Stories that touch hearts

Home  /  SS-24-சிறுகதைப்போட்டி சிறுகதைகள்  /  Chapter 1

CHAPTER 1

SS-24 சிறுகதைப் போட்டி அறிவிப்பு

By Sorna Sandhanakumar · September 20, 2026

0

வணக்கம்!

sornasandhanakumar.com தளம் ஆரம்பித்து முதன்முறையாக சிறுகதைப் போட்டி அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
SS24 சிறுகதைப் போட்டி, நவம்பர் 10ல் ஆரம்பித்து, வரும் டிசம்பர் 31 வரை நடைபெற உள்ளது.

போட்டிக்கான விதிமுறைகள்.

1. போட்டிக் காலம் – வரும் நவம்பர் 10 முதல் டிசம்பர் 31, 2024 வரை.

2. வார்த்தை அளவு:
சிறுகதைகள் 1,000 முதல் 1,500 வார்த்தைகள் மிகாமல் இருக்க வேண்டும்.

3. ஒருவர் எத்தனை சிறுகதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். அதில் எது சிறந்ததோ அது மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.

4. சிறுகதைகள், குடும்ப உறவுகள், சமூக சிந்தனைகள், பெண்ணியம், காதல், மர்மம் உள்ளிட்ட எதைச் சார்ந்தும் இருக்கலாம்.

5. காதல் கதைகளில் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லை மீறிவிடக்கூடாது. அதாவது, ரொமான்ஸ் இருக்கலாம். அதீத ரொமான்ஸ் இருக்கக்கூடாது.

6. முடிந்தளவு எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும். கமா, கொட்டேஷன், முற்றுப்புள்ளி இதெல்லாம் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

7. போட்டிக்காலம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது. டிசம்பர் 31க்குள் உங்கள் சிறுகதைகளை தளத்தில் பதிவேற்றம் செய்துவிடவும்.

8. இங்கு போட்டிப்படும் சிறுகதைகள், இதற்கு முன் வேறெங்கிலும் பதிவிடப்பட்டிருக்கக்கூடாது.

போட்டி முடிவுகள்

1. போட்டியின் முடிவில் 5 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும்.

2. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டியில் பங்கு பெற விரும்புபவர்கள், உங்கள் பெயர், சிறுகதைத் தலைப்பு விவரங்களுடன், sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான திரி அமைத்துக் கொடுக்கப்படும்.

இங்கு எல்லோரும் சமமே! பாரபட்சம் பார்க்கப்படமாட்டாது.
கற்பனைகள் என்பது எல்லையில்லாதது. அந்தக் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கலாமே!

நட்புடன்,
சொர்ணா சந்தனகுமார்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!