“மீனா. என்னமா இதெல்லாம். அப்போ. அப்போ நீ மாசமா இருக்கியா. உன் குழந்தை. இல்ல இல்ல என் பேரப்பிள்ளை தான் பாண்டியன் அண்ணன் குடும்பத்தோட மூத்த வாரிசா.?” என்ற கஸ்தூரி ஓடி சென்று மீனாவை கட்டி அணைத்து இருந்தார்.
“இந்தாமா. இந்த பொண்ணுக்கு ஆப்ரேஷன் பண்ணிருக்கோம். அது தெரியாம நீ வேற வந்து மேல விழற. போ போ. அப்பால போ” என்று செவிலியர் கஸ்தூரியை கண்டிக்க.
“என்ன ஆப்ரேஷனா.?” என்று சுற்றி இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
“என்ன மீனா. இவங்க என்ன சொல்லுறாங்க. எதுக்கு ஆபரேஷன்” என்று கஸ்தூரி ஏதும் புரியாமல் கேட்க.
மீனாவோ கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தவள் வாய் திறந்து ஒரு வார்த்தைக்கூட பேச மறுத்து இருந்தாள்.
“என்ன மா ரோஜா, இங்க என்ன நடக்குது.“ என்று பாண்டியன் தன் மகளை கேள்வி கேட்க.
“நீலு. என் அண்ணிக்கு என்னாச்சு” என்று தன் தோழியை கேட்டாள் ரோஜா.
“உன் அண்ணி வயத்துல 3 மாச கரு இருந்து இருக்கு ரோஜா. ஆனா அவங்க அந்த கருவை கலைக்க கண்ட மாத்திரையை போட்டு. இப்போ அவங்க கருபப்பை வீக் ஆனதால டாக்டர் காலையில தான் அவங்களுக்கு Abot பண்ணிட்டாரு” என்று நீலு சொன்னதும், கஸ்தூரியின் முகத்தில் பேரதிர்ச்சி ஏற்பட்டது.
“என்ன. கருவை கழச்சிட்டாளா. பாவி பாவி. உன் வாழ்க்கையை இப்படி நீயே அழிச்சிட்டியே பாவி மகளே” என்று ஆத்திரப்பட்ட கஸ்தூரி மீனாவை கண்ட மேனிக்கு அடிக்க ஆரம்பித்து இருந்தார்.
மீனாவின் செயலில் பாண்டியனும் ரோஜாவும் கூட கோவம் கொள்ள. மீனாவை பார்க்க முல்லைக்கோ பாவமாக தான் இருந்தது.
கஸ்தூரி சுற்றம் மறந்து மீனாவை அடித்து வெளுக்க.“இந்தாமா. நீயே உன் பொண்ண கொன்னுடுவ போல. நிறுத்து, அடிக்காத அவள” என்று செவிலியர் கஸ்தூரியை கண்டிக்க.
“சாகட்டும். செத்து தொலையட்டும்” என்று மேலும் மேலும் மீனாவை அடி துவைத்துக்கொண்டு இருந்தார் கஸ்தூரி.
யார் யாரையோ அடிங்க. நான் அப்பாவாக போறேன். இந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தையில் விவரிக்க முடியாது என்ற மனநிலையில் முல்லையின் அருகே நின்றுக்கொண்டு அவள் வயிற்றில் கை வைத்த வண்ணமாகவே இருந்தான் கதிர்.
மீனாவின் முகத்தை பார்த்து பாவமாக
நின்று இருந்த முல்லையின் மூளை கதிரின் செயலை உணராமல் போனது.
கஸ்தூரி மேலும் மேலும் மீனாவை அடிக்க.“பெரியம்மா. இது அவங்க குடும்ப விஷயம். நீங்க வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்,
அக்கா வா” என்று முல்லையை அழைத்தான் வேலன்.
வேலன் முல்லையை அழைத்ததும் தான் அவள் வயிற்றில் கதிரின் கரங்கள் பதிந்து இருப்பதை அவள் கவனித்து இருந்தாள்.
“ஆமா ஆமா. வா டி வீட்டுக்கு போகலாம். இந்த ஹாஸ்பிடல் வாடை எல்லாம் என் குட்டி லட்டுக்கு ஒத்துக்காது. வா வா” என்று கதிர் முல்லையின் கையை பிடிக்க. அவளோ அவன் கையை கோபத்துடன் தட்டிவிட்டாள்.
முல்லையின் செயலில் கதிருக்கு கோவம் வருமென்று அவள் நினைத்து இருக்க.
“சரி சரி. நான் உன் கையை பிடிக்கல. நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று மீண்டும் அழைத்தான் கதிர்.
முல்லை அவனை ஏகத்துக்கும் முறைத்தவள்.“வேலா. அப்பாவை அழைச்சிட்டு வா. நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றவள். வேகமாக மருத்துவ மனையில் இருந்து வெளியேறியும் இருந்தாள்.
“ஏய் ரவா லட்டு நில்லு டி. நில்லுனு சொல்லுறேனே” என்று கதிர் சத்தமாக கத்தினாலும், முல்லை காதில் வாங்கமால் அவன் கண் பார்வையில் இருந்தே மறைந்து இருக்க.“முல்லை. அடியே.“ என்று தன் மனைவியை அழைத்தப்படியே கதிரும் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
KM இருவரும் வெளியே போனதும்.“ரோஜா நாமும் கிளம்பலாம் வா” என்று பாண்டியன் சொல்ல.“அண்ணா. என் பொண்ணு உங்க வீட்டு வாரிசை கழச்சிட்டு வந்து நிக்கறா. நீங்க என்ன அவகிட்ட ஒரு கேள்வி கூட கேக்காம கிளம்புறேன்னு சொல்றிங்க” என்று கேட்டார் கஸ்தூரி.
“என்ன என் வீட்டு வாரிசா. வேணா கஸ்தூரி. என்னை பேச வைக்காத” என்ற பாண்டியனும் மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருக்க.
“நீங்க எதை விதைக்கிறிங்களா. அதை தான் அறுவடை பண்ணுவீங்க” என்ற வேலனும் அவன் பெரியப்பா முருகனை தள்ளிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
“கஸ்தூரி. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. முல்லை வாழ்க்கையை அழிக்க நினைத்து. இன்னைக்கு உன் பொண்ணு வாழ்கை நிர்கதியா ஆகிருச்சு. இனியாவது அடுத்தவுங்க கெட்டு போகணும்னு நினைக்காத” என்ற பார்வதியும். மருத்துவ மனையில் இருந்து வெளியேற.
கண்கள் கலங்கிய நிலையில் சக்கர நற்காலியில் அமர்ந்து இருந்த மீனாவை தள்ளிக்கொண்டு செவிலியர் அங்கிருந்து நகர்ந்து இருந்தார்.
“ஐயோ என் பொண்ணு இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சே பார்க்கலையே” என்று கஸ்தூரி கதறி அழ.
“ஏன் டி தனம். அப்போ மீனா வயத்துல வளர்ந்தது ஜீவா பிள்ளை இல்லையா.?” என்று சந்தேகமாக கேட்டார் சரஸ்வதி.
“அம்மா. உனக்கு எங்காவது அறிவு இருக்கா. ஒரு பொண்ணா இருந்துகிட்டு நீ இன்னோரு பெண்ணை பற்றி இப்படி பேசலாமா” என்று தனம் கேட்க.
“பாருடா. ஏன். நீயும் கஸ்தூரியும் சேர்ந்து இதே மாதிரி முல்லையை பேசுனீங்களே. அப்போ நீங்க பொண்ணா இல்லாம மண்ணா இருந்திங்களா” என்று கேட்டார் சரஸ்வதி.
“போதும் நிறுத்து. இனி அந்த முல்லைக்கு நீ சப்போர்ட் பண்ணாத” என்று கோவமாக தன் தாயை எச்சரித்த தனம். கஸ்தூரியை ஆறுதலாக கட்டிக்கொண்டாள்.
“தனம். என் பொண்ணு நல்ல பொண்ணு தான். அவ ஏன் இப்படி பண்ணான்னு தெரியல” என்று கஸ்தூரி புலம்பியதும்.“சரி சரி. இப்போ நீங்க கவலைபட்டு எதுவும் ஆகப்போறது இல்ல. முதல்ல நீங்க இந்த நேரத்துல உங்க பொண்ணுக்கு ஆறுதலாக போய் அவகூட இருங்க” என்றாள் தனம்.
==================================
இதே சமயம் மருத்துவ மனையின் வாசலில் நின்று இருந்த முல்லையின் அருகே கதிரும் பாவமாக நின்று இருந்தான்.
“அக்கா. போகலாமா” என்று வேலன் கேட்க.“அம்மாடி முல்லை. என்னமா இது. நீ மாசமா இருக்குற செய்தியை ஏன் டா எங்ககிட்ட மறைச்ச” என்று கேட்டார் முருகன்.
“என்ன முல்லை, எனக்கு குழந்தை இல்லாதனால நம்ம ஏன் இவகிட்ட இந்த நல்ல விஷயத்தை சொல்லணும்னு நினைச்சியா” என்று பார்வதி கேட்க.
“அம்மா. என்ன வார்த்தை பேசுறீங்க.“ என்று பதறினாள் முல்லை.
“பின்ன எப்படி பேச சொல்லுற. இது எவ்ளோ பெரிய விஷயம். நம்ம குடும்பத்துல ரொம்ப வருஷத்துக்கு பிறகு குழந்தை பிறக்கப் போகுது. இந்த மகிழ்ச்சியை ஏன் எங்ககிட்ட சொல்லாம மறைச்சிட்ட” என்று கேட்டார் பார்வதி.
“ஹாங் நல்லா கேளுங்க. எனக்கு குழந்தை பிறக்கபோற விஷயத்தை என்கிட்ட கூட இவ சொல்லவே இல்ல. சரியான நெஞ்சளுத்தக்காரி” என்று கதிர் சொல்ல.
“24 மணி நேரமும் தண்ணிலேயே இருக்குற உங்ககிட்ட எதை சொல்லி என்ன ஆகப்போகுது” என்று கேட்டான் வேலன்.
“டேய். நான் மறுபடியும் சொல்லுறேன். என் விஷயத்துல நீ தலைவிடாத” என்று கதிர் வேலனை யை கண்டிக்க, “உங்ககிட்ட எனக்கு என்ன பேச்சு. அக்கா வா நம்ம கிளம்பலாம்” என்று முல்லையை அழைத்தவன். காரில் முருகனை தூக்கி அமரவும் வைத்து இருந்தான்.
“அம்மாடி முல்லை. நீங்க எல்லாம் நம்ம வீட்டுக்கு வாங்க மா. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி கோவமா உன் அப்பா வீட்லயே இருக்க போற” என்று பாண்டியன் கேட்க.“இது ஒன்னும் கோவம் இல்ல மாமா. இது என்னோட தன்மானம்” என்றாள் முல்லை.
“என்னடி போடலங்காய் தன்மானம். ஆமா. அன்னைக்கு நான் அப்டி பேசுனது தப்பு தான். இப்போ என்ன உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா” என்று கதிர் கேட்க,
“மனசார உங்க மேல இருக்குற தவறை உணராமல் சும்மா வாய் வார்த்தைக்காக நீங்க கேக்குற மன்னிப்பு மல்லிப்பூ எல்லாம் எங்க அக்காவுக்கு தேவை இல்லை” என்றான் வேலன்.
“டேய். நீ ஏன் சும்மா சும்மா எங்க குடும்ப விஷயத்துல தலையிடுற” என்று கதிர் கேட்க.“அவன் என்னோட தம்பி. எனக்கு ஒன்னுனா அவன் கேப்பான் தான்” என்றாள் முல்லை.
“அம்மாடி முல்லை. இனி உன் தன்மானத்துக்கு எந்த பாதிப்பும் வராம நான் பார்த்துக்குறேன். முருகன், நீ, பார்வதி வேலன்னு நாலு பேரும் நம்ம வீட்டுக்கு வாங்க மா” என்று பண்டியன் அழைக்க.“சாரி மாமா, என்னால முடியாது” என்றாள் முல்லை.
அவளின் பதிலில் கதிர் கோவமடைந்தவன்.“ஏய். கல்யாணம் ஆன பொண்ணு புகுந்த வீட்டுல இருக்குறது தான் முறை” என்று சொல்ல.
“இந்த முறை குறையெல்லாம் இனி வேலைக்கு ஆகாது. உங்களுக்கு வேணும்னா எங்க வீட்டுல வந்து தங்குங்க” என்றான் வேலன்.
அவனின் வார்த்தையை கேட்டு முல்லை கதிரை பார்க்க.“ஏய் என்ன. என்னை வீட்டோட மாப்பிளையா இருக்க சொல்லுறியா” என்று கேட்டதும்.
“ஏன்.?எந்த பொண்ணையும் வீட்டோட மருமகன்னு சொல்ல மாட்டுறீங்க. பையன மட்டும் வீட்டோட மாப்பிளைன்னு கிண்டலா சொல்விங்களா” என்று கேட்டான் வேலன்.
“தம்பி என்ன பேசுற நீ. கால காலமா பொண்ணுங்க தானே பா கல்யாணம் பண்ணிகிட்டு மாப்பிளை வீட்டுக்கு வருவாங்க” என்று பாண்டியன் கேட்க.
“ஹாங். அப்படி வரதால தான் உங்க பையன மாதிரி ஆளுங்க இது என் வீடு, வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லுறாங்க” என்றான் வேலன்.
“டேய். பைத்தியம் மாதிரி எதையாவது பேசாத. இந்தாடி ரவா லட்டு. இப்போ நீ வீட்டுக்கு வருவியா மாட்டியா” என்று கதிர் கேட்க.
“மாமா நாங்க கிளம்புறோம். ரோஜா போய்ட்டு வரேன்” என்ற முல்லை காரில் ஏறி அமர்ந்ததும், பார்வதி முருகன் வேலன் முல்லை என்று நால்வரும் அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள்.
“இவளுக்கு எவ்ளோ திமிர் பார்த்திங்களா அப்பா” என்று கதிர் கேட்க.
“எல்லாம் நீங்க ஆரம்பிச்சது தானே வாத்தி” என்றாள் ரோஜா.
முல்லை சென்ற கார் பாண்டியனின் கண் பார்வையில் இருந்து மறைந்து இருக்க.
“அம்மாடி ரோஜா. நம்ம மூணு நாள் முருகன் வீட்டுல தங்கிட்டு வரலாமா” என்று கேட்டார் பாண்டியன்.
“என்னப்பா கேள்வி இது. வாங்க தாரலாமா தங்குவோம். எனக்குமே முல்லை அண்ணிக்கூட இருக்க ஆசையா இருக்கு” என்று ரோஜா சொல்ல.“அப்பா. நீங்க ஏன் அவங்க வீட்டுக்கு போகணும்” என்று கோவமாக கேட்டான் கதிர்.
“டேய். நாங்க மட்டும் இல்ல, நீயும் ஒழுங்கா வந்து முருகன் வீட்ல கொஞ்ச நாள் தங்கி. உன் பொண்டாட்டிக்கு உன் மேல இருக்குற கோவத்தை சரி பண்ற வழியை பாரு” என்று பாண்டியன் சொல்ல.
“என்னால எல்லாம் அவங்க வீட்டுக்கு வர முடியாது. அங்க வீட்டு வேல செய்யற பொண்ணு கூட என்னை ரவுடி பையன பார்க்குற மாதிரி பாக்குது “என்றான் கதிர்.
“டேய். சும்மா தேவையில்லாத கதையெல்லாம் பேசாத. இந்த பிரச்சனையை ஆரம்பிச்சு வச்சது நீதான். அந்த பையன் வேலன் சொல்லுற மாதிரி. ஏன் மாப்பிள எல்லாம் மாமனார் வீட்டுல போய் தாங்க கூடாதா என்ன.?. உனக்கு முல்லையும் அவ வயத்துல வளறுற உன் பிள்ளையும் வேணும்னா ஒழுங்கா நீயும் எங்ககூட வா. இல்லைனா நீ என்னமோ பண்ணி தொல. நாங்க கிளம்புறோம்” என்ற பாண்டியன், ரோஜாவை அழைத்துக்கொண்டு நாகராஜனின் காரில் முருகனின் வீட்டுக்கு சென்றார்.
“ஏதோ அன்னைக்கு நான் குடிப்போதையில என்னமோ சொல்லிட்டேன். அதுக்காக இவ திமிர் எடுத்துப்போய் அவங்க அப்பா வீட்டுல போய் உக்காந்தா. நான் இவ கால்ல விழுந்து அவள போய் கூப்பிடணுமா. Lion Tired ஆனாலும் அது சீற்றம் குறையாது. இந்த கதிர் யார்கிட்டயும் போய் நிக்க மாட்டான்” என்று வீர வசனம் பேசிய கதிர் நேராக பாண்டியனின் இல்லத்திற்கு கிளம்பி சென்றான்.
================================
இதே சமயம். காரில் சென்றுக்கொண்டு இருந்த பாண்டியனோ தீவிர யோசனையில் முழுகி இருக்க.
“என்ன ப்பா. மீனா அண்ணியை பற்றி நினைச்சுகிட்டு இருக்கீங்களா” என்று ரோஜா கேட்டாள்.
“எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல ரோஜா. ஜீவா மீனாவோட திடீர் கல்யாணத்துல தொடங்கி, ஜீவா வீட்டை விட்டு போனதுல இருந்து. இதோ இப்போ மீனா குழந்தையை கலைச்சது வரைக்கும் எதனால இதெல்லாம் நடக்குதுனே எனக்கு புரியல” என்று பாண்டியன் கவலைக்கொள்ள.
“இதுக்கெல்லாம் ஒரே தீர்வு நம்ம ஜீவா அண்ணன் மறுபடியும் வீட்டுக்கு வரதுல தான் இருக்கு” என்றாள் ரோஜா.
“ஆனா சின்னமா. நானும் சரி, கதிரும் சரி. எங்களுக்கு தெரிஞ்ச இடத்துல எல்லாம் அவரைப் பற்றி விசாரிச்சுட்டோம். ஏன் ஜீவா அண்ணன் பாஸ்போர்ட் வச்சி கூட அவரு வெளிநாட்டுக்கு எங்காவது போய்ட்டாருன்னு கூட விசாரிச்சு பார்த்துட்டோம்” என்று நாகராஜன் சொல்ல.
“இந்த குடும்பத்துல இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்காப்போகுதுனே தெரியல” என்று கவலைக் கொண்டார் பாண்டியன்.
அன்றைய தினம் மதிய நேரத்திற்குள் பாண்டியன், ரோஜா மற்றும் நாகராஜன் ஆகிய மூவரும் முருகனின் இல்லத்திற்கு சென்றடைய முதலில் அவர்களை பார்த்ததும் மரியாதை நியமித்தமாக உள்ளே அழைத்தாள் முல்லை.
வீட்டிற்கு வந்தவர்களை அன்புடன் உபசரித்த முல்லை, “ மாமா. நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா மறுபடியும் என்னை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னு தப்புக்கணக்கு போட்டு நீங்க இங்க வந்து இருந்தீங்கன்னா, அது இந்த ஜென்மத்துல நடக்காது” என்று முல்லை சொல்ல.
“அண்ணி. நாங்க ஒன்னும் நம்ம வீட்டுக்கு உங்களை அழைச்சிட்டு போக வரல. நானும் அப்பாவும் கொஞ்ச நாள் இங்க தங்கலாமுன்னு தான் வந்து இருக்கோம்” என்றாள் ரோஜா.
“என்ன.? நீங்க இங்க தங்க போறிங்களா? என்ன விளையாடுறீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கு கல்யாணம் நடக்க போகுது. ஒரு வயசு பையன் இருக்கிற வீட்ல நீங்க எப்படி தங்குவீங்க?” என்று வேலன் கேட்க.
“என்ன. நீங்க 1 வயசு பையனா? உங்களுக்கு 27 வயசு இருக்கும்ன்னு நினைத்தேனே.“ என்றாள் ரோஜா.
“ஓ. இது தான் குன்னக்குடி காமெடியா.? ரொம்ப நல்லா இருக்கு. டைம் இருக்கும்போது நான் சிரிக்கிறேன். இப்ப விஷயத்துக்கு வாங்க. நீங்க எதுக்காக இங்க தங்குறீங்க” என்று வேலன் கேட்க,
“வேலா. என்ன இது?வீட்டுக்கு வந்தவங்ககிட்ட இப்படி மரியாதை இல்லாமல் பேசக்கூடாது” என்று அவனை கண்டித்தார் முருகன்.
“பெரியப்பா, நான் மரியாத இல்லாம பேசல, இவங்க மறுபடியும் முல்லை அக்காவை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறதுக்காக தான் இங்க வந்து இருக்காங்க. நான் ஹாஸ்பிடல்ல அவ்வளவு சொல்லியும் இவங்க பெத்த புள்ள வந்து முல்லை அக்காவுக்காக இங்கே ஒருநாள் கூட தங்க தயாரா இல்லாத போது, இவங்க மட்டும் முல்லை அக்காவை மறுபடியும் அங்க அழைச்சிட்டு போனா அப்புறம் நம்ம அக்காவுக்கு என்ன மரியாதை இருக்கு” என்றான் வேலன்.
“இரு தம்பி. நீ சொல்றது நியாயம் தான். நாங்க முல்லையை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போவதற்காக இங்க வரல. நம்ம குடும்ப வாரிசை முல்லை சுமந்துகிட்டு இருக்கா. முல்லை எனக்கு தங்கச்சி மக. என் வீட்டு மருமக. அவ வாயும் வயிறுமா இருக்கும் போது அவ கூட நான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக தான் நானும் ரோஜாவும் இங்க தங்கலாம்னு வந்தோம். சரி உங்களுக்கு இஷ்டம் இல்லனா சொல்லுங்க நாங்க கிளம்புறோம்” என்று பாண்டியன் சொல்ல “மாமா இருங்க. நீங்க இங்க தாராளமாக தங்கலாம்” என்றாள் முல்லை.
“ஐயா. ஹாஸ்பிடல்ல இருந்து நேரா இங்கே வந்துட்டீங்க. உங்களுக்கும் சின்னம்மாவுக்கும் மாத்து துணி கூட எடுத்துட்டு வரலையே.“ என்று நாகராஜன் கேட்க
“முல்லை அண்ணி பாவடை தாவணி இங்க இருக்கும். அத நான் போட்டுட்டேன். இதோ முருகன் மாமாவுடைய டிரஸ் கூட அப்பா போட்டுப்பாரு. எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நாளைக்கு காலையில நான் வேணும்னா வேலன் கூட வந்து மீதி things இங்க எடுத்துட்டு வரேன்” என்று ரோஜா சொல்ல.“ நானெல்லாம் உங்க வீட்டுக்கு வரமாட்டேன்” என்றான் வேலன்.
“அவன் அப்படி தான் சொல்லுவான் ரோஜா, நீ நாளைக்கு அவன உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போ” என்று பார்வதி சொல்ல
“சரி ஐயா நான் கிளம்புறேன். முல்லை. பெரியவங்க பிரச்சனையில் வயித்துல இருக்குற குழந்தையை தண்டித்துடாதே. குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோ. நேரத்துக்கு சாப்பிடு. உடம்ப பாத்துக்கோ. எல்லாருக்கும் போயிட்டு வரேன்” என்ற நாகராஜன் முருகனின் வீட்டில் இருந்து கிளம்பினான்.
==============================
இரவு நேரம் முருகனின் இல்லத்தில், தன் வீட்டுக்கு வந்தவர்களுக்கு தடப்புடலாக விருந்து தயாராக, ஏனோ அடுப்பனையில் இருந்து வந்த தாளிப்பின் வாசனை முல்லைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, தொடர்ந்து முல்லை வாந்தி எடுத்த விதமாக இருந்தவளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டாள் ரோஜா.
“என்ன இது இப்படி வாந்தி எடுக்குறிங்க” என்று ரோஜா கேட்க.
“ஒருவேளை மாசமா இருந்தா இப்படித்தான் வாந்தி வருமோ என்னமோ. ஹ்ம். யார் கண்டது. எனக்கு தான் இந்த கொடுப்பினை இல்லாமல் போச்சே” என்றாள் பார்வதி.
“அக்கா. வேணும்னா நாளைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்” என்று வேலன் கேட்க.“நான் போய் கொஞ்ச நேரம் படுத்துகிறேன்” என்ற முல்லை அவள் அறைக்கு சென்று சோர்வுடன் படுத்தவளின் விழிகள் பல பிரச்சனைகளையும் கவலைகளையும் தாண்டி உறக்கத்தை தழுவி இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த நிலையில். முல்லையின் முகத்திற்கு அருகே சூடான மூச்சு காற்று பரவ. முல்லை தன் விழிகளை மலர்ந்தவளின் அருகே உரிமையாக அமர்ந்து இருந்தான் கதிர்.
தன்னவனின் அருகாமை நிஜம் இல்லை கற்பனை என்று எண்ணிய முல்லை,
“நேர்ல பார்க்கும் போது என் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்லாம பேசிட்டு. இப்போ கனவுல வந்து சீன் போடுறிங்களா. இருங்க இருங்க எனக்கு பிள்ள பிறக்கட்டும், நானே அவனுக்கு சிலம்பம் கத்துக்கொடுத்து உங்க வாயை உடைக்க சொல்லுறேன்” என்று முல்லை கற்பனை உருவம் என்று எண்ணி வாய் சவடால் பேசியவளின் வயிற்றை மென்மையாக அவன் கரங்கள் வருடிக்கொடுக்க.
“என் புள்ள எந்த காலத்திலும் என்னை அடிக்காது டி, ஏன்னா நமக்கு பிறக்க போற குழந்தை பெண் குழந்தை. அதுவும் உன்ன மாதிரி குட்டி ரவா லட்டு.“ என்றவன் மீண்டும் தன் முத்த அச்சாரத்தை அவள் வயிற்றில் பதித்த நொடி முல்லை வாரி அடித்து எழுந்து அமர்ந்தவளின் விழிகளின் முன்னே நிழலாய் இல்லாமல் நிஜமாய் அமர்ந்து இருந்தான் கதிர்.
கதிரை பார்த்ததும் கோவம்க்கொண்டு முல்லை கட்டிலில் இருந்து இறங்கியவள்.
“நீங்க ஏன் இங்க வந்திங்க.?” என்று சீரியதும்.
“என் பொண்டாட்டி வீட்டுக்கு நான் வந்து இருக்கேன் , ஏன். உனக்கு இப்போ என்ன பிரச்சனை” என்று கேட்டான் கதிர்.
“பொண்டாட்டியா. யாரு உங்களுக்கு பொண்டாட்டி.?” என்று முல்லை கோவமாக கதிரிடம் கேள்வி கேட்க.
“என்ன கேள்வி இது. நீ தான் என் பொண்டாட்டி. அதோ நான் கட்டின தாலி உன் கழுத்துல தானே இருக்கு. அப்போ நீ தான் என் பொண்டாட்டி. நான் தான் உன் புருஷன்” என்றான் கதிர்.
“ஓ. தாலி கட்டிட்டா போதுமா” என்று முல்லை கேட்க.
“அது மட்டுமா. ஏன் நமக்கு இப்போ குழந்தை கூட தான் பிறக்கப்போகுது” என்றான் கதிர்.
“ஹாங். தாலி கட்டி ஒரு பிள்ளையை கொடுத்துட்டா நீங்க எனக்கு புருஷனா ஆகிடுவீங்களா” என்று முல்லை கேட்க.
“இப்போ என்ன தான் டி உன் பிரச்சனை. ஏன் இப்படி சண்ட போடுற மாதிரியே பேசிகிட்டு இருக்க” என்று கேட்டான் கதிர்.
“பிரச்சனை தான். எனக்கு எல்லாமே பிரச்சனை தான். அதுவும் நீங்க தான் என் பிரச்சனைக்கு மூல காரணமே” என்று முல்லை சொல்ல.
“இங்க பாரு டி ரவா லட்டு” என்று பொறுமையாக முல்லையை அழைத்தான் கதிர்.
“இந்த ரவா லட்டு, ரவா கேசரின்னு எல்லாம் இனி என்னை நீங்க கூப்பிட வேணா. என் பேர் முல்லை. நீங்க என்னை முல்லைன்னு கூப்பிட்டா போதும். இல்ல இல்ல. நீங்க என்னை கூப்பிடவே வேணா. நீங்க கூப்பிட்டா கூட இனி நான் வரவே மாட்டேன்” என்ற முல்லை கோவத்துடன் அவள் அறையில் இருந்து வெளியே செல்ல முயன்ற தருணம்.“இரு டி, என்னால நீ வெளிய போக வேண்டாம்ம். நானே போறேன்” என்ற கதிர் அந்த அறையில் இருந்து வெளியே சென்றான்.
தனக்காக தன் வீடு தேடி வந்த கதிரின் மனதை நோகடித்த முல்லையும், நிம்மதி இல்லாமல் மீண்டும் அவள் கட்டிலில் படுத்தப்படி கண்கள் கலங்க, இதே தருணம் முல்லையின் கைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
நேரம் இரவு 11 pm தாண்டி இருக்க.
“இந்த நேரத்துல யாரு நமக்கு போன் பண்ணுறாங்க” என்று எண்ணிய முல்லை.“ஹலோ.“ என்று அந்த அழைப்புக்கு பதில் கொடுத்தவள் காதில்.
“முல்லை. முல்லை நான் ஜீவா பேசுறேன். கதிர். கதிர்” என்ற ஜீவாவின் குரலைக்கேட்டு.“ஜீவா மாமா. நீங்க எங்க இருக்கீங்க.?” என்று முல்லை பதற்றத்துடன் கேட்க.
ஜீவா எங்கே, KM எப்போது பனிப்போரை நிறுத்த போகிறார்கள் என்ற கேள்விளுக்கு உண்டான பதிலுடன் விரைவில் சந்திப்போம்.
தொடரும்