அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிறையை ஆம்புலன்ஸில் ஏற்றிய சுந்தர், அவனும் அதில் ஏறி அமர்ந்து அவளுடைய கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.
பிறை… கண்ணைத் திறடி! ப்ளீஸ்… என்கிட்ட பேசுடி! என்றவனது குரல் தழுதழுத்தது.
ஆனாலும், பிறையிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
அவளுடைய நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவளைக் கோபத்தில் தள்ளிவிட்டது நினைவுக்கு வர தன்னுடைய கைகளைப் பார்த்து முகத்தில் அடித்துக்கொண்டு அழுதான்.
டிரைவர் அவனின் அழுகுரல் கேட்டு, அருகில் இருந்தவனிடம், போதைல போட்டு அடிச்சு விடுறது அப்புறம் அய்யோ அம்மானு கத்த வேண்டியது ஏன்டா இவர்கள் எல்லாம் இப்படி குடிக்கிறானுங்க? அந்த மதுவில் அப்படி என்ன தான் டா இருக்கு? பொண்டாட்டி பிள்ளைகளுக்காக அதை விட்டொழிந்தாதான் என்ன என்று கேட்க…
அதெல்லாம் நமக்கு எதுக்குனா… நீங்க ரோட்ட பார்த்து வண்டி ஓட்டுங்க என்றான் அவருடன் இருந்தவன்.
தன் கைகளையும் பிறையையும் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் அவனையே கேள்வி கேட்டது.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்ததும், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் பிறையை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அவளை உள்ளே அழைத்துச் சென்றபோது, சுந்தரும் பின்னால் செல்ல முயன்றான்.
சார், நீங்க வெளியே இருங்க. நாங்க பார்த்துக்கிறோம். என்று செவிலியர் ஒருவர் அவனைத் தடுத்து நிறுத்தினார்.
எமர்ஜென்சி வாடின் கதவு மூடப்பட…
அதுவரை பிறையின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த சுந்தர், வெறுங்கையுடன் கதவுக்கு வெளியில் நின்றான்.
அவன் மனம் வெறுமையை தத்தெடுத்திருந்தது . இவள் இல்லாமல் இனி தான் எப்படி என்ற கேள்வி அவனை தனிமையில் விளிம்பிற்கு அழைத்துச் சென்றது. அவள் எத்தனை முறை தன்னிடம் அழுதிருப்பாள்! எத்தனை முறை தன்னை மாற்றிக்கொள்ளும்படி கெஞ்சியிருப்பாள்!
அப்போதெல்லாம் அவளுடைய கண்ணீரைப் பொருட்படுத்தாதவன், இன்று தனக்காக அவளுடைய கண்கள் திறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தான்.
நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது.
ஒவ்வொரு நிமிடமும் அவனுக்குப் பல யுகங்களாக தோன்றியது.
குட்டி போட்ட பூனையை போல் அந்த எமர்ஜென்சி வார்டை சுற்றியே தங்கம் எங்கும் நடந்து கொண்டிருந்தான் சுந்தர்.
அப்போது அந்த எமர்ஜென்சி வார்டின் கதவு திறந்து, மருத்துவர் வெளியே வந்ததும் சுந்தர் அவரை நோக்கி ஓடினான்.
டாக்டர்! என் பொண்டாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு? அவளுக்கு ஒண்ணும் ஆகலையே? என்று பதட்டமாக கேட்டான்.
கொஞ்சம் பொறுமையா இருங்க. தலையில் காயம் ஏற்பட்டிருக்கு. அவங்க சுயநினைவில்லாமல் இருந்ததால், சில பரிசோதனைகள் செய்திருக்கோம். காயத்தின் தீவிரத்தைத் தெரிந்துகொள்ள இன்னும் சில டெஸ்டுகள் எடுக்கணும் வெயிட் பண்ணுங்க. மூணு மணி நேரம் கழிச்சு தான் எதுவுமே சொல்ல முடியும் என்ற மருத்துவர்,
இந்த காயம் எப்படி ஏற்பட்டது? என்று கேட்டார்.
அவர் அப்படி கேட்டதும் சுந்தரின் முகம் வெளிறியது. அது… அது என்று திக்கி திணறியவன், குளியலறையில் இருந்து வெளியில் வரும் போது விழுந்துட்டா டாக்டர் என்றான்.
அவனை ஏற இறங்க பார்த்த மருத்துவர், யூ மீன்ஸ் வழுக்கி விழுந்துட்டாங்கன்னு சொல்ல வரீங்களா? என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
ஆமா…ஆமாம் டாக்டர் என்று அவசரமாக தலையாட்டினார்.
மருத்துவருக்கு நன்றாக புரிந்தது அவன் பொய் இருக்கிறான் என்று… பிறையின் முடி கலைந்து, கண்ணம் சிவந்து காணப்பட்டது. அது மட்டும் இல்லாமல் அழுதழுது தோழ்ந்த முகத்தை பார்த்த மருத்துவருக்கு அப்பட்டமாக தெரிந்தது. இவன் அவளை அடித்து கொடுமைப்படுத்தி விட்டு இப்போது இங்கு வந்து நாடகம் ஆடுவதாக நினைத்தார்.
அவரின் யோசனையை கலைக்கும் விதமாக டாக்டர்… அவ கண்ணைத் திறப்பாளா? கண் திறக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டான்.
மருத்துவர் அங்கிருந்த செவிலியருக்கு கண் ஜாடை செய்துவிட்டு, அவங்களுடைய நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். இப்போதே எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் கூறியதை கேட்டு சுந்தர், செய்த தவறுகளை நினைத்து தலையைக் குனிந்துகொண்டான்.
மருத்துவரின் கண் ஜாடையில் அர்த்தம் புரிந்த அந்த செவிலியர் பெண் ரிசப்ஷனுக்கு சென்று காவல் நிலையத்துக்கு ஃபோன் செய்து அங்கு நடந்த நிகழ்வுகளை குறித்து கம்ப்ளைன்ட் பதிவு செய்துவிட்டு, பிறைக்காக எழுதிக் கொடுத்த டெஸ்டுகளை எடுக்கச் சென்றாள்.
ஒரு மணி நேரம் கழிந்தது பிறைக்கு அனைத்து டெஸ்ட்களும் எடுத்தாயிற்று இப்போது மருத்துவரின் கையில் அவளின் உடல் நிலை குறித்த ரிப்போர்ட்கள் இருந்ததது.
மருத்துவர் தன்னுடைய கையில் இருந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு, அவரை உள்ளே வர சொல்லுங்க என்று செவிலியரிடம் கூற…
அவள் சுந்தரை பார்த்து, சார் உங்களை டாக்டர் உள்ளே வர சொன்னாங்க என்று விட்டு உள்ளே சென்றாள்.
மருத்துவர் அவன் உள்ளே வந்ததும் வராததுமாக ஒரு கர்பினி பெண்ணுனு கூட பார்க்காமல் இப்படி அடிச்சி வச்சிருகீங்க மிஸ்டர் என்று கடிந்து கொள்ள…
சுந்தர் பதற்றத்துடன் நிமிர்ந்து மருத்துவரை பார்த்து என்ன டாக்டர் சொல்றீங்க? என்று கேட்டான்.
உங்க மனைவி கர்ப்பமாக இருக்காங்க என்றார் மருத்துவர்.
அந்த நான்கு வார்த்தைகள் சுந்தரின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.
எ… என்ன சொல்றீங்க டாக்டர்? என்று மீண்டும் சுந்தர் கேட்க…
ஆமாம். ஆரம்பகால கர்ப்பமாக இருக்கலாம். இன்னும் சில பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்த வேண்டியிருக்கு என்றவர் அவங்களுக்கு இந்த டெஸ்ட் எல்லாம் எடுங்க சிஸ்டர் என்று சில டெஸ்ட்டுகளை எழுதி கொடுத்தார்.
சுந்தரால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை மௌனமாக யோசனையில் அமர்ந்திருந்தான்.
கர்ப்பம்! பிறை கர்ப்பமாக இருக்கிறாளா? அவளுக்கு அது தெரியுமா? இல்லை தெரிந்தே தன்னிடம் மறைத்தாளா? என்று மனதில் நினைத்தவனின் நினைவுகள் சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த சண்டையை நோக்கித் திரும்பியது.
என் குழந்தையைக்கூட இழந்துட்டு அனாதையா நிக்கிறேன்! என்று பிறை அழுதுகொண்டே சொன்ன அந்த வார்த்தைகள் அவனுடைய மனதைத் கிழித்தது.
அவள் ஏற்கெனவே குழந்தையை இழந்த வலியில் இருந்தாள். அவனோ
அந்த வலியைப் புரிந்துகொள்ளாமல், அவளுடைய மனதை மேலும் காயப்படுத்தியிருந்தான்.
ஆனால் இப்போது… அவளுக்குள் இன்னொரு உயிர் வளர்ந்துகொண்டிருக்கிறது.
மருத்துவரை தயக்கமாக பார்த்து டாக்டர் என்று அழைத்தான். அவனுடைய குரல் தழுதழுத்தது.
சொல்லுங்க என்று மருத்துவர் இவனின் பதிலுக்காக காத்திருக்க…
குழந்தை… இதனால குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதுல? என்று கேட்டான்.
மருத்துவர் அவனை நீ எல்லாம் மனித பிறவி தானா என்பது போல் சில நொடிகள் அவனை பார்த்தவர்.
இப்போதைக்கு குழந்தையின் நிலையைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. முதலில் உங்க மனைவியின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு முறையான ட்ரீட்மென்ட் கொடுக்கணும் அதற்குத் தேவையான பரிசோதனைகளைச் முதலில் செய்வோம். பரிசோதனைகளுக்கு பிறகு தான் எதுவும் தெரியும் என்றார் மருத்துவர்.
மருத்துவரின் பதிலைக் கேட்ட சுந்தர், சுவரில் சாய்ந்தான். தன்னுடைய குழந்தை… இந்த உலகத்தையே இன்னும் பார்க்காத அந்தச் சிறிய உயிர்!
அதன் வருகையைப் பற்றிய மகிழ்ச்சியைக்கூட அனுபவிக்காத நிலையில், அதன் தாயின் உயிரையே ஆபத்தில் தள்ளியிருந்தான் இவன்.
பிறையின் நெற்றியில் வழிந்த ரத்தம் அவனுடைய கண்முன்னே வந்து போனது. அந்தக் காட்சியை நினைத்ததும் அவனால் தன்னைத்தானே மன்னிக்க முடியவில்லை.
ஒருவேளை பிறைக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தை மட்டுமல்ல… அவனுடைய வாழ்க்கையில் அவன் திருத்திக்கொள்ள நினைத்தாலும் திரும்பப் பெற முடியாத பல விஷயங்களையும் இழக்க நேரிடும்.
பிறைக்குத் தன்னுடைய மாதவிடாய் தள்ளிப்போனதைக்கூடக் கவனிக்க நேரமில்லாமல் இருந்தது.
அவளுடைய வாழ்க்கையில் நடந்துகொண்டிருந்த பிரச்சினைகள், சுந்தரின் குடிப்பழக்கம், அவன் கொடுத்த மனவேதனை, தினமும் அவள் சந்தித்த அவமானங்கள் என்று தன்னுடைய உடலை கவனிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாள்.
தன்னுடைய வயிற்றில் ஒரு புது உயிர் வளர்வதை அறியாமல், தன்னுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்தாள்.
அவள் வாங்கி வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைப் பார்த்து அழுதுகொண்டிருந்த அதே பெண்ணின் வயிற்றில், இப்போது அவள் அறியாத ஒரு குட்டி உயிர் வளர்ந்துகொண்டிருந்தது.
அந்த உண்மை அவளுக்குத் தெரியாது.
இவனுக்கு இப்போது தெரிந்த இந்த உண்மை பிறைக்கு தெரிந்திருந்தாள் எவ்வளவு மகிழ்ந்திருப்பாள்.
சுந்தருக்கு தெரிந்த இந்தச் செய்தி அவனுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மாறாக அவளைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயம், அவனுக்குள் இருந்தது. இப்போதிருக்கும் சூழ்நிலை அவனின் அத்தனை உணர்வுகளையும் மூழ்கடித்திருந்தது.
நீண்ட நேரமாக அப்படியே அமர்ந்திருந்தவன், வேகமாக கண்களை தொலைத்துக்கொண்டு டாக்டர்… ப்ளீஸ், அவளை மட்டும் எப்படியாவது காப்பாத்திடுங்க என்று கைகூப்பி நின்றாள்.
என்ன தண்டனை வேணும்னாலும் எனக்குக் கொடுங்க. ஆனா, அவளுக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது என்று மருத்துவரை பார்த்து புலம்பினான்.
அவனின் மன மாற்றத்தை அவன் சிந்திய கண்ணீர் வாயிலாக உணர்ந்த மருத்துவர் அவனை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு பிறையை காணச் சென்றார்.
சுந்தரும் மருத்துவரை பின் தொடர்ந்து அறைக்கு வெளியில் அவன் மட்டும் தனியாக நின்றான்.
அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.
பிறை… நீ என்னை வெறுக்கலாம். என்னை விட்டுப் போகணும்னு கூட நினைக்கலாம். ஆனா, ஃப்ளீஸ் என்னை விட்டு மட்டும் போயிடாதடி! என்று மனதில் வேண்டாத கடவுளை எல்லாம் வேண்டிக் கொண்டான் .
ஆனால் பிறை கண்விழித்தாள் அவனுடன் திரும்ப இணைவாளா என்பதே கேள்வி குறி தான்.
ஒருவேளை பிறை கண்விழித்தாலும், அவனுடன் வாழ நினைத்தாலும். பழைய காதலுடன் அவள் வாழ்க்கை வாழுவாளா? என்றால் அதுவும் தெரியவில்லை.
ஏனென்றால், இன்று அவளுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதிலும் கிடைக்கப்போவதில்லை. இன்று பட்ட அவமானத்தையும் அவள் வாழ்வில் மறக்கப்போவதுமில்லை.
அதேபோல், சுந்தரின் வாழ்க்கையிலும் இந்தச் சம்பவம் ஒரு திருப்பமாக அமையப்போகிறது.
ஆனால், அந்தத் திருப்பம் அவனை மாற்றுமா? அல்லது அவன் செய்த தவறுகளுக்கான விலையை அவனே கொடுக்க வேண்டிய நாளை நோக்கி அழைத்துச் செல்லுமா?
அதற்கான பதில், பிறை கண்விழிக்கும் அந்த ஒரு நொடியில் தான் தெரியும்.
இப்படி கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த பிறை, சுந்தரின் குரல் செவிகளில் மீண்டும் ஒலிக்கவும் நிகழ்காலத்திற்குத் திரும்பினாள்.
அவன் சொன்ன வார்த்தைகள் அவளுடைய இதயத்தை மீண்டும் மீண்டும் காயப்படுத்தின.
‘நான் என் அப்பா சொன்ன பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்…’
அந்த வார்த்தைகளை நினைத்தவளின் கண்கள் கலங்கின. இத்தனை ஆண்டுகள் அவனுக்காகத் தாங்கிக்கொண்ட வலிகளும், அவனிடம் எதிர்பார்த்த அன்பும், அவன் கொடுத்த அவமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர
திடீரெனக் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள் பிறை.
அவளுடைய அழுகையைப் பார்த்த சுந்தர் பதற்றத்துடன் காரை ஓரமாக நிறுத்தினான். அவளுடைய மடியில் இருந்த குழந்தையை மெதுவாகத் தூக்கிக்கொண்டவன், அவளைப் பார்த்து
எதுக்குடி இப்படி அழற? குழந்தை பயப்படப் போகுது!” என்றான்.
அவனுடைய வார்த்தைகள் அவளுடைய கோபத்தை மேலும் தூண்டிட…
அப்பவே நான் செத்துப் போயிருக்கலாம்! என்னை ஏன் காப்பாத்தின கடவுளே? இவன் சொல்றதைக் கேட்கவா என்னைப் பிழைக்க வச்ச? என்று கேட்டு மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள்.
அவளுடைய வார்த்தைகளைக் கேட்ட சுந்தர் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவனுக்குத் தெரியவில்லை… ஒருகாலத்தில் தன்னை உயிராக நேசித்த அந்தப் பெண்ணின் மனதில், தான் எவ்வளவு ஆழமான காயங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று.
ஆனால், அவன் அடுத்ததாக சொன்ன வார்த்தைகள் பிறையின் வாழ்க்கையை திருப்பிப் போட்டது.
நண்பர்களே, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் பிறையிடம் என்ன சொல்லியிருப்பான்? உங்கள் யூகங்களைக் கருத்துகளில் சொல்லுங்கள்!