விடியற்காலை,, என்னதான் நகரத்தில் இருந்தாலும் எங்கேயாவது ஒரு மூலையில் பறவைகள் கூச்சலும், சேவலின் கூவளும் ஒலிக்காமல் இல்லை,,
வானத்தை கிழித்துக்கொண்டு கிழக்கில் கதிரவன் உதிக்கும் நேரம் நெருங்க நெருங்க விடியற் காலையில் கூட வானம் செவ்வானமாக காட்சி அளித்தது அந்த நேரம்,,
அந்த இயற்கையின் சூழல்,,,,
மெலிதாக திறந்து வைத்த ஜன்னலில் லேசான காற்று வந்து அவன் முகத்தில் பட்டது,
ஏனோ தெரியவில்லை அந்த ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு விடியற்காலையில் அவனுக்கு முழிப்பு வந்தது,
அதுவும் சில்லென்ற காற்றோடு,
எப்போ ஏசி ஆப் ஆனது,,, எப்போ ஜன்னல் கதவு திறந்தது என்று அவனுக்கு தெரியவில்லை,
ஆனால் அந்த ஜன்னலில் வரும் காற்று அவன் முகத்தில் பட்டவுடன் ஏதோ ஒரு அழகிய உணர்வு அவன் மனதில் தோன்ற,,, மெல்ல கண்களை திறந்து பார்த்தான்,
பார்த்து அவனுக்கு உதிக்கும் சூரியனும் தெரியவில்லை அந்தப் பொன்னிறமான வானமும் தெரியவில்லை,
இந்த பொன்னிறத்தின் ஒளியில் முகம் எல்லாம் மஞ்சள் பூசியது போல் ஜொலிக்கும் தன் அவள் தான் தெரிந்தாள்,
மஞ்சள் பூசிய நிலவு போல் அவள் முகம் வட்டமாக தெரிய,,
அதில் சிறிது நேரம் தன்னையும் மறந்து அவள் முகத்தை ரசிக்க ஆரம்பித்தான் நம் கதையின் நாயகன் ஈசன் ,
அப்பா எவ்ளோ அழகு, இந்த காலையில் சூரியன் தானே உதிக்கும் ஆனால் இங்கே சந்திரன் உதித்தது போல் அவள் முகம் இருக்க அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்,
இத்தனை நாளா அவள் வேறு மாதிரி தெரிந்தாள்,,,, தன் அக்கா மகள் அப்புறம் தன்னை எப்பொழுது மாமா மாமா என்று அழைக்கும் ஒரு அழகு குட்டி தேவதை அவ்வளவுதான்,
ஆனால் இன்று ஐந்து அடிக்கு மேல் வளர்ந்து அழகு பதுமை போல் படுத்திருந்த அவளின் முகத்தைப் பார்த்தால் நிலவும் கொஞ்சம் கோபப்படும் அவ்ளோ அழகு,
அவளையே சிறிது நேரம் தன்னையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவள் ஸ்டாபெரி இதழ்களையும் அவள் மான் போல் விழிகளையும் அவள் அழகான மென்மையான கன்னங்களையும்,,, கார்காலத்தில் தோன்றும் கார்மேகம் போல் படர்ந்து இருக்கும் அவள் கூந்தலையும் பார்த்துக் கொண்டே இவன் இருக்க,,
அந்த நேரம் ஆறு மணிக்கு உண்டான அலாரம் அவனது கைபேசியில் தான் ஒலித்தது,,,
அலாரம் ஒலிக்க மெல்ல அவன் பார்வை விலகி தன் கைபேசியில் பதிந்தது,
தன் கைபேசி எடுத்து பார்த்தான்,,ஏகப்பட்ட மெசேஜஸ் வந்திருந்தது,,
இவனுக்கு கல்யாணம் ஆனது என்று தெரிந்தவுடன் ஆபிஸில் வேலை செய்யும் முக்கியமான ஆட்கள், நண்பர்களும் உறவினர்களும் என்று அனைவரும் வாழ்த்து சொல்லி இருந்தனர்,
அதெல்லாம் பார்த்துவிட்டு அதற்கெல்லாம் ஒரு லைக் போட்டுவிட்டு திரும்பவும் தன் அவளின் பக்கம் அவன் பார்வை திரும்ப,
மெல்ல தன் கைகளைக் கொண்டு தன் மூக்கை துடைத்து பிறகு தன் தலையை சொரிந்து பிறகு தன் காதை தேய்த்துக் கொண்டு திரும்பிப் படு த்துக் கொண்டாள் துர்கா,,,
அவள் அவ்வாறு செய்ய கொஞ்சம் ஏமாற்றம் ஆனது பாவம் ஈசனுக்கு,,🌷
திரும்பி படுத்து கொண்ட அவள் முதுகை பார்த்து கொண்டே அவன் இருக்க,,,,, அந்த நேரம் அழைப்பு வந்தது இவனுக்குத்தான்,,
அழைப்பு வர எடுத்துப் பார்த்தான் அவனது நண்பன் ரகு தான்,,,
அந்த நம்பரை பார்த்தவுடன் முகம் மலர்ந்தவன் அழைப்பை எடுத்து,
சொல்லுடா என்று சொல்ல,
என்னடா போன் போட்ட உடனே எடுக்கற நீ தூங்கலையா, ஏன் ஏன் தூங்கல என்று கேட்க,
தெரியல தூக்கம் வரல சீக்கிரம் முழிப்பு வந்துடுச்சு எழுந்துட்டேன் என்றவன்,
சரி நீ என்ன இவ்வளவு காலையில் கூப்பிட்டு இருக்க என்ன விஷயம் என்று கேட்க,
அதெல்லாம் ஒரு விஷயமும் இல்ல என்று சொல்லிவிட்டு பிறகு,,,,,, ஒரு முக்கியமான விஷயம் தான் என்றான்,
என்னடா ஒன்னும் இல்லன்னு சொல்ற அதுக்கப்புறம் முக்கியமான விஷயம்னு சொல்ற என்ன மாத்தி மாத்தி பேசிட்டு இருக்க என்ன என்கிட்ட ஏதாவது கேக்கணுமா என்று ஈசன் கேட்க,
ஆமாண்டா உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு அது வீட்ல இருக்குறவங்களுக்கு எல்லாம் சந்தோஷம்,
அதனால என்றவன் அமைதியாக,
என்ன அதனால சொல்லு ஏதோ சொல்ல வந்துட்டு நீ அமைதியா இருந்தா,,, என் தலையை பிச்சிக்கிட்டு நான் அலைய வா சொல்றா என்ன விஷயம் என்றான் கொஞ்சமா அதட்டலாக ,
அது ஒன்னும் இல்லடா நீயும் துர்காவும் இன்னிக்கி எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும் என்றவன் ,
இத நான் சொல்லல டா உன் தங்கச்சி தான் சொன்ன, அதனாலதான் நான் காலைல உன்னை கூப்பிட்டேன் என்ன சொல்ற வருகிறாயா என்று கேட்க,
இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு அது தெரியுமில்ல, அங்க போயே ஆகணும்,
அதனால நான் வரல டா என் தங்கச்சி கிட்ட சொல்லிடு என்றவன் சொல்ல,
நீ இப்படி சொல்லுவேன்னு எனக்கு தெரியும்,
அதுக்கு தான் அவகிட்ட சொல்லிட்டேன் மதியம் காலையில அவன் வரமாட்டான் நைட்டுக்கு தான் வருவான் அதனால டின்னர் ரெடி பண்ணிடுன்னு சொல்லி இருக்கேன், அவளும் அதுக்கு ஓகேன்னு சொல்லிட்டா,,
நீ துர்காவை கூட்டிக்கிட்டு நைட்டு வந்தா போதும், அப்போ ஆஃபீஸ் இருக்காது இல்ல என்றவன் சொல்ல,
டேய் நீங்க எல்லாம் என்ன நினைச்சுட்டீங்க எனக்கு இப்பதான் இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைக்கிறீங்களா , 45 வயசு டா என்றான்,
ஆமாண்டா நான் மட்டும் என்ன உனக்கு 18 வயசு என்ற சொன்னேன், 45 வயசுல கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன என்றவன்,
இப்போ முடிஞ்சு போன கதையை பத்தி நான் பேச விரும்பல ஈசா,
நைட்டுக்கு வருவியா இல்லையா ரெண்டுத்துல ஏதாவது ஒரு பதில் சொல்லிடு நான் உன் தங்கச்சி கிட்ட சொல்லிடறேன் என்றவன் என்ன சொல்ல போற அதை சொல்லு மத்த கதை எல்லாம் வேண்டாம் என்றான்,,
அதற்கு சிறிது நேரம் யோசித்தான் என்ன சொல்றதுன்னு ஒன்னும் புரியல,
பிறகு தன் அவளைப் பார்த்தான்,
குழந்தையா குமரியா அவன் கண்களுக்கு இரண்டுமாய் அவள் காட்சி அளிக்க,
சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தான் ,
அவன் அமைதியாக இருக்க,,,
சரிடா அப்ப நீ வரலைன்னு நான் உன் தங்கச்சி கிட்ட சொல்லிவிடுகிறேன் என்றவன் அழைப்பை துண்டிக்கும் நேரம்,
ஒரு நிமிஷம் இருடா நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லலாமா என்றவன்,,,,
துர்கா இன்னும் தூங்கிட்டு இருக்கா, அவ கிட்ட கேக்காம நான் எப்படி டா உங்களுக்கு பதில் சொல்றது என்று கேட்க,,
அதைக் கேட்டவுடன் ரகுவின் முகத்தில் அவ்ளோ சிரிப்பு சந்தோஷம், இந்த வார்த்தை இன்னும் எத்தனை தடவை வேணும் என்றாலும் கேட்கலாம் என்று நினைத்தவன்,
என்னடா சொல்ற எனக்கு சரியா கேட்கல என்ன சொன்ன என்றான்,
இல்லடா துர்கா தூங்கிட்டு இருக்கா அவ கிட்ட கேட்காம நான் எப்படி அங்க வரேன்னு சொல்ல முடியும், அதனால அவ எழுந்த பிறகு அவ கிட்ட கேட்டுட்டு நான் சொல்றேனே என்றவன் சொல்ல,
அதைக் கேட்கும் போது ரகுவின் மனசில் அவ்ளோ சந்தோஷம்,, எத்தனையோ நாள் தனக்கான முடிவு தான் எடுக்க வேண்டும் எனக்குன்னு யாரு இருக்கா என்று சொல்லி கொஞ்சம் வருத்தப்பட்டு இருக்கிறான்,,,,,ஆனால் அவன் இப்போ தன் மனைவியிடம் கேட்டு முடிவை சொல்கிறேன் என்று சொன்னவுடன் அதைக் கேட்ட ரகுவுக்கு எல்லை இல்லா சந்தோசம் தான்,,,
சரிடா சரிடா இப்ப நல்லா கேட்டது சரி நீ துர்கா கிட்ட கேட்டுட்டு எனக்கு கூப்பிடு, இன்னிக்கி நாலு மணி வரைக்கும் டைம் டா அதுக்குள்ள அவகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு எனக்கு தகவல் சொல்லு, நாலு மணிக்கு ஸ்டார்ட் பண்ண தான் உன் தங்கச்சி நைட்டுக்கான சமையலை முடிப்பா என்றவன் நான் போன வைக்கிறேன் என்று அழைப்பை துண்டித்தான்,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்னங்க என்ன சொன்னாரு வர முடியாதுன்னு சொல்லிட்டாரா என்று வைதேகி ரகுவிடம் கேட்க,
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்றவன் சொல்ல,
அப்போ வரேன்னு சொல்லிட்டாரா அப்ப சமையலுக்கு ரெடி பண்ணவா என்று வைதேகி ஆர்வமாக கேட்க,
ஏய் எதுக்குடி இவ்வளவு அவசரப்படுற அவன் எந்த பதிலும் சொல்லல என்று ரகு சொல்ல,,
அவர் எந்த பதிலும் சொல்லலைன்னா அப்ப வரமாட்டார் என்று தானே அர்த்தம், அதுக்கு நீங்க அவர் வரலைன்னு சொல்லிட்டாருன்னு சொல்லி இருந்தா சரியா இருந்திருக்கும் இல்ல,,,,
அதுக்கு எதுக்கு இப்படி இழுத்துட்டு கிடக்கணும் என்றவள் போய் காப்பியை போட,
ஏய் வைதேகி அவன் வரேன்னு சொல்லி இருந்தா கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் இருந்து இருக்காது டி ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமா என்று ரகு சொல்ல,,
அப்படி என்னதாங்க சொன்னாரு சொன்னாதானே எனக்கு தெரியும் என்றவள் சொல்லிக்கொண்டே காபியில் சர்க்கரை கலந்தாள்,,
முதல்ல காபி எடுத்துட்டு வா சூடா காபி குடிச்சுக்கிட்டு ஒரு சுவையான செய்தி சொல்றேன் என்றான்,
ஐயோ நீங்க இருக்கீங்களே என்றவள்,,, உங்ககிட்ட ஒரு விஷயம் வாங்க முடியாது சட்டுனு என்றவள் காப்பி ஊத்தி எடுத்துட்டு வந்து ரகு கையில் கொடுத்துவிட்டு இருங்க காப்பிய அஜய்க்கு கொடுத்துட்டு வரேன் என்று சொன்னவள் வேகமாக அஜய் ரூமுக்கு சென்றாள்,
போனவள் தன் மகனுக்கு காபி கொடுத்து விட்டு வந்து திரும்பவும் தன் அவன் பக்கத்தில் அமர்ந்து,
என்ன சுவையான செய்தி சொல்லுங்க என்றாள்,,
அதற்கு அவன்,,,,அதுவா,
ஈசன் கிட்ட நைட்டுக்கு துர்காவை கூட்டிக்கிட்டு டின்னருக்கு வந்துடுடா உனக்கு விருந்து ஏற்பாடு பண்றாள் வைதேகி அப்படின்னு சொன்னேன்,,,
அதற்கு அவன்,
நான் மட்டும் எப்படி இதுல முடிவெடுத்து சொல்ல முடியும் துர்கா கிட்டயும் கேட்டுட்டு அவளுக்கு வர விருப்பம் இருந்தா அவளையும் கூட்டிட்டு வரேன்,,, அவ பர்மிஷன் கண்டிப்பா வேணும்,,,,
இதுல தனியா நான் என்ன முடிவெடுக்கிறது அப்படின்னு சொல்லிட்டாண்டி என்றான்,
அதைக் கேட்டவுடன் வைதேகியின் முகமும் மலர,
சத்தியமாக இந்த வார்த்தையை அண்ணன சொல்லுச்சு, ரொம்ப ஆச்சரியமா இருக்குங்க,,,,, இல்ல நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல,
அப்போ பொண்டாட்டி கிட்ட கேட்டுட்டு தான் இனிமே எந்த முடிவும் எடுப்பாரு போல இருக்கே என்று சொல்லிக் கொண்டே,, இது ரொம்ப சந்தோஷமான விஷயங்க இதுக்காகவே உங்களுக்கு புடிச்ச சமையல் நான் செய்ய போறேன் என்றவள் எழுந்து சமையலறைக்குள் சென்றாள் வைதேகி,,
தொடரும்😍