Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 53

CHAPTER 53

விவாதம் – 53

By S.K Velan · October 4, 2026

0

“ம்மா… எங்க வீட்டுல யாரையும் காணோம்? அத்தை, வேணு, பாட்டி எல்லாம் எங்க சசி அக்கா? மாமா எங்க ஆளை காணோம்?” என்று தாயிடமும் சகோதரியிடமும் கேட்டான்.

“உன் மாமா தான்டா எல்லோரையும் கடைக்கு அழைச்சிட்டு போய் இருக்காரு.”

“தம்பி நீ சித்துவை உங்க ரூமுக்கு அழைச்சிட்டு போ. சித்து நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுடா. போ” என்று விரட்டினார் ஜெயா.

“ஆமா சித்து சீக்கிரம் வா. எங்கம்மா நீ வராம எனக்கு சோறு கூட போடல.”

“ஏன் அக்கா, உங்களுக்கு பசிச்சா நீங்க சாப்பிடலாம் இல்ல.” மகிழினி கேட்க,

“அதெல்லாம் எங்க அக்கா சமைக்கும் போதே சாப்பிட்டு இருப்பாங்க. நீங்க வாங்க நம்ம ரூமுக்கு போகலாம்” என்று கணவன் அழைத்ததும்,

அவனை பார்த்து முகம் சுழித்தவள், “அது ஒன்னும் நம்ம ரூம் இல்ல. உங்க ரூம்” என்றாள்.

“இங்க பாருங்க. இப்போ நீங்க இந்த மாதிரி எல்லாம் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருந்தா, என் அம்மா என்ன எதுன்னு கேட்டு என்னை தான் திட்டுவாங்க.”

“ஹான் திட்டுனா வாங்கிக்கோங்க. ரெண்டு இளநீரை ஒரே ஆளா குடிக்க தெரியுதுல்ல. உங்க அம்மா திட்டுறதை வாங்கிக்க தெரியாதா?”

“ஏங்க நீங்க இன்னும் அந்த இளநீர் கதையை மறக்கலையா?”

“நான் ஏன் மறக்கணும்? மறக்க மாட்டேன். என்னைக்குமே நீங்க பண்ணத நான் மறக்கவே மாட்டேன்.”

“நீ என்னைக்குமே மறக்காத அளவுக்கு என் தம்பி அப்படி என்ன பண்ணான் சித்து?” என்று சசி கேட்க,

“ஐயோ அக்கா! அதெல்லாம் ஏதும் இல்ல. சும்மா தான் சொன்னேன். சரி நான் அவர்கூட ரூமுக்கு போறேன்.”

“ஏன்கா புருஷன் பொண்டாட்டி பேசுறத ஒட்டி கேக்குறதே தப்பு. இதுல உனக்கு அவங்க பேசுனதுல டவுட் வேற வருதா?”

“புருஷன் பொண்டாட்டி நீங்க உங்க ரூம்ல போய் பேசுனா, நான் ஏன் கேட்கப்போறேன். போ போய் உன் ரூம்ல உன் பொண்டாட்டிகிட்ட பேசு போ” என்று விரட்டினாள் சசி.

“எங்களுக்கு தெரியும். நீங்க போய் மாமாவுக்கு போன் பண்ணி சீக்கிரம் வர சொல்லுங்க” என்றவன் அறைக்குள் நுழைய, அங்கே மகிழினி பையில் இருந்த துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருக்க,

“என்னங்க சிஎம். இன்னும் என்மேல கோவமா தான் இருக்கீங்களா?” என்று கேட்டான் கொடிவீரன்.

“ஆமா. ஏன் இப்போ அதுக்கு என்ன பண்ண போறீங்க.?”

“நீங்க என்கிட்ட சமாதானமா போனா, நான் உங்கள நாளைக்கு உங்களுக்கு பிடித்த ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போகலாம்னு இருந்தேன்.”

“எங்க?”

“ ப்ச் இவ்ளோ கோவமா கேட்டா நான் எப்படி சொல்லுவேன்?”

“ஈ…ஈ போதுமா. இப்போ சொல்லுங்க எங்க போறோம்?”

“நான் இப்போ போய் உங்களுக்கும், அக்காவுக்கும் தாலி செயின் பண்ணிட்டு வரேன். சோ, இன்னைக்கு ஒரு நாள் முழுக்க நீங்க என் தொல்லை இல்லாம நிம்மதியா இருங்க. நாளைக்கு காலையில நம்ம கிராமத்தை சுத்தி பாக்க அழைச்சிட்டு போறேன்.

“ஆமா. இங்க சுத்தி பாக்க என்ன இருக்கு.?”

“சும்மா வீட்டுக்குள்ள இருந்துட்டு என்ன பண்ண போறீங்க. நாளைக்கு என்கூட வாங்க. நம்ம வெளிய போகலாம்.”

“அதை நாளைக்கு பாத்துப்போம். முதல்ல நீங்க எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்க.” என்றாள்.

“என்ன டவுட்?”

“உங்கள நான் என்னனு கூப்பிடுறது?”

“புரியல?” என்றான் அவன்.

“உங்கள என்ன பெயர் சொல்லி கூப்பிடுறது கேட்டேன்.”

“அதை நீங்கதான் முடிவு பண்ணனும். நீங்க என்னை கூப்பிடணும்னு இல்ல கூப்பிடனும் நினைச்சாலே நான் உங்க முன்னாடி வந்து நிப்பேன். சரி நீங்க டிரஸ் மாத்திட்டு போய் சாப்பிடுங்க. நான் கிளம்புறேன்” என்றான் கொடிவீரன்.

“இப்போ போய்ட்டு எப்ப வருவீங்க?”

“ஏன் கேக்குறீங்க?”

“பதிலுக்குப் பதில் கேள்வி கேட்கணுமா. இல்ல சும்மா தான் கேட்டேன் சொல்லுங்க” என்று பல்லைக்கடித்தாள்.

“முடிஞ்சா நைட்குள்ள வரேன். இல்லைனா நாளைக்கு காலையில வருவேன்.”

“அப்போ நைட் எங்க தங்குவிங்க?”

“இந்த மாதிரி எப்போவது வீட்டுக்கு வர நேரமாச்சுன்னா, என் இன்னோரு அத்தை புள்ள தேவி வீட்டுல தங்கிடுவேன்.”

“தேவியா? யர் அவள்?” என்று பார்வையைக் கடுமையாக்கிக் கேட்க,

“ஏங்க தேவினா பொண்ணு இல்லங்க. அவன் முழு பெயர் தேவராஜ்.”

“ஓ… அப்ப சரி. சரி பார்த்து போய்ட்டு வாங்க.” என்றாள் பெண்.

“ஹலோ சிஎம்.” என்றதும் அவள், “ம்…” என்க,

“என்மேல இன்னும் கோவமா?”

“எதுக்கு?”

“அதான் இளநீர் தராம உங்கள புலம்ப விட்டதுக்கு.”

“ம்… ஆமா கோவம் தான்.”

“அப்படி நீங்க கோவமா இருந்ததால தான், காருல முன்னாடி சீட்ல நீங்க உக்காந்தும் கூட, பயந்து கண்ணை மூடாமல், நல்லா கண்ணை திறந்துகிட்டு என்னை திட்டிகிட்டே வந்திங்க.

“அப்போ நான் கண்ணு மூடக்கூடாதுன்னு தான் என்னை கடுப்பாக்கி பாத்திங்களா?”

“ம்… ஆமா. நீங்க நார்மலா இருக்கணும்னு நினைச்சு தான் பண்ணேன். சரி நேரத்தோடு போய் சாப்பிடுங்க நான் போய்ட்டு வரேன்” என்று அறையில் இருந்து வெளியே வந்தவன், தன் உறவுக்காரர்களின் மூலம் பட்டறைக்கு சென்று, அங்கே சசி & மகிழினிக்கு இவன் கையாலேயே தாலி சங்கிலி செய்ய தொடங்கினான்.

சசியின் கணவர் சிவாவுடன் கடைக்கு சென்ற கீதா, வேணு, பாட்டி என்று அனைவரும் மீண்டும் வீட்டுக்கு திரும்பியவர்கள் மகிழினியிடம் பேசி சிரித்து நேரத்தை கடத்தினர்,

அங்கோ வனிதா தன் செல்போனில் இருந்து, அவளின் தம்பி நாராயணனை தொடர்பு கொண்டு, “நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்கிட்ட பொறுப்பை கொடுத்தேன் பாரு. என்னை சொல்லணும்.” அவனை கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தாள்.

“ஐயோ அக்கா. நம்ம ஏற்பாடு பண்ண லாரி டிரைவர் அந்த கொடியையும் மகிழினியையும் காரோட சேர்த்து தூக்க தான் பைபாஸ் ரோட்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, எப்படி மிஸ் ஆகுச்சுன்னு தெரியல. அவங்க ரெண்டு பேரும் இப்போ அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்கன்னு எனக்கு செய்தி வருது.”

“இங்க பாரு நாராயணா. எனக்கு அந்த மகிழினி தொல்லையா இருந்து என்னை அசிங்கப்படுத்தினான்னு பார்த்தா, நம்மனால இவள கட்டிக்கிட்ட அந்த கொடிவீரன், இவளுக்கு மேல நமக்கு தலவலியா இருக்கான். அவனுக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா, என்னைப்பற்றி மேலிடத்துல கம்பளைண்ட் பண்ணி இருப்பான். எப்படியோ அவன் இன்னைக்கு தப்பிச்சிட்டான். ஆனா, அவன் ஊருக்கு போகும்போது அவனையும், அவன் பொண்டாட்டியயும் நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி அடிச்சு தூக்கச்சொல்லு.” என்று வனிதா வஞ்சதை மனதில் சுமந்துகொண்டு இருவரையும் பலி வாங்க ஒருபுறம் காத்திருந்தனர்.

அன்று இரவு கொடிவீரன் வீட்டில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்த தருணம், மகிழினி பார்வை மட்டும் வாசலை விட்டு நகராமல் இருந்ததை கண்ட வேணு, “என்ன அத்தை வாசலையே பாக்குறீங்க? யார தேடுறீங்க?” என்று அனைவர் எதிரிலும் கேட்க, மகிழினி அவனை முறைப்பதை பார்த்து மீதம் உள்ளோர் சிரிக்க,

“ஏன் ஜெயா சண்டே பங்க்ஷன்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கியாச்சு இல்ல” என்று கீதா கேட்க,

“ஹாங் வாங்கியாச்சு அண்ணி.”

“சரி நேரமாகுது பாருங்க. எல்லோரும் போய்ப்படுங்க. சித்து நீ போய் உன் புருஷன் ரூம்ல படு. வேணு நீ எங்க படுக்கப்போற?”

“நான் உங்க பக்கத்துல தான் படுப்பேன். அப்போ தான் நீங்க எனக்கு கதை எல்லாம் சொல்லுவீங்க.”

“அப்போ வேணு என்கூட தூங்கட்டும் ஜெயா. நீ வேணுவோட பாட்டியை உன் கூட தூங்க வச்சிக்கோ. சசி நீ நேரத்தோடு போய்ப்படு. உன் புருஷன் உன் ரூமுக்கு போய் ரொம்ப நேரமாச்சு. சித்து நீ போ என்ன வாசலையே பார்த்துக்கிட்டு நிக்குற. என்ன விஷயம்? என்று கேட்டார் கீதா.

“இல்லம்மா. உங்க மாப்பிள்ள இன்னும் வரலையே. அவர் வந்தா யார் சாப்பாடு போடுவாங்க?”

“அவரு என்ன சின்ன பிள்ளையா? அதெல்லாம் அவரு வந்தா தானா போட்டு சாப்பிடுவாரு. நீ போய் நேரத்தோடு படு போ” என்று கீதா சொன்னதும் மகிழினி மனசே வராமல் அங்கிருந்து அறைக்குள் சென்று, அவன் கட்டிலில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து தரையில் விரித்து, தலையணை இல்லாமல் கண்கள் மூடியவள், சிந்தையில் அவளது எதிர்காலம் எதை நோக்கி பயணிக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.

மறுநாள் காலை ஜன்னல் வழியே குயில்களின் ரிங்காரம் கேட்டு தன் விழிகள் மலர்ந்த மகிழினி முதலில் கண்டது, சுவற்றில் மாட்டி இருந்த சிவனின் படத்தை தான். படுக்கையில் இருந்து எழுந்தவள் கட்டிலை பார்த்ததும் கணவன் இரவு வராததை புரிந்து கொண்டாள். குளித்து முடித்த பின்பு தன் அறையில் இருந்து வெளியே வர, ஹாலில் யாரும் இல்லை. சுற்றிலும் பார்த்தவள் சமையல் அறைக்கு செல்ல, அங்கே கொடிவீரன் அனைவருக்கும் காபி போட்டுக்கொண்டு இருக்க அருகில் சென்று நின்றாள் மகிழினி.

“குட் மார்னிங் சிஎம். நல்லா தூங்குனீங்களா?”

“ம்…நல்ல தூக்கம். எப்படி தூங்குனேனே தெரியல.”

“இந்தாங்க காபி.”

“நீங்க அப்போ நைட் வீட்டுக்கு வரலையா?” சந்தேகமாகக் கேட்டாள்.

“நான் 12. மணிக்கு வந்தேங்க.”

“அப்படியா. ஆனா, நீங்க உங்களோட ரூமுக்கு வந்த மாதிரியே இல்லையே?”

“நான்தான் ரூமுக்கு வரவே இல்லையே.”

“அப்போ எங்க தூங்குனீங்க?”

“மொட்டை மாடியில தான்.”

“ஏன்?” என்று கேட்டாள்.

“ப்ச் அதை விடுங்க. நீங்க காபி குடிங்க. நான் இந்த காபியை கொண்டு போய் மாடியில இருக்குற எல்லோருக்கும் கொடுத்துட்டு வரேன்.”

“எல்லாரும் மாடியில இருக்காங்களா?”

“ம்… ஆமாங்க.”

“கொடுங்க நானே போய் கொடுக்குறேன்.”

“இல்ல இல்ல நான் போய் கொடுத்துட்டு வரேன். நீங்க அதுக்குள்ள ரெடி ஆகுங்க. நம்ம வெளிய போகலாம்” என்றான்.

“எங்க?” என்றாள் முன்தினம் சொன்னதை மறந்து.

“நம்ம ஊரை சுற்றி பாக்கலாம். வேணுவும் வரேன்னு சொன்னான். நீங்க அவனையும் கிளம்ப சொல்லுங்க.”

“எங்க அவன் ஆளையே காணோம். இன்னும் எழலை போல.”

“அவன் எப்போவோ எழுந்து பக்கத்து வீட்டு பத்மாக்கு பாடம் எடுத்துக்கிட்டு இருக்கான். நீங்க அவனுக்கு ஒரு குரல் கொடுத்து கிளம்ப சொல்லுங்க. நான் இதோ வரேன்” என்றவன் மாடியில் இருக்கும் நபர்களுக்கு காபியை கொடுத்த பின்பு மகிழினி மற்றும் வேணுவை பைக்கில் ஊரை சுற்றி பார்க்க அழைத்து சென்றவன், ஆலமரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தி இவர்கள் இருவரையும் கீழே இறங்க சொல்ல.

“என்ன மாமா? இங்க என்ன இருக்குன்னு இந்த இடத்துக்கு அழைச்சிட்டு வந்து இருக்கீங்க?” என்று கேட்டான் வேணு.

 “இங்க தான்டா எங்க கபடி திடல் இருக்கு. அது மட்டும் இல்ல வில்வித்தை, சிலம்பம்னு இங்க எல்லா வகுப்புகளும் இருக்கும். வா உள்ள போகலாம். ஏங்க நீங்களும் வாங்க” என்றான்.

“உள்ள இப்போ ஆளுங்க இருப்பாங்களா?”

“ம்… இன்னைக்கு சனிக்கிழமை தானே மாறன் அண்ணனும் அவர்கூடவே மற்ற விளையாட்டின் பயிற்சி ஆசிரியர்களும் இருப்பாங்க.”

“அப்போ உங்க அண்ணி?”

“அண்ணியும் தான் வந்துருப்பாங்க. வாங்க உள்ள போகலாம்” என்றவன் அவர்களை அழைத்துக்கொண்டு கபடி திடலுக்குள் செல்,ல அங்கே சில ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் வேறுவேறு பயிற்சி நடந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்த மகிழினியை மகி ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

அங்கே இருக்கும் சில மாணவர்கள் கொடிவீரனுக்கு வணக்கம் வைக்க, வேணு வயது பிள்ளைகள் கூட சிலம்பம் சுற்றுவது, வில் வித்தை கற்பது, கபடி ஆடுவது என்ற திறனை கண்டு வியந்தபடி நின்றிருந்த வேணுவின் கன்னத்தை கிள்ளிய மாறன்,

“என்னடா குண்டு பையா அப்படி பாக்குற? உனக்கும் கபடி ஆட ஆசையா இருக்கா?” என்று கேட்டதும்

“யோவ் யார குண்டுன்னு சொன்ன? நான் குண்டா?” என்று வேணு கோவத்தில் கத்தியதும்,

அவனை சமாதானம் செய்ய மகிழினி அவன் கையை பிடித்து, “சும்மா இரு வேணு. பெரியவுங்கள அப்படி எல்லாம் பேசக்கூடாது. நீ இவர இனி மாமான்னு தான் கூப்பிடனும்.” என்று அவனுக்கு சொல்லி, “மகி அக்கா எப்படி இருக்கீங்க? அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க? மகிழினி இவர்களை நலம் விசாரித்தப்படி பேசிக்கொண்டு இருந்த சமயம்,

அதே திடலில் வேறு பயிற்சிக்கு வந்து இருக்கும் 30 வயது மதிக்கத்தக்க ஒருவன் மகிழினி அருகில் வந்து அவளை உரிமையோடு கட்டி அணைத்து, “ஹாய் சுந்தரி எங்கனே ஸ்வரணமாக்கும்” என்று மலையாளத்தில் கேட்டவன் மீண்டும் அவளை நெருங்கி நின்று, அவள் கரங்களை பிடித்து கை குலுக்கியவனை கண்டு, கொடிவீரனின் இதயம் கலகலத்து போனது.

“டேய் என்னடா இது? உன் பொண்டாட்டிகிட்ட இந்த சிலம்பம் சுத்துற பையன் வாயாலயே இப்படி ஜிலேபி சுத்துறான். இவங்களுக்கு முன்னதாகவே பழக்கம் இருக்கும் போல” என்றான் மாறன்.

“மாமா என்ன பேசுறீங்க நீங்க” என்று மகி அவனை கடிய,

“அடியே லாயறி. பழக்கம்னா ஃப்ரண்ட் ஷிப் தான்டி”

“எதுவா இருந்தாலும் அதை உங்க தம்பியே கேட்க உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது நீங்க ஏன் இதெல்லாம் கண்டுக்குறீங்க.?”

”ஏன் என் தம்பி பொண்டாட்டிக்கிட்ட ஒருத்தன் கையை பிடித்து, கட்டிப்பிடித்து பேசுனா அதை நாங்க கேட்க, கூடாதா?”

“ஆமா மாமா. கேட்கக்கூடாது.”

“பாருடா தம்பி, நம்ம எதுமே கேட்கக்கூடாதுனா அப்போ நம்ம எதுக்கு தான்டா இருக்கோம்?” என்று கொடிவீரனிடம் கேட்டான்.

“ஓ அப்போ எவனாவது வந்து என்கூட இந்த மாதிரி பேசுனா நீங்க என்னை சந்தேகபடுவீங்களா.?”

“ச்சீ ச்சீ…” என்றதும் மகி கணவனை முறைக்க, “அவன் சங்க அறுத்துடுவேன்.”

“மாமா!”

“என்னடி ஓமா. ஒரு வயசுக்கு மேல பெண்களை டச் பண்ணி பேசக்கூடாதுன்னு இவனுங்களுக்கு எல்லாம் தெரியாதா?”

“மாமா ஒருவேளை மகிழினிக்கு அவரு அண்ணன் முறையா கூட இருக்கலாம்,”

“அவன் அண்ணன் முறையோ இல்ல அண்ணி புருஷனோ, முதல்ல லேடீஸ் மேல கைவச்சி பேசகூடாதுன்னு பேசிக் நாலேட்ஜ் கூட இல்லப்பாரு” என்று பல்லைக்கடித்தான்.

“அண்ணா இப்போ ஏன் நீ இப்படி தேவையில்லாம அண்ணிகிட்ட பிரச்சனை பண்ற?”

“இல்லடா. உன் பொண்டாட்டிக்கிட்ட ஒருத்தன் பேசிகிட்டு இருக்கானே. நீ எங்க அவனை பார்த்து கடுப்பாக போறியேன்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

“பேசுனா என்ன? அவங்களுக்கு தெரிந்த ஆளா இருக்கும் பேசுறாங்க, ஆமா யார் இவரு இவரை நான் இங்க பார்த்ததே இல்லையே?” என்று கொடிவீரன் கேட்க,

“நம்ம சிலம்பம் ஆசான்க்கு உடம்பு சரியில்லடா. அதான் அவரோட சிஷ்யனை ஊருல இருந்து வர வச்சி, பசங்களுக்கு சிலம்பம் கத்து தரச் சொல்லிருக்காரு.” மாறன் சொன்னதற்கு, “ஓ…” என்றவன் மகிழினியை பார்த்துக்கொண்டு இருக்க, அவளோ இவனை கண்டுகொள்ளாமல் அந்த நபரிடம் சிரித்த முகத்துடன் மலையாளத்தில் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தாள்.

“ஷரி சகோதரா. நீங்க என்னே அந்தே பாட்டி போனில் விழிக்கும் நம்மே சம்சாரிக்கம்” என்று சொன்னவள் அந்த நபரிடம் இருந்து விடைபெற்று இவர்களை நோக்கி வந்து, “சாரி அவரு ஒருவகையில எங்க சொந்தம் தான். அதான் பேசிட்டு வந்தேன்” என்றாள்.

“உன் சொந்த ஊர் கேரளாவா?” மகி கேட்க,

“ம்…” என்றாள்.

“அவரு உனக்கு சொந்தகார பையனா? என்ன சொந்தம்? மாமாவா இல்ல தாத்தாவா?” மாறன் கேட்க,

“ப்ச்… அண்ணா, நீங்க ஏன் அதெல்லாம் கேக்குறீங்க?”

“இல்லடா தம்பி. நாளைக்கு நம்ம வீட்டில விஷேஷம் வச்சி இருக்கோம்ல. ஒருவேளை அவரு ரொம்ப சொந்தமா இருந்தா, அவரையும் கூப்பிடலாம்ல அதான் கேட்டேன்.”

“அவரு தூரத்து சொந்தம், ஆனா, நாங்க எல்லாம் ஒண்ணா சிலம்பம் கத்துக்கிட்டோம், அப்போ நல்ல பழக்கம்,” என்றாள் மகிழினி.

“என்ன சொல்ற நீ சிலம்பம் கத்துக்கிட்டியா?” மகி ஆச்சர்யமாக கேட்க,

“ம்…” என்றாள்.

“என்னங்க சொல்லுறீங்க!! உங்களுக்கு சிலம்பம் சுத்த தெரியுமா?? ஏங்க என்கிட்ட சொல்லல?”

“இதுல சொல்ல என்ன இருக்கு?” என்று கணவனிடம் கேட்டாள்.

“என்ன பாப்பா நீ. உனக்குள்ள இருக்குற திறமை நாலு பேருக்கு தெரிந்தால் தானே உன்னை பார்த்து ரெண்டு பேர் முன்னுக்கு வருவாங்க.”

“ஐயோ அண்ணா அவ்ளோ எல்லாம் எனக்கு சீன் இல்ல. நான் ரொம்ப எல்லாம் சிலம்பம் சுத்த மாட்டேன்.”

“பொய் பொய்” என்றான் வேணு.

“என்ன பொய்?”

“மாமா அத்தை அலமாரியில நிறைய மெடல் சர்டிபிகேட் எல்லாம் வச்சிருக்காங்க. அதெல்லாமே இந்த மாதிரி போட்டியில் கலந்துகிட்டு வாங்கி இருக்காங்கன்னு என் அப்பா சொல்லிருக்காரு.

“என்னங்க சிஎம் இது. வேணு சொல்லுறது எல்லாம் உண்மையா?” சம்மதமாய் அவள் தலையசைக்க,

“ஏன்மா அந்த பரிசெல்லாம் வீட்டு ஷோ கேஸ்ல தானே வைக்கணும். நீ ஏன் அலமாரியில வச்சிருக்க?” மகி கேட்க,

“ப்ச் என்ன அக்கா பண்ணுறது. என் பாட்டிக்கு நான் சிலம்பம் போட்டிக்கு போறது எல்லாம் பிடிக்காது. அது மட்டும் இல்ல. நான் ஆசைப்பட்டு படிச்ச நர்ஸ் வேலையை கூட அவங்க என்னை பார்க்ககூடாதுன்னு சொல்லிட்டாங்க. சரி ஏன் அவங்களுக்கு பிடிக்காதத்தை பண்ணனும்னு நானும் அப்படியே என் ஆசையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டேன்.”

“ம்… பாரு மகி. என்னதான் காலம் மாறினாலும், இன்னும் உன் அம்மா, இதோ வேணுவோட பாட்டி போல ஆளுங்க எல்லாம் இருக்க தான் செய்றாங்க. பிள்ளைங்களுக்கு எது பிடிக்குமோ, எது வருமோ, எதுல இன்ட்ரெஸ்ட் இருக்கோ, அதை தரது இல்ல. இவங்களோட கெளரவத்துக்காக பிள்ளைங்க ஆசையை குழி தோண்டி புதைக்கிறது.“ கோபமாகச் சொன்னான் மாறன்.

“ம்… ஆமாம் மாமா. பாவம் தான் மகிழினி.”

“சரி அவங்களுக்கு பாவம் பார்த்தது போதும். வா இவங்களுக்கு சாப்பிட எதாவது ரெடி பண்ணலாம்.”

“அண்ணா அதெல்லாம் வேணாம். நாங்க கிளம்புறோம். வீட்ல எல்லா வேலையும் போட்டது போட்ட மாதிரி இருக்கு. நான் உங்கள பார்த்து நாளைக்கு பங்க்ஷன்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டு போக தான் வந்தேன்.”

“சரிடா கண்டிப்பா வரோம்.” என்றதும் மாறன் தம்பதியிடம் இருந்து விடைபெற்று வீடு வர அங்கு சுரேஷ் நின்றிருந்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!