஸ்தூரி கேட்க.
“ஒரு வேள நீங்க மண்டபத்துல சொன்ன மாதிரி முல்லை வயத்துல இருக்குற பிள்ள கதிரோடது இல்லையோ என்னவோ” என்று தனம் சொல்லி முடிக்கும் தருணம்
அவள் கழுத்தை பிடித்து இருந்தான் கதிர்.
—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
அனைவரும் பார்க்க. கதிர் இப்படியொரு செயலை செய்வான் என்று யாரும் எண்ணிபார்க்காத நிலையில்.“ஆ கதிர் வலிக்குது விடுங்க. விடு கதிர்” என்று தனம் திக்கி திணற,
“ஏய். என் அக்காவை விடு டா” என்று கத்தினான் ரவி.
கதிரின் செயலை பார்த்து கஸ்தூரிக்கு சப்த நாடியும் அடங்கிப் போக, “ஐயோ. இவன் என்ன ஐயன்னார் கணக்கா இப்படி எகுறுரான்” என்று எண்ணிய கஸ்தூரியை பார்த்து.“நீங்களும் நேத்து இந்த மாதிரி தானே பேசுனீங்க.“ என்று கேட்டான் KV.
“இவன் வேற சந்துல சிந்து பாடுறான்” என்று கஸ்தூரி முனுமுனுக்க.“ஐயோ கதிர். விடு டா அந்த பொண்ணை. முதல்ல தனம் மேல இருந்து கையை எடு” என்று கத்தினார் பாண்டியன்.
“அடுத்து ஒரு முறை முல்லையையோ. என் பிள்ளையையோ பத்தி யாராவது தப்பா பேசுனீங்க. நாக்கை இழுத்து வச்சி வெட்டிடுவேன்” என்று கதிர் கர்ஜிக்க.“ஐயோ. இங்க என்ன தான் நடக்குது” என்று ஏதும் புரியாமல் கேட்டார் பார்வதி.
“மாமா. என்ன பிரச்சனை. ஏன் மாப்புள்ள இப்படி கோவப்படுறாரு.“ என்று முருகன் கேட்க.
“கோவப்படாம என்ன பண்ண சொல்லுற மச்சான்.“ என்ற பாண்டியனின் வார்த்தைகளில் மேலும் குழப்பம் அடைந்தார் பார்வதி.
இந்த நொடி வரை கதிரின் கரங்கள் தனத்தின் கழுத்தை பற்றி இருக்க.
“வாத்தி கையை எடுங்க” என்று ரோஜா கத்தியதும். அதே கோபத்துடன் கதிர் முருகனை நெருங்கியவன்.
“நீங்க இந்த நிலைமையில இருக்க நான் தான் காரணம். அத நான் ஒத்துக்குறேன். அதுக்காக தான் என்னை விட்டு பிரிஞ்சி போய் முல்லை எனக்கு அவ்ளோ பெரிய தண்டனையை கொடுத்துட்டாளே. இப்போ. இப்போ ஏன் என் குழந்தையை கலைத்து. மேலும் மேலும் எனக்கு நரக வேதனையை கொடுக்கணும்” என்று கதிர் கேட்க.“என்ன குழந்தையா.“ என்று முருகன் விழித்தார்.
“என்ன, மாமா, ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க. ஏன் முல்லை மாசமா இருக்குறது உங்களுக்கு தெரியாதா” என்று கஸ்தூரி கேட்க.
தனம் தன் கழுத்தை பிடித்துக்கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்தவளுக்கு கதிர் மீது அளவில்லாத கோவம் எழுந்தது.
—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
“என்ன கஸ்தூரி பேசுற. முல்லை மாசமா இருக்காளா.“ என்று ஆச்சிரியத்தின் உச்சியில் பார்வதி கேட்க.
“ஏன். உனக்கு தெரியாதாக்கும்” என்று கிண்டலாக கேட்டார் கஸ்தூரி.
இவர்கள் யார் பேசுவதும் பார்வதிக்கும் முருகனுக்கும் புரியாமல் போக,
“ஐயோ. இங்கே என்னதான் நடக்குது, யாராவது ஒரு ஆள் விவரமா சொல்லித் தொலையுங்களேன்” என்று கத்தினார் முருகன்.
“மாமா. நேத்து என்னுடைய நிச்சியத்துக்கு முல்லை அண்ணி வந்திருக்கும் பொழுது.“ என்று ரோஜா அங்கே நடந்த விவரங்களை சொல்லி முடிக்க. தன் மகள் கருவுற்று இருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டு முருகனின் முகம் பிரகாசமாக மாறியது.
“அது மட்டுமா நடந்துச்சு. இதோ இங்க நிக்கிறாங்களே இந்த பெரிய மனுஷி கஸ்தூரி. இவங்களும், இந்த வாடகை வாய் தனமும் சேர்ந்து முல்லை அக்காவை ரொம்ப அசிங்கமா பேசினாங்க பெரியம்மா” என்று வேலன் சொல்ல, பார்வதியின் கோபப்பார்வை கஸ்தூரியின் மீது படிந்த நிலையில், கதிரும் கொலை வெறியில் கஸ்தூரியை முறைத்துப் பார்த்தான்.
“நான். நான் வந்து. நான் வந்து” என்று கஸ்தூரி திக்கித் திணற.
“என்ன.? முல்லையை தப்பா பேசினீங்களா?” என்று பல்லை கடித்துக் கொண்டு கஸ்தூரியை நெருங்கினான் கதிர்
“அது, நான் ஒன்னும் வேணும்னு சொல்லல கதிர், நீயும் முல்லையும் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு தானே இருந்தீங்க. அதான் உங்களுக்குள்ள எப்படி ஒரு நல்லது நடந்திருக்கும்ன்னு எனக்கு சந்தேகமா இருந்துச்சு. அதுவும் இல்லாம இப்ப கூட முல்லை முருகன் மாமா வீட்ல தானே இருக்குது. இதனால தான் உங்களுக்குள்ள பிரச்சனை நடந்துச்சுன்னு நினைச்சேன்” என கஸ்தூரி சொல்ல.“வாயை மூடு” என்று கத்தித்தான் கதிர்.
“ஹாங். அவங்கள எதுக்கு வாய மூட சொல்றீங்க, ஒரு புருஷனா வேணா. ஒரு மனுஷனா கூட இல்லாத நீங்க எல்லாம் அடுத்தவுங்கள மிரட்ட முதல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் என் அக்காவ பத்தி தப்பா பேச விட்டுட்டு, நீங்க வேடிக்கை பாக்குறீங்களே, உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்” என்று கதிரை KV கேள்வி கேட்க,
“டேய். எங்க குடும்ப விஷயத்துல தலையிட நீயே பாருடா” என்று அவன் சட்டையை பிடித்தான் கதிர்.
—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
மருத்துவமனை என்று பாராமல் இவர்களின் குடும்பச் சண்டை எல்லை மீற.“மரியாதையா என் தம்பி மேல இருந்து கையை எடுங்க” என்று அதீத கோபத்துடன் இவர்களை நெருங்கி வந்தாள் முல்லை.
முல்லையின் கையில் மாத்திரை மருந்து இருக்க. வேலனின் சட்டையிலிருந்து கையை விடுவித்த கதிர். அதே கோபத்துடன் முல்லையை நெருங்கியவன் “எவ்வளவு திமிர் இருந்தா என் புள்ளையை கலைக்கிற அளவுக்கு போயிருப்ப. உனக்கு அப்படி நான் என்னடி பாவம் பண்ணேன்” என்று முல்லையை கதிர் கோபத்துடன் நெருங்க, அவளோ கதிரை சுட்டெரிக்கும் தீக்கணலாய் முறைத்து இருந்தாள்
“என்னடி. என்ன முறைக்கிற? என் குழந்தையை கலைச்சிட்டியா. நீ எல்லாம் ஒரு பொண்ணா” என்று மீண்டும் கதிர் கோபத்துடன் முல்லையின் கழுத்தை பிடிக்க போனவனின் கையைத் தட்டி விட்ட முல்லை, “இனி என் மேல கை வைக்கிற வேலையெல்லாம் வசிக்காதிங்க” என்றாள்.
உண்மை தெரியாமல் இவர்கள் இங்கே சண்டையிட்டுக் கொண்டு இருக்க.“டேய் நண்பா அவசரப்படாதே இருடா” என்று கதிரை அழைத்தபடி இவர்களை நெருங்கி வந்தான் நாகராஜன்.
“நண்பா. உண்மை தெரியாமல் பாப்பாவை எதுவும் சொல்லாத” என்று நாகராஜன் தன் நண்பனை தடுக்க.
“இதுக்கு மேல என்ன உண்மை தெரியணும். அதான் என் புள்ளையை கலைச்சிட்டு கையில மாத்திர மருந்துடன் வந்து இருக்காளே” என்று கதிர் சொல்ல.
“உங்க அறிவ உங்க வீட்டு அலமாறில வச்சிட்டு வந்து இருக்கீங்களா” என்று கேட்டான் வேலன்
“டேய். கண்டிப்பா நீ என்கிட்ட அடி வாங்கிட்டு போயிடுவ” என்று மீண்டும் கதிர் வேலனை அடிக்க கை ஓங்க.
“போதும் நிறுத்துங்க. அடிக்கிறத விட்டா உங்களுக்கு வேற என்ன தெரியும்.?” என்று கேட்டாள் முல்லை.
“வாடிவா. என் புள்ளையை கலைச்சிட்டு, என்கிட்டயே திமிரா பேசுறியா?” என்று கதிர் கேட்க,
“யோவ். புள்ளைய கலைச்சவங்கனால அடுத்த நொடியை இப்படி தெம்பா வந்து நிக்க முடியுமா? உனக்கு சுய அறிவே இல்லையா” என்று கேட்டான் வேலன்.
“ஏய். யாருக்கு அறிவில்ல.“ என்று கதிர் மீண்டும் வேலனை அடிக்க போக.
“ஐயோ நண்பா. நடந்தது தெரியாம நீயா கோவப்படாத. சின்னம்மா. உங்க பிரண்டு வராங்க பாருங்க” என்று நாகராஜன் சொல்ல. இவர்களை நோக்கி ரோஜாவின் தோழி செவிலியர் நீலு அங்கே வந்தார்.
—–_—_——–_——_–_—–_—-_——-_—–_—
“என்ன ரோஜா. என்ன பிரச்சனை? ஹாஸ்பிடல்ல இருக்கிற எல்லாரும் உங்களை தான் பார்க்குறாங்க. இங்க என்னதான் நடக்குது” என்று நீலு கேட்க.
“நீதானே போன் பண்ணி எங்க அண்ணி கருக்கலைக்க வந்திருக்காங்கன்னு சொன்ன. அதான் இங்கே ஒரே பிரச்சனை. சரி சரி நீ சொல்லு. என் முல்லை அண்ணி கருவை கலைக்கள தானே” என்று ரோஜா கேட்க,
“என்ன முல்லை அண்ணியா,
ஏ லூசு. நான் சொன்னது உன்னோட பெரிய அண்ணி மீனாவை” என்று நீலு சொல்ல, “என்னது. மீனா மாசமா இருக்கிறாளா?” என்று தன் விழிகளை அகலமாய் விரித்தார் கஸ்தூரி.
நீலுவின் வார்த்தையைக் கேட்டு அனைவரும் ஸ்தம்பித்துப் போக,
“என்னது மீனா மாசமா இருக்காளா. ஏமா கஸ்தூரி, அடிச்சாலும் புடிச்சாலும் கதிரும் முல்லையும் கல்யாணமானதுல இருந்து ஒன்னாதான் இருந்திருக்காங்க.
அதுவுமில்லாமல் சென்னைக்கு எல்லாம் போனாங்கன்னு கேள்விப்பட்டேன்.
அவங்க ரெண்டு பேருக்குள்ள எசக்கு பிசக்கு ஆகி கதிர் குழந்தையை முல்லை வயத்துள்ள சுமக்கிறதையே நீ அசிங்கமா கேள்வி கேட்டியே,
இப்போ கல்யாணமான மூணாவது நாளே ஜீவா வீட்டை விட்டு ஓடிப்போன நிலையில, உன் பொண்ணு மீனா மாசமா இருக்காளே, இது எப்படி.?, ஓ. ஊருல இருக்குற பொண்ணுக்கு தான் விளக்கு புடிப்பியா. உன் பொண்ணுனா இப்படித்தான் மேய விடுவியா” என்று சரஸ்வதி கேட்க. கஸ்தூரியின் முகம் கோவமாக மாறியது.
“ஐயோ அம்மா வாய மூடு. நீ எங்க கட்சி” என்று தனம் சொல்ல.
“நீ வாய மூடு. நான் எப்பவுமே கதிர் கட்சி தான். கதிருக்கு முல்லை தான். முல்லைக்கு கதிர் தான். அவங்க குடும்பத்தை பிரிக்க நினைச்சீங்க. நானே உங்க எல்லாருக்கும் பாயசத்தை போட்டுடுவேன்” என்று சரஸ்வதி எப்பொழுதும் போலவே கதிருக்கு துணை நிற்க.
அதே சமயம் மீனா கண்களில் கண்ணீருடன் சக்கர நாற்காலியில் செவிலியரின் துணையுடன் இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தவளின் நிலையை பார்த்து அனைவரின் கண்களிலும் அதிர்ச்சி தெரிந்தது.
இவர்கள் அனைவரும் இப்படியாக நின்று இருக்க. இங்கே நடக்கும் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத கதிரோ.
“ஏய் ரவா லட்டு. அப்போ நமக்கு ஒரு குட்டி லட்டு பிறக்கப் போகுதா.?” என்று முல்லையை நோக்கி கேள்வி எழுப்பிய கதிரின் இதழ்களில் புன்னகை மலர.
சட்டென்று சுற்றம் மறந்து முல்லையின் முன்னே மண்டியிட்ட கதிரோ. அவள் வயிற்றில் கை வைத்து.
“ஒய் குட்டி லட்டு. நான் தான் உன் அப்பா பேசுறேன்” என்றவனின் கொஞ்சும் குரலை கருவறையில் இருக்கும் குழந்தை கேட்டதோ என்னவோ, முல்லையின் செவிகள் அவன் வார்த்தையை கேட்ட வேகத்தில் தன் விழிகளில் இருந்து கண்ணீரை தவற விட்டு இருந்தாள்.
தொடரும்