Stories that touch hearts

Home  /  39. யுவஸ்ரீ (மலர்மாலை மயங்கியது மன்னவன் மார்பில்)  /  Chapter 5

CHAPTER 5

மலர்மாலை – 5

By Yuva Sri · October 14, 2026

0

துர்கா பால் சொம்புடன் உள்ளே வந்து கதவை சாத்தி லாக் பண்ணி விட்டு திரும்ப,,

திரும்பியவள் பார்த்தது ரொம்ப கோவமாக அமர்ந்துக் கொண்டிருந்த ஈசனை தான்,,

அவனைப் பார்த்து விட்டு மெல்லமாக நடந்து வந்து அவன் பக்கத்தில் நின்றவள்,

மாமா என்று அழைக்க,

அவள் குரல் கேட்டவுடன்,,,,, அவள் தன்னை மாமா என்று அழைத்தவுடன் மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான்,

அவன் கண்களில் கோபம் இருந்தது,, ஆதங்கம் இருந்தது, ஏன் இப்படி பண்ண என்ற கேள்வியும் இருந்தது ஆனால் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை திரும்பவும் தலை கீழே குனிந்து கொண்டான்,

அவன் அவ்வாறு இருக்க,,,,

அவனது மனதும் அவனது இந்த சூழ்நிலையும் அவள் புரிந்து கொண்டாள்,

புரிந்து கொண்டவள் மெல்ல தன் கையில் இருந்த பாலை எடுத்துட்டு போய் மேஜையில் வைத்து விட்டு,

திரும்பவும் அவன் பக்கத்தில் வந்து நின்று அவன் காலில் விழுந்தாள்,

மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று,

அவள் தன் காலில் விழ பட்டென்று எழுந்து நின்றவன்,

உன்னை நான் ஆசீர்வாதம் பண்ணியிருப்பேன் எப்ப தெரியுமா, உனக்குன்னு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து நீ அவரை கல்யாணம் பண்ணிட்டு வந்து என் முன்னாடி நின்னு இருந்தா,

அப்போ நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் அப்படின்னு நான் வாழ்த்தி  இருப்பேன்,

ஆனா நீ இப்போ அப்படி இல்லையே 45 வயசு கிழவனை  கல்யாணம் பண்ணி இருக்க இதுக்கப்புறம் உன் லைஃப் எப்படி இருக்கும் துர்கா நான் என்ன சொல்லி உன்னை வாழ்த்துவது,

உனக்கு 23 வயசு தான் இன்னும் நீ ஐம்பது வருஷம் வாழ்வ,

ஆனா நான் இன்னும் 20 வருஷம் கூட இருக்கிறது பெரிய விஷயம், என்ன கல்யாணம் பண்ணிட்டு நீ என்ன சாதிக்க போற,,, ஏன் இந்த முடிவு எடுத்த,

என்னால சத்தியமா ஏத்துக்க முடியல துர்கா,

இங்க பாரு இப்ப கூட ஒன்னு கெட்டு போகல ப்ளீஸ் என்ன புருஷனா நினைக்கிறது விட ஒரு தாய் மாமனா நினைச்சு என்னை விட்டு விலகிடுமா,

அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது,,,,

உன் வயசுக்கேத்த மாதிரி ஒரு 24 25 வயசு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழுடா உனக்கு அது தாண்டா கரெக்டா இருக்கும்,

நான் வயசானவன் மா  உங்க அம்மா வ விட நாலு  வயசு தான் சின்னவன்,,என்ன போய் கல்யாணம் பண்ணி இருக்கா என்னடா நீ என்றான்,

அதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள் இன்னமும் தரையில் தான் கிடந்தாள் அவன் ஆசீர்வாதத்துக்காக,

மாமா எது பேசறதா இருந்தாலும் என்ன ஆசீர்வாதம் பண்ணிட்டு பேசுறீங்களா எவ்வளவு நேரம் நான் தரையில் இருக்கிறது என்றாள்,

அவள் அப்படி சொல்ல,

கண்களை மூடி திறந்தவன்,,, என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க முதல்ல நீ எழுந்துடு என்று அவன் சொல்ல,

என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா என்றாள்,

துர்கா என்னடா ஆச்சு  ஏன் இப்படி  இருக்க நான் பேசறது உனக்கு புரியுதா இல்லையா நான் என்னன்னு சொல்லி உன்ன ஆசிர்வாதம் பண்றது,

நல்லா இருன்னு சொல்லுங்க உங்க கூட நூறு வருஷம் வாழனும் அப்படின்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணுங்க,, தீர்க்க சுமங்கலயா இருக்கணும் அப்படின்னு சொல்லுங்க,, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்வ அப்படின்னு சொல்லுங்க இன்னும் ஒரு வருஷத்துல அழகான ஒரு குழந்தை பெத்துக்கிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லுங்க வாழ்த்துவதற்கு   உங்களுக்கு வார்த்தைய இல்லை என்றவள் இன்னமும் கீழே இருக்க,,

அவள் அப்படி சொன்னவுடன் இவளிடம் என்ன பேசி புரிய வைப்பது கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இருக்கா குழந்தையா இருக்கா மெச்சூரிட்டி இல்ல,

அப்படி இருந்தா இப்படி நடந்துக்கிட்டு இருப்பாளா,,,,

வயசு தான் இவளுக்கு 23 ஆனால் இன்னுமும் அந்த பத்து வயசு குழந்தை புத்தி அப்படியே இருக்கு என்று நினைத்தவன்,

சரி நல்லா இரு எழுந்திடு முதல்ல என்றான்,,

அவன் அப்படி சொன்னவுடன் மெல்லமாக எழுந்து நின்றவள்,

மாமா நீங்க இவ்ளோ நேரம் பேசினதெல்லாம் நான் கேட்டேன்,

உங்க மனசும் சரி உங்க மூளையும்  சரி இப்போதைக்கு டிஸ்டர்பா இருக்கு,

இப்ப நான் அதுல எதுவுமே சொல்லி புரிய வைக்க முடியாது,

அதனால எதுவா இருந்தாலும் உங்க கோபம் கொஞ்சம் தனியட்டும், என் மேல இருக்கிற வருத்தமெல்லாம் போகட்டும் அதுக்கப்புறம் நான் உங்க கிட்ட நிறைய பேசணும் மாமா என்றாள்,

இங்க பாரு துர்கா எனக்கு உன் மேல இருக்கிற வருத்தம் போகணும் என்றால்,

என் வாழ்க்கை விட்டு நீ விலகி உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கணும்,

அப்படின்னா தான் எனக்கு இப்ப இருக்குற கோவம் அடங்கும் உன் மேல இருக்குற கஷ்டமும் நீங்கும்,

இல்ல அதெல்லாம் நான் பண்ண மாட்டேன் நீங்க தான் என் புருஷன் இப்படி எல்லாம் டயலாக் பேசிட்டு இருந்தா சத்தியமா உன் மேல இருக்கிற வருத்தமும் கோபமும் எனக்கு போகாது துர்கா அத நீ நல்லா புரிஞ்சுக்க என்றான்,,

என்ன மாமா பேசுறீங்க நீங்க தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி நான் என்கிட்ட வந்து இன்னொரு வாழ்க்கையை பத்தி பேசுறீங்க இன்னொருத்தர்  கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி பேசுறீங்க, ப்ளீஸ் மாமா இப்ப எது பேசினாலும் பிரச்சனையில தான் முடியும்,

உங்க கோபம் இப்படியே இருக்காது நாளையில் நாளை மறுநாள் உங்க கோபம் கொஞ்சம் குறையும் அப்ப நான் என்ன பத்தின நியாயத்தை சொல்லி புரிய வைக்கிறேன்,

அதனால மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம எடுத்துட்டு வந்த பால குடிச்சிட்டு அமைதியா படுத்து தூங்குங்க, தூங்கி எழுந்தா எல்லாமே சரியாகும் என்றாள்,

அவள் அப்படி சொல்ல அவளை பார்த்தவன்,

உனக்கு இது இயல்பான வாழ்க்கைன்னு நினைச்சியா, உன் வயசு பொண்ணுங்களுக்கு ஆயிரம் கனவிருக்கும் அந்த மாதிரி கனவு உனக்கு இல்லையா,

உன்ன மாதிரி பொண்ணுங்க தனக்கு வர புருஷன் இந்த நடிகர் மாதிரி இருக்கணும் அந்த நடிகர் மாதிரி இருக்கணும் ஸ்மார்ட்டா இருக்கணும் அழகா இருக்கணும் கியூட்டா இருக்கணும் அப்படித்தானே ஆசைப்படுவாங்க,

நீயும் காலேஜ் போயிருக்க அங்க எவ்வளவு அழகான இளைஞர்களை சந்தித்து இருப்பே,

அப்பல்லாம் உனக்கு யார் மேலயும் ஈர்ப்பு கூட வரலையா துர்கா  என்றவன்,

இப்படி என்கிட்ட சாதாரணமா பேசிட்டு இருக்க உன் வாழ்க்கையை பத்தி உனக்கு கவலை இல்லையா ஒரு கிழவனை கல்யாணம் பண்ணிக்கட்டுமே இனிமே நம்ம என்ன பண்ணப் போறோம் இவன கூட்டிக்கிட்டு தான் எல்லா இடத்துக்கு போகணும்,,

அப்போ எல்லோரும் நம்மளை என்ன நினைப்பாங்க என்று கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்க மாட்டியா, நீயே சொல்லு உன் கூட உன் புருஷனா நான் எங்கேயாவது வர முடியுமா,

தலையில் இருக்கிற பாதி முடி  நரைச்சு போச்சுடா எனக்கு என்றான்,

ஐயோ மாமா நீங்க ஏன் இப்படி பேசிட்டு இருக்கீங்க எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆக்குறீங்க ப்ளீஸ் உங்களுக்கு நிறைய கோவம் இருக்கு எனக்கு தெரியுது ஆனா நீங்க இப்படி பேசுறதுனால என் மனசு மாறப்போறது கிடையாது,

எங்க அம்மா,,, நான் சின்ன வயசா இருக்கும் பொழுது புருஷனை இழந்தவங்க,, சொல்லப்போனா எனக்கு சின்ன வயசு அப்படின்றதைவிட அவங்களுக்கு சின்ன வயசு,

அந்த வயசுல புருஷனை இழந்துட்டு கூட திரும்பவும் ஒரு கல்யாணம் பண்ணிக்காம என்ன வளர்க்கறதுல அவங்க கவனத்தை செலுத்தினாங்க அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையா ஏற்படுத்திக்கல,,

இப்ப வரைக்கும் எனக்காக வாழ்ந்துட்டு இருக்காங்க அவங்களோட பொண்ணு நான்,

நானும் அப்படித்தான் இருப்பேன், எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இனிமே என் புருஷன் தான், அந்த புருஷன் நீங்கதான்,

என் மனச இப்படி எமோஷனலா பேசி மாத்தணும்னு மட்டும் நினைக்காதீங்க மாமா,

இதோ நான் ஸ்கூல் படிக்கிறதுல இருந்து காலேஜ் முடிச்சு எனக்குன்னு ஒரு மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் ஏற்பாடு பண்ணங்க அந்த மணமேடைல உட்கார வரைக்கும் என் மனசுக்குள்ள யாருமே இல்ல,

கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு தான் அந்த மாப்பிள்ளையையே என் மனசுக்குள்ள ஏத்தணும் அப்படின்னு என்பதற்காக நான் அந்த மாப்பிள்ளை கூட சரியா கவனிக்கல அவன் கிட்ட கூட சரியா பேசல,

அவனுக்கு என்ன பிடிக்காம போயிடுச்சு அதுக்கு காரணம் நீங்களா போயிட்டீங்க அதனால இப்படி ஒரு கல்யாணம் நடந்தது இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்கிட்டேன் நீங்களும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்,

உங்க வாழ்க்கையிலிருந்து என்னை ஒதுக்க நினைச்சீங்கன்னா நான் ஒரேடியா போய் சேர்ந்துடுவேன் என்றவள் நொடி கூட தாமதிக்காமல் அங்கு இருந்த பாலை எடுத்து மொத்தமாக  குடித்தவள்,

குட் நைட் மாமா, உங்க மனசு கொஞ்சமாவது மாறி இருக்கும் அப்படின்னு தான் இந்த அலங்காரம் பண்ணிட்டு வந்தேன்,,,

ஆனா இங்க வந்து நீங்க என்ன சரிய கூட பார்க்கல்ல நான் எவ்வளவு அழகா இருக்கேன் தெரியுமா,,, அது  உங்க கண்ணுக்கு தெரியலல்ல,

ஆன  நீங்க என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியிறீங்க மாமா ,

இந்த கோபம் எனக்கு அழகா தெரியுது, நீங்க உணர்ச்சி வசப்படும் போதும் ரொம்ப அழகா இருக்கீங்க, அப்புறம் என்னங்க சொன்னிங்க முடி பாதிக்கு மேல  நரிச்சு போச்சு அப்படின்னு,

எனக்கு அது கூட அழகா தான் தெரியுது சால்ட் அண்ட் பெப்பர் என்றவள் எதுவுமே பேசாமல் போய் மெத்தையில் படுத்து கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்,

அவள் அவ்வாறு  பேசிவிட்டு படுத்துக்கொள்ள, அவளைப் பார்த்தான்,

ரொம்ப அழகாக இருந்தாள்,

ஒல்லியான தேகம் பால் போல் நிறம் சிவந்த இதழ்கள் மீன் விழிகள் நீண்ட கார்குழல் அதில் மல்லிகை பூச்சரம்,,,,இந்த மேக்கப் வேற இன்னும் அவளை அழகாக காட்டியது,,

அவளைக் கீழே இருந்து மேல் வரைக்கும் பார்த்தான் ரொம்ப ரொம்ப அழகாக ஓவியம் போல் இருந்தாள்,

ஓவியம் போல் இருந்தவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை சில நொடிகள் தன்னையும் மறந்து அவளை ரசித்தவனுக்கு,,, சட்டுன்னு ஏதோ   ஞாபகம் வர அப்படியே திரும்பிக் கொண்டான், திரும்பிக் கொண்டவன் திரும்பவும் அவளை பார்க்க,

இப்போவும் அவள் அழகு என்ன குறைந்த இருக்கிறது இல்லையே அதைவிட அழகாக தெரிந்தாள்,

அவள் அழகாக தெரிய திரும்பவும் திரும்பிக் கொண்டவன் அப்படியே அங்க இருக்கும் சோபாவில் அமர்ந்து மெல்ல சாய்ந்து கண்களை மூடினான் ஈசன்,🤗

தொடரும்,

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!