விடியல் காலை 5 மணி அளவில் பூசாரி கோவிலின் கதவை திறக்க.
கூடியிருக்கும் அனைவரின் கண்களுக்கு முன்னே கோவில் வாசலில் வந்து நின்றது சுந்தரேசனின் தம்பி ஸ்ரீனிவாசன் மட்டும் தான்.
தன் தம்பியை பார்த்ததும், “ஐயோ தம்பி.“ என்று சுந்தரேசன் கட்டி அணைக்க.“ரோஜா. ரோஜா எங்க.“ என்று கஸ்தூரி கேட்க.
“இதோ இங்க தான் இருக்கேன்” என்ற ரோஜாவை பார்த்து பாண்டியன் சிலையென உறைந்து போக. ஊர் மக்கள் அனைவரும் சுந்தரேசன் சொன்னது தான் உண்மை என்ற ரீதியில் அரசல் புரசலாக அவர்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள்.
“பார்த்திங்களா. நான் சொன்னது உண்மை தானே. இங்க பாருங்க. என் தம்பியும் இந்த பொண்ணும் தான் கோவில்ல ஒரு நாள் இரவு முழுதும் ஒண்ணா இருந்து இருக்காங்க” என்று சுந்தரேசன் சொல்ல.
“சரி சரி இந்த அசிங்கத்தை மேற்கொண்டு பேசி பெருசாகாமல் பேசாம இவங்க ரெண்டு பேருக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம்” என்றார் கஸ்தூரி.
சில நொடிகள் இவர்கள் பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ரோஜா, “நீங்க சொல்றதெல்லாம் சரிதான், ஆனா இந்த கோவில்ல நானும் இவனும் மட்டும் தனியா இல்ல. இன்னும் நீங்க எதிர் பார்க்காத ஆளுங்களும் என்கூட இருக்காங்க” என்று ரோஜா சொல்ல,
“வே. வேற யா?” என்று சுந்தரேசன் தன் கேள்வியை முடிக்கும் முன்னே. கோவிலுக்குள் இருந்து புயலை போல சீறி வந்த கதிர்வேலன் தன் வலது காலால் எத்தி ஸ்ரீனிவாசனின் மார்பில் ஒரு மிதி மிதித்த வேகத்தில் அவன் நாங்கடி தூரம் தள்ளி போய் விழுந்தான்.
ரோஜாவும் சீனிவாசனும் மட்டும்தான் கோவிலுக்குள் இருப்பார்கள் என்று எண்ணியிருந்த சுந்தரேசனுக்கு அங்கே கதிரை பார்த்ததும் கை கால்கள் நடுக்கம் எடுக்க. பாண்டியனுக்கோ. தன் மகளுடன் அவர் மகனை பார்த்ததும் உடலில் புது ரத்தம் சுறந்தது.
“ஐயோ ஐயோ. இப்படி தான் என் தம்பியை அடிச்சி அவங்க வீட்டு பொண்ணோட காதலை மறைக்கிறாங்க” என்று சுந்தரேசன் அனைவரின் முன்னே இன்னோரு நாடகத்தை அரங்கேற்ற.
“யோவ் நிறுத்து. என்ன நீ இவ்ளோ பொய் பேசுற. இப்படியெல்லாம் பொய் பேசினா சாமி கண்ணை குத்திடும்” என்ற முல்லையின் குரல் கேட்கும் திசையை கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க, முல்லையும் நாகராஜனும் கோவிலுக்குள் இருந்து வெளியே வந்தார்கள்.
“என்னப்பா இது.? கோவில்ல உன் தம்பியும் ரோஜாவும் மட்டும்தான் இருப்பாங்க, ரெண்டு பேரும் தான் காதலிக்கிறாங்கன்னு இவ்வளவு நேரம் அவ்வளவு கதை பேசின. ஆனா இப்ப என்ன உள்ள பாண்டியனோட குடும்பமே இருக்கும் போல. ஹ்ம் ஹ்ம் இது எதுவும் சரியா படலையே” என்றார் ஒரு பெரியவர் ஒருவர்.
“இல்ல இல்லைங்க. இதுல வேற என்னமோ தப்பு நடந்து இருக்கு.“ என்ற சுந்தரேசன் தன் தம்பியை முறைக்க.
“ஆமாடா தப்பு தான். இன்னோரு வீட்டு பொண்ணு மேல கை வச்ச உன் தம்பியை அன்னைக்கே அடிச்சி மண்டையை உடைக்காம விட்டேன் பாரு. அது என் தப்பு தான்” என்ற கதிர்வேலன் கோபத்துடன் ஸ்ரீனிவாசனை நாலு மிதி மிததித்த வேகத்தில்.
“டேய் என் தம்பியை அடிச்சே சாகடிக்க பிளான் பண்ணிட்டியா. ஒ. அவன் செத்துட்டா உன் தங்கச்சி என் தம்பியை காதலிச்சது உண்மை இல்லாம ஆகிடுமா. ஐயோ இந்த ஊருல எங்க பக்கம் பேச யாரும் இல்லையா” என்று சுந்தரேசன் பொய்யாக பேசிக்கொண்டு இருக்க. மீண்டும் கதிர்வேலன் ஸ்ரீனிவாசன்னின் மார்பில் மித்தித்து கொண்டு இருந்தான்.
கதிரின் கோவத்தை பார்த்து கடுப்பான தனம், “கதிர். இப்போ ஏன் அவரை அடிக்கிற. என்ன? அவர் சொல்லுற மாதிரி இவரை அடிச்சே சாகடிச்சிட்டு, உன் தங்கச்சியை நல்லவளாக்க ட்ரை பண்ணுறீயா, ச்சி. உன் தங்கச்சி நடத்தையை பற்றி விசாரிக்காம நாங்க உன் குடும்பத்துல பொண்ணு எடுக்க சம்மதிச்சதுக்கு எங்களை நாங்களே செருப்பால அடிச்சிக்கணும், டேய் தம்பி. யாருக்கு தெரியும். இந்த ரோஜா ஏற்கனவே இந்த ஆள் கூட ஒண்ணா சேர்ந்து குடும்பம்”
என்று தனம் தன் சொல்லை முடிக்கும் காட்டிலும். தனத்தின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்து இருந்தாள் முல்லை.
முல்லையின் செயலை கண்டு அனைவரும் அதிர்ந்து போக, “ரோஜாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்ன்னு பேசுறீங்க, கையும் களவுமா எல்லாத்துக்கும் காரணம் இவன் தான்னு நாங்க சொல்லியும் ரோஜாவை பற்றி ஏன் இப்படி கேவலமா பேசுறீங்க” என்று முல்லை கேட்க.
அத்தனை பேர் எதிரிலும் முல்லை தனத்தை அடித்தை தாங்கிக்கொள்ள முடியாமல்,
“ஏய். என் அக்காவையே அடிச்சிட்டியா. அப்படி என்ன என் அக்கா இல்லாததை சொல்லிட்டா.“என்ற ரவியின் கன்னத்தில் கதிர்வேலனும் அவன் பங்குக்கு ஒரு அறை விட்டவன்.
“அக்காளும் தம்பியும் மூடிக்கிட்டு ஓரமா போய் நின்னுடுங்க. நான் கொலை காண்டுல இருக்கேன்” என்று ஒற்றை விரலை நீட்டி கதிர்வேலன் தனத்தையும் ரவியையும் எச்சரிக்க.
“ஐயோ. கடவுளே. ஆளாளுக்கு என் மகளை அசிங்கப்படுத்தி பாக்கறாங்களே. கடவுளே. இதெல்லாம் பார்த்துகிட்டு நீ கல்லு மாதிரி உக்காந்து இருக்கியே. எனக்கு எப்ப தான் பா நீ நிம்மதியை தர போற.“ என்று பாண்டியன் கோவிலின் வலது புறத்தில் அமைந்துள்ள ஐயனாரை பார்த்து கைகள் கூப்பி கதறி வேண்டியவரின் வேண்டுதலுக்கு செவி சாய்து.
“டேய், …
யார் இடத்துல வந்து யாரை கலங்கம் பண்ண நினைக்குற…
இது என் கோட்டை டா, ,
நான் காவல் தெய்வமா இருக்குற இடம்…
என் சன்னதில வந்து.
என் அருள் வாக்கை குறி சொல்லும் பொண்ணு மேலயே நீ பழி சொல்லுவியா… சொல்லு டா பழி சொல்லுவியா, “ என்று ரோஜா கண்கள் உருட்டி அஃரோஷமாக கத்தியவள்… அங்கே மண்ணில் புதைத்து வைத்து இருந்த வெட்டு கத்தியை எடுத்துக்கொண்டு அருள் வந்த பெண்ணாக ஸ்ரீனிவாசனை நோக்கி ஓடியவள், தன் இடது கையால் அவன் சட்டையை பிடித்து வலது கையில் உள்ள அருவாவை வீசியப்படி,
“சொல்லுடா, என்ன திட்டத்தோடு நீங்க இதெல்லாம் பண்ணீங்க, சொல்லு டா, ம், “ என்று நாக்கை கடித்து ரோஜா அஃரோஷமாக கத்தியவளின் அவரதாரத்தை பார்த்து பயந்து போன ஸ்ரீனிவாசன். ஒன்று விடாமல் அவன் அண்ணன் செய்த அத்தனை கேவலத்தையும் சபைக்கு நடுவே சொன்னதும். அங்குள்ள அனைவரும் சுந்தரேசனின் முகத்தில் காரி உமிழாத குறையாக அவனை முறைத்தார்கள்.
“போதுமா. நான் தான் ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேனே. என் பொண்ணு ஒரு பாவமும் அறியாதவள்” என்ற பாண்டியணை ஆறுதலாக முருகன் தட்டி கொடுக்க,
“இவனை சும்மா விடாதிங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல பாண்டியன் பிள்ளைகளுக்கு நடக்க போற கல்யாணத்தை நிறுத்த தான் இந்த போலீஸ் க்காரன் இந்த மாதிரி கேவலமான விஷயத்தை எல்லாம் செய்து இருக்கான்” என்ற ஊர் மககள். சுந்தரேசனை குற்றம் சொல்ல.
“இரு டா. உன்னை என் கையாலேயே அடிச்சி சாகடிக்குறேன் பாரு” என்ற கதிர். சுந்தரேசனின் சட்டை காலரை பிடித்த வேகத்தில்
“தம்பி தம்பி வேணாபா. சட்டப்படி இவங்கள போலீஸ்லயே பிடிச்சு கொடுத்திடலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு கல்யாணம் நடக்க போகுது. இந்த மாதிரி நேரத்துல நீ இந்த பிரச்சனைகளில் தலவிடாத” என்று ஊர் மக்கள் சொன்னதோடு நில்லாமல். சுந்தரசனையும் ஸ்ரீனிவாசனையும் அடுத்த வாரத்தில் மீண்டும் பஞ்சாயத்திற்கு முன்பு வந்து நிற்க வேண்டும் என்று உத்தரவும்
பிறப்பித்தனர்.
ஒரு வழியாக தன் மகள் மீது விழுந்த பழிச்சொல் நீங்கினாலும், ஒரே இரவில் தன் மகளுக்கு ஏற்பட்ட அசம்பாவிதங்களை எண்ணி பாண்டியன் கண்ணீர் மழுக குழம்பிக் கொண்டு இருக்க,
“அண்ணா. அதான் ரோஜா மேல எந்த தப்பும் இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சே. இன்னும் ஒரு மணி நேரத்துல முகூர்த்தம். கதிரையும் ரோஜாவையும் குளிச்சிட்டு டிரஸ் மாத்தி கிளம்ப சொல்லுங்க, நம்ப நல்ல நேரத்துல திருமணத்தை முடிச்சு வச்சிடலாம்” என்றார் சரஸ்வதி.
“ஏங்க, என்ன நீங்க? கல்யாண பொண்ணுக்கு அருள் வந்து குறி சொல்லிக்கிட்டு இருக்கும் போது. கல்யாணம் அது இதுன்னு பேசிகிட்டு இருக்கீங்க, முதல்ல சாமிகிட்ட அருள் வாக்கு கேளுங்க” என்று பார்வதி சொல்ல.
அந்த நொடி வரை கையில் அருவாளுடன் ரோஜா ஆக்ரோஷமாக தான் நின்று இருந்தாள்.
“அய்யய்யோ. மறுபடியும் இவளுக்கு அருள் வந்துடுச்சா.? அப்போ இதுக்கெல்லாம் காரணம் நம்ம தான்னு தெரிஞ்சு நம்ம கழுத்துல ஒரு வெட்டு வெட்றதுக்குள்ள நம்ம போயி மறஞ்சுக்கணும்” என்று கஸ்தூரி தனக்குள் புலம்பியவள் ரோஜாவின் கண்ணில் படாமல் வேறு பக்கமாக மறைந்து நிற்க.
“அம்மா. என் குடும்பத்துல நிம்மதியே வராதா. என் பிள்ளைகளுக்கு என்னால நான் நினைத்த மாதிரி கல்யாணம் பண்ணி வைக்கவே முடியாதா” என்று பாண்டியன் கேட்டார்.
“டேய் முத்து பாண்டி. ஆசை படுவது மட்டும் தான் டா உன் பொறுப்பு, ஆனால் இன்னாருக்கு இன்னார் என்ற முடிவை நான் என்னைக்கோ எழுதி வச்சிட்டேன்”
என்று ரோஜாவிற்கு அருள் வந்து குறி சொல்லிக்கொண்டு இருக்கும் தருணம் ரோஜாவின் பார்வை அங்கே நின்றிருந்த கதிர்வேலன் மீது பதிந்து,
“டேய் கதிர்வேலா. உன்னிடம் நான் கொடுத்த மாங்கல்யம். இப்போ உரிய பொண்ணோட முந்தனையில் உறங்கிகொண்டு இருக்கு. போ. அவளை அழைச்சிட்டு போய் ரெண்டு பேரும் இதே கோவில் குளத்தில் முங்கி எழுந்து என் சன்னதியில் இப்போவே அவ கழுத்துல அந்த தாலியை கட்டு.“என்ற ரோஜாவின் அருள் வாக்கில் கூடி இருந்த அனைவரும் புரியாமல் விழித்து இருக்க.
“தனம், ரோஜாவிற்கு அருள் வந்து என்ன சொல்றா?? உன்கிட்ட ஏதாவது மாங்கல்யம் இருக்கா?” என்று சரஸ்வதி கேட்க
“எக்ஸ்க்யூஸ் மீ சரசு மேடம். சின்னம்மாக்கு அருள் வந்து சொன்னது உங்க பொண்ண பத்தி இல்ல” என்ற நாகராஜனை தனமும் ரவியும் முறைத்து பார்த்திருக்க. அதே சமயம்,
“அடேய் கதிர்வேலா. நான் சொல்றது உன் காதலு கேக்குதா இல்லையா. பாண்டியா, உன் வீட்டுக்கு மருமகளா வரப்போறவகிட்ட தான் நான் ஆசீர்வாதம் பண்ணி கொடுத்த மாங்கல்யம் இருக்கு, அந்த மாங்கல்யத்தை வாங்கிட்டு போய் உன் இளைய மகனை அவன் வருங்கால மனைவி கழுத்துல கட்ட சொல்லி என்கிட்ட ஆசீர்வாதம் வாங்க சொல்லு” என்று ரோஜா அருள் இறங்கி ஆக்ரோஷமாக குறி சொல்லிக்கொண்டு இருக்க,
முல்லை தன் முந்தனையில் இருந்த மாங்கல்யத்தை எண்ணி அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனவளை பார்த்து கதிர்வேலனும் உரைந்து போய் நின்று இருந்தான்.
“தாயி. நீ என்ன சொல்லுற. யார்கிட்ட அந்த மாங்கல்யம் இருக்கு.“ என்று பாண்டியன் கேட்க. ரோஜாவின் சிவந்த விழிகள் முல்லை மீது படிய.
“மாமா, ஏ, என்கிட்ட தான் மாமா சாரோட மாங்கல்யம் இருக்கு” என்ற முல்லை அவள் முந்தனையில் இருந்த தாலி கயிறை எடுத்து பாண்டியனின் முன்னே நீட்டியதும். அதை வெடுகென்று பிடுங்கிய ரோஜா.
கண்கள் மூடி அதை அவள் நெற்றி பொட்டில் வைத்தவள்.
“இந்த மாங்கல்யத்துக்கு சொந்தக்காரி முல்லை மட்டும் தான். கதிர்வேலனுக்கும் முல்லைக்கும் திருமணம் ஆகவேண்டும் என்பதுதான் விதி.
அந்த விதியை யாரும் சதி செய்து தடுக்க முடியாது” என்ற ரோஜா அவள் கையில் இருந்த மாங்கல்யத்தை கதிர்வேலனின் கரங்களைப் பிடித்து இழுத்து அவன் உள்ளங்கையில் வைத்து அழுத்தி கொடுக்க.
பாண்டியனின் கலங்கிய விழிகள் கதிர்வேலனையும் முல்லையையும் மாறி மாறி பார்த்திருக்க. ஏனோ அவர் மனதில் முல்லை மீண்டும் தன் வீட்டுக்கே மருமகளாக வரப்போகிறார் என்று மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது.
இருப்பினும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் நிகழ்வில் தான் தன் மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமையும் என்று எண்ணிய பாண்டியன் மேலும் வருத்தம் கொண்டவராக, “தாயி. அப்போ என் மகளுடைய கல்யாணம்.“ என்று கண்கள் கலங்கினார்.
ஒரு நொடி கண்கள் மூடிய ரோஜா. மீண்டும் சிவந்த விழிகளை மலர்ந்தவள்.
“உன் இளைய மருமகள் உன் வீட்டிற்கு வரும் நேரம் அவள் தொட்டதெல்லாம் பொன்னாய் மாறும். மண் கூட வைரமாய் ஜொலிக்கும். நீ எதுக்கும் இனி கவலைப்பட தேவையில்லை. உன் இளைய மருமகளின் வருகையால் உன் குடும்பம் வாழையடி வாழையாக தலைக்கப் போகிறது. உன் மகளுடைய திருமணத்தை உன் இளைய மகனே முன் நின்று நடத்தி வைப்பான். எல்லாத்துக்கும் காவல் தெய்வமா நான் இருக்கேன். இது என்னுடைய வாக்கு. என் வாக்கை மீறி எதையாவது செய்ய துணிந்தால் உன் குடும்பத்தில் துர்மரணம் நிகழும்” என்று எச்சரித்த ரோஜாவை அனைவரும் பார்த்து விழிகள் பிதுங்கி நின்று இருக்க,
“பாண்டியா. அந்த இறைவனே உன் பொண்ணு மேல இறங்கி குறி சொல்லும் போது, இன்னும் எதுக்காக தயங்குற.
உன் இளைய மகனுக்கு உன் தங்கச்சி மகள் தான் மனைவியாக வரவேண்டும் என்பது அந்த பாண்டி ஐயனாரின் சித்தம். போப்பா. போய் திருமணத்தை ஏற்பாடு பண்ணு” என்று அங்குள்ள முதியவர் ஒருவர் சொல்ல,
தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட பாண்டியன் நேராக முருகனின் எதிரே சென்றவர், “ மச்சான். என் சின்ன பையனுக்கு உன் பொண்ண கல்யாணம் பண்ணி குடுப்பியா? என் முல்லையை என் வீட்டுக்கே மருமகளா அனுப்பி வைப்பியா? என்று கேட்டார்.
கண்கள் கலங்கிய முருகன், “இந்த ஒரு வார்த்தைக்காக தான் மாமா நானும் காத்துக்கிட்டு இருந்தேன். நீங்க என் மகளை உங்க வீட்டு மருமகளா தாராளமா அழைச்சிட்டு போகலாம்” என்று இரு வீட்டார் சம்மதம் தெரிவிக்க. கதிரின் பார்வை முல்லை மீது விழுந்தது.
முல்லையோ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாத மனநிலையில் நின்றிருந்தாள்.
“என்ன இது. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாமுன்னு எங்களை வர சொல்லிட்டு. இப்போ உங்களுக்குள்ள சம்பந்தம் பேசி முடிச்சுகிறீர்களே. இதெல்லாம் நல்லாவா இருக்கு” என்று சரஸ்வதி சத்தம் போட்டார்.
சரஸ்வதியின் வார்த்தையை கேட்டு, “போதும் நிறுத்துங்க. எங்க வீட்டுப் பெண்ணை பற்றி வாய் கூசாம உங்க பையனும் பொண்ணும் பேசும்போது நீங்க கேட்டுக்கிட்டு தானே இருந்தீங்க. இதுக்கு மேலையும் உங்க பையனுக்கு எங்க வீட்டு பொண்ண கட்டிக் கொடுப்போம்ன்னு நீங்க நினைக்கிறீங்களா? தெய்வ வாக்குப்படி கதிர் மாமாவுக்கும் முல்லைக்கும் தான் திருமணம் நடக்கும். இந்த கல்யாணத்தை பார்க்க உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நின்னு பார்த்துட்டு போங்க. இல்லைனா இப்பவே கிளம்புங்க” என்று அந்த இடத்தில் மீனாவும் தன் விதியை உணர்ந்து கொண்டவளாக முல்லைக்கும் கதிர்வேலனுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று மனதார எண்ணினாள்.
பாண்டியனும் சரஸ்வதி முன்னே கையெடுத்து கும்பிட்டவர், “ஒரு நல்லது கெட்டதுல தான் சொந்த பந்தங்கள் கூட நிக்கணும். ஆனா என் பொண்ணுக்கு ஒரு பிரச்சனைன்னு வந்ததும் உங்க பொண்ணும் உங்க பையனும் என் பொண்ண பத்தி எவ்வளவு கேவலமா பேசிட்டாங்க. ஒருவேளை ரோஜாவுக்கு அருள் இறங்கி முல்லையை என் வீட்டுக்கு மருமகளாகிக்கொள்ள வாக்கு சொல்லாவிட்டாலும், உங்க பொண்ணை என் வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்க நான் சம்மதித்து இருக்கவே மாட்டேன்” என்று பாண்டியன் சொல்ல,
ரோஜா மீது தவறு இருக்க வாய்ப்பில்லை என்று அந்த நொடியில் தனமும் ராவியும் உணர்ந்து கொண்டாலும், அவர்களின் ஈகோ அவர்களின் கண்ணை மறைத்த நிலையில்,
“போதும். உங்க பொண்ண நீங்க யாருக்கு வேணா கட்டி குடுங்க. என் அக்காவுக்கு இந்த மாப்பிள்ளையை விட அழகா அறிவா ஒரு நல்ல பையனை பார்த்து கட்டி வைக்க எனக்கு தெரியும்” என்ற ரவி தன் அக்காவின் கையை பிடித்து அங்கிருந்து இழுத்துச் செல்ல.
சரஸ்வதிக்கு எப்படியாவது கதிருக்கு மாமியாராக வேண்டும் என்ற ஆசையில் மண்ணு விழுந்தது தான் மிச்சம்.
தன்னைச் சுற்றி இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன நடக்கிறது என்று புரியாத மனநிலையில் கதிரும் முல்லையும் நின்று இருக்க.
“அப்புறம் என்ன. சாமியே
அருள் வாக்கு சொல்லிடுது. பாண்டியா. முல்லையை உன் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போ. அவ காலடி எடுத்து வைத்த நேரம் உன் மகளுக்கும் நல்லபடியா திருமணம் நடக்கும்” என்று ஊர் பெரியவர்கள் சொல்ல.
இன்னும் ஒரே மணி நேரத்தில் முகூர்த்த நேரம் கூடி வர இருக்க, கதிருக்கும் முல்லைக்கும் திருமணம் ஏற்பாடு செய்த நிலையில்,
இந்த முறை கதிருக்கும் முல்லைக்கும் சம்மதம் இருக்கிறதா என்பதை அங்கு யாரும் கேட்காத பட்சத்தில்,
“சரி சரி. சாமி மலையேரட்டும்” என்ற பூசாரி. கற்பூரத்தை ஏற்றி ரோஜாவின் முன்னே காட்ட, அதுவரை ஆக்ரோஷமாக இருந்த ரோஜா, கற்பூரத்தை எடுத்து தன் நாவில் வைத்தபடி சாந்தம் அடைந்து மயங்கி கீழே சரிந்தவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான் நாகராஜன்.
ரோஜா மயக்கம் தெளிந்து எழுந்தவளை கை தாங்கலாக பார்வதியும் மீனாவும் தூக்கி அமர வைத்தனர்.
தனலட்சுமி உடன் கதிர்வேலனுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று எண்ணிய ரோஜாவிற்கு அந்த இறைவனே துணை இருக்க…
அவள் மீது பாண்டி அய்யனார் அருள் இறங்கி குறி சொன்னதை ரோஜாவிடம் மீனா எடுத்து சொல்ல.
ரோஜாவின் மனதில் எல்லையில்லாத மகிழ்ச்சி நிலவியது.
ரோஜா தன் முகத்தில் இருந்த வியர்வைத் துளிகளை துடைத்துக்கொண்டவள் வேகமாக எழுந்து கதிர்வேலன் மற்றும் முல்லையின் அருகே சென்று
“உங்க ரெண்டு பேருக்கு தான் அந்த கடவுள் கல்யாணத்தை பண்ணி வைப்பாருன்னு எனக்கு முன்னதாகவே தெரியும்” என்றவள்.
“அப்பா. நடப்பதெல்லாம் நன்மைக்கு தான். அதை மட்டும் நம்புவோம். எனக்கும் முல்லைக்கும் ஒரே அளவு ட்ரெஸ் தான். அதனால, எனக்கு எடுத்த கல்யாண புடவையை மாப்பிளை வீட்டு சார்புல நம்மளே முல்லைக்கு கொடுப்போம்.
மீனா அண்ணி. நீங்க நாகராஜன் கூட போயி கல்யாணத்துக்கு தேவையான எல்லா பொருளையும் கோவிலுக்கு எடுத்துட்டு வந்துடுங்க. அய்யனார் இறங்கி அருள் சொன்ன மாதிரி வாத்தியும் முல்லையும் கோவில் குழத்தில் முங்கி எழுந்து. அவங்க திருமணம் பாண்டி ஐயனார் அருளால் நல்லபடியா முடியட்டும்” என்றாள் ரோஜா.
அடுத்த ஒரு மணி நேரத்தில்,
ரோஜாவின் மேல் பாண்டி ஐயனார் இறங்கி அவர் சொன்ன வாக்கில் ஒரு எழுத்துக்கூட அச்சு பிசறாமல் கதிர்வேலன் முல்லையின் திருமணத்தை பாண்டியனும் முருகனும் முன் நின்று நல்லபடியாக நடத்தி வைக்க…
கடவுள் சன்னிதானத்தில் பெரியவர்களின் முன்னிலையில். திரு. கதிர்வேலன், பாண்டி ஐயனார் ஆசி பெற்ற மாங்கல்யத்தை முருகனின் மகள் முல்லையின் கழுத்தில் அணிவித்தார்.
கதிர் முல்லை இருவரின் ஜோடியை பார்த்து கூடி இருந்த அனைவரும் வாழ்த்து சொல்ல.
ஒரே மணி நேரத்தில் தன் வாழ்வில் நடந்த மாற்றத்தை எண்ணி புதுமன ஜோடிகள் உணர்வுகளுக்கு எல்லாம் அப்பார்ப்பட்ட மனநிலையில் தான் இருந்தார்கள்.
முல்லையின் கழுத்தில் கதிர்வேலன் மாங்கல்யத்தை அணிவிக்கும் நொடியில் கூட இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை என்று அவனும். இவனுக்கு விருப்பம் இல்லை என்று அவளும் தவறாக எண்ணி இருக்க,
கதிர்வேலன் முல்லையின் மனதில் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதலை இனி எங்கனம் உணர்ந்து, இருவரும் அவர்களின் இல்லற வாழ்க்கையில் நலம்பெற வாழப் போகிறார்களோ.
——————————————–
பல தடைகளை மீறி, ரோஜாவின் எண்ணம் போலவே கதிர்வேலன் முல்லையின் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
முன்னதாகவே ரோஜா, ரவி, கதிர், தனம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த உணவை முல்லைக் கதிர் கல்யாணம் முடிந்தவுடன் சொந்த பந்தங்களுக்கு வயிறார பந்தி பரிமாறப்பட்டது.
மணமக்கள் இருந்த சூழ்நிலையில் இவர்கள் மட்டும் உணவை உண்ணாமல் இருக்க.
“நல்ல நேரத்தில் மாப்பிளை பெண்ணை
வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்” என்ற பாண்டியனின் சொல்லை கேட்டு புதுமண ஜோடியை வீட்டுக்கு அழைத்து செல்ல. வழியெல்லாம் முல்லையும் கதிரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் தான் பயணித்தார்கள்.
அனைவரும் சில நிமிடங்களிலேயே பாண்டியனின் இல்லத்திற்கு வந்து சேர.
“ரோஜா. உன் அண்ணன் அண்ணிக்கு நீயே உன் கையால ஆரத்தி எடு” என்றார் பார்வதி.
“இருக்கட்டும் அத்த. இந்த வீட்டுக்கு மூத்த மருமக மீனா அண்ணி தானே. அவங்களே ஆரத்தி எடுக்கட்டும்” என்ற ரோஜாவின் மனதில் இனி கதிர்வேலனுக்கு முல்லை தான். முல்லைக்கு கதிர்வேலன் தான் என மீனா மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள்.
ரோஜாவின் எண்ணப்படியே மீனா அவள் கரங்களால் முல்லை கதிருக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அனுப்பி வைக்க.
சாமி அறையில் தன் பொற்க்கரங்களால் விளக்கை சுடர் விட செய்தாள் முல்லை.
“அம்மாடி முல்லை. இந்த வீட்டுக்கு நீ மருமகளா வரணும்னு உன் அம்மா ரொம்ப ஆசை பட்டா. அவ ஆசைப்படியே நீ உன் தாய் மாமன் வீட்டுக்கு மருமகளா வந்துட்ட. எனக்கு ரொம்ப சந்தோசம் தாயி” என்ற முருகனின் அருகே சிரித்த முகத்துடன் நின்று இருந்தார் பார்வதி.
“கதிர், முல்லை. மச்சான் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க” என்று பாண்டியன் சொன்னதும்.
திருமண ஜோடிகள் இருவரும் பார்வதி முருகன் காலில் விழுந்ததும், சட்டென்று பார்வதியின் விழிகள் ஈரமானது.
“என்ன அத்த. என்னாச்சு” என்று ரோஜா கேட்க,
தன் முந்தனையைக் கொண்டு அவர் கண்ணீரை துடைத்துக்கொண்ட பார்வதி. முல்லையின் நெற்றியில் இதழ் பதித்து.
“நீ நல்லா இருப்ப. நீ மாசில்லா வைரம். உன் அருமை புரியாம நான் உன்னை ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டேன். உனக்கு நான் பண்ண பாவம் தான் என் வயத்துல ஒரு குழந்தையை நான் சுமக்க குடுப்பணை இல்லாம போயிடுது” என்ற பார்வதியை கட்டி அணைத்து முல்லை கண்கள் கலங்க, கதிர்வேலனுக்கோ ஐயோ என்று கடுப்பாக இருந்தது.
“அத்த. பாவம் பண்ணவுங்களுக்கு எல்லாம் குழந்தை இருக்காதுனா. இந்த உலகத்துல 99%ஆளுங்களுக்கு பிள்ளையே பிறக்காது அத்த. இந்த ஜென்மத்துல உங்களுக்கு முல்லை அண்ணி தான் குழந்தையா இருக்கணும்னு விதி. அத புரிஞ்சிகிட்டு நீங்க இனி நிம்மதியா இருங்க” என்றாள் ரோஜா.
“மாமா. நீங்களும் பசங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று முருகன் சொன்னதும். பாண்டியனும் மனதார முல்லை கதிர்வேலனை ஆசிர்வாதம் செய்தவருக்கு. இனி எப்படி தன் மகளுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்ற கவலையும் இருக்கதான் செய்தது.
பெரியவர்களின் ஆசியை பெற்றுக்கொண்டு மணமக்கள் இருவரும் இறுக்கமான மனநிலையில் ஒன்றாக ஹாலில் அமர்ந்து இருக்க. அவர்கள் இருவருக்கும் பால் பழம் கொடுத்து சில சம்பர்த்தாயங்கள் செய்து முடித்தார்கள்.
“மீனா அண்ணி. எங்க கஸ்தூரி அத்தையை காணோம்.“ என்று ரோஜா கேட்க.
“முல்லைக்கு கல்யாணம் முடிந்த மகிழ்ச்சியில கஸ்தூரி நடந்தே பத்தியாத்திரை போய் இருப்பா” என்று சொல்லிக்கொண்டே மீனாவின் அப்பா ஜெகா உள்ளே நுழைய.
தன் தந்தையை பார்த்த மீனா முகத்தை திருப்பிக்கொண்டு சமையலறை புகுந்து இருந்தாள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெகாவை பார்த்த முருகன்.“என்ன சகல. உங்கள ரொம்ப நாளா பார்க்கவே முடியல. எங்க தான் போனீங்க” என்று முருகன் கேட்க.
“எதிர் பாராத விதமா என் பொண்ண ஜீவா மாப்பிளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததும். என்னால பாண்டியன் மாமா முகத்த பார்க்க தயக்கமா இருந்துச்சு. அதுவும் இல்லாம முல்லையும் என் பொண்ணு மாதிரி தான். அவ வாழ்க்கையில ஒரு நல்லது நடக்காம உங்க யாரையும் பார்க்க எனக்கு தைரியம் இல்ல சகல” என்ற ஜெகாவை பார்த்து பாண்டியன் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்.
தன் மீதும், மீனா மீதும் பாண்டியன் வருத்தத்தில் இருக்கிறார் என்று அறிந்து இருந்த ஜெகா.“கதிர் மாப்புள்ள. எப்படியோ என் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் குடும்பஸ்த்தனா ஆகிட்ட” என்ற ஜெகா கதிரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்க.
முல்லைக்கோ இங்கே நடக்கும் எந்த காரியமும் அவள் மனதிற்கு மகிழ்ச்சியை தரவில்லை என்பது தான் உண்மையாக இருந்தது.