Stories that touch hearts

Home  /  லீலா சந்திரன் (கண்ணில் தீட்டிய காதல் ஓவியம்)  /  Chapter 13

CHAPTER 13

❤ஓவியம் – 13️

By Leela Chandran · October 30, 2026

0


காலையில் கண்விழித்த முல்லை தங்கள் நிலை பார்த்து வெட்கம் கொண்டாள். பின், நேரம் ஆவதை உணர்ந்து, “மாமா. கதிர் மாமா. மணி ஆகுது எழுந்துரு. மாமா நிறைய வேலை இருக்கு.” என்றாள்.

“
ஏய் தூக்கம் வருதுடி. பகல்ல வேலை செஞ்சு எனக்குப் பழக்கமே இல்ல. நைட் டியூட்டி மட்டும் தான்.” என்று தூக்கத்தைத் தொடர,

“
ஆமா. ஆமா மாமா. நைட்டு உன்னோட வேலையை தான் நான் பார்த்தேன்னே.” என்றாள் கிண்டலாக.

“
ஏய் என்ன? காலையிலே வம்புக்கு இழுக்கிறாயா. நீ போ எனக்கு தூக்கம் வருது. நான் கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன்.”

“
மாமா நீ எந்திரிச்சா தான் நான் போக முடியும்.”

“
என்னடி உளர்ற?”

“
ம்… நீ என் மேலதா… ஹ்ம்… போ மாமா எனக்கு வெக்கமா இருக்கு.”

”
ஓ அதான் என்னடா இது ரொம்ப மிருதுவா இருக்குதேன்னு பார்த்தேன்.”

“
பாப்பா தான் நீ. நகரு மாமா நேரமாகுது.”

“
இப்போ எங்கடி போகப் போற. அதான் உங்க அம்மா ஒரு வாரம் இல்லல்ல. பின்ன என்ன? பேசாம படு” என்றான்.

“
அவங்க இல்லைனாலும் என்ன. இவ்வளவு நேரமெல்லாம் நான் தூங்கி பழக்கமே இல்ல. மணி என்ன ஆகுது தெரியுமா? எழுந்திரு மாமா.” என்றாள் முல்லை.

ஏய் வெறும் எட்டு மணி தானடி ஆகுது. நான் நைட்டு எட்டு மணி வரைக்கும் தூங்குவேன்.

“
ஆமா. நீ தூங்குவ. ஆனா எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. மரியாதையா எந்திரி நீ.” என்று சத்தம் போட்டாள்.

“
இப்போ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்னடி பண்ண சொல்ற?”

“
மாமா. உன் கூட நான் இருக்கப்போகும் இந்த ஒரு வாரமும், நான் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கனும். அம்மா வந்துட்டா நீ எட்டி நின்னு தானே பேசுவ. உன்னை எப்படி நான் இப்படி கட்டிப் பிடிக்கிறது.”

“
உன் அம்மா வந்தா மட்டும் என்னடி. தினமும் இரவு உன்கூடதான் நான் தூங்குவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றான் சாதாரணமாக.

“
ஆமா ஆமா. நீ பேசறது எல்லாம் கேட்க சந்தோஷமாக தான் இருக்கு. ஆனால் இந்த கல்யாணத்த அம்மா எப்படி அக்செப்ட் பண்ணிப்பாங்கன்னே தெரியல. அதுவே பயமா இருக்கு.” என்றாள்.

“
உங்க அம்மா எதுக்குடி ஒத்துக்கணும்?”

“
வேற? மாமா உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா. அடுத்த வாரம் எனக்கும் அந்த அகிலனுக்கும் அம்மா இந்த வீட்டிலேயே நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.” என்றாள்.

“
என்னடி சொல்ற? உன் அக்கா இருக்கும்போது உனக்கு எப்படி முதல்ல முடிக்க முடியும்?” என்று சந்தேகமாகக் கேட்டான் கதிர்.

“
அதுவா. அந்த வீணாப்போன அகிலனுக்கு நேரம் சரியில்லையாம்…”

“
அது எனக்கு தெரியுமே. அவனுக்கு நேரம் சரியில்ல தான். எப்ப இருந்தாலும் அவனுக்கு என் கையில தாண்டி ஆப்பு” என்றான் கோவத்தில்.

“
அடக் கேளு மாமா. அவனுக்கு நேரம் சரியில்லையாம். அதனால தான் அடுத்த வாரம் நிச்சயமும், அதுக்கும் அடுத்த வாரம் அவனுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்னு அம்மா முடிவு பண்ணியிருக்காங்க.”

“
என்னடி உளர்ற? உங்க அப்பா என்கிட்ட இது பத்தி சொல்லவே இல்லையே?”

“
அப்பாவே நேத்து நைட் தான் இத என்கிட்ட சொன்னாரு. அதுக்காக தான் நான் சீக்கிரம் சீக்கிரமா…” என்று நிறுத்தினாள்.

“
புரியல. சீக்கிரம் சீக்கிரமா… சொல்லு?” என்றான் அழுத்தமாக.

“
ம்… நம்ம இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்க ஏற்பாடு பன்னேன்.”

“
அது சரி. நல்ல ஆரம்பம் தான்.”

“
இங்க பாரு மாமா. அவன் கையால மட்டும் எனக்கு மோதிரம் போட்டான்னு வை அப்புறம் நான்…”

“
போதும் நிறுத்துடி. நான் ஒருத்தன் இருக்கும் பொழுது, அவன் விரல் கூட உன் சுண்டு விரலை தொடாது போதுமா. சரி நிச்சயம் எங்க நடக்குது?” என்று விவரம் கேட்டான்.

“
இதே வீட்டில் தான்.”

“
சரி நீ போய் குளிச்சிட்டு வா.”

“
அது சரி. நீ என்ன பண்ணப்போற?

“
ம்… நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்டி. ரொம்ப சோம்பலா இருக்கு.”

“
அதெல்லாம் ஒன்னும் வேணாம். வா மாமா. நம்ம சேர்ந்தே குளிக்கலாம்.”

“
என்னது? சேர்ந்து குளிக்கலாமாவா? ஏய் நீ ரொம்ப கெட்டு போயிட்ட. என்ன நிறைய இங்கிலிஷ் படம் பாப்பியா? ஆளை விடு தாயே” என்றான் கதிர்.

“
படம் எல்லாம் பார்க்க மாட்டேன். உன் கூட நான் எப்படி எல்லாம் வாழணும்னு எத்தனை வருஷம் நினைத்தேனோ, அதை எல்லாம் இப்போது நிஜத்துல வாழப்போறேன். எந்திரி குளிக்கலாம்.” என்று இழுத்தாள்.

“
இல்லடி. இதெல்லாம் ஆம்பளைங்க தான் செய்யணும். அதனால நானே உன்னை குளிப்பாட்டுறேன்.” என்று சொன்னபடி முல்லையைத் தன் கரங்களில் கதிர் குளியலறைக்கு தூக்கிச் செல்ல, கதிரும் முல்லையும் ஒன்றாக சேர்ந்து குளித்து முடித்தனர்.

“
மாமா இந்தா இந்த வேஷ்டியும், பட்டு சட்டையும் போட்டுக்கோ.”

“
ஏய் எனக்கு இதெல்லாம் கட்டி பழக்கம் இல்ல. இது இடுப்பிலே நிற்காது.”

“
அதனால் என்ன நான் கட்டி விடுறேன். வா மாமா.”

“
ஏய் தொடாதடி. எனக்கு கூச்சமா இருக்கு.” என்று நெளிந்தான்.

“
ஆமா கூச்சமா இருக்கும். ஆளை பாரு. குடு மாமா நான் கட்டி விடுறேன்.” என்று சொன்ன முல்லை கதிருக்கு வேட்டியைக் கட்டி விட, “இந்தா சட்டையைப் போடு.” என்று போட்டும் விட்டு, “ம்… மாப்பிளை மாதிரி இருக்க. உன்ன அப்படியே…”

“
என்னடி கோயிலுக்கு போகலாம்னு சொல்லி மறுபடியும் கசமுசா பண்ண போறியா. அதெல்லாம் நைட் பாத்துக்கலாம். சரி விடு. உனக்கு நான் புடவை கட்டி விடவா?”

“
ஹலோ மாம்ஸ்! எனக்கு கட்டத் தெரியும். நீங்க வெளிய போய் நில்லுங்க.”

“
நான் ஏன் வெளியே நிக்கணும்? ஒன்றாக சேர்ந்து குளிச்சாச்சு. எனக்கு டிரஸ் நீதான் மாதத்தின. ஏன் என் எதிர்க்க புடவை கட்ட மாட்டியா?” என்றான் கேள்வியாக.

“
புடவை கட்ட லேட்டாகும் மாமா. நீ போ நான் வரேன்.” என்று முல்லை சொல்ல. கதிர் வெளியே போவதற்காக கதவைத் திறக்க, பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் மணிமாறன் நின்று இருந்ததை பார்த்த கதிர் அதிர்ந்தான்.

“
டேய் மச்சான்! என்னடா இது?”

“
தெரியல சகல. நம்ப ஷாமிலி தான் கொடுத்து போட சொன்னாங்க. வேண்டாம் சொன்னேன். போட்டு தான் ஆகணும் சொல்லிட்டாங்க” என்றான்.

“
என்ன சகலையா? என்னடா இது புதுசா?”

“
ஆமான்டா அப்படித்தான் ஷாமிலி மேடம் சொல்ல சொன்னாங்க. இதுதான் சரின்னும் சொன்னாங்க” என்றான் மணிமாறன்.

“
உறவு வேற மாதிரி மாறுதேடா.” என்றான் யோசனையுடன்.

“
என்னடா சொல்றே? ஒன்னும் புரியலையே.” என்று தலையைச் சொறிந்தான்.

“
ம்ம்ம்… ஷாமிலி உன்னை லவ் பன்றா போல.”

“
அடப்பாவி என்னடா சொல்ற? ஒரு சகல என்ற வார்த்தைக்குப் பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கா?”

“
ஆமாம்டா. அதுக்கு அதுதான் அர்த்தம். வேற அர்த்தம் வராது” என்றான் கதிர்.

“
ஆனா, என்னால உன் மச்சினியை கல்யாணம் பண்ணா முடியாது.”

“
ஏன்? அவளுக்கு என்ன?”

“
நான் கட்டினா ஒரு திருடியை தான்டா கல்யாணம் பண்ணுவேன்.” என்றான் அவன்.

“
என்ன சொன்னீங்க? யாரை கட்டிக்க முடியாது சொன்னீங்க?” என்று வந்தாள் ஷாமிலி.

“
ஐயோ நான் ஒண்ணுமே சொல்லலங்க.”

“
ம்… அந்த பயம் இருக்கட்டும். அப்புறம் கதிர் மாமா நேத்து நைட்டு எல்லாம்… ம்… சரி சரி பார்க்கும்போதே தெரியுது.” என்று கிண்டலாகப் பார்த்தாள்.

“
ஏய் அது யாரு அங்க இன்னொரு ஜோடி பட்டு வேட்டி பட்டு சட்டையோட இருக்காங்க?”

“
வேற யாரு. உன் ஆளோட மாமா தான்.”

“
அய்யய்யோ இந்த கொடுமையெல்லாம் பார்க்கணுமா.” என்று அலறினான் கதிர்.

“
இந்தக் கொடுமைக்கே இப்படியா. அப்போ அங்க பாரு. உன் பழனி சித்தப்பா பின்னாடி யாருன்னு.” என்று கைநீட்டி காண்பித்தான் மணிமாறன்.

“
டேய்! சித்திடா. என்னடா இது? ஏய் கிழவி! இதென்ன பட்டுப்புடவை பொட்டு, பூ ம்… கலக்கற கீது.” என்று தன்னை வளர்த்த சித்தியை கலாய்த்தான்.

டேய் சும்மா இருங்கடா. இந்த புடவை எப்படியும் ஒரு பத்தாயிரம் ஆவது இருக்கும். அந்த பத்தாயிரம் ரூபா என்கிட்ட கொடுத்து இருந்தா எவ்வளவு சரக்கு வாங்கி குடிச்சு இருந்திருக்கலாம். அதை விட்டுட்டு…”

“
ஏய் கிழவி! என் சித்தப்பா உனக்கு ஆசையாக கொடுத்திருக்கிறார். அதை போய் சரக்குகூட கம்பேர் பண்ற?”

“
டேய் அதுகூட பரவாயில்லை. சரக்கு அடிக்க வேண்டிய நேரத்துல கோயிலுக்கு வர சொல்றான்டா உன் சித்தப்பன். இங்க பாரு சரக்கு அடிக்காம கையெல்லாம் கட கட கடன்னு நடுங்குது.” என்றார் கீதா.

“
இந்த நடுக்கம் சரக்குக்காக இல்ல. உனக்கு வயசு ஆயிடுச்சு கிழவி. அதை ஒத்துக்கோ.”

“
போதும் நிறுத்துங்க டா.” என்று அவர்களை அடக்க,

“
கீது நீ இந்த புடவையில தேவலோகத்து ரம்பா மாதிரி இருக்க.” என்று கேப்பில் கடா வெட்டினார் பழனி.

“
அட வெள்ளை உழுவ. கிழவி நல்லா ஜகன்மோகினி தெம்பா வந்து நிக்கிற மாதிரி இருக்குது. தேவலோகத்து ரம்பாவா நீ” என்று மணிமாறன் முறைத்தான்.

அங்கு வந்த சந்திரன், “என்ன எல்லாரும் கிளம்பிட்டீங்களா? மாப்ள, எங்க என் பொண்ணு?” என்று முல்லையின் அப்பா சந்திரன் கேக்க. முல்லை அறையில் இருந்து வெளியே வந்தாள்.

“
மாப்பிளை. உங்க ரெண்டு பேரையும் இப்படி பாக்குறதுக்கு கண் கோடி தேவை. போங்க. சந்தோஷமா கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொன்ன சந்திரன் கார் சாவியை கொடுத்தார்.

கதிர், முல்லை, ஷாமிலி, மணிமாறன், பழனி மற்றும் கீதா ஆகிய 6 பேரும் கோவிலுக்கு சென்று, ஹோட்டலில் சாப்பிட்டு அன்றைய பொழுதை நல்லபடியாக கடத்தினர்.

முல்லையின் அம்மா இந்துவும், வீனா போன அகிலனும் இந்த ஊரில் இல்லாததால், அந்த ஒரு வார காலமும் கதிரும் முல்லையும் சந்தோசாமாக தன் இல்லற சந்தோஷத்தை அனுபவித்தனர்.

கதிரும் கீதுவும் இதே வீட்டுக்குள் இருப்பது இப்போதைக்கு இந்துவுக்கும், அகிலனுக்கும் தெரிய வேண்டாம் என்று சந்திரன் சொன்னதால், இவர்கள் இருவரும் அவரவர்களின் காதலர்களுடன் தங்கி இருக்க, மாறனை மட்டும் பழனி அவர்கள் இந்த வீட்டில் வேலைக்கு சேர்த்து உள்ளேன் என்று போனில் இந்துவிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

அன்றைய இரவு சிங்கப்பூரில் இருந்து திரும்பி அகிலனும் அவனின் தந்தையும், இந்துவும் நடு வீட்டில் அமரந்தது கொண்டு தீவிரமாக எதையோ பேசிக்கொண்டு இருந்தனர்.

“
அகில் எனக்கு என்னமோ இதெல்லாம் சரி படல.” என்றார் இந்து.

“
அத்த வீட்ல புதுசா ஒருவன் வேலைக்கு சேர்ந்து இருக்கான். நம்ம இங்கயிருந்து எதையும் பேச வேண்டாம். வாங்க என் ரூமுக்கு போகலாம்” என்று சொல்லி அகிலனின் ரூமுக்கு இந்துவை அவனும், அவனின் அப்பா சேதுவும் அழைத்துச் சென்றனர்.

“
என்ன அத்தை? என்ன பிரச்சனை உங்களுக்கு?”

“
இல்ல மாப்பிள்ளை. இந்த பிசினஸ் நமக்கு சரிவராதுன்னு தோணுது.” என்று ஒரு எச்சரிக்கை உணர்வுடன் சொன்னார் இந்து.

“
ஏன் இப்படி பயப்படுறீங்க அத்தை?”

“
இல்ல இது ஏதோ தப்பான பிசினஸ் மாதிரி இருக்கு. நான் வேற இதுல உன்னை மட்டுமே நம்பி கோடி கணக்குல இன்வஸ்ட் பண்ணி இருக்கேன்.”

“
இல்ல அத்த. பயப்படாதிங்க. எல்லாம் நல்லபடியாக முடியும்.”

“
ஆமாமா. என் மருமக, அதான் உன் மகள் முல்லை வரும் நேரம் அகிலுக்கு எல்லாம் நன்மையும் நிகழும்.” என்றார் சேது.

“
ம்… சரி எல்லாம் நல்லதா முடியட்டும். வர வெள்ளிக்கிழமை உனக்கும் முல்லைக்கும் நிச்சயதார்த்தம் உன்னுடைய பிரண்ட்ஸ்கு சொல்லிடு.” என்று சொன்னபடி இந்து வெளியே போக, அகிலனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது.

“
ஹாய் டார்லிங் எப்படி இருக்க?” என்று கொஞ்சலாகக் கேட்டான் அகிலன்.

“
நான் நல்லா இருக்கேன். என்ன உனக்கு நிச்சயதார்த்தம் போல கேள்விப்பட்டேன்” எனக் கேட்டாள் மாலினி.

“
ஏய் மாலினி டார்லிங். நான் தான் சொன்னேனே. நிச்சயம் கல்யாணம் இது இரண்டும் முல்லை கூட நடக்கும். எதுக்குன்னா எல்லா சொத்தையும் என் பேர்ல மாத்த. ஆனால் மற்றபடி எனக்கு பொண்டாட்டி என்ற உரிமை உனக்கு தான் இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்.”

“
ம்… உனக்கும் நியாபகம் இருக்கட்டும். உனக்கும் எனக்கும் நடந்த கல்யாணப் பதிவு எல்லாம் என்கிட்ட இருக்கு. என்னை ஏமாத்த நினைச்சா அவ்வளவுதான்.”

“
இங்க பாரு மாலு. இந்த ஜென்மத்தில் எனக்கு பொண்டாட்டி நீ தான். நான் அந்த முல்லையை கல்யாணம் பண்ண காரணம் அவளை பழி வாங்க தான்.” என்று சொல்லி அகிலன் போனை வைத்தான்.

அங்கு வந்த அகிலனின் அப்பா சேது, “என்னடா என்ன பிரச்சனை?” எனக் கேட்டார்.

“
உன் அக்கா மகள் மாலினிப்பா.”

“
ஏய் என் மருமகள் மாலினிகிட்ட சொல்லிட்டியா. நம்ம இந்த சொத்துக்காக தான் இந்த குடும்பத்தை சுத்திகிட்டு இருக்கோம். மற்றபடி என்னுடைய அக்கா பொண்ணு தான் உனக்கு மனைவி. அவள் தான் மருமகள்னு.”

“
அதெல்லாம் நான் சொல்லிட்டேன் பா. என் வாழ்க்கையில் மாலினி மட்டும்தான். இந்த முல்லையை நான் கல்யாணம் பண்ணி. நான் அவளை கொடுமைப்படுத்தி தான் என்னுடைய ஆதங்கத்தை தீர்த்துக்கொள்வேன். சின்ன வயசுல அந்த கதிர் பையன் கூட சேர்ந்து என்னை எவ்வளவு எல்லாம் அசிங்கப்படுத்தி இருக்கா தெரியுமா. இதற்கெல்லாம் சேர்த்து இந்த குடும்பத்தை நான் என்ன பாடு படுத்துறேன் பாருங்க.” என்று அகிலனும் அவனின் தந்தையும் பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகள் அனைத்தும் கதிர் மூலியமாக கீதாவும் மணிமாறன்னும் செட் பண்ண கேமராவில் ரெக்கார்ட் ஆகி கொண்டிருந்தது.

அதைப் பார்க்காத அகிலன், இந்து குடும்பத்தை பழி வாங்குவதை பற்றி தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தான்.

“
சரிப்பா நம்ம சிங்கப்பூரில் இருந்து அப்படியே பாம்பே போனோம் இல்ல. அப்ப இந்த முல்லைக்கு ஐஸ் வைக்க ஒன்னு வாங்கிட்டு வந்தேன். இருங்க நான் போய் அத குடுத்திட்டு வரேன்.” என்று சொல்லி அகிலன் முல்லையின் அறைக்குள் போவதற்காக அவளின் அறை கதவை தட்டினான்.

“
முல்லை. ஏய் நான் தான் கதவைத் திற. என்ன பண்ற?”

“
ஐயோ மாமா. அந்த வீனா போனவன் கதவை தட்டுறான். நீ போய் மறைஞ்சிக்கோ.” என்று முல்லை சொல்ல, கதிர் கட்டிலின் கீழ் ஒழிந்து கொண்டான்.

கதவை திறந்த முல்லையை பார்த்த அகில், “என்னடி கதவை திறக்க ஏன் இவ்ளோ நேரம்? அப்படி என்ன பண்ணிட்டிருக்க உள்ள?” என்றான்.

“
இங்க பாரு. வாடி போடின்னு கூப்பிட்ட வாயை உடைத்து விடுவேன். மரியாதையா பேசு” என்று எச்சரிக்கை செய்தாள்.

“
என்ன உன் முகத்தில் ஒரு பொலிவு. உன் பேச்சில் ஒரு திமிரு. என்ன இதல்லாம்? எப்போதுல இருந்து இந்த வீரம்?”

“
வீரமெல்லாம் கூடவேதான் பொறந்து இருக்கு. என்ன விஷயம் எதுக்கு வந்த? அதைச் சொல்லிட்டு கிளம்பு.”

“
உனக்கு மும்பையில் இருந்து குல்பி… இல்ல இல்ல ஜிலேபி வாங்கிட்டு வந்தேன் இந்தா பிடி” என்று கொடுத்தான்.

“
நான் எதுவும் கேட்கலையே. எனக்கு ஒன்னும் தேவை இல்ல. நீ வெளில போ” என்றாள் அவள்.

“
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. சாப்பிடு.” என்று கட்டாயப்படுத்த,

“
ஏய்! வேண்டாம்னு சொல்றேன் இல்ல. ஒழுங்கு மரியாதையா போறியா?” என்று அந்த ஜிலேபி டப்பாவை முல்லை வெளியே தூக்கிப் போட, அந்த டப்பா பழனியின் கையில் விழுந்தது.

“
ஆகா இந்த ஜிலேபி யாருது. ம்… யாருதா இருந்தால் நமக்கென்ன. நம்மளும் கீதுவுக்கு எத்தனை தடவைதான் பஞ்சாமிர்தம் கொடுக்கிறது. இன்னைக்கு இந்த ஜிலேபியை கொடுக்கலாம்” என்று சொல்லி கீதாவிற்கு பழனி ஜீலேபியை எடுத்துக்கொண்டு போயி, “கீதா இந்தா ஜிலேபி சாப்பாடு” என்றார்.

“
யோவ் ஜிலேபியும் வேணாம் ஒண்ணும் வேணாம். இது நான் ஜிலேபி சாப்பிடுற நேரமில்லை. ஜில்லுனு சரக்கு அடிக்குற நேரம்.” என்று கோபப்பட்டு கீது ஜிலேபி டப்பாவை தூக்கி போட, அந்த டப்பா சந்திரன் அவர்களின் கைகளில் போய் விழுந்தது.

“
அய் ஜிலேபி. இந்த டப்பாவை யார் தூக்கி போட்டது?” என்று அவர் மேலே பார்க்க, பால்கனியில் அவரின் மனைவி இந்து நின்று இருக்க, அவரைப் பார்த்த சந்திரன், “என்ன இது இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இவளுக்கு ஜிலேபி சாப்பிட ஆசை வந்து இருக்கா” என்று சந்திரன் தனக்குள் பேசியபடி நின்று இருந்தார்.
அவரை பார்த்த மணிமாறன், “என்ன சார்? என்ன ஒரே யோசனை?” எனக் கேட்டான்.

“
இல்லபா ஜிலேபி.”

“
என்ன ஜிலேபி சாப்பிட போறீங்களா?”

“
ஆச தான். ஆனால் எனக்கு சக்கரை நோய் இருக்கே. என்ன பண்ணுறது?” என்றார் சோகமாக,

“
இருக்கட்டும் சார். வாய்ப்பு கிடைக்கும்போது ஜிலேபியை வாயில வச்சிடுங்க. சர்க்கரை நோய் இருந்தால் என்ன, மருந்து போட்டுக்கலாம். காசு குடுத்து வாங்கிட்டு வந்த ஜீலேபியை வீணாக்காதீங்க.” என்றான்.

“
இது நான் வாங்கல. இந்து வாங்கிட்டு வந்து இருக்கா நினைக்கிறேன்.”

“
ஐயோ.உங்களுக்கு அவங்களளே ஜீலேபி கொடுக்கிறாங்களா.
அப்போ ஏதோ கசமுசா நடக்க போதுன்னு நினைக்கிறேன். கிளம்புங்க கிளம்புங்க.” என்று மாறன் சொல்ல, சந்திரன் அவர்கள் பல வருடத்திற்கு பிறகு.தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்று, “இ… இந்து. இந்திரா.” என்றழைத்தார்.
“
என்னது? என்ன அது கையில?”

“
அது ஜிலேபிமா. ஜிலேபி.”

“
என்ன ஜிலேபியா. ஏது உங்களுக்கு?”

“
ஐயோ இத அப்போ நீ கொடுக்கலையா?”

“
என்ன நான் கொடுத்தேனா. எனக்கு வேற வேலை இல்லையா?”

“
அப்ப இந்த ஜிலேபி. இது எதுன்னு தெரியலையே” என்று புரியாது நின்றார்.

“
என்ன, நீங்களே வாங்கிட்டு வந்து பொய் சொல்றீங்களா? இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்.”

“
இல்லமா இந்து. நான் ஜிலேபியை என் வாழ்க்கையில மறந்தே போயிட்டேன்.” என்றார் பாவமாக.

“
ஏன்?”

“
எனக்கு தான் சர்க்கரை நோய் இருக்கே.”

“
சர்க்கரை நோய் இருந்தா என்ன. மாத்திரை போட்டுக்க வேண்டியது தானே.” என்றார் சாதாரணமாக.

“
நீ என்ன சொல்ற?”

“
ம்… சுரைக்காயில் உப்பு இல்ல. ஜீலேபியில் சர்க்கரை இல்லைனு சொல்றேன். ஆளாப்பாரு. ஜிலேபி சாப்பிட ஆசை இருந்தா சாப்பிட வேண்டியதுதானே.”

“
இந்து யூ மீன்” என்றார் ஆசையாக.

“
ஐ மீன் ஜிலேபியை எடுத்துக்கிட்டு கதவை சாத்திக்கிட்டு வாங்கன்னு சொல்றேன்.” என்று அறைக்குள் சென்றார்.

“
இந்த இந்து ஜிலேபி சாப்பிட ரெடியா தான் இருந்திருக்காங்க. பாவம் இந்த சந்திரன் சார் தான் ஜிலேபியை கொடுக்க மாட்டாரு போல. எது எப்படியோ எல்லாரும் குடும்பமா ஜிலேபி சாப்பிடுங்க. ஆனா, நம்ம மச்சான் இந்நேரம் கொத்து பரோட்டாவை போட்டு இருப்பானா.” என்று யோசனையில் ஆழ்ந்தான்.

“
உங்க சகலை கொத்து பரோட்டா போடுவது இருக்கட்டும். நீங்க எந்த பரோட்டாவும் போட லாயக்கில்லை போல.” என்று கேலி செய்தபடி வந்து நின்றாள் ஷாமிலி.

“
ஹலோ நீங்க என்ன என்கிட்ட எப்பப்பாரு வம்பு பண்ணிக்கிட்டு இருக்கறீங்க. ம்… நீங்க ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல. பட் உங்க ஆசை நிறைவேறாது.”

“
ஏன் நிறைவேறாது?”
“
ஏன்னா நான் ஒரு பொண்ண காதலிச்சசேன். அந்த பொண்ண தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்றான் அவன்.

“
இது என்ன புதுக்கதை. எந்த பொண்ண காதலிச்சிங்க?”

“
போன ஜென்மத்தில் உம்மான்னு ஒரு பொண்ண காதலிச்சசேன். இந்த ஜென்மத்தில் அவ கிருபாகரனை கட்டிக்கிட்டு 2 குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும், என்னால் அவளை மறக்க முடியல.” என்று சோக கீதம் வாசித்தான்.

“
சரி சரி. அதுக்கு என்ன பண்ண முடியும்? பழைய காதல மறந்துதானே ஆகனும். அதுக்குன்னு நீ உம்மாவை நினைச்சு, இப்படி சும்மா இருப்பதை விட…”

“
உங்கள அம்மாவாக்க சொல்றீங்களா?” என்றான் வேகமாக.

“
வாய ஒடச்சிடுவேன். உள்ளே போய் இழுத்து போத்திகிட்டு படுன்னு சொன்னேன்.” என்று சொன்னபடி ஷாமிலி உள்ளே போனாள்.

முல்லையின் அறையில், “இப்ப எதுக்குடி அழுதுட்டு இருக்க? எனக் கேட்டான்.

“
மாமா வர வெள்ளிக்கிழமை எனக்கு மட்டும் அவன் கையால மோதிரம் போட வேண்டும் என்ற சூழ்நிலை வந்துச்சுன்னா நான்…”

“
உஷ்… நான் இருக்கிறேன்டி. உன் கழுத்துல நான் கட்டிய தாலி இருக்கு. நீ என் பொண்டாட்டி.” என்று அவளை இறுக்கி அணைத்தான்.

“
ஐயோ பொறுமை” என்றாள் அவனின் வேகம் தாளாது.

“
ஒ… நான் ரொம்ப இறுக்கி கட்டி பிடிச்சிட்டேனோ. வலிக்குதா? சாரிடி.”

“
அது இல்ல மாமா. பொறுமையா பேசுன்னு சொன்னேன் மாமா.”

“
அப்போ நான் கட்டி பிடிச்சதுக்கு சொல்லலையா?”

“
நான் எப்படி சொல்லுவேன். நீ கட்டி அணைக்க தான் உன் மாமன் பொண்ணு நான் இருக்கேன்.”

“
சரி அப்ப வா.” என்றான் கதிர்.

“
எங்க மாமா? ஏன் காட்டிலுக்கு கீழ கூட்டிட்டு போற?” என்று பதறினாள் முல்லை.

“
மேல படுத்தா கட்டில் சத்தம் போடும். அதான்…”

“
அதான்.?”

“
ம்… அதான். நான் கட்டிலின் கீழ படுக்கிறேன். நீ என் மேல படு.” என்று சொன்ன கதிர் தன் ஆசை மனைவியை கட்டி அணைத்து கொண்டவன். கொத்து பரோட்டா சாப்பிட ஆரம்பித்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!