“அம்மாடி முல்லை. எப்படியோமா. என் பொண்ணுங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல வாக்க பட்டுருக்கீங்க. முன்னாடி போலவே இனியும் கூட மீனாவும் நீயும் ஒண்ணா, ஒற்றுமையா இருந்து இந்தக் குடும்பத்துக்கு கௌரவத்தை சேர்க்கணும்” என்ற ஜெகாவின் சொல்லுக்கு சம்மதமாக தலை அசைத்தாள் முல்லை.
“சரி சரி. கதிரு. உனக்கு எதாவது வேலை இருந்தா நீ போய் பாரு. ரோஜா. நீ முல்லையை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போமா” என்று பாண்டியன் சொல்ல.
விட்டால் போதும்டா சாமி என்ற மனநிலையில் கதிர்வேலன் பின்னங்கால் பிரடியில் அடித்தப்படி பாண்டியன் வீட்டில் இருந்து நேரே தென்னை தோட்டத்தில் இருந்த நாகராஜனின் இல்லத்திற்குள் நுழைந்தான்.
இதே தருணம்,
சுந்தரேசனின் இல்லத்தில் தன் தம்பியின் கன்னத்தை பதம் பார்த்தது அவன் கரங்கள்.
தன் அண்ணன் அடித்த அடியில் ஸ்ரீனிவாசனின் கண்களில் கண்ணீரே வந்து இருந்தது.
“து. நீ எல்லாம் ஆம்பளயா” என்ற சுந்தரேசனின் வார்த்தையில் அவன் தம்பியின் உடல் கூசியும் போனது.
“கோவில்குள்ள ஒரு பொம்பள உன்னை ஆட்டி வச்சிருக்கா. நீ என்னடானா அவகிட்ட ஒன்பது துவரங்களையும் மூடிக்கிட்டு உக்காந்து இருந்து இருக்க. உனக்கு அசிங்கமா இல்ல” என்ற தன் அண்ணனின் முன்னே.
“நான்.“ என்று ஸ்ரீனிவாசன் தன் நிலைமையை சொல்லும் முன்னே மீண்டும் ஒரு அரை வாங்கி இருந்தான்.
“ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை என்கிட்ட அந்த கதிர் உன்னை கண்டு பிடிச்சிட்டான்னு சொல்லி இருந்தினா. நான் வேற பிளான் போட்டு எப்படியாவது அந்த ரோஜா கூட உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்” என்ற சுந்தரேசன் கோவமாக தன் கையை சுவற்றில் குத்தினான்.
“அண்ணா. அவங்க கட்டுப்பாட்டுல நான் மாட்டிகிட்டேன். என்னால எப்படி.“ என்ற ஸ்ரீனிவாசனை கேவலமாக முறைத்த அவன் அண்ணன், “டேய் கதிர். இப்போ நீ தப்பிச்சிட்ட. ஆனா நீ என்ன பண்ணாலும் உன் தங்கச்சியை என்கிட்ட இருந்து உன்னால காப்பாத்தவே முடியாது டா” என்ற சுந்தரேசன் புதிதாய் ஒரு திட்டத்தை போட்டவன்.
“டேய். அந்த கேசவனை நான் சந்திக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு” என்று தன் தம்பியிடம் உத்தரவிட. இனி இவர்களால் என்னவெல்லாம் ரோஜா, கதிர் முல்லை வாழ்வில் பிரச்சனை வர போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
இதே தருணம். சரஸ்வதி இல்லத்தில். தன் வலது காலை பூமியில் ஓங்கி உதைத்தாள் தனலட்சுமி.
“ஆனாலும் ஒரு பொம்பள பொண்ணுக்கு இவ்வளவு திமிர் ஆகாது” என்று சரஸ்வதி சொல்ல.
“ஆமா அம்மா. அந்த ரோஜாவுக்கு உடம்பெல்லாம் திமிர்” என்றான் ரவி.
“டேய் பாவி. நான் ரோஜாவை சொல்லல. நான் சொன்னது உன் அக்காவை” என்ற தன் அம்மாவை ஏகத்துக்கும் முறைத்த தனம்,
“நீ இப்போ வாயை மூடலைனா.
உன் மண்டையை உடைச்சிடுவேன்” என்றவளின் கோவத்தை பார்த்து சரஸ்வதி தலையில் அடித்துக்கொண்டு அவர் அறைக்குள் புகுந்துக்கொண்டார்.
தனத்தின் கோவத்தை பார்த்த ரவி.“அக்கா. விடு அக்கா, அந்த கதிர் இல்லைனா என்ன. உன் அழகுக்கு ஆயிரம் மாப்புள்ள லைன்ல வந்து நிப்பான்” என்ற ரவியின் வார்த்தையில் தனத்தின் இதழ்கள் வெறுமையாக மலர்ந்தது.
“நான் கதிரை கல்யாணம் பண்ணலைன்னு ஒரு துளி கூட கவலை படல. ஆனா அந்த” என்று தனத்தை பார்த்து.“ரோஜாவை பழி வாங்க முடியலைன்னு கவலை படுறியா” என்று ரவி கேட்க.
“அது இருக்கதான் செய்து. ஆனா அந்த ரோஜாவை விட இப்போ என் கடுப்பு எல்லாம் அந்த முல்லை மேல தான் இருக்கு” என்ற தனம், அவள் மனதிரையில் முல்லை தனத்தை அடித்த நிகழ்வை நினைத்து பார்த்து கோவத்தில் முகம் சிவந்தாள்.
“ஆமா அக்கா. அந்த முல்லையை நான் அடிக்க போனதால தானே அந்த கதிரும் என் மேல கை வச்சான்” என்ற ரவியின் முகத்திலும் கோவம் அப்பட்டமாக தெரிந்தது.
“இல்லடா தம்பி. அவங்க நமக்கு ஏற்படுத்திய அவமானத்தை நம்ப சாதாரணமா கடந்து போகிட முடியாது. ஏற்கனவே அந்த ரோஜாவால எனக்கு நிறைய அவமானம் ஏற்பட்டு இருக்கு. இப்போ அந்த முல்லைக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம். . எவ்வளவு திமிரு இருந்தா அவள் என்னை அடிச்சு இருப்பாள். அவ என்ன அறைஞ்சதுக்கு அந்தக் கதிர் அவளை கண்டிக்காமல், உன்னைய அடிச்சிட்டான் பாரு. கண்டிப்பா இவங்க இதுக்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீரனும்” என்று தனம் சொல்ல
“அக்கா. அதான் அந்த கதிர். முல்லை கழுத்துல தாலி கட்டிட்டானே. இனி அந்த குடும்பம் எக்கேடு போனால் நமக்கு என்ன” என்றான் ரவி.
“அப்படியெல்லாம் விட முடியாது தம்பி. தாலி தானே கட்டிட்டான். ஆனா மத்ததெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா. அந்த கதிர் மீனாவையும். அந்த முல்லை ஜீவாவையும் தான காதலிச்சாங்க. இத வச்சு நம்ம ஏதாவது பிளான் பண்ண முடியுமான்னு பார்க்கணும்” என்று தனம் சொல்ல.
“ஏன் அக்கா. அந்த குடும்பத்தோட ஒட்டும் வேண்டாம்ம் உறவும் வேண்டாம்ம்னு நம்ப தான் கோவில்ல இருந்து வந்துட்டோமே, இனி நமக்கு ஏன் அவங்க கதை” என்று கேட்டான் ரவி.
“நீ என்னடா மடப்பயன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க, முல்லைக்கும் கதிருக்கும் தானே கல்யாணம் ஆகிடுச்சு. ஆனா ரோஜாவுக்கு எல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல மாப்பிள்ளை கிடைக்காது. கிட்டத்தட்ட என் நிலைமை தான் அவளுக்கும்.
ஆனால் நான் இருக்கிற அழகுக்கும், எனக்கு இருக்கிற திறமைக்கும் நீ சொன்ன மாதிரி எனக்கு மாப்பிள்ளைங்க லைன்ல நிப்பாங்க. ஆனா இந்த ரோஜாவை நம்ம சும்மா விடக்கூடாதுடா” என்று தனம் சொல்ல.
“என்ன, ஏதாவது ஐடியா வச்சிருக்கியா” என்று கேட்டான் ரவி
“ஆமாடா. ஐடியா இருக்கு, ஆனா இந்த ஐடியாவுல நம்ப அம்மாவை நம்பக் கூடாது” என்று தனம் சொல்ல
“என்ன அக்கா சொல்ற. அம்மாவை நம்ப கூடாதா” என்று ஆச்சரியமாக கேட்டான் ரவி.
“ஆமாடா. நம்ம அம்மாவுக்கு அந்த கதிர் மேல சின்ன வயசுல இருந்தே ஒரு கரிசனம். எப்படியாவது அவனை அவங்களுக்கு மாப்பிள்ளை ஆக்கிக்கணும்னு தான் அம்மாவோட நீண்ட நாள் கனவு. ஆனா அது இப்ப பலிக்காமல் போனதால நம்ம மேல அம்மா கோபத்தில் இருக்கும். ஆனா நம்ம அம்மாவ நம்ம கரெக்ட் பண்ணி, எப்படியாவது உனக்கும் ரோஜாவுக்கும் நான் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டேனா. காலத்துக்கும் நீ அந்த ரோஜாவை படுத்தற பாட்டுல. அந்த கதிர், அப்புறம் முல்லை. ஏன் பாண்டியன் குடும்பமே ஆட்டம் காணும்” என்று தனம் ஒரு திட்டத்தை போட, இவர்களின் எண்ணம் ஈடேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,
இடம் பாண்டியனின் இல்லம்.
தன் கைபேசி மூலம் அவர்கள் வீட்டில் பணியாற்றும் இசக்கி என்கிற பெண்மணியை அழைத்து முருகன் நிறைய விஷயங்களை பேசி முடித்தவர்.
“நாங்க வரும் போது அங்க எல்லாமே தயாரா இருக்கனும்” என்று கட்டளையிட்டார்.
“ஐயா. நீங்க இதெல்லாம் சொல்லனுமா என்ன.? நீங்க முல்லை பாப்பாவையும் கதிர் தம்பியையும் உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வரும் போது. இங்கே எல்லாமே தயாரா இருக்கும்ங்க” என்றார் இசக்கி.
தன் கைபேசி இணைப்பை துணிடித்த முருகன்.“பார்வதி. நான் இசக்கிக்கிட்ட எல்லா விவரத்தையும் சொல்லியாச்சு. நீ வா. பாண்டியன் மாமாகிட்ட பேசிட்டு இன்னைக்கு முல்லையையும் கதிர் மாப்பிளையையும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்” என்றார் முருகன்.
“ம். ஏங்க. நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க. இவங்க கல்யாணம் திடிர்னு நடந்ததால இந்த மாதிரி சடங்கு சம்பர்தாயம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாமே” என்று பார்வதி சொல்ல, முருகன் சில நொடிகள் யோசித்தவர்,
“இல்ல பார்வதி. சாந்தி முகூர்த்தம் எல்லாம் நம்ம ஏற்பாடு பண்ண வேண்டாம்ம். ஆனா நம்ம பொண்ணும் மாப்பிளையும் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு நாள் நைட் தங்கட்டும்” என்று முருகன் சொல்ல.
“ம். சரி. பாண்டியன் அண்ணன்கிட்ட பேசி பாருங்க” என்றார் பார்வதி.
பாண்டியன் சோர்வாக அமர்ந்து இருந்த நிலையில்.“மாமா. நாங்க மாப்பிள பொண்ணை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகட்டுமா” என்று முருகன் கேட்க,
“தாராளமா மச்சான். அவங்களுக்கு பண்ண வேண்டிய சடங்குகளை எல்லாம் நீயே முன்ன நின்னு பண்ணு முருகா” என்றார் பாண்டியன்.
இதே சமயம். முல்லை ரோஜாவின் அறையில் அமர்ந்து இருந்தவளின் கண்களில் கண்ணீர் வந்த வண்ணமாகவே இருந்தது.
“முல்லை.“ என்று அவள் பெயரை அழைத்தப்படி மீனா உள்ளே நுழைந்தவள்.
“என்ன முல்லை. கவலையா இருக்கா” என்று உண்மையான அக்கறையில் விசாரித்தவள்.
“இருக்கும் தானே. உனக்கும் கதிர் மாமாவுக்கும் என்னைக்குமே ஒத்து போகாது. உன்னை கண்டாலே அவருக்கு ஆகாது. அவரை கண்டால் உனக்கு ஆகாது” என்று மீனா சொல்ல.
“என்னை தான் அவுகளுக்கு பிடிக்காது. ஆனா எனக்கு அவுகள தானே முதல்ல இருந்தே பிடிக்கும்” என்று சலிப்புடன் நினைத்துக்கொண்டாள்.
“என்ன முல்லை பண்ண சொல்ற. ரோஜாவுக்கு அருள் வந்து சொன்னது போல. நீ தான் இந்த ஜென்மத்துல கதிர் மாமாவோட பொஞ்சாதியா வாழணும்னு விதி இருக்கு” என்று மீனா சொல்ல.
“அந்த விதி தானே எனக்கு சதி பண்ணுது” என்று நொந்து கொண்டாள் முல்லை.
“ஆனாலும் முல்லை. என் நினைப்பை கதிர் மாமா அவர் மனசுல இருந்து தூக்கி போடுறது கொஞ்சம் கஷ்டம் தான்” என்று மீனா சொல்ல. முல்லைக்கு மேலும் இதயம் பாரமானது.
இருக்கும் தானே. எப்போதுமே மீனா பாடும் பாட்டு இது தான். அதற்கு ஏற்பது போல. கதிர் மனதில் முல்லை தான் இருக்கிறாள் என்பதை அறிந்திடாத மீனாவின் பேச்சை கேட்டு முல்லையின் கண்கள் மேலும் கலங்கி இருக்க.
“முல்லை அண்ணி.“ என்ற அழைப்போடு இவர்கள் அறைக்குள் நுழைந்தாள் ரோஜா.
முல்லையின் கலங்கிய விழிகளை பார்த்து. ஒரு வேளை ஜீவாவின் நினைப்பு இன்னும் அவள் மனதில் உள்ளதா என்று எண்ணிய ரோஜா.
“என்னாச்சு அண்ணி. ஏன் இப்போ அழறீங்க” என்று கேட்க.
“உன் கல்யாணத்துக்கு வந்த என் கழுத்துல தாலி ஏறி இருக்கு. அதுவும் மாமா சார் கட்டிய தாலி. எனக்கு. எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல” என்று முல்லை கண்கள் கலங்கினாள்.
“இதுல இனியும் சொல்ல என்ன இருக்கு அண்ணி. நீங்க தான் வாத்திக்குன்னு அந்த கடவுளே முடிவு பண்ணிருக்காரு. அதனால முடிந்த கதையை இனி பேசாமல். முதல்ல எழுந்து கிளம்புங்க.“ என்ற ரோஜா. தன் அறையில் இருந்த முல்லையின் பையை எடுக்க. அந்த பையில் இருந்த முல்லையின் கைக்குறிப்பு புத்தகம் சட்டென்று ரோஜாவின் காலில் வந்து விழுந்தது.
“என்ன அண்ணி. என்ன டைரி இது.“ என்ற ரோஜா. கீழே இருந்து கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்த வேகத்தில் முல்லை பட்டென்று அவள் வசம் பிடுங்கிக்கொண்டவள்.
“இது. இது என்னோடது தான்” என்று அவசர அவசரமாக அதை தன் பைக்குள் வைத்துக்கொண்டதும்.
அப்போது இருந்த சூழ்நிலையில் ரோஜா அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வில்லை.
“சரி அண்ணி. நீங்க சீக்கிரமா கிளம்புங்க. நான் போய் வாத்தியை அழைச்சிட்டு வரேன்” என்று ரோஜா சொல்ல.“எ. எங்க கிளம்ப சொல்லுற ரோஜா” என்று கேட்டாள் முல்லை.
“உங்க வீட்டுக்கு தான் கிளம்ப சொல்லுறேன் அண்ணி. முருகன் மாமா அப்பாகிட்ட கேட்டு உங்கள இன்னைக்கு நைட் உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக சம்மதம் வாங்கிட்டாரு” என்ற ரோஜா. தென்னை தோட்டதில் இருக்கும் நாகராஜனின் வீட்டுக்கு சென்றாள்.
இடம் நாகராஜனின் குடிசை.
“வேணாடா நாகா. கண்டிப்பா நீ என்கிட்ட அடி வாங்க போற” என்ற கதிர்வேலன் கோவமாக தன் நண்பனை அடிக்க கை ஓங்கியதும்.
“வாத்தி வாத்தி. என்ன பண்றீங்க. ஏன் அவரை அடிக்கிறீங்க” என்று கேட்டுக்கொண்டே வேகமாக நாகராஜனின் வீட்டுக்குள் நுழைந்தாள் ரோஜா.
“சின்னமா சின்னமா என்னை காப்பாத்துங்க” என்ற நாகராஜன் ரோஜாவின் பின்னே வந்து மறைத்துக்கொள்ள.“என்னாச்சு வாத்தி” என்று தன் அண்ணனை பார்த்து கேட்டாள் ரோஜா.
“இன்னும் என்ன ஆகணும் அம்மா. அதான் என் சம்மதம் இல்லாமலேயே இங்க என்ன என்னமோ நடந்தது முடிஞ்சி போச்சே” என்ற கதிரின் பேச்சைக் கேட்டு ரோஜா சிரிக்க.
“இப்போ ஏன் அம்மா சிரிக்கிறீங்க” என்று கேட்டான் கதிர்வேலன்.
“சிரிக்காம வேற என்ன பண்ண சொல்றிங்க. நீங்க விவரம் அறிந்ததில் இருந்து நீங்க விரும்பன பொண்ணே உங்க மனைவியாக அமைந்த பிறகும். இன்னும் ஏன் வாத்தி இப்படி கோவமா இருக்கீங்க. ம். நல்லா ஜாலியா உங்க மாமனார் வீட்டுக்கு கிளம்புங்க” என்றாள் ரோஜா.
“என்ன. மாமனார் வீட்டுக்கா. அந்த வெள்ள வேஷ்டிக்கூட எல்லாம் என்னால போக முடியாது” என்ற கதிரின் முன்னே சிரிப்புடன் ரோஜா நின்று இருக்க.
“என்ன சிரிப்பு.?” என்று வினாவினான் கதிர்.
“வாத்தி. உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. உங்களுக்கு முல்லை கூட கல்யாணம் நடந்தது சந்தோஷம் தானே” என்று ரோஜா கேட்க.
தன் தங்கையிடம் பொய் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான் கதிர்.
“சின்னமா. அதெல்லாம் என் நண்பன் ரொம்ப ஹாப்பியா தான் இருக்கான். என்ன ஒன்னு. இன்னைக்கு உங்களுக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்னு போனதால தான் கதிர் ரொம்ப கவலைப்படுறான்” என்று நாகராஜன் சொல்ல.
“அட. ஏன் நீங்க வேற நாகா. எனக்கு கல்யாணம் நடந்து இருந்தா. என் வாத்தி அந்த தனத்தை இல்ல கல்யாணம் பண்ணி இருக்கனும். அப்படி மட்டும் இவரு அந்த தனம் கழுத்துல தாலி கட்டி இருந்தா. நம்ம குடும்பத்தை அந்த தனம் ஆட்டி படைச்சு இருக்கும். அதனால தான் அந்த கடவுளே நம்ம வீட்டுக்கு முல்லையை மருமகளா வர வச்சிருக்காரு” என்று ரோஜா சொல்ல. கதிரோ. முல்லைக்கு விருப்பம் இல்லாமல் இந்த திருமணத்தை நடத்தியது உறுத்தலாகவே இருந்தது.
“என்ன வாத்தி இன்னும் என்ன தான் கவலை உங்களுக்கு” என்று ரோஜா கேட்க.
“இல்ல ம்மா. இந்த கல்யாணத்தை ஜீவா அண்ணன் எப்படி எடுத்துக்கப்போகுதுன்னு வேற தெரியல” என்றான் கதிர்.
“இதுல அவர் எடுத்துக்க என்ன இருக்கு. அவர் இப்ப மீனா அண்ணியோட கணவன். அவருக்கு இனி முல்லை தம்பி பொண்டாட்டி. இனி அவங்களுக்குள்ள அந்த உறவு முறை மட்டும் தான் இருக்கும். சும்மா நீங்களா எதையாவது நினைத்து உங்கள நீங்களே கஷ்டப்படுத்திக்காம. முதல்ல உங்க மாமனார் வீட்டுக்கு கிளம்புற வழியை பாருங்க” என்றாள் ரோஜா.
அன்றைய தினம் மதிய உணவை பாண்டியனின் இல்லத்தில் முடித்துக்கொண்டு. ஒரு வழியாக கதிர் மற்றும் முல்லையை முறைப்படி முருகன் சிவகங்கையில் இருக்கும் தன் இல்லத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார்.
இன்றைய தினம் முருகனின் வீட்டில் தங்கி இருந்து மறுநாள் அவர்கள் வீட்டில் விருந்தை முடித்துக்கொண்டு பாண்டியனின் இல்லத்திற்கு திரும்ப வேண்டும் என்ற வரைமுறையில் இவர்கள் முருகன் வீட்டை அடைய,
மாப்பிளை பெண்ணுக்கு பார்வதி ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
“உள்ள வாங்க மாப்புள. முல்லை. கோவில் ரூம்ல போய் விளக்கு ஏத்துமா” என்ற பார்வதி. இங்கேயும் பல சம்பர்த்தாயங்களை செய்ய சொல்ல. சில நிமிடங்கள் கடந்த நிலையில்.
“அம்மாடி முல்லை. மாப்பிளையை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ. அவர் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் “என்றார் முருகன்.
முருகனின் வார்த்தையைக்கேட்டு முல்லை முதலில் தன் அறைக்குள் செல்ல. அவளை பின் தொடர்ந்து சென்ற கதிர் நேரே சென்று அவள் கட்டிலில் அமர்ந்தவனை முல்லை முறைத்து பார்த்தாள்.
தன்னை தான் தன் மனையாளி இமைகள் மூடாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்று உணர்ந்தவன்.
“கதிரு. இவ முறைப்பே சரியில்ல. நம்மள இவ கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி. நம்ம இவளை கேள்வி கேக்கணும்” என்று கதிர் எண்ணியவன்.
“என்ன.? பொம்ம மாதிரி நிக்குற. எப்பவும் வாய் கிழிய பேசுவ. இப்போ என்ன வாயில கொழுக்கட்டையா வச்சி இருக்க” என்று கதிர் கேட்டதும்.
முல்லை கோபத்துடன் தன் அறையின் கதவை தாழிட்டவள்.
“உங்களுக்கு எங்காவது அறிவு இருக்கா” என்று கேட்டதும், கதிர் அதிர்ந்து போய் கட்டிலில் இருந்து எழுந்தான்.
“ஏய். என்னடி. திமிரா. யார பார்த்து அறிவு இருக்கான்னு கேக்குற” என்ற கதிர் கோவமாக அவளை நெருங்கியதும்.
“சும்மா கத்தாதீங்க. கோவில்ல அவ்வளவு பிரச்சனை நடக்குதே. ஏன். உங்க வாயை திறந்து இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைனு நீங்க முதல்ல சொல்ல வேண்டியது தானே, அதை விட்டுட்டு என் வாயில என்ன இருக்குனு கேக்குறீங்க. ஏன்.? அப்போ உங்க வாயில என்ன இருந்துச்சு?” என்று கண்கள் உருட்டி கோபத்துடன் கேட்டாள் முல்லை.
“ஏய் இரு இரு. நான் ஏன் சம்மதம் இல்லைனு சொல்லணும். ஏன் நீ சொல்ல வேண்டியது தானே” என்ற கதிரை உறுத்து பார்த்தவள்.
“நான் ஏன் சொல்லணும். அதான் ஏழு ஊருக்கு கேக்குற மாதிரி வேஷ்டியை தூக்கி, தோளை தூக்கி, புருவத்தை தூக்கி இப்படி எல்லாத்தையும் தூக்கிகிட்டு நீங்க தானே பத்து பக்கத்துக்கு வசனம் பேசுவீக. ஏன் ஏன். அன்னைக்கு கூட நீங்க தானே பாண்டியன் மாமாகிட்ட உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லைனு சொன்னிக, அதே மாதிரி இப்போவும் சொல்ல வேண்டியது தானே” என்ற முல்லை. அவன் பதிலுக்காக காத்து இருந்தாள்.
“அன்னைக்கு தான் நான் சொல்லிட்டேனே. இன்னைக்கு நீ சொல்ல வேண்டியது தானே. ஏன்?எங்கிட்ட மட்டும் தான் நீ வாய் பேசுவியா. ஆளை பார்த்தியா நல்லா ஜவுளிக்கடை பொம்மைக்கு புடவை சுத்துன மாதிரி” என்று கதிர் பல்லை கடிக்க.
“ஒ. என்னை பார்த்தா உங்களுக்கு பொம்ம மாதிரி இருக்கா. ஆமா ஆமா. என்னை பார்த்தா என்னைக்குமே உங்களுக்கு உயிர் இல்லாத ஜடம் போல தானே இருக்கும். என்னைக்குமே உங்களுக்கு என்னோட உணர்வு, என்னோட மனசு, என்னோட வலி இப்படி எதுவுமே உங்க மரமண்டைக்கு புரியாது தானே” என்றாள் முல்லை
“ஏய் இரு இரு, யாரை டி மரமண்டைன்னு சொல்லுற” என்று அவன் கேட்க.
“இங்க வேற யாரு இருக்காக. உங்கள தான் சொன்னேன்”என்றாள் அவள்.
“ஏய். என்னடி ரொம்ப வாய் பேசுற” என்று அவன் அவளை நெருங்க
“என் வாய், நான் பேசுறேன்” என்று பதிலுக்கு அவனை நெருங்கினாள் இவள்.
“ஆனா கேக்குறது என் காது” என்று கதிர் தன் காதை குடைந்துக்கொள்ள
“இப்போ என்ன? உங்க காதை கேக்காதப்படி ஆக்கணுமா” என்று அவன் காதின் அருகே வந்தாள் முல்லை.
“ஒ. நீ அதெல்லாம் பண்ணுவியா. உனக்கு அவ்ளோ தைரியம் இருக்கா” என்று தன் கைகாப்பை கதிர் சுற்றி இருக்க.
“இதுக்கு ஏன் தைரியம் தேவை. இப்போ சொல்லுங்க, உங்க காத கேக்க விடாம ஆக்கவா” என்றவள் தன் முந்தனையை எடுத்து இடுப்பில் சொருகிகொண்டாள்.
“ஆமா பெரிய இவ நீ. என் காதை கேக்க விடாம ஆக்க போற. போ போ. போய் வேலையை பாரு”
என்றவன் மீண்டும் அறையின் கதவை திறக்க எத்தணிக்க,
“இப்போ எங்க போறிக” என்று கேட்டாள் முல்லை.
“நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன். நீ சாப்பிட்டு படுத்து தூங்கு” என்றவன். மீண்டும் கதவை திறக்க போக.
“என்ன. தண்ணி அடிக்க போறிகளா” என்று முல்லை கேட்க.
“ஆமா. ஏன் வரியா” என்று கேட்டான் கதிர்.
கதிரை ஏகதுக்கும் முறைத்த முல்லை.
“ஹ்ம் ஹ்ம். நீங்க போகக்கூடாது” என்றதும்.
“அதெல்லாம் நீ சொல்லக்கூடாது” என்றவன். அவளை முறைத்து பார்த்த வண்ணம், கோவமாக அறைக்கதவை திறந்துக்கொண்டு முருகனின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்.
கதிர். கால் போன போக்கில் நடந்து செல்ல. வழியெல்லாம் சாராயக்கடை எங்கே என்று சிலரை விசாரிக்க. அவனுக்கு பதில் தந்த அனைவருமே. அவனை பார்த்து பதில் சொல்லாமல், அவன் பின்னே யாரையோ பார்த்து பதில் சொன்னார்கள்.
சில நிமிட நடையில். கதிர் சாராயக்கடையை கண்டுகொண்டவன். கடைக்குள் நுழையும் வேளை.
“பார்த்தியா பங்காளி. இப்போ எல்லாம் புருஷன் பொஞ்சாதின்னு ரெண்டு பேருமே குடியும் குடுத்தனுமா சாராயக் கடைக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க”. என்று ஒருவன் சொல்ல,
“எந்த மானம் கெட்டவன் மதுக்கடைக்கு மனைவியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கான்.?”
என்று வாய்விட்டு புலம்பியபடி கதிர் திரும்பிப் பார்க்க. கதிரின் விழிகளுக்கு முன்னே நின்றிருந்தாள் அவள்.