❤ஓவியம். 12
கதிரும் முல்லையும் ஒன்றாக ஒரே அறையில் இருக்கும் சமயம் யாரோ கதவை தட்ட, “மாமா யாரோ கதவை தட்டுறாங்க” என்றாள்.
“இருடி நான் போய் கட்டில் கீழ் ஒழிஞ்சிக்கிறேன். உன் அக்காவை கூப்பிட்டு கதவைத் திறக்கச் சொல்லு.” என்று சொன்னான்.
“யார் இந்த நேரத்தில்?” என்று சொன்னபடி ஷாமிலி கதவைத் திறக்க மணிமாறனும், கதிரும், முல்லையின் கட்டிலின் கீழ் ஒழிந்து இருக்க, அறையின் கதவை தட்டியது முல்லையின் தந்தை சந்திரனும். இந்துவின் தம்பி பழனியும்.
“என்னம்மா ஏன் கதவ திறக்க இவ்வளவு நேரம்?”
“அது ஒன்னும் இல்லப்பா. முல்லை பாத்ரூம்ல இருந்தா. அவளை கூட்டிட்டு வந்து விட்டுட்டு திறக்க நேரம் ஆகிடுச்சி.”
“சரி சரி. கதவ சாத்திட்டு வா” என்று சின்ன மகளிடம் சென்று, “என்னமா முல்லை. வலி இப்ப எப்படி இருக்கு? இப்பப் பரவாயில்லையா?” எனக் கேட்டார்.
“முல்லை என்னடா ஆச்சு? சந்திரன் மாமா வேற என்னென்னமோ சொல்றாரு. யாரு உன்னை அடிச்சது? சொல்லுமா நம்ம எம்எல்ஏ கிட்ட சொல்லி அவனுக்கு ஆப்பு வெச்சுடலாம்.” என்றார் பழனி.
“இல்ல மாமா. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.”
“சரி ஏன் என்கிட்ட பொய் சொன்ன? இவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சு இருக்க?” என்று தந்தை கேட்டதும்,
“அப்பா என்ன சொல்றீங்க? எ…எதை மறைச்சேன்?” என்றாள் திணறி.
“உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?” என்று கேட்க,
“அப்பா என்ன சொல்றீங்க? எனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு? அப்படில்லாம் கிடையாது.” என்றாள் வேகமாக.
“பொய் சொல்லாதம்மா. உன் கழுத்துல தாலி இருத்தததை நான் பார்த்தேன்.”
“அப்பா அது வந்து…” தடுமாறினாள் முல்லை.
“யாருமா என் மாப்பிள்ளை? அந்த டிரைவர் பையனா. அவன் தானே உனக்கு தாலி கட்டியது?”
“மாமா என்ன சொல்றிங்க? நிஜமா முல்லைக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என்று பழனி இடைநுழைய,
“டேய் கொஞ்ச நேரம் சும்மா இருடா. நீ சொல்லு முல்லை அவர் தான்னே உனக்கு தாலி கட்டினது?” என்றார் சந்திரன்.
“அப்பா அது வந்து…”
“சரிவிடு. அனேகமா நீ அவர் கையால தாலி கட்டிக்கிட்டதால, ஒன்னு அவரை நீ காதலிச்சு இருக்கணும். இல்லையா அந்த பையன் கண்டிப்பா நம்ம லக்ஷ்மியுடைய பையனாய் இருந்திருக்கணும். சொல்லு யார் அந்த பையன்?” என்று சந்திரன் கேட்க,
அவர் சொல்வதைக் கேட்டு, கட்டில் கீழிருந்து ஸ்டைலாக எழுந்த கதிர், “யு ஆர் ஆல்வேஸ் ரைட் மாமா. நான் உங்க சிஸ்டர் லட்சுமியின் மகன் கதிர் தான்” என்றான்.
அவன் சொன்ன மறுநொடி அவனை கட்டி அணைத்த சந்திரன் கதிரின் நெற்றியில் முத்தமிட்ட சந்திரன், “மாப்பிள்ள எப்படி இருக்க? உன்ன பார்த்த உடனேயே நான் கண்டுபிடிச்சிட்டேன். என் தங்கச்சி லட்சுமி உடைய முகம் அப்படியே இருக்கு உனக்கு. எப்படிப்பா இருக்க?” என்றார் அன்பாக.
“நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்று கூட தெரிஞ்சுக்காத, என் தாய் மாமன் நீங்க இருக்கும் போது, நான் நல்லா தானே இருப்பேன்.” என்று முகம் இறுக சொன்னான்.
“ஏன் மாப்பிள்ள இப்படி எல்லாம் பேசுற? எனக்கு என் தங்கச்சி லட்சுமியையும் கீதாவையும் ரொம்ப பிடிக்கும். என்னை என்ன பண்ண சொல்ற? நான் ஒரு சூழ்நிலை கைதி.” என்றார் வருத்தமாக.
“பரவாயில்ல மாமா. ஆரம்பத்திலிருந்தே நீங்க அப்படித்தானே. உங்க மனைவி ஆடுற ஆட்டத்துக்கு நீங்க தாளம் போடுறீங்க. இல்லையா அமைதியா இருந்துடுவீங்க. இதில் எங்க இருந்து எனக்கு சப்போர்ட் செய்ய.”
“அப்படிடயே பழகிடுச்சு மாப்பிள்ளை. மாத்த முடியாத தூரம் போயிட்டேன்” என்றார் சந்திரன்.
“மாமா இந்த பையன்?” என்று பழனி கேள்வியாய் பார்க்க,
“என் பெரிய தங்கச்சி லட்சுமி உடைய பையன்டா. ஏய் உனக்கு தெரியல? என் சின்ன தங்கச்சி கீதா, கதிர் மட்டும் போதும் என்று சொல்லிட்டு, இவனுக்காக தன் வாழ்க்கையையே இழந்துட்டு, இன்னைக்கு எங்க இருக்கோம்னு தெரியாம இருக்கிறாளே. அவள் தூக்கி வளர்த்த பையன்டா.”
“டேய் மவனே கதிர் எப்படிடா இருக்குற?” என்று பழனி சந்தோஷத்தில் கேட்க,
“நான் நல்லா இருக்கேன் சித்து. நீ என்ன கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கிங்க போல. என் சித்தியை ஏமாத்திட்டு. நீங்க உங்க பேருக்கேத்த மாதிரி, வள்ளி தெய்வானையை கரெக்ட் பண்ணி இருப்பிங்களே.”
“டேய் மவனே! ஏன்டா அப்படி பேசுற? உன் சித்திக்க்காக நான் எடுத்து வைத்து இருக்கும் பஞ்சாமிர்தத்தை வேற யாருக்கும் கொடுக்க மாட்டேன்டா” என்றார் பழனி.
“புரியலையே. என்ன சொல்ற?” என்றான் கதிர்.
“கதிர் மாமா. என் அம்மாவின் தம்பி பழனி மாமாவுக்கு, இன்னும் கல்யாணம் எல்லாம் ஆகலை. அவர் இன்னமும் கீதா அத்தையை தான் நினைச்சுக்கிட்டு இருக்காரு.” என்றாள் முல்லை.
“என்னடி சொல்ற? நிஜமாவா? நம்ப முடியலையே?”
“அட ஆமா மாமா. உண்மையைத் தான் சொல்லுறேன்.”
“ஐயோ அப்படியா? அப்ப கீதாவை பழனி கரெக்ட் பண்ணிடுவாரா?” என்று பட்டென கேட்ட மணிமாறன் கட்டிலுக்குக் கீழ் இருந்து எழுந்து வந்தான்.
“டேய் நீ யாருடா? காட்டிலுக்கு கீழ இன்னும் யாரெல்லாம் இருக்கீங்க?” என்று பழனி கேட்க,
“இல்ல நாங்க ரெண்டு பேரு தான் வந்தோம். முல்லையை பாக்காம என்னால இருக்க முடியாது. சரி முல்லை வா நம்ம வீட்டுக்கு போகலாம்.” என்றான் கதிர்.
“என்னப்பா விளையாடுறியா. நீ இந்த ஊர்ல இருக்கிறது தெரிஞ்சாலே அந்த அகிலன் உன்னை பிளான் பண்ணி உள்ள தூக்கி வைக்க பார்ப்பான். இப்போ நீ வேற முல்லை கழுத்துல தாலி கட்டிட்ட. இப்ப என்ன செய்வானோ தெரியலையே” என்று புலம்பினார் சந்திரன்.
“நீ எப்படி முல்லை கழுத்துல தாலி கட்டின?” சந்தேகம் கேட்டார் பழனி.
ஷாமிலி இதுவரை நடந்த எல்லா கதைகளையும் சொல்ல,
“மகனே நீ என்னை விட சின்ன பையனா இருந்தாலும், எனக்கு இல்லாத தைரியம் உனக்கு இருக்குடா” என்றார் பழனி.
“என்ன சொல்ற சித்து?”
“ஆமா. உன் சித்தி கழுத்தில் தாலிகட்ட எனக்கு தான்டா தைரியம் இல்ல. ஆனா, நீ நடு ரோட்டுல நிக்க வைச்சு என் அக்கா மகள் கழுத்திலே தாலி கட்டி இருக்கிற பாரு. நீ கிரேட்டுடா.”
“எனக்கு ரொம்ப சந்தோஷம் கதிர். என் மகளுக்கு எங்க அந்த அகிலன் கூட கல்யாணம் ஆயிடுமோன்னு நான் பயத்தில் இருந்தேன். என் தங்கச்சி லட்சுமியின் ஆசைப்படி, உனக்கு என் மகள் கூட கல்யாணம் ஆனதுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.” தன் மகிழ்வை சொன்னார் சந்திரன்.
“சரி உங்க கதை எல்லாம் பேசிட்டு இருக்கீங்களே. என் கீது குட்டி எப்படி இருக்கா?”
‘என்ன கீது குட்டியா? கிழவி இந்நேரம் நேற்று ராவா சரக்கு அடிச்சதுக்கும் அதுக்கும், எங்க வீட்டு நாய் குட்டி பக்கத்துல படுத்து தூங்கிட்டு இருக்கும். இந்த கிழவன் என்னடானா கிழவியை கீது குட்டி. கங்காரு குட்டின்னு கொஞ்சுறாரே.’ மனதுக்குள் நினைத்து சிரித்தான் மணிமாறன்.
“சித்து. எங்க சித்திக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு.”
“டேய் என்னடா சொல்ற? நான் நம்ப மாட்டேன். என் கீது என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ண மாட்டா.”
“இல்ல இல்ல உண்மையா தான் சொல்றேன். என் சித்திக்கு கல்யாணம் ஆயிடுச்சு.”
“நான் நம்பவே மாட்டேன்.” என்றார் பழனி திரும்பவும்.
“ஐயோ மாமா அவரு சும்மா சொல்றாரு. கீதா அத்தைக்கு கல்யாணம் ஆகல. ஆனா அத்தை முன்னாடி மாதிரி இல்ல. இப்ப அவங்க வேற லெவல்” என்றாள் முல்லை.
“வேற லெவல்னா என்ன? பெரிய இடத்தில் எங்கேயாவது வேலைக்கு போறாளா?”
“ஆமா ஆமா. அத்த கை வைக்கிற இடமெல்லாம் பெரிய இடம்தான்” என்றாள் கிண்டலாக.
“ஆமா இப்போ அவங்க பஞ்சாமிர்தம் நக்கி சாப்பிடும் கீது இல்ல. குவாட்டரையும் கோழி பிரியாணியையும் அப்படியே சாப்பிடும் கில்லி கீது” என்றான் மணிமாறன்.
“புரியலையே?” என்றார் பழனி.
“அதெல்லாம் இப்போ நீங்க புரிஞ்சுக்க தேவையில்ல சித்து. சரி முல்லை நாங்க கிளம்புறோம். நேரம் ஆகுது.”
“மாமா. இதோ அப்பாவும், பழனி மாமாவும் இங்கே தானே இருக்காஙக. இவங்க எதிர்க்க இந்தத் தாலியை இந்த செயின்ல கோர்த்து என் கழுத்துல போடேன். கயிறை யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும்.” என்றாள் முல்லை.
“ஆமா மாப்பிள்ளை. என் கண்ணுல பட்ட மாதிரி இந்துக்கோ அகிலனுக்கோ தெரிந்தால் அவ்வளவு தான்.”
“இல்ல முல்லை. இந்தச் தாலிய நீயே வேணும்னா அந்த செயின்ல கோர்த்து உன் கழுத்துல போட்டுக்கோ. ஆனால், எண்ணி ரெண்டு மாசத்துல நீங்க எல்லாம் யாருக்கு பயப்படுறிங்களோ, அதே இந்து கையால் தாலி எடுத்துக்கொடுத்து அவங்க ஆசிர்வாதத்துடன் உன் கழுத்துல நான் தாலி கட்டுறேன்.”
“மாமா நடக்கிற கதையைப் பேசுங்க. எங்க அம்மாவாவது மனசு மாருறதாவது.”
“நான் எப்பயும் கதைய பேசிட்டு தான், நடக்கப் போவதை முடிவு பண்ணுவேன். வெயிட் அண்ட் வாட்ச் பேபி.” என்று சொன்ன கதிர், வந்த வழியே வெளியே போக முயல,
அவனின் கையை பிடித்து தடுத்த முல்லை, “மாமா அப்போ நீ இனிமே என்னை பாக்க வரமாட்டியா?” என்று ஏக்கமாகக் கேட்டாள்.
“ஏய் அதான் இவர டிரைவர் என்று சொல்லியாச்சு இல்ல. அந்த சாக்குல கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வருவாரு.” என்று ஷாமிலி சொன்னாள்.
“வேலையில் இருக்கும் டிரைவர் எப்படி வீட்டுக்கு வர முடியும்? கொஞ்சமாவது உங்களுக்கு மூளை இருக்கா?” என்று ஷாமிலியை கேட்க,
“ஹலோ என்ன நக்கலா?”
“இல்ல. அப்படின்னு உங்க அம்மா கேட்பாங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவீங்க?”
“இல்ல இல்ல அதுக்கு நான் ஒரு ஐடியா பண்றேன். பேசாம நம்ம இந்த ஊருக்கு புதுசா மாற்றலாகி வந்து இருக்கிறோம். இந்த வீட்டு பாதுகாப்புக்கு ஆள் வேண்டும்னு சொல்லி நம்ம MLA வை கேட்டு. இந்த ரெண்டு பேரையும் நம்ம வீட்டுக்கு வேலைக்கு சேர்த்த மாதிரி சேர்த்துக்கலாம்” என்று ஐடியா சொன்னார் பழனி.
“என்ன? என் மாமா இந்த வீட்டு வேலைக்காரனா? என்னால ஒத்துக்க முடியாது. அவர் என்னுடைய வீட்டுக்காரன்” என்று வேகமாக சொன்னாள் முல்லை.
“இல்லமா பழனி சொல்றது தான் சரி. அவரு முதல்ல இந்த வீட்டுக்குள்ள வரட்டும். அவர் வந்தா தான் இந்த அகிலன் உடைய ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.”
“ஆமா மாமா. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே நான் கட்டில் கீழே இருக்கும் போது அந்த அகில், என் பொண்டாட்டிய பேசின பேச்சுக்கு அவன் இன்னொரு கையையும் சேர்த்து வெட்டியிருப்பேன். ஏதோ என்னால ஒரு கையை இழந்தவன் ஆச்சேன்னு போனா போதுன்னு விட்டுடேன். பட் அடுத்த தடவை என் பொண்டாட்டிகிட்ட அவன் வாய் பேசினால் அடித்து வாயை உடைத்துடுவேன்.” என்றான் கோபமாக.
“என்னடி முல்லை. கதிர் மாமா கோவமா பேசுறாரு. அதைப் பார்த்து நீ சிரிக்கிற?” என்று தங்கையிடம் கேட்டாள்.
“இல்ல அக்கா. என் மாமா பேச்சுக்கு பேச்சு என்னை அவர் என் பொண்டாட்டின்னு சொல்லும்போது, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. அந்தக் கோபமும் எனக்காக. அதான் சந்தோஷத்தில் சிரிக்கிறேன்.”
“ஐயோ இவன் தான் கதிருன்னு உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா, கடைசியில எங்களுக்கு சாப்பிட ஒரு போண்டா டீ கூட கிடைக்காது போல. இவன் குடும்பம் ஒன்னு சேர நம் மணியை இழக்கணுமா” என்று அலறினான் மணிமாறன்.
“ஹலோ நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசுறிங்க.”
“இல்லங்க ஷாமிலி. நான் சத்தமா தான் பேசறேன்.எனக்கு மைண்டே இல்ல. அப்புறம் எங்க இருந்து மைன்ட் வாய்ஸ் வர.”
“சரி மச்சான் கிளம்பலாம் வாடா” என்றான் கதிர்.
“கதிர் உன்னோட போன் நம்பர்” என்று கேட்டார் பழனி.
“மாமா என்கிட்ட இருக்கு. நான் தர்றேன்” என்றாள் முல்லை.
“சரி கீதாவை கேட்டேன்னு சொல்லு.”
“உங்களை நாங்க பார்த்தது கீதாக்கு தெரிந்தால், கீதா எங்களை அசிங்க அசிங்கமா கேக்கும்.” என்றான் மணிமாறன்.
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நான் நாளைக்கு கீதாவைப் பார்க்க வரேன். அதே மாதிரி இந்த வீட்டுக்கு நீங்க வேலைக்கு சேருவதற்கு கூடிய எல்லா ஏற்பாட்டையும் நான் பண்றேன்” என்று இந்துவின் ஒரு தம்பியான பழனி, அதாவது கதிரின் சித்தி.கீதாவை காதலித்த பழனி அவர்கள் சொல்ல, கதிரும் மணிமாறன்னும் கிளம்பி அவர்களின் வீட்டிற்கு சென்றனர்.
முல்லை தன்னவனை பார்த்த சந்தோஷத்தில் பூரித்துப் போய் இருக்க, மறுபக்கம் கதிரின் வீட்டில் கதிரை தலையில் கட்டுடன் பார்த்த கீதா, “டேய் மகனே! என்னடா ஆச்சு? என்னடா தலையில இவ்வளவு பெரிய கட்டு?” என்று பதறினார்.
“ஒன்னுமில்ல கிழவி. லேசா அடிபட்டுருச்சி.”
“டேய் மாறா. எங்கடா போனீங்க? ஏன் இந்த முல்லையை வேற ஆள காணோம். ரெண்டு நாளா உங்க யாரையும் இங்க காணல. என்னாச்சுனு சொல்லுங்க” என்றார் ஓவியகீத்து.
“ஒன்னும் இல்ல கீது. ஒரு சின்ன ஆக்சிடன்ட். முல்லைக்கு வர வேண்டிய ஆபத்தை கதிர் போயி தடுத்ததால்., கதிர் தலையில அடி பட்டுருச்சு. அப்போ அந்த வழியாக வந்த இந்து அவர்கள் இவனை பார்த்து.என்று மணிமாறன் அங்கு நடந்த கதைகளை எல்லாம் சொன்னான்.
“என்னடா மவனே! அப்போ அவங்க எல்லாம் வந்துட்டாங்களா. நீ அந்த வீட்டுக்கு போயிட்டு வந்துட்டியா?”
“ம்… வந்துட்டாங்க. நான் அந்த வீட்டுக்கு போயிட்டும் வந்துட்டேன். கூடிய சீக்கிரம் பழனி சித்தப்பா அதே வீட்ல எனக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறேன் சொல்லியிருக்கிறார்.” என்றான் கதிர்.
“நம்ம எதுக்குடா அந்த வீட்டுல வேலைக்கு போகணும்? அந்த சொத்துக்கு நீயும் ஒரு பங்கு சொந்தக்காரன்டா.”
“அது தெரியும் கிழவி. நம்ம போட்ட திட்டத்துக்கு நான் முதல்ல அந்த வீட்டுக்குள்ள போகணும். அதுக்கு இந்த வேலை தான் சரியா இருக்கும். அதனால தான் சம்மதம் சொல்லிட்டு வந்தேன்.”
“டேய் அப்படி என்னடா பிளான்? நீங்க ரெண்டு பேரும் யாருடா? இப்பவரை நீங்க என்ன திட்டத்துல இருக்கீங்கன்னு சொல்லவே மாட்டேன்றீங்க.” என்று புரியாது கேட்டான் மணிமாறன்.
“நீ சின்ன பையன். உனக்கு விவரம் பத்தாது. இந்த நாளுக்காக தான் நான் இத்தனை வருடம் வெயிட் பண்னேன். நான் அவங்க வீட்டுக்கு வேலைக்காரன் ஆகவே உள்ளே புகுந்து, கூடிய சீக்கிரம் சொந்தக்காரனாக மாறுகிறேன்” என்று கதிர் சொன்னான்.
மறுநாள் காலை பொழுது கதிரின் வீட்டின் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கீதா போய் கதவை திறக்க, கீதா கதவைத் திறந்தவுடன் பழனி கீதாவை கட்டிப்பிடித்து, “கீதா டார்லிங். எப்படி இருக்க? உன்ன பாத்து எவ்வளவு நாளாச்சு?” என்றார்.
“அடிங்கொய்யால யாரு மேல கையை வைக்குற. உன் மூஞ்சில என் லெப்ட் கைய வைக்க. நான் யார் தெரியுமா?” என்றார் கீதா.
“என்ன கீதா? உன் காதலன் நான். என்னை தெரியலயா?”
“என்ன காதலனா? அடேய் டோங்கிரி மண்டையா. உன்னுடைய சினிமா வசனம் எல்லாம் என்கிட்ட பேசாத. என்னைக்கு உன் அக்கா பேசும்போது நல்லா வெள்ளை உளுந்து மூட்டை மாதிரி நீ வாய மூடிக்கிட்டு இருந்தியோ, அன்னைக்கே உனக்கும் எனக்கும் இருந்த எல்லா கனக்சனும் முடிஞ்சு போச்சு.”
“அப்படிச் சொல்லாத கீது. இன்னவரைக்கும் நான் உன்னைதான் காதலிக்கிறேன். உன்னை மட்டுமே காதலிக்கிறேன்” என்றார் பழனி.
“நீ காதலிக்கலாம். பட் ஐ அம் நாட் இன்ட்ரெஸ்ட்ட். உன்னை யார் முதலில் இங்க வர சொன்னது முதல வெளியே போ”என்று கதவை சாத்த முயல,
“ஐயோ சித்தி. ஏன் இப்படி அவசரப்படுற? கொஞ்சம் பொறுமையா இரு” என்று வந்தான் கதிர்.
“டேய் மகனே இந்த செவன்டீஸ் கமலஹாசன் இங்கே எதுக்காக வந்தான்?”
“நீ சும்மா இரு கிழவி. முதல்ல உள்ள வா.”
“என்ன கதிரு? இது என் கீதுவா? என்ன இது இப்படி குத்துறா.?” என்று பழனி கேட்டார்.
“சித்தப்பா. எங்க சித்தியை நீங்க கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டா, சொம்புல அடி வாங்க கூட தயாரா இருக்கனும்.” என்று சொன்னபடி கதிர் பழனியை உள்ளே அழைத்து வந்தவன், கீதுவுடன் தனியாக பேச அழைத்துச் சென்றான்.
“டேய் கதிர் இங்கே என்ன நடக்குது?” என்றார் கீதா.
“ஏய் கிழவி இங்கே பாரு. இந்த உளுந்து மூட்டைய வச்சு தான் நம்ம அந்த வீட்டுக்குள்ள போக முடியும்.”
“ஆமாடா. இந்த ஆளை பார்த்தால் நல்ல பணம் காசு வச்சிருக்குற மாதிரி இருக்குது.” என்று இடையிட்டான் மணிமாறன்.
“ஆமா சித்தி. மணிமாறன் சொல்றது உண்மைதான். சித்தப்பாவை வைத்து தான் நம்முடைய திட்டத்தை நம்ம நிறைவேற்ற முடியும். அதுவரை நீ கொஞ்சம் அமைதியா இரு.”
“டேய் மவனே! இப்ப என்னை என்னடா பண்ண சொல்ற?”
“நான் சொல்றதை கேளு. நீ எப்படியாவது சித்தப்பாவை உன் வலையில் விழ வைத்துவிடு போதும்.”
“டேய் அந்த வெள்ளை எலி ஏற்கனவே என் வலையில் விழுந்து தான்டா இருக்கு.”
“சரி அப்போ உன் வலையிலே வளச்சு போடு. வலையை கொஞ்சம் ஸ்ட்ராங்கா போடு” என்றான் கதிர்.
“டேய் நான் உனக்கு சித்திடா.”
“பரவாயில்லை நீ எனக்கு சித்தியா இருக்கிறது முக்கியம் இல்ல. அந்த இந்துவுக்கு தலையில அடிக்கும் சுத்தியா நம்ப மாறனும் புரியுதா?” என்று கதிர் ஒரு திட்டத்தை சொல்ல. கீதாவும். பழனி அவர்களை ஏற்றுக் கொண்டது போல நடிக்க முடிவு செய்தார்.
“கீதா அப்போ நீ என்னை அக்செப்ட் பண்ணிட்டியா?” என்றார் சந்தோசமாக.
“ம்… ஆமாம். என் மகன் சொன்னதுக்காக. ஆனால், ஒரு கண்டிஷன் இருக்கு” என்றார்.
“என்ன கண்டிஷன் கீது? உனக்காக நான் என் உயிரையே கொடுப்பேன்.” என்று வசனம் பேசினார்.
“அந்த மய்…“ என்று ஆரம்பிக்க,
“கீதா…” என்று விழித்தார் பழனி.
“இல்ல இல்ல அந்த மாங்காயை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது. எனக்கு உங்க உயிர் எல்லாம் வேண்டாம். எனக்காக நீங்க இந்த உதவியை மட்டும் பண்ணுங்க” என்று கீதா ஒரு உதவி கேட்க, பழனியும் அதை செய்கிறேன் என்று ஒத்துக்கொண்டார்.
மறுநாள் காலை அகிலன் தொடங்கப் போகும் புதிய பிசினஸ்சிற்காக இந்துவும், அகிலனின் அப்பாவும் சேர்ந்து ஒரு வார காலம் சிங்கப்பூருக்கு சென்றிருக்க, முல்லை வீட்டில் யாரும் இல்லாததால், சந்திரனும் பழனியும் சேர்ந்து கதிரையும் மணிமாறன், கீதாவையும். முல்லையின் வீட்டிற்கு வரச் சொல்லினர்.
“அம்மாடி கீதா எப்படிமா இருக்க? உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு?” என்று பாசத்தைக் கொட்டினார் சந்திரன்.
“நான் நல்லா இருக்கேன் அண்ணா. நீதான் என்னை மறந்துட்ட.”
“இல்லமா. என்ன மன்னிச்சிடு.”
“சரி சரி. இந்த கதையெல்லாம் இப்ப பேச நேரமில்லை. உன் பொண்டாட்டி வந்துரப் போறாங்க. நாங்க கிளம்புறோம்.” என்றார் கீதா.
“இல்லமா அவ ஒரு வாரத்துக்கு வரமாட்டா. நீங்க இந்த ஒரு வாரம் இங்கேயே இருங்க.”
“என்னால எல்லாம் இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட தங்க முடியாது அண்ணா.”
“ஏய் கிழவி! ஒரு வாரம் இங்க இருந்து மாறன் கூட சேர்ந்து, நான் சொன்ன இடத்தில் எல்லாம் கேமராவை செட் பண்ணு. புரியுதா? ரொம்ப பில்டப் கொடுக்காத” என்று காதில் இரகசியமாக சொன்னான் கதிர்.
“டேய் நம்ப இங்கே ஒரு வாரம் தங்கினா, இந்த பழனி தொல்லை எனக்கு தாங்காதுடா. லவ் டார்ச்சர் பண்ணிடுவான்.”
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ கிழவி. அப்படியே அவங்களுக்கு மெசேஜ் அனுப்பிடு. எண்ணி ஒரு வாரத்துல நம்ப அவங்க சொன்ன வேலையை முடிக்கிறோம்னு.” என்று கதிர் சொல்ல, “சரி” என்றார் கீதா.
அன்றைய இரவு
“ஆல் தி பெஸ்ட் கதிர் மாமா” என்றாள் ஷாமிலி.
“ஹலோ எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா?” மணிமாறன் கேட்க,
“உங்களுக்கு எதுக்கு சொல்லணும்?” என்றாள் புரியாது.
“அப்ப அவனுக்கு ஏன் சொன்னீங்க?”
“அவருக்கு சொல்ல ஒரு அர்த்தம் இருக்கு. அதான் சொன்னேன்.”
“என்ன அர்த்தம்?”
“எப்பயும் முதலிரவு தாய் வீட்டில் தான் நடக்கணும்.”
“அப்படியா? அதை ஏன் எங்கிட்ட சொல்றீங்க. ஐ ஆம் சாரி. ஐ அம் நாட் இன்டர்ஸ்டட்” என்றான் மணிமாறன்.
“வாய ஒடச்சிடுவேன். இன்னைக்கு என் தங்கச்சிக்கும், கதிர் மாமாவுக்கும் முதலிரவு.” என்று முறைத்தாள்.
“என்ன சொல்றீங்க? அய்யோ என் மச்சான் அதுக்கெல்லாம் ஆளில்லையே.” என்று அலற,
“அதை எல்லாம் அவரு பார்த்துப்பாரு. அவர் உங்களுக்கு மச்சான் இல்ல சகலை புரியுதா?” என்றாள் ஷாமிலி.
“அவன் எனக்கு சகலையான்னு தெரியல. ஆனா இப்போ இந்து வந்தா இங்க ஆகப்போது ரகளைன்னு மட்டும் புரியுது.” என்று மாறன் புலம்பினான்.
முல்லையின் அறைக்குள் சென்ற கதிர், அவளின் அறை முழுவதும் பூக்களால் ஜோடிக்கப்பட்டு இருந்ததை பார்த்தப்படி இருக்க, முல்லை வெட்கத்தோடு கதிரின் பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
“என்னடி இதல்லாம்?”
“நமக்கு இன்னைக்கு முதலிரவு மாமா.” என்றாள் வெட்கத்துடன்.
“ஏய் நான் தான் சொன்னேனே. உன் அம்மா தாலி எடுத்துக்கொடுக்கும் வரை நமக்கு இதெல்லாம் கிடையாது. புரியுதா?”
“அதெல்லாம் முடியாது மாமா. எனக்கு ரொம்ப பசிக்குது.” என்றாள் முல்லை.
“இரு நான் போய் கொத்து பரோட்டா வாங்கிட்டு வரேன்.” என்று அவன் கிளம்ப,
“மாமா அறிவு இருக்கா உனக்கு? கொத்து பரோட்டாவை நீ வாங்கிட்டு வர வேண்டாம். நீயே போடு.” என்று மறைமுக பேச்சில் மனதைச் சொல்ல,
“அய்யோ எனக்கு அதெல்லாம் போட தெரியாது” என்றான் வேகமாக.
“நீ போட லாயக்கு இல்ல மாமா. சோ நானே போடுறேன்.”
அதன்பின்னே உஷாரான கதிர், “ஏய் என்னடி டபுள் மீனிங்ல பேசுற?” என்றான்.
“அதெல்லாம் ஒரு மீன்ங்கும் இல்ல. இங்க பாரு.”
“ஏய் இது என்ன? ஜாக்கெட் எல்லாம் கழட்டுற?” என்று பதறினான்.
“ஐயோ நான் எங்க ஜாக்கெட்டை கழட்டினேன்? இங்க பாருன்னு தானே சொன்னேன்.” என்றதும் யோசனையாய் அவன் பார்க்க, அவளின் மார்பில் கதிர் என்று பச்சை குத்தியிருந்தது.
“என்னடி நீ என் பெயரை போய் பச்சகுத்தி வைத்திருக்க?” என்றவன் குரல் உள்ளே போக.
“ஆமா மாமா. ஒருவேளை எனக்கும் அகிலனுக்கும். கல்யாணம் ஏற்பாடு பண்ணினால் நான் அந்த மணவறையிலேயே என் உயிரை போக்கிக்கணும்னு நினைச்சேன். அப்போ நான் சாகும் போதும் என்னுடன் உன் பெயராவது வரனும்னு தான் மாமா, எனக்கு 13 வயசு இருக்கும் போதே உன் பெயரை நான் பச்சை குத்திட்டேன்.” என்று சொல்ல, அவளின் காதலில் மெய் மறந்த கதிர் அவளை கட்டி அணைத்தான்.
“மாமா. என்னுள் உன்னை நான் உணரணும். எனக்கே எனக்குன்னு நீ வேணும். உனக்காக இத்தனை வருடம் நான் பாதுகாத்து வைத்து இருக்கும் என் பெண்மையை பரிசளிக்கணும்.” என்றாள் முல்லை.
“முல்லை! உன் காதலுக்கு நான் தகுதி இல்லாதவன். இதெல்லாம் வேண்டாம்” என்றான் குற்றவுணர்ச்சியுடன்.
“நீ என் புருஷன் மாமா. அந்த ஒரு திமிறு எனக்கு போதும்” என்று சொன்னவள் தன் கணவனை கட்டிக்கொண்டாள்.
கதிரின் கரங்கள் அவளின் தேகத்தை பற்றிக்கொள்ள, ஈருடல் ஓருயிராக மாறி, கள்வனின் கையில் கன்னி இவள் தன் பெண்மையை பறி கொடுக்காமல், அவனுக்கு இவளே பரிசளிக்க, கள்வனாக இருந்தாலும் இந்த இடத்தில் கணவனாய் மாறி, தன் காதல் மனைவிக்கு தன் காதலை இவன் பரிசாய் கொடுத்து, ஈருடல் ஓருயிராக மாற. ஈருயிர் இன்னொரு உயிரை படைக்குமா!❤