அங்கே சுந்தரேசனை பார்த்ததும் யாருக்கும் ஏதும் புரியவில்லை.
“டேய். எங்க வந்து என்ன பேசிகிட்டு இருக்க.“ என கதிர் அவனை அடிக்க எகுறிக்கொண்டு போக.
“இதோடா. போலீஸ்காரன் மேலையே கை வைப்பியா நீ. இதுக்கே நான் உன்ன அரஸ்ட் பண்ணனும்” என்றான் சுந்தரேசன்.
“சார். ஏன் தேவை இல்லாம பேசுறீங்க. frst நீங்க எதுக்காக வந்து இருக்கீங்க” என்று வேலன் கேட்க,
“ம். வேற எதுக்கு. இதோ அண்ணனை கொலைப்பண்ணிட்டு நல்ல புள்ள மாதிரி இருக்குற இந்த கொலைகாரனா அரெஸ்ட் பண்ண தான் வந்தேன்” என்றார் சுந்தரேசன்.
“யார் யாரை கொலைபண்ணது. என்ன சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க” என்று ரோஜா கேட்க,
“ஹ்ம். உன்னை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி இருந்தா இன்னேரம் நமக்குள்ள சம்மந்தம் வந்து இருக்கும் தான். ஆனா அதான் நடக்கலையே. சரி சரி, அதெல்லாம் பேச இப்போ நேரம் இல்ல. யோவ் constable. இவனை வண்டியில ஏத்துங்க” என்றான்.
“டேய். பழைய பகையை மனசுல வச்சிக்கிட்டு இங்க வந்து லந்து பண்ணிட்டு இருக்கியா.“ என்று கதிர் கோபத்துடன் அவனை நெருங்க,
“லந்தும் இல்ல சந்தும் இல்ல. நீ தான் உன் அண்ணனை போட்டு தள்ளிட்டு. இதோ இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி மொத்தமா உங்க குடும்பத்தையே ஏமாத்திகிட்டு இருக்கன்னு உன் மேல கம்பளைண்ட் வந்து இருக்கு. சரி சரி வண்டியில ஏறு” என்று சந்தரேசன் மீண்டும் மிர்ட்டினான்.
“தம்பி. என்ன பா நீ, எங்க வந்து என்ன பேசுற. என் பையன் மேல யாருப்பா அது கம்பளைண்ட் கொடுத்தது” என்று பாண்டியன் கேட்க.
“அதெல்லாம் இங்க சொல்ல முடியாது. ஒழுங்கா உங்க பையனை ஜீப்ல ஏற சொல்லுங்க. இல்லைனா நானே அடிச்சு இழுத்துட்டு போக வேண்டியது வரும்” என்று சுந்தரேசன் மிரட்ட.“எங்க கை வை டா பாக்கலாம்” என்று கதிர் முறுக்கிக்கொண்டு அவனிடம் மல்லுக்கு நின்றான்.
“ஐயோ. கொஞ்சம் அமைதியா இருங்க.“ என்று கதிரை அடக்கிய முல்லை.“ சார். யார் இவர் மேல கம்பளைண்ட் கொடுத்தது” என்று கேட்க.
“அதெல்லாம் சொல்ல முடியாது” என்றான் சுந்தரேசன்.
“ஏன் சொல்ல முடியாது. சட்டப்படி ஒருவரை அரஸ்ட் பண்ண வந்தா அதுக்கு உண்டான ரீசன் சொல்லணும்” என்று வேலன் சொல்ல.
“நீ என்ன பெரிய வக்கீலா டா. நான் ஏன் உன்கிட்ட இதெல்லாம் சொல்லணும்” என்று கேட்டான் சுந்தரேசன்.
“டேய் உதாறு. உன்கிட்ட பேச வக்கீல் தான் வரணுமா. சொல்லு டா வெண்ண. அப்படி என்ன என் மேல குற்றத்த கண்டு பிடிச்சி இங்க ஜீப்ப கிளப்பிகிட்டு வந்து இருக்க” என்று கேட்டார் கதிர்.
“ஓ. சார் விஷயம் தெரிஞ்சா தான் வருவீங்களா. சரி சொல்றேன் கேட்டுக்கோ. நீ உன் அண்ணி மேல ஆசைப்பட்டு உன் அண்ணனை போட்டு தள்ளிட்டன்னு உன் மேல கம்பளைண்ட் வந்து இருக்கு” என்று சுந்தரேசன் சொல்ல.
“ஏய். எங்க வந்து என்ன பேசிகிட்டு இருக்க” என்று கர்ஜித்த கதிர் சுந்தரேசனின் காலரை பிடித்து இருந்தான்.
இதுவரை பொறுமையாக இருந்த கதிருக்கு தன் அண்ணனை பற்றியும் அவனை பற்றியும் இல்லாத பொல்லாததை சொன்னதை கேட்டு கோவம் எழுந்து இருக்க.“அட. கூல் கதிர். இது ஆரம்பம் தான். இனி தான் ஆட்டமே இருக்கு” என்று சுந்தரேசன் கதிரின் கையில் விளங்கை மாட்டினான்.
“ஏய். நீ பழைய பகையை மனசுல வச்சுக்கிட்டு ரொம்ப ஓவரா சீன் போடாத” என்று கதிர் சுந்தரேசனை எச்சரிக்க.
“ரோஜா. உங்க அண்ணனை பிரச்சனை பண்ணாம அவங்கக்கூட போக சொல்லுங்க” என்ற வேலன் தூரத்தில் நின்று இருக்கும் இன்னோரு காவலர் கையில் இருக்கும் கைபேசியை சுட்டிக்காட்டினான்.
“என்னங்க. அந்த ஆளு என்ன பண்ணுறாரு” என்று ரோஜா கேட்க.
“உங்க அண்ணன் இப்போ போலீஸ் மேல கை வச்சத்தை எல்லாம் அந்த ஆளு ரெகார்ட் பண்ணி உங்க அண்ணன்க்கு எதிரா எவிடென்ஸ் கிரீயட் பண்ணுறாங்க” என்று வேலன் சொல்ல.
“வாத்தி வாத்தி. அங்க பாருங்க அந்த ஆளு உங்கள வீடியோ எடுக்குறாரு” என்றாள் ரோஜா.
இங்கே என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று புரியாமல் முல்லை முருகன் பாண்டியன் என்று அனைவரும் பதறி போக. யாருக்காகவும் காத்து நில்லாமல் சுந்தரேசன் கதிரை வாசலுக்கு அழைத்து சென்றான்.
தன்னை சுற்றி ஏதோ சதி வேலை நடக்கிறது என்று அறிந்துகொண்ட கதிரும் அந்த இடத்தில் அமைதிக்காத்தவனாக போலீஸ் ஜீப்பில் ஏறி அமர்ந்தவனின் பார்வை முல்லையை உள் வாங்கி இருக்க.
“வேலா. என்னடா. அவரை ஏன் அழைச்சிட்டு போறாங்க. அவர் மேல யார் கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்க” என்று பதற்றத்துடன் கேட்டாள் முல்லை.
முல்லையின் கேள்விக்கு பதில் கிடைக்கும் முன்னே சுந்தரேசனின் வாகனம் அங்கிருந்து மறைந்து இருக்க.
“ஐயோ என் புள்ள.“ என்று பாண்டியன் இடிந்துப்போய் அதே இடத்தில் நிலைகுழைந்து அமர்ந்துப்போனார்.
==================================
“என்ன மா ரோஜா. இங்க என்ன நடக்குது. ஜீவா மாப்புளைக்கு என்னாச்சு” என்று முருகன் ஒரு பக்கம் பதற.
இதே தருணம் கதிரை கைதி செய்த செய்தியை அறிந்துக்கொண்ட நாகராஜன் முருகனின் வீட்டுக்குள் நுழைந்தவன்.
“சின்னமா. உங்க கஸ்தூரி அத்த தான் சுந்தரேசன்கிட்ட போய் கதிர் மேல கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்க” என்றான்.
“என்ன கஸ்தூரியா.“ என்று அங்குள்ள அனைவரும் அதிர்ச்சி அடைய.
“ஆமா. உங்க அத்த கஸ்தூரி. ஜீவா காணாமல் போனதுக்கு காரணம் கதிர் தான். கதிர் என் மாப்பிளையை கொலை பண்ணிருப்பான்னு எனக்கு சந்தேகமா இருக்குன்னு கம்பளைண்ட் பண்ணிருக்காங்க “என்றான் நாகராஜன்.
“கஸ்தூரி சித்தி தானாக இதெல்லாம் பண்ணிருக்க மாட்டாங்க. கண்டிப்பா இதுக்கு பின்னாடி வேற யாரோட சதியோ இருக்கு” என்று முல்லை சொல்ல.
“ஏன் அக்கா. ஒரு வேள அவங்க சொல்லுற மாதிரி உன் மாமா சார் மீனாவுக்காக ஜீவாவை எதாவது பண்ணிருப்பாரா” என்று கேட்டான் வேலன்.
அவன் கேள்வியில் அவனை ஏகத்துக்கும் முறைத்த முல்லை.
“ஜீவா மாமா அவருக்கு அண்ணன்.
இன்னும் சொல்ல போனா அவருக்கு அப்பா மாதிரி. இவரால ஜீவா மாமாவுக்கு ஒன்னும் ஆகிருக்காது. இந்த கஸ்தூரி சித்திக்கு தான் மூளை இல்லைனா உனக்குமா அறிவில்லை” என்று முல்லை வேலனை கண்டிக்க,
“அறிவு இருந்தா நான் ஏன் இங்க வர போறேன். சரி நீங்க கவலைப்படாம இருங்க. நானும் அண்ணனும் ஸ்டேஷன் வர போயிட்டு வரோம்” என்றான் வேலன்.
“டேய் வேலா. ஸ்டேஷன்க்கு எல்லாம் அப்புறம் போகலாம். முதல்ல கஸ்தூரி சித்தியை போய் பார்க்கலாம் வா” என்று முல்லை வேலனை அழைக்க.
“பாப்பா. முதல்ல கதிரை போய் வெளிய எடுக்க என்ன பண்ணணுமோ அத பண்ணலாம் மா” என்றான் நாகராஜன்.
“இல்ல அண்ணா. இங்க எதுமே சரியில்ல. மீனா ஜீவா மாமா கல்யாணம் தான் இதுக்கெல்லாம் ஆரம்ப புள்ளியே. வேலன் சொன்ன மாதிரி கஸ்தூரி சித்திக்கு இதுல பெரிய பங்கு இருக்கு. நம்ம முதல்ல கஸ்தூரி சித்தியை போய் விசாரிக்கலாம் வாங்க” என்று முல்லை சொல்ல.
“ஆமா ஆமா. கஸ்தூரிக்கும் அந்த சுந்தரேசனுக்கும் கூட்டு இருக்கு” என்றார் பார்வதி.
பார்வதியின் வார்த்தையை கேட்டு கூடியிருக்கும் அனைவரும் அவரை சந்தேகமாக பார்க்க, “எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க. நானும் ஒரு காலத்துல கஸ்தூரி கூட சேர்ந்து முல்லையை எதிரியா நினைச்சவ தான். அதுவும் இல்லாம என் தம்பிக்கு தான் முல்லையை கல்யாணம் பண்ணி வைக்க நானும் ஆசைப்பட்டேன். அதனால கஸ்தூரியும் என் தம்பி கேசவனும் சேர்ந்து போட்ட ஒரு சில திட்டங்கள் எனக்கும் தெரியும்” என்றார் பார்வதி
“பாத்தீங்களா. இப்படித்தான் நமக்கு தெரியாம கூடவே சில வில்லங்கத்தை நம்ப வச்சுக்கிட்டே சுத்துவோம்” என்று வேலன் ஜாடை பேச.
“ஏன் அத்த. இங்க இவ்வளவு பிரச்சனை நடக்குதே. உங்களுக்கும் விஷயம் தெரியும்னு ஏன் முன்னாடியே சொல்றதுக்கு என்ன” என்று ரோஜா கேட்க.
“ஐயோ. எனக்கு முழு விவரம் தெரியாது ரோஜா. ஆனா ஜீவா மீனா கல்யாணம் நடக்க காரணம் சுந்தரேசன்னு மட்டும் எனக்கு தெரியும்” என்றார் பார்வதி
“என்ன சொல்றீங்க. சுந்தரேசனா.?” என்று முல்லை ஆச்சரியத்துடன் கேட்க.
“ஆமா முல்லை. மீனா ஜீவா கல்யாணம் மட்டும் இல்ல. ரோஜா கல்யாணம் நடக்க வேண்டிய சமயத்துல சுந்தரேசன் தம்பியை ரோஜா கழுத்துல தாலி கட்ட வைக்க ஏற்பாடு பண்ணது கூட கஸ்தூரியின் சதி வேலை தான்” என்றார் பார்வதி
“புரியலையே. என்ன சொல்றீங்க விளக்கமா சொல்லுங்க” என்று வேலன் கேட்க, இதுவரை சுந்தரேசன் உடன் சேர்ந்து கஸ்தூரி செய்த அணைத்து குள்ள நரி வேலைகளையும் பார்வதி எடுத்துச் சொல்ல.“இவ்வளவு விஷயம் தெரிஞ்சும் நீங்களும் உமனா சாமியார் மாதிரி இருந்திருக்கீங்க இல்ல” என்று பார்வதியிடம் கோபித்துக் கொண்டாள் ரோஜா
“அப்படி இல்ல ரோஜா. முல்லையோட அருமை எனக்கு முன்னாடி தெரியாது. அப்போ எல்லாம் நானும் என் தம்பி கூட சேர்ந்து கெட்டவளா இருந்தது உண்மைதான். ஆனால் இப்போ எனக்கு அந்த கெட்ட எண்ணம் எல்லாம் சுத்தமா இல்லை” என்று பார்வதி தன் குற்றத்தை ஒற்றுக்கொள்ள.
“உங்களுடைய நன்னடத்தைப் பற்றி இப்ப யாரும் கேட்கல. அப்போ ஜீவா மீனா கல்யாணம் எப்படி நடந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா” என்று கேட்டான் வேலன்.
“எப்படின்னு எனக்கு தெரியாது. ஆனா இது எல்லாத்துக்கும் காரணம் சுந்தரேசன் தான்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று பார்வதி அங்கே உண்மையை சொல்ல.“சுந்தரேசன் மட்டும் தானா. இல்ல வேற யாராவது பின்னாடி இருக்காங்களா” என்று கோபமாக கேட்டாள் முல்லை.
“ஆமாம்மா. என்னுடைய தம்பியும் தான்” என்று பார்வதி இழுக்க, “தெரியும். அந்த விளங்காதவனும் இதுல இருப்பான்னு எனக்கு தெரியும்” என்ற முருகனின் பார்வை பார்வதியை கோபமாக சுட்டேறிக்க.
“சரி சரி. அதான் இது எல்லாத்துக்கும் காரணம் அந்த பேப்பர் ரவுடி சுந்தரேசன்னு தெரிஞ்சிருச்சில்ல. அவன நாலு காட்டுகாட்டுனா எல்லா உண்மையும் வெளியே வரும்” என்றான் நாகராஜன்.
“இருங்க இருங்க ப்ரோ. அவரு போலீஸ் அதிகாரி. நம்ம இத சட்டப்படிதான் மூவ் பண்ணனும். First முல்லை அக்கா சொன்ன மாதிரி இதுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட கஸ்தூரியை பார்த்து பேசுவோம்” என்று வேலன் சொன்னதும். ரோஜா முல்லை வேலன் மற்றும் நாகராஜன் ஆகிய நால்வரும் கஸ்தூரியை பார்ப்பதற்காக மீனாவை அட்மிட் செய்திருக்கும் மருத்துவமனைக்கு சென்றார்கள்.
இவர்கள் அங்கே சென்ற தருணம் கஸ்தூரி மீனா என்று இருவரும் அங்கே இல்லாமல் போக.
“என்ன இது. அப்போ மீனா அண்ணியை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்களா” என்ற ரோஜா கஸ்தூரியின் கைபேசி எண்ணுக்கு கால் செய்து பார்க்க. மறுமுனையில் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போனது.
“அத்த போன் எடுக்கல” என்று ரோஜா சொல்ல, சற்றும் தாமதிக்காமல் இவர்கள் அனைவரும் குன்னக்குடியில் இருக்கும் கஸ்தூரியின் வீட்டுக்கு சென்றார்கள்.
“என்ன இது வீடு பூட்டி இருக்கு” என்று ரோஜா அக்கம் பக்கத்தினரை விசாரிக்க. யாரிடமும் எந்த தகவலும் தெரிந்தப்பாடு இல்லாமல் போனது.
“இந்த கஸ்தூரி சித்தி ஏன் இவ்ளோ கேவலமா நடந்துக்கணும்” என்று முல்லை கோவம்க்கொள்ள.
“பேசாம வக்கிலை பார்த்து வாத்தியை வெளிய எடுக்க ஏற்பாடு பண்ணலாமா” என்று கேட்டாள் ரோஜா.
“வக்கில் மூலியமா போனா பெயில்ல தான் வெளிய வர முடியும். அதுக்கு பதிலா கேஸ் கொடுத்தவுங்களே வாப்பஸ் வாங்குறது தான் சரியா இருக்கும்” என்று வேலன் சொல்ல. முல்லையின் முகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது.
“வேலா. நேரம் போக போக எனக்கு பதட்டமா இருக்கு. ஸ்டேஷன்ல அவர எதாவது பண்ணிடுவாங்களா” என்று முல்லை பதற்றம்க்கொள்ள.
“உன் புருஷன் அடுத்தவங்கள ஒன்னும் பண்ணாம இருந்தா சரி” என்றான் வேலன்.
“இல்ல. எனக்கு பயமா இருக்கு. நான் கூட கஸ்தூரி சித்திக்கிட்ட பேசி கேசை வாப்பஸ் வாங்க வச்சிடலாமுன்னு நினைச்சேன். ஆனா இங்க இப்போ நடக்குறத பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று முல்லை கவலைக்கொள்ள.“அண்ணி இந்த மாதிரி நேரத்துல நீங்க பதட்டப்படக்கூடாது” என்று முல்லைக்கு தைரியம் கூறினாள் ரோஜா.
“இல்ல ரோஜா. எனக்கு என்னமோ மனசு ஒரு மாதிரி இருக்கு. நா. நான் உன் அண்ணனை பார்க்கணும்” என்று முல்லை சொல்ல.
“சரி மா அப்போ நேரா ஸ்டேஷன் போகலாம்” என்றான் நாகராஜன்.
================================
யார் சமாதானம் செய்தும் முல்லைக்கு முன்பு இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே போக. நாகராஜனின் காரில் இவர்கள் அனைவரும் குன்னக்குடி காவல் நிலையதுக்கு சென்று இருந்தார்கள்.
“பாப்பா. நீயும் சின்னம்மாவும் காருல இருங்க. நாங்க உள்ளப் போய் கதிரை பார்த்துட்டு வரோம்” என்றவாரு நாகராஜனும் வேலனும் போலீஸ் ஸ்டேஷன்க்குள் நுழைந்தார்கள்.
“பார்த்தீங்களா அண்ணி. இந்த கஸ்தூரி அத்த நம்மகூடவே இருந்துகிட்டு எவ்ளோ பெரிய துரோகத்தை பண்ணிருக்குனு. அதோட பொண்ணு மட்டும் நல்லா இருக்கணும்னு நினைச்சு. என்னை அந்த ஸ்ரீனிவாசன் கூட கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கு பாத்திங்களா” என்று ரோஜா கஸ்தூரியை கடிந்துகொண்டு இருந்தாள்.
“என்ன ரோஜா. உள்ள போனவுங்கள இன்னும் ஆளையே காணோமே. பேசாம நான் உள்ளப்போய் என்னனு பார்த்துட்டு வரவா” என்ற முல்லை காரில் இருந்து இறங்க போக. அதே சமயம் வேலனும் நாகராஜனும் குழப்பதோடு அங்கே வந்தார்கள்.
“என்ன அண்ணா அவர பார்த்தீங்களா. அவர் மேல FIR போட்டு இருக்காங்களா” என்று முல்லை கேட்க.
“அக்கா. அவரு உள்ள இல்ல.“ என்றான் வேலன்.
“இல்லைனா. உள்ள இல்லைனா என்ன அர்த்தம்” என்று ரோஜா கேட்க.
“சின்னமா. அந்த சுந்தரேசன் ஒரு மாசமா மெடிக்கல் லீவுல இருக்கானாம்.
அவன் வேலைக்கே வரது இல்லையாம்” என்று நாகராஜன் சொல்ல.
“அப்போ. அப்போ காலையில அவன் எப்படி யூனிபோர்ம்ல வந்தான்” என்று கேட்டாள் ரோஜா.
“நீங்க சொல்லுறத கேட்டா. இதுவும் அந்த சுந்ததேரேசன் திட்டம் போட்டு தான் பண்ணிருக்கான் போல. இப்போ அவனை எங்கன்னு போய் தேடுறது. அவன் வேற இவரோட கையில விளங்கு போட்டு அழைச்சிட்டு போனேனே” என்று முல்லை சொல்ல.“இப்போ எல்லாம் சில போலீஸ்க் காரங்க அவங்களோட சொந்த விருப்பு வெறுப்புக்காக காவல் துறை வாகனத்துல இருந்து அந்த யூனிபோர்ம் வர யூஸ் பண்ணிக்கிறாங்க போல” என்றான் வேலன்.
“ரோஜா. நம்ம வேணா கமிஷனர் ஆபீஸ் போய் அந்த போலீஸ்க்காரர் மேல கம்பளைண்ட் கொடுக்கலாமா” என்று முல்லை கேட்க.
“எல்லாம் பக்காவா பிளான் பண்ணி பண்ணிருக்காங்க அண்ணி. அவங்கள நம்ம சும்மாவே விடக்கூடாது. வாங்க நம்ம உடனே மேல் அதிகாரிங்கள போய் பாப்போம்” என்றாள் ரோஜா.
ஸ்டேஷன் வாசலில் இருந்தப்படி நேரே இவர்கள் கமிஷனரை காண அவரின் அலுவலகத்துக்கு செல்ல முடிவு செய்ய,
இதே சமயம் ரோஜாவின் கைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
“யாரு இது புது நம்பர்.“ என்று எண்ணிக்கொண்டே ரோஜா போனை ஆன் செய்ய.“ ஹாய் ரோஸ். என்ன கண்ணு. நான் இருக்கும் போது உன் அப்பன் வேற யாருக்கோ உன்னை நிச்சயம் பண்ணி வச்சிட்டான் போல. சரி சரி நிச்சயம் தானே வேற ஒருத்தன் கூட முடிஞ்சி இருக்கு. பரவாயில்ல. கல்யாணம் நம்ம ரெண்டு பேரும் பண்ணிக்கலாம்” என மறுமுனையில் இருந்து சம்மந்தமே இல்லாமல் காதல் வசனம் பேசும் ஆணின் குரலை கேட்டு ரோஜாவின் முகம் மாறியது.
“என்ன ரோஜா யாரு போன்ல” என்று முல்லை கேட்க, “யாரு ரோஸ் பக்கத்துல. ஒ, உன் அண்ணியா, என்ன அவங்க உன் அண்ணனை தேடிகிட்டு இருக்காங்களா. சரி சரி ரொம்ப தேட வேண்டாம். ஏன்னா உன் அண்ணன் எங்ககிட்ட தான் பத்திரமா இருக்கான்” என்று அந்த நபர் சொல்ல.
“ஏய் யாரு நீ. வாத்தி எங்க” என்று ரோஜா கேட்டதும். போனை முல்லை தன் வசம் வாங்கியவள்.“ஹலோ யாரு ஸ்ரீனிவாசன் தானே பேசுற” என்று சரியாக கேட்டாள் முல்லை.
“பரவாயில்லையே. வாத்தியார் புள்ள தான் மக்கா இருக்கும் போல. ஆனா வாத்தியார் பொண்டாட்டி நீ மூளைக்காரி தான். ஆமா நான் ஸ்ரீனிவாசன் தான் பேசுறேன்” என்று அவன் சொன்னதும்.
“டேய் உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்ல. இரு இரு. இதோ இப்போ நாங்க கமிஷனரை பார்க்க தான் போக போறோம். அங்க போய் உன் அண்ணன் இனி வாழ் நாளுல போலீஸ் ட்ரெஸெ போடாத மாதிரி பண்றோம் பாரு” என முல்லை ஸ்ரீனிவாசனை எச்சரிக்க. அவனோ அந்த போனே அலறும் வகையில் சத்தமாக சிரித்தான்.
“சிரி டா சிரி. உன் அண்ணன் மேல, உன் மேலன்னு. உங்க ரெண்டு பேர் மேலையும் கம்பளைண்ட் கொடுத்து உங்கள உள்ள தள்ளப்பறோம் பாரு” என்று முல்லை மீண்டும் கோவமாக அவனை எச்சரிக்க.
“நீ எங்கள அப்புறமா உள்ள வைக்கலாம். முதல்ல ரோஜாவோட வாட்ஸ் அப்புக்கு one view pic ஒன்னு அனுப்பி இருக்கேன். அத பார்த்துட்டு நீ கமிஷனர் ஆபீஸ்க்கு போகணுமா. இல்ல ரோஜாவை அழைச்சிட்டு நேரா நீங்க ரெண்டு பேர் மட்டும் இங்க கிளம்பி வரணுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ.“ என்றான் ஸ்ரீனிவாசன்.
“என்ன போட்டோ அனுப்பிருக்க.“ என்று முல்லை கோவமாக கேட்டுக்கொண்டே ரோஜாவின் வாட்ஸ் அப்பை ஓபன் செய்து பார்த்தவள் கண்ணில், கதிரை ரத்த வெள்ளத்தில் அந்திரத்தில் தலைகீழே கட்டி தொங்க விட்டு இருக்கும் காட்சி தெரிய.
“பார்த்த இல்ல. இது தான் போலீஸ் டிரீட்மென்ட்” என்ற சுந்தரேசனின் குரலை கைபேசி வாயிலாக கேட்ட முல்லை. தன் கையில் இருந்த ரோஜாவின் போனை கீழே தவர விட்டவளின் கண்ணில் இன்னும் கதிர் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டு இருந்தவனின் உருவம் தான் காட்சியாக பதிந்து இருந்தது.
–தொடரும்