Stories that touch hearts

Home  /  31. பிரபா அமுதன் (மழைச்சாரலாய் நீ! மருத நிலமாய் நான்!)  /  Chapter 10

CHAPTER 10

மழைச்சாரல் – 10

By Prabha Amuthan · October 19, 2026

0

அந்த இளைஞனை பார்த்த விஷ்வத், “அங்கிள் அங்க போகாதீங்க” என கூறினான்.

“ஏன்? என்னாச்சு?” என வருண் கேட்டான்.

“அவரு நம்மள பார்த்தா அடிப்பாரு”

“ஏன் அவர் நம்மள பார்த்தா அடிப்பாரு”

“நம்ம எந்த தப்புமே பண்ணாம இருந்தாலும் நம்மள அடிப்பாரு”என அந்த பிஞ்சு பயந்த விழிகளுடன் கூறியது.

“சரி   உனக்கு  எப்புடி  தெரியும். அவர் யாரு?”என வருண் கேட்க

“என்னோட அப்பா” என விஷ்வத் கூற அதிர்ச்சியானான் சூர்யா,

“உங்க அப்பாவா?” என  வருண் மீண்டும்  கேட்க

“ஆமா அங்கிள் அவர் என்னோட அப்பா தான் , ஆனா அவரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது”என கூறினான் விஷ்வத்,

அங்கு என்ன நடக்கிறது என வருண் பார்க்க  அந்த இளைஞன்,

“நீங்க எல்லாரும் ஊர விட்டு ஓடி வந்தால் நான் விட்டுவிடுவேனா?

அந்த—- எங்க?அவதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்,

அவளால என் வாழ்க்கையை சீர் அழிஞ்சிட்டு,பெத்த அம்மா நீ என்ன வெறுக்கிற, நான் பெத்த மகன் என்னைய பார்த்தாலே பயந்து ஓடுறான்,

இத்தனைக்கும் காரணம் அவ தான், அவ மட்டும்   என் கையில கிடைச்சா,

அவ வாழ்ற கடைசி நாள் அதுவாத்தான் இருக்கும் “ என  அவன்  பொரிந்து  தள்ள

“ஏண்டா இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க,எங்கள வாழவே விட மாட்டியா?

நாங்க உனக்கு என்னடா பாவம் பண்ணனுனோம்.எங்க போனாலும் எங்க நிம்மதியை, கெடுக்கிறதுக்குமே வந்து சேர்ர, உன்னை பெத்து பெரிய பாவம் பண்ணிட்டேன்.உனக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட சாபத்தையும் வாங்கி கட்டிக்கிட்டேன்.

மனோ, நீ ஒழுங்கா பிரச்சனை பண்ணாம போயிரு,இல்லைனா பெத்த மகன் கூட பார்க்காம போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுவேன்” என விஷ்வத்தின் பாட்டி கூறினார்.

“உன்னை இந்த அளவுக்கு பேச வச்சுட்டாளாமா அவ,பெத்த மகனை விட அவ தான் உனக்கு முக்கியமா?

நாளைக்கு திருப்பியும் வருவேன்,

ஒழுங்கா என் மகனை என்கிட்ட குடுக்க சொல்லிரு, போனதடவ ஒரே நைட்ல ஊர விட்டு ஓடிப்போன மாதிரி, இந்த தடவையும் ஓடிரலாம் மட்டும் நினைக்காதீங்க!

நீங்க எங்க போனாலும், எனக்கு வேண்டியத நீங்க கொடுக்காம இருக்கிற வரைக்கும், உங்கள விட மாட்டேன்” என கூறிக்கொண்டு போதையில் தள்ளாடி கீழே விழுந்து விழுந்து எழுந்து நடந்து போனான் மனோ.

மனோ சென்ற பிறகு, விஷ்வத் ஓடி சென்று தன் பாட்டியை கட்டிப்பிடித்தான்.

விஷ்வத்தின் பாட்டி  கண்ணில் கரை

புரண்ட நீரை  பேரனின் மிரண்ட விழியைப் பார்த்த பிறகு, தன் முந்தானையை எடுத்து துடைத்தார்.

வருண் அவர்கள் அருகே சென்று,

“அம்மா என்ன பிரச்சனை?” எனக் கேட்க,

“ஒண்ணுமில்லையா, என்னோட மகன் தான். கூடாத சேர்க்கையோடு சேர்ந்து  ,

என்ன பண்ணக்கூடாதோ, அதையெல்லாம் பண்ணிக்கிட்டு திரியிறான்.போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணனுனோ தெரியல ,

இவன் என் வயித்துல வந்து பொறந்துட்டான்”  என தன்னுடைய வருத்தப்பட்டு  கூறினார்.

தன் பக்கத்தில் இருந்த தன் பேரனை பார்த்து, “இவனுக்காகவும், இவ அம்மாவுக்காக தான்  எல்லாத்தையும் தாங்கிட்டு, இன்னும் இந்த உயிரை வச்சு வாழ்ந்து கிட்டு இருக்கேன்

இவங்க ரெண்டு பேரும் மட்டும் இல்லைனா, என்னைக்கோ நான் செத்துருப்பேன்,

நான் செத்த இடத்துல இந்நேரம் புல் முளைத்திருந்தால் கூட கேள்வி இல்ல” எனக் கூறிக்கொண்டே அழுதார்.

“அம்மா அழுகாதீங்க “ என வருண் சொல்ல

“விஷ்வத்தோட அம்மா வந்தா, இங்கே நடந்ததை எல்லாம் கேட்டா தாங்க மாட்டா.அவதான், வேலைக்கு போய், எங்களை எல்லாம் பாத்துட்டு இருக்கா,

அவ படுற கஷ்டத்தை எல்லாம் பார்க்கும் போது,என்னால ஒன்னும் பண்ண முடியலையேன்னு மனசு வலிக்கும்,

ஒரு அத்தையா, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்ச குடுக்கணும் நினைக்கிறேன்,

ஆனா என் வயித்துல பிறந்த இந்த படுபாவி, எங்க போனாலும் எங்கள நிம்மதியா வாழ விடமாடுக்கான்,

பெத்த புள்ளையே, அவன அப்பானு கூப்பிட மாட்டேன்னு சொல்லுறான் ,

இவன பெத்து, ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிச்சிட்டேன்” என கதறி கதறி அழுதார்,

பாட்டி அழுக, விஷ்வதும் அழுதான், வருணுக்கோ  தர்ம சங்கடமாய் போனது,

“அம்மா, நீங்க அழுதா உங்க பேரனும் அழுகிறான், கவலைப்படாதீங்க,

எல்லாம் சரியாயிடும்” என்று  கூறினான்.

‘ஒரு தாய், தன் மகனை தரம் தாழ்த்தி, வாழவந்த மருமகளை பெருமையா பேசுறாங்கனா, அந்தப் பொண்ணோட குணம் எப்படி இருக்கும்’ என்று அவன் சிந்தையில் தோன்றியது.

அது  மட்டும்  அல்ல,அவனுடைய மனதில், விஷ்வத்தின் அம்மா, என்ற பெண்ணின் மீது பெரிய மரியாதையை தோன்றியது.

அப்பெண்ணின், முகத்தை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வர, விஷ்வத்தின் பாட்டியிடம்,

“விஷ்வத்தின் அம்மா எப்போ வருவாங்க?” எனக்  கேட்க,

“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா?” என கூறினார்.

“நீங்களும் வருத்தமா இருக்கீங்க. உங்கள பாத்தால் விஷ்வத்தும் வருத்தப்படுவான். அதனால அவங்க அம்மா வரவரைக்கும்  விஷத்தை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போகவா?” என கேட்க”கூட்டிட்டு போங்கைய்யா”என கூறினார் விஸ்வத்தின் பாட்டி.

“விஷ்வத் வரியா?”

“ம், வாரேன்  அங்கிள்”என தலையாட்டினான் அந்தப் பிஞ்சு.

வருணும் விஷ்வத்தும் அங்கிருந்து அவர்களின் வீட்டிற்கு வர

“ஹாப்பி பர்த்டே   வருண் “என்ற ராகவின் குரல் கேட்டது.

“தேங்க்ஸ் டா மச்சான்” என சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய

வீட்டுக்குள் இருந்தவர்களை பார்த்து, அதிர்ச்சியில் நின்றான்  வருண்.

நின்றவர்கள் வேறாரும் அல்ல!

வருணின்  தாய்,தந்தையரும் வளர்ப்பு மகள் ரேணுவும் தான்.

“அம்மா அப்பா எப்ப வந்தீங்க “ என ஓடி வந்து அணைத்துக் கொண்டான். அவனை அணைத்து விட்டு அருகில் நின்ற  விஷ்வத்தை  பார்த்து”யார் இது” என கேட்க”எதிர் வீட்டு பையன்” எனக் கூறினான்  வருண்.

கொழு கொழு கன்னங்களுடன், அந்த மழலை மாறாத  சிறுவனை அங்கிருந்த அனைவருக்கும் பார்த்தவுடனே பிடித்து விட்டது.விஷ்வத்தின் அம்மா  அவனை தூக்கி வைத்து கொஞ்ச  தொடங்கி விட்டார்,

தன் மகனுக்கும் மகன் பிறந்திருந்தால்  இப்படித்தான் இருப்பான் என்று அவர் மனம் சொல்லியது.

சீக்கிரம், மகனுக்கு கல்யாணம் பண்ணி, வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் வருண்” என வருணின் அப்பா கூறிக்கொண்டே அவன் நெற்றியில் முத்தம் வைத்தார்.

“என்னைய  மன்னிச்சிடுங்க பா,

நீங்க கோபத்துல இருக்கீங்கன்னு எனக்கு தெரியும்.காலையிலேயே நீங்க எனக்கு வாழ்த்து சொல்லாம இருக்கவும் ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு,

இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் பா” என இறுக்கி அணைத்தான் வருண்.

அவர் கையில் வைத்திருந்த,

நகைப்பெட்டி ஒன்றை எடுத்து  வருணின் கையில் கொடுக்க  வருண்  வாங்கிக்  கொண்டான். பின்பு  வருண் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

வருணின் அம்மா ஒரு ஆடை ஒன்றை  கையில் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டான் வருண். ரேணுவும் தன் பங்குக்கு பரிசு பொருள் ஒன்றை கொடுத்தாள்.

“ தேங்க்ஸ் பட்டு! அம்மா அப்பாவ நீ கூட இருந்து பாத்துக்குறதால தான்  நான் நிம்மதியா இருக்கேன் “ என்று சொல்ல

“நம்ம அம்மா அப்பாவை நீயும் நானும் தான் பாத்துக்குறனும். நீ இங்கே இருக்கிறதால நான் பாத்துக்குறேன்” என்று புன்னகைத்தாள்.

பின்பு  வருணின் அம்மா பாயாசம் செய்து கொடுக்க அனைவரும் அதை சாப்பிட்டனர்.

“அன்னைக்கு அம்மாவும் நானும் உன் கிட்ட கோவமா பேசிட்டோம்.எங்களுக்கு மனசே கேட்கல,உன்னைய ஒரு தடவை வந்து பார்த்தோம்னா நல்லா இருக்கும்னு நெனச்சோம்.

அப்புறம் உன் பிறந்தநாளுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி  ராகவ் கிட்ட மட்டும் சொல்லி இருந்தோம். நல்லவேளை அவனும் உன்கிட்ட உளறி வைக்கல “என கூறினார் வருணின் தந்தை.

“ஓ… அம்மா அப்பா தான் நம்ம மேல கோவமா இருக்காங்க அதனால தான் பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லல இந்த ராகவ் ஏன் சொல்லலைன்னு ஆபீஸ்ல வச்சு நினைச்சேன். ஆனா உங்களோட கூட்டு களவாணியா அவன் இருந்திருக்கான் போல “ என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்தால் ராகவ் தலையில் தட்டினான் வருண்.

“வலிக்குது டா லூசு “ என்று வருணின் கைகளை தட்டி விட்டான். அனைவரும் பேசிக் கொண்டிருக்க  அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

வருண் தன் தந்தையின் மடியில் தலையை வைத்து ஊரில் நடந்த கதைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்.

விஷ்வத், இதையெல்லாம் பார்வையாளனாக பார்த்துக்கொண்டே  வருணின் அம்மா, ராகவ் மடியில்  மாறி மாறி அமர்ந்து கொண்டிருந்தான்.

“என்ன விஷ்வத்  வருண அப்படி பாக்குற?”

“எங்க அப்பா எல்லாம் என்கிட்ட இப்படி பேசினதே இல்ல அங்கிள்”என சொல்ல

அங்கே இருந்த அனைவரும் தடுமாறினர்,

“உங்க அப்பா எங்க?” என வருணின் அம்மா  கேட்க,

“அவங்க அப்பா, அவங்களோட இல்ல” என கூறினான் வருண்.

அந்த பிஞ்சு சொன்ன வார்த்தை  வருணின் இதயத்தில் ஒரு வலியை உண்டாக்கியது. உடனே

“உனக்கு அங்கிள் இருக்கேன்.

நீயும் நானும் இனிமேல் பிரண்ட்ஸ்,

உனக்கு உங்க அப்பா கிட்ட என்ன சொல்லணும் தோணுதோ அதை எல்லாம் என்கிட்ட சொல்லு” என வருண் சொல்ல

“நெஜமாவா?”என கண்கள் விரிய  கேட்டான் விஷ்வத்.

“ஆமா” என்று ராகவ் மடியில் இருந்த விஷ்வத்தை இழுத்து அணைத்து கட்டிப்பிடித்தான்   வருண். பதிலுக்கு விஷ்வத்தும் வருணைக் கட்டிப்பிடித்தான்.

“அங்கிள் அம்மா வீட்டுக்கு வந்து இருப்பாங்க,நான் போறேன்” என சொல்ல,

“உன்னைய நான் கூட்டிட்டு போறேன்” என கூறினான்  வருண்.

“நீ  இரு அம்மா அப்பா உன்னை பார்க்க வந்திருக்காங்க.நான் போய் அவங்க பாட்டி கிட்ட விட்டுட்டு வந்துடறேன்”என கூறிக்கொண்டே   விஷ்வத்தை அழைத்துச் சென்றான் ராகவ்.

விஷ்வத் சென்ற பிறகு விஷ்வத்தின் வீட்டில், மனோ சண்டை போட்டுக் கொண்டிருந்ததை  கூறினான். விஷ்வத்தின் அம்மாவை பற்றி விஷ்வத்தின் பாட்டி சொன்னதை வருண் சொல்ல  அங்கிருந்த அனைவருக்கும் சிந்துவின் மீது  பெரிய மரியாதையே ஏற்பட்டது. பின்னர் அனைவரும் இரவு உணவை உண்டு விட்டு மீண்டும் உரையாட தொடங்கிவிட்டனர்.

வருணின் தாயார் மெதுவாக திருமண விஷயத்தைப் பற்றி பேச,

“எனக்கு ஒரு பொண்ணு புடிச்சி இருக்குமா,அவங்க கிட்ட இன்னும் சொல்லல.சீக்கிரத்திலேயே சொல்லுவேன்.  அதுக்கப்புறம் கட்டாயம் கல்யாணம்தான் இன்னும் கொஞ்சம் பொறுமையா இருங்க “என சொல்ல அவருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை,

“அந்தப் பொண்ணு எங்க உள்ள பொண்ணு,நாங்க வேணா பொண்ணு கேட்டு போகவா?”என ஆர்வமாய் கேட்க,

“கொஞ்ச நாள் பொறு மா” என்று வெட்கத்தோடு புன்னகைத்தான்  வருண். 

மகனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, சீக்கிரத்தில் நல்லதே நடக்க வேண்டும் என தன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டார்.

வருணின் அம்மா நினைத்தது நடக்குமா?  சிந்துவின் கடந்த காலத்தைப் பற்றி வருண் அறிந்தால் என்ன செய்வான்? பார்ப்போம் அடுத்த அடுத்த அத்தியாயங்களில் !

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!